Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-05

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-05
ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான் ஈஷ்வர். ஐயோ பார்க்கவே முடியிலேயே நிலா ஜர்க் ஆகாம தைரியமா பேஸ் பண்ணு, நிலா யோசிக்க.

“என்னடி நினைச்சிருக்க உன் மனசில, நேத்துதான் கல்யாணம் ஆச்சி, கொஞ்சம் பயம் வேண்டாம். உன் இஷ்டத்துக்கு ஆடுற. எல்லாரையும் உன் ஸ்கூல் பையன் நினைச்சியா. விக்கி காலேஜ் போறான். உன் வீடு நினைச்சியா எல்லோரும் உன்னை பார்த்து பயப்பட.

சரவணாவ வேலை வீட்டு அனுப்பிருக்க என்கிட்ட சொல்லவே இல்லை சரி அப்பாகிட்டாவது சொல்லியிருக்கலாம்”. கத்திக்கத்தி பேசிக் கொண்டிருந்தான் ஈஷ்வர். பக்கத்து வீட்டில் நாய் குரைக்க, நிலா அவனைப் பார்த்து தன் உதட்டை கடித்து சிரிக்க. ஈஷ்வர் அமைதியா நிலாவை உற்று நோக்கினான்.

நிலா அருகே வந்து, அவள் கண்ணத்தை தன் ஒரு கையால் அழுத்தி பிடித்து, என்ன கொழுப்பு உனக்கு நாயோடு என்னை கம்பேர் செஞ்சு சிரிப்ப.

தன் கண்ணத்தை அவன் அழுத்தி பிடித்தது, அவளுக்கு வலிக்க அவன் கையை பார்த்தாள். அவள் பார்ப்பதை பார்த்துவுடன் சட்டென்று கையை எடுத்தான் ஈஷ்வர்.

“மகி.. ஏன் கோவப்படுறீங்க, என்னை பெண் பார்க்க வருவது மாமா உங்களையும் தவிற யாருக்கும் தெரியாது அப்பறம் எப்படி போன்ல எனக்கு உங்களை பத்தி தப்பா சொன்னாங்க. நல்லா யோசிங்க மாமாவும் நீங்களும் ஹால்ல உட்கார்ந்துதான் பேசிருப்பிங்க.

சோ சரவணா மூலம் தான் வெளிய போயிருக்கும் நேத்து முழுவதும் வாட்ச் பண்ணே அவன் நாம் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தான். எனக்கு அவன்மேல டௌட் வந்தது . ஸ்கூல் கேன்டினல்ல தான் வேலைக்கு அனுப்பிருக்கேன் போதுமா”-நிலா.

இப்ப இவ்வளவு பேசுறீயே, முதல்ல என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே ஈஷ்வர் கேட்க.
“அத சொல்ல வரதுக்குள்ள நீங்க சண்டை போட ஆரம்பிச்சிட்டிங்க. சரி விடுங்க நேற்று நமக்கு பர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சி,”

என்னது… மகி அதிர்ச்சியாக நிக்க, “என்னடி சொல்லுற” ,கேட்டு ஹார்ட்டே ஒரு நிமிடம் நின்றது ஈஷ்வருக்கு.

“என்ன மகி, பர்ஸ்ட் நைட்.”

“ஏய் வாயை மூடு என்ன பேசற , நமக்கு எங்க நடந்தது”.
“ம்ம் நைட் முடிஞ்சதுல்ல, நாம்ம கோவிலுக்கு போகனும் பக்கத்தில இருக்கிற அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரலாம், சீக்கிரம் வா மகி”.

லூஸா இவ ,என்று மனதில் நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான்..

தன் மகன் அமைதியாக கீழே வருவதையை பார்த்துக்கொண்டிருந்தார் பார்த்திபன். மருமக கெட்டிக்காரிதான் . நம்ம பவன் சொன்னது சரிதான் மூன்னா கொக்கா... தன் மருமகளை பெருமையாக பார்க்க.

“மாமா, அப்பா நானும் மகியும் பக்கத்தில இருக்க அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரோம்.”
சரிம்மா என்று ராம் தலையை ஆட்டி தன் மகள் , மாப்பிள்ளையின் ஜோடி பொருந்தத்தை கண் குளிர பார்த்தார்.

காரில் போய்க்கொண்டிருக்கும் போது , மகி நான் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகல்ல.
அதுக்கு என்ன இப்போ என்ற பார்வையை அவளை நோக்கி செலுத்தினான்.

“உங்கிட்ட சொல்லனும் தோனுச்சி சொன்னேன்”, நிலா சொல்ல...
“தேவையில்ல நீ என்ன செய்யற, உன் வேலையே பத்தி சொல்லனும் அவசியமில்லை.”

“ஆனா நான் எதிர்ப்பார்ப்பேன் நீங்க சொல்லுவீங்கன்னு..”.

இதை கேட்டவுடன் என்ன டிசைன்டா இவ, நினைக்க நாம்ம ஏதாவது பேசினால் இவ ஆரம்பிப்பா அமைதியா இருந்து ஆபிஸ் போற வழிய பார்க்கனும்.

ஆபிஸில் , ராகவ் என்னடா இன்னிக்கே வந்திருக்க கொஞ்சம் தங்கச்சியோட இருக்கலாம் இல்ல.

அவக்கூட இருந்தா, அவ பேசியே சாகடிப்பா மனதில் நினைத்து தன் நன்பனிடம் ஒரு புன்புறுவல் வீசினான் ஈஷ்வர். டேய் வேலை செய்ய விடுடா. தன் வேலையில் கவனம் செலுத்தினான்.

க்கும் ரொம்பதான் பண்ணுறான் பாவம் நிலா.

மணி 12.30 ராகவ் கதவை திறந்து உள்ளே வந்தான் மச்சான் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருக்குடா.

“அப்படியா”, சாதாரணமாக சொன்னான் ஈஷ்வர்.

“என்னடா இப்படி ஒரு ரியாக்ஷன், நீ எப்பவும் ஹோட்டல்ல தான் சாப்பிடுவ”.

“உன் தங்கச்சிசிசி உனக்கும் சேர்த்துதான் கொடுத்திருக்கா, வா சாப்பிடலாம்”.

என்னடா சொல்லுற நிசமாவா, நிலா எனக்கும் சேர்த்தா கொடுத்துச்சு ராகவ் கண்கள் விரிக்க.

“ம்ம்ம். வா சேர்ந்து சாப்பிடலாம், ரொம்ப ரியாக்ட் செய்யாதா”.

ராகவுக்கு ரொம்ப சந்தோஷம் யாருமில்லாத நமக்கு தங்கச்சி கிடைச்சிருக்கு, எத்தனை நாள் ஆயிடுச்சு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு.

காலேஜில், விக்கி டைம் 2.00 ஆயிடுச்சு.. இப்பவே வயிறு கிள்ளுது தன் நன்பன் அஜய் கத்தினான். போதும்டா சாப்பிட்டு வந்து பிரட்டிகல் செய்யலாம். கைஸ் வாங்க சாப்பிட போகலாம்.

என்னடா கேன்டின்ல ஆர்டர் சொன்னா, மீல்ஸ் காலியாம். என்னடா செய்யறது இன்னோருவன் கேட்க. பேசாம .ஸ்விகில ஆர்டர் செய்யலாமா.

அப்பவும் வர லேட் ஆகும்டா அன் டைம் ஆயிடுச்சு. நான் வீட்டில இருந்து எடுத்திட்டு வந்திருக்கேன் நாம்ம ஷேர் செஞ்சிக்கலாம்- அஜய்

மச்சான் என் பேக்ல சாப்பாடு இருக்கு எடுத்துக்கோ விக்கி சொன்னவுடன் ,”நீ சாப்பாடே எடுத்து வந்தது இல்ல. என்னடா அதிசயம் எல்லாம் அண்ணி கொடுத்ததா”, பாக்ஸை திறந்தான் அஜய்.

“ஆமாம்”,எங்கியோ பார்த்த படி பேசினான் விக்கி.சூப்பர்டா லேமன் ரைஸ் ஆனா சைட் டிஷ் டேஸ்டுடா.

“உருளைகிழங்கு அதானே”.

“இல்லடா எறா பிரை, செம்ம டேஸ்ட்” நாக்கை சப்ப கொட்ட.

அவனிடமிருந்து பிடுங்கினான் “விக்கி ,ஏய் எங்க அண்ணி எனக்காக கொடுத்தாங்க”, விக்கிக்கு எறா என்றால் ரொம்ப பிடிக்கும். எப்படி அவங்களுக்கு தெரிஞ்சது எனக்கு பிடிக்கும்ன்னு.

மாலை ஆறு மணிக்கு அனைவரும் வீடு வந்தனர் ஈஷ்வரை தவிர. பவனுக்கு மேக்ஸ் சொல்லிக்கொடுக்க, எதிர் சோபாவில் விக்கி புக்கை வைத்து படித்துக் கொண்டிருந்தான். நிலாவை அப்ப அப்ப முறைத்து கொண்டு.

ஈஷ்வர் உள்ளே வர , இவர்களை பார்த்து என்னடா அதிசியமா இருக்கு,
நிலா , மகி பிரஷ்ஷப் பண்ணிட்டு வாங்க சொன்னதை கேட்டுக்கொண்டே மாடி ஏறினான் ஈஷ்வர்.

நிலா நாங்க வாக்கிங் போயிட்டு வரோம் பார்த்தி ,ராம் கிளம்ப, மாமா டீயும், வாழைப்பூ வடையும் சாப்பிட்டு போங்க எடுத்து வந்து அனைவருக்கும் தந்தார் கமலாம்மாள்.
வடை சூப்பர்ம்மா –பார்த்தி

ரூமை விட்டு வெளியே வந்தான் ஈஷ்வர் கீழே நடப்பதை பார்த்துக்கொண்டே இருந்தான்.பவனுக்கு ஆட்டுக்கால் சூப் கொடுக்க...

இது உங்களுக்கே ஓவரா இல்ல விக்கி , நிலா வை பார்த்து கேட்க, அவன பார்த்தா பதினொராம் வகுப்பு படிக்கும் பையன் போலவா இருக்கான் . ஒல்லியா எட்டாவது படிக்கிற பையன் மாதிரில்ல இருக்கான். அதான் கொஞ்சம் ஹெல்தி உணவு. ஆமாம் , உனக்கு என்னை பிடிக்கல தானே என்று கேட்டாள்.

அமைதியாக இருந்தான் விக்கி, உன் அண்ணாவுக்கு ஜஸ்வர்யா, சுஸ்மிதா சென் மாதிரி ஒய்ப் வருவாங்கல நினைச்சியோ .உங்க அண்ணாவும் செகன்ட் ஹான்ட் தான்.
“ஆமாம், எங்க அண்ணா இருக்கிற அழகுக்கு, எங்க காலேஜில் மாடல் செய்யற ராஷ்மியை கேட்டேன்”.

“ஏன் அந்த பொண்ண ரேம்ப் வாக் பண்ண சொல்லி குடும்பமாம் உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பிங்களா”. மேலேருந்து கேட்ட ஈஷ்வர் சிரித்தான். நம்மல எப்படி டேமேஜ் செய்துங்க ...
விக்கி முறைக்க....” என்ன முறைப்பு போன செம்முல இரண்டு சப்ஜெக்ட் அரியர் வச்சிருக்க. இதோ எக்ஸாமும் வந்திடுச்சி படி”. பவன் வாயை மூடி சிரிக்க. நாங்க வாக்கிங் போறோம் சொல்லிட்டு இருவரும் கிளம்பினர்.

எல்லாத்தியும் எப்படிதான் கண்டுபிடிச்சாங்களோ, விக்கி மூனுக... ஈஷ்வர் சோபாவில் அமர்ந்து செல்லில் கவனம் செலுத்தினான்.

“மூன் இன்னிக்கு நம்ம பிஸிக்ஸ் வாத்தியார் இல்ல பயங்கற மூட் அவுட்...”

“ஏன்டா”,

“உங்களுக்கு கல்யாணம் ஆச்சியில்ல... ஓரே ஃபிலிங் தான் பவன் சொல்லவும்”. தன் வேலையை விட்டு நிமிர்ந்து பார்த்தான் ஈஷ்வர். யாரு அவன் நம்ம பொண்டாட்டிய பார்த்து ஃபில் பண்ணறது.

ரிங் டோன்னல செம பாட்டு அண்ணி,”வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா இந்த கண்மணிக்கு காதல” இதை கேட்டு நிலா சிரிக்க. பவனும் சிரித்தான் இன்னிக்கு முழுக்க ஸ்கூல்ல உங்க பேச்சுதான். எல்லா மிஸ்ஸும் என்ன தீடிருன்னு நம்ம நிலா மிஸ்க்கு மேரேஜ் ஆயிடுச்சு.

கேட்டுக்கொண்டே ஈஷ்வருக்கு காபி , வடையும் எடுத்து வந்து தந்தாள். பின் அனைவரும் அவங்க வேலையில் பேசாம செய்தனர். பவன் சந்தேகம் கேட்க அதை சொல்லிக் கொடுத்தாள் நிலா.

“அண்ணி நாளைக்கு கொஞ்சம் சீக்கரம் எழுப்பி விடுங்க ரிவிஷன் டெஸ்ட் இருக்குல்ல.”
சரி பவன்... சொல்லி விக்கியை நிலா பார்க்க என்னையும் எழுப்புங்க நானும் படிக்கனும் என்றான்.

“ஹா.. அண்ணி என் ரூமை கிளின் செஞ்சதுக்கு ரொம்ப தாங்கஸ்” –பவன்.

“பரவாயில்ல பவன் இனி இதமாதிரி கீளினா வச்சிக்கனும்”.ஓகே அண்ணி.

இரவின் உணவை முடித்து பார்த்தி, ராம் ,ஈஷ்வரிடம் பிஸினஸ் பத்தி பேசினர். பின்பு உறங்க சென்றனர்.

நிலா, ரூமை திறந்து ஈஷ்வர் கையில் பாலை கொடுத்தாள்.

“தாங்க்ஸ்” என்று வாங்கினான் ஈஷ்வர்.

மகி , “ஸ்கூல் எல்லோரும் மதியம் லன்ச் கொடுக்கலாமா நம்ம கல்யாணத்திற்கு விருந்து மாதிரி. யாருக்கும் தெரியாது எனக்கு இது செகன்ட் மேரேஜ்ன்னு.”

“ம்ம் கொடுக்கலாம், நான் கூட ஆபிஸ்ல, ஃபேக்டரியில ஒர்க் பண்ணறவங்களுக்கும் கொடுக்கனும். ஆமாம் விக்கி எப்படி படிக்க உட்கார்ந்தான் அவன் கொஞ்சம் அடமென்ட்”.
இன்னிக்கு காபிக் கொடுக்க போனேன்னா அவன் ரூம் கீளீன்னா இல்ல சோ நீங்களாம் போயிட்ட பிறகு ஆள் வச்சி சுத்தம் செஞ்சேன். அப்ப அவன் கப்போர்ட்ல சிகரேட் பாக்கெட் இருந்துச்சு. நான் பாத்துடேன் அவனுக்கு தெரிஞ்சிக்கும் போல அதன் பவ்யமா இருக்கான்.

அய்யோ உன் புருஷன் ரூமுல தண்ணி பாட்டிலே இருக்குமே , நல்ல வேளை சுத்தம் செய்யல ஈஷ்வர் மைன்ட் வாய்சில் பேச...

என்ன அமைதியா இருக்கீங்க மகி...நிலா கூப்பிட

ம்ம், குட் நைட் சொல்லி தூங்க ஆரம்பித்தான். “மகி அடுத்த வாரம் எங்க சொந்த ஊருக்கு போனும் சித்தப்பா பொண்ணுக்கு கல்யாணம் , நம்ம பேம்லியோட போலாமா மகி..”

“எனக்கு ரொம்ப வேலை இருக்கு நிலா, நீ எல்லாரையும் கூட்டிட்டு போ , நான் வரல.....”
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
நிலா நல்லா பிரகாசமா ஒளி
கொடுக்கறா குடும்பத்தவங்களுக்கு
அருமை
 
QUOTE="saroja, post: 182560, member: 457"]
நிலா நல்லா பிரகாசமா ஒளி
கொடுக்கறா குடும்பத்தவங்களுக்கு
அருமை
[/QUOTE]
Thk u sis for ur lovable comments
 
Very nice.... vicky nila va morachi morachi paathuttu yera va mattum veluththu katturanga... eshwar...bottle.... nila kandupidicha enna aagapogutho..interesting sis?
 
Last edited:
Top