Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 30

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 30

மறுநாள் காலை அபிக்கு முழிப்பு வந்தபோது,உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது,லேசாக திரும்பிப்படுக்கலாம் என்று முனைந்த போது அவளது வலக்கரம் ஏதோ பாறை இடுக்கில் மாட்டிக்கொண்டது போல் அசைய மறுத்தது..ஒருவாறு வேருடன் செடியை பிடுங்கி எடுப்பதுபோல் வேகமாக இழுத்து கையை விடுவித்தாள்..

கண்ணை தேய்த்துவிட்டுக்கொண்டு ,அந்த மங்கிய ஒளியில் தான் எங்கிருக்கிறோம் என்று ஆராய்ந்த போது..தலையின் மீது யாரோ உளியால் டங்க் டங்க் என்று அறைவது போல் வலித்தது.

வலியினூடே தன் காதோரம் சூடான காற்றுவீசுவதை உணர்ந்து லேசாக முகம் திருப்பிப் பார்த்தாள்,அருணின் முகம் மிக அருகில் அவளை முத்தமிடுவதை போல அவ்வளவு பக்கதில் இருந்தது. இப்போது அவன் சுவாசம் அவள் முகத்தை தீண்டி தீ மூட்டியது.

சட்டென்று அவளை சுற்றி வளைத்திருந்த அவனது கரத்தை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவள்,உலகம் தட்டாமாலை சுற்றிவர ,கரகரவேன்று சுற்றும் தன் தலையை இருகைகளாலும் பற்றிகொண்டு என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றாள்...

“என்ன ஆச்சு எனக்கு ?நான் ஏன் அருண் கூட இங்க ..இப்படி தூங்கறேன்?”யோசிக்க யோசிக்க அவளுக்கு மேலும் தலை சுற்றுவது போல் இருந்தது..
தலைசுற்றல் சிறிது நின்றதும் திரும்பி அருணைப் பார்த்தால் அவன் கண்கள் விழித்துக் கொண்டு இவளையே அமைதியாக வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது..

அபியின் பார்வையில் குழப்பத்தை கண்டவன்..

“இப்ப எப்படி இருக்க அபி?”என்று விசாரித்தான் ..

தலை பயங்கரமா வலிக்குது அருண்..”

“ஹேங்க் ஓவர் ன்னா அப்படி தான் வலிக்கும்”

“ஹேங்க் ஓவரா?எனக்கா?எப்படி ?
”என்று அதிர்ந்துபோய் கேட்டாள் அபி..

“வோட்கா குடிச்சா ஹேங்க் ஓவர் வராம என்ன பண்ணும்?”என்று அவன் சாதாரணமாக திருப்பிக் கேட்க.

“வாட்..?”என்று கத்திவிட்டாள் அபி..

“நான் எ..ப்படி..”என்று அவள் குழம்பி தடுமாற,

“கூல் அபி.. ஒன்னும் இல்லை..எல்லாம் சரியாகிடும் விடு..”என்று அருண் அவளை சமாதானப் படுத்தும் விதமாக தன் கையணைப்பில் கொண்டுவர முயன்றான் ..ஆனால் அபி அவன் கையை தட்டிவிட்டவள்..

“நான் எப்படி வோட்கா குடிக்க முடியும் ?நான் கடைசியா சாப்பிட்டது நீ குடுத்த ஜுஸ் தானே..?”என்று தனக்குத் தானே பேசிகொள்பவள் போல் சத்தமாக பேசிய அபி ,சட்டென்று நினைவு வந்து ..

“சோ ..இதுக்கெல்லாம் காரணம் நீ தான் ..உன்னால தான் நான் குடிச்சேன் ..?”என்று அவனை குற்றம் சாட்டினாள்..

“என்ன உளறுற அபி..?”

“நாயி ,பேயி ,குரங்கு ,உன்னை அந்த எம்ப்ராய்டரி ட்ரெஸ் போட வச்சிட்டேன்னு என்னை பழிவாங்கிட்ட ல?”
என்று பெண் புலியை போல சீறிப் பாய்ந்து அவனை சரமாரியாக தாக்கினாள்..

“அபி நான் வேணும்னே எதுவும் பண்ணலை ,தெரியாம நடந்துடுச்சி,அடிக்கறதை நிறுத்து..”என்று அவளைப் பேசி கட்டுப்படுத்த முயன்றான் ,ஆனால் கேட்கும் நிலைமையில் அவள் இருந்தால் தானே..அவள் கண்மண் தெரியாமல் அவனை தாக்க,பொறுமையிழந்து அவள் கைகள் இரண்டையும் பற்றி என்ன ஏது என்று அவள் சுதாரிக்கும் முன் ஒரு சிறு வேக திருப்பலில் அவளைப் படுக்கையில் கிடத்தி அசைய முடியாதவாறு கைகள் இரண்டையும் இருபுறமும் அழுந்த பற்றினான் .. அப்போதும் திமிரிய அவள் கால்களை தன் ஒரு கால் கொண்டு அடக்கினான்.. இப்போது அவன் முழுவதும் அவள் மேல் படந்திருக்க ,அவன் கைகளில் சிறைபட்டுபோனாள் அபி..

“போதும் ..இனிமேலும் உன்னோட அராஜகத்தை பொறுத்துக்க முடியாது..நான் சொல்றதை முழுசா கேளு.நான் எதுவுமே இன்டென்ஷனலா பண்ணலை,இது எல்லாம் விக்கியோட வேலை ,அவன் ஜுஸ்ல வோட்கா மிக்ஸ் பண்ண விஷயம் தெரியாம ,நான் உனக்கு குடுத்துட்டேன்..இது எதிர்பாராம நடந்த ஒரு விபத்து அவ்ளோ தான் போதுமா?”

அருண் பேச தொடங்கியதும் அபியும் கொஞ்சம் கொஞ்சமாக திமிருவதை நிறுத்திவிடவே ,அருண் தன்னுடைய பிடியை சற்று தளர்த்தினான் ஆனால் முழுவதுமாக விடவில்லை..
ஆரம்பதில் இருந்த ஆவேசம் அடங்கியதும் அபி தான் இருக்கும் நிலையில் கவனம் செலுத்தினாள்… அவன் உடல் தன் மீது மூடியிருக்க ஓருடல் ஈருயிராக தாங்கள் இருந்த நிலை சங்கடத்தில் அவளை நெளியவைத்தது..

“என்னை விடு அருண்..”

அவளது சிறு அசைவையும் தன் உடலால் உணர்ந்த அருணுக்கு மயிர்கூச்செரிந்தது..

“அபி அசையாத அப்படியே இரு..உனக்கு தெரியாது நீ என்னை எப்படி சித்தரவதை பண்ணிட்டு இருக்கேன்னு”
அவனது வார்த்தையின் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் இருக்க அபி அப்பாவியாக அவனை பார்க்க..

அவன் மேலும் பைத்தியமானான் “இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி பார்த்தே என்னை சாவடிக்கறா..”

அபி அடுத்து அவன் என்ன செய்வானோ என்று பயமும் ஆவலும் கலந்த கலவையாக எதிர்நோக்கியிருக்க ....அவனது பெரிய சைஸ் டீ ஷர்ட் ஒரு தோளில் சரிந்து அவனது கண்களுக்கு வஞ்சனையில்லாமல் விருந்தளித்தது.. அப்படியே சிறிது மேலே பயணித்த கண்கள் அபியின் கழுத்தில் துடித்த ஒற்றை நாடியின் அசைவில் ஈர்க்கப்பட்டு அங்கேயே நின்றது…விட்டில் பூச்சி விளக்கால் ஈர்க்கப் படுவதைப் போல் அவன் தன்னை மீறி அவளது கழுத்தில் முத்தமிட குனிந்தான் அவனின் பார்வையின் தீவிரத்தை தாங்க முடியாமல் அபி சரணாகதி அடைவதைப் போல் கண்களை மூடிக்கொண்டாள்..இருவரது மோகத்தீயும் பற்றிகொள்ளும் முன் எச்சரிக்கை மணியாக கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கூடவே பூர்ணா “அருண்..”என்று அழைக்கும் சத்தமும் கேட்க ,

அருண் வில்லேற்றிய நாண் போல விரைத்து எழுந்து நின்றான்.

அபியும் எழுந்து அவளது மேலாடையை தன் கழுத்துடன் சேர்த்து பற்றிக் கொண்டாள்..இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்து எங்கெங்கோ பார்த்தனர்..
கதவு தொடர்ந்து தட்டப்பட,

பூர்ணா வந்துடாங்க ,நான் வெளிய இருக்கேன் ..”என்று முணுமுணுத்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு வேகமாக வெளியேறினான் ..

அவனைத் தொடர்ந்து உள்ளே வந்த பூர்ணா..”அபி எப்படி இருக்க ?”என்று கேட்டாள்..

“இப்ப பரவாயில்ல பூர்ணா..”என்றாள் கம்மிய குரலில் அவள் இன்னும் சற்று முன் இருந்த உணர்ச்சி சுழலிலிருந்து வெளிவரவில்லை ..

ஆனால் அது பற்றி ஒன்றும் தெரியாமல் பூர்ணா தன் பாட்டில் பேசிகொண்டே இருந்தாள்..
“நல்ல வேளை நீ சரி ஆகிட்ட,நான் நைட் முழுக்க நீ எப்படி இருக்கியோன்னு கவலை பட்டுட்டே இருந்தேன் தெரியுமா?சரி வா முகூர்த்ததுக்கு நேரம் ஆச்சு,இந்தா என்னொட ட்ரெஸ் இதை மாத்திட்டு வா போலாம் சீக்கிரம் ..”என்று அவசரப்படுத்தினாள்.
ஆனல் அபி அவளை தடுத்து..

“எனக்கு என்ன ஆச்சு பூர்ணா நான் எப்படி இங்க வந்தேன் ?”என்று கேட்டாள்..

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் ,இப்ப லேட் ஆச்சு கிளம்பு “

இல்லை தெரியலைன்னா எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல் இருக்கு ..”

“தெரியாதனமா நீ விக்கி வோட்கா மிக்ஸ் பண்ணி வச்சிருந்த ஜுஸ்ஸ குடிச்சிட்ட .. அப்புறம் ஒரு சின்ன குழந்தையா மாறிட்ட அவ்வளவு தான்..”
என்று பூர்ணா விளையாட்டாக சொல்ல அபி பீதியடைந்த முகத்துடன் அவளை பார்த்தாள்..

“ஹே பயப்படாத ஒன்னும் ஆகலை ,நாங்க ஒரு மாதிரி சமாளிச்சிடோம் ..வேற யாருக்கும் நீ குடிச்சிருக்கங்கற ஃபீல் கூட வந்திருக்காது..”
என்றாள் சமாதானமாக..

“சரியா சொல்லு பூர்ணா?இப்படி மொட்டையா சொன்னா எப்படி ,என்ன பண்ணினேன் ?நான் ரொம்ப மோசமா நடந்துகிட்டேனா?பிளீஸ் சொல்லு ,எனக்கு எதுவுமே நியாபகம் வர மாட்டேங்குது…”என்று கெஞ்சினாள்..

ஹே நான் தான் ஒன்னும் ஆகலைன்னு சொல்றேன் ல..இதுக்கும் மேல உனக்கு விவரமா தெரியனும்ன்னா அருண் கிட்ட தான் கேட்கணும் ,ஏன்னா அவன் தான் உன்கூடவே இருந்து எல்லத்தையும் சமாளிச்சான்..”

அவர்கள் இருவரும் வெளியே வந்த போது அருண் மாடியின் கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு இன்னும் விடியாத இருளில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்..

அபி பூர்ணாவை முதலில் போக சொல்லிவிட்டு அவனிடம் வந்தாள்.

“அருண்”

“யெஸ் அபி
..”என்றவன் குரலில் சீண்டல் இருந்தது..

அவனை கோபமாக முறைத்துவிட்டு “என்னை சீண்டாத ..என்ன நடந்ததுன்னு மறைக்காம சொல்லு “என்று மிரட்டல் விடுத்தாள்..

அவன் அதை சற்றும் மதிக்காமல் அவளைப் பார்த்து சிரிக்கவும்
“டேய் சிரிக்காத டா கொன்னுடுவேன்..” என்று ஆத்திரத்தில் தரையை உதைத்தாள்..

“சும்மா சொல்ல கூடாது.. சரக்கு உள்ள போனதும் உனக்குள்ள ஒளிஞ்சியிருந்த கியூட் அபி வெளிய வந்துட்டா..எந்தவித தங்கு தடையும் இல்லாம எல்லார் மேலேயும் அன்பை மட்டுமே வாரி பொழியற அந்த இன்னொசன்ட் பப்ளி அபி “

“என்ன உளறல் இது ?”

“நான் உளறுறேனா?நீயே பாரு ..”
என்று தன்னுடைய மொபைலை எடுத்து அவளிடம் கொடுத்தான் ..

அதில் எந்த வித தயக்கங்களும் இல்லாமல் கரைபுரண்ட உற்சாகத்துடன் முழுபல் வரிசையையும் காட்டி சிரித்த தன் புகைப்படங்களை அவளாலேயே நம்ப முடியவில்லை,அதிலும்அவள் அத்தையையோடு கன்னம் இழைத்து எடுத்த போட்டோ அவளுள் சிறு பூகபம்பத்தையே கிளப்பியது எனலாம்..
அருணை கேள்வியாக நோக்கி,
“அருண் என்ன இது ,நான் எப்படி இவங்களோட ?அதுவும் இப்படி ?”என்றாள்.

அவளது குழம்பிய முகத்தைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு பொங்கியது..பதில் சொல்லாமல் உள்ளார்ந்த சிரிப்பில் அவன் உடல் குளுங்குவதைக் கண்டவள்.

“போங்க.. எல்லாரும் என்னை கலாய்க்குறீங்க ,நான் போறேன்..”என்று கோபமாக கிளம்ப, அருண் அவசரமாக அவளைத்தடுத்து,

“சரி சாரி இனிமேல் சிரிக்க மாட்டேன் ..”என்றவன் அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்க
அவள் உதட்டை குவித்து குறை கூறும் விதமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்..

“அபி ,வோட்கா உள்ள போனதும் உனக்குள்ள ஒளிஞ்சிருந்த பாசமெல்லாம் வெளிய வந்துடிச்சி..நீ அந்த அத்தையம்மாவை கட்டிகிட்டு பண்ண அலும்பு இருக்கே இப்ப நெனைச்சாலும் குபீர் சிரிப்பு வருது..”என்று அவன் நடந்ததை விவரிக்க அவள் முகத்தில் தன்னை மீறி புன்னகை அரும்பியது..

“பட் அதுலையும் ஒரு நல்லது இருக்கு ,உன்னைப் பத்தி தப்பா பேசின அதே வாயால அபி மாதிரி வருமான்னு பாராட்டிட்டாங்க தெரியுமா?என்று கேட்டதும் அபி முகம் மலர்ந்தது..

“அப்புறம் என்ன ஆச்சு?நான் எப்படி உன் ரூமுக்கு வந்தேன் ?”

“அதானே ஹை லைட் ஆஃப் தி ஷோ ..அதை விடுவேனா?உனக்கு அத்தை மேல இருக்கற பாசம் மட்டும் இல்லை, அத்தான் மேல இருக்கற பாசமும் கரைபுரண்டு ஓடிச்சி..”
என்றான் நமட்டு சிரிப்புடன்.

அதிர்சியில் கண்கள் அகலவிரிய “அத்தான் ,கித்தான்னு உளறாத அருண்” என்று எரிந்துவிழுந்தாள்.

அப்போ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ,உன்னை கட்டிபுடிசிட்டு தான் தூங்குவேன்ன்னு சொன்னதெல்லாம் என்னவாம்?”

“ச்சீ ச்சீ நான் அப்படிலாம் சொல்லி இருக்கவே மாட்டேன்.. பொய் தானே?”
என்று இழுத்தாள்..அவன் பொய் என்று சொல்லிவிடமாட்டானா என்ற நப்பாசையில்,
அவன் ஏளன சிரிப்புடன் புருவம் உயர்த்தி பார்த்து பேசாமல் இருக்க அவமானத்தில் முகம் சுருங்கிப் போனது அவளுக்கு..

“அப்படியே இருந்தாலும் நான் சுயநினைவு இல்லாம பேசி இருப்பேன் ,அதை ஒன்னும் சீரியஸாக எடுத்துக்காத..”

“அதெப்படி மனசுக்குள்ள இல்லாம இதெல்லாம் வெளிய வருமா? ஒருத்தர் தண்ணி அடிச்சிருக்கும் போது தான் அவங்களோட ஆழ் மனசுல இருக்கற ஆசைகளெல்லாம் வெளிப்படும் அப்போ அவங்க பேசுற எல்லாமே நேரடியா இதயத்துல இருந்து வர்ற வார்த்தைகள்ன்னு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்..”

“உன்னோட ஆராய்ச்சிய எல்லாம் உன்னோடவே வச்சிக்கோ..அதுக்கு நான் ஆள் கிடையாது.
என்று கூறிவிட்டு திரும்பி நடந்தவள் ..

“அப்போ ஐ லவ் யூன் அருண் ன்னு சொன்னது கூட உன் மனசுல இருந்து வரலையா?”என்ற அவனது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து நின்றுவிட்டாள்..

“ஐயோ கடவுளே இவன் என்ன சொல்றான் ?போதையில என்ன உளறித் தொலைச்சேனோ தெரியலையே..” அவள் இதயம் வேகமாக துடித்தது.

“சொல்லு அபி ..”

“அது நான் சுயநினைவோட சொல்லலை..”

“அதெப்படி எந்த நிலைமையில இருந்தாலும் சொன்னது சொன்னது தான் ..அதுக்கு என்னோட பதிலையும் கேட்டுட் டு போ ..”


சட்டென்று இருகைகளாலும் தன் காதைப்பொத்திக் கொண்டு
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் ,எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை ..” என்று வேகமாக மறுத்தாள்.

“எனக்கு நியாபகம் இருக்கே சோ நான் சொல்லுவேன்..” என்று அவன் அடம் பிடிக்க.

“நான் தான் எதுவும் சொல்ல வேணாம்ன்னு சொல்றேன் ல..” என்றாள் பிடிவாதமாக.

“ஓ அப்படியா ,நானா சொல்ல வரும் போது நீ வேணாம்ன்னு சொல்லிட்ட ல? இனிமேல் நீயா வந்து சொல்லுன்னு கெஞ்சுற வரைக்கும் நான் அந்த மூனு வார்த்தையை சொல்ல மாட்டேன் ..”
என்றுவிட்டு அருண் ரூமினுள் சென்று கதவை அடைத்துக் கொள்ள ..அபி அதிர்ந்து போய் நின்றுவிட்டாள்..
-----------------------------------------------------------------------------------------------------------------------
கார்த்திக் அனு திருமணம் நல்லபடியாக முடிந்து அவள் பிரியாவிடை பெற்றுகொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுவிட மிக நெருங்கிய சொந்தங்கள் தவிர அனைவரும் விடை பெற்றுக் கிளம்பினர்..
அருண் ,விக்கி பூர்ணா மூவரும் அபியின் அருகில் வந்தனர்.

“அபி நாங்க கெளம்பறோம் “என்றாள் பூர்ணா.

“என்ன பூர்ணா?அதுக்குள்ள” என்று குறைபட்டாள் அபி..

“ஹே விளையாடுறியா?கல்யாணம் முடிஞ்சி பொண்ணு மாப்பிள்ளையே அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க ,நாங்க இங்க இருந்து என்ன பண்றது?நாளைக்கு ஆஃபீஸ்க்கு போக வேண்டாமா?”

“ஆமா அபி, டிராவல்ஸ் பஸ் புக் பண்ணி இருக்கோம் மூனு மணிக்கு வண்டி, நாங்க இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் ,பை அபி..”
என்றுவிட்டு விக்கியும் பூர்ணாவும் தங்கள் பொருட்களை எடுக்க சென்றுவிட..

அருணும் அபியும் மட்டும் தனித்து விடப்பட்டனர்..

அபி அவன் முகத்தை ஏக்கமாக பார்த்து

“நீயும் போறியா அருண்? என்றாள்.

“போய் தானே ஆகனும் ,இங்கயே இருக்க நான் என்ன இந்த வீட்டு மாப்பிள்ளையா?என்றான் விளையாட்டாக,

அப்போது “என்ன தம்பி மாப்பிள்ளை வீடு பத்தி பேசுற மாதிரி இருக்கு..?” என்று அபியின் அப்பவின் குரல் அருகில் கேட்க ஒருகணம் அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு,

“ஆமாம் அங்கிள் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல டைப்பா தெரியறாங்கன்னு சொல்லிட்டு இருந்தேன் ..”என்றான்.

“ஆமா தம்பி அவங்க ரொம்ப நல்ல மாதிரி “என்றவர் அபியிடம் “அபிமா அம்மா உன்னை எதுக்கோ தேடிட்டு இருந்தா உள்ள போய் பாருமா” என்று அவளை அனுப்பிவிட்டு அருணிடம் திரும்பி “என்ன தம்பி அதுக்குள்ள கிளம்பிடீங்க ..? ரெண்டு நாள் தங்கிட்டு போங்க”என்றார்.

“இல்லை அங்கிள் ஆஃபீஸ் இருக்கு லீவ் எடுக்க முடியாது..” என்றான்.

அபியின் அப்பா அவன் கையை பற்றி “அபியை கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி ..அபியை பார்த்ததும் தான் எனக்கு உயிரே வந்தது அவ இல்லாம இந்த கல்யாணத்துல யாருமே சந்தோஷமா இருந்திருக்க முடியாது..உங்களுக்கு நாங்க நன்றிக் கடன் பட்டிருக்கோம்..”

“ஐயோ எதுக்கு நீங்க என்னென்னமோ சொல்றீங்க?நான் ஒன்னும் பெருசா பண்ணிடலை ,அபி கூட துணைக்கு வந்தேன் அவ்வளவு தான்
..”என்றான் அருண்.

“நீங்க ரொம்ப பெருந்தன்மையா பேசுறீங்க தம்பி ..அங்க சென்னையிலையும் அபிய பார்த்துகோங்க,பொண்ணை தனியா அனுப்பிட்டு நான் தினமும் இங்க கவலை பட்டுட்டு இருக்கேன் ..”என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

“நீங்க கவலைப் படாதீங்க அங்கிள் நான்..என்றவன் தொண்டையை செருமிக்கொண்டு ..நாங்க அபியை பார்த்துகறோம்” என்று உறுதியளித்தான்..

“நீங்க நல்லா பார்த்துகுவீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு தம்பி.” என்றார் அவர் கையை அழுத்தியபடி.அவர் எதுவும் பூடகமாக பேசுகிறாரா என்று அவரை கூர்ந்து நோக்கி அறிய முயன்றான் அருண் ,அதற்குள் வேறு உறவினர்களை வழியனுப்ப அவர் சென்றுவிட அபியும் வந்து சேர்ந்தாள்.

“ஓகே அபி நான் கிளம்பறேன்..” என்றான்.

“அதுக்குள்ளயா இன்னும் கொஞ்ச நேரம் இரு ..”என்றாள்.

டைம் ஆகிடுச்சி அபி”

“அப்போ நானும் உங்கூட வரேன் ..”

“லூசு மாதிரி பேசாதா.. இவ்ளோ நாளுக்கப்புறம் இப்ப தான் நீ உங்க வீட்டுக்கு வந்திருக்க ,நீ கொஞ்ச நாள் உங்க அப்பா அம்மா கூட இருந்துட்டு வா,அதுமட்டுமில்லாம நீங்க ரெண்டு பேரும் ஒன்னா விட்டுட்டு போனா அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்”

“அப்போ என்னை இங்கயே இருக்க சொல்றியா?

“இங்கயே இருக்க சொல்லலை..கொஞ்சநாள் இருந்து அவங்க மனசு சமாதானம் ஆன வாட்டி வான்னு..”
சொல்றேன்..
“சரி “
“நான் கிளம்பட்டுமா ..”

“ம்ம்..”
என்றவளுக்கு வார்த்தை வராமல் தொண்டை அடைத்தது என்னதான் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வந்தாலும் , சண்டை போட்டாலும், பேசாமல் இருந்தாலும், அவர்கள் சந்தித்த நாள் முதலாய் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந்திருந்தில்லை,இந்த முதல் பிரிவு இருவருக்குமே தாங்கமுடியாது போல வலித்தது..

“என்ன ம்ம்..? வாய தொறந்து சொல்ல மாட்டியா?”

அவள் நீர் நிரந்த விழிகளுடன் அவனைப் பார்க்க,

“ஹே அபி எதுக்கு அழற?நாம என்ன ஓரே அடியாவ பிரியறோம் ,கொஞ்ச நாளைக்குத் தானே..” என்று அவளை சமாதானப் படுத்தினான் .

“சாரி நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் ,அந்த வோட்கா வோட எஃபக்ட் இன்னும் சரி ஆகலைன்னு நெனைக்கறேன் அதான் தொட்டதுக்கெல்லாம் அழுகை வருது”என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

அதே சமயம் விக்கி அருணுக்கு கால் செய்யவே,

“விக்கி கால் பண்ணிடான் ..டைம் ஆச்சு அபி, சீ யூ பை”

ம்ம்.பை”என்று கையாட்டினாள்.

“சரி இதான் சாக்குன்னு அம்மா அப்பா கிட்ட செல்லம் கொஞ்சிகிட்டு இங்கயே இருந்துடாத.. சீக்கிரம் வந்து சேரு”அவள் சிறு புன்னகையுடன் சம்மதமாக தலையசைத்தாள்.

“ஓகே பை”

“ஹே எவ்ளோ வாட்டி பை சொல்லுவ கெளம்பு டா”

“என்னை விரட்டுறதுலேயே குறியா இரு..”
என்று அலுத்துக் கொண்டு அவளைப் பிரியமனமில்லாமல் தயங்கினான் ..

திடீரென்று அவன் அபி அங்கே பாரு என்று பக்கவாட்டில் கை காட்ட .அபி என்ன என்று அந்த புறமாக திரும்பினாள், பட்டென்று அவள் கன்னத்தில் ஒரு மின்னல் முத்தமிட்டுவிட்டு, முகத்தில் குறும்பு சிரிப்புடன் கையாட்டி விடை பெற்று சென்றான் ..அபி அவன் உருவம் கண் மறையும் வரை அவனையே ஏக்கத்துடன் பார்த்திருந்தாள்..
தொடரும்
 
Top