அரவிந்தனோட அதிரடி ஆட்டம் அருமை. ஆனா இவன் நஷ்ட ஈடு போட்டா அதை மாசிலாமணி தானே தண்டம் அழ வேண்டியிருக்கும் மீனாவுக்காக. அவ அதுக்கெல்லாம் அசர மாட்டா. ஆனா அவனோட கைவரிசைக்கு பயந்தாவது அடங்குவாளாயிருக்கும். ஆனாலும் அந்த பிள்ளைங்க நிலைமையை நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு.
மருதவேலு காமாட்சிக்கு அவ வீட்டு பக்கத்துல பிரச்சனையை clear பண்ணி விட்டது நிம்மதியா இருக்கு. அவன் சொல்லறது சரி தானே. அவ எவ்வளவு தான் தாங்குவா?
இனி மயிலுக்கு மட்டும் தான் பாடமெடுக்கணும். தங்கச்சிக்கு செய்ய வேண்டிய சீருல கைய வெச்சா தன்னால வழிக்கு வருவாங்க ரெண்டு பேரும்.
ஆனா ஒன்னு வேலு அவனோட ராணியம்மாவுக்கு தனியா சின்னதா ஒரு அரண்மனை ஏற்பாடு செஞ்சா தான் கொஞ்சமாவது நிம்மதியா வாழ முடியும் அவளோட.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.