Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தானே என் பொன் வசந்தன்-அத்தியாயம்12

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீ தானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 12

இன்போடெக் சொலுஷன்ஸ்

அபி மிகவும் தீவிரமாக கருமமே கண்ணாயினார் என்பது போல தனது கம்ப்யூட்டர் திரையிலேயே மூழ்கிவிடுவாள் போல வேலை செய்துகொண்டிருந்தாள் . அவர்களின் ப்ராஜெக்ட் டெட்லைனை நெருங்கிக்கொண்டிருக்க மூச்சுவிட கூட நேரமில்லாமல் உழைத்துக்கொண்டிருந்தனர். திடீரென பக்கத்தில் கேட்ட குறட்டை சத்ததில் தன் கவனம் கலைய அபி திரும்பி பார்த்தால், விக்கி இருக்கையின் பின்னால் சாய்ந்து நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்…
“cctv கேமரா ரெகார்ட் பண்ணிட்டு இருக்கு கொஞ்சம் கூட கவலைப்படாம இப்படி கும்பகரணன் மாதிரி தூங்குறாரே இந்த மனுஷன்..!!!பூர்ணா பார்த்தா நங்குன்னு தலைலயே கொட்டுவா…அவளை சொல்லி குத்தமில்லை எனக்கே கொட்டணும் போல தான் இருக்கு…” என்று மனதில் நொந்து கொண்டு
“விக்கி .. விக்கி ..” என்று சத்தமாக அழைத்து அவனை எழுப்பினாள்.
பதறியடித்துக்கொண்டு விழித்த விக்கி அரைத்தூக்கத்தில்..

“அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா? எங்க ஆலியா, எங்க தீபிகா..” என்று பிதற்ற..

“விக்கி.. என்ன இது ஆபீஸ் நேரத்துல இப்படி குறட்டை விட்டு தூங்கிறது இல்லாம பகல் கனவு வேற கண்டுட்டு இருக்கீங்க,அதுவும் ஆலியா ,தீபிகாவா? பூர்ணா கிட்ட சொல்லவா?” என்று மிரட்ட

ஐயோ அபி, பூர்ணா கிட்ட சொல்லி என்னோட காதல் தீபத்தை ஊதி அணைச்சிடாதீங்க…நான் தூங்கறேன்னு யாரு சொன்னா ?ஆழ்நிலை தியானதுல இருந்தேன் ,இன்னும் கொஞ்ச நேரம் நீங்க எழுப்பாம விட்டிருந்தா நான் சமாதி நிலையைஅடைஞ்சிருப்பேன் ஜஸ்டு மிஸ்ஸு..”

“ஆமாமா ஜஸ்டு மிஸ்ஸு தான்.. இன்னும்கொஞ்ச நேரம் விட்டிருந்தா cctvல பார்த்து ஹெச்ஆர்ல உங்களை வேலைய விட்டு தூக்கி இருப்பாங்க..”
என்றாள் ஏளனமாக ..

“ச்ச.. இந்த வேலையால மனுஷனோட நிம்மதியே போச்சி… இந்த ப்ரொஜெக்ட்டு, டெட்லைனு, டெஸ்ட்ரன்னு,பக் பிக்சிங்,ப்ரெசென்ட்டேஷன் இதெல்லாம் எவன்டா கண்டுபுடிச்சான், மொதல்ல அவன் சீட்டை கிழிக்கணும்..” என்று விக்கிபுலம்புவதை பார்த்து அபிக்கு சிரிப்பு வந்தது..

அவள் சிரிப்பதை விழிவிரித்து பார்த்து அதிசயித்தவன் "அபி.. என்ன ஆச்சு உங்களுக்கு..” என்று அதிர்ந்த குரலில் கேட்டான்..

"எனக்கு என்ன..? நான் நல்லா தானே இருக்கேன்..” என்றாள் அபி குழப்பியபடி…
"இல்லை நீங்க நார்மலா இல்லை ,நீங்க எப்பவும் ஜோக் சொன்னா மொறைப்பீங்க ஆனா இன்னிக்கு சிரிக்கறீங்களே..” என்று விட்டு தனது வழக்கம் போல் சத்தமாக சிரித்தான்..

"விக்கி…"என்று ஒற்றைவிரலை காட்டி மிரட்டினாலும் அபிக்கும் சிரிப்புதான் வந்தது…கண்கள் கனிய பார்த்தவன் …

"நீங்க எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருங்க அபி, அதான் நல்லா இருக்கு, நானும் பூர்ணாவும் நீங்க இப்படி இருக்கணும்னு தான் ஆசைப்பட்டோம், இப்போ நீங்க நாங்க நெனைச்சா மாதிரியே மாறினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் "என்றான் உண்மையான கரிசனத்தோடு…
அபி ஒரு கணம் திகைத்து போனாள் ,”எப்போதும் சிரிப்பும் கேலியாக இருக்கும் விக்கிக்குள் இப்படி ஒரு மெல்லிய பக்கம் இருக்கிறதா? அதுவும் என் மேல் உண்மையான அக்கறையுடன் பேசும்போது இவ்வளவு நாள் இப்படி ஒரு நலம்விரும்பி நண்பன் அருகில்இருப்பது தெரியாமலே இருந்திருக்கிறோமா..?” என்று கழிவிரக்கம் கொண்டாள் அபி, அப்படியா தன்னில் மூழ்கி போய் இருந்தோம்?” என்று கூட ஆச்சர்யமாக இருந்தது…

"ஆனால் நீங்க முன்னாடி இப்படி இல்லை ,எப்பவும் விறைப்பா ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸரா இருப்பீங்க, எப்படி இந்த திடீர் மாற்றம்..?என்ன காரணம் ,யார் பார்த்த வேலை இது..?” என்று குறும்பாக கேட்கவும் அபிக்கு முகம் சிவந்தது, தானாக விழிகள் அவளின் ஆனந்தத்தின் ஆணிவேரை நோக்கியது.. ஆனால் அவன் நிமிர்ந்தும் பாராமல் வேலையிலேயே கவனமாக இருந்தான்.
அபி உதட்டை சுளித்தாள் "டேய் நிமிர்ந்து என்னை பாருடா குரங்கு ,பிசாசு ,லூசு " என்று பலவாறாக அழைத்தும் அவன் பார்க்காமல் போகவே கடைசியாக மனதிலிருந்து “அருண்..” என்று ஆத்மார்த்தமாக அழைத்த மறுநொடி அவன் நிமிர்ந்து அபியை பார்த்து சிரித்தான்..
அபியின் இதயம் ஒருகணம் நின்று போனது.. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடவென்று றெக்கைகள் விரிக்க..
"இவன் தான் இவனே தான் " என்று அவள் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது..

காஃபிடீரியாவில் அபி தனியாக அமர்ந்திருந்தாள்,மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து கொண்டுவந்த டிபன் பாக்ஸை எடுத்து அவள் திறப்பதற்குமுன் ஒரு கரம் அதை அவளிடமிருந்து பறித்தது…
"ஒருத்தன் இங்க கொலை பட்னில இருக்கும்போது என்னை விட்டுட்டு நீ மட்டும் சாப்பிடுறியா?” என்று கடிந்தவாறு அவள் பக்கத்தில் அமர்ந்தான் அருண்..
அவள் அவனை ஆச்சரியமாக பார்க்கும் போதே
"ஆமா என்ன இன்னிக்கு புதுசா லஞ்ச் பாக்ஸ்லாம் கொண்டுவந்திருக்க?” என்று கேட்க..
"என்னமோ தெரியலை இன்னிக்கு சமைக்கும் போல இருந்தது அதான் நாலு மணிக்கே அலாரம் வச்சி எழுந்து சமைச்சேன்..” என்றாள் பெருமையாக…
"அப்படியா, அப்படி என்னதான் சமைச்சிருக்கேன்னு பார்க்கலாம்..”என்று ஆர்வமாக திறந்தவனின் முகம் ஏமாற்றத்தில் தொய்வதை கண்டு, லேசாக முகம் கன்றியது அபிக்கு…
"இதை தான் நாலு மணிக்கே எழுந்து சமைச்சியா…?"
"எனக்கு இதான் பண்ண தெரியும்.."
என்றாள் அபி குறையாக
"வெறும் தயிர் சாதம், ஊறுகாய் இதை சமைக்க நாலு மணிக்கு எதுக்கு எந்திரிக்கணும்?"
"நாலு மணிக்கு எழுந்து அரிசி ஊற போட்டுட்டு திரும்ப தூங்கிட்டேன்"
என்றாள் அசடு வழிய..
அவள் முகத்தை பார்த்து சத்தமாக சிரித்தான் அருண் ,
முகம் சிணுங்க.. “சிரிக்காத அருண்…போ நான் போறேன்..” என்று எழுந்து செல்ல எத்தனித்தாள், அவள் கையை பற்றி இழுத்து உட்காரவைத்து விட்டு
“குடு, நான் சாப்பிடணும் பசிக்குது..” என்று சாப்பிட தொடங்கினான் ,ஒரு வாய் வைத்ததும்…
அபியை “வேற ஏதாவது ஆர்டர் பண்ணு,,” என்றான் ,அவள் முகம் சொத்தென்று ஆகிவிட்டது.. “பிடிக்கலையோ?”
அவள் ஏமாற்றத்தை கவனியாதவன் போல, “இது முழுசா எனக்கு வேணும் உனக்கு நீ வேற ஆர்டர் பண்ணிக்கோ..” என்றதும் அவள் முகம் மலர்ந்தது ,
ஆனால் உடனேயே சந்தேகமாக அவனை பார்த்தாள்..
"அவ்ளோ நல்லா வா இருக்கு?”
"இவனை நம்ப முடியாது, காபி நல்லா இல்லைனு என் முதுகுக்கு பின்னாடி சொன்னவன் தானே இவன் ?"
“அபி, நிஜமாவே வீட்டு சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கு… நான் இதுவரைக்கும் சாப்பிட்ட தயிர் சாதத்திலேயே இதான் பெஸ்ட் போதுமா?”

“பொய் சொல்லாத என்கிட்ட பாராட்டுவ ,அப்புறமா விக்கிக்கிட்ட கன்றாவியா இருந்தது
ன்னு சொல்லுவா அதானே ?என்று அன்றைய நினைவில் லேசாக கண்கலங்கி போனாள்..
அவளை காயப்படுத்தியதற்காக தன்னையே நொந்து கொண்டான் அருண்,

"சாரி அபி.. அன்னிக்கு உன்மேல இருந்த கடுப்புல அப்படி பேசிட்டேன், ஆனா நிஜமாவே உன்னோட காபி பிரமாதம் தெரியுமா? திரும்ப அப்படி ஒரு காபி கெடைக்காதான்னு என் நாக்கு ஏங்கி போய் இருக்கு..” என்று பாவனையுடன் கூறவும் ,அபிக்கும் சிரிப்புவந்தது ,இருவரும் நிறைய பேச்சு அதைவிட அதிக சிரிப்புமாக உணவருந்தி முடிந்ததும் ,அருண் அவளிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினான்
“என்ன இது ..?”
“இது தெரியாதா? சாக்லேட் …” .
“அது தெரியுது எதுக்கு …”
“சாப்பிடறதுக்கு தான் வேற எதுக்கு ?”
“அது எங்களுக்கு தெரியாதா..? என்ன திடீர்ன்னு, ஏதாவது விசேஷமானு கேட்டேன் ..?”

கொஞ்சம் விஷேஷம் தான்.. பட் எனக்கு. .உனக்கு எப்படினு தெரியலை….”
என்ன பெரிய சஸ்பென்ஸ்ஆ இருக்கு, என்னனு சொல்லு அருண்


அவள் கையில் சாக்லேட் ஐ திணித்து விட்டு ,
நீயே கண்டுபிடிச்சிக்கோ..” என்றுவிட்டு போனான் அவன்..

என்னவா இருக்கும் என்றும் தீவிரமாக யோசித்தவள் மூளையில் பல்பு எரிந்தது ,
அன்றோடு அவர்கள் சந்தித்து ஒரு மாதம் ஆகிறது ,அதை அவன் முக்கியமான நாளாக கருதி நினைவில் வைத்து,முன்கூட்டியே சாக்லேட் வாங்கி வைத்திருக்கிறான் ,அதுமட்டும் இல்லாமல் என்னோடு சேர்ந்து லஞ்ச் சாப்பிட்டு ,நேரம் செலவளித்து என்னை சிரிக்க வைத்து என்று எல்லாம் செய்திருக்கிறான் எனக்கு தெரியாமலே…
“இட்ஸ் எ சர்ப்ரைஸ் பார் மீ … கடவுளே யாரு இவன்..? எனக்காக ஏன் இவ்ளோ பண்ணுறான்?”
அவன் போன திசையையே கண்களில் காதலுடன் பார்த்தார்த்திருந்தாள்….

மறுநாள் காலையில் அபி தனது கதவின் லென்ஸ் வழியே எதிர் பிளாட்டிலிருந்து அருண் வருகிறானா என்று வேவு பார்த்துக்கொண்டிருந்தாள் ,
அவன் வழக்கம் போல ஆபீஸ்க்கு கிளம்பி வெளியே வரவும், எதேர்சையாக வெளியே வருவது போல் இவளும் வெளியே வந்து கதவை பூட்டினாள், அவனை காணாதவள் போல அவன் பக்கமே திரும்ப வில்லை ,
"திரும்பி பார்க்காத, திரும்பி பார்க்காத..” என்று மனதிற்குள் ஜபித்தபடி

"ஹாய் அபி ,குட் மார்னிங்.. " என்ற அருணின் குரல் கேட்டு ,நிதானமாக அவன் புறம் திரும்பி அப்போது தான் அவனை பார்ப்பதுபோல ஆச்சர்யமாக விழிவிரித்து "குட் மார்னிங் அருண்…" என்றாள்.

“என்ன அபி.. இன்னும் கிளம்பலியா..?ஆபீஸ் பஸ்போய் இருக்குமே..”
கடிகாரத்தை திருப்பி மணி பார்த்தபடி “ஏன் லேட்..? என்றான்..

"அது வந்து நான் தூ..தூங்கிட்டேன்..”என்று தடுமாற்றத்துடன் பதிலளித்தாள்.
“ஐயோ, எனக்கு முன்னபின்ன பொய் சொல்லிபழக்கம் இல்லை.. இவனை பார்த்தாலே வாய் டைப் அடிக்குது ,மாட்டிக்காம இருக்கனும் முருகா காப்பாத்து…” என்று மானசீகமாக இஷ்ட தெய்வத்திடம் அப்பிளிகேஷன் போட்டாள்.
“ஓஹ்.. இப்போ ஆபீஸ்க்கு எப்படி போவ..?”என்று அக்கறையாக விசாரித்தான் அருண்..
“டாக்ஸி புக் பண்ணிதான் போகணும், பட் பீக்ஹவர்ல டாக்ஸி கிடைக்காம போகவும் சான்ஸ் இருக்கு, எப்படியும் ஆபீஸ்க்கு லேட் ஆகிடும் போல..”
என்றாள் சோகமாக..
அருணுக்கு அபியின் அதிகப்படியான கவலை தோய்ந்த குரலில் ஏதோ முரண்டியது ,அவள் முகத்தையே கூர்ந்து நோக்கி ,
"இட்ஸ் ஓகே அபி, நான் வேணா…"என்று சொல்லத்தொடங்கியவன் நொடியில் அவள் முகத்தில் எரிந்த ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தை கண்டு சிறிது தயங்கி
“என்கூட பைலை வர தான் இந்த ட்ராமா வா?”நொடிக்குள் முடிவெடுத்து,
“ஹெச் ஆர்ல ஒன் ஹவர் பர்மிஷன் சொல்லிடறேன்.. நீ அதுக்குள்ள ஆபீஸ் வந்துடு, “என்றுவிட்டு கண்ணில் குறும்பு சிரிப்புடன் அவளை பார்த்தான்..
எதிர்பாராத இந்த திருப்பத்திற்கு தயாராக இல்லாத அபி என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப்போனாள்… இருந்தும் அந்த ஏமாற்றைத்தை நொடியில் விழுங்கிக்கொண்டு ,அவனை முறைத்து பார்த்துவிட்டு
"நோ தேங்க்ஸ் "என்றுவிட்டு வேகமாக கிளம்பி சென்றாள்…

“மஹானுபாவர் ஒன் ஹவர் பர்மிஷன் சொல்றாராம்…எங்களுக்கு சொல்லிக்க தெரியாதா? பிசாசு ,வேணும்னே பன்றான், இவனை நம்பி பஸ்ஸை வேற மிஸ் பண்ணிட்டேன் இப்போ டாக்ஸிவேற சுத்திக்கிட்டே இருக்கு புக் ஆகமாட்டேங்குது , ஷேர் ஆட்டோல தான் போகணுமா?”
கேட்டுக்கு வெளியே மனதிற்குள் புலம்பியபடி நின்றிருந்தாள்…

தூரத்தில் உள்ளிருந்து அருணின் பைக் வருவது தெரிந்தது ,அவனை பார்க்கவே கூடாது என்று முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்…
சிறிதுநேரம் ஆனா பிறகும் பைக் அவளை கடந்து செல்லாமல் இருப்பதை அறிந்து லேசாக கடைக்கண்ணில் அந்த புறமாக பார்த்தாள்…அருண் அவள் முன்பாக பைக்கை நிறுத்திவிட்டு கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவளை பார்த்தவாறு நின்றிந்தான், அபிக்கு தூக்கிவாரி போட்டது,

“ஐயோ, நான் ஓரக்கண்ணால பார்த்ததை அவன் பார்த்துட்டானே, எவ்ளோ அவமானம்? என்ன நினைப்பான் என்னை பத்தி…?”
என்று முகம் குன்றிப்போய் அவனை நிமிர்ந்துபார்த்தால் அவன் அவளை பார்த்து வரிசைப்பல தெரிய சிரித்து,அவளை வந்து வண்டியில் ஏறும்படி சைகை செய்தான் ,
அவள் மாட்டேன் என்று மறுப்பாக தலையசைத்துவிட்டு ,திரும்பி நின்றுகொண்டு ,டாக்ஸி புக் பண்ண மீண்டும் முயன்றாள்..
அருண் வேண்டும் என்றே பைக்கை ஸ்டார்ட் செய்து சத்தம் வருவது போல எஞ்சினை முறுக்கினான் ,இந்த நாடகம் அந்தபக்கம் போபவர் வருபவர் கவனத்தை கவருவதை உணர்ந்த அபி,
அவன் புறமாக திரும்பி,”போ அருண்..”என்றாள் எரிச்சலாக ,
அவன் மறுப்பாக தலையாட்டிவிட்டு, தன் வேலையை தொடர்ந்தான் விடாக்கொண்டனாக..
அபி ஆத்திரமும் அவமானமுமாக அவனை முறைத்து விட்டு வேறுவழியில்லாமல் அவன் பின்னல் ஏறி அமர்ந்தாள்
சிறிது நேரம் அமைதியாக வந்தவள் ,
“இப்போ எதுக்கு இவ்ளோ சீன் போடுற..?” என்று எரிந்து விழுந்தாள்..

“ட்ராமாபோடுறது நானா இல்லை நீயா..?”என்று வாய்க்குள் முணுமுத்தான் அருண், பின்னர் திடுமென சத்தமாக சிரித்தான்..

"என்ன சிரிப்பு…?” என்றாள் எரிச்சலாக

"இல்லை ஒரு மாசம் முன்னாடி, வேலைய பார்த்துட்டு போங்கன்னு சொன்ன பொண்ணு இன்னிக்கு என்னோட பைக்ல வருது ,வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் சொல்றது சரிதான் போலனு நெனச்சேன்.. சிரிச்சேன்..” என்றான் அருண்..
“ரொம்ப பெருமை பாட்டுக்காத, ஆபீஸ்க்கு லேட் ஆகுதுன்னு தான் உன்கூட வரேன் வேற ஒன்னும்இல்லை..” என்றாள் கறாராக…

“நாங்க நம்பிட்டோம்..” என்றான் அருண் ஏளனமாக..

“நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் அதான் உண்மை..” என்றாள் கோபமாக , அவளது சிறுபிள்ளை போன்ற கோபத்தை கண்டு உள்ளுக்குள் ரசித்து சிரித்தான்அருண்..
பிறகு ஏதோ நினைவு வந்தவனாக,

"கெட்டியா புடிச்சிக்கோ அபி, இது பீக் ஹவர்.. நெறைய டிராபிக் இருக்கும் நான் சடன் பிரேக் போடவேண்டிவரும் அப்புறம்என்னை குறை சொல்லகூடாது…” என்றவன் தான் சொல்வதை உறுதிப்படுத்துவது போல திடீர் பிரேக் போட இதை சற்றும் எதிர்பாராத அபி, நிலைதடுமாறி அவன் மீது சாய்ந்து அவனை கெட்டியாக பற்றி கொண்டாள், ஒருகணம் தடுமாறியவள் மறுகணம் ,தான் பற்றிய அவன் தோள்மீது தன் நகங்கள் பதியுமாறு அழுத்தினாள் ,
வலிதாங்காமல் அருண் "ஆ ஆ..” என்று அலறவும்

"ஓஹ் சாரி அருண்,நீ இப்படி சடன் பிரேக் போட்டா நானும் உன்னை இப்படி அழுத்..தமா புடிக்க வேண்டி வரும் ,அப்புறம் நீயும் என்னை குறை சொல்ல கூடாது..” என்று திருப்பி கொடுக்கவும்…
அருண் மனதிற்குள் "இவ என்னை விட கேடியா இருப்பா போல.." என்று நினைத்துக்கொண்டான்…

இன்போடெக் சொலுஷன்ஸ்

அந்த தளம் முழுவதும் அனைவரும் ஏதோ ரோபோ போல காட்சியளிக்க விழிகள் கம்ப்யூட்டர் திரையை வெறித்துக்கொண்டிருக்க விரல்கள் கீ போர்ட்டில் வேகமாக விளையாடிக்கொண்டிருந்தன..
அந்த தீவிரமான சூழ்நிலையை லேசாக்குவதுபோல ஒரு குதூகல குரல் கேட்டது
"ஹலோ ஆல்… லெட் மீ ஹவ் யுவர் அட்டெண்ஷன் ப்ளீஸ்..” என்று ஹெச் ஆர் டிபார்ட்மெண்டில் இருந்து மனோஜ் நடு தளத்தில் நின்று கொண்டு அனைவரது கவனத்தையும் தன்வசமாக்கினார்..

எல்லாரும் வேலை செய்வதை நிறுத்திவிட்டுதன்னையே ஆர்வமாக பார்க்கவும் அந்த நடுத்தர வயது மனிதருக்கு ஏதோ டிவி ஷோ தொகுப்பாளர் என்ற உணர்வு வந்தது போலும்
"பிரெண்ட்ஸ் நான் இப்ப எதுக்கு வந்திருக்கேன்னு தானே யோசிச்சிட்டு இருக்கீங்க,கெஸ்வாட்..? நான் இங்க ஒருத்தருக்கு சர்ப்ரைஸ் குடுக்க போறேன்…” கைகளை ஆட்டி பாவனையுடன் என்று நீட்டு முழக்கினார்..

அதற்குள் தன் அருகில் வந்து நின்ற அருணிடம் விக்கி..

“டேய் மச்சான்.. இந்த மனோஜ் கிட்ட மொக்கை போடாம என்ன விஷயம்னு மட்டும்சொல்ல சொல்லுடா..” என்று காதை கடித்தான்..
“ஷ்ஷ்.. சும்மா இருடா…” என்று அவனை அமைதியாக்கினான் அருண்
அதற்குள் பூர்ணா மனோஜிடம்
"என்ன சர்ப்ரைஸ் மனோஜ்?” என்று ஆர்வமாக கேட்டாள்..
"நான் இப்போ எம்பிளாய்யீ ஆப் தி மன்த் யாருன்னு சொல்ல போறேன்" என்றதும் ஆரவாரமாக கரவொலி எழுப்பி அனைவரும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்…
மற்றவர்கள் …. ஒருவேளை அது தனக்கு கிடைக்குமோ என்ற நப்பாசையில் சிலரும் , எனக்கு தான் கிடைக்கும் என்ற அசட்டு நம்பிக்கையில் சிலரும்.. நமக்கெல்லாம் கிடைக்காது பா, என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் சிலருமாக நின்றிருக்க..

விக்கி மட்டும்.. “மனோஜ் சார் ,அந்த அவார்ட் எல்லாம் நீங்களே வச்சிக்கோங்க ,ஏதாவது கேஷ் ப்ரைஸ் இருந்த மட்டும்சொல்லுங்க ,சும்மா எங்க டைம வேஸ்ட் பண்ணாதீங்க..” என்றான் எரிச்சலாக..

"கேஷ் ப்ரைஸ் இருக்கு விக்கி ,எவ்ளோ தெரியுமா 10000 ரூபீஸ் ஒர்த் கிபிட் கார்டு..”என்று கூறியதும் பல உற்சாக கைதட்டல்கள் கேட்டது ,உடனே ஆர்வமான விக்கி
"10000 என்னோட தகுதிக்கு கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் பரவால்ல ,ஆசைபட்டுடீங்க சரி அந்த கிபிட் எனக்கே குடுத்துடுங்க சார்..” என்றான் வினயமாக ..

"கேஷ் ப்ரைஸ்னு சொன்னதும் மரியாதை கூடுது? ஆனா நீ எவ்ளோ தான் தாஜா பண்ணினாலும் அந்த அவார்ட் உனக்கில்லை விக்கி , அதெல்லாம் உண்மையா வேலை பார்க்கறவங்களுக்கு தர்ரது..” என்று அவன் காலை வாரினார்..
“டேய் பாருடா அந்த ஆளோட நக்கலை..” என்று அருணிடம் குறைகூறினான் விக்கி
“சரி விடுடா அவரு உண்மையா தானே சொல்றாரு..” என்று அவன் பங்குக்கு சேர்த்து கலாய்த்தான் அருண்…
“சரி, என்னை அனவுன்ஸ் பண்ண விடுங்கப்பா..’ எம்ப்லாய்யீ ஆப் தி மன்த்’ ஈஸ் மிஸ் அபிராமி ஆப் டெவலப்மென்ட் டீம்..” என்று கூறவும் அங்கு ஒரு உற்சாக ஆரவாரம் எழுந்தது…

அபியால் இதை நம்பவே முடியவில்லை ,முதன் முறையாக அவள் கஷ்டப்பட்டு செய்த வேலைக்கு, உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது ,அவ்வளவு நிறைவாக இருந்தது அவளுக்கு..

மனோஜ் ,அபி பெயர் பொறித்த ஒரு போட்டோ பிரமையும் ,கிபிட் கார்டையும் கொடுத்து பாராட்டி விட்டுசென்றார்…

பூர்ணா அவளை கட்டிப்பிடித்து பாராட்டினாள் ,விக்கியும் கைகுலுக்கி தன் வாழ்த்தை தெரிவிக்க மற்ற டீம் மேட்ஸ் ஒவ்வொருவராக வாழ்த்தினர்.

“அபி.. அந்த கிப்ட்ட இங்க குடுங்க..” என்று அதை அபியிடமிருந்து வாங்கி பார்த்தான் விக்கி.
“ஏண்டா.. நீ கிப்ட் கார்ட்ட பார்த்ததே இல்லையா..” என்றான் பூர்ணா..

"அபி.. இந்த வீக் ட்ரீட் இருக்குல்ல ,டேபிள் புக் பண்ணனும் அதுக்கு இந்த கார்டை யூஸ் பண்ணிக்கறேன்…” விக்கி ட்ரீட்டுக்கு அடி போட்டான்..

"அல்ப்பம் மாதிரி அலையாத விக்கி…” என்றாள் பூர்ணா..

“இட்ஸ் ஓகே பூர்ணா, இந்த வீக் என்னோட ட்ரீட் நீங்க அந்த கார்டை யூஸ் பண்ணிக்கோங்க விக்கி..” என்றாள் அபி தாராள மனதுடன் ,இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அபியின் கவனம் முழுவதும் அருணிடமே இருந்தது..
“என்ன இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்கான் ..?”

அவன் என்னவென்று அளவிடமுடியாத ஒரு முகபாவனையுடன் அவளை நோக்கிவருவதை கண்டு ,அவளையறியாமல் இதயம் தடதடத்தது..
ஆர்வமும் சிறு அச்சமுமாக அவள் அவனை பார்த்திருக்க அருகில்வந்து அவன் அவளை லேசாக அணைத்து "வாழ்த்துக்கள் அபி" என்றான்,
சில வினாடிகளே நீடித்த போதும் அந்த அணைப்பில் உள்ளுக்குள் ஏதோ தலை கீழாக புரண்டது போல் உணர்ந்தாள் அபி..
விக்கியும் பூர்ணாவும் ஏதோ எல்லாம் புரிந்தது போன்ற அர்த்தம் பொதிந்த பார்வை பரிமாறிக்கொண்டனர்..
இந்த ஆர்பாட்டங்களுக்கு நடுவில் ,அபியை குத்தி கிழிக்கும் குரோதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நித்தியை யாரும் கவனிக்கவில்லை ,விவேக் ஒருவனை தவிர ,
நித்தியின் பார்வையில் வன்மம் தெரிவதையும் அதற்கான காரணம் என்ன என்பதை ஊகிப்பதும் அவனுக்கு ஒன்றும் பெரிய விஷயமாக இல்லை..
இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணி ,மற்றவர் கவனத்தை கவராமல் அவளை அணுகினான்
"என்ன பாக்குற நித்தி? நியாயமா அது உனக்கு கிடைக்க வேண்டிய அவார்ட்.." என்று கூறிவிட்டு பரிதாபமாக அவளை பார்த்தான்..

“என்ன சொல்றீங்க விவேக்?”

"ஆமா அவார்ட் நாமினேஷன்ஸ்ல உன்னோட பேரும் இருந்தது, நான் கூட உனக்கு தான் குடுக்கலாம்னு இருந்தேன்,ஆனா அருண்தான் கண்டிப்பா அபிக்கு தான் குடுக்கணும்னு பிடிவாதமா இருந்தான் ,இப்ப தான் தெரியுது அவனுக்கு பர்சனல் ரீசன் இருக்கும்போல
..” என்று எறியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான்..

“மொதல்ல அருணை என்கிட்ட இருந்து பறிச்சா.. இப்போ எனக்கு நியாயமா கிடைக்கவேண்டிய அங்கீகாரத்தையும் என்கிட்ட இருந்து பறிச்சிட்டா..” என்று கொதித்தாள் நித்தி..
“கவலை படாத நித்தி.. இந்த அருண் கூட இருக்கற தைரியத்துல அந்த அபி என்கிகிட்டயே ஆட்டிடியூட் காட்டினா.. நாம அவங்களை சும்மா விட கூடாது… அவங்க ரெண்டு பேருக்கும் பாடம் புகட்டணும்…”

“இப்போ என்ன பண்ணலாம் விவேக்?”

“சொல்றேன்… ஆனா நீ நான் சொல்றதை செய்யணும்.. பாதியில பின் வாங்க கூடாது…”
"என்ன செய்யணும்னு சொல்லுங்க விவேக்,எனக்கு அந்த அபி அழணும் ,அதை நான் பார்க்கணும் அதான் வேணும் ..
“தட்ஸ் குட், இனிமேல்தான் கதையே இருக்கு…இப்போ கட்டிக்கிட்டு நிக்குற ரெண்டு பேரையும் எப்படி வெட்டி விடுறேன்னு பாரு.. "
என்று குரோதத்துடன் சிரித்தான் விவேக்…


தொடரும்
 
அடப்பாவி ....என்ன இது விவேக்க வில்லன் ஆக்கிட்டீங்க...நான் கூட நித்தி அவனுக்கு வேனும்னு தான் அவகிட்ட போனானு நினைச்சேன்...இது நியாயம் இல்ல
 
Top