Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - 7

Advertisement

நீ… நான்…. காதல்❤

“வாட்….? என்ன சொன்னீங்க…இங்க நானும் நீங்களும் மட்டும் தான் இருக்கோம்…காதல் எங்க வந்துச்சு…?” என்றாள் அருவி அவன் சொன்னது புரிந்த பாவனையில்.ஆச்சரியம் அதிர்ச்சி எல்லாம் அருவிக்கும் உண்டு தான்..ஆனால் என்ன அவள் அதை வெளிக்காட்டவில்லை.

இருவருமே வயதிலும் சரி அனுபவத்திலும் சரி..முதிர்ந்தவர்கள் தானே..

“காதல்….அது எனக்கு வந்தாச்சு…உனக்கு எப்ப வரும்னு நீதான் சொல்லனும்..இல்லானாலும் நீயும் நானும் சேரதே காதல் தான்..”

அகத்தியன் மனதில் உள்ளதை பட்டென்று போட்டுடைக்க...

அருவி கத்தவில்லை….கோபம் கொள்ளவில்லை…மிகவும் பொறுமையாக சொன்னாள்.

“ நீங்க சிங்கிளா இருக்கறதால…நானும் அப்படி இருக்கறதால…நம்ம இரண்டு பேரும் நட்புன்ற நிலையில நின்னு பேசுறோம்…அதனால…உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கலாம்…அப்படி கல்யாண ஆசை வந்துடுச்சின்னா வேற ஆளா பாருங்க…ஐ அம் நாட் இன்ட்ரெஸ்டட்…அகத்தியன்” என்று சொன்னவள் கதவு வரை சென்று விட்டு மீண்டும் அகத்தியனிடம் வந்து அவனிடம் காபி கோப்பையை நீட்டியவள்,அவன் வாங்கி கொள்ள

“தேங்க்ஸ் ஃபார் தி காஃபி..” என்று சொல்லி போனாள்…அகத்தியனோ இன்னமும் குறையாத மென்னகையோடு அவன் மேனகையைக் கண்டு ரசித்தான்.

உள்ளே போன அருவிக்கு இவன் காதல் என்றதும் ,அவளுக்கும் சக்திக்கும் ஊருக்குப் போகும் முன் நிகழ்ந்தவை நெஞ்சில் நிழலாடின.

சக்திக்கு அமெரிக்காவில் இருந்தவரை அருவியை அரெகண்ட் அருவியாகத்தான் தெரியும்.ஆனால் இங்கு வந்த பின்…அவளுடன் இருந்த பின் தான் அவள் அன்பின் அருவி என்பது அவனுக்குப் புரிந்தது. அதிகம் பேசா விட்டாலும் அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்வதெல்லாம் அவனுக்கு அவள் மீதான பாசத்தை பெருக்கியது.

தாங்கள் மட்டும் குடும்பமாக இருக்க…அத்தை இப்படி தனியாளாக இருக்கிறாளே என்ற வருத்தம் அவனுக்கு.இதே யாழினி இப்படி இருந்தால் அவனோ அவன் தந்தையோ விடுவார்களா..?தன் தந்தை மிகவும் சுய நலம் என்று அவனுக்குள் ஒரு கோபம் உருவானது.

அதை அருவியிடம் காட்டவும் செய்தான்.

“ஏன் அத்தை…நீங்க இப்படி சிங்கிளா இருக்கீங்க…..எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று சக்தி வருத்தத்துடன் பேச,

“இதுல என்ன கஷ்டம்…..ஐ அம் ஃபைன் டா….நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற…?” என்று அருவி அவனுக்கு ஆறுதல் சொல்ல

“இல்ல அத்த….நான் ஏன் இவ்வளவு நாள் யோசிக்கலன்னு ஃபீல் பண்றேன்….இதே யாழினி கல்யாணம் வேண்டாம் சொன்னா அப்பா விட்டுடுவாங்களா…?” என்றான் கோபத்துடன்.

“சக்தி…அப்பா மேல தப்பு இல்ல…எனக்குப் பிடிக்கல….அதனால பண்ணிக்கல…அப்பா சொல்லாம இருக்காங்கனு நீ நினைக்கிறியா….எனக்கு அதுல சுத்தமா விருப்பமில்ல…” என்று அருவி பொறுமையாக சொல்ல

“அதான்…ஏன்..?” என்று சக்தி மீண்டும் மீண்டும் கேட்க,

அருவிக்குக் கோபம் வந்துவிட்டது.இயல்பிலேயே அதிகம் பேசாதவள்….தன்னுடைய தனிப்பட்ட விசயத்தை எல்லாம் விவாதிக்க அவள் என்றும் விரும்பியதில்லை.சக்திக்காக பொறுமையாக சொல்ல…அவன் அவளது அகவுணர்வுகள் புரியாமல் பேச

“பிடிக்கலன்னா விடு…சக்தி….உன் வயசுக்குத் தகுந்த மாதிரி நட…..இது என்னோட பெர்சனல்…” என்றாள்.

“அப்போ..எங்கிட்ட இனி பேசாதீங்க…” என்று கோபத்துடன் தான் அடுத்த நாளும் அவன் சுற்றுலா சென்றான்.அருவி பேசினாலும் அவன் பதிலே பேசவில்லை.

இப்போது அகத்தியன் அவன் அகத்தை இவளுக்கு வெளிக்காட்டி இருக்க…இந்த தருணத்தில் சக்தி இல்லாதது நல்லதென்றே நங்கை நினைத்தாள்.

முதல் முறையாக ஒருவன் காதலை சொல்கிறான்..அதுவும் இந்த வயதில்….அருவிக்கு சிரிக்கத்தான் தோன்றியது.இயல்பினால் வந்து ஈர்ப்பு என்றே அவள் எண்ணம்.

அடுத்த நாள் அருவி மொட்டை மாடிக்கு சென்று துணிகளை அள்ள,அகத்தியன் அங்கு தான் நின்று கொண்டிருந்தான்.இவளையே பார்த்துக் கொண்டு..ஆனால் பேசவில்லை.

அருவி தான்,

“என்ன….டியுட்டிக்குப் போகல…அகத்தியன்..?” என்று கேட்க

அவன் விழிகளில் ஏறிக்கொள்கிறது அருவி மீதான் ஆச்சரியம்.

“இல்ல……இன்னிக்கு எனக்கு ஆஃப்…” என்றவன்

“ நான் நேத்து அப்படி பேசின பின்னாடி இன்னிக்கு எதுவும் நடக்காத மாதிரி எங்கிட்ட பேசுற அருவி…?” அகத்தியன் அருவியை அறிந்து கொள்ள கேட்க,

அருவியோ….துணிகளை மடித்துக் கொண்டே அவனிடம் பேசினாள்.
“அகத்தியன்….நீங்க உங்க மனசுல இருக்கறதை சொன்னீங்க…நான் என்னோட நிலையை சொல்லிட்டேன்….அதோட அந்த விசயம் முடிஞ்சுப் போச்சு…..நீங்களும் சின்ன பையன் இல்ல.. நானும் சின்ன பொண்ணு இல்ல…இரண்டு பேருமே தெரிஞ்சே சொன்ன விசயங்கள் தான்…..அதை தாண்டி நமக்குள்ள நல்ல நட்பு இருக்குன்னு நினைக்கிறேன்….என்ன இருக்கு தானே?” என்று அருவி அகத்தியனைப் பார்த்து கொண்டே புருவம் உயர்த்திக் கேட்க

அவன் விழிகளில் அவளுக்கான காதல் நிறைந்திருக்க “எஸ்….அது இருக்கு தான்…ஆனா அந்த நட்பைத் தாண்டனும்னு தான் என்னோட விருப்பம்…” என்று அகத்தியன் அவன் அகத்தில் அருவிக்கென பொழிந்த காதலை….தெள்ளத்தெளிவாக சொல்லிவிட

“உங்க விருப்பத்துல….எனக்கு விருப்பமில்லன்னு நான் நேத்தே சொல்லிட்டேன்…..ஒன்னு நீங்க…..உங்க விருப்பத்தை கடந்திடனும்…இல்ல…நான் நம்ம நட்பை கடக்கனும்..தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..” என்று சொல்லி அருவி அவனை கடந்து சென்றுவிட….எதையும் கடக்க முடியாமல்….காலத்தை கடத்தினான் அகத்தியன்.
அடுத்து இரண்டு நாட்களில் சக்தியும் வந்துவிட….அவர்கள் நாட்கள் இயல்பாய் சென்று கொண்டிருந்தது.

அன்று அருவி மிகவும் பரபரப்பாய் வேலைகளை செய்து கொண்டிருக்க,

“என்ன அத்தை..யாராச்சும் கெஸ்ட் வராங்களா…?” என்று சக்தி கேட்க

“ஆமா…சக்தி….என்னோட பெஸ்ட் ப்ரண்ட்…சரஸ்வதி வரா…” என்று சொல்லி அருவி தோழிக்காக வாங்கி வந்த பலகாரங்களை எல்லாம் எடுத்து வைக்க…சிறிது நேரத்தில் சரஸ்வதியும் வந்து விட்டாள்.சக்தியை அருவி அறிமுகம் செய்து வைக்க..,அவனும் நலம் விசாரித்துவிட்டு நல்ல பிள்ளையாக அறைக்குள் புகுந்து கொள்ள,

அருவியின் தோழி அருவி போல் அல்லாது…அருவியாகப் பேசினாள்.

“உனக்கென்ன அருவி….சிங்கிளா சந்தோசமா இருக்க….என்னை பாரு….என் மாமியார் டெய்லி ஒரு சண்டை இழுப்பாங்க….எனக்கு அதை சரி கட்டவே நேரம் சரியில்ல…” என்று புலம்பினாள்.அவளும் ஆறு வருடமாக இதையே சொல்ல....

“ஹேய்….அதெல்லாம் இல்ல…சிங்கிளா இருந்தாலும் பார்க்கறவங்களாம் ஏன்மா கல்யாணம் பண்ணல கேட்பாங்க…சரஸ்…உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு….மாமியார் எப்படி இருந்தா என்ன….உன் ஹஸ்பண்ட் நல்லாதானே பார்த்துப்பாங்க….இந்த புலம்பலை விடுடி..ஆறெழு வருசமா நீயும் இதே சொல்லி…எனக்கு போர் அடிக்குதுடி..” என்று அருவி சொல்ல

“உங்கிட்ட புலம்பாம வேற யார்கிட்ட நான் சொல்றது…..வீட்ல சொல்ல முடியுமா…?இல்ல..அவர்கிட்ட அவங்க அம்மா பத்தியே சொல்ல முடியுமா…நீதானே பேச மாட்ட….என்னை பேச விடு….” என்றவள் மாமியார் செய்யும் கொடுமைகள் சொல்ல…கேட்டிருந்த அருவிக்கு எப்படியோ அறைக்குள் இருந்த சக்தி உண்மையில் பதறிப்போனான்.

அப்போ கல்யாணம் ஆகிப்போனா..மாமியார் நம்ம அத்தையை கொடுமை செய்வாங்களோ…என்றதாய் அவன் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது…மிஷன் மிங்கிளை விட சிங்கிளை சால நன்று என்று சரஸ்வதியின் பேச்சு சக்தியை நினைக்க வைத்தது.

“இங்க பாரு….சரஸ்….எனக்கு உனக்கு அட்வைஸ் பண்ணவெல்லாம் தெரியாது….ஆனா போல்டா இரு……அவங்க ஏதோ பேசினா..கண்டுக்காத….எல்லாத்துக்கும் சண்டை போடாத….அவ்வளவுதான் எனக்குத் தெரியும்…”

“ஆமா…உனக்கு என்ன தெரியும்…ஜாலியா இருக்க….நீயே ராணி….நீயே மந்திரி…என் மாமியார் மாதிரி ஒரு மாமியார் இருந்தா தெரியும்…” என்று சரஸ்வதி அவள் சந்தித்த வேதனைகளை கூற,

“ஹே….இங்க பாரு…சரஸ்…கல்யாணமாகிட்டா ஒரே மாமியார் தான்…கல்யாணம் ஆகலன்னு வைச்சிக்கோ…ஊரெல்லாம் மாமியார் டி…அதெல்லாம் உனக்குப் புரியாது…” என்று அருவி அவள் நிலையை விளக்கிட,அருவி சொன்னதைக் கேட்டு சரஸ்வதி தோழிக்காக வருந்தினாள்.

“அப்போ…நீ சந்தோசமா இல்லையா..?” என்று கவலையோடு கேட்டிட

“ப்ச்….நம்ம சந்தோஷம் நம்ம கிட்ட தான் இருக்கு….சரஸ்…..உனக்குப் பிடிச்ச ரஸகுல்லா வாங்கி வைச்சிருக்கேன்….அதை சாப்பிடு…” என்று எடுத்து கொடுக்க….அதன் பின் தோழிகள் சிறிது நேரம் பேச…..சரஸ்வதி கிளம்பிப் போன பின் சக்தி அருவியிடம் வந்து,

“அத்தை…….உங்க ப்ரண்ட் நம்ம வீட்டுக்கு வராங்க….நீங்க இத்தனை நாள்ல….எங்கேயும் போய் நான் பார்க்கலயே…?” என்று தன் நெடு நாளையை சந்தேகத்தைக் கேட்க

“சக்தி…..சரஸ் ரொம்ப க்ளோஸ்…அடிக்கடி மீட் பண்ணுவோம்…மத்தவங்களாம் காலேஜ்ல கூட வொர்க் பண்றவங்க தான்…ஸோ டெய்லி நேர்லேயே பார்த்துக்குவோம்….என்னோட மத்த காலேஜ் ப்ரண்ட்ஸ்லாம் கல்யாணமானவங்க…அவங்க வீட்டு நான் போனேன் வை…ஏன்மா இன்னும் கல்யாணமாகலயா..கேட்பாங்க….அவங்க ஒரு கல்யாண மாலை நடத்த ஆரம்பிப்பாங்க..அதனால நான் போறதில்லை…” என்று அருவி சொல்லவும்

சக்தி தயங்கியவனாக,

“அத்தை…..கல்யாணமான மாமியார் கொடுமையெல்லாம் செய்வாங்களா..சரஸ்வதி ஆன்டி சொல்ற மாதிரி…?” என்று கேட்க

சக்தி கேட்ட விதம் அருவிக்கு சிரிப்பை வரவழைக்க…அடக்கிக் கொண்டு ,”ஆமா….செய்வாங்க…?”

“ஆனா கல்யாணம் ஆகலனாலும் வேற பிரச்சனை எல்லாம் இருக்குல..” என்று அவன் தாடையில் விரல் வைத்து யோசிக்க…

“டேய்….பெரிய மனுசா….என்ன டவுட்…உனக்கு..?” என்று அருவி அவன் தலையில் கொட்டி கேட்க

“ஹா…அத்தை…” என்று தலையைத் தேய்த்தவன் ,

“இல்ல…உங்க கிட்ட நான் டூர் போறதுக்கு முன்னாடி சண்டை போட்டேன் தானே….உங்களுக்கு ஒரு குடும்பம் வேணும் தான் அப்படி பேசினேன்.கல்யாணம் ஆன நீங்க ஹாப்பியா இருப்பீங்க நினைச்சேன்…பட்…நௌவ்…?” என்று அவன் குழப்பத்தில் பேச,

“அப்போ….நான் உங்க குடும்பத்தில இல்லை…அப்படி தானே?” என்று அழுத்தத்துடன் கேட்டாள் அருவி.

“அத்தை…நாட்…லைக்…தட்….” என்று பதறியவன்,

“ஐ மீன்…..அத்தை…அத்தை வீட்டு மாமா…அத்தை பசங்க….அப்படி எனக்கும் ரிலேஷன்ஸ் வேணும்…சொன்னேன்….ஐ டிண்ட் மீன்….நீங்க வேறன்னு…” என்று அவன் பதட்டமும் பரிதவிப்புமாக சொல்ல,

அவனை கனிவோடு பார்த்த அருவி,

“ரிலாக்ஸ் சக்தி….எனக்குப் புரியுது…..எனக்கு…அண்ணா,….அண்ணி…சக்தி..யாழினி போதும்…” என்று சொன்னவள் அவன் தலையைக் கலைத்து விட்டு போக…சக்திக்கு யாரோ ஒருவரின் வீட்டிற்கு சென்று மாமியாரிடம் கொடுமை அனுபவிப்பதை அத்தை இப்படியே இருந்து விட்டால் போதும் என்று நினைத்தான்.

*********************
ஒரு வாரம் ஓடியிருக்கும்.

சக்தி ஏதோ புத்தகம் வாங்க சென்றிருக்க… அருவி அவன் வருகிறானா என பால்கனி வழியே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு லிஃப்ட் திறக்கும் சத்தம் கேட்க

பார்த்தால் அகத்தியன் தான்.

இவளை அவன் காண…இவள் சினேகமாக சிரிக்க…அவனோ அதைக் கண்டு கொள்ளாது வீட்டினுள் சென்றுவிட…அருவிக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.ஒரு வாரம் கழித்து இன்று தான் அவனைப் பார்க்கிறாள்…அப்போதும் இப்படி முகம் திருப்பி செல்கிறானே என்ற கோபத்தில் அருவி இருக்க….அவளின் நாசியில் புகுந்தது நல்லதொரு நறுமணம்..

காபீயீய்…………….அகத்தியனின் காபி…….

அன்று 'ஹேவ் இட்' என்று சொன்னவன் ஹாயாக அவன் பாட்டிற்கு காபியை வெளியே வேடிக்கைப் பார்த்தபடி பருக…..காபியிலிருந்து வந்த ஆவியும் அனலும் போல் அருவியும் கொதித்தாள்.

அருவியின் பார்வையை படித்துக் கொண்ட அகத்தியன்..

“இனிமே நோ காபி ஷேரிங்……இரண்டு கப்ஸ் கிடையாது…சிங்கிள் கப் தான்..வேணும்னா வாங்கிக்கோ…” என்று அவன் பருகிய காபி கோப்பையை நீட்ட

அருவிக்கு உள்ளுக்குள் என்னவோ உடைந்தது.

“அப்போ நட்புன்றதே நமக்குள்ள கிடையாதா..?” என்றாள் ஆயாசத்துடன்.

அவ்வளவு மரியாதையும் நட்புடனும் பார்த்தவள் ஆயிற்றே….தாங்கவே இயலவில்லை.அவனின் பாராமுகம்…காதல் பேச்சு எதுவும் பிடிக்கவில்லை.

“என்னால…..என் காதல கடக்க முடியல…அருவி… நிஜமா….நட்புன்ற எல்லை இனி எனக்கு இல்லை….அதை தாண்டி ரொம்ப நாளாச்சு..” என்றான் பார்வையில் பாவைக்கான பாசத்தை தேக்கி வைத்தவனாக.

“எங்கப்பா…அண்ணாக்கு அப்புறம்…உங்க கிட்ட நல்ல நட்பை…..நான் உணர்ந்தேன்…..ஆனா…ப்ச்… ஏன்….எப்படி…..இது எங்க வந்துச்சு…?” என்றாள் தாங்க முடியாதவளாக.காதல் என்று சொல்ல கூட முடியவில்லை.

“உனக்கு என் மேல நட்பை தாண்டி எதுவும் வரல இல்லையா…அதுக்கு காரணம் கிடையாது…அது மாதிரி எனக்கும் உன் மேல நட்பை தாண்டி வந்த இந்த உணர்வுக்கு காரணம் கிடையாது….ஆனா அதே சமயம்…உன்னை நிர்பந்திக்கிறது என்னோட அன்புக்கு அழகில்ல…ஸோ….இப்படியே தனியா இருப்போம்..” என்று அவன் தெளிதென சொல்லிட,

அருவி கோபமாக வீட்டிற்குள் போக….

‘கோடி அருவி கொட்டுதே அடி உன்னால…
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால..’


என்று பாடல் கேட்க….அகத்தியன் அவனது ட்ராக் சூட்டில் இருந்து செல்பேசியை எடுத்தவன்…..அது அழைத்துக் கொண்டே இருக்க….

மீண்டும் இசைத்தது….கோடி அருவி…அவன் அகத்தின்னுள்ளும்…அலைப்பேசியினுள்ளும்.

அருவியின் அகன்ற விழிகளில் ஆச்சரியம் அரங்கேறியிருக்க…அவனைப் பார்த்திட…..அதைக் கண்ட ….அகத்தியன் விழிகளுக்குள் அருவிக்கென…..ஆர்கழியென காதல் நிறைந்திருந்தது.

அகத்தியன் புருவம் உயர்த்தி…குறும்பு குடியிருந்த அவன் குறுவிழிகளில் அவளை நோக்கி….தன் காபியை காண்பித்து ,

“ஷேரிங்….” என்று அவன் இதழ் அசைக்க….

அவன் செயலில் அருவி அகத்தியனை முறைத்துப் பார்த்திட,அவனோ கண்ணடித்து விட்டு அலைப்பேசியை ஆன் செய்தான்.

அவனின் செயலில் அவளுக்குள் புதிதாய்..புதிராய்…சில உணர்வுகள்..
புலரும் நிலையில்…..


நீ நான் காதலாவோம்..!!

------------------------------------------------------------------------------------------------

எழுதனும்னு நினைக்கிறப்ப தான் எல்லா பக்கமும் கூப்பிடுறாங்க....சாரி லேட்டாச்சு...படிக்கிறவங்க பிடிச்ச லைக் கமெண்ட்...ரியாக்ட்...ஷேர் பண்ணுங்க....முடிஞ்சா....கண்டிப்பா இன்னொரு எபி உண்டு....So Dear friendss...படிச்சுட்டு எபி பிடிச்சதா சொல்லுங்க....எதாவது குறையானாலும் தயங்காம சொல்லுங்க..அருவி character and அகத்தியன் character...நான் மனசுல ஒரு விதமா நினைச்சுருக்கேன்...நீங்க அவங்க character என்னனு கரெக்டா சொல்லுங்க...முதல் முதல்...இந்த எபி வரை சரியா செய்திருக்கேனா..தெரியனும்...

நிறைய new readers comment பார்த்தேன்...thanksssssss and welcome here???????

மத்தவங்களுக்கு...இது பெருமை இல்ல..உங்க கடமை....;)???


கோடி அருவி பாட்டு கேட்டு பாருங்க...


இந்த பாட்டு மகிம்மா...கேட்க சொன்னது...கன்னட பாட்டு...ஆந்திரா சிங்கர்ஸ்>.எஸ்.பிபி....டைரக்டர்..நம்ம இளையராஜா....அண்ட் அனில் கபூர் my favoriteee....

அதோட translation

Amongst our smiling eyes, sweet silences and yearning heart beats is there any need to talk it out?
There endures a new language between us, a passionate poem.
Is there need for a poet to sing it for us?
I will share a hundred stories with you, I will make you laugh today and every day.
Even in the dark, I will be able to see your shy smile and the multitude of dreams in your eyes.
I will walk with you in the rain and will never let go of your hand now in mine.
With you friend, I want to fly Beyond the horizon and the skies.
In the whispers of this night I can hear a beautiful song of love
Your love has brought to my heart Colors that are never to fade
These are blooming buds of hope Don't let them wither away, in vain.


meaning பார்க்கவும் தான் மகிம்மா...செமயா செட் ஆகியிருக்கு அகன் அண்ட் அருவிக்கு...thanksss so much,,
@Maheshwarisaravanan ? ? ?


:love::love::love:
SEMA ud sis agathiyan character is very good
 
Wow pavi dear rumba nalla eruku update, agathiyanoda anugumarai nalla eruku, rendu perum avanga nilamaila kadakama erundu avamga pesardu nalla eruku, agathiyan solradu super kadal muthi pochi, nice update dear thanks.
 
Top