Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 23 4 & 23 5

Advertisement

//என் comment edit-க்கு பதிலா கை தவறி delete ஆக அந்த நேரம் mobile பேட்டரி தீர.... என்ன சொல்ல epi பார்த்த surprise and 1st feel இப்ப போய்டுச்சு. இருந்தாலும் மிச்சம் இருக்குற feelings-ஐ கொட்ட மீண்டும் வந்துட்டேன் //

தாட்சாயனி இன்னிக்கு update முழுவதையும் நிறைத்து நம்ம மனசையும் கவர்ந்தந்துட்டாங்க. பையனோட கள்ளத்தனத்தை சும்மா சிதறு தேங்காய் மாதிரி உடைச்சு விட்டுட்டாங்க. அந்த நொடி ஜோதி மனசு என்ன மாதிரி ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும்.

டேய் சுபாஷு, ஒத்துக்கறேன்டா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். ஆனாலும் உனக்கு அது too much-ஆ இருந்துருக்கு.
ஹர்ஷா இருக்கற field- ல அவன் பார்க்காத அழகான பொண்ணுங்களா இல்லை அவன் தான் handsome-ஆ இல்லையா?
இல்லை அதையெல்லாம் தாண்டிய குணவதியா உன் பொண்டாட்டி. எந்த விதத்துல டா அவனை உன் மனைவி சலனப்படுத்திடுவா... அது உனக்கும் அவளுக்கும் சங்கடத்தை உண்டு பண்ண? உனக்கே இதெல்லாம் கொஞ்சம் over-ஆ தோணலை.
(ஹர்ஷா மனைவியோட
bun-கன்னங்களுக்கு முன்னாடி ஜீவிதாவோட personality எல்லாம் ஒன்னுமே இல்லை. அவனே பொண்டாட்டி கன்னம் ரெண்டும் ஒட்டிப் போன கவலையில் இருக்கான்)
உண்மையை சொல்லு - அவன் உறவுன்னு வந்து போக இருந்தா உன் மனைவிக்கு அவனை miss பண்ணிய feel வந்துட்டுமோன்னு எதுவும் நீ insecured-ஆ feel பண்ணல தானே.

ஜோதி ஏன் உண்மையை சொல்லலை - அதுக்கு பின்னாடி அவகிட்ட இருக்குற காரணம் valid or invalid - எப்படி இருந்தாலும் சரி அது ஹர்ஷாக்கு மட்டும் தெரிஞ்சா போதும். உங்களுக்கு இவ்வளவு காலம் கடந்த பின்ன அது தேவை இல்லை.
தாட்சாயாணி அம்மா முதல் அனைவரும் அவளாகவே சொல்லலை என்று சொல்லறாங்களே தவிர, இவங்க எல்லாரும் ஹர்ஷா எப்படிப்பட்டவன் என்று யூகங்கள் விடுத்து அவளிடம் விசாரித்து தெரிந்து கொள்ள முயலவே இல்லை. Especially ஜீவிதா. அதுவும் சுபாஷ் ஹர்ஷாவோட profession, residence, marital status இதெல்லாம் பத்தி அப்பப்ப updated-ஆக தான் இருந்துருக்கான். அப்படி இருந்தும் சுபாஷ்-ஜீவிதா ரெண்டு பேரும் ஒன்னுமே proactive-ஆ செய்யலை.

ஒருவழியா ஜீவிதா கடமைக்கேன்னு ஒரு apology note வாசிச்சுட்டா ஹர்ஷாகிட்ட. "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன "-moment தான் அது.

கமலேஷ் உன் நிலைமை பத்தி ஒன்னுமே சொல்லறதுக்கில்லை. உண்மை தெரிஞ்ச பின்னும், நீச்சல் குளத்துல பிள்ளைங்களை வெச்சுகிட்டு கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின ஹர்ஷா கிட்ட. இப்ப போ இந்தியாவுக்கு திரும்ப. போய் பகுத்தறிவு, தேவையான பொது அறிவு எல்லாம் கற்று சான்றிதழ் வாங்கிக்கிட்டு திரும்ப வா ஜெர்மனிக்கு ஹர்ஷாகிட்ட காட்ட. ஏன்னா இனி அவன் மனசு வெச்சா தான் நீ உடைந்து போன உன் நட்பை ஒட்ட வைக்க முடியும். ஜோதி எப்படி ஹர்ஷாவை பார்க்கறா என்று கொஞ்சமும் யோசிக்காத மடையன் நீ. இப்ப love-ம் கசந்து , friendship-ம் இழந்து நிற்கற.

ஆத்தரே, இன்னிக்கும் அவங்க ரெண்டு பேரையும் தனியாக பேசவிடலை நீங்க. அவங்களை பார்க்க மட்டுமே வெச்சுட்டு இருக்கீங்க. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பார்வைக்கு நன்றி சொல்ல்லிக்கட்டும். அவங்களை தனிமையில கொஞ்சம் பேச வைங்கம்மா. அதுக்கு வேணா நான் உங்களுக்கு இப்பவே நன்றி சொல்ல ஆரம்பிக்கறேன். இன்னும் ஒரு சண்டை, ஒரு வாக்குவாதம் அப்படிக்கூட எதுவும் வரலை. ஜோதி கொஞ்சமாவது அவன்கிட்ட கோவப்பட்டு கத்தணும். அப்ப தான் நிஜமான கணவன் மனைவி பீல் வரும். Romance எல்லாம் அப்புறம் வரட்டும்.
(ஜோதி எப்படி கோவப்படலாம் அது என்ன ஞாயம்ன்னு கேட்பவங்களுக்கு:- Husband கிட்ட கோவப்பட wife-க்கு எந்த காரணமோ ஞாயமோ தேவையே இல்லை. ஏன்னா அவ WIFE என்கிற Golden rule-ஐ பொருத்திப்பார்க்கவும்)
உங்க comment வரலையே என நினைத்தேன். நன்றாக சொன்னீர்கள்.
 
எனக்கு சுபாஷ் குடும்பத்தை பத்தி பேச விருப்பம் இல்லை தாட்சாயணி உட்பட 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 அதான் அவங்களை பத்தி எதுவும் கமெண்ட்ல சொல்லலை ஆனால் நீங்கள் நல்லா பெரிய கமெண்ட்ஸை போட்டு நீங்கள் திட்டிட்டிங்க 😀😀😀😀😀😀😀😀😀😀😀

சுபாஷ், கமலேஷ் வயசுல சின்னவங்க அவங்களுக்கு எந்த அனுபவம் கிடையாது 🤭🤭🤭🤭 ஆனால் தாட்சாயணி கணவன் இல்லாமல் தனியா இருந்து இரண்டு பிள்ளைகளை வளர்த்து இருக்காங்க 🧐🧐🤔 எவ்வளவு மனுஷங்களை பார்த்து அனுபவ பட்டு இருப்பாங்க 😣😣😣😣ஜோதியோட நடவடிக்கைய கொஞ்சம் கவனிச்சு பார்த்திருந்தால் ஹர்ஷா பத்தி யோசிச்சு இருப்பாங்க 😣😣😣😣 ஆனால் அவங்க ஆரம்பத்திலே கமலேஷ்க்கு ஜோதிய கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துட்டாங்க 🤧🤧🤧🤧🤧🤫 அதனால் ஜோதிய சரியா கவனிக்கல 🤭🤭🤭

சுபாஷ் கிட்ட ஆயிரம் குறை இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே ஹர்ஷா விஷயத்தில் ஜோதியோட நடவடிக்கைய கவனிச்சது அவன் மட்டும் தான் 🧐🧐🧐 இங்கு வந்த பிறகு தான் கிறுக்கன் ஆகிட்டான் 🥶🥶🥶☺️☺️☺️☺️☺️☺️

சுபாஷ் கண்ணில் பட்டது தாட்சாயணி அனுபவத்துக்கு ஏன் அவங்க கண்ணில் படவே இல்லை 🤭🧐🧐🧐🧐🧐 ஹர்ஷா ஜோதி சுபாஷ் ஜீவிதா கமலேஷ் எல்லாம் வயசுல சின்னவங்க எந்த விஷயத்தையும் சரியா அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க தெரியாது 😓😓😓😓 ஆனால் தாட்சாயணி ஜோதிக்கு குழந்தை பிறந்த பிறகாவதுக ஜோதி கிட்ட பேசி இருக்கலாம் 😔😠😠 ஆனால் எல்லோரும் ஜோதியோட வயசை காரணம் காட்டி அதை பத்தி யாரும் பேசாமலே விட்டுட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இன்னைக்கு தாட்சாயணி பேசும் போது கொஞ்சம் கடுப்பா தான் இருந்தது 🤨🤨🤨 இப்போ பசங்க செஞ்ச தப்பை கேள்வி கேட்கிறவங்க இந்த ஆறு வருஷத்தில் என்ன செஞ்சாங்க 😏😏😏😕😏 ஜோதிக்கு நாம் தான் வாழ்க்கை கொடுக்க போறோம் என்று அவங்களா நினைச்சிட்டு அவளோட உணர்வுகளை கவனிக்காமலே விட்டுட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இந்த ஜோதி ஆரம்பத்திலே ஜீவிதா பேர் சொல்லி தான் கல்யாணம் நடந்தது என்று சுபாஷ் கிட்ட சொல்லாம விட்டுட்டாளே என்று கேவ பட்டேன் 🤭 🤭 🤭 🤭 ஆனால் இப்போ அதை மட்டும் சொல்லி இருந்தால் ஹர்ஷாவையும் ஜோதியையும் சந்திக்க விடாமலே செஞ்சிருப்பான் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
உங்களுடைய கருத்தும் ஞாயமானதே.
 
Top