Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 10

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 10TH EPISODE. PLS COMMENT N SHARE UR THOUGHTS WITH ME. THANKS TO ALL READERS FOR UR GENUINE SUPPORT.


அத்தியாயம் 10

அன்று வகுப்புகள் முடிந்த பின் விடுதிக்குக் கிளம்பிய கார்த்திகா பின்னால் தயங்கி நின்ற மதுராவைக் கேள்வியாய்ப் பார்த்தாள்.

"என்னடி வரலையா?"

"இல்லப்பா எனக்கு லைப்ரரியில் கொஞ்சம் வேலையிருக்கு. ரெபரன்ஸ்க்கு சில புக்ஸ் பார்க்கனும். பெட் சைட் க்ளினிக்கல்ஸ் புக் இன்னிக்கு லைப்ரரியன் தர்றதா சொல்லியிருந்தார். வாங்கிட்டு வந்துடறேனே ப்ளீஸ்......நீ வெய்ட் பண்ண வேணாம். நானே வந்துடறேன்"

கார்த்திகா கிளம்பிப் போனதும், மதுரா லைப்ரரிக்கு கிளம்பினாள்.

பரீட்சை நெருங்கும் சமயமென்பதால் ஆங்காங்கே மரத்தடிகளிலும் வகுப்புகளைச் சுற்றி நீண்ட காரிடார் வாயிற்படிகளிலும் கூட்டமாய் அமர்ந்து கலாய்க்கும் மாணவர்கள் கூட அன்று காணாமல் போயிருந்தனர். இருந்த ஓரிருவரும் ஏகாந்தமாய் புத்தகத்தை விரித்து அதில் மூழ்கியிருந்தனர்.

லைப்ர்ரியிலும் அதிக கூட்டமில்லை. லைப்ரரியன் மட்டுமே வீட்டிற்குக் கிளம்பும் ஆர்வத்தில் இருந்தவர் மதுரா உள்ளே நுழைந்ததும் முகம் மாறினார்.

"சாரி சர் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கறேனா? நான் கேட்ட புக்கை எடுத்து வைக்கறதா சொல்லியிருந்திங்க .அதான் வந்தேன்."

"சே சே தொந்தரவெல்லாம் இல்லம்மா. லேசாத தலைவலிக்கறா மாதிரி இருந்தது. பசங்களும் யாரும் வரலையா? அதான் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்னு கிளம்பினேன். பரவாயில்லேம்மா.. நீ கேட்ட புக் அந்த கடைசி செல்ஃப்ல இருக்கு. பார்த்து எடுத்துக்கம்மா நான் அதற்குள்ளே ஆபீஸ் ரூம் வரை போய்ட்டு வந்துடறேன். வந்து என்ட்ரி போட்டுக்கறேன் சரியா?"

மதுரா மும்முரமாய் புத்தகங்களைப் புரட்டி குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கையில், வாயிலரவம் கேட்டது. புத்தகத்தில் மூழ்கியிருந்த மதுரா தன் காரியமே கண்ணாய் இருக்கவும், உள்ளே நுழைந்த ராஜீவ் தொண்டையைக் கனைத்தான்.

சடாரென்று நிமிர்ந்து பார்த்த மதுராவின் விழிகளில் பரவிய கலக்கத்தையும், மருட்சியையும் கண்ட ராஜீவ்விற்கு மனம் நொந்து தொட்டாற்சிணுங்கியாய் சிணுங்கியது.

ஆனாலும் இயல்பாய் சிரித்துக் கொண்டே சொன்னான்.

"நான் மனுஷன் தான் மது. என்னவோ பேயைக் கண்ட மாதிரி பயப்படறே..... "

மதுரா பதிலே பேசவில்லை. குறிப்பெழுதிய நோட்டை மூடி வைத்து விட்டு எழுந்தவள், அவசரமாய் கடைசி செல்ஃபில் தான் தேடி வந்த புத்தகத்தைத் தேடினாள். கைகள் தான் தேடியதே தவிர மனசு என்னவோ படபடவென்று அடித்துக் கொண்டது. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.

ராஜீவ் இங்கே வந்த இந்த ஒரு வருஷத்தில் வகுப்புகளிலும், கல்லூரிக் காம்பவுண்டிற்குள்ளும் கூட்டமாய் தான் சந்தித்திருக்கிறாளே தவிர இப்படி தனிமையில் சந்தித்ததில்லை. உண்மையைச் சொன்னால் அவனைச் சந்திப்பதையே வெகு கவனமுடன் தவிர்த்து வந்திருக்கிறாள். இப்பொழுதோ

தனியாய் மாட்டிக் கோண்டாற் போல் ஒரு உணர்வில் இதயம் தவித்துத் துடிப்பதை உணர முடிந்தது.

நல்லவேளையாய் அவள் தேடிய புத்தகம் அவளை அதிகம் அலைக்கழிக்காமல் கைக்கு சீக்கிரமே கிடைக்க, ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அதை எடுத்துக் கொண்டு திரும்பியவள், அவளுக்கு வெகு சமீபத்தில் நின்றிருந்த ராஜீவ்வைக் கண்டு அதிர்ந்தாள்.

ராஜீவ்வின் பார்வை அவளை ஆழமாய் ஊடுருவியது. வார்த்தைகளை வெகு நிதானமாய் உச்சரித்தான்

"இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படியே அவாய்ட் பண்ணுவதாக உத்தேசம் மது?"

'வாழ்நாள் முழுமைக்கும்......'என்று சொல்ல வாயெடுத்த மதுரா, சட்டென்று நிறுத்தி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

'வேண்டாம் தாங்க மாட்டான். வீணாய் அவன் மனதை நோகடிப்பானேன்?

ஆஹா.....ரொம்பக் கரிசனம் தான். அவன் மனசு நோக்க்கூடாதுன்னு நெனக்கிறவ தான் அன்னிக்கு தியேட்டர்ல அப்படிப் பேசினாயா?'

இரு வேறு திசைகளில் மனம் குழம்பிய பொழுதிலும் உதடுகள் இயந்திரமாய் வார்த்தைகளை ஒப்பித்தன

"ப்ளீஸ். வழியை விடறிங்களா? நான் போகனும்......"

இரு செல்ஃப்களிடையே ஒரு ஆள் மட்டுமே செல்லக் கூடிய அளவிற்கு இடைவெளி இருக்க, ஒரு புறம் சுவரும், மறுபுறம் ராஜீவ்வுமாக மதுரா ஏறக்குறைய சிறைப்பட்டாற் போல் நின்றிருந்தாள்.

அவனிடமிருந்து வந்த டியடொரன்ட் வாசனையை ஸ்வாசிக்கும் அளவிற்கு நெருக்கத்தில் நின்றிருந்தவனின் அண்மை அவளுடைய பயத்தை இன்னும் அதிகரிக்க, குரலில் இன்னும் கடுமை காட்டினாள்.

"இப்ப வழியை விடறிங்களா இல்லையா?"

"வழி விடலேன்னா என்ன செய்வே?"

அவன் குரலில் எகத்தாளம். மதுரா முறைத்தாள்.

"கத்திக் கூச்சல் போடுவேன்.........."

"எங்கே கூச்சல் போடு பார்க்கலாம்........"

பொறுமையிழந்து மதுரா உண்மையிலேயே கூச்சலிட எத்தனித்த அடுத்த கணமே அவன் கைகளின் அணைப்பில் சிறைப்பட்டாள். முரட்டுத்தனமாய் அவள் மெல்லிதழ்களை தன் வலிய உதடுகளால் மூடியவனின் மூர்க்கத்தனத்திற்கு முன் மதுரா செயலிழந்து போனாள்.

யுகங்களாய் நீடித்த அந்த இதழணைப்பிற்குப் பின் அவன் அவளை விடுவித்த பொழுது, மதுராவிற்கு மூச்சு வாங்கியது. கைகளில் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தவளை தேற்றும் வழி தெரியாமல் தவித்தான் ராஜீவ்.

"சாரி மது......ஐ ஆம் ரியலி சாரி. நான் உங்கிட்ட பேசனும்னு தான் வந்தேன். ஆனால் நீ என்னைப் பேசவே விடலே. என்னைத் தவிர்த்துட்டு ஓடறதிலேயே குறியாயிருந்தாய். அதான் என்னைக் கட்டுப்படுத்திக்க முடியாமல்......என்னை மன்னிச்சுடு மது....ரியலி ஐ பீஃல் சாரி பார் இட்"

உண்மையிலேயே ராஜீவ்வின் பேச்சில் வருத்தம் தெரியவும், அழுகையை நிறுத்தி விட்டு நிமிர்ந்தாள் மதுரா. அவன் பார்வையை எதிர்நோக்கும் திராணியின்றி மீண்டும் தலைகுனிந்தவள் மெதுவாய் சொன்னாள்..

"ப்ளீஸ் நான் இங்கே படிக்கத் தான் வந்திருக்கேன். அதற்கு நீங்க எந்த வகையிலும் இடையூறாய் இல்லாமல் இருந்தால் சந்தோஷப்படுவேன்........"

"தாராளமாய் படி மது. இன்பாக்ட் என் மனைவியும் என்னைப் போலவே ஒரு டாக்டராய் வந்தால் நான் சந்தோஷப்படமாட்டேன் என்றா நினைத்தாய்?"

'மனைவியா?........'.அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் மதுரா.

'கொஞ்சம் விட்டால் ஒரேயடியாய் சொந்தம் கொண்டாடுகிறானே. இவனை என்ன செய்ய? ஊகூம் இவனிடம் கெஞ்சிப் பிரயோசனமில்லை. மீண்டும் கடுமை காட்ட வேண்டியது தான்'

"நான் உங்கள் மாணவி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள் சார்...."

கடுத்த முகத்துடன் வார்த்தைக்ளைக் கடித்துத் துப்பியவளை புன்முறுவலுடன் பார்த்தான் ராஜீவ்

"இன்றைய மாணவி நாளைய மனைவி ஆகக்கூடாது என்று எதாவது சட்டம் இருக்கிறதா என்ன?"

உண்மையிலேயே மதுரா வெலவெலத்துப் போனாள் இந்த பதிலில்.

'இல்லை இது வேலைக்காகாது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் இனம் இவன். கொஞ்சம் நின்று பேசினால் கூட பழைய பழக்கத்தில் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான். இவனைப் பொருட்படுத்தாமல் ஓதுங்கிப் போவது தான் புத்திசாலித்தனம்.'

பொறுமை இழந்தவளாய் படபடத்தாள் மதுரா

"நீங்களாக அநாவசியக் கற்பனைகளை மனதில் வளர்த்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை."

"நம் காதல் வெறும் கற்பனை தானா? உன் மனதைத் தொட்டுச் சொல்லு மது..."

"பரீட்சையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு உங்கள் காதல் கற்பனையா நிஜமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எனக்கு சமயமில்லை. அதில் விருப்பமுமில்லை. அதனால் தயவு செய்து இப்பொழுது வழியை விடுகிறீர்களா?"

பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு மதுரா பேச, அவளை ஆழமாய் ஊடுருவினான் ராஜீவ்.

"உன் படிப்பில் உன்னை விடவும் எனக்கு அக்கறை அதிகம் உண்டு மது. அதனால் படிப்பைக் காரணமாக்கி என்னிடமிருந்து ஒதுங்க நினைக்காதே. பரீட்சை முடிந்து விடுமுறைக்கு ஊருக்குப் புறப்படும் முன் நீ என்னுடன் பேசவில்லையென்றால்..........ஊகும் இனிமேல் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை நீ பேசுவாய் ......பேச வேண்டும் இதே இடத்தில் நான் உனக்காகக்

காத்துக் கொண்டிருப்பேன். பெஸ்ட் ஆஃப் லக்........"

வேகமாய் பேசிவிட்டு விடுவிடுவென்று திரும்பி நடந்தவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் மதுரா.

அதற்குப் பின் பரீட்சை மும்முரத்தில் ராஜீவ்வை மறக்க முடிந்தது என்றாலும், இறுதித் தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்குக் கிளம்புகையில், அவனுடைய பேச்சு நினைவிற்கு வந்து அவளைக் கலவரப்படுத்தியது.

சந்திப்போமா வேண்டாமா என்று அவள் சஞ்சலத்தில் ஊசலாடிய அந்த கணத்தில் மதுரையிலிருந்து வந்த அப்பாவின் தொலைபேசி அழைப்பு அவருக்கு அவள் செய்து கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தியது.

"மது......பரீட்சையெல்லாம் நல்லா பண்ணினாயாம்மா? அன்னிக்கொரு நாள் நான் உன் கல்லூரிக்கு வந்திருந்தப்போ உங்க டீன் உன்னை வெகுவாய் பாராட்டினார். தங்க மெடல் வாங்கக் கூடிய மாணவி நீன்னு அவர் உன்னை பாராட்டினப்போ எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா? பாவி நான் கல்யாணம்ங்கற பெயரில் கால்கட்டுப் போட்டு உன் புத்தியை

லட்சியத்தை எல்லாவற்றையும் முடக்க இருந்தேனே என்னை மன்னிச்சுடு தாயி........"

அப்பா அவளுடைய காதலைப் பற்றியோ, இல்லை அவள் ராஜீவ்வை பற்றி நினைக்க மாட்டேன் என்று செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசவில்லை.

மாறாக தான் தப்பு செய்து விட்டதாகக் கூறி மன்னிப்பும் கேட்ட அந்த கணத்தில், மதுரா நெகிழ்ந்து போனாள்.

'அப்பாவிற்குத் தான் அவள் மீது எத்தனை நம்பிக்கை? கண் படாத தூரத்திலிருந்தாலும் மகள் எல்லை மீற மாட்டாள் என்ற நம்பிக்கையில் அல்லவா அவளை ஊர் விட்டு ஊர் படிக்க அனுப்பியிருக்கிறார். அப்பாவின் நம்பிக்கையை ஒரு முறை கெடுத்து அவள் பட்ட பாடு போதும். இனியரு தரம் அப்படியரு தப்பு அவள் வாழ்க்கையில் நேர அவள் அனுமதிக்க

மாட்டாள் நிச்சயம்.'

இப்படியரு நினைப்பு மனதில் தோன்றிய மறுகணமே, மனதில் கொஞ்சநஞ்சம் மிச்சமிருந்த ராஜீவ்வின் நினைவுகளும் அவளைக் கேளாமலேயே விடைபெற்று விலகி விட்டன.

சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறைக்கு ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டவளை எண்ணி ராஜீவ் தான் மனம் வாடினானே தவிர, மதுரா அவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை என்பது தான் உண்மை.
 
அருமை 👌👌👌👌மது அவள் லச்சியம் மருத்துவ படிப்பு ராஜிவ் காதல் அவனிடம் சொல்லாமல் வந்துவிட்டாள் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Top