Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - டீஸர்

Advertisement

Nice 🤩🤩🤩
நக்ஷத்திரா எதுக்கு இப்போ அவன அடிச்ச....நீ ஏதோ ஒரு ஆணால் பாதிக்க பட்ருக்க சரி... ஒரு விபத்தை தடுக்கனும்னா தொட்டு அனைக்காமல் எப்படி காப்பாத்த முடியும்னு நினைக்கிற 🙄🙄🙄🥺🥺😥😥
அதானே டியர்🤣🤣பார்ப்போம் என்ன நடக்கப் போகுதுன்னு🤩🤩
 
ஹீரோ என்ன ஸ்பைடர் மேனா உன்னை தொடாமல் அப்படியே நூல் விட்டு காப்பாத்த 😜😜😜😜😜

காப்பாத்த வந்தவனுக்கே இந்த அடியா 🤣🤣🤣🤣🤣🤨🤣
அதானே மா நல்ல கேளுங்க🤣🤣

ஆமா டியர்🤩🤩🤩 இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம்
 
காப்பாத்துனதுக்கு அடிக்கிறதெல்லாம் அதிகப்படி.. 😱

நைஸ் டீஸர்.... 😍😍😍😍

வாழ்த்துக்கள் sis.... 💐💐💐💐
ஆமா டியர்🤣🤣

நல்லா கேளுங்க 🤩🤩🤩

மிக்க நன்றி மா🤩
 
ஹாய் நட்பூஸ்🤩🤩🙏

வரும் பதிமூன்றாம் தேதியிலிருந்து கதை ஆரம்பிக்கப்படும்.

டீசர் 2


"வங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்போ கூட இப்படி எல்லாம் பேச முடியுது. இவங்க புருஷன் இந்த மாதிரி பொம்பளை பொறுக்கியா இருந்திருந்தால் வாழ்ந்திருப்பாங்களா? அப்படியே அவங்க வாழ்ந்திருந்தாலும் என் பொண்ணு வாழ்க்கைக்குள்ள அதை எப்படி அவங்க திணிக்கலாம். அந்த பொறுக்கியைத் திருத்த தான் நான் பெத்தேனா... பத்து மாசமா சுமந்து பெத்து பூ போல வளர்த்த பொண்ணை ஒரு பொறுக்கி கையில கொடுத்திடுத்துட்டோமே... இதுல எம் பொண்ணை ஏத்துக்க ரெடியாம் நாக்குல நரம்பு இல்லாமல் இவங்களால எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது" என்று ரூபாவிடம் எவ்வளவோ முறை அழுது கதறிவிட்டார்.


மாமியாரிடம் அவரால் எதிர்த்து பேச முடியாது. அப்படி ஒரு பழக்கம் மீனாட்சிக்கு இன்று வரை இல்லை. ஆனாலும் மகளின் வாழ்க்கை நிலைகுலைந்து நிற்கதியாய் நிற்கும் இந்தத் தருணத்திலும், மாமியார் பேசும் இந்த கொடிய வார்த்தைகள் அவரை உயிருடன் கொன்றது. ஒரு முறை மாமியாரிடம் தன் கோபத்தைக் காட்டியும் விட்டார். அதனின் பிரதிபலிப்பு கணவனால் அவரின் கன்னம் பழுத்தது.

அதைத் தட்டிக் கேட்ட ரூபாவையும் கத்தி விட்டார்.

"அம்மா என்ன வேணாலும் சொல்லட்டும்... வயசானவங்க இப்படித் தான்! அவங்களுக்கு சரினு படுறதை சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க. அதுக்காக அவங்களோட யாரும் மல்லுக்கு நிக்கக் கூடாது. என்னை மீறி யாரும் உமையாளின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. கண்டிப்பா இனி அந்த பொம்பளை பொறுக்கியோட என் மகளை அனுப்பமாட்டேன்" என்று தாய் இல்லாத போது மனைவி மற்றும் இளைய மகளிடம் சாடியபடி தீர்மானமாகக் கூறிவிட்டார். அதிலிருந்து மீனாட்சி ரூபாவிடம் தான் புலம்புகிறார். மகளின் வாழ்க்கைக்காக மௌனவிரதம், உண்ணாவிரதம், சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் இப்படி ஒன்று விடாமல் இருக்கிறார்.

"மணி அஞ்சு ஆகுது... இதுக்கு மேல பொட்டப் புள்ளைங்களாம் சேர்ந்து எங்கயும் போக வேண்டாம்!" என்று சொர்ணவள்ளியின் குரல் அதிகாரமாக ஒலிக்க,

"நான் பொண்ணுக்கு பொண்ணு ஆம்பிளைக்கு ஆம்பிளை ஆச்சி" என்று கையில் வண்டி சாவியை குலுக்கியபடி உள்ளே வந்தாள் ரூபா.

"அப்பாக் கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். காருல தானே போயிட்டு வரப் போறோம். அதனால பாதுகாப்பா தான் இருப்போம்" என்று சொர்ணவள்ளி அடுத்து கேள்வி கேட்கும் முன்னரே பதில் சொன்னவள், "ஏய் உமி... இந்த கறுப்பு சுடிதார் வெள்ளை சுடிதார் தவிர வேறு என்னனாலும் போடு" என்று கையோடு தமக்கையை இழுத்துக் கொண்டு நக்ஷத்ராவின் அறைக்குள் சென்றாள்.

சொர்ணவள்ளி பாட்டி எப்போதும் போல் புலம்பலை ஆரம்பிக்க, கிச்சனிற்குள் சென்ற மீனாட்சி கண்ணம்மாவிடம், "வேலையெல்லாம் முடிஞ்சுதா கண்ணம்மா?" என்று அவளின் பின்னே நின்றபடி கேட்க, அவளிடமோ பதிலில்லை.

"கண்ணம்மா, கண்ணம்மா" என்று அவளின் தோள்களை உலுக்க, "என்னது மா, கூப்பிட்டீங்களா?" என்று காதிலிருந்து பஞ்சை எடுத்தாள்.

"என்ன டி காதுல பஞ்சை வைச்சிருக்க!" என்று வாயைப் பிளந்தபடி கேட்டார் மீனாட்சி.

"ஆச்சி அது பாட்டுக்கு தினமும் புலம்புது... அதைக் கேட்டு கேட்டு காதுல இரத்தம் மட்டும் தான் எனக்கு வரலைங்கம்மா... அதான் பஞ்சு" என்று அசுடு வழிந்தபடி கூறியவளைப் பார்த்து சிரித்தவர், "நீ இருக்கியே! சரி, சாலா உமையா கூட நீயும் போயிட்டு வா. நைட்டு சமையலை நான் பார்த்துக்குறேன்" என்று அவளின் கையில் இருந்த கரண்டியை வாங்கிக் கொண்டார்.

"அது ஆச்சி கத்துவாங்களேம்மா" என்று தயக்கத்துடன் கூறினாள் கண்ணம்மா.

"அவங்க எதுக்கு தான் கத்தலை... நீயும் துணைக்கு போயிருக்கனு தெரிஞ்சா ஐயா நிம்மதியா தான் இருப்பாரு. அவங்களால கத்த மட்டும் தான் முடியும். நீ போய் சீக்கிரம் ரெடி ஆகி கிளம்பு... அப்புறம் கண்ணம்மா பசங்க மூணும் ஜாக்கிரதை... நீயும் தான்" என்று எச்சரிக்க, "சரிங்கம்மா நான் பார்த்துக்குறேன்" என்று நம்பிக்கை அளித்து கிளம்பினாள் கண்ணம்மா.

"நீயும் மாறுவ மாறுவனு பார்த்தேன் ஆனால் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை போல... உன்னை நீ வேணும்னே பக்கி மாதிரி காட்டிக்குற உமி... எப்போ பார்த்தாலும் கறுப்பு சுடிதார் இல்லை வெள்ளை சுடிதார்... கழுத்துல ஒரு செயின் இல்லை, கையில வளையல் இல்லை. ஒரு கறுப்பு பொட்டு, ஒரு சின்ன தோடு... உன்னை விட ஆச்சியே நல்லா டிரெஸ் பண்றாங்க. இன்னிக்கு நீ நான் சொல்றது தான் போடணும்" என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறிய தங்கையிடம், "சாலா அது வந்து" என்று அவள் ஆரம்பிக்கும் போதே, அவளின் வாயை மூடிய ரூபா, "நீ எதுவும் பேசக் கூடாது... டாட்" என்று முடித்தாள் ரூபா.
 
Top