Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள்_ விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
கதை : நேயத்தின் நியதிகள்
ஆசிரியர் : தேவி மனோகரன்

ப்ரோபஸர் sir 💕 அபி பாப்பா.....


கடமை கண்ணியம் கட்டுப்பாடு என
கடைசி வரை கடைப்பிடிக்கும்
கல்லூரி பேராசிரியர்....

கல்யாணத்தில் கூட
கல்லூரி படிப்பு முடிந்த
காரிகையை தான்
கல்யாணம் செய்வேன் என
கட்டுப்பாடுடன் இருக்கும்
கண்ணிய ஆசிரியர்....

படிக்க வந்த இடத்தில்
படிப்பை தவிர
பசங்களுக்கு எந்த
சிந்தனையும் சிதறிடாமல் பார்த்துக் கொள்ளும்
பக்குவப் பட்ட ஆசிரியர்...

புகைப்படம் பார்த்த முதலே
பதிந்து விடும் முகம்....
புன்னகையின் வழியே
பதில் தந்தாலும்
படிப்பை முடித்த பிறகே
பாவையை கரம் பிடிக்க...

படிக்கும் வயதில் காதல்
பெண்கள் விருப்பின்றி
பின்னால் தொடர்வதும்
பெண் பிடிக்க வில்லை என்று சொல்லியும்
பின் தொடர்ந்து பெண்ணை தொந்தரவு செய்யும்
இன்றைய பசங்களின்
நடவடிக்கைக்கு நல்ல
பாடம் கற்றுக் கொடுக்கும்
புகழ் ஆசான்.....

பெண்ணின் உணர்வை புரிந்து
பயத்தை அறிந்து
பல வழிகளில்
புத்தியும் அறிவுரையும்
புகட்டி தைரியமாக
பொண்டாட்டியை மாத்தி
புது சக்தியை அதிகரிக்க
புகழ் sir முயற்சி அருமை...


கருத்திலும் சரி
காதலிலும் சரி
குடும்பத்திலும் சரி
கணவனகாவும் சரி
கல்லூரியிலும் சரி
காணும் போதெல்லாம்
கட்டுப்பாடும் கண்ணியமும்
கச்சிதம்.....
புகழ் sir சூப்பர்.....

காளியம்மாள் வடிவுக்கரசி
அப்பத்தாக்கள் அலப்பரைகள்
அருமை...
அந்த காலத்து தைரியம் கூட
இந்த காலத்து பெண்களிடம் இல்லை...
அப்பத்தாக்கள் போகிற போக்கில்
அறிவுரையாக ஆதங்கமாக அனுசரணயிலும்
அன்பில் வெளிப்படுத்தி விடுகிறார்கள்....


மகன் மகளை ஆண் பெண் என்று பிரித்து பார்க்கும் சியாமளா தாயின் வளர்பில்
சறுக்கல்....

ஆண் பிள்ளைகள்
ஒழுக்கமாகவும்
கட்டுப்பாடாகவும்
நல்ல முறையில் வளர்த்த
ராஜலட்சுமி அம்மாவிற்கு பாராட்டுக்கள்....

தந்தைகள் தங்கள் பிள்ளைகளின் மேல் வைக்கும் நம்பிக்கை அப்பா மாணிக்கவேலன் அபாரம்.....
தவறை தட்டி கேட்கும் தந்தையாக
மகேஷ்வரன்
அருமை......

அன்புக்கு கட்டுப்பாடு இல்லை ஆனால் கண்ணியம் உண்டு....
கதையில் அருமையாக கூறி இருக்கிறார்....

சித்துவின் செயலில்
சூப்பர் பாடம்
சொல்லி விட்டீர்கள்....

புகழ் sir
அபி என்ற விளிப்பில்
அன்பும் அக்கறையும்
அதட்டலும் காதலும்
அனைத்தையும் காட்டும்
அற்புத கணவன்....
ரைட் புகழ் sir....

கார்த்திக் 💕கண்மணி
ஓகே கண்மணியே
பெரியவர்கள் நிட்சயத்த
கல்யாணம் கார்த்திக்கின்
காதல் பேச்சில்
காதல் கல்யாணம் போல
காதலுடன்
கண்மணியுடன் வாழும்
கலாட்டா ஜோடி....
கார்த்திக் மாமா
கலக்கிட்டேள் ......

நட்புக்கு சாம் sir...
நண்பண்டா ......
நாலு பிரச்சனைகள்
நாளும் ஒரு பஞ்சாயத்து....
நல்லது போதிக்கும்
நல் பேராசிரியர்கள்..

நண்பனிடம் பேசும் போதும்
நாகரிமும் கண்ணியப் பேச்சு அசத்தல்.....

பொதுவெளியில் கண்ணியம்
பெண்ணே நிமிர்ந்து நில்
பயம் கொள்ளாதே
பெற்றவர்களிடம் கூறு....
பிறந்தவர்களிடம் பகிர்ந்து கொள்..
பெண்களிடம் புரிதல் கொள்..
பாதுகாப்பாய் உணர வை
பசங்களுக்கு நல்ல பாடம்...

வாழ்த்துக்கள் மா 💕💐👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻
 

Attachments

  • inbound1732008202444351305.jpg
    inbound1732008202444351305.jpg
    260.2 KB · Views: 0
Top