Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே- மொழி 10

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 10

" ஃபைனல் இயரா?" என்றவனின் திடீர் கேள்வியில் நிமிர்ந்த காதம்பரி "ஆமா ஹர்ஷா.. பி.காம்" என்று தலை சரித்து சொல்ல உதட்டை வளைத்தவன் " அடுத்து என்ன பண்ண போற?" என்றபடி ஸ்டேரிங் வீலை வளைத்தான்.



காதம்பரி அவனிடம் பேச தயக்கம் காட்டவில்லை. ஆனால் அவளது சகஜமான பேச்சு ஹேமாவை தான் கலங்க வைத்தது. காதுவின் குணம் அறிந்தவள் ஹேமா.. தோழி சுத்த வெகுளி. யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கூட உணராத பேதை. அவள் ஹர்ஷாவிடம் தயக்கம் காட்டாதது ஹேமாவிற்கு புதிதல்ல. இருந்தும் மனதில் எழுந்த கவலையை மறைக்க தெரியாதவளாக பரிதவித்து போனாள்.



" எனக்கு இந்த கோல்..ஏய்ம்..அப்டி தனிப்பட்ட முறையில எதுவும் இல்ல ஹர்ஷா. அண்ணா படிக்க வைக்கிறான். நல்லா படிச்சு எனக்கு ஏத்த ஒரு வேலைக்கு சேரனும்..அம்மாவ நல்லா பார்த்துக்கனும். அண்ணாவோட சுமைய குறைக்கனும். அவ்ளோதான்.. நார்மல் மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி" என்றவள் மீண்டும் பார்வையை வெளியில் வைக்க "ஹேமா.. நீங்க?" என்றான் ஹர்ஷா.



ஹேமா அதுவரை காதுவை பார்த்தபடி இருந்தவள் திடுக்கிட்டு திரும்பி "ஆன்.. நா... நான்" என்று அவள் பேச வார்த்தைகளை தேட காது முந்திக்கொண்டவள் "அவ வருங்கால சி.ஏ. அவளுக்கு நிறைய ட்ரீம்ஸ் இருக்கு ஹர்ஷா. வெரி டேலண்டட்" என்று கல்லமில்லா புன்னகையுடன் சொல்ல வேறு வழியின்றி சிரித்து வைத்தாள் ஹேமா.



ஹர்ஷா முறுவலித்தவன் " கோல் செட் பண்ணி லைஃப லீட் பண்ணுறது ஒரு தனி ஃபீல்ல" என்றவன் இருவரையும் ரிவியூ மிரர் வழியாக பார்த்தபடி சொல்ல அதற்குள் அப்பார்ட்மெண்டை நெருங்கியிருந்தது கார். கும்மிருட்டாக இருந்த அண்டர்கிரவுண்டு பார்கிங் ஏரியாவிற்குள் காரை செலுத்தியவன் காரை பத்திரமாக பார்க் செய்தபடி கீழே இறங்கியவன் மறக்காமல் காதுவிற்கு கதவை திறந்துவிட புன்னகையுடன் இறங்கிக் கொண்டாள் அவள்.



அவளுடன் ஹேமாவும் இறங்க "ஓகே காதம்பரி. நம்ம மீட்டிங் இந்த தடவையும் ஆவ்சம். தாங்க்ஸ் டூ யூ. ஆன் ஹேமா.. நீங்களும் உங்க ஃபிரண்டும் காரா விட்டு இறங்கிட்டீங்க... ஆக்சுவலி நீங்க சேஃப். இன்னும் ஏன் டிஸ்ட்ரப்டா இருக்கீங்க!?" அவன் சிரித்தபடி கேட்க ஹேமாவிற்கு தான் தர்ம சங்கடமான சூழ்நிலை.



"இல்லங்க... எதுவா இருந்தாலும் கேர்ல்ஸ் நாங்க எங்க சேஃப்டிய பார்க்கனும் இல்லையா" என்றாள். அவளது பதிலை தலை அசைத்து ஏற்றுக்கொண்டான் ஹர்ஷா. காதம்பரி "ஹேமா இப்டி தான் ஹர்ஷா. ரொம்ப ப்ரொடெக்டிவ்." என்றபடி சிரிக்க "ப்ரொடெக்டிவா ஒரு ஃபிரண்ட் கூட இருக்கது நல்ல விஷயம்" என்றவன் ஹேமா விடம் திரும்பி "நீங்க எல்லா நேரமும் காது கூட இருக்க முடியாது ஹேமா..அவங்க சேஃப்டிய அவர்களே பார்த்துக்க உங்களால ஹெல்ப் பண்ண முடிஞ்சா அத நீங்க செய்யலாமே" என்றவனை புரியாமல் பார்த்தாள் ஹேமா.

சட்டென்று மூளையில் மின்னல் வெட்ட


"கண்டிப்பா.. நான் புரிய வைக்கிறேன். இப்போ எங்களுக்கு டைம் இல்ல. நாங்க வரோம்" என்றபடி காதுவின் கையை பிடித்தபடி வெளியேற ஹர்ஷா "பை.. காது" என்றபடி அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் பையை தட்டிவிட்டபடி போகும் அவளை தலை சரித்து பார்த்தான்.



ஹேமா அவளது கை பற்றி இழுத்து வந்தவள் அவளை முறைக்க "என்ன நீ சும்மா சும்மா முறைக்கிற?" என்று சிணுங்கினாள் காது. ஹேமா அவளது கையை விடுவித்தவள் "நீ உன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க காது. உன்கிட்ட பல தடவ சொல்லியாச்சு. வெளி ஆளுங்க கிட்ட க்ளோசா பழகாத.. அது நமக்கு நல்லதில்லன்னு.. சொன்னா புரியாதா?" தோழி கடிந்து கொண்டபடி கைகளை கட்டிக் கொண்டு தீர்ககமாக முறைக்க காதம்பரி உதட்டை பிதுக்கியவள் "ஹர்ஷா என் ஃபிரண்ட் ஹேமா" என்றது தான் பாக்கி ஆடி தீர்த்துவிட்டாள் ஹேமா.



"ஓஹ்.. உன் ஃபிரண்டா. எத்தனை வருஷமா உனக்கு அவன தெரியும். என்ன ஒரு பத்து வருஷ பழக்கம் இருக்குமா?" அவள் புருவம் உயர்த்தி கேட்க தலையை இடம் வலமாக அசைத்தாள் காது. "வாய தெறந்து பேசு காது.. கடுப்படிக்காத" என்றதும் " ஒன் வீக்" என்றவளின் குரல் காதம்பரியின் காதுகளை கூட சரியாக எட்டவில்லை.



" ஒரு வாரம்.. ம்ம்... அவன் பேரு ஹர்ஷா.. அத தவிர வேற ஏதாச்சும் தெரியுமா உனக்கு. அவன் உன்ன பார்க்குற பார்வையே சரியில்ல..அவன நம்பி அவன் கூட கார்ல போறேன்னு சொல்லற.. அத கூட மன்னிச்சுடுவேன். தனியா போறேன்னு சொல்ல உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்" என்றவளின் பேச்சு நியாயமாக படவே வாய் திறக்கவில்லை காதம்பரி. "காது வெள்ளையா இருக்கது பாலா தான் இருக்கனும்னு அவசியம் இல்ல டி. தயவு செஞ்சு இனிமேலாச்சும் புரிஞ்சு நடந்துக்கோ.." என்றாள்.



காது முகத்தை தூக்கி பிடித்தவள் "ஹேமா.. எனக்கு அவன் பாலா கல்லான்னு தெரியல. பட்.. அவன் கூட பேச பிடிச்சிருக்கு. அதனால பேசுறேன்." மெதுவாக சொல்ல அதை காதில் வாங்கியபடி நின்றது ஹேமா மட்டும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.



"ப்ச்.. என்னவோ பண்ணு.. நீ எப்போ தான் புரியுற மாதிரி பேசியிருக்க. ஆனா ஒன்னு..இது இப்டியே கண்டினியூ ஆச்சு..நான் அருள் அண்ணா கிட்ட சொல்ல வேண்டியிருக்கும் பார்த்துக்க" என்றபடி விரல் நீட்டி அவள் முன்னால் நடக்க "என்ன மச்சி நீ.. ஆனா ஊனா அருள் கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டுற" என்றபடி ஒட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தாள் காதம்பரி. இவை அனைத்தையும் காதில் வாங்கிய ஹர்ஷா மென்மையான முறுவலுடன் ஃபிளாட்டை நோக்கி நடந்தான்.



******



நெற்றியில் யோசனை ரேகைகள் விரவிக் கிடக்க ஹர்ஷாவின் முன் அமர்ந்திருந்தான் அருள். அவனை ஏளன சிரிப்புடன் பார்த்தபடி இருந்த கவின் "என்னமோ பெருசா சொன்ன.. இந்த அருள் கிட்ட ஒரு வேலைய குடுத்தா அத உயிர குடுத்து செய்வேன்னு.. இப்போ என்ன ஆச்சு. உன் கண்ணு முன்னாடியே மேடம அட்டாக் பண்ண சதி நடந்திருக்கு. இது யாரோட மிஸ்டேக்" என்றதும் நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்த அருள் " நீ சரியா சொல்ற கவின். சார்.. இந்த மெஷன்ல நான் தோத்துட்டேன். என்னால உங்க சிஸ்டர்க்கு பாடி கார்டா இருக்க முடியாது. நீங்க வேற ஏற்பாடு பண்ணுங்க." என்றான்.



ஹர்ஷா "ஆர் யூ சீரியஸ் அருள். கவின் சொன்னதுக்காக இத சொல்றியா?!" அவன் புன்னகையுடன் கேட்க "நோ... நோ.. நான் இத நல்லா யோசிச்சு தான் சொல்றேன். இது எனக்கு ஏத்த வேலை இல்ல. அன்னிக்கு அந்த பொண்ணு கொஞ்சம் ஓவரா வாயாடுச்சு. அத ஆஃப் பண்ணுறதுக்காக தான்... நான் இதுக்கு ஒத்துக்கிட்டன். பட்.. கோவத்துல எடுத்த முடிவு இப்டி தான் சொதப்பும். பேசாம நீ கவின உன் தங்கச்சிக்கு பாடி கார்டா போடு. தூரத்துலயே இருந்து பர்த்துக்குவான்" பற்களை கடித்தபடி படபடவென்று பேசியவன் எழுந்து பால்கனிக்கு சென்றான்.



கவின் வாயை பிளந்தவன் "உன்னால முடியலன்னா முடியலன்னு சொல்லு அதுக்கு ஏன் என்ன கோர்த்து விடுற" அவன் கடுகடுக்க "நீ வாய வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம் கவின். ப்ச்..அப்பாக்கு நடந்தத சொல்ல வேணாம்.அவர் கால் பண்ணா ஏதாச்சும் சொல்லி சமாளி" என்றபடி ஹர்ஷாவும் எழுந்து பால்கனிக்கு செல்ல கவின் 'ஈசியா சொல்லிட்டு போறாரு..என்ன பொய் சொல்லி அந்த கிழவன சமாளிக்க போறேனோ' என்றபடி அங்கிருந்து நடந்தான்.
அருள் வானை வெறித்து பார்த்தபடி இருந்தவன் அருகில் நிழலாட மண்டை சூடேறி போனவன் "என்ன சார் பொண்ண வளர்த்திருக்க நீ. பொண்ணுங்க ரிலாக்ஸ் பண்ண கோவிலுக்கு போவாங்கன்னு பார்த்திருக்கேன்..இந்த பொண்ணு பார்க்கு போகுது. எந்த நேரத்துல எவன் எங்க இருந்து அடிப்பான்னு தெரியல...அத பத்தி கொஞ்சம் கூடவா பயமில்ல..இப்டி ஒரு முட்டாள் பொண்ணுக்கு பாடி கார்டா இருந்து கண்டவன் கிட்ட பேச்சு வாங்க எனக்கு என்ன கிரகமா" என்றவனுக்கு கோவத்தில் தாடை இறுக ஹர்ஷா அவனது தோளை தட்டியவன் " சில் அருள்..எனக்கு ரெண்டு விஷயம் சொல்லு.. இஷிக்கு ட்ரிங் பண்ணுற பழக்கம் கிடையாது. அப்டி இருக்குறப்போ நேத்து எப்டி...அந்த ப்ளாக் பிளேசர் யாரு? அவனுக்கு இதுல சம்பந்தம் இருக்கா?" என்றான்.



" கொழுப்பு சார்...ஏன் சார் உன் தங்கச்சிக்கு மூளையிருக்கா இல்ல எதுத்த வீட்டு சேட்டு கடையில அடகு வச்சிருக்கா. பழி வாங்க ப்ளான் போட தெரியுது.. குடிக்கிறது ஜூஸா சரக்கான்னு தெரியல... எதையாச்சும் வாங்கி குடிக்க வேண்டியது.. அப்றம் இருக்கப்பட்ட அத்தன பேரையும் டென்ஷன் பண்ண வேண்டியது" என்றான். ஹர்ஷா தனக்கு தானே சிரித்துக்கொண்டவன் "ப்ளாக் பிளேசர்?" என்று மீண்டும் கேட்டான்.



"அவனா. அவனும் உன் தங்கச்சி மாதிரி தான்..கேட்க ஆள் இல்லாம சுத்தீட்டு இருக்கான்.. பொண்ணு தனியா இருக்கேன்னு சீண்டி தேவையில்லாம என்ன மண்டைக்கு ஏத்தி...ப்ச்..மேட்டர் சிம்பிள். நேத்து போட்டு பிரிச்சு விட்டிருக்கேன். எழுந்து நடக்க மினிமம் ஏழு நாள் ஆகும்" என்றவன் அமைதியாகி மீண்டும் தொடர்ந்தான் "கவின் சொன்ன மாதிரி அந்த பொண்ணுக்கு நான் செட் ஆக மாட்டேன் சார். நீ எதுக்கும் இன்னொரு தடவ யோசிச்சு பாரு" என்றான்.



அருளின் குரலில் நிதானம் தென்பட அதை புரிந்துகொண்ட ஹர்ஷா "அருள்.. இஷியோட விஷயத்துல யோசிக்காம எதையாவது செஞ்சா நான் எப்டி ஒரு நல்ல அண்ணனா இருக்க முடியும் சொல்லு..நீ அவ பேசுன கோவத்துல இந்த வேலைய ஒத்துக்கிட்டன்னு எனக்கு தெரியும். அவளும் உன்ன விரட்டியே தீருவேன்னு பிடிவாதமா இருக்கா.. பட் எனக்கு அவ உன் கூட டிராவல் பண்ணுறது தான் சேஃப்ன்னு இப்போ கூட தோணுது..இதுல உன் தப்பில்லாத வரைக்கும் நீ இத பெருசா யோசிக்க தேவையில்ல. ஃபிரியா விடு.. இஷிக்கு பிடிவாதம் ஜாஸ்தி.. முடிஞ்ச வரைக்கும் முறுக்கிக்குவா. ஆனா புரிஞ்சுக்கிட்டா மொத்தமா மாறிடுவா" என்றான். ஹர்ஷாவை மறுத்து பேச ஏனோ அவன் மனம் இசையவில்லை.



"என்னமோ சொல்ற.. ரைட்டு விடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்டியே கெளம்புறேன்" என்றபடி நடந்தவன் ஃபோனில் யாருடனோ பேசியபடி இருந்த கவினை வேண்டும் என்றே இடித்துவிட்டு செல்ல அதை சற்றும் எதிர்பார்க்காத கவின் "இடிமாட்டிக்கு பொறந்தவனே. பார்த்து போக மாட்டியா?" என்றபடி அவனை வசை மொழிய நக்கல் ஒழுகும் சிரிப்புடன் அவனை பார்த்து கண் சிமிட்டியவன் "நீ ஓரமா போய் நில்லுடா ஏன் சிப்ஸு" என்று பதிலுக்கு சொன்னபடி வெளியேறிவிட அவனை கோபமாக பார்த்தவன் ஹர்ஷாவின் பக்கம் திரும்ப அவனோ வெளியுலகை ரசிக்க துவங்கியிருந்தான்.
"அது சரி இவன் என்னடான்னா வேணாம்னு சொல்றான். இவரு அவன பிடிச்சு வைக்குறதுலயே குறியா இருக்காரு. போதா குறைக்கு அந்த பொண்ணு வேற பிடிவாதமா இருக்கு. இது எங்க போய் முடிய போகுதோ" வாய் விட்டு புலம்பியவன் அறியவில்லை அவளது பிடிவாதம் அருளை எவ்வாறு பின் தொடர போகிறது என்பதை.



மாலை நேரம் நெருங்க கல்லூரியில் இறுதி நேரமும் வந்தது. அவதியாக அனைத்தையும் பைக்குள் திணித்தபடி இருந்த இஷியை வேற்றுகிரக வாசியை போல பார்த்து வைத்தனர் தோழிகள் இருவரும்.



"எதுக்குடி இவ்ளோ அவதியா பேக் பண்ணிட்டு இருக்க. கிளாஸ் முடிய இன்னும் கால் மணி நேரம் இருக்கே?" என்று லில்லி கேட்க இஷி பொறுமை இல்லாதவளாக பதில் சொன்னாள். "அருள் வெளியில வெயிட் பண்ணுவான் லில்லி. அவன ரொம்ப நேரம் காக்க வைக்க கூடாதில்ல." என்றவளின் பதிலில் இருவரும் வாயை பிளந்தனர்.



ஃபரா "சோ..." என்றதும் " சோ.. என்னடி சோ அதுக்கு தான் ரெடி ஆகுறேன்." தோளை ஏற்றி இறக்கி சொல்ல மணியும் அடித்து ஓய்ந்தது. தோழிகளின் மூளையை சூடேற்றி விட்டவள் முதல் ஆளாக வெளியேறி அவன் முன் சென்று நின்றபடி மூச்சு விட்டுக் கொண்டவள் அவனை பார்த்ததும் முகம் மலர பதிலுக்கு புன்னகைத்தவன் "போலாமா மேடம்" என்றதும் தலையை தன்னிச்சையாக அசைத்தாள் இஷாரா.

 
இஷி நீயா இது .. எப்போ இருந்து இந்த change ஓவர்..

காது நீ எல்லாம் அருள்யோட தங்கை யா அவன் எம்புட்டு ஷார்ப் நீ இப்படி தத்தி யா இருக்க
 
Top