Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே-- மொழி 11

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 11

விடி காலை பனியை விரட்டியபடி மேலே எழுந்த சூரியன் பொன் கதிர்களை தாராளமாக விரிக்க துயில் கலைந்து எழுந்தாள் இஷி. கண்களை கசிக்கியபடி படுக்கையை காலி செய்தவள் சூரிய கதிரால் ஈர்க்கப்பட்டு பால்கனியில் தஞ்சம் கொண்டாள். களைந்திருக்கும் கூந்தலை கொண்டாயாக முடிந்தவளின் கண் முன்னால் விரிந்திருந்தது அந்த மாளிகையை சுற்றியிருக்கும் தோட்டம்.

அங்காங்கே நீர்வீழ்ச்சி ஏற்ற இறக்கங்களுடன் செங்கல் தடுப்பு பறவைகளின் கீச் கீச் சத்தம் மூலையில் சாந்தமே உருவாக அமர்ந்திருக்கும் அரச மரத்தடி பிள்ளையார் என அந்த காலை பொழுதில் வார்த்தைகளால் வருணிக்க முடியாத ரம்மியம் அவளது மனதை கவர்ந்தது. சிறிது நேரம் அப்படியே உறைந்து நின்றவளின் நினைவில் காரணமின்றி வந்து சென்றான் அருள்.

கலைந்த அவனது கேசமும் அதை நித்தமும் கோதியபடி இருக்கும் அவனது விரல்களும் இந்த சில நாட்களிலேயே அவளுக்கு பரிச்சயமாக மாறியிருந்தது. கண்கள் ஒரு நொடி அவனை தேட "ஓஹ்.. இன்னிக்கு சன்டே. ப்ச்.. அவன் வர மாட்டான்" என்று பெருமூச்சுடன் சொல்லிவிட்டு காலையின் கடனை கழிக்க சென்றாள்.

வெதுவெதுப்பான நீரில் குளித்து உடையை மாற்றிக்கொண்டவள் மறக்காமல் கூந்தலை ட்ரையர் உதவியுடன் உலர்த்தி கேச்சரில் அடக்கினாள். வயிற்றில் எலிகள் கான்சர்ட் நடத்த கீழே சென்று காஃபி அருந்த அவள் முடிவு செய்திருக்க அவளது அறைக்குள் பிரவேசித்தார் பத்மாவதி. "ம்மா" என்று புருவம் சுருக்கி கேட்ட மகளை புன்னகையுடன் பார்த்தவர் உள்ளே நுழைந்தார்.

அறையை சுற்றி பார்வையை சுழற்றிய பத்மாவை கைகளை கட்டியபடி பார்த்த இஷி "என்ன ம்மா.. புதுசா இருக்கா.. நீங்க என் ரூமுக்கு வந்து ரொம்ப காலம் ஆச்சில்ல.. அதான் எல்லாம் புதுசா தெரியும். பை தி வே.. வெல்கம் மாம்." என்றவள் அத்தோடு நிறுத்தாமல் "முக்கியமான விஷயமா ம்மா..படியேறி இவ்ளோ தூரம் என்ன பார்க்க வந்திருக்கீங்க ?" என்று கேட்டபடி எதிரில் கிடந்த டீ பாயில் அமர்ந்தாள்.

மகளை முகம் கோணாமல் பார்த்த பத்மா "ஏன் நான் என் பொண்ணோட ரூம்க்கு வாரத்துக்கு விஷயம் இருக்கனுமா என்ன?" என்றதும் தோளை குலுக்கிய இஷி " வெல்.. இருக்கனும் தான் ம்மா. இல்லனா வருஷத்துக்கு ஒரு தடவ வர நீங்க எதுக்கு இப்போ வர போறீங்க. சொல்லுங்க என்ன விஷயம்" என்றாள்.
பத்மா " இஷி அம்மா உன்கிட்ட எத சொன்னாலும் அதுல நிச்சயமா எதாவது நல்லது இருக்கும்."

"ம்மா.. எதுக்கு சுத்தி வளைக்கிறீங்க ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வாங்க. இப்போ என்ன நல்லது சொல்ல வந்திருக்கீங்க"
"நம்ம எவ்ளோ பெரிய குடும்பம்.. நமக்குன்னு ஒரு தகுதி இருக்கு. அத நீ மறந்திருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்."

"மறக்கல.. நெக்ஸ்ட்" கண்களை உருட்டினாள்.
" ம்ம்.. ஆனா என் செல்ல பொண்ணுக்கு யாரை எங்க வைக்கனும்னு இன்னும் தெரியாம இருக்கே" புருவம் உயர்ந்தது.

" அப்டியா.. இஃப் யூ டோண்ட் மைண்ட் நீங்க சொல்ல வந்தத சொல்லிட்டா நல்லா இருக்கும் ம்மா..எனக்கு இந்த பசில் சால்வ் பண்ணுற அளவுக்கு பொறுமை இல்ல " என்றாள்.
" என் பொண்ணு ரொம்ப மாறிட்டா.. அவளுக்கு பிடிக்கலன்னா அது எதுவா இருந்தாலும் தூக்கி போட்டுட்டு போற இஷிய தான நான் பார்த்திருக்கேன். இந்த இஷி எனக்கு புதுசா தெரியுறாளே. நான் எத பத்தி பேசுறேன்னு இப்போ கூடவா புரியல!?"

" புரியல.." உதட்டை பிதுக்க "அந்த.. பாடி கார்ட்.. அவன் நம்ம கிட்ட வேலை செய்றவன். அவன்கிட்ட சிரிச்சு பேசனும்னு அவசியம் இருக்கா?" என்றதும் "ஓஹ்.. இதான் விஷயமா. இப்போ புரியுது. சோ.. நான் யாருகிட்ட பேசனும் பேச கூடாதுன்னு முடிவெடுக்குற உரிமை கூட எனக்கு இல்ல.."

"ம்மா...டெய்லி மார்னிங் என்ன யார் எழுப்புவாங்க தெரியுமா..சரளாம்மா. சாந்தி அக்கா எனக்கு சாப்பாடு வைப்பாங்க. போதும்னு ரெண்டு இட்லியோட எழுந்துக்க நெனச்சேன் அவ்ளோ தான். வயசு பொண்ணுக்கு சாப்பிட என்ன வருத்தம்ன்னு ஆரம்பிச்சுடுவாங்க. இவங்க எல்லாரும் நம்ம வீட்ல வேலை செய்றவங்க தான். அவங்க என்மேல அக்கறையா இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல. பட் இருக்காங்களே" என்றாள். "உங்கள ஒன்னு கேக்கட்டா ம்மா?" என்றவள் தலை சரித்து கேட்க 'என்ன?' என்பதாக பார்த்தார் பத்மா.

" கடைசியா எப்போ உங்க கையால எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டிங்கன்னு நியாபகம் இருக்கா?" என்றவளின் கேள்வியில் முகம் சுருங்கி போனார் பத்மா. அவர் பதில் சொல்ல தயங்குவதை பார்த்தபடி கசந்த முறுவலை வெளிப்படுத்தியவள் " நியாபகத்துக்கு வரலையா. ம்ம்..உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியலம்மா.. ஒரு நார்மல் லைஃப லீட் பண்ண என் மனசுல அவ்ளோ ஆசை இருக்கு."

"தூக்கம் களையிற நேரத்துல எழுப்பி பல் பேச்சு குளிக்க வச்சு. அதுக்கு இடையில யூனிஃபார்ம் அயர்ன் பண்ணி... குளிச்சுட்டு வந்ததும் எனக்கு அத மடிப்பு மாறாம போட்டுவிட்டு... தல வாரி.. ஸ்கூல் பஸ்க்கு வெயிட் பண்ணுற அந்த சின்ன கேப்ல சாப்பாட ஊட்டிவிட்டு பஸ் ஹார்ன் கேட்டதும் உங்க முந்தானையில வாய துடச்சு விட்டு கன்னத்துல முத்தம் தந்து என்ன பஸ்ல நீங்க ஏத்தி அனுப்பனும். பஸ்ல ஏறி நான் சீட்ல உக்காந்து உங்களுக்கு பை சொல்லிட்டே ஸ்கூல்க்கு போகனும்.." மெல்லிய குரலில் ஆர்வம் மின்ன சொன்னவளின் கண்களும் கண்ணீரில் மின்னியது.

"இதெல்லாம் என்ன இதுக்கு என்ன அர்த்தம்ன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.. இப்டி தான் பிள்ளைங்கள காலம் காலமா அம்மாங்க ஸ்கூலுக்கு அனுப்புறாங்க. ஆனா எனக்கு அப்டியா?? ம்ஹூம்..சரி எல்லாம் போட்டும்... நான் உங்க பொண்ணு தான என்னிக்காச்சும் ஒரு நாள் நான் டவுனா ஃபீல் பண்ணுறப்போ.. இல்லனா மனசு சரியில்லாத நேரம் உங்க மடியில படுக்க வச்சு தலை கோதி விட்டு என்ன? ஏதுன்னு விசாரிச்சு.. ம்ஹூம். ஏன் ம்மா" என்றாள். பத்மாவிற்கு பேச நா எழவில்லை. அவர் பெற்ற செல்வத்தின் முகத்தை பார்த்தபடி இருந்தவர் "இவ்வளவும் நான் செஞ்சது உன் நல்லதுக்கு தான் இஷி" என்றவரின் குரல் உடைந்திருக்க அதை முகத்தில் காட்டாமல் மறைத்தார்.

" ப்ச்.. போதும் மாம்.. ஐ காண்ட் கெட் திஸ் எனிமோர். புள்ளைங்க நல்லதுக்காக வாழ்ற அம்மாவா நீங்க என்னிக்கும் இருந்ததில்ல.. இருக்க போறதும் இல்ல. ஹர்ஷா உங்கள விரோதியா பார்க்குறதும்.. அப்.. அவரு இந்தியா வர யோசிக்கிறதுக்கும் காரணம் நீங்க..நீங்க மட்டும் தான்" என்றவள் பேச்சில் கூட அப்பா என்று அழைப்பதை தவிர்த்தாள்.

பத்மா பேசாமல் வாயிலை வெறிக்க துவங்க "இத்தனைக்கும் நான் உங்க கூட இருக்கேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் ம்மா.. நீங்க என்னோட அம்மா.. என்ன வயித்துல சுமந்து பெத்தவங்க.நீங்க என்ன தனியா விட்ட மாதிரி நான் உங்கள விட்டா அப்றம் எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் இல்லையா" என்றவள் அமர்ந்திருந்த இடத்தை காலி செய்துவிட்டு எழுந்தவள் தாயின் வதனம் பார்த்தவள் மனம் கேளாமல் "எனக்கு உங்கள பிடிக்கும் ம்மா.. இப்போ நான் சொன்ன எல்லா விஷயமும் என்னோட எதிர்பார்ப்பு மட்டும் தான். உங்களுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல. அப்றம் அருள் கூட இருக்க எனக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப சேஃபா ஃபீல் பண்ணுறேன். சோ நீங்க அத நினைச்சு கவலை பட வேண்டாம்.. சரளாம்மா கீழ காஃபியோட வெயிட் பண்ணுவாங்க... நீங்க ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுங்க ம்மா.. பை" என்றவள் அவரது பதிலை கூட எதிர்பார்த்தாக தெரியவில்லை.

இஷி அறையை விட்டு வெளியேறியவள் மூச்சை சீராக்கி கொள்ள போராட பெரு மூச்சுடன் தலை முடியை அழுத்தமாக கோதினாள். படி கட்டுக்களை நெருங்கி செல்ல அவள் ஆயத்தமாக "கவின்.. ஒரே ஆள் ரெண்டு ஈவன்ட எப்டி அட்டென்ட் பண்ண முடியும். நீ கவனத்த எங்க வச்சிருக்கன்னு ஐ ஜஸ்ட் டோண்ட் நோ.. ஃபைன் நான் என்னன்னு பார்க்குறேன். இனிமே இந்த தப்பு நடக்க கூடாது. கேர்ஃபுல்லா இரு ஓகே" பொறிந்து தள்ளியபடி ஃபோனா கட் செய்யும் ஹர்ஷா அவளது பார்வை வட்டத்தில் விழுந்தான்.
"ஹர்ஷா." என்று அழைத்தபடி அவனுக்கு அருகில் சென்றவள் " எனி ப்ராப்ளம்?" என்றாள் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன்.

ஹர்ஷா தலையை இடம் வலமாக ஆட்டியவன் "ப்ராப்ளம் தான் இஷி.. இந்த கவின் செஞ்ச வேலை அப்டி.. இன்னிக்கு மிஸ்டர் நாதனோட பிஸ்னஸ் பார்ட்டி இருக்கு. வேற எதுலயும் என்ன என்கேஜ் பண்ணாதன்னு சொல்லியும் ஏ.பி.சி காலேஜ் ஃபங்ஷன்க்கு நான் சீஃப் கெஸ்டா வரேன்னு சொல்லி வச்சிருக்கான் இடியட். டைமிங் செட் ஆனா கூட பரவாயில்ல.. ரெண்டு ஈவன்டும் நைட்ல. ப்ச்....காட் " என்றவன் புருவத்தை விரலால் தேய்த்தான்.

"இவ்ளோ தானா விஷயம்" என்றவளை கண்கள் சுருக்கி பார்த்தபடி "இவ்ளோ தானாவா.. சீரியஸ்லி இஷி.. இது எந்த ஆங்கில்ல உனக்கு சாதாரணமா தெரியுது?" என்றான். இஷாரா தோளை குலுக்கியவள் " என்ன கேட்டா நீ காலேஜ் ஃபங்ஷன் அட்டென்ட் பண்ணுறது தான் கரெக்ட். சிம்பிள் " என்றாள்.

"வாட் டூ யூ மீன்.. நாதன் நம்ம பிஸ்னஸ் பார்ட்னர் இஷி. அவரோட இன்விடேஷன நம்ம எப்டி அவாய்ட் பண்ண முடியும்? என்றான். இஷி உதட்டை வளைத்தவள் "காம் டவுன் அண்ணா.. பிஸ்னஸ் பார்ட்னர் பார்டிக்கு நம்ம பிஸ்னஸ் சம்பந்தப்பட்ட யார் வேணா போகலாம். பட் காலேஜ் ஃபங்ஷன் அப்டியா? ஏற்கனவே எல்லாம் பிரி ப்ளான் பண்ணி வச்சிருப்பாங்க.. நீ லாஸ்ட் மினிட்ல வரலன்னு சொன்னா நல்லா இருக்குமா.. சொல்லு" என்றாள். அவள் சொல்வது சரியாக படவே "ம்ம்.. சோ நான் காலேஜ் ஃபங்ஷன்க்கு போனும்னு சொல்ற?" என்று புருவம் தூக்க அவளும் தோளை ஏற்றி இறக்கி "ஆமா" என்றாள்.

"அப்போ பார்டிக்கு நீ தான் நம்ம சார்பா போகனும்" என்று அவன் பதறாமல் சொல்ல "வாட்?" என்று வாயை பிளந்தாள் இஷாரா. "என்ன பா.... ன்னு வாய திறக்குற. நீயும் நம்ம பிஸ்னஸ்ல சம்பந்தபட்டவ தான. நீ போன என்ன தப்பு. அதுவும் இல்லாம வேற யாரையும் ரெப்பிரசன்ட் பண்ணி அனுப்பிவச்சா எனக்கு மனசுல உருத்திட்டே இருக்கும். அதனால..." அவன் இழுக்க "அதனால" அவனை போலவே கேட்டுவிட்டு கண்களை அகலமாக விரித்தாள் இஷாரா.

ஓரம் கருகி சிவந்திருக்க கமகமக்கும் தோசையை வார்த்து அதை அருளின் தட்டில் வைத்தாள் காதம்பரி. அதை பிட்டு கார சட்னியில் மூழ்கடித்து வாயில் திணித்தவனின் சுவை நாளங்கள் குத்தாட்டம் போட சப்புக் கொண்டியவன் " சன்டே அதுவுமா என்ன ஃபங்ஷன் அப்டி?" என்றான்.

காதம்பரி நெய் பாத்திரத்தை மூடி பத்திரப்படுத்தி ஓரமாக ஒதுங்க வைத்தவள் "அத ஏன் கேட்குற.. ஃபவுண்டர்ஸ் டே வாம்.." சலிப்பாக சொன்னபடி அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள். "உன் ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேரும் கூட வராங்கல்ல?" அவன் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்க "ஹேமா வருவா.. சுஷ்மி தான் டவுட்.. அவ வீட்ல பெரிய பிரச்சினை போயிட்டு இருக்கு. அவ அண்ணா இருக்கன்லா.." என்று அவள் துவங்க "யாரு அந்த பிடா வாயனா?" என்றான் அவன்.

"அவனே தான்.. குழந்தை இல்லனா அதுக்கு என்ன பண்ண முடியும். அமேசான்ல ஆர்டர் பண்ணா வீட்டு வாசல்ல வந்து டெலிவரி பண்ணிட்டு போற விஷயமா இது. இது புரியாம அந்த தத்தி சுஷ்மியோட அண்ணிய பாடா படுத்துறான். அந்த டென்ஷன்ல அவ ரெண்டு நாளா காலேஜ்க்கே வரல... பாவம்.. அவ ஏற்கனவே பயந்த சுபாவம் வேற" என்றாள்.

அருள் அனைத்தையும் தலையை ஆட்டி கேட்டபடி இருந்தவள் "ஏன் காதும்மா.. அந்த சேட்டு பொண்ணு எதிர்வீட்டு பையன் கிட்ட லவ்வ சொல்லிட்டாளா?" ஆர்வமாக கேட்க "ப்ச் எங்க.. சொல்லிட்டாலும் அவ" அவள் இழுக்க அருளின் அலைபேசி ஒளித்தது.

"அருள்...ஹர்ஷா" என்ற எதிர்முனையில் பேச "சொல்லு சார்.." என்று துவங்கியவன் "ஓகே.. நான் இன்னும் ஒரு அறை மணி நேரத்துல வரேன்" என்றபடி காலை கட் செய்தவன் "காது நீ ஈவினிங் போட்டுக்க ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு கெளம்பு." என்றவனை புரியாமல் பார்த்தவள் "எங்க டா?" என்றாள்.

" எனக்கு வேலை இருக்கு.. நான் வரத்துக்கு லேட் ஆகலாம். சோ நீ அக்கா வீட்ல இரு. லேட் பண்ணிறாத எனக்கு டைம் இல்ல" என்றவன் உண்டும் உண்ணாமலும் சிங்கில் தட்டை போட்டுவிட்டு கையை கழுவியபடி அறைக்குள் ஓட "டேய் அண்ணா சாப்பிட்டுட்டு போடா" என்று கத்தியவளின் வார்த்தைகள் காற்றில் கலந்து மறைந்தது.

 
இஷி நீயா பேசியது அன்பே நீயா பேசியது....

அரை மணி அறை மணி னு இருக்கு கொஞ்சம் செக் பண்ணிகோங்க மா
 
Top