Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 31

Advertisement

Admin

Admin
Member

Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.​

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻

அத்தியாயம் 31​

"காயத்ரி!! நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? கோடியாத்து வனஜா இறந்து போய்ட்டா.தெருவே அல்லோலகல்லப்பட்டுண்டிருக்கு​

நீயானால் சாவகாசமா உட்கார்ந்து காய் அரிஞ்சுண்டிருக்கே."​

உரக்க கூவிக் கொண்டு சீதாலெட்சுமி உள்ளே நூழைந்த பொழுது வாஸ்தவத்தில் காயத்ரி காய் தான் அரிந்து கொண்டிருந்தாள். ராதா வீணையின் கம்பிகளை தூசு போக துடைத்துக் கொண்டிருந்தாள்.பாட்டியோ ஹாலின் ஓரத்தில் பகல் நேர குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.​

"ஐயோ!! என்னாச்சுக்கா? நேத்திக்கு கூட கோவிலில் பார்த்தேனே நன்னாத் தானேயிருந்தா. இப்போ திடீர்னு என்னாச்சு?"​

காய் அரியும் வேலையை கைவிட்டு ஏறிட்ட காயத்ரியின் விழிகளில் பதட்டம் ப்ளஸ் பரிதாபம்.​

"அதென்னவோ கார்த்தால சுவாமிக்கு விளக்கேத்தறச்சே புடவை முந்தானைல நெருப்பு பட்டு தீ புடவை முழுவதுமா பரவி கரிக்கட்டையா எரிஞ்சு போனாளாம்.. தற்செயலா நடந்த விபத்தா இல்ல அம்மாவும் பிள்ளையுமா சேர்ந்துண்டு மருமகளை கொலை பண்ணிட்டாளானு தெருவோட எல்லாரும் பேசிக்கறா. யாரை நம்பறதுனே தெரியலடிம்மா.லோகம் அந்த அளவுக்கு கெட்டு போயிண்டிருக்கு."​

சீதாலெட்சுமி பெரிதாக அங்கலாய்க்க, காயத்ரியின் மனம் அற்பாயுசில் மாண்டு போன அந்த பெண்ணுக்காக பரிதாபப்பட்டது.​

கோவிலில் சில மணித்துளிகள் மட்டுமே பார்த்து பரிச்சயமானவள் தான் வனஜா.வெகு அடக்கமான பெண்.புடவைத் தலைப்பை இழுத்து போர்த்திக் கொண்டு, நெற்றியில் சின்னதாய் பொட்டும் விபூதி கீற்றும், உதட்டில் தவழும் புன்னகையுமாக தன் ஆறு வயது மகள் ஜனனியை கையில் பிடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை தவறாமல் அவள் கோவிலுக்கு வருகையில் காயத்ரி அவள் அழகையும் அடக்கத்தையும் பார்த்து வியந்திருக்கிறாள்.​

'அந்தப்பெண்ணுக்கா இந்த கதி? 'என்று இப்பவும் காயத்ரி துடித்து தான் போனாள்.​

அதுவும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சீதம்மா வந்து விஷயத்தை விலாவாரியாக விவரித்த பொழுது என்ன கொடுமை இது? என்று நெஞ்சம் பதறிப் போனாள்.​

"கிளியை வளர்த்து கடுவன்பூனை கிட்ட கொடுத்தால் என்ன ஆகுமோ அது தான் இந்த வனஜா பொண்ணுக்கும் ஆகியிருக்கு.பொண்ணு சொக்கத் தங்கம்மா.ஒரு குற்றம் குறை எதுவும் சொல்ல முடியாது.அப்படிப்பட்ட பொண்ணை அந்த மாமியார்காரி கொஞ்சமாவா படுத்தினா?.பண்ணாத அக்கிரமம் பாக்கியில்ல. அந்த​

பொண்ணும் பாவம் மனுஷி தானே? இவங்க கொடுமையை எத்தனை நாள் தான் பொறுத்துக்குவா? அதான் ஒரேயடியா போய்டலாம்னு தீ வெச்சுக்கிட்டாளோ என்னவோ?."​

"என்ன சீதம்மா எல்லாரும் மாமியாரும் புருஷனும் சேர்ந்து வனஜாவை கொன்னுட்டதா பேசிக்கறாங்க.நீ வேற என்னவோ சொல்றே?"​

"ஹான்!! அப்படியா பேசிக்கறாங்க? நிஜமா இருந்தாலும் இருக்கும்மா. யாரு கண்டா? எந்த புத்துல எந்த பாம்பிருக்கோ?அதுவும் அந்த மாமியார்காரி கொலைக்கு அஞ்சாதவ தான்.அவ புள்ள அவளுக்கும் மேல. பொண்டாட்டி எரிஞ்சு போய் கெடக்கறா.அவன் கண்ல சொட்டு கண்ணீர் கூட வரல. அவன் பொண்ணு ஜனனி அம்மா அம்மானு அலறுது.அந்த பிஞ்சு படற பாடு நமக்கே தாங்கல. இவன் என்னடான்னா சிகரெட் பிடிச்சுகிட்டு கல்லுளிமங்கனாட்டம் உட்கார்ந்திருக்கான்​

இவனுக்கென்ன? இவ போனால் அடுத்தாப்ல இன்னொருத்தி வரப் போறா.​

பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைனு சும்மாவா சொல்றாங்க."​

சீதம்மா மூக்கை சிந்திக் கொண்டு புடவை தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு ஒரு பாட்டம் அழுது ஓய்ந்ததும் அதுவரை மௌனமாக இருந்த ராதா மெதுவாகக் கேட்டாள்.​

"அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுச்சா சீதம்மா?"​

"ஹான்! உன் கஷ்டம் என் கஷ்டம் இல்ல தாயீ, அந்த பொண்ணு பட்ட கஷ்டம்.அந்த மாமியார்காரி பண்ண அட்டூழியம் கொஞ்ச நஞ்சமா? படுபாவி அந்த பொண்ணு வயித்துக்கு கூட சோறு போட மாட்டா. நான் பத்து பாத்திரம் தேய்க்கறப்போ அது தோய்க்கற கல்லுல குந்திக்கினு கதைகதையா சொல்லி அழுவும். அத்த விடும்மா.இந்த கண்றாவியெல்லாம் உனக்கெதுக்கு? சின்ன பொண்ணு கண்ணாலம் கட்டி நல்லபடியா குடித்தனம் பண்ண வேண்டிய வயசுல இந்த கண்றாவியெல்லாம் கேட்டு பயந்துக்கினேன்ன என்னாகறது?"​

"ஏன் என்ன பயம்? எதுக்கு பயப்படனும்? எனக்கும் வனஜா மாமியார் மாதிரி அமைஞ்சுட்டா என்ன பண்றதுனு பயப்படுவேன்னு நினைச்சிங்களா சீதம்மா?"​

ராதா இயல்பாகத் தான் சொன்னாள் என்றாலும் பழகிய பாசத்தில் சீதம்மாவின் கண்கள் கலங்கி விட்டன.​

"விளையாட்டுபேச்சுக்கு கூட அப்படி சொல்லாத தாயீ. அந்த இராட்சசி மாதிரி மாமியார் உனக்கு மட்டுமில்ல வேற எந்த பொண்ணுக்கும் அமைய வேண்டாம். நீயும் ஜானகியும் நான் பார்க்க வளர்ந்த புள்ளைங்க. ஜானகிக்கு வாய்ச்ச புருஷன் மாதிரி உனக்கும் ஒரு நல்ல இடத்தில் கண்ணாலமாகி குழந்தை குட்டிங்களோட நீ நல்லாருக்கனும்.தெனமும் மாரியாத்தா கிட்ட நான் அதான் வேண்டிக்கிறேன்​

ஹான்!! வேலை கெடக்கு எக்கச்சக்கமா.நா உட்கார்ந்து கதை பேசிட்டிருக்கேன். யம்மோவ்!! பத்து பாத்திரமெல்லாம் கொல்லையில போடு. வீட்டை பெருக்கிட்டு வந்து தேய்க்கறேன்."​

சீதம்மா சேலைத் தலைப்பை இழுத்து செருகிக் கொண்டு துடைப்பத்துடன் வீட்டை பெருக்க சென்றாள்.​

ராதாவும் எழுந்து உள் அறைக்கு துணிகளை வைக்கச் சென்றாள்.​

பாத்திரங்களை கொல்லையில் வைத்து விட்டு வந்த காயத்ரி சீதாலட்சுமியிடம் விசாரித்தாள்.​

"என்னக்கா ஜானா எப்படியிருக்காளாம்?​

ஸ்கைப்ல பேசினாளா? எதாவது விசேஷம் உண்டா?"​

"ஆமாண்டி காயத்ரி நான் சொல்ல மறந்துட்டேன் .மூனு மாசம் முழுகாமல் இருக்காளாம். நம்ம ராதாகிட்ட கூட போன்ல பேசினதா சொன்னாளே. ராதா சொல்லலையா உங்கிட்ட?"​

"ப்ச்சு!! அவ எங்கே இதெல்லாம் சொல்லப் போறா? ஆத்துல ஓடிண்டிருக்க பிரச்னையில இதெல்லாம் பேச ஏது நேரம்?"​

"ஆமாண்டி காயத்ரி நானே கேட்கனும்னு தான் இருந்தேன். ராதா கல்யாண விஷயம் என்னாச்சு? அந்த புரொபஸர் என்ன தான் சொல்றார்?"​

"அவர் ஒண்ணும் சொல்லலேக்கா. எனக்குத் தான் இந்த சம்பந்தம் மனசுக்கு திருப்தியாயில்ல. பெரிய மனுஷா நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்துல ஆதாயமில்லாமல் சம்பந்தம் பண்ண வருவாங்களா? மாப்பிள்ளைக்கு நடத்தை சரியில்ல போல.ஆனால் என் ஆத்துக்காரர் இந்த சம்பந்தத்தை எப்படியாவது முடிச்சுடனும்னு பிடிவாதமா இருக்கார். அந்த பிள்ளையாண்டான் கேரக்டர் சரியில்லையாம்னு நான் சொன்னால் யார் தான் இந்த லோகத்தில் நல்லவாளா மட்டும் இருக்கா சொல்லுனு என்னையே திருப்பி கேட்கறார்.நம்ம பொண்ணு சமர்த்துடி எப்படியாவது மாப்பிள்ளையை வழிக்கு கொண்டு வந்துடுவானு பெருமை பேசறார். எனக்கு என்ன பண்றதுனே புரியல.கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு நினைக்கறவர் கிட்ட நான் என்ன சொல்ல முடியும்.சொல்லுங்கோ."​

காயத்ரி சொல்லி வாய் மூடவில்லை. சுந்தரம் கையில் ஜாதகங்களுடன் உள்ளே நுழைந்தார். நன்கு அலைந்து விட்டு வந்திருக்கிறார் என்று நெற்றியின் வியர்வை முத்துக்கள் அறிவித்தன. களைப்புடன் சோபாவில் அமர்ந்தவர் காயத்ரி குடிக்க கொஞ்சம் தூத்தம் கொண்டாடி…என்று உத்தரவிட்டு சீதாலட்சுமியிடம் திரும்பினார்.​

"என்ன மன்னி!! யார் மேல புகார் படிச்சுண்டிருந்தா உங்க தங்கை.என் மேலதானே?"​

அவரின் கேலியில் சீதாலட்சுமி முறுவலித்தாள்.​

"ராதா கல்யாண விஷயமா தான் பேசிண்டிருந்தோம். காயத்ரி ரொம்ப விசாரப்படறாளே.நீங்க வேற இடம் பார்க்கப்படாதா? மாப்பிள்ளை பற்றி யாரும் நல்லவிதமா சொல்லல போலிருக்கே."​

சீதாலட்சுமி தயக்கத்துடன் சொல்ல, சுந்தரம் பெருமூச்சு விட்டார்.​

"உங்க கிட்ட சொல்றதுக்கென்ன மன்னி? வேற இடம் பார்க்கலாம் தான்.ஆனால் இந்த மாதிரி நல்லசம்பந்தம் அமையுமா? வெங்கட்ராமன் நல்ல மனுஷர்.நயா பைசா சீரோ வரதட்சணையோ அவர் எதிர்பார்க்கல.அவரை சம்பந்தியா அடைய நாங்க அதிர்ஷ்டம் பண்ணியிருக்கனும் மன்னி"​

"எல்லாம் சரி தான்.ஆனால் நம்ம ராதா வாழப் போறது அந்த புரபஸரோட இல்லையே.அவர் பிள்ளையோடன்னா வாழப் போறா? அந்த பிள்ளையாண்டான் நடத்தை சரியில்லைனு பேசிக்கறாளே.அப்படி குணங்கெட்ட ஒருத்தனுக்கா நாம நம்ம பொண்ணை கொடுக்கனும்? நம்ம வசதிக்கேத்த நல்ல வரனா பார்க்கலாமே."​

"நன்னா பார்க்கலாம் மன்னி.ஆனால் ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டேளே. குணமான மாப்பிள்ளைனு எப்படி கண்டுபிடிக்கறது? ஒரளவு தான் பொண்ணைப் பெத்தவா விசாரிக்கலாம் .அதோட என்ன தான் இப்போ காலம் மாறியிருந்தாலும் இன்னிக்கும் மாப்பிள்ளை வீட்டார் சீரும் வரதட்சணையும் எதிர்பார்க்கறாங்க தானே? பொண்ணு வேலைக்கு போகனும்னு வேற கன்டிஷன் போடறாங்க.​

இதே நம்ம சக்திக்கு மீறிய பெரிய இடம்னா​

அதுவும் அவாபக்கம் கொஞ்சம் குறைகள் இருந்தால் அங்கே நாம தான் ராஜா.நாம வெச்சது தான் சட்டம்.அதுக்காக மட்டும் நான் இந்த கல்யாணத்தை நடத்தியே ஆகனும்னு நெனக்கலே மன்னி.​

வெங்கட்ராமன் பெரிய மனசோட எனக்கு பண்ணிய உதவிகளுக்கு பதிலுக்கு நான் எதாவது செய்யனுமா இல்லையா?​

சந்தியா மெடிசின் படிப்பானு நான் கனவுல கூட நினைக்காதது அவரால இப்போ நிஜத்தில் நடந்திருக்கு. அவர் சந்தியாவுக்கு கோச்சிங் கொடுத்தது கூட பெரிசில்ல.ஆனால் அவளோட அஞ்சு வருஷ கோர்ஸ்க்கும் அவரோட ட்ரஸ்ட் மூலமா பண உதவி பண்றாரே.அது பெரிய விஷயமில்லையா? அப்புறம் நம்ம பாலுவுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்திருக்கார்.இதையெல்லாம அவர் எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் தான் பண்ணியிருக்கார்.ஆனால் நான் நன்றி மறந்தவனாயிருக்கறது நல்லாயிருக்குமா?​

தன் பிள்ளையை பற்றிய எந்த விஷயத்தையும் அவர் மறைக்கலே.இதுவே அவர் நல்ல மனுஷர்னு அடையாளம் காட்டலையா? மாப்பிள்ளை கொஞ்சம் குணம் சரியில்லை தான்.ஒத்துக்கறேன்.ஆனால் இந்த லோகத்தில் இப்ப யார் தான் யோக்கியனாயிருக்கான் சொல்லுங்கோ.​

மாப்பிள்ளைக்கு இள வயசு.அம்மா செல்லம்.பணப்புழக்கம் ஜாஸ்தி.அதான் அவிழ்த்து விட்ட காளையா கட்டுக்கடங்காமல் துள்ளறார் .ஆனால் கல்யாணம்ன்ற மூக்கணாங்கயிறை மாட்டிட்டா தன்னால அடங்கிடுவார்.என் பொண்ணு ராதாவை என்னனு நெனச்சிங்க? அவோ கெட்டிக்காரி மன்னி.அவ நிச்சயம் மாப்பிள்ளையை திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வந்துடுவா. நீங்கல்லாம் மூக்கு மேல விரலை வைத்து ஆச்சரியப்படற அளவுக்கு அவ வாழப் போறா அமோகமா வாழப் போறா.பார்த்துண்டேயிருங்கோ…"​

கனவு மிதக்கும் கண்களுடன் இதயம் பூரிக்கும் மகிழ்ச்சியுடன் சுந்தரம் சொன்னதைக் கேட்டு பிரமித்தது சீதாலட்சுமி மட்டுமில்லை. அறைக்குள்ளிருந்தபடி அப்பாவின் பேச்சை கேட்ட ராதாவும் தான்.​

'அப்பா!! என் மேல இவ்வளவு நம்பிக்கையா? உங்க நம்பிக்கையை காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயமாய் அதை சிதைக்க மனசில்லப்பா..'​

கண்ணோரங்களில் கண்ணீர் கசிந்து கன்னங்களில் வழிவதைக் கூட உணராதவளாக நெகிழ்ந்து நின்றாள் ராதா.​

"பாம்புன்னு தெரிஞ்சபின்னாடியும் காலை சுத்திக்க விடலாமா? ராதா நல்ல பொண்ணாகவேயிருந்தாலும் நான் என் மருமகளாக்கி ரிஸ்க் எடுக்க விரும்பல."​

தேவகியின் குமுறல் நினைவிற்கு வந்தது.​

"நீ எனக்கு மனைவியாகலேன்னா நான் வாழ்றதிலே அர்த்தமில்லை.நான் வாழ்வதும் சாவதும் உன் கையில தானிருக்கு."​

கோவில் வாசலில் வைத்து முரளி சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.​

"ராதாவை மருமகளா ஏத்துக்க உனக்கு விருப்பமில்லேனா நான் கடைசிவரை உனக்கு பிள்ளையா மட்டும் இருந்துட்டுப் போறேன்மா.இதோட இந்த விஷயத்தை மறந்துடுவோம்."​

காதலுக்கும் கல்யாணத்துக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்ட நந்தகுமாரன் நினைவிற்கு வந்தான்.​

"அலைகடலில் தத்தளிக்கறவன் துரும்பை பிடிச்சாவது கரை சேர நினைப்பதைப் போல் உன்னை பற்றுகோலாக வைத்து என் பிள்ளையை கரை சேர்த்துவிடலாம் என்று நம்பினேன்.என் நம்பிக்கையை காப்பாற்றுவாயா ராதா…"​

இருகரம் கூப்பி கெஞ்சிய வெங்கட்ராமன் நினைவிற்கு வந்தார்.​

இப்பொழுது கடைசியாக சீதாலட்சுமியிடம்​

"என் பொண்ணு ராதாவை என்னனு நெனச்சிங்க.அவ கெட்டிக்காரி.நிச்சயமா மாப்பிள்ளையை திருத்தி வழிக்கு கொண்டு வந்துடுவா.."​

விழிகள் மலர்ந்து விரிய அவளைப் பற்றி பெருமை பேசிய அப்பா நினைவிற்கு வந்தார்.​

எல்லாவற்றுக்கும் மேல் பெண்ணின் திருமணம் முடிந்தால் மனதை அழுத்தும் பாரம் சற்று குறையுமே என்று சதா கவலைப்படும் அம்மாவும், தங்கைக்கு திருமணம் முடிந்தால் தனக்கு லைன் க்ளியராகுமே என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் அண்ணனும், என்று அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக அவள் மனதில் வலம்வர, ராதா தீர்மானித்து விட்டாள்.​

அப்பாவின் ஆசைப்படி வெங்கட்ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்னிப்பையும் காதலையும் யாசித்த முரளிக்கு மனைவியாக தீர்மானித்து விட்டாள்.​

கோபமா இருககிங்க புரியுது.விதி வழி வாழ்க்கை.
 
Top