Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மையில் கையடை 1

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
பேராண்மை 1

ஒளிவெள்ளம் கண்களை கூசச் செய்ய, "நாம் இருப்பது பூலோகமா!? அல்லது வானுலகமா!?" பிரித்தறிய சிரமப்படும் அளவிற்கு ரம்யமாக இருந்தது ஸ்டாக்ஹோமில் 'நோபல் பரிசு' வழங்கும் விழா அரங்கம்.

அதன் எழிலில்,'தன்னை ஒரு நொடி மறக்க துடிக்கும்' மனித மனத்தை இழுத்து பிடித்து,தங்கள் இடங்களில் விழா குழுவின் உதவியாளர்கள் மூலம் சென்று அமர்த்தப்பட்டனர் வெற்றியாளர்களும்,
அவர்களின் ஊக்குவிப்பாளர்களும்.

அதில் தான் இந்த ஆண்டிற்குரிய அமைதிக்கான நோபல் பரிசை பெரும் நிறுவனமாக இந்தியாவை, அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த, 'பியூட்டி குளோப்' தொண்டு நிறுவனம்‌ தேர்வாகி இருக்க,அதன் நிறுவனர்
திருமதி. சௌந்தர்யா சுந்தரும் அமர்த்தபட்டிருக்க.

அவரின் கம்பீர துணிவிற்கு சற்றும் குறைவில்லாது; அவர் அருகில் அமர்ந்திருந்தான் அவர் பெற்றெடுத்த 'ஒற்றை ஆழி முத்து'

அன்னையின் கம்பீரம் மட்டுமல்ல," புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" என்பார்கள்; ஆனால்! இவனோ 'அறுபத்து நான்கு அடி' பாயும் அளவு தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்டவன்.


கான்செர்துசெட்,ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு வழங்கும் விழா மேடை அலங்காரத்தில் மிளிர,அதில் தங்கள் படைப்புகள்,நிறுவனங்கள், இலக்கியங்கள் வெற்றி பெற்ற பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தனர் வெற்றியாளர்கள்.


இதோ 10 டிசம்பர் 2022, நோபல் அறக்கட்டளையின் வாரியத் தலைவர் பேராசிரியர் கார்ல்-ஜோகன் ரஸல் தன் உரையைத் தொடங்கினார்.

கூர்விழி மேடையை நுணுக்கமாக அளவெடுக்க,அன்னை இடையில் கேட்கும் கேள்விக்கு மதிப்பாய் பதில் கூறினாலும், 'விழி இடும் அளவீடு மட்டும் குறையவில்லை' அவனிடம்.


"மரியாதைக்குரிய மாட்சிமைகளே!, மதிப்பிற்குரிய அரச உயரதிகாரிகளே!, பெருமைக்குரிய நோபல் பரிசு பெற்றவர்களே!,சுற்றி இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களே!

நோபல் அறக்கட்டளையின் சார்பாக, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக, 2022 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் அதற்கு முந்தைய இரண்டு வருடங்கள் நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வரவேற்க விரும்புகிறேன்.

இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது. கடந்த இரண்டு வருடங்களாக வழக்கமான விழாக்களை நடத்துவதிலிருந்து 'கொரோனா வைரஸ்' தொற்றுநோய் எங்களைத் தடுத்ததால், இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களால் நிரம்பிய மேடையைக் காண நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்!

இது"அறிவியலையும், கலாச்சாரத்தையும் கொண்டாட எங்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பை அளிக்கிறது" மேலும், ஸ்டாக்ஹோமில் உங்கள் அனைவரையும் பார்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!



2022 ஆம் ஆண்டு அனைத்துப் பரிசு பெற்றவர்களிடமும் பேசுவதற்கு என்னை அனுமதியுங்கள். நீங்கள் நீண்ட காலமாக பதக்கங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுள்ளீர்கள்.

ஆனால் நோபல் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட ஒரு இசைத் தொகுப்பை உங்களுக்கு வழங்க இந்த சந்தர்ப்பத்தில் விரும்புகிறோம்.

ஸ்வீடிஷ் இசையமைப்பாளர் ஆடம்ஸின், 'பீஸ் ஆப் நேஷன்' உலக அரங்கேற்றத்தை அனுபவிக்க உங்களை அழைக்கிறேன்!"


இசை பிரியர்கள் அனைவரும் ஆடம்ஸின் இசையில் தங்களை இழந்து,மொழி மறந்து 'இசை எனும் அரசி'யின் ஆட்சியில் கிறங்கிகிடக்க.

ஒரு இசையமைப்பாளராய்
தன் நிகழ்வை முடித்து,மக்களின் மயக்கத்தை அவர்களின் கண்களிலும், நிகழ்ச்சி முடிந்தும் 'இமை ஆடாது அமர்ந்திருப்பதை' காண பெருமையோடு நன்றி கூறி விடைபெற முயல.

அப்பொழுதுதான் இசை மழையில் இருந்து வெளிவந்த மக்கள் வெள்ளம், 'விண்ணதிரும் கைதட்டலில்' உற்சாகம் கூட்டினர்.புன்னகை தவழும் முகத்தோடு அவ்விடம் விட்டு நகர்ந்தார் ஆடம்ஸ்.


ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு வழங்கும் விழாவில், பரிசு பெற்றவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட, அவர்களின் கண்டுபிடிப்பு அல்லது படைப்புகளிக்கான உரைகள் முன்வைக்கபட்டது.


அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் நோபல் கமிட்டியின் தலைவரால், நார்வே மன்னர் மற்றும் ராணி அவர்களின் மாட்சிமைகளின் முன்னிலையில், அரசாங்கம், ஸ்டோர்ட்டிங் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.


போர்காலங்களில்,இயற்கை சீற்றங்களில் என பல நாடுகளில் மக்கள் பல துயரங்களை அனுபவிக்கும் பொழுது, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவும் கரங்கள் விரைந்து கைகொடுத்தாலும்.

"காற்றையும் கிழித்து,அதில் சவாரி செய்து வந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கும் ஒரே தொண்டு நிறுவனம் பியூட்டி குளோப் மட்டுமே!"என்பதால் இந்த ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசை பெறுபவர் பியூட்டி குளோபின் நிறுவனர் இந்தியாவை சேர்ந்த திருமதி.சௌந்தர்யா சுந்தர் அவர்கள்.

அவரின் கடமைகளும்,அர்ப்பணிப்பும்,
அவரின் தொண்டும் என்று வர்ணனையாளரின் அறிமுகம் முடியாது நீள கீழ் இருந்து அன்னையை கண்ட மகனுக்கு பெருமை பிடிபடவில்லை.


பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அவர்களின் சேவையை மனதில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்குவதை போல் இந்த ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசை அவர்களுக்கு வழங்வதில் பெரும் மகிழ்வு கொள்கிறது நோபல் அறக்கட்டளை.

"நம்பிக்கையை தும்பிக்கையாய் கொண்ட கணநாதன்" போல,மூன்றாம் கரமாக 'ஊன்று கோளை' சுமந்து கொண்டு.

"தடை கற்கள் எல்லாம் என் வாழ்வின் 'படிகற்களே" என்பதாய்; இடது கரம் கோளை தரையில் சற்று அழுத்த,கொடுத்த அழுத்தத்தின் விளைவால் உடல் இடது புறம் சிறிது சாயந்த நடையாக இருந்தது.

சாய்ந்த நடையே.ஆனாலும்!கம்பீரமும், முகத்தில் தீட்சண்யமும், கண்களில் கருணையும்,நேர்மையும்,கல்வியின் ஞான ஒளியும் சுடர்விட விழாமேடையை அடைந்தார் "பியூட்டி குளோபின் நிறுவனர், திருமதி.சௌந்தர்யா சுந்தர்"


அதன் பிறகு மதிப்பிற்குரிய மாட்சிமை ஸ்வீடன் மன்னர் அவருக்கு ஒரு டிப்ளமோ மற்றும் பதக்கத்தை வழங்க.

அவர்களுக்கு நன்றிகள் கூறிய கணமே "பெருமிதம் பொங்கும் கண்களோடு, தன்னை விழா மேடையின் கீழ் அமர்ந்து ரசித்திருந்த தன் மகனை நோக்கி; 'பதக்கத்தை உயர்த்தி காண்பித்து' தன் வெற்றியை மகனுடன் பகிர்ந்தார்" சௌந்தர்யா.

அவரின் மகனோ,"நானும் உங்கள் அன்பிற்கு குறைந்தவன் இல்லை!" என்பதாய்; கட்டை விரலை உயர்த்தி, வெற்றி குறியாய் 'தம்ப்ஸ் - அப்' காண்பித்து தன் 'வாழ்த்துக்களை' தெரிவித்தான்.

தாயும்,தனயனும் அக்கணத்தில் நெகிழ.
அன்னை மற்றும் மகனின் அன்பில் விழா மேடையும், கூடியிருந்த மக்கள் கூட்டமும் நெகிழ்ந்தது.

விழா நிறைவுற அரசர்,அரசியால் மாலை வழங்க இருக்கும் சிறப்பு விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட, கூட்டம் கலைந்தனர்.


உணவகம் ஒன்றில் அமர்ந்து
அமெரிக்கானோவை சுவைத்துக் கொண்டிருந்தனர் தாயும்,மகனும்.


"என்னம்மா ஏன் இந்த மொமெண்ட்ல இவளோ சேடா இருக்கீங்க. வாட்ஸ் ஈட்டிங் ஆன் யூ மா!?"

நோபலை நான்காம் முறையாக வென்றும் தாய் முகம் கவலையை 'அரிதாரம் சூடியதை' பொறுக்கமுடியாது கேட்டிருந்தான் சௌந்தர்யா பெற்றெடுத்த அரிமா.

"என் சேட்நெஸ் ரீசன் தெரிஞ்சு என்ன செய்ய போறடா கண்ணா!?"

மகன் உள்ளகிடக்கின் அளவை ஆராய முயன்றார் அன்னை.

"ரீசன் தெரிஞ்சா கண்டிப்பா அதை நிறைவேத்துவேன்மா.அட் எனி காஸ்ட்!"

"உன் கவலையை போக்காது என் நாள் கழியாது தாயே!" என சூழ் ஏற்றது மகவு.

"சுயரா சொல்றியா கண்ணா!?"
இன்னும் ஆழம் காண விரும்பினார் போல அன்னையவர்; விடாது கேட்டிருந்தார் மகனின் உறுதியை.

'தாய்' என்று வந்துவிட்டால் அவன் எதைப்பற்றியும் யோசித்தது கிடையாது என்பதற்கு சான்றாய் "டேம் சுயர் மா!" என்றான் உறுதி கொள் நெஞ்சான்.


சௌந்தர்யா மகனின் முன் அவன் திருமணத்தை கோரிக்கையாக மாற்ற, தன் நிலையை எண்ணி தயங்கினான் அவன்.

"என்னடா கண்ணா? இதுதான் நீ சொன்ன, 'அட் எனி காஸ்ட், டேம் சுயர்ம்மா' க்கான அர்த்தமாடா கண்ணா!?"

"நீ கொடுத்த வாக்கிற்கான பொருளை நீயே திரும்பப்பெறுவதா!?" மகனுக்கு கிடுக்கு பிடியிட்டு மடக்கினார் சௌந்தர்யா.

"நோ மா! எனக்கு எப்படிம்மா...!?"

அவன் தயக்கம் அவனை கடக்கவும் விடாது, அன்னைக்கு சம்மதமும் கூறவிடாது 'இருதலை கொள்ளியாய்' வாட்டிட.அருந்திய அமெரிக்கானா சுவை கூட இப்போது நாளங்களை தாக்காத அளவிற்கு அன்னை முகம் கண்டவன்
"மா!" என்றான் பாவமாக

'ஒன்றும் அறியா பிள்ளை' போல் பார்த்த மகனை, கண்டும் காணாது; கோப்பைக்கு பின் முகத்தை மறைத்து, மகனை மடக்கியதில் 'கமுக்கமாய்' சிரித்துக் கொண்டார் அவர்.


இதோ தூக்கிய முகத்துடன் மாலை விருந்திற்கு கிளம்பி வந்த மகனை கண்டு சிரிப்பு பொங்கினாலும் அதனை வாயிற்குள் விழுங்கிக் கொண்டார்.

மகன் கண்டால் கண்டிப்பாக முகத்தை "கடுகடுவென கடுவன் பூனையாய் மாற்றிக் கொள்வான்!" என்பதை அறியாதவரா அவர்.

தாயும், மகனும் விருந்து நடைபெறும் ஒஸ்லோ நகர மண்டபத்தை அடைய, ஒவ்வொரு விருந்தினருக்கும், சிறு மலர் மொட்டுக்கள் மூலம்,'மலர் செண்டு' கொடுத்து சிறப்பான வரவேற்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதிலும் தன் முன் நின்றிருந்த சிறுவன் முகம் கண்ட சௌந்தர்யாவிற்கு," மகன் திருமணம் செய்து.பேரன்,பேத்தியை அவர் மடியில் தவழ செய்தால் எப்படி இருக்கும்!?" என்ற கற்பனையே உள்ளுக்குள் உலா வர தொடங்கியது.

அதே எண்ணத்தோடு மகனின் முகம் பார்த்தவர் மகனின் கடுத்த முகம் கண்டு, "இப்படியே இருந்தா எங்க இருந்து எனக்கு பேரன் வருவான்? பேத்தி வருவா? இன்னும் கொஞ்ச நாள் விட்டா இவனுக்கு கோபம் அதிகமாகி பிபி தான் அதிகமாகும் போல!" மனதிற்குள் புளுங்கிக் கொண்டார்.


சௌந்தர்யா மகனுடன் சென்று விருந்து மேசையை அடைய,நோபல் அறக்கட்டளையின் வாரியத் தலைவர் பேராசிரியர் கார்ல் - ஜோகன் ரஸல் மீண்டும் மேடையில் தோன்றி உரையாற்றிட.


அதன் பின் ஸ்வீடிஷின் பிரபல குழுவினரின் இசை கச்சேரியும் ஆரம்பமாக முதல் நடனம் பெருமதிப்பிற்குரியவர்கள் தொடங்கி வைக்க, அதன்பின் விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொண்டனர்.


நடனம் முடிய வரிசையாய் வீற்றிருந்த அலங்கார நாற்காலிகளில் சென்று விருந்தினர் அமர,விருந்து ஆரம்பமானது.


விருந்தில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அன்னையும், மகனும் பாதுகாவலர்கள் புடைசூழ தாய் தமிழகம் வந்து சேர்ந்தனர்.

பத்து மாதங்களுக்கு முன்பு மகன் தனக்கு வாக்கு கொடுத்ததை காரணம் காண்பித்து சௌந்தர்யா பல வரன்களை பார்க்க.அவர்
பார்த்த ஒன்று கூட அவரின் மனதை நிறைக்கவில்லை.

மகனின் மனம் எதை விரும்பும் என்பது அனைத்தும் அத்துப்படி சௌந்தர்யாவிற்கு "தாய் அறியா சூழ் ஏது!?"

மகன் வாய்விட்டு கூறவில்லை என்றால், "அவன் மனதை அவர் உணர மாட்டாரா என்ன? உணர்ந்தே இருந்தார் சௌந்தர்யா!"

அதனால் தான் மகனுக்கு ஏற்ற 'குணவதியை தேடி' தமிழகத்தை சல்லடையிட்டுக் கொண்டிருக்கிறார்.

உணவு மேசை மீது கரம் பதித்து அன்னை அமர்ந்திருக்கும் தோரணை கண்டு முகம் விகசிக்க.

அவர் அருகே வந்த மகன் அன்னை முகம் வாடிய மலராய் இருக்கும் கோலம் கண்டு," என்ன ஆச்சுமா ஏன் இவ்வளவு சோகம்!?" கேட்டுக்கொண்டே உணவை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தான்.

"வேற என்ன கண்ணா? உனக்கு ஏத்த பொண்ணு நம்ம ஊருலயே இல்லைன்னு சொல்லிட்டாருடா அந்த தரகர்!"

அன்னையின் வாட்டம் எதனால் என்பதை அறிந்தவன்; புன்னகைத்துக் கொண்டே,"ஆல் தி பெஸ்ட் மாம்!" என வாழ்த்தி ; 'தான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை!' என்பதை போல ;
அலுவலகம் செல்வதாய் 'கடுக்காய் கொடுத்து கிளம்பிவிட்டான்' மைந்தன்.
 
Nice start 🤩🤩
ஒற்றை ஆழி முத்து என்பது ஹீரோவின் பெயரா...??? அல்லது ஒற்றை மகன் என்பதை குறிக்கிறதா....???
 
வாழ்த்துக்கள் 💐💐💐

அம்மாவுக்கு நோபல் பரிசு 🤩🤩🤩🤩

திருமணத்தை பத்தி பேசியதும் அவனோட நிலைய நினைச்சு வருத்தப்படுறான்......🧐🧐🧐
அம்மாவுக்கு மாதிரி அவனுக்கும் ஏதும் பிரச்சினை இருக்கா 🤔🧐🧐🤔🤔

தமிழ் நாட்டிலே பொண்ணு இல்லாதவனா உங்க பையன் சாமியாரா போக வேண்டிய தான் 🤷🤷🤷🤷
 
நோபல் பரிசு அதுவும் சேவைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
கடுக்காய் குடுத்த மகனின் மனப்பிண்ணனி என்னவா இருக்கும்?🤔🤔🤔🤔. முதல்ல அவனோட பேரு என்னா ஜீ?. அரிமாவா?
 
வாழ்த்துக்கள் 💐💐💐

அம்மாவுக்கு நோபல் பரிசு 🤩🤩🤩🤩

திருமணத்தை பத்தி பேசியதும் அவனோட நிலைய நினைச்சு வருத்தப்படுறான்......🧐🧐🧐
அம்மாவுக்கு மாதிரி அவனுக்கும் ஏதும் பிரச்சினை இருக்கா 🤔🧐🧐🤔🤔

தமிழ் நாட்டிலே பொண்ணு இல்லாதவனா உங்க பையன் சாமியாரா போக வேண்டிய தான் 🤷🤷🤷🤷
😂😂😂😂
 
வாழ்த்துக்கள் 💐💐💐

அம்மாவுக்கு நோபல் பரிசு 🤩🤩🤩🤩

திருமணத்தை பத்தி பேசியதும் அவனோட நிலைய நினைச்சு வருத்தப்படுறான்......🧐🧐🧐
அம்மாவுக்கு மாதிரி அவனுக்கும் ஏதும் பிரச்சினை இருக்கா 🤔🧐🧐🤔🤔

தமிழ் நாட்டிலே பொண்ணு இல்லாதவனா உங்க பையன் சாமியாரா போக வேண்டிய தான் 🤷🤷🤷🤷
Hahahah
நோபல் பரிசு அதுவும் சேவைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
கடுக்காய் குடுத்த மகனின் மனப்பிண்ணனி என்னவா இருக்கும்?🤔🤔🤔🤔. முதல்ல அவனோட பேரு என்னா ஜீ?. அரிமாவா?
அடுத்த பதிவில் வரும்
😂😂😂😂
 
Top