Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 15

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
"அம்மா, அப்பா எப்போ வருவாங்க!?"

"தெரியலை ஷ்ரவன் கண்ணா!"

"அம்மா நீங்க கால் பண்ணுங்க"

"அப்பாக்கு லேப்ல இருக்கப்போ கால் பண்ணினா கோபம் வரும் கண்ணா!"

"ஆனா எனக்கு அப்பாவை பார்க்கணும் ம்மா..!"

மூன்று மாதங்கள் ஆகிறது சுந்தரம் வீடு வந்து சேர்ந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு உறக்கத்தில் இருந்தவர் 'வெடுக்'கென்று எழுந்து

"சௌமா நான் லேப் கிளம்பறேன்!"என்றார்.

"என்னங்க இந்நேரம் கிளம்புறீங்க!?"

"எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு அதை நான் இம்பிலிமெண்ட் பண்ணி கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணினா; யாருமே கண்டுபிடிக்காத ஒரு மருந்தை நம்ம கண்டுபிடிக்கலாம்!"

"அதை நம்ம கண்டுபிடிச்சி இல்லாதவங்களுக்கு எல்லாம் கொடுக்கலாம்!"

கண்களில் தான் 'எத்தனை கனவுகள்!?'
அந்த மனதில் தான் 'எத்தனை காருண்யம்!?'

"சரிங்க போய்ட்டு சீக்கிரம் வாங்க!" என்றதோடு சரி.

இன்றோடு கணவன் வீடு திரும்பி மூன்று மாதங்கள் ஆகிறது.

அது ஏனோ வேலை என வந்துவிட்டால் சுந்தரத்திற்கு மற்றையது எல்லாம் மறந்துவிடும்.

இல்லாத குடும்பத்து பிள்ளை இல்லை சுந்தரம், ராஜா வீட்டு கண்ணுக்குட்டி அவர்.


குடும்ப சொத்து,பூர்வீக சொத்துக்கள் தவிர அவருக்கென்று தனியே மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் கூட சொந்தமாக உள்ளது.


ஆனால் அவரின் லேப் தான் அவரின் முதல் மனைவி. அவரின் ஆராய்ச்சிகள் தான் அவரின் பிள்ளைகள்.அதன் பிறகு தான் வீடு சௌந்தர்யா, ஷ்ரவன் எல்லாமே.

ஆனால் ஷ்ரவனுக்கு அப்படி கிடையாது அவனுக்கு அவன் அப்பா மட்டும் தான்.

பொதுவாக ஆண் பிள்ளை அம்மாவின் கைகளில் வளரவும்,அவர்களை சுற்றியுமே வளருவர்.

ஆனால் 'ஷ்ரவன்' அவ்வாறு கிடையாது.

வீட்டில் இருக்கும் நூலகத்தில் அமர்ந்து அவன் தந்தை புத்தகக் குறிப்பு எடுத்தால் இவனும் கூட அமர்ந்து கையில் புத்தகம் வைத்து அவரைப் போல செய்து விளையாடுவான்.

பிள்ளை பழக்கம் தொடர..

அவன் உலகம் தந்தை புறம் அதிகம் சாயும் தராசாகி போனது.

அதற்காக சௌந்தர்யாவை அவன் தேவை என்பது அர்த்தமல்ல.

"சௌந்தர்யாவின் பார்வையில் இருந்து வளர்ந்ததால்; அவரை போலவே சுந்தரின் மீது அவனுக்கும் அதிக அன்பு வளர்ந்தது!" என்றும் கூறலாம்.

வீட்டில் இருக்கும் நூலகம் சுந்தரின் 'மறு உலகம்!' என்றால் ஷ்ரவனுக்கும் கூட அதுதான் மற்றொரு 'இருப்பிடம்'

அதுவும் ஒரு வயதிற்கு மேல் சேரில் அமர்ந்து கண்ணாடியை சரிசெய்து கொண்டே எழுத்து வேலைகளை தொடரும் தந்தையின் மீது சிறுவனின் பார்வை ஆசையாய் படிந்து மீளும்.

மற்றவரின் ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ நம்மை அளவிற்கு அதிகமாக ஈர்க்கும் அல்லவா!

உதாரணத்திற்கு,"அஜித்தின் ரேஸ் மீது கிரேஸ்.. விஜயின் நடனம் மீது ஈர்ப்பு.. இப்படி நம்மை இழுக்கும் அல்லவா!"

அப்படி 'ஒரு ஈர்ப்பும், கிரேஸும்' தான் சுந்தரின் மீது ஷ்ரவன் கொண்டிருந்தான்.

தந்தை இல்லாத சமயம் அவரின் அறைக்குள் நுழைந்து அந்த கண்ணாடியை எடுத்து அணிந்து பார்ப்பதில் தான் எத்தனை இன்பம் அவனுக்கு.

"டேய் கண்ணா என்னோட கண்ணாடியை எடுத்தியா!?"

"நோ டாடி எடுக்கலை!" என்பவன் பின்னால் ஒழித்து வைத்துக் கொண்டால் 'விட்டுவிடுவாரா என்ன!?'

"மை பாய் குடுங்க!" என்று அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்.

'கண்ணாடியில் என்ன தான் இருக்குமோ..!?'

அது அவருக்காக முதலில் முதலாக வடிவமைத்தது. ஃப்ரேம் கூட அவரே டிசைன் செய்தது அதனால் அதை தன்னுடனே வைத்துக் கொண்டு சுற்றுவார்.

அவருடைய அதிர்ஷ்டம் அந்த கண்ணாடி எனும் நம்பிக்கையும் கூட அவருக்கு இருந்தது.



"இன்று வருவார்.. நாளை வருவார்.. எப்படியும் வருவார்..!" என்று எண்ண.



வாரம் ஒருமுறை வந்து குடும்பத்துடன் நாளை கழித்துவிட்டு செல்லும் சுந்தரம் இந்தமுறை மூன்று மாதங்கள் கடந்தும் வராததால் அவரை கேட்டு அடம்பிடித்தான் ஷ்ரவன்.

பிள்ளையின் மீது தவறில்லையே.தந்தை மீதுள்ள அன்பில் அல்லவா அவன் கேட்கின்றான்.அவனை திட்டவோ அடிக்கவோ மனம்வரவில்லை அன்னைக்கு.

காரணம் அவராலும் கூட கணவன் முகம் காணாது,குரல் கேட்காது இருப்பது கடினமாக இருக்க.சிறுவனுக்கு எப்படி புரிய வைப்பது


"என்ன சுந்தர் என்னடா பண்ற!?"

"ஒன்னும் இல்ல ரகோ சும்மா நம்ம முன்னாடி ரிசல்ட்ல ஒரு சின்ன சேஞ்ச் பண்ணிட்டு இருக்கேன்!" என்பதோடு முடித்தார் சுந்தர்.

'முடிவு வருவதை பொறுத்து வெளியில் சொல்லிக்கொள்ளலாம்!' என்று அவர் எண்ணினார் போல

ஆய்வகம் முழுவதும் சுந்தருக்கு சொந்தமானது.ஆனால் அந்த 'படாடோபம்' அவரிடம் என்றுமே இருக்காது

வட இந்தியரான ரகோத்வாவிற்கு, தென்னிந்திய நண்பன் சுந்தர் என்றால் அன்பு அதிகம்.


"டேய் யூ... மேன் நீ சரியான கிரேசிடா!" நண்பனை பார்த்து விளையாட்டாய் சிரித்துக் கொண்டார் ரகோத்வா.

"அப்போ ஓகே சுந்தர் நான் கிளம்பறேன் நீ வொர்கை முடிச்சுட்டு கிளம்பு!" என்றவர் வெளியேற.

சுந்தர் தன் கனவு கைகளில் கிடைக்கப் போவதை உணர்ந்து இன்பமாய் நிற்க.

"ஆனந்தம்.. பேரானந்தம்.. பரமானந்தம்.."

சுந்தரின் கனவு பலித்தது அங்கே.

'ஆம்!' அவரின் ஆராய்ச்சி வெற்றி பெற்றது.

இதுவரை யாரும் கண்டறியாத அற்புத கண்டுபிடிப்பை கண்டறிந்து இருந்தார்.

நாளை உலகம் இதனை அறிந்தால் இவர் தான் ராஜா.

அதே இன்பத்தோடு வீடு செல்ல கிளம்பியவர் திரும்பி வந்து தன் கண்டுபிடிப்பின் முக்கிய குறிப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மனைவி மகனைக் காணச் சென்றார்.



அன்றைய நாளை அன்னையும்,மகனும் எப்படியோ கரைக்க.

மறுநாள் காலை விடியலில் வந்தார் சுந்தரம்

அதுவும் அத்தனை மகிழ்ச்சி அவரிடம்.

"சௌமா... ஷ்ரவன் கண்ணா..."

என்றபடி வந்தவர் பள்ளிக்கு கிளம்பி இருந்த மகனுக்கு விடுமுறை எடுக்க சொல்லி மனைவியிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்று இன்றைய நாளை குடும்பமாய் கழிக்கலாம் என்று அழைக்க.

"அன்னைக்கும் மகனுக்கும் கசக்கவா செய்திடும்!?"

உடனே தயாராகி அவர் முன்பு ஆஜராக.மூவரும் செல்வதற்கு முன்பு தியாகுவை அழைத்தார் சுந்தரம்.

அவர்தான் சுந்தரின் நம்பிக்கையான காரோட்டி

"தியாகு வாயேன் வெளிய போய்ட்டு வரலாம்!?"

"இல்லங்க சார் அது..!"என்று அவர் யோசிக்க

"வா அப்படியே உன் ஒய்ஃப் பையன் எல்லாரும் ஒரு டிரைவ் போய்ட்டு வரலாம்!" என்றார் மனிதர்.

அவருக்கு பணம் உள்ளவர் இல்லாதவர் என்பதெல்லாம் தெரியாது

அவர் அறிந்தது எல்லாமே ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி,அதன் முடிவுகள் மட்டுமே.

அவற்றைத் தவிர மற்ற எல்லாமே சமமான ஒன்று தான் சுந்தரத்திற்கு.

"என் பையன் எங்க அம்மா வீட்ல இருக்கான் சார்.நானும் அவளும் வேணா!?" வரட்டுமா என்றார் தியாகு.

"அண்ணா என்ன கேள்வி இது அவளை கூப்பிட்டு வாங்க.நானும் கூட அவளை காலைல இருந்து இன்னும் பார்க்கவே இல்லை!" என்றார் தோழியான தியாகுவின் மனைவி.


இரண்டு குடும்பமும் கிளம்புவதற்காக தயாராக.

"ராஜன் அங்கிள் ஏன் இப்போ காரை துடச்சுட்டு இருக்கீங்க!?"

"அது வந்து ஷ்ரவன் தம்பி எல்லாரும் வெளிய கிளம்பறதை பார்த்தேன் அதுதான் துடச்சுட்டு இருக்கேன்!" என்றான் ராஜன்.

"ஓ... ஆனா இப்போதான் தியாகு அங்கிள் துடச்சாங்க!" என்றான் ஷ்ரவன்

"இல்ல தம்பி தூசியா இருந்தது போல இருந்துச்சு அதுதான்!"

"ஓகே! ராஜன் அங்கிள்" என்றவாறு ஆசையாய் அன்னை தந்தைக்கு முன்பாக முதல் ஆளாக காரில் ஏறி அமர்ந்து கொண்டான் சிறியவன்.

தியாகு சென்று தன் மனைவியை அழைத்துவர.


ஐவரும் காரில் தங்கள் பயணத்தை இன்பமாய் தொடர..

சுந்தர் மகனை நடுவே வைத்துக் கொண்டு கைவளைவில் மனைவியைப் பிடித்துக் கொள்ள.

மூவரும் கதை பேசிக்கொண்டே வந்தனர்.

"டாடி..!"

"என்னடா கண்ணா!?"

"உங்க கண்ணாடியை நீங்க மறந்துட்டு வந்துட்டீங்க!"

"ஹோ.... மறந்துட்டனா.சரி பரவாயில்லை கண்ணா வீட்டுக்கு போய் எடுத்துக்கலாம் சரியா!?"

"நீங்க அதை மறந்துட்டீங்க இல்ல.அதை இனி நானே வச்சுப்பேன்..!"

வம்பளந்த மகனிடம் காதுக்குள் எதையோ சுந்தர் கதை போல சொல்லிக்கொண்டே வந்தார்.

எல்லாம் அவரின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் தான்.

"பிள்ளைக்கு என்ன புரியும்!?" என்பதை எல்லாம் அவர் யோசிக்கவில்லை.

நன்றாக சென்று கொண்டிருந்த வாகனம் தன் நிலையை இழக்க..

"சார் ப்ரேக் பிடிக்கலை சார்..!" தியாகு சூழலை விளக்கினார்.

அனைவரும் ஒரு நிமிடம் 'என்ன ஆனது!?' என்பதை உணர்வதற்கு முன்பே அனைத்தும் நடந்து முடிந்தது.

எதிரில் இருந்த மரத்தில் கார் மோதி தியாகு,அவர் மனைவி, சுந்தரம் மூவரும் இறக்க.

ஷ்ரவன் கால்கள் நடக்கமுடியாது போக.. சௌந்தர்யா மட்டும் நடப்பதில் சிறு குறைபாடுடன் உயிர் தப்பினார்.


அதுவரை வீடு,குடும்பம்,மகன் என்று இருந்த சௌந்தர்யாவை இரும்பு பெண்மணியாக உருமாற்றினான் ஷ்ரவன்.

சில மாதங்கள் நடக்க முடியாத நிலையில் இருந்த சௌந்தர்யாவையும்,இனி நடக்கவே முடியாத நிலையில் இருந்த ஷ்ரவனையும் ரகோத்வாவும், இயக்கினியும் தான் கவனித்துக் கொண்டனர்.

தேவி தனக்கும் மருத்துவமனைக்கு 'ஆகாது!' என வீட்டிலே பதுங்கிக் கொண்டார்.

"ஆமா இவளுக்கு யாரு தொண்டூழியம் பண்றது!?" இதுவே அவரின் எண்ணம்.


கண்விழித்த ஷ்ரவன் நடக்க முடியவில்லை என்பது அவனுக்கு பெரிய இழப்பாக இருந்தது.

இரண்டு மாதங்கள் மருத்துவமனை வாசம் முடிந்து வீடு திரும்பியது.

காணும் இடமெல்லாம் இருவருக்கும் சுந்தரம் தான்.

அதுவும் நூலக அறையை கடக்கும் பொழுது எல்லாம் 'அவரே!' என்றானது.

உண்மை புரிந்தாலும்,ஏற்றுக்கொள்ள மனமில்லை.ஆனால் அவன் காதுகளில் தந்தை கூறிய கடைசி வரிகள் ரீங்காரமிட.

அவரின் ஆசையை கனவை உயிர் கொள்ள செய்வதே 'தனது லட்சியம்!' எனக் கொண்டான்.

மறுமுறை மருத்துவமனை சென்றபோது

"சாரி மேம் உங்க பையனால இனிமே நடக்கவே முடியாது!" என்று கூறிட.


மகனின் நிலை கேட்டு அதிர்ந்து போன சௌந்தர்யா மகனுக்கு தைரியம் கூற.

ரகோத்வா தான் பல மருத்துவர்களை அணுகினார்.

அவரின் உதவியில் தான் அன்னையும்,
மகனும் தைரியமாக இருக்கிறார்கள்.

ஸ்ரீனிவாசன் தொழில் தெரிந்தவர் தான். ஆனால் தங்கைக்கும் அவரின் பிள்ளைக்கும் ஒன்று என்றதும் அவர் ஸ்தம்பித்து போக.

ரகோத்வா தான் மருத்துவமனையில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டவர்.

அதன் பிறகும் கூட,"அவர்தான் இருவருக்கும் உதவினார்!" என்றே கூறலாம்.


"எது அவனை அவ்வாறு பேசத் தூண்டியதோ!?"

தாயை பார்த்தவன்,"அம்மா நீங்க நம்ம பேக்டரியை பாருங்க!" என்றவன் கூற

"கண்ணா என்னால அதை எல்லாம் பண்ண முடியாதுடா, டாக்டர் வேற நடக்கவே நாள் ஆகும்னு சொல்றாங்க..!" என்றார் சௌந்தர்யா.

"அப்போ அம்மா எனக்கு இனிமே நீங்க பிரேவ்னஸ் பத்தி பாடம் எடுக்க வேண்டாம்!"
பட்டென்று வந்தது பதில்


"என்ன பேச்சு ஷ்ரவன் அம்மாகிட்ட இப்படித்தான் பேசறதா!?" த்ரீனி கண்டிக்க

"அம்மாகிட்ட இல்லாத பிரேவ்னெஸ் எனக்கு மட்டும் வருமா மாமா சொல்லுங்க!?" என்றதும்.

பிள்ளையின் வார்த்தை நெஞ்சை தாக்க முதலில் நடக்க பயிற்சிகள் மேற்கொண்டவர்.அலுவலகம் செல்லத் தொடங்கினார்.


எல்லாம் மகனுக்காக அவனை சமூகத்தில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் தான்.

தன்னிலை தனியே அழுகும் ஷ்ரவனின் கண்ணீரை தலையணை என்று யாரும் அறியாது போயினர்.

ஆனால் சூலினை அறியா தாயேது


மகனை உணர்ந்த சௌந்தர்யா,கணவன் கண்டுபிடிப்புகளுக்கு வரும் பேடென்ட் தொகையை உருவாக்கியது தான் ரித்து வேலை பார்க்கும் சிறப்பு பள்ளி.

இங்கு கண் தெரியாத காது கேட்காத நடக்க முடியாத மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி திறமை அறிந்து சமூகத்தில் உயர் நிலைக்கு கொண்டு செல்லும் கல்வி நிறுவனம் அல்ல கல்வி நிலையம்.

தங்களின் வாகனம் வெறும் விபத்து அல்ல கொலை முயற்சியாக இருக்கலாம் என்று தன் மாமா விபத்துக்கு காரணமான விபத்து ஷ்ரவன் மீது வழக்கு தொடர்ந்தார்.

அவன் மூளையில் பதிவாகி இருந்தது எல்லாம் வாகனத்தின் 'பிரேக் பிடிக்கவில்லை என்பதோடு; காலைல நான் செக் பண்றேன் சார்!' என்ற தியாகுவின் வார்த்தையும் சேர்ந்தே கேட்க.

ஆனால் காவல் துறை விபத்து என்று கூறி வழக்கை மூடியது.



காலம் கழிய மகனோடு சேர்ந்து அன்னையும் வளர..


ஷ்ரவன் தலை எடுக்கும் வரை வாகீசன் நிறுவனம் தான் முதலில் இருந்தது.

ஆனால் என்று ஷ்ரவன் தன் கைகளில் தொழிலை எடுத்தானோ அவன் தொட்டது எல்லாம் பொன்னாய் விளையத் தொடங்கியது.


இன்று..


படிப்பை முடித்த கையோடு தந்தை எடுத்த முயற்சியை தன் கைகளில் எடுத்தான் ஷ்ரவன்.

கல்லூரி நண்பன் ரக்ஷன் உடன் ஆய்வில் ஆர்வமுள்ள இளைஞர்களான இயக்கி,ஜோ,அப்துல்லா, ரபீக்கை தன் குழுவில் இணைத்துக் கொண்டார்.

இவர்களுக்கு வழிகாட்டியாக தந்தையின் மருந்து நிறுவனத்தில் இருந்த ரகோத்வாவை நியமித்தான் அவன்.

இப்பொழுது ஐ .எம். ஏ கூடிய விரைவில் நடத்த உள்ள விழாவிற்கு இவர்களின் கண்டுபிடிப்பும் கூட அனுப்பப்பட உள்ளது.


அதற்காகத் தான் அனைவரும் நேரம் இல்லாது சுற்றித் திரிகின்றனர்.


"அப்போ உங்க அப்பாவோட ரிசர்ச்சை கண்டின்யூ பண்ண போற இல்லையா கண்ணா!?"

"இல்லம்மா நான் ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணிட்டேன்!" என்றான் அவன்.

"சோ... என் கண்ணுக்கு மறைவா நீ நிறைய வேலை பார்க்கற இல்லையா!?"

"அம்மா அப்படி இல்லம்மா!" என்றான் ஷ்ரவன்.

"அப்போ ரகோத்வா அண்ணன் கூட என்கிட்ட சொல்லவே இல்லையே!?"


"நான் தான்மா சொல்லவேண்டாம் சொல்லிட்டேன்!"

"ஆனா கண்ணா..!?"

"அம்மா இது டாடி கனவு என்னால எப்படி விடமுடியும்!?" எனும் மகனை 'வேண்டாம்' என்று கூறி தடைவிதிக்க சௌந்தர்யா வேண்டும்.

"சரி கண்ணா நீ தூங்கு போ.இனிமே போறதா இருந்தா வீட்ல சொல்லிட்டு கிளம்பு பாவம் ரித்து பயந்துட்டா பாரு!" என்றவர்.

"டேய் திருடா உனக்கும் கூட என்கிட்ட சொல்லணும் தோன்றலை இல்ல!?"

"அப்படி இல்ல சௌண்ட்..!"

"போடா பொடியா நீயும் வீட்டுக்கு போ உன் பொண்டாட்டிக்கு இந்நேரம் உன் மாமியார் வேப்பிலை அச்சுச்சிருப்பா!"

"அவதான் அவங்க அம்மா வீட்ல இருக்காளே!"

"மறுபடியுமா..!?" என்றவர் ரக்ஷன் கிளம்ப,அவனுடன் பேசிக்கொண்டே நடையைக் கட்ட.

தன் அறைக்கு கோபமாக சென்றாள் ரித்து.

அவனுக்கு எல்லாம் முன்னால் கோபமாக சென்றாள் 'அவன் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் அல்லவா!' அந்த எண்ணம் தான்.

"அடியே எதுக்குடி அம்மாகிட்ட சொல்லிவச்ச!?"

"நீங்க ஏன் என்கிட்ட மறச்சீங்க!?"

"மறைக்கணும் நினைக்கலடி.ஆனா ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்ஸா இருக்குமே! அப்படின்னு நினைச்சுட்டு சொல்லலை" என்றான் அவன்.

“அப்போ நீங்க எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்க.எங்க முன்னாடி மட்
டும் ஏதோ ஜோ அண்ணாவோட பிரெண்ட் அவங்க அப்படின்ற மாதிரி சுத்துனீங்க!?"

"ஹேய் நாங்க எல்லாருமே ஒரே யுனிவர்சிட்டி.ஆனா அவனுங்க நாலு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் அப்போ சொல்லு!?"

"இதெல்லாம் நல்லா சொல்லுங்க!"

“வேற எதைடி நான் நல்லா சொல்லலை
சொல்லுடி.. சொல்லுடி.. சொல்லுடி..!?" என்றபடி அவளோடு விளையாட.

பெண்ணின் கிள்ளை சிரிப்பில் அந்த அறையே நிறைந்தது.
 
Top