Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 2

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
மூன்றடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் பன்னிரண்டு அறைகள் என மொத்தம் முப்பத்தி ஆறு வகுப்பறைகளை உள்ளடக்கி இருக்க.

சீருடை சூடிய வர்ண தூரிகைகள் கொண்ட அறிவார்ந்த குரல்கள் அங்கே விடாது ஒலித்தது.

குளோபல் பியூட்டி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளி அது.

கணிசமான சீட்டுகள் திறமையான படிக்க ஆர்வம் நிறைந்த ஏழ்மையில் வாழும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட.

வீதிகளில் படிக்க வசதி இல்லாது தவிக்கும் பிள்ளைகளுக்கும் கல்வி வழங்க இப்பொழுது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனுடன் இணைந்த சிறப்பு பள்ளி ஒன்றும் உள்ளது.

அது பார்வை இல்லாத,காது கேளாத,
நடக்க இயலாத மாணவர்களுக்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கல்வி நிலையம்.

அங்கிருக்கும் ஒவ்வொரு செங்கல்லையும் தன் மகன் ஷ்ரவனின் முகத்தை நினைத்தே வைத்து உருவாக்கி இருந்தார் சௌந்தர்யா.

ஆனால் இங்கும் பாரபட்சம் என்பதே இல்லை அதுதான் உண்மை.

"இது கல்வி நிலையமே அன்றி; கல்வி நிறுவனம் அல்ல!" என்பதில் உறுதியாக இருந்தார் சௌந்தர்யா.



வசதியில் தனக்காரர்கள் பலருக்கும் இந்த முறை பிடிப்பதில்லை.

'ஏனென்றால்!?'

தங்கள் தகுதிக்கு தங்கள் பிள்ளைகள் இந்த பள்ளியில் பயிலும் அதே நேரம்; பள்ளி செல்வதற்கும் கூட வசதியே இல்லா ஏழை வீட்டு பிள்ளைகளும் இங்கே கல்வி பயில்வது தங்களுக்கு இழுக்கு.

எத்தனை வாதம் செய்தும்,"சௌந்தர்யா அதனை மாற்றிக்கொள்ளவே இல்லையே!"

"கல்வி என்பதை பொதுவினில் வைப்போம்!" என்றவர் தான்.

இப்பொழுது சாலையோர மாணவர்களுக்கு உதவும் நோக்கோடு அதற்கான வழிகளை செய்து வருகிறார்.

பெரும் பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்க்க காரணம் தரமான கல்வி ஒன்று தான்.


"எத்தகைய பிள்ளையையும் தட்டி எழுப்பி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சிறக்க செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!"


அதனால் தான் மனம் ஒவ்வாத ஒன்றையும் சகித்துக் கொண்டு; தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளிக்கு அனுப்புகின்றனர் அந்த நல்ல உள்ளங்கள்.

இதில் விதிவிலக்காக சிலரும் உண்டு. தங்களால் ஆன உதவியை செய்து தாங்களும் மனிதருள் மாணிக்கம் என்பதை நிரூபிக்கும் மனிதம் கொண்ட மக்களும் அங்கே இருந்தனர்.

மற்ற வகுப்புகள் எல்லாம் கட்டிடமாய் இருக்க.

மழலைகள் கல்வி பயிலும் இடங்களில் மட்டும் சிறு குடில்கள் போல் அமைக்கப்பட்டு இயற்கையோடு ஒன்றிய கல்வியாக இருந்தது.

மழலையர் கல்வி மட்டும் அங்கே இலவசமாக பயிற்றுவிக்கபட்டது.

அங்கே தனக்கார பிள்ளைகளுக்கு இடமில்லை; ஏழ்மையில் வாடும் பிஞ்சுகளுக்கு மட்டுமே தாராள இடம் இருந்தது.

"எத்தனை பிரம்ம பிரயத்தனம் புரிந்தும் கூட,பணம் கொண்ட மக்களால் இதனை மட்டும் பெறவே முடியாது போனது!" எல்லாம் சௌந்தர்யாவின் உறுதியான மறுப்புகளில் ஒன்று.

பாபா பிளாக் ஷீப் (Baba black sheep )

ட்வின்கில் ட்வின்கில் (Twinkle twinkle)

ஜானி ஜானி எஸ் பாப்பா( Johny Johny Yes papa)

என்று ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடல்கள் இசைக்க.

"புஷி கேட் புஷி கேட்
வேர் ஹேவ் யூ பீன்?
ஐ ஹேவ் பீன் டூ லண்டன்
டூ லுக் அட் த குயின்!"

என்று ரீங்காரம் ஒலித்த வகுப்பில் மட்டும் ஆசிரியர் இல்லாது மாணவ மணிகளின் மழலைக்குரல் வாசம் சேர்க்க.

அவ்வகுப்பின் சாளரக் கதவை தென்றல் கொண்டு மெலிதாய் திறக்க செய்து; மெதுவாக நாமும் எட்டிப்பார்க்கலாம்.

வெள்ளை வண்ணம் பூசிய சுவரில் எல்லாம் குழந்தைகளின் குட்டி குட்டி தீற்றல்களாக ஓவியங்கள் இடம் பெற.

வட்டமிட்டு நாற்காலியில் அமர்ந்திருக்கும் பிள்ளை செல்வங்களின் நடுவே நின்று தானும் மழலையாய் மாறி கைகளை அசைத்து.

நீண்ட கூந்தல் அங்கும் இங்கும் அசைய அவளின் அசைவின் போது பின்னால் கிடந்த சாரைபாம்பு பின்னல் முன்னால் வந்து விழுக.

அவள் ஆடும் அழகோடு, தாங்களும் வாரணம் ஆயிரம் சூடினர் பிஞ்சு ஜாலங்கள்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அவளை போல கைகால்களை அசைத்து பாடலை மழலையாய் மொழிய.

அவற்றை ரசித்துக் கொண்டே ஆடி இருந்தாள் அவளிடம் எதுவோ ஒன்று சாதாரணத்தில் இருந்து இயல்பு திரிந்து தெரிந்தது.

ஆனால் அது காண்பவர் கண்களுக்கு பெரிதாக தெரிவதில்லை.இவளுக்கு மட்டும் அது பெரும் குறையாக தோன்ற தன்னையே தனக்கு குறையாக எண்ணிக் கொண்டு வாழும் ஒரு பிறவி இவள்.

அடுத்த பாடலில் அவள் சுற்றி சுற்றி ஆடிக்கொண்டே பாட.

அமர்ந்த இடத்தில் இருந்து பிஞ்சு பிஞ்சான கைகளையும்,கால்களையும் காற்றில் வளையும் நாணலாய் அசைத்து இசைத்தனர் வருக்கால சிந்தனை சிற்பிகள்.

மற்ற வகுப்புகளை விட அவள் வகுப்பில் உற்சாகம் அதிகம் தான்!

'ஏனென்றால்!?'

மற்ற வகுப்புகளில் ஆசிரியர்கள் அல்லவா பாடம் எடுக்கின்றனர்.இவள் வகுப்பில் இவளும் மழலையாய் அல்லவா மாறுகிறாவள்.

அவள் ஓர் நீர் மகள்.

"நீர் எப்படி தான் இருக்கும் இடமறிந்து தன்னை மாற்றுமோ அப்படித்தான் அவளும்!"

சூழல் அறிந்து,எதிரில் இருக்கும் நபரின் குணம் அறிந்து நடந்துகொள்ளும் அற்புத நல்லாள்.

கைக்கடிகாரம் எப்பொழுது பன்னிரண்டு என்றாகும் என தன் கை கடிகாரத்தை பார்த்திருந்தாள் அவள்.

பள்ளி மாணவர்களுக்கு உணவு இடைவேளை பன்னிரண்டு நாற்பத்தி ஐந்து தான்.

ஆனால் மழலையருக்கும் அலுவலக வேலையாட்களுக்கும் மட்டும் உணவு இடைவேளை பன்னிரண்டு மணிக்கு என்பதால் அலுவலகத்தில் அமர்ந்து அன்றைய வேலையில் கவனம் வைப்பது போல் பாசாங்கு செய்து கொண்டே மணியை பார்க்க.

"என்னம்மா கீர்த்தனா என்ன பார்க்கற இன்னும் பத்து நிமிடம் இருக்கு சாப்பாட்டுக்கு மணி அடிக்க.அதுக்குள்ள ஸ்கூல் பொண்ணு மாதிரி எப்போ மணி அடிக்கும்னு வாட்சையே பாத்துட்டு இருக்க !"

உடன் பணிபுரியும் கோதண்டம் கிண்டல் செய்துவிட்டு நகர.

"ஐயோ! இப்படி அசிங்கபட்டியேடி கீர்த்தி" என்று தன்னை தானே கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் மணியை பார்ப்பதே 'என் கடமை' என தொடர்ந்திட.

அவளின் செயல் அங்கிருந்த பலரின் பழக்கப்பட்ட ஒன்று என்பதால்; சிரித்துக் கொண்டே தங்கள் வேலைகளை செய்தனர்.


பாடலின் இடையே "ப்ரீத்தா" என்ற அழைப்பில் இதுவரை நடந்த திவ்ய நடன கச்சேரியின் தயவால் முன்னால் சரிந்து கிடந்த கூந்தலை பின்னால் போட்டுக் கொண்டு திரும்பினாள் ப்ரீத்தா.

உணவு இடைவேளை மணி ஒலித்தது மறந்து பாடலில் மூழ்கிட.தோழியின் அழைப்பில் நேரம் உணர்ந்து.


தன்னை அழைத்த தோழி கீர்த்தனாவிற்கு 'ஒரு ஐந்து நிமிடம்' என்று கைகளை அசைத்து சைகை காண்பித்துவிட்டு;

மாணவர்களை உணவுன்ன தயார் செய்தவள் தோழியுடன் கூட்டத்தில் ஐக்கியமானாள்.

"அடியே ரித்து உனக்கு தினம் லஞ்ச் ஹவர் பெல் சௌண்டை மறக்கறதே வேலையா இருக்கு பாரு நாளைக்கு எல்லாம் நான் வந்து உன்னை கூப்பிடவே மாட்டேன்டி!"


தினம் ஒரு தகவல் போல; தினம் ஒரு புலம்பலாக கீர்த்தனா புலம்பிட.

"சாரி கீர்த்திமா இனி சீக்கிரமா பெல் அடிச்ச உடனே உன் முன்ன இருப்பேன் சரியா வாடி!"

தோழியை எப்பொழுதும் போல் சமாதானம் செய்து அழைத்து சென்றாள் அவள்.

"நாளையும் இதுவே தொடர்கதை என்பது கீர்த்தியும் அறிவாள்;
இன்றைய வாக்கு நாளைய விடுகதை என்பதை ரித்துவும் அறிவாள்!"

இருந்தும் மாறும் உலகில் மாறாது சுழலும் புவி போலே இவர்களின் நட்பும், அக்கறையும் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு குழந்தையாக "உணவு முடித்தனரா?" என்பதை சரிபார்த்து, அவர்களின் கைகளை சுத்தம் செய்ய வைத்து,

இடையில் மூலும் தகராறுகளுக்கு தடாலடி நாட்டமையாக மாறி; அவர்களை சமாதானம் செய்து,நண்பகல் நேரம் நன்றாக உறங்க செய்து.

மதியம் இரண்டரை மணிக்கு கையசைத்து வழி அனுப்பும் வரை ரித்துவின் முகத்தில் இருக்கும் புன்னகை வாட்டமே கொள்ளாது.

கீர்த்திக்கு பொறுமை என்பது எருமை மீது செய்யும் :சவாரி' என்பதால் தன் ஜாகையை அலுவலக வேலையில் நிறுத்திக் கொண்டாள்.

**********************************
அன்றைய வேலை முடிந்ததும் கூட இல்லம் செல்லாது கீர்த்திக்காக மகிழ மரத்தடியில் காத்திருந்தாள் ரித்து.

இதுவும் அன்றாட சுழற்சியே.

அவள் உணவு இடைவேளையில் காத்திருந்தாள் என்றால் இவள் மாலை நேரம் காத்திருப்பாள்.

கைகளில் ரவீந்திரநாத் தாகூரின்
'ஸ்டேரி பேர்ட்ஸ்' புத்தகம் இருக்க.

வரிகளின் பிரதிகளை வதனத்தில் காண்பித்தவாரு படித்திருந்தாள்.

"புத்தகம் சொல்லா புது உரைகள் ஏது!?" என்பது அவளின் கருத்து.

வலது கையில் புத்தகம் ஏந்தியவள் இடது கரத்தால் பக்கத்தை திருப்ப முயல, காற்றில் மரங்கள் அடைந்திட,மகிழ மரம் தன் மலரிதழை அவளின் புத்தகத்தில் உதிர்த்தது.


அவளுக்கு புத்தகத்தில் சிறு தூசி படிந்தாலும் பொறுக்காது.


புத்தகத்தை தழுவியது மலர் என்பதால்; ஏந்திழையாள் கோபம் கொள்ளாது பூவை தன் பொன் கரத்தில் எடுத்து பார்க்க.

வெள்ளையில் இதழும் காப்பி கொட்டை நிறத்தில் காம்பும் கொண்ட மலரைக் கண்ட மலரணையள் அதனை கீழே விட மனமில்லாது நாட்குறிப்பில் பதியச் செய்தாள்.

வெகு தொலைவில் இருந்து இவளின் செய்கையைக் கண்ட தலைமை ஆசிரியர் மேகலா மென்னகை மாறாது இவளின் அருகே வந்தார்.

"என்ன ரித்து இன்னைக்கும் பூ மழை பொழியுதா!?"

தினம் ஒரு பூவாய் தன் நாள் குறிப்பில் சேமிக்கும் அவளின் பழக்கத்திற்கு ஏதுவாக மலரும் மலரை இறைப்பதை கேலி செய்தார் அவர்.

"குட் ஈவெனிங் மேம்.. அப்படி எல்லாம் இல்லங்க மேம் !"

அவர் வந்ததும் கையில் இருந்த புத்தகத்தை மூடி கைபைக்குள் வைத்தவள்

காரணமில்லாது தன்னை பார்க்க வரமாட்டார் மேகலா என்பதால் அவரை பார்க்க.

பள்ளியில் விழா நேரங்கள் உற்சாகம் நிறைந்ததாக இருந்தாலும் அதைவிட வேலை பளு தூக்கலாக இருக்கும்.

மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே நின்று கனிவாய் பேசி கடின சூழலை அமைதியாய் மாற்றும் இயல்பு என்பது வெகு சிலருக்கு மட்டுமே உண்டு.

அந்த வெகு சிலரில் ஒருத்தி தான் பிரீத்தா.

அதனால் தான் தலைமை ஆசிரியர் என்ற மனதை என்பதெல்லாம் இல்லாது ரித்து இருக்கும் இடத்தை நோக்கி நேரிடையாக பேசிட வந்திருந்தார்.

பள்ளியில் வர இருக்கும் ஆண்டுவிழா பற்றியும் இந்த ஆண்டும் சிறப்பாய் செயல்படும் குழுவில் ரித்து இணைந்து கொள்ளுமாறும் வினவினார்.

அவரிடம் "சரி" என்று ஒப்புக்கொண்டு தோழியோடு விடைபெற்றாள் பிரீத்தா.

"என்னடி ரித்து ஆனுவல்டே செலிப்ரேஷனா!?"

"ஏன் உனக்கு தெரியாதா!?"

"ரைட்டு விடு.. ரித்து எனக்கு தெரிஞ்ச ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி இருக்கு அதுக்கு நீ லோகோ பண்ணிதர்றியா!?"

"கண்டிப்பா பண்றேன்டி.ஆனா எனக்கு டைம் எப்படி இருக்குன்னு பார்த்துதான் பண்ண முடியும் ஓகே வா!"

"அதெல்லாம் பார்த்துக்கலாம்.இப்போ கிறிஸ்டியை கூப்பிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட போகலாமா!?"

"போகலாம்..!ஆனால் அவளை யாரு கூப்பிடுவா?"

"அதெல்லாம் ஆல்ரெடி நாங்க பிளான் பண்ணிட்டோம்!"

"ஏன்டி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கிறது கிடையாதா!?"


"உன்னை எல்லாம் கேட்டா என்ன ஆகிறது? சின்ன பிள்ள தனமால்ல இருக்கு!"

"இருக்கும்டி இருக்கும் எருமைங்களா!"

"சரி புகழ்ச்சி பிடிக்காது. பார்லர் வந்துட்டு அதனால மாப்பு ; இத்தோட உங்க ரீலு ஸ்டாப்பு!"


"வாங்கடி வாங்கடி எங்க வராமலே போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன்!"

கிறிஸ்டி கூறிட.

"யாரு நீயா!?"

அதிர்ந்தவாரு கேட்டாள் ரித்து.

"ஆமாம் நான்தான்!"

"ஐஸுக்கு குடுக்க காசு இருக்காது ஆனா பேச்சை பாரு பேச்சை!" என்ற கீர்த்தியின் வாயை

தன் தந்தை அருள் தாஸ் கொடுத்த முழு சலவை ஐநூறு ரூபாய் தாளை கண்முன் காண்பித்து அடக்கி இருந்தாள்.

"ஏதுடி அடுச்சுட்டியா!?"

"ரித்து என்னை பார்த்தா அப்படியா இருக்கு!?"

"ச்ச..ச்ச.. நீ எல்லாம் அதுக்கும் மேலடி திருட்டு குட்டி !!"

"சொல்லுங்கடி இன்னைக்கு வேலை எப்படி போச்சு!?"

"எப்பவும் போல டீ வடையோட அமோகமா போய்டுச்சு!"
கீர்த்தி உற்சாகமாக கூற.

"பாவி அப்போ நீ இதுகாக தான் ஸ்கூலுக்கு போற அப்படி தானே!?"

"தெரிஞ்சா சரி!"

அருகே வந்து நின்ற பேரிடம்

"எனக்கு பட்டர் ஸ்காட்ச்; எனக்கு ரெட் வெல்வெட் ; எனக்கு பிளாக் கரெண்ட்!" என்று வரிசைப்படுத்த.

இன்றைய டிரீட் கிறிஸ்டி தலைமையில் அமோகமாக ஆரம்பம்.

"ஏண்டி எதுக்கு இன்னைக்கு டிரீட்டு!?"

காரணம் அறிய தோழியர் முயல.

"இல்லைடி எங்க பக்கத்து வீட்டு ஃபங்ஷன்ல ஒருத்தனை பார்த்தேன் சொன்னேனே கண்ணாடி போட்டு நல்லா ஸ்மார்ட்டா இருந்தானு!"

"ஆமாம் சொன்ன.அவனுக்கு என்ன!?"

"அவனுக்கு என்ன நான் தான் அவன்கிட்ட லவ்வாங்கி ஆகிட்டேன்!"

"அதுதான்... "

'அதுதான் தெரியுமே!' எனக் கூறவந்த கீர்த்தி பாதியில் நிறுத்தினாள்.

"என்னடி சொல்ற!?"

"ஆமாம் ரித்து!"

"பையன் நினைப்பு கண்ணுக்குள்ள வந்து நின்னு ரொம்ப தொல்லை பண்ணுது.
எங்க பக்கத்து வீட்டு அக்காகிட்ட போட்டு வாங்கினேன்.அவன் நல்ல பையனாம், நல்லா படிச்சுருக்கானாம்,ஆனா வேலை தான் என்னனு தெரியலை அவங்களுக்கு!"

"அடிப்பாவி விட்டா அவன் ஜாதகம் வரை வாங்கிடுவ போல!?"

"ச்சீ..! அதெல்லாம் வாங்கலை ஆனா அவன் ஃபோன் நம்பர் மட்டும் வாங்கினேன்"

கிறிஸ்டி பதிலில் இருவரும் மிரண்டு பார்க்க அவளோ

"விடுங்கடி அதுவாங்கி ஒரு ஆறு மாசம் இருக்கும்!"


"இன்னும் என்ன திருகு வேலை எல்லாம் பார்த்திருக்கடி!?"

"அவனும்,நானும் லவ் பண்றோம் அதை தவிர வேற எதுவும் உங்ககிட்ட மறைக்கலடி!"
என்றாலே பார்க்கலாம்.

"திருட்டு குட்டிடி நீ!!"ரித்து கூற.

"அடியே! நல்லவேளை என் பிள்ளைக்கு நாளைக்கு பேர் வைக்கிறோம்; வாங்கன்னு வந்து கூப்பிடாம இருந்தா பாரு அதுவரைக்கும் நல்லது"

கீர்த்தி கிண்டல் செய்ய.

"அப்போ நீ எல்லாம் லவ் பண்ணினா என்னடி செய்வ!?"

"நான்லாம் எதையும் யோசிக்காம உங்க முன்னாடி மட்டும் இல்ல; எங்க அம்மா அப்பா முன்னாடியே இவனைத் தான் கட்டிப்பேன்னு
சொல்லுவேன் !"

தில்லாய் கீர்த்தி கூற.


வான் தேவதை 'ததாஸ்து' என்றதுவோ அந்நேரம்


உண்மையாகவே அதுதான் நேரும் என்பது அறியாது; அவள் விளையாட்டிற்கு கூறினாள்.

அரட்டையை முடித்துக் கொண்டு கிறிஸ்டி, கீர்த்தி இருவரும் அவரவர் வாகனத்தில் வீடு செல்ல.தன்னை அழைக்க வந்த தம்பி பிரவீனுடன் இல்லம் சென்றாள் ரித்து.
 
Top