Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 4

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
பெரிய மாளிகையின் வாயில் தோரண வளைவுகள் கனகச்சிதமாக அமைந்து நம்மை வரவேற்க. இளங்கதிர் தன் பொன் ஒளியை அள்ளித் தெளிக்காது கிள்ளி தெளிக்கும் வேளை.

தோட்டத்து புற்களின் மீது நிலவு மகள் பொழிந்து சென்ற பனிக் கணைகளை எல்லாம் வெய்யோன் தன்னுள் சுமக்கும் காலை நேரம்.

உணவு மேடை மீது தன் ஆவியை வெளியிட முடியாதவாறு பாத்திரத்திற்குள் அடக்கிட.

தடுத்தாலும் அடங்காத வீரனைப் போல முண்டிக் கொண்டு வெளிவந்து நம் நாசியை துளைத்து, நாபிக் கமலம் முதல் நாளங்கள் அனைத்தையும் பரபரக்க செய்தது காலை உணவின் மணம்.

எல்லாம் அவ்வீட்டின் அன்னபூரணி, அன்பை அள்ளி தெளிக்கும் அன்பின் ஆலயம்,தெய்வீக முகம் கொண்டு கையில் சட்னி கிண்ணத்தை ஏந்தி வரும் சங்கீதாவின் கைமணம் தான்.

சங்கீதா சட்னியை ஏந்தி வருவதற்கும்; அவரது கணவர் தென்னகத்தின் பிரபல மருந்து தயாரிக்கும் 'வி.எஸ்' நிறுவனத்தின் நிறுவனர் வாகீசன் காலையில் நடக்கவிருக்கும் தொழில்முறை கூட்டத்திற்கு தேவையான கோப்புகளோடு மகன் ஆரோன் சாத்விக் உடன் கலந்துரையாடி வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

உணவறை வந்தவர் மனைவியின் முகத்தை 'அழுத்தமாய்' ஓர் நொடி ஊன்றி பார்க்க.

அதற்கு அர்த்தம்,"காலையில் இருந்து என் கண்களில் படாமல் இருந்தாயா!?" என்பதாகும்

கணவன் பார்வையின் பொருள் புரிந்த சங்கீதா அவர் அன்பில் நெகிழ்ந்து பூவாய் மலர.

அவ்வளவுதான் மனிதர் 'ஆல் அவுட்'

"சாத்வி அப்பா வாங்க சாப்படலாம்!" என்றழைத்து கணவரின் காலை உணவை கவனிக்கவே நேரம் சரியாக இருந்ததை சூசகமாய் மொழிந்து சிறு புன்னகை செய்திட.

இப்படி ஆத்மார்த்தமான அன்பை தன் பெற்றோருக்கு இடையில் கண்ட சாத்விக்

"தானும் இதுபோல் உண்மை காதலில் திளைத்து திக்குமுக்காட வேண்டும்!"
எனும் கனவினை சுமந்தான்.

மகனுக்கும்,கணவனுக்கும் சத்து நிறைந்த சிறு தானிய தோசையும்,சம்பா அரிசியில் செய்த வெண்பொங்கலும்,சட்னி,சாம்பார் என சங்கீதா பரிமாற.

"அம்மா சீக்கிரமா எனக்கு உன் பொன்னான கையால சாப்பாடை வை டைம் ஆகுது எனக்கு !"

அனைவரும் ஆற அமர பொறுமையாய் உணவருந்தும் இடத்திற்கு ஆர்ப்பாட்டமாக நுழைந்தாள் வர்ணிகா.


ஆளுக்கு கடைசியாக வந்தாலும் அலம்பல் தாங்கவில்லை அவளிடம்.

அவ்வீட்டின் அமைதிக்கு எதிராளி, அன்னை சங்கீதாவுக்கு சின்ன மாமியார், குட்டி நாத்தனார் தந்தை வாகீசனுக்கு அன்னை அவள்.

அண்ணன் ஆரோன் சாத்விக்கிற்கு குட்டி ராட்சசி,செல்ல சேட்டைக்காரி.

பகுதி நேர பகையாளியும் வர்ணிகாவே தான்.

"சின்ன வாண்டு என்ன அவ்வளவு வேலை இருக்க நாங்களே உன்னை போல அவசரபடல. நீ பார்க்கற ரெண்டும் ரெண்டும் பத்துன்னு கணக்கு எழுதற வேலைக்கு முதல் ஆளா கிளம்பிட்டு இருக்க!"

தங்கையை சீண்டும் வேலையை சீரும் சிறப்புமாக தொடங்கி சுகந்தமாக அனுபவிக்க முயன்றான் சாத்விக்.

"அப்பா கண்டிப்பா நம்ம கம்பெனிக்கு அண்ணனை நீங்க டைரக்டரா டிக்லார் பண்ணனுமா!?"

மகள் நமுட்டுப்சிரிப்புடன் கேட்கும் தோரணையே அவளின் செல்ல தந்தைக்கு பூஸ்ட் குடித்த சக்தியை கொடுத்ததோ

"ஏன்டா அப்படி சொல்ற!?" ஊக்கம் கொடுத்தார் மகளின் வார்த்தைக்கு

"இல்லை ரெண்டும் ரெண்டும் பத்துன்னு சொல்ற; இந்த மாதிரி தத்தியை போயா நம்ம கம்பெனில வைக்கணும் எதுக்கும் கொஞ்சம் இல்ல அதிகமாவே யோசிங்கப்பா!" என்றவள் தந்தை தாயின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு ஓடி இருந்தாள்.

"அடி வாலு..!" என்ற அண்ணன்காரன் உணவை மறந்து தாய் தந்தையை கவனித்தான்.

மகளின் செயலில் பூரிப்பாக சிரிக்கும் கணவனை முறைத்திருந்தார் சங்கீதா.

"என்னமா ஏன் முறைக்குற?"

"அப்பறம் என்ன? அவ என்னோட பிள்ளைய பார்த்து தத்தி சொல்லிட்டு போறா நீங்க ஒன்னுமே சொல்லாம சிரிக்கிறீங்க!" புகார் பத்திரம் வாசிக்க.

தாயின் கோபமான புகாருக்கு "தந்தை என்ன பதில் கூறுவார்!?" கவனமாக கண்டிருந்தான் சாத்விக்.

'வருங்காலத்தில் இப்படி ஒரு சூழல் தனக்கு வந்தால் சமாளிக்க தேவைப்படும்!' எனும் தொலை நோக்கு பார்வை தான் அதற்கு காரணம்.

"உன்னோட உருவத்தில் இருக்கும் என் மக மேல எப்படிமா எனக்கு கோபம் வரும் சொல்லு.சில நேரம் கண்டிக்க தோன்றும்.ஆனா அந்த முகத்துல உன் முகம் தெரியுதே எனக்கு கண்டிக்க மறந்து பிள்ளை மேல அன்புதான் வருது!"

உவகையோடு கூறி இருந்தார் மனிதர்.

"நோட் பண்ணுடா சாத்விக்கு..! நோட் பண்ணுடா சாத்விக்கு..!!" அவனுக்குள் உந்து சக்தி உந்தி தள்ள மனதிற்குள் குறிப்பெடுத்து கொண்டான்.

"அக்கா... க்கா.... எக்கா.... க்கா..." காகமாய் கரைந்தான் ரித்துவின் தம்பி பிரவீன்.

"ஏன்டா பூனை காக்காவா கரையுற!?"
அக்காள் அவளின் செல்ல பூனைக்குட்டி அவன்.முதுகலை பொறியியல் பயில்கிறான்.

"அக்கா புக் எக்சிபிஷன் வரப்போகுதுக்கா!"
மெதுவாய் உடன் பிறந்தவளிடம் பீடிகையை தொடங்கினான்.

"அதுதான் இரண்டு நாளா சொல்லிட்டு இருக்கியே அதுக்கு என்னடா இப்போ !?"

தம்பி சாதாரணமாக இவ்வாறு வந்து நிற்பவன் கிடையாது என்பதால்; அவன் எதற்காக கொக்கி போடுகிறான் என்பதை அறிவதற்காக மூத்தவள் முயல.

"இல்லக்கா இந்த டைம் அப்பாக்கிட்ட ஒரு ஐநூறு ரூபாய் அதிகமா வாங்கிடலாமாக்கா!"

பூனைக்குட்டி கடைசியில் வெளியே வந்துவிட்டது.

ஈரானை கூட காத்து விடலாம்; ஆனால், அப்பாவின் கையில் இருந்து பணத்தை பெறுவது என்பது முடியாத காரியம்.

"எதுக்குடா கேட்கற அப்பா குடுப்பாருன்னு உனக்கு இருக்க நம்பிக்கையை நான் பாராட்டுறேன்.ஆனால் எனக்கு மட்டும் திட்டு வாங்கி கொடுத்துடாதடா பூனை!"

தந்தையின் இயல்புணர்ந்து இயம்ப.

"அக்கா பிளீஸ்கா '1001 கார்ஸ் டு ட்ரீம் ஆப் டிரைவிங்' புக் வாங்கணும்கா. பிளீஜ் எல்ப் மீகா!"

குறும்பாய் கெஞ்சினான் இளவல்.

வருடா வருடம் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு ராகவன் ஒரு தொகையை பிள்ளைகளுக்கு கொடுப்பது வழக்கம்.

அவரின் கரங்களில் இருந்து புத்தகம்,படிப்பு என்றால் மட்டுமே பணத்தை பெறலாம்.

மற்றபடி உணவு, உடை எதற்கும் குறைவில்லை என்றாலும்; இதை தவிர்த்து வளரும் பிள்ளைகள் அவர்களின் தேவைக்கு கைகளில் சிறிது பணம் கொடுப்போம் எனும் எண்ணம் எல்லாம் இருக்காது.

கிழிய காத்திருக்கும் பத்து ரூபாயை நீட்டிவிட்டு பத்தாயிரம் முறை கணக்கு கேட்கும் இயல்புடையவர் மனிதர்.

மற்றவர்களிடம் மட்டுமா இப்படி என்றால் அதுதான் கிடையாது;

தினம் தான் செய்யும் செலவுகளை கூட சட்டை பையில் இருக்கும் சிறு குறிப்பேட்டில் குறித்து வைக்கும் குணம் அவருடையது.

கணக்கு பார்த்து செலவு செய்யும் நடுத்தர வர்கத்து தந்தைகளில் இவர் ஒரு வகை!

இளம் வயதில் தினக்கூலி சென்று குடும்பத்தை நிர்வகித்த தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட.

தாய்,தங்கைகள் இருவர் என்று குடும்பத்தை சுமக்க வேண்டிய வறுமையான சூழல்.

வறுமையை இளமையின் இமைகளில் சுமந்ததால் வந்த அனுபவமாக கூட இருக்கலாம்.

இந்த கலியுகத்தில் கூட பள்ளியில் சம்பளம் வாங்கிய மாலை தந்தையிடம் கொடுக்கும் மகளும்.

பகுதி நேரமாக வாகன பழுது பார்க்கும் இடத்தில் வேலை பார்த்து வார சம்பளம் வந்த உடன் தந்தையிடம் ஒப்படைக்கும் மகனும் வைக்க பெற்ற புண்ணியவான்.

அவரின் முன்பு வந்து பிள்ளைகள் இருவரும் நிற்க.

இதோ சம்பளத்தை கொடுத்துவிட்டு ஐநூறு ரூபாய் கூடுதலாய் வேண்டும் என்று கேட்க தயங்கும் பிள்ளைகளை நிமிர்ந்து பார்த்தார் கொடுத்து வைத்த மகராசன்.

தன் ஆஸ்தான இடமான வராண்டாவில் ஈஸி சேரில் அமர்ந்து காலை கதிரொளி படிந்தும் படியாது கண்ணாமூச்சி ஆடும் வேளையில் கண்களில் கண்ணாடி நிலைபெற,கைகளில் அன்றைய நாளிதழை வைத்துக் கொண்டு புரட்டியபடி இருந்தார் ராகவன்.

"அப்பா.."

தந்தையின் மனநிலை அறிய மகள் பதனமாய் அழைத்திருந்தாள்.

எல்லாம் பக்கத்தில் நின்று கைமுட்டியால் சைகை கொடுப்பதாக எண்ணி;

தன் எலும்பையே உடைக்க முயலும் தம்பியின் கைங்கரியத்தால் வலி பொறுக்காது வாயை திறந்தாள் ரித்து.

"சொல்லுமா ரித்து! என்ன காலைலயே ரெண்டு பேரும் ஒன்னா வந்து நிக்கறீங்க என்ன வேணும்!?"

கண்ணாடியை சரி செய்தவாறு மேல் கண்ணால் நோக்கினார் தான் பெற்ற செல்வங்களை.

அவர் என்னவோ மெதுவாகத் தான் தொடங்கினார்.ஆனால் 'பணம் வேண்டும்' என்று கேட்டால் தான் அவர் எவ்வாறு மாறுவார் என்பதை நம்மால அறிய இயலும்.

"இந்த டைம் புக் எக்ஸிபிஷன்க்கு ஒரு ஐநூறு ரூபாய் அதிகமா வேணும்பா!" என்று ரித்து கூறியது தான் தெரிந்தது.

அவ்வளவு தான் மனிதர் ஆரம்பித்துவிட்டார்
'ஏன்?' 'எதற்கு?' என்று ஓராயிரம் கேள்விகளை கேட்டுவிட்டு.

பிரீத்தாவிற்கு ஆயிரம்,பிரவீனுக்கு ஆயிரம் என்று ஆளுக்கு ஆயிரமாக இரண்டாயிரத்தை நீட்டிவிட்டு

சாதனையாளர் போல கரங்களை பின்னால் மடித்துக் கொண்டு வீர நடையிட்டி வீட்டிற்குள் சென்றார் அந்த மனிதருள் மாணிக்கம்.

"இந்தாடா பூனை என்னோட ஆயிரத்தையும் வச்சுக்கோ!"

இளவலுக்கு தன் பங்கு தொகையையும் கொடுத்து விட்டுக் கொடுத்தலை பகிர்ந்தாள் மூத்தவள்.

"இல்லக்கா எனக்கு வேணாம்!"

அக்காவிடம் வாங்க தயங்கினான் பிரவீன். அவனுக்குத் தான் தெரியுமே சகோதரி எழுத்தாளர் 'ராலிங்கின் ஹாரி பாட்டர்' வாங்கும் ஆசையில் இருந்தது.

"பரவாயில்லை பூனை நீ வச்சுக்கோ எப்படியும் நான் வாங்கிடுவேன்டா. புதுசா ஒரு பெரிய கம்பெனி அவங்க லோகோ டிசைன் பண்ண கேட்டு மெயில் பண்ணி இருக்காங்க சோ நோ வொரிஸ் ஓகே!" என்றவள் அவன் கைகளில் பணத்தை திணித்துவிட்டு.

"ஐயோ எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகிட்டுடா பூனை!" என ஓட்டமெடுத்தாள் ரித்து.

பிள்ளைகளின் நற்குணம் கண்டு பெருமை பொங்க கைகளில் தோசை கரண்டியை வைத்துக் கொண்டு நின்றிருந்தார் கன்னிகா.

**********************************

முக்கியமான மீட்டிங் ஒன்றிகாக விரைவாக சென்று கொண்டிருந்தான் சாத்விக்.

அவன் அறையில் இருந்து மின்தூக்கி வழியே தரை தளம் வந்தவன்,கைகடிகாரம் அணிந்து வராத தன் மடதனத்தை எண்ணி தன்னை நொந்து கொண்டான்.

கைபேசி வேறு தன் உயிரை விடும் தருவாயில் இருந்தது.

நேரம் பார்க்காது வேலையில் மூழ்கியவன் மணியை பார்க்க அதுவோ மீட்டிங்கிற்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளதை தெரிவிக்க.

இன்று காலை தான் அவசரமாக முடிவான மீட்டிங் என்பதால் உதவியாளனிடம் கூட தெரிவிக்கவில்லை.

இப்பொழுதும் அவசர அவசரமாக வந்தவன்.கைகளில் கைக்கடிகாரம் இருக்கும் ஞாபகத்தில் அதனை திருப்பி மணி பார்க்க முயன்று.

ஒரு வெண்பனி படுகையில் மோதி நின்றான்.

இவனோ," யாரது தன் அவசரம் புரியாது?" எனும் கோபத்தில் நிமிர.

அவன் கண்முன் பேந்த பேந்த முழித்து நின்றாள் அவள்.

"ஹேய் ஹு த...!" என்று கத்திக் கொண்டே நிமிர்ந்தவனுக்கு அவசரம் எல்லாம் அவசரமாய் மறந்து போக.

அவளின் பயந்த விழி கண்டு பணிந்து போனான்.

இடித்தது இவனாக இருந்தாலும் கூட,

"சாரி சார் ஹெவ் அ நைஸ் டே!" என்று நல்வாக்கு கூறி நகர.

அவள் 'தெரிந்து சொன்னாளோ!?' 'தெரியாது சொன்னாளோ!?' ஆனால் இவன் தான் நேரம் தாழ்த்தி சென்றான் என கவலையாக சென்றால்.

இவனிலும் தாமதமாய் வந்திருந்தார் அந்நபர்.

இதற்கு எல்லாம் காரணம் அவளின் பூமுகம் தான் என்ற கற்பிதம் அவனுள்.
கற்பிதம் என்றாலும் தித்திதது ஆரணனுக்கு.

தன் அலுவலக வாயிலில் தான் அவளைக் கண்டான் என்பதால்; மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் இருந்தாலும் அவளை அறியும் ஆவலில் மீண்டும் வந்திருந்தான்.

அவன் சென்றுவிட்டான் என்று சாவதானமாக இருந்த அலுவலகம் அவன் 'திடீர்' வருகையால் விழித்துக் கொள்ள.

அனைவரும் மீண்டும் பரபரப்பாக.

தன் அறைக்குள் சென்றவன் மறையும் வரை பரபரப்பு நாடகம் தொடர்ந்தது.

உள்ளே சென்று தன் உதவியாளனை அழைத்தவன் அலுவலகத்தில் புதிதாக வந்திருக்கும் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பையை கேட்க.

அவனோ "எதற்காக கேட்கின்றான்!?" எதுவும் அலுவலக வேலைகளில் குளறுபடியா எனும் எண்ணத்தோடு தன் முதலாளி கேட்கும் தகவல்களை கொண்டு வர சென்றான்.

"நவீன் நான் கேட்ட டீட்டைல் எல்லாம் எங்க?"

"பாஸ் உங்க டேபிள் மேல இருக்கு பாஸ்!" என்றவன் அங்கேயே நிற்க

"நீ எதுக்கு இங்க நிக்கிற!?"

"இல்ல பாஸ் எதும் பிரச்சனையா?"

"ஏன் அப்படி கேட்கற?"

"இல்ல பாஸ் நீங்க இப்போ ரிடன் வரமாட்டேன் சொல்லிட்டு தான் போனீங்க. ஆனா திரும்பி வந்திருக்கீங்க.வந்த உடனே இந்த ஃபைலை கேட்கறீங்களா அதுதான்!"

"அதெல்லாம் பிரச்சனை ஒன்னும் இல்ல நீ போ!" என்றவன்

"என் தேவதையை தேடிய பயணம் இது எப்படி பிரச்சனை!?" என்றாகும் மனதிற்குள் கூறினான்.

ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டே பரபரவென திருப்பியவன் ஒரு பக்கத்தில் கண்களை நிலைக்க செய்தான்.

'ஏனென்றால்!?'

அவன் தேடிய திருமகள் அங்கு அந்த பக்கத்தில் தான் புகைப்படமாய் நிலைத்திருந்தாள்.

**********************************

இரவு நேரம் தன் கைபேசியில் மெயிலை பார்த்திருந்தாள் ரித்து.

இப்பொழுது தான் தொடங்கி உள்ளாள் நிறுவனங்களின் லோகோ வடிவமைக்கும் பணியை.

சில மாதங்களாகிறது தொடங்கி.

சிறு சிறு நிறுவனங்கள் இவளை தேடி வர; நட்பு வட்டங்கள் உதவிட; பெரும் பெயர் இல்லை என்றாலும் செய்து கொடுத்த வேலையில் திருப்தி கொண்டவர்கள் தங்களுக்கு தெரிந்த சிலருக்கும் இவளின் பெயரை அறிமுகம் செய்தனர்.

அதனால் பரவலாக அறியப்படும் அளவிற்கு வந்திருக்கிறாள்.

பிறரை நேரில் பார்த்து முடிக்கும் வேலை எல்லாம் தம்பி பிரவீன் அல்லது கிறிஸ்டி மூலமே முடித்துக் கொள்வாள்.

அதற்கும் மேல் என்றால் தனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு தன் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பகிர்வாள்.

"அப்படி யாரேனும் தன் மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பி உள்ளனரா!?" எனும் சோதனையில் அவள் இருக்க.

'எஸ் த்ரீ' நிறுவனத்தின் லோகோவை மாற்ற வேண்டும் என்றும்; அதற்கு விண்ணப்பிக்குமாறும் ஒரு நபர் இவளுக்கு செய்தி பகிர்ந்திருந்தார்.

அவருக்கு 'நன்றி' சொல்லிவிட்டு பதிவு செய்ய சென்றவள் பாதியில் நிறுத்தினாள்.

'ஏனென்றால்!?'

"பள்ளியில் ஆண்டுவிழா வருகிறது அதற்கு தேவையான அனைத்தையும் முன்னின்று செய்யும் நபர்களின் குழுவில் தான் இவளும் இருக்கிறாள்!" என்பதால் நேரபற்றாக்குறை.

இப்பொழுது செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் அதில் பதிவு செய்யாது கைபேசியை வைத்தவள் உறங்கச் சென்றாள்.
 
Top