Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-11

Advertisement

praveenraj

Well-known member
Member
வீட்டின் முகப்புக் கூடத்திற்கு பரபரப்பாக வந்த கனகாவும் வைத்தியும் அங்கே நிர்மலா, சுசீந்திரன், உமா, நந்தா ஆகியோர் தத்தம் துணைகளுடன் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க,

"விஷ் யூ போத் எ ஹாப்பி வெட்டிங் அன்னிவெர்சரி அம்மாச்சி தாத்தா..." என்ற லவா அந்த கேக்கை எடுத்துக்கொண்டு வர அதற்கு ஏதுவாய் அபியும் பாரியும் டேபிளை கொண்டு வர பெரியவர்கள் இருவரும் இந்த எதிர்பாரா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

"ஏ நிம்மி உமா நீங்க எப்போடி வந்திங்க? சுசி நீயும் சொல்லவே இல்ல?" என்று இன்னும் அந்த அதிர்ச்சி மாறாமல் கனகா வினவ அருகில் நின்றிருந்த தங்கள் மருமகன்களை வைத்தி வரவேற்றார்.

"அம்மாச்சி நாங்களும் இங்க தான் இருக்கோம்..." என்றபடி மெல்லினியும் இன்னிசையும் முன்னால் வர இப்போது தான் எல்லாம் புரிந்தவராக என்றைக்கும் இல்லாமல் முன்கூட்டியே வந்த லவா மற்றும் குஷாவைப் பற்றி அவர்கள் யோசித்தனர். அது போக சொல்லிவைத்தார் போல் அனு, அபி, ஆனந்தி, ரித்து ஆகியோரும் வந்திருப்பதை அறிந்து பெரியவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி பொங்கினாலும் ஏனோ சொல்லமுடியாத ஒரு மென் சோகம் அவர்கள் இருவரையும் வாட்டியது என்னவோ உண்மை. அதை அவர்கள் காட்டும் முன்பே,

"வாங்க வாங்க முதல்ல ரெண்டு பேரும் இந்த டிரஸ் போட்டுட்டு வாங்க..." என்று பேசிவைத்தபடி தாங்கள் வாங்கியிருந்த புத்தாடையை இருவருக்கும் கொடுத்து அணிந்து வருமாறு சொல்ல இங்கே எல்லோரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தனர்.

அப்போது வெளியேறிய வைத்தியைக் கண்ட லவா,

"புது மாப்பிள்ளைக்கு..." என்று சொல்லவும்

மற்றவர்கள் அனைவரும் கோரஸாக,"பப்பப்பரே பப்பப்பரே..." என்று பாட,

"நல்ல யோகமடா..." என்று இம்முறை குஷா பாட எல்லோரும் மீண்டும் கோரஸ் பாடினார்கள். அப்போது வந்த கனகா பாட்டிக்குத் தோழியாக அனுவும் மொட்டுவும் இருபுறமாக இருந்து,"பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா கலகலப்பா அவ சிரிப்பா கதவடைப்பா..." என்று பாடி பெரியவர்கள் இருவரையும் அதிகமாக எம்பேரஸுக்கு உள்ளாக்கினார்கள்.

பிறகு அவர்கள் இருவரும் தம்பதி சகிதமாய்ச் சிறியவர்கள் கூச்சலுக்கு மத்தியில் கேக் வெட்டி தங்களுடைய பேரன் பேத்திகளுக்கு ஊட்டி திருமண நாளைக் கொண்டாடினார்கள். அதன் பின் நந்த கோபால்- சித்ரா, நிர்மலா-கோபி, சபாபதி- செல்வி என்று அனைவரும் தம்பதியாய் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற அவர்கள் அனைவர்க்கும் நிறைவான வாழ்க்கை அமையவேண்டும் என்று வாழ்த்தி பணம் கொடுத்து ஆசிர்வதித்தனர். பிறகு லவா-குஷா என்று பிள்ளைகள் ஒவ்வொருவராக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழ அவர்களையும் வாழ்த்தினார்கள்.

"என்ன தாத்தா எப்படி இருந்தது எங்க சர்ப்ரைஸ்?" என்ற அனுவுக்கு,

"நீங்கலாம் இங்க வந்ததும் நாங்க தலைகால் புரியாம சந்தோஷத்துல இருந்துட்டோம்... அதனால் நீங்க எதுக்கு வந்திருக்கீங்க எங்க திருமண நாள்னு எதைப் பத்தியும் நாங்க யோசிக்கவே இல்ல... உண்மையிலே இது எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தான்..." என்று மனம் நிறைய பூரிப்புடன் வைத்தி பதிலளித்தார்.

அப்போது சரியாக குஷாவின் போனில் வீடியோ காலில் வந்த ஜானகி தன் பெற்றோர் இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி வீடியோ காலிலே ஆசிர்வாதம் வாங்க எல்லோரும் ஒன்றாக இருக்கும் இவ்வேளையிலும் தனியாக இருக்கும் தங்கள் மூத்த மகளை எண்ணி பெற்றோர்கள் இருவருக்கும் வருத்தம் மேலோங்க அதைப் புரிந்தவனாக லவா வைத்தியிடம் இருந்து போனை கைப்பற்றி,"அப்பா எங்கம்மா?" என்று கேட்க அவரோ பதில் சொல்லாமல் கண்களால் ஜாடை காட்ட,"அவர்கிட்ட போன் கொடு..." என்றவன் வெளியே சென்று என்ன பேசினானோ மீண்டும் அலைபேசியை எடுத்து வந்தவன் தன் அம்மாச்சியிடம் கொடுக்க,"திருமண நாள் வாழ்த்துக்கள் அத்...தை.." என்று பட்டும் படாமல் சொல்லி அழைப்பைத் துண்டித்தார். ஏனோ இத்தனை வருடம் கடந்தும் தன்னிடம் பேச மறுக்கும் மருமகனை எண்ணி வைத்தியின் முகம் கவலை அடைய அதற்குள் ரித்து பசிக்கிறது என்றதும் அவர்கள் எல்லோரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் கனகா.

அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் இதில் சிறிய வருத்தம் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் கலைந்தனர். எப்போதும் ஏதாவது எடக்கு மடக்கு செய்யும் தன்னுடைய சின்ன அத்தை உமாவின் கணவரான திவாகரனே வந்திருக்கும் போது இதில் கலந்துகொள்ளாமல் விட்ட தன் பெரிய அத்தையான ஜானகியின் மீது அடக்க முடியாத கோவத்திலும் ஆத்திரத்திலும் இருந்தாள் மொட்டு. ஏனோ அவளுக்கு வந்த கோவத்திற்கு உடனே ஜானகியை அழைத்து நாலு வார்த்தையேனும் நறுக்கென்று கேட்க எண்ணி கொல்லை புறமாகச் சென்றவள் ஜானகியை அழைத்தாள்.

அதே நேரம் தங்களுடைய தந்தையைக் கட்டாயப்படுத்தி வாழ்த்து சொல்ல வைத்த லவாவின் மீதே கொலைவெறியில் இருந்த குஷாவும் அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்க,

"ஹேய் மொட்டு சொல்லுடா... எப்படி இருக்க?" என்று ஆவலுடன் பேசத் தொடங்கிய தன் அத்தையான ஜானகியிடம்,

"ஏன் அத்தை நான் தெரியாம தான் கேக்குறேன் ஒரு நல்ல நாள் அதுவுமா கூட அந்தப் பெரியவரை வருத்தப்பட வைக்காம உங்களால இருக்கவே முடியாதா? ஏன் ஒரு அரை நாள் இங்க வந்து அவரைப் பார்த்துட்டுப் போனா உங்களுக்கு என்ன குறைஞ்சிடும்?" என்று வார்த்தைகளில் அனல்பறக்கவே பேசினாள் மொட்டு.

"அது... வந்து..." என்று ஜானகி சமாளிக்க முடியாமல் இருக்க,

"உங்களுக்காக அவர் எவ்வளவு பண்ணியிருப்பாரு? குறைஞ்சது அவர் வயசுக்காவது நீங்க மதிப்பு கொடுத்தீங்களா?" என்று மொட்டு பேச அவள் கூறியதெல்லாவற்றையும் கேட்ட குஷாவிற்கு இவ்வளவு தான் என்று இல்லாமல் கோவம் வர அவளிடம் சென்றவன் அவள் வைத்திருந்த அலைபேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி,

"உன்ன யாரும்மா போன் எடுக்கச் சொன்னா? கண்டவங்களுக்கெல்லாம் நீ ஏன் பதில் சொல்லிட்டு இருக்க? நீ வை..." என்றவன் அவளை முறைத்தவாறே அலைபேசியைத் துண்டித்தான்.

"ஹே உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? அதுசரி உன்கிட்டப் போய் இதைக் கேக்குறேன் பாரு என்னைச் சொல்லணும்... படிச்சா மட்டும் போதாது கொஞ்சமாச்சும் மேன்னர்ஸ் வேணும்... உங்க குடும்பம் மாதிரி படிச்சிட்டு சுயநலவாதியா இருக்கறதுக்குப் பேர் தான் புத்திசாலிங்கனு அர்த்தமா? படிச்சு மார்க் வாங்கி வேலையில இருந்தா எல்லாம் சரியா? கொஞ்சமாச்சும் இங்கீதம் இருக்கனும்..."ன் என்ற மொட்டுவின் சொல்லில் இன்னும் கடுப்பானவன்,

"வாயை மூடு டி... பெரியவங்க கிட்ட எப்படிப் பேசணும்னு கூடத் தெரியாத நீ என்ன குறை சொல்றியா?" என்றவனுக்கு,

"அதை அப்படியே கண்ணாடி முன்னாடி உன்னைப் பார்த்தே கேட்டுக்கோ... என்னமோ சொல்லுவாங்களே மல்லாக்கப் படுத்து எச்சைத் துப்பினா அது மூஞ்சில தான் விழும்னு..." என்று அவள் பதிலுக்கு பதில் பேச ஏனோ அவன் கோவம் எல்லை மீறிச் சென்றுகொண்டிருந்தது.

"வீட்டுக்கு வந்த மருமகனை அதும் மூத்த மருமகனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத ஒரு மாமனார். அக்கா புருஷன்னு கூடப் பார்க்காம அவமானப் படுத்தின ஒரு மச்சான்... உங்க குடும்ப யோகிதை என்னனு எனக்குத் தெரியாதா? என்னையவே நேத்து ஊசியில குத்தி ரத்தக்காயம் ஏற்படுத்தினவ தானே டி நீ?" என்று இவன் கனலைக் கக்க,

"ஓ அவ்வளவு மரியாதையும் தன்மானமும் பார்க்குற நீ எதுக்கு இந்த வீட்டு வாசல் படியை மெதிச்ச எங்கம்மா சமைச்ச சாப்பாட்டை எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு சாப்பிட்ட?" என்றவள் நக்கலுடன் கூடிய சிரிப்பு ஒன்றை உதிர்க்க ஏனோ இதற்கு மேலும் இங்கே தங்குவது என்பது அவமானத்தின் உச்சம் என்று எண்ணிய குஷா விறுவிறுவென்று உள்ளே நுழைய அங்கு டைனிங் டேபிளில் எல்லோரும் சிரித்தவாறு அமர்ந்து உணவு உண்ண அவனைக் கண்ட சுசி,"ஹே குஷா நீ ஏன் சாப்பிட வரல? வா வந்து சாப்பிடு..." என்று அழைக்க,

"இல்ல மாமா அவசரமான வேலை... நான் உடனே கிளம்பனும்..." என்றவன் அதற்கு மேல் அங்கே இருக்கப்பிடிக்காமல் விறுவிறுவென்று மாடி ஏற லவாவிற்குத் தான் ஏதோ தவறாகப் பட்டது. அப்போது தான் உள்ளே நுழைந்தாள் மொட்டு. என்ன தான் ஆத்திரத்தில் வார்த்தையை விட்டிருந்தாலும் அவள் பேசியதில் அவளுக்கே உடன்பாடில்லை. அதும் போக குஷாவுடன் எப்போது சண்டை ஏற்பட்டாலும் அது முடிவில்லாமல் தொடரத் தான் செய்யுமே ஒழிய ஒருபோதும் இன்று போல் நடக்காது. இப்போது அவன் கோவித்துகொண்டுச் சென்றால் அது தன் தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்கும் வருத்தத்தைத் தான் கொடுக்கும் என்று உணர்ந்தவள் தற்போது என்ன செய்வதென்று புரியாமல் உள்ளே வந்தாள்.

அவளுடைய முக பாவங்களைக் கண்ட லவா நிச்சயம் இருவருக்குள் எதுவோ முட்டிக்கொண்டது என்றும் அதனால் தான் குஷா இவ்வளவு கோபத்துடன் உள்ளே விரைகிறான் என்றும் புரிந்து அவனும் மாடியேறினான்.

அங்கே தங்கள் அறையில் தன்னுடைய துணிகளை எல்லாம் வேகவேகமாக அடுக்கிக்கொண்டிருந்தவனைக் கண்டு,

"டேய் குஷா என்ன இது?..." என்று முடிக்கும் முன்னே,

"நான் நம்ம வீட்டுக்குப் போறேன். இனிமேல் அம்மாச்சியைப் பார்க்கணும் ஊருக்குப் போலாம்னு சொல்லிப்பாரு அப்போ இருக்கு..." என்றவனின் குரலில் எதுவோ நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று மட்டும் லவாவுக்குத் தெளிவாகவே புரிய,

"டேய் குஷா எதுனாலும் நாம நம்ம வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் டா... கொஞ்சம் பொறுமையா இரு..." என்று லவா முடிக்கும் முன்னே,

"இதுக்கு மேலயும் இந்த வீட்ல என்னால இருக்க முடியாது... அண்ட் நான் போறேன் நீ இருந்து பார்த்துட்டு வா..." என்று அவன் தன்னுடைய வேலையில் தீவிரமானான்.

அங்கே தன் அக்காவின் நடவடிக்கையில் மாற்றம் கண்ட மணவாளன் எழுந்து மொட்டுவிடம் வந்து தனியே விசாரிக்க வேறு வழியின்றி நடந்ததையெல்லாம் அவனிடம் சொன்னாள் மொட்டு.

"உன்னால கொஞ்ச நேரம் வாயை வெச்சிட்டு சும்மா இருக்க முடியாதா? அறிவே இல்லையா?" என்றவன் சற்று முன் குஷா கூறியதையும் அவன் முகத்தையும் நினைவு படுத்திப் பார்த்து,

"போச்சுப் போ... இப்போ அவர் கீழ வந்தா நிச்சயம் எல்லோரும் அவரை ரவுண்டு கட்டி காரணம் கேப்பாங்க... அவர் நடந்ததை எல்லாம் சொல்லிட்டா அப்பறோம் ஐயோ! திவா மாமா வேற சும்மாவே தைய தையனு குத்திப்பாரு... இன்னைக்கு லீவு போட்டு அவர் வந்ததே பெருசு...' என்று மணவாளன் புலம்ப,

"டேய் இதுக்கும் அவருக்கும் என்னடா சம்மந்தம்?" என்ற மொட்டுவுக்கு,

"என்ன சம்மந்தமா? நீ குஷா அத்தான் கிட்டப் பேசுனதையெல்லாம் அவர் சொன்னா அப்போ என்னையும் இப்படித் தான் உங்க பொண்ணு நெனைக்கிறாளா? என்னை என்ன சோத்துக்கு வழியில்லாம இங்க வந்திருக்கேன்னு நெனைக்கறீங்களானு காச் மூச்னு கத்துவார்... அவரைப் பத்தி தான் உனக்கு நல்லாத் தெரியுமே? போக்கா ரொம்ப நாள் கழிச்சு எல்லோரும் ஒன்னா வந்திருக்காங்க இப்போ போய் இப்படிப் பண்ணிடையே?" என்று அடுத்து நடக்கவிருப்பதை மணவாளன் எடுத்துரைக்க உண்மையில் இப்போது தான் மொட்டுவிற்கு தன் தவறு புரிந்தது. இருவரும் பயந்தபடியே மாடிப்படிகளைப் பார்க்க அங்கே அவர்களின் கதவு திறக்கப்பட்டது.

மேலே லவா குஷாவிடம் எவ்வளவோ சொல்லியும் அதையெல்லாம் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. அது போக தற்போது என்ன செய்யவேண்டும் என்று கூட லவாவிற்குத் தெரியவில்லை. அவனுடன் தானும் செல்வதா இல்லை அவனை மட்டும் அனுப்புவதா என்றவன் எப்படியிருந்தாலும் இன்று மாலை அவர்கள் புறப்பட முடிவெடுத்திருந்த காரணத்தால் லவாவும் கிளம்புவதற்கு ஏதுவாய் கீழே இறங்கினான்.

அவர்கள் இருவரின் கையிலிருக்கும் பைகளைக் கண்டதும் மணவாளன் மொட்டுவைப் பார்க்க அந்த அறையில் இன்னும் சொல்லப்போனால் இந்த வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். சுசீந்திரனுக்கு எப்போது இங்கு வந்தாலும் சிறு வயதில் தான் ஓடியாடிய தோட்டத்தைப் பார்க்க வேண்டி சென்றுவிடுவார். இன்றும் அவர் செல்ல அவருடனே மற்றவர்களும் சென்றிருந்தனர். குஷா உடனே செல்ல வேண்டும் என்று சொன்னதில் பிள்ளைகள் வருத்தமடைய அவனை சமாதானம் செய்வதாகச் சொல்லியே லவாவும் மேலே வந்துவிட அந்த தைரியத்தில் அவர்களும் தோட்டத்திற்குச் சென்று விட்டனர்.

மணவாளன் தான் அவர்களிடம் வந்து,"அத்தான் கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க... அக்கா பேசுனத்துக்கு நான் மன்னிப்பு கேக்குறேன்... ப்ளீஸ் இப்படி பாதியில போகாதீங்க..." என்று சொல்ல அவனைத் துளியும் கண்டுகொள்ளாமல் குஷா காரை நோக்கிச் சென்றான். மொட்டு தற்போது லவாவிடம் வந்து,

"சாரி லவா... இந்த முறை தப்பு முழுக்க என் மேல தான்... நான் தான் பேசக் கூடாததெல்லாம் பேசிட்டேன்... இன்னைக்கு சாயங்காலம் வரை இருப்பதாகத் தானே சொன்ன? அதுபோக ரொம்ப வருஷம் கழிச்சு நாம எல்லோரும் மீட் பண்ணியிருக்கோம்... கொஞ்சம் நீ அவன் கிட்டப் பேசு லவா... நான் வேணுனா சாரி கூடக் கேக்குறேன்..." என்று மொட்டு சொல்ல,

"உங்களுக்குள்ள அப்படி என்ன தான் ஈகோவோ தெரியல... ஆனா ஒவ்வொரு முறை இங்க சந்தோசமா வந்தாலும் போகும் போது உங்க நடவடிக்கையால் நான் ரொம்ப அப்செட் ஆகிடுவேன்..." என்று சொன்னவன்,

"இப்போ நான் முடிவெடுக்க வேண்டிய இடத்துல இல்ல... அவனுக்கு நாங்க சனிக்கிழமை இங்க வந்ததிலே உடன்பாடில்ல... இப்போ என்னால எதுவும் பேச முடியாது..." என்றவன் அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் செல்ல மொட்டு தான் என்ன செய்வதென்று குழம்ப தோட்டத்தின் பக்கம் நிறுத்தியிருந்த காரை குஷா எடுக்க அப்போது தான் அதைக் கவனித்த இன்னிசை,

"அம்மா அண்ணாங்க உண்மையாவே கிளம்பறாங்க மா..." என்று தன் அன்னையான உமாவிடம் தெரிவிக்க அதைக் கண்டு எல்லோரும் அங்கே வந்தார்கள்.

"என்ன குஷா இது? இப்போ போனா மட்டும் நீ உன் காலேஜுக்கு போக முடியுமா என்ன? நீ சென்னை போகவே நைட் ஆகிடுமில்ல?" என்ற அனுவிற்கு,

"இல்ல அனு ஒரு முக்கியமான வேலை... சாரி" என்று காரை ரிவர்ஸ் எடுக்க அப்போது வந்த நந்தாவும் சுசியும் என்ன சொல்வதென்று புரியாமல் இருந்தார்கள்.

"அம்மாச்சி எங்க? கூப்பிடுங்க சொல்லிட்டுப் போறோம்..." என்று குஷா சொல்ல அங்கே வந்தான் லவா.

"கண்ணா நீ இன்னும் சாப்பிடக் கூட இல்லையே?" என்று கவலைப்பட்ட சித்ராவிடம்,

"பரவாயில்லை அத்தை இன்னொரு முறை வந்தா சாப்பிடுக்கலாம்..." என்று போறபோக்கில் சொல்வதைப் போல் எல்லோருக்கும் தெரிந்தாலும் இனி மேல் இந்த வீட்டிற்கு தான் வரவேண்டிய சூழ்நிலை ஒன்று வந்தால் அதைப் பற்றி அப்போது யோசிக்கலாம் என்ற பொருளில் தான் அதை குஷா சொன்னான் என்று அங்கே நின்றுகொண்டிருந்த லவா மற்றும் மொட்டுவிற்கு மட்டுமே புரிந்தது.

மீண்டும் சுசீந்திரனும் செல்வியும் அவனிடம் மன்றாட,"ஐயோ மாமா அத்தை... நீங்க ரெண்டு பேரும் இப்படிக் கேக்குறது எனக்கு என்னவோ போல இருக்கு... ப்ளீஸ் எனக்காகக் கெஞ்சாதீங்க... நான் ஒரு மாதிரி ஃபீல் பண்றேன்..." என்று பேசும் பொழுது தான் அங்கே பதறியவாறு வந்த சபாபதி,"அண்ணா அப்பா... அப்பா..." என்று குழற,

"என்ன சபா சொல்ற? அப்பாக்கு என்ன ஆச்சு?" என்று நந்தா வினவ இதுவரை இருந்த சூழல் முற்றிலும் மாறி எல்லோருக்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ள,

"என்னன்னு தெரியில அண்ணா நல்லா தான் பேசிட்டு வந்தார்... திடீர்னு மயங்கிட்டாரு... நானும் தண்ணீ தெளிச்சேன் ஆனா எழல..." என்று சொல்ல லவா குஷா இருவரும் எல்லோரைக் காட்டிலும் வேகமாக ஓட அங்கே கனகா பாட்டி அவரை எழுப்ப முயன்று அவர் எழததால் அழுதுகொண்டிருக்க லவாவும் குஷாவும் அவரைப் பிடித்து தூக்க ஏனோ பயத்தில் குஷா தான் அவர் நாடியைப் பிடித்துப்பார்த்தான். அது துடிக்கவும் தான் நிம்மதி அடைந்தவன் துரிதமாக அவரை அருகிலிருக்கும் க்ளினிற்குக்கு அழைத்துச் சென்றனர்.

வெளியில் அனைவரும் தங்களுடைய பதற்றத்தை எல்லாம் மறைத்து ஒருவர் மற்றொருவருக்காக நார்மலாக இருப்பதாய்க் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்கள் அனைவர்க்கும் பெரிய பீதி இருந்தது உண்மை. மற்ற நாளில் இவ்வாறு நடந்தாலே அவ்வளவு பதற்றம் அடைபவர்களுக்கு அவருடைய திருமணநாளில் இவ்வாறு நிகழ்ந்தது பெரும் அச்சத்தைக் கொடுத்தது.

அங்கே அழ ஆரமித்த அனு தற்போது வரை அழுகையை நிறுத்தாமல் குஷாவின் தோளில் சாய்ந்தவாறே இருக்க அவளைத் தேற்றினான் குஷா.

"அதெல்லாம் ஒன்னுமில்ல டா... தாத்தாக்கு எதும் ஆகாது..." என்று அவளுக்கு ஆறுதல் சொல்வதைப்போல தனக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டான்.

"இல்ல குஷா... என் அம்மாச்சி அன்னைக்கே சொல்லுச்சு... இந்த மாதிரி எல்லாம் கொண்டாட வேண்டாம்... இதுவே கண் திருஷ்டியா மாறிடும்னு என்னென்னவோ சொன்னாங்க. நான் தான் அதெல்லாம் ஒன்னுமில்லைனு அதை கிண்டல் பண்ணேன்..." என்று அனு கவலைகொள்ள,

"ஹேய் அவர் என்ன நம்மை மாதிரி பிஸ்சா பர்கர் எல்லாம் சாப்பிட்டு வளர்ந்தவரா? இந்த வயசிலும் அவருக்கு சுகர் பிபி எதுவும் கிடையாது தெரியுமா? அண்ட் நான் அவரோட பல்ஸ் பாத்தேன்..." என்று குஷா சொல்ல அங்கே இதே போல் மொட்டுவை ஆறுதல் செய்துகொண்டிருந்தான் லவா.

சில நிமிடங்களில் டாக்டர் வெளியேற எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

"ஹே எதுக்கு இவ்வளவு கூட்டம்? அண்ட் பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல. பிபி தான் கொஞ்சம் ஷூட் அப் ஆகிடுச்சு. எதையோ எண்ணி குழம்பியிருக்காரு... மத்தபடி ஹி இஸ் பெர்பெக்ட்ல்லி ஆல் ரைட். ட்ரிப்ஸ் போட்டிருக்கேன் கொஞ்ச நேரத்துல அவரே எழுந்திடுவாரு..." என்று அவர் செல்ல அப்போது தான் எல்லோருக்கும் உயிரே வந்தது. அதேநேரம் இவ்வளவு பிபி ஏறும் அளவிற்கு அவர் என்ன நினைத்திருப்பார் என்று யோசிக்கையிலே அதற்கானக் காரணமும் அவர்களுக்கு விளங்கியது. பின்னே தங்கள் அனைவரையும் அவர் சமமாகவே பாவித்தாலும் அவருக்கு தன் மூத்த மகளான ஜானகிதேவி என்றால் எவ்வளவு விருப்பம் என்று அறியாதவர்களா அவர்கள்? எல்லோரும் கூடியிருந்தாலும் அவர் மட்டும் இதில் இல்லை என்பதால் காலையில் தங்கள் எல்லோரையும் பார்த்த மாத்திரமே அந்தச் சோகம் அவரை ஆட்கொண்டது என்பதை அவர்களும் கவனித்தார்களே! அது போக நடந்த பழைய சம்பவங்கள் அவரைத் தாக்கியிருக்கும் என்றும் யோசித்து அமர்ந்திருக்க ஏனோ மொட்டுவிற்கு தன் அத்தை மாமாவின் மீதிருந்த அந்தக் கோவம் தற்போது பல மடங்காக உயர்ந்திருந்தது.

பிறகு கண் விழித்தவரை எல்லோரும் சுற்றி நின்று பார்க்க அதிலே அவர்களின் பயத்தை அறிந்தவர் அழும் அனுவைப் பார்த்து,"ஹே பிள்ளை எதுக்கு இப்போ கண்ணைக் கசக்குற? உன் கொழந்தையெலாம் பார்க்காம நான் போகமாட்டேன்..." என்று சிரிக்க ஏனோ மற்ற யாருக்கும் அதில் சிரிப்பு வரவில்லை.

"ஏய்யா நந்தா வீட்டுக்குப் போலாமயா..." என்றவருக்கு,

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டுப் போலாம்..." என்ற நிர்மலா மேற்கொண்டு அவரைப் பேசவிடாமல் அவருக்கு குடிக்க ஜூஸ் கொடுக்க அவரை வீட்டிற்கு டிஸ்சார்ச் செய்து கூட்டிவரும் பொழுது மணி நான்கை நெருங்கியிருந்தது.

அதன் பின் எல்லோரும் சாப்பிட நிர்மலாவின் வீட்டுக்காரருக்கம் சுசீந்திரனுக்கும் தங்கள் அலுவலகத்திலிருந்து அழைப்பு வர அதை உணர்ந்த வைத்தி தன் மகள்கள் மருமகன்கள் மகன்கள் மருமகள்களை அழைத்து,

"எனக்கு ஒன்னுமில்ல... நான் நல்லா இருக்கேன். நீங்க எல்லோரும் கவலை படாம அவங்க அவங்க ஜோலியை போய்ப் பாருங்க... என்னால உங்க வேலை தொந்தரவு அடையக்கூடாது..." என்று சொல்ல மறுத்தவர்களையும் கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தார் வைத்தி.

ஏனோ பிள்ளைகளுக்குத் தான் இங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் இருக்க அதைப் புரிந்து கொண்ட அவர்களின் பெற்றோர்களும்,"ரித்து உனக்கு மட்டும் ஸ்கூல் இருக்கு... அதும் அனுவல் எக்ஸாம்ஸ்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நீ வா நாம ஊருக்குப் போலாம்..." என்று செல்வி அழைக்க ஏனோ அவன் மட்டும் செல்வதால் அவன் கண்கள் கலங்கியது. அதைக் கண்டு கனகாவும் வருந்த,

"சித்தி நாங்களும் காலையிலே கிளம்பிடுவோம். எங்களுக்கு நாளைக்கு வேலை இருக்கு. என்ன ரெண்டு மணிநேர ட்ராவலிங் தானே? காலையில ஏழு மணிக்கெல்லாம் அவனை வீட்ல விட்டுடுறோம்... போதுமா?" என்று அனு கேட்க அவளுடன் அனைவரும் வேண்டி அப்படியே தங்கள் திவா மாமாவிடம் பேசி இன்னிசையையும் தாங்களே விட்டுவிடுவதாகச் சொல்லி பெரியவர்களை மட்டும் அங்கிருந்து பேக் அப் செய்வதற்குள் அவர்களுக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

நிர்மலா, சுசி, உமா, சபா ஆகிய நால்வரும் முறையே சமயபுரம், திருச்சி, லால்குடி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார்கள். இதற்கு நடுவில் இன்னொரு களேபரம் நடந்திருந்தது. ஆனால் அது லவாவுக்கும் மொட்டுவுக்கும் மட்டுமே தெரியும். மாலை எல்லோரும் உணவுண்ண குஷா மட்டும் சாப்பிடாமல் அறைக்குச் சென்றான். லவா காரணம் புரியாமல் விழிக்க தான் சொன்ன வார்த்தையின் காரணமாகத் தான் குஷா சாப்பிடாமல் இருக்கிறான் என்று மொட்டுவுக்கு வருத்தமாக இருந்தது.

மாலை எட்டு மணிக்கு அனைவரும் டிவி பார்க்க,"மித்ரோன் ஹமாரா தேஷ் கே..." என்று தன்னுடைய உரையை ஆரமித்த பாரத பிரதமர் இன்று நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்து ஏப்ரல் பதினான்கு வரை அடுத்த இருபத்தி ஒரு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட ஏனோ குஷா ஒருவனைத் தவிர்த்து மற்ற பிள்ளைகள் எல்லோரும் ஆரவாரமிட்டனர். மணியைப் பார்த்தவன் அது ஒன்பதை நெருங்கியிருக்க இந்நேரம் புறப்பட்டால் கூட மூன்று மணிநேரத்தில் ஊருக்குச் சென்று விடலாம் என்று எண்ண மாறாக லவாவோ அடுத்த இருபத்தியொரு நாட்களை இங்கு எவ்வாறு செலவிடலாம் என்று யோசனையில் இருந்தான்.(நேரம் கைகூடும்...)
 
Last edited:
ஹயய்யோ அந்த நாளை மறக்க முடியுமா.... அப்போ ஆரம்பிச்சது மகராசன் எந்த நேரத்துல அப்புடி பேச ஆரம்பிச்சாரோ இன்னும் அது முடிய மாட்டேங்குது ????

இந்த மொட்டுவையும் குஷாவையும் நேரா பாத்துக்க முடியாதபடி வச்சா நீ சூப்பரா என்ஜாய் பண்ணலாம் லவா ???
ஆனா என்ன லாக் டவுன் தான் 21 நாளுல முடியாது :p :p :p
 
திருமண நாள் வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி. மொட்டு மேல நான் கோவமா இருக்கேன். அதெப்படி அவ ஜானுமாவ திட்டலாம். கெட் வெல் சூன் தாத்தா. அதான பார்த்தேன் என்ன ரைட்டர் ஜீ நாள் கிழமை எல்லாம் ரெம்ப டீடெய்ல்டா எழுதுறாங்களேன்னு இப்பதான் பரியுது எதுக்குனு. அப்ப போட்ட லாக்டவுன்தான் நடுல கொஞ்சம் கேப் விட்டு இப்ப வரை தொடருது. லவா இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆசை இருக்க கூடாது கூட உன் அருமை தம்பியும் அருமை தோழியும் இருக்குறப்ப எப்படி நீ ஹேப்பியா இருப்ப. குஷா அண்ட் மொட்டு கல்யாணத்துக்கு இந்த லாக்டவுன்தான் காரணமா இல்ல அங்கங்க ஹிடன் ஸீன்ஸ் இருக்கா எபி???????
 
Grandchildren's arrange panni anniversary celebrate panrathula irukura happiness a vida vera enna venum , Lava appa ivvalavu kovam irukkuthunna yetho big reason irukkaa, Mottum thaan periyavangalukku respect kodukkakalaye, Janaki varanumnaa avanga husbandum varanume, atha yen Mottu purinchikala," naavinaal sutta vadu' ithuthaan Mottu pesanathula mindla varuthu, enna kovam irunthaalum vaarthaiya vitra koodaathu, amaithiyaa poirukkalaam, ipa athanaala pala pinvilaivuhal varum polaye, ammadi.. Kushakku kovamum kannu mannu theriyama varumo, Mottu un paadu thindaatamthaan,ji....Bp illathavangalukku eduthavudanaye shoot up ahi unconscious ahara alavukku? intha lockdown nenacha enakku thaan Bp shoot up ahuthu, so, intha nerathula appadi enna nadanthuchu marriage ahara maathiri, naane sollikiraen wait and read
 
ஹயய்யோ அந்த நாளை மறக்க முடியுமா.... அப்போ ஆரம்பிச்சது மகராசன் எந்த நேரத்துல அப்புடி பேச ஆரம்பிச்சாரோ இன்னும் அது முடிய மாட்டேங்குது ????

இந்த மொட்டுவையும் குஷாவையும் நேரா பாத்துக்க முடியாதபடி வச்சா நீ சூப்பரா என்ஜாய் பண்ணலாம் லவா ???
ஆனா என்ன லாக் டவுன் தான் 21 நாளுல முடியாது :p :p :p
அதே அதே அந்த வாய் முகூர்த்தம் அப்படி... ஹா ஹா அது தான் முடியாதே? எஸ் எஸ் சொல்றேன் நன்றி?
 
திருமண நாள் வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி. மொட்டு மேல நான் கோவமா இருக்கேன். அதெப்படி அவ ஜானுமாவ திட்டலாம். கெட் வெல் சூன் தாத்தா. அதான பார்த்தேன் என்ன ரைட்டர் ஜீ நாள் கிழமை எல்லாம் ரெம்ப டீடெய்ல்டா எழுதுறாங்களேன்னு இப்பதான் பரியுது எதுக்குனு. அப்ப போட்ட லாக்டவுன்தான் நடுல கொஞ்சம் கேப் விட்டு இப்ப வரை தொடருது. லவா இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆசை இருக்க கூடாது கூட உன் அருமை தம்பியும் அருமை தோழியும் இருக்குறப்ப எப்படி நீ ஹேப்பியா இருப்ப. குஷா அண்ட் மொட்டு கல்யாணத்துக்கு இந்த லாக்டவுன்தான் காரணமா இல்ல அங்கங்க ஹிடன் ஸீன்ஸ் இருக்கா எபி???????
ஹா ஹா... எல்லோருக்கும் ஒவ்வொரு எண்ணம்... மொட்டு பார்வையில் ஜானு selfish... அதே அதே பின்ன கதையில நாள பின்ன லாஜிக் இல்லைனு யாரும் குறை சொல்ல கூடாதில்லை? அதே அதே கொஞ்சம் fun கொஞ்சம் சீரியஸ்னு போகும்... சொல்றேன் நன்றி?
 
Top