Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-18

Advertisement

இப்படி குடும்பத்துலயேபொறாமை படுறவங்களும் கெடுதல் நினைக்குறவங்களும் இருந்தா வெளி ஆளுங்களை என்ன சொல்ல??? ரகுப்பா அப்படி இருக்கிறதுல தப்பே இல்லை. மொட்டுக்கு அவ தாத்தா மட்டும்தான் கண்ணுக்கு தெரியுறாங்க போல. எபி????
எல்லாக் குடும்பத்துலையும் கண்டிப்பா அப்படி ஒரு எட்டப்பன் இருக்க தான் செய்யுறாங்க... நான் பார்த்த வரை? எஸ் அவளுக்கும் நடந்தது முழுவதும் தெரியாது... நன்றி??
 
Mottu ku naa support pana Matta... Vaidhi Thatha ena seiya mudiyum... Nandha thaane thappu senjan and manikalam... Kusha kobapadarathu neyayam thn. But 25 yrs ah va kobam irukanum...
Relation kula thn neraiya potti Poramai irukum polaiyae
கண்டிப்பா வைத்தியின் ஆசை நிறைவேறும்... எஸ் வைத்தியின் நிலை அதுவே... அவரிடம் பேசவும் கூட ரகு தயாராக இல்லை... பட்ட அவமானம் அப்படி அவ்வளவு சீக்கிரம் மறக்காதே? கண்டிப்பா... அவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்? நன்றி??
 
கண்டிப்பா 'கை'ப்பிள்ளைங்க மேல எப்பயும் பாசம் ஜாஸ்தி தான்...? ரகுவிற்கு அதான் ஜானு குடும்பத்தின் மீது கோவம்... நந்தா குழியில் விழுந்துவிட்டார். எஸ்... நன்றி? கை செமயா வலிச்சிருக்குமே? இல்லையா??
Light pain thaan,no fever
 
நீண்ட மௌனம் ஆட்சி செய்ய பிறகு கனகா தான் லவாவின் தலையைத் தொட்டுப் பார்த்து,"போய்யா போய் தலை துவட்டு... எம்மா சித்ரா கொஞ்சம் ஆலாத்தி கரை... திருஷ்டி எதாவது இருக்கப்போகுது எல்லாம் கழியட்டும்..." என்றவாறு சித்ராவை உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல குஷா லவாவைக் கூட்டிச் சென்றான். அவனோடு எல்லோரும் சென்று விட மொட்டு மட்டும் அங்கேயே தனித்து விடப்பட்டிருந்தாள். அவள் உள்ளமோ இன்னும் சற்று முன் நிகழ்ந்த நிகழ்வில் இருந்து வெளியே வரவில்லை. இந்த யோசனையில் இருந்தவளுக்கு தன்னுடைய கன்னத்தின் வலி கூட பெரியதாகப் படவில்லை. நந்தா அவளை முறைத்து விட்டு,"எதெதுல விளையாடணும்னு உனக்கு ஒரு விவஸ்தையே இல்லையா?" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் பேத்தியைக் காணப் பொறுக்காமல் அவளிடம் சென்ற வைத்தி,
"ஏன்த்தா ரொம்ப வலிக்குதா?" என்று ஆதுரமாக அவள் கன்னத்தை வருடியவர்,
"அவன் பண்ணதுக்காக இந்த தாத்தா உன்கிட்ட மன்னிப்பு கேக்குறேன் கண்ணம்மா... இந்தப் பிரச்சனையை இதோட விட்டுடலாம்னு நான் நெனைக்... கி... றேன்..." என்று இறுதியில் தயக்கத்துடன் அவளைப் பார்க்க அவருடைய முகத்தை வைத்தே அவரின் மனதை அறிந்துகொண்டவள்,
"இந்த வாட்டி தப்பு முழுக்க என் மேல தான் தாத்தா... அண்ட் தப்பு பண்ணது யாரா இருந்தாலும் அவங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு சின்ன வயசுல நீங்க தானே சொன்னிங்க? அதான் கிடைச்சிடுச்சி..." என்று சிரித்தவள் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். பொதுவாகவே பிள்ளைகளை முடிந்தவளுக்கு அடிக்காமல் அன்பாக வளர்த்த வேண்டும் என்பது வைத்தியின் எண்ணம். அதிலும் மொட்டு என்றால் அவருக்கு தனி பிரியம் என்பதால் சிறுவயதிலிருந்து அவள் செய்யும் சிறு சிறு குறும்பு, அரைகுறை படிப்பு முதலிய எல்லாவற்றுக்கும் நந்தாவிடம் இருந்து வரும் அடிகளை எல்லாம் தடுத்து அவளுக்கு அரணாக இருந்தவர் தான் வைத்தி. அவள் வயதிற்கு வந்த பிறகு இதுவரை யாரும் அவளை அடித்ததே இல்லை. ஏனோ வைத்தியின் எண்ணமெல்லாம் எங்கெங்கோ சென்று வந்தது.
உள்ளே வீடு மயனா அமைதியாக இருந்தது. அபி, பாரி, இசை முதலிய எல்லோரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
மேலே லவா உடைமாற்றி அமர்ந்திருக்க குஷாவோ இன்னும் அந்தக் கோவம் அடங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தான். அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்த அனுவோ சகோதரர்கள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தபடி இருக்க,
"என்ன இருந்தாலும் நீ அவளை அடிச்சிருக்க கூடாது குஷா..." என்று லவா முடிக்கும் முன்னே,
"ஆமா அவ பண்ண காரியத்துக்கு அவளை வேணுனா 'பாரத ரத்னா'வுக்கு ரெகமெண்ட் பண்ணலாமா?" என்று கடுப்புடன் குஷா கேட்ட தொனியில் ஏனோ தன்னையும் அறியாமல் சிரித்து வைத்தான் லவா.
"சிரிக்காத எனக்கு எரிச்சலா இருக்கு... இப்போ கூட யாராச்சும் அவளை ஏன் இப்படிப் பண்ணணு ஒரு வார்த்தை கேட்டாங்களா? கேட்க மாட்டாங்க... ஏன்னா இந்தக் குடும்பத்துக்கு என்னைக்குமே நாமன்னா ஒரு இளக்காரம் தான் டா..." என்று கேட்ட குஷாவின் வார்த்தையில் அத்தனை வெறுப்பு இருந்தது.
லவா அனுவிடம் சமிக்ஞை செய்ய,"ஏன் குஷா இப்படிப் பேசுற? ஏன் எங்க அப்பா உங்களை அப்படியா நெனைக்கறார்? அதும் இல்லமா தாத்தாவும் அப்பத்தாவும் அப்படி நெனைப்பாங்களா?" என்றதும்,
"ஒழுங்கா அன்னைக்கு ஈவினிங்கே ஊருக்குக் கிளம்பியிருக்கணும்... எல்லாம் என் நேரம்..." என்று தலையில் அடித்துக்கொண்டான்.
"நீ மொட்டு மேல இருக்குற தனிப்பட்ட வெறுப்பை இதுல கொண்டு வராத குஷா..." என்று முடிக்கும் முன்னே,
"ஓ அப்படியா... இரு இப்போவே அப்பா அம்மாகிட்ட நடந்ததை எல்லாம் சொல்றேன்..." என்று தன்னுடைய அலைபேசியை குஷா எடுக்க அதை வெடுக்கென்று பிடுங்கிய அனு,
"சின்ன பசங்க மாதிரி நடந்துக்காத குஷா..." என்று சொல்ல,
"உங்களுக்கெல்லாம் இதோட சீரியஸ்னெஸ் எதுவும் தெரியல இல்ல? அவளுக்கு தான் எதுவும் தெரியாது டேய் லவா உனக்குக்குமா தெரியல?" என்று குஷா முறைக்க,
"உனக்காக உனக்கு இருக்கும் இந்தப் பிரச்சனைக்காக நம்ம அம்மா அப்பா எவ்வளவு ஃபீல் பண்ணியிருக்காங்கனு உனக்குத் தெரியுமோ இல்லையோ எனக்கு நல்லாத் தெரியும்..." என்று குஷா நிறுத்த அங்கே மீண்டும் அமைதி குடிகொண்டது.
கீழே வைத்தி, நந்தா, கனகா ஆகியோர் கடந்த கால சம்பவங்களை எல்லாம் அசைபோட்டனர்.
ஜானகி தன்னுடைய விருப்பப்படி பி.காம் முடித்து அடுத்து எம்.காம் படிக்க வேண்டும் என்று அதற்காகக் காத்திருக்க வைத்தியும் மகளின் கனவுகளுக்கு தடையேதும் போடாமல் இருந்தார். வைத்தியலிங்கத்தின் குடும்பத்தில் அவர் ஒருவரே அக்காலத்தில் அரசாங்க வேலையில் இருந்தார். அவருடைய இரண்டு அண்ணன்களும் தம்பியும் தங்கள் தந்தை செய்துவந்த விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வந்தார்கள். வைத்தியலிங்கத்தின் மூத்த சகோதரர் வேலாயுதம் தன்னுடைய உழைப்பால் முன்னேறி தம் பிள்ளைகளுடன் நன்றாகவே வாழ்ந்து வந்தார். அவருடைய இரண்டாவது அண்ணனான குமாரசாமிக்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் வைத்தியலிங்கத்தின் மகளான ஜானகியை தன்னுடைய சொந்த மகள் போல் பாவித்து வந்தார். அதும் போக வைத்தி வேலையில் இருந்ததால் அவருடைய பாகத்தையும் குமாரசாமியே உழுதுகொண்டு இருந்தார். இதில் ஏனோ வைத்தியின் இளைய சகோதரனான சுப்பிரமணிக்கு சொல்லமுடியாத கவலை இருந்தது. அதை கவலை என்று மட்டும் சொல்லாமல் பொறாமை என்றும் சொல்லலாம். இந்த நேரத்தில் தான் வைத்தி நந்தாவுக்குப் பிறகு பிறந்த தன் மகனான சுசீந்திரனை குமாரசாமிக்கு தத்து கொடுத்துவிட அதில் ஏனோ தாங்க முடியாத வன்மம் கொண்டார் சுப்பிரமணி.
இது போக சிறுவயதில் இருந்து ஜானகிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும் சுப்பிரமணியை நிம்மதி இழக்கச் செய்தது. பின்னே அக்காலத்தில் பெண்களை பள்ளி முடிந்ததும் திருமணம் செய்து கொடுப்பது தானே வழக்கம். இவரோ புதியதாக ஜானகியை மேற்கொண்டு படிக்க அனுமதித்தது அவருக்குள் கிலி ஏற்படுத்தியது. எங்கே நாளை இதைப்பார்த்து தன் மகளும் படிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன ஆவது என்று கலங்கினார்!
இந்தச் சமயத்தில் தான் எதிர்பாரா விதமாக குமாரசாமியும் அவருடைய மனைவியும் அடுத்தடுத்து தவறிவிட சுசீந்திரன் மீண்டும் தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பில் வளர்ந்தார். ஆனால் சுப்பிரமணிக்கு இதிலில்லை வருத்தம். அவருடைய வருத்தமெல்லாம் தன் அண்ணனுடைய(குமாரசாமி) சொத்தும் நிலமும் அவருக்கடுத்து சுசீந்திரன் பெயருக்கு மாறியதில் தான். இதில் தன்னுடைய மூத்த அண்ணனான வேலாயுதத்துடன் இணைத்து எப்படியாவது அதில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர் திட்டமிட வேலாயுதமோ இதற்கு ஒத்துழைக்காமல்,
"ஆயிரம் இருந்தாலும் சுசி தான் குமாருக்கு ஒரு மகனா இருந்து எல்லாக் காரியமும் செஞ்சான். அதனால் இதை அவன் அனுபவிப்பதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்ல..." என்று சொல்லிவிட ஏனோ இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் அதற்காக இதை எதிர்த்து கேள்வி கேட்கவும் முடியாமல் போக தன்னுடைய அண்ணனாக பார்க்கவேண்டியவரை ஒரு பங்காளியாகவே பார்த்து வெதும்பிக் கொண்டிருந்தார் சுப்பிரமணி.
இதையெல்லாம் ஓரளவுக்கு வைத்தியும் யூகித்திருந்தாலும் காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும் என்று அவர் கடந்து சென்றார். ஆனால் இந்தக் குடும்பத்தில் சுப்ரமணியுடன் ஒட்டி உறவாடும் ஒரே நபர் என்றால் அது நந்தகோபால் தான். நந்தாவுக்கு சிறு வயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் போக அப்போதே விவசாயத்திற்குள் நுழைந்துவிட்டார். ஆனால் சுசி, சபாபதி ஆகிய இருவரும் தங்கள் தந்தையின் அறிவுரையில் நன்கு படித்து இன்று ஆளுக்கொரு வேலையில் இருக்கிறார்கள்.
தன் தம்பியின் எண்ணம் அவ்வளவு நல்லதாக இல்லை என்று எப்போதே வைத்தியம் கண்டுகொண்டதால் அவருடன் அதிகம் நெருங்காமல் இருந்தார். இந்தச் சமயத்தில் தான் ஜானகிக்கு வரன் பார்க்க தங்களுடைய தூரத்து உறவினர் ஒருவரின் மூலமாக வந்த வரன் தான் ரகுநாத். அந்தக் காலத்திலே படித்து அதும் மத்திய அரசாங்க வேலையாக ரயில்வேஸில் பணியில் இருந்தார். சிறு வயதிலே தந்தையை இழந்து தாயுடன் மட்டும் வளர்ந்ததாலோ என்னவோ அவருக்கு பெரியதாக சொந்தம் என்று யாருமில்லாமல் போனது. அது போக அவருடைய படிப்பைத் தவிர்த்து ரகுநாத்திற்கென்று சொல்லிக்கொள்ளும் படி பெரிய சொத்தும் இல்லாமல் போனது.
தன்னுடைய செல்ல மகளான ஜானகிக்கு எதிலும் சிறந்ததைத் தான் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய வைத்தி ஜானகிக்கு ரகுநாத் தான் எல்லா விதத்திலும் பொருத்தமாக இருக்கும் என்று முடிவுக்கு வந்தார். எல்லாவற்றையும் மேல் ரகுநாத் ஜானகிதேவி என்ற பெயர் பொருத்தமே அவருக்கு அதிக மகிழ்ச்சியைத் தர உடனே தன் மகளிடம் இதைப் பற்றிச் சொன்னார். தன்னுடைய தந்தையின் செலேக்சன் எதுவும் தவறாக இருக்காது என்று எண்ணிய ஜானகியும் ரகுவை திருமணம் செய்ய சம்மதித்தார்.
ரகுநாத் -ஜானகி ஆகியோரின் திருமணம் முடிவாகி அவர்களின் திருமணம் நடைபெற இரண்டு நாட்களே இருக்கும் வேளையில் ரகுவின் அன்னையும் தவறிவிட உண்மையில் வைத்தி மனமுடைந்து போனார். ஆனால் அவருடைய கவலையைப் போக்கும் விதமாக குறித்த நேரத்தில் திருமணம் நடைபெறும் என்றும் தன்னுடைய திருமணம் தான் தன் அன்னையின் இறுதி ஆசை என்பதால் அதை நிறைவேற்றி ஜானகியை தன் வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி இனி தன் வாழ்வு முழுவதற்கும் இருக்கும் ஒரே பிடிமானமாகவும் எண்ணி ரகுநாத் கரம் பிடித்தார். ஆனால் கிராமத்தில் இந்தத் திருமணம் நடைபெறுவதற்குள் பல புரளிகளும் ஜானகியின் ராசி சரியில்லை என்றெல்லாம் பேச்சுக்கள் உலா வந்தது. ஆனால் இந்த வதந்திகளுக்கெல்லாம் பின்னால் சுப்பிரமணி தான் இருந்தார் என்று இன்று வரை அவர்களுக்குத் தெரியாது.
சுப்ரமணிக்கு இதை விட பெரிய அதிர்ச்சியாக ஒன்றை வைத்திருந்தார் வைத்தி. அது தான் சுப்ரமணிக்கு வைத்தியின் மீது தீராத வன்மத்தை ஏற்படுத்தியது. அது பின்னாளில் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் தன் பிள்ளைகள் அனைவர்க்கும் பகிர்ந்தளிப்பது என்று அவர் எடுத்திருக்க முடிவு. இன்றளவும் கிராமங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பி விட்டாள் அவர்களுக்கென்று தனியாக எந்த சொத்தும் கொடுப்பதில்லை. கொடுப்பதில்லை என்பதைக் காட்டிலும் பெண்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. இப்படியிருக்க வைத்தியலிங்கம் தனக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்களை தன் பிள்ளைகள் அறுவருக்கும் தருவதென்று முடிவெடுத்திருந்தார். இவரின் இந்த முடிவை அறிந்தால் நாளை தன் மகள்களும் இதையே எதிர்பார்ப்பார்களே அவர்களை எவ்வாறு சமாளிப்பது என்ற பயம் அவருக்கு. அவர் ஒன்றும் தன் மகள்கள் மீது பாசம் வைக்காதவர் அல்ல. ஆனால் மகள்களைக் காட்டிலும் தன் ஒரே மகன் மீது அளவற்ற அன்பை வைத்ததால் இதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தச் சமயத்தில் தான் சுசீந்திரன், சபாபதி ஆகியோர் மேற்படிப்பு படிக்க வெளியூருக்குச் சென்று விட உள்ளூரிலே இருந்த நந்தாவை பகடையாக்கினார் சுப்பிரமணி.
திருமணம் முடிந்து ரகுவும் ஜானகியும் சென்னைக்கு குடிபுகுந்தனர். ஜானகிக்கு படிப்பின் மீதிருந்த நாட்டத்தை அறிந்தவர் அவரை மேற்கொண்டு படிக்குமாறு ஊக்குவிக்க அவரும் வங்கி தேர்வுகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டார். அந்தச் சமயத்தில் தான் ஜானகி கருவுற்றிருக்க லவாவும் குஷாவும் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த சில மாதங்களிலே ஜானகிக்கு ஒரு பெரிய பொதுத்துறை வங்கியில் ப்ரொபெஷனரி ஆபிஸராக வேலை கிடைத்திருந்தது. பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள கனகா முன்வர ஏனோ அவருக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் ரகுநாத் தன்னுடைய வேலையை நைட் ஷிப்டிற்கு மாற்றிக்கொண்டார். பகலெல்லாம் பிள்ளைகளை அவர் பார்த்துக்கொள்ள இரவு ஜானகி பார்த்துக்கொள்வார். பின்னாளில் ரகு தன் வேலையை ராஜினாமா செய்தார். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தது. முதலில், பிறந்ததிலிருந்தே தந்தையின் அன்பைக் காணாமல் வளர்ந்த காரணத்தாலும் தனக்கென்று பெரிய சொந்தங்கள் இல்லாத காரணத்தாலும் இனி தன் வாழ்நாளெல்லாம் சொந்தமாக இருக்கப்போகின்ற தன் மகன்களின் நலனுக்காக இந்த முடிவெடுத்தார். முன்பு சொன்னதைப் போல் லவாவுக்கு பிறகும் போதிருந்தே coa எனப்படும் இதயத்தில் இருந்து பிற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கியமான ஒரு ரத்தக்குழாய் வழக்கத்தை விட குறுகியவாறு இருக்கிறது என்று கண்டுகொண்டனர். இது பிறக்கும் போதிருந்தே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கரு வளரும் போதே ஏற்படும் மாற்றம். இக்காலத்தைப் போல் அன்று நவீன ஸ்கேன் வசதி ஏதும் இல்லாததால் இதை அப்போதே கண்டு பிடிக்க முடியாமல் போனது. இவர்கள் இரட்டையர்கள் என்பதே கருவுற்று ஆறு மாதத்திற்குப் பிறகு தான் ஜானகிக்குத் தெரியவந்தது.
ரகு தன்னுடைய வேலையை விட இன்னொரு காரணம் தன் பணியிடத்தில் அவருக்கு இருந்த மனவுளைச்சல்களே. அப்போது ரகுவிற்கு சீனியராக இருந்த ஒருவர் ரகுவின் மீது காட்டிய வெறுப்புணர்வே முக்கியக் காரணாம். ஏனெனில் ரகுவின் இடத்திற்கு தன்னுடைய உறவுக்காரர் ஒருவரை கொண்டுவர இறுதிவரை முயற்சி செய்த அவர் அது முடியாமல் போகவே அந்தக் கோவத்தை எல்லாம் ரகுவின் மீது காட்டினார்.
அவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அங்கே பணிபுரிந்தார் தான். ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்காமல் தன் நண்பர்களுடன் இணைத்து தொழில் தொடங்கும் முனைப்பில் இருந்தவருக்கு ஜானகியின் வேலை பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மேலும் தன்னுடைய வருமானத்தை விட ஜானகியின் வருமானம் அதிகம் ஆகிய நிர்பந்தங்கள் ஏற்பட துணிந்து வேலையை விட்டார்.
ஜானகிக்கு பணியில் சேர்ந்த புதுசு என்பதால் அதிகமான வேலை பளு இருக்க லவாவின் உடல்நிலையில் சற்று சுணக்கம் ஏற்பட வாழ்க்கையை மேற்கொண்டு நடத்த ஜானகி தொடர்ந்து வேலை நிலை வந்தது.
இங்கே ஒரு ஆண் என்பவன் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதும் பெண் என்பவள் தான் வீட்டையும் பிள்ளைகளையும் நிர்வகிக்க வேண்டும் என்றும் எழுதப்படாத சட்டங்கள் இருக்க அதற்கு முரணாக இருந்த இக்குடும்பத்தை அக்கம் பக்கம் உற்றார் உறவினர் என்று எல்லோரும் வழக்கம் போல் கேலியும் கிண்டலும் செய்ய ஏனோ இது தாங்களாகவே இணைத்து எடுத்த முடிவு என்பதால் ரகுவும் ஜானகியும் அதை எல்லாம் கடந்து தான் வந்தார்கள்.
அப்படியே நாட்கள் நகர ரகுவும் தன் நண்பர்களுடன் இணைந்து புதிய தொழிலைத் தொடங்கும் வேலையில் கவனமாக இருக்க லவாவுக்கு ஒரு மைனர் ஆப்ரேசனும் நடந்தது. இருந்தும் நீண்ட நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு லவாவுக்கு மருத்துவரை அணுகி ட்ரீட்மென்டில் தான் இருந்தான்.
லவா குஷா இருவருக்கும் மூன்றரை வயது இருக்கும் வேளையில் ஒரு விஷேஷத்திற்காக ஊருக்கு குடும்பத்துடன் ரகுவும் ஜானகியும் வந்திருந்தார்கள். அடுத்த நான்கு மாதத்தில் ரகுவும் தன் சகாக்களும் இணைந்து வேலூரில் bhel நிறுவனத்திற்கு தேவைப்படும் சில பொருட்களைத் தயாரிக்கும் (fabrication) ஒரு துணை பேக்டரியை தொடங்கும் முனைப்பில் இயங்கினார்கள். இதற்கு ஜானகியின் உதவியுடன் லோன் அப்ளை செய்து வேலை நடந்துகொண்டிருந்தது.
ஏற்கனவே தன் அண்ணன் குடும்பத்தின் வளர்ச்சியால் பொறாமையில் இருந்த சுப்பிரமணி அன்றிரவு ஆண்கள் எல்லோருமாக குடித்து கும்மாளமிட ஒரு ஏற்பாடு செய்திருந்தார். அக்குடும்பத்தில் நந்தா ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. நந்தாவிற்கு அந்தப் பழக்கம் ஏற்பட காரணமாக இருந்தவரும் சுப்பிரமணி தான்.
இங்கே எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கிறது. அதும் நம்மைச் சுற்றி எல்லோரும் ஒரு எண்ணவோட்டத்தில் இருக்க அதிலிருந்து நாம் மட்டும் மாறுபட்டு விலகி இருந்தால் நம்மை தான் கேலிப்பொருளாக எல்லோரும் நடத்துவார்கள். அன்றிரவு சுப்பிரமணி தன்னுடைய மகன் தங்கள் நெருங்கிய நபர் என்று எல்லோருக்கும் இருக்க பேச்சு ரகுவின் மீது வந்தது. இங்கே வார்த்தைகள் தான் எத்தனை கூரிய ஆயுதம். அது கத்தியின்றி நம் உயிரைக் குடிக்கிறது. எப்படியாவது வைத்தியின் குடும்பத்தில் உலாவும் நிம்மதியைக் கெடுக்க எண்ணி வார்த்தைகளை அள்ளி விடுத்தார் சுப்பிரமணி. "உங்களுக்கென்ன மாப்பிள்ளை பொண்டாட்டி சம்பாதிச்சு போடுறா நீங்க ஹாயா உட்கார்ந்து சாப்பிடுறிங்க... எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா?" என்று தொடங்கிய வார்த்தை போர்,"எங்கண்ணனும் சொத்துல பொண்ணுங்களுக்கு பங்கு இருக்குன்னுட்டார். அப்பறோம் என்ன ஹாயா மாமனார் சொத்து பொண்டாட்டி சம்பாத்தியம் செம வாழ்க்கை உங்களுக்கு..." என்று தொடர்ந்து செல்ல சுசியும் சபாவும் மட்டும் வார்த்தை மாறுவதை அறிந்து அதைத் தடுக்க முயல போதையில் இருந்த நந்தாவை தன்னுடைய கைப்பாவையாக மாற்றிய சுப்பிரமணி பேச்சை வளர்க்க ஏனோ இனியும் அங்கு இருந்தால் விபரீதம் ஆகிவிடும் என்று ரகுவை சுசியும் சபாவும் அழைக்க,
"ஆமா ஆமா கூட்டிட்டுப் போங்க... அப்பறோம் மாப்பிள்ளைக்கு ரோஷம் கீஷம் வந்திடப்போகுது... திடீர்னு ஆம்பளயா ஆகிடப்போறாரு..." என்றதும் பொறுக்க மாட்டாமல் ரகு சுப்பிரமணி மீது கைநீட்டி விட அதைக்கண்ட நந்தா போதையில் ரகுவை அடித்துவிட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அனர்த்தத்தை யாராலும் தடுக்க முடியாமல் போனது. அதுவே ரகு அந்த ஊரில் இருந்த கடைசி நாளானது. அதன் பின் ஜானகியின் பாட்டி இறப்பிற்கு வந்தவர் மொட்டு செய்த களேபரத்தால் அதன் பின் அக்குடும்பத்தில் சுசி ஒருவரைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை. அன்றிரவு முழுவதும் தன் மாமாவிடம் செய்யாத தவறுக்காக மன்றாடிய சுசியை மட்டும் ரகுவால் வெறுக்க முடியாமல் போனது.
மறுநாள் காலையில் எழுந்த ஜானகி ரகுவைக் காணவில்லை என்றதும் தேட சுசியோ இரவு நடந்ததை எல்லாம் சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்த வைத்தி அன்று தன் தம்பியிடம் சண்டையிட கோவத்தில் இதையனைத்தையும் தான் திட்டமிட்டே செய்ததை அவர் ஒப்பும் கொண்டார். ஏனோ அப்போது தான் தன் சித்தப்பாவின் சுயரூபமே நந்தாவிற்குத் தெரிந்தது. நேற்றிரவு நடந்ததை எண்ணி அவர் வெஃகி தலை குனிய நந்தாவை இரண்டு அடி வைத்த ஜானகி தன் தந்தையிடம் திரும்பி,"ரொம்ப சந்தோசமா இருக்குப்பா... உங்க பையனை நீங்க ரொம்ப நல்லா வளர்த்திருக்கிங்க... நான் கிளம்பறேன்..." என்று லவாவையும் குஷாவையும் அழைத்துக்கொண்டு ஜானகி சென்றுவிட்டார். பின்னே தங்கள் வாழ்வில் எடுத்த அந்த முடிவை ரகு வைத்தியிடம் முன்னமே தெரிவித்திருந்தார்.
"இந்தச் சமயத்தில் ஜானு வேலையை விட வேணாம் மாமா. எனக்கும் பெருசா சொத்து இல்ல... ஆனா எனக்கு என் பசங்களோட எதிர்காலம் முக்கியம் மாமா. நான் என் ஃப்ரண்ட்சோட சேர்ந்து பிசினெஸ் பண்ணப் போறேன். இந்த மாதிரி வேலையை ஜானு இப்போ ரிசைன் பண்ணிட்டா திரும்ப இதை வாங்குவது ரொம்ப கஷ்டம் மாமா. எனக்கு ஒரு ஐஞ்சு வருஷம் டைம் கொடுங்க. எந்த நம்பிக்கையில எனக்கு நீங்க உங்க பொண்ணைக் கொடுத்தீங்களோ அந்த நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாத்துவேன்..." என்று ரகு சொன்னதும் அவர் மீதிருந்த நம்பிக்கையில் தான் அதற்கு சம்மதமும் தெரிவித்திருந்தார் வைத்தி.
அதன் பின் ரகு தான் கொடுத்த வாக்கு படியே தன்னுடைய பிசினஸில் வளர்ச்சி காண ஆரமித்தனர். இன்று அந்நிறுவனத்தில் ரகுவின் ஷேர் மதிப்பு மட்டும் கோடிகளில் இருக்கும். அதை விட முக்கியமாக தன்னுடைய மகளும் சீனியர் மேனேஜராக அந்த வங்கியில் தற்போது பணிபுரிகிறார். அப்போதே ஜானகியுடன் வந்து மன்னிப்பு வேண்ட நினைத்த வைத்தியைத் தடுத்த ஜானகி சிறிது காலம் போகட்டும் என்று சொல்ல அதன் பின் அவர்கள் இருவருக்குமான விரிசல் மட்டும் வளர்ந்துகொண்டே சென்றது. இதில் நந்தாவுடன் ஜானகியும் பேசுவதில்லை. மிகச் சமீபங்களில் தான் ஒன்றிரண்டு வார்த்தை நந்தாவிடம் பேசுகிறார். எங்கே இதனால் ஜானகிக்கு ரகுவுக்கு இடையில் ஏதேனும் மனஸ்தாபம் வந்துவிடுமோ என்று வைத்தி அஞ்ச ஜானகியும் ரகுவும் இதைப் பற்றிப் பேசுவதை மட்டும் முற்றிலும் தடுத்தார்கள்.
வைத்தி மீதும் நந்தா மீதும் தனக்கிருக்கும் அந்தக் கோவத்தை முடிந்த அளவுக்கு வீட்டில் காட்டிக்கொள்ள மாட்டார் ரகு. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு ரகு பழையபடி சகஜமாக மாற பல வருடங்கள் ஆனது. நிச்சயம் ரகுவும் ஜானகியும் அந்தக் காலகட்டத்தைக் கடந்து வர மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்குள் இருந்த அந்த பழைய அன்யோன்யத்தைத் திரும்பவும் மீட்டெடுக்க அதிக சிரமம் கொண்டார்கள். இறுதியில் அதை புதுபித்துக்கும் கொண்டார்கள். இதைப் பற்றி எதுவும் லவாவுக்கு முழுவதும் தெரியாது. அவன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவனிடம் இவற்றை எல்லாம் மறைத்து விட்டார்கள். ஆனால் தன் தந்தைக்கும் தாத்தாவுக்கும் ஏதோ பிணக்கு இருக்கிறது என்று வரை அவனுக்கும் அத்துப்படி. குஷா அப்படியில்லை. இதை எல்லாம் அவன் அறிந்துகொண்டான். ஏனோ அவனுக்கு வைத்தியையும் நந்தாவையும் மன்னிக்க முடியவில்லை. இங்கே தன் தாத்தா வருத்தப்படுவதை அறிந்த மொட்டுவோ அவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு நின்றாள். இடையில் வைத்தியும் ரகுவிடம் பலமுறை இது சம்மந்தமாகப் பேச முயற்சிக்க அதற்கு பிடிகொடுக்காமல் இருக்கும் மருமகனை சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
ஆனால் இந்த இரு குடும்பத்திற்கும் ஒரு பாலமாக இருப்பது என்னவோ சுசீந்திரன் மட்டுமே. அவரிடம் மட்டும் ரகு எப்போதும் போல் பழையபடி உரையாடுவார். அவரும் இதைப் பற்றிப் பேசி இருக்கும் உறவையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் இருக்கிறார். காலம் வேகமாக உருண்டோடி விட்டது. இருபத்தி ஐந்து வருடங்களாக ஒன்றிணையாமல் இருக்கும் இக்குடும்பத்தை சரி செய்ய மொட்டுக்கும் குஷாவுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று வைத்தி திட்டமிட அன்று தங்களுடைய திருமண நாளன்று குஷாவும் மொட்டுவும் இதைவைத்து சண்டையிட்டுக் கொண்டதை எதர்ச்சையாகக் கேட்க நேர்ந்த வைத்திக்கு இது அடுத்த தலைமுறையிலும் தொடர்வதை எண்ணி வருத்தத்தில் இருக்க அதனாலே அன்று அவருக்கு மயக்கமும் ஏற்பட்டது. இப்போது இதைச் சரிசெய்ய வேண்டி தனக்கிருக்கும் ஒரே வாய்ப்பாக மொட்டு குஷா திருமணத்தைப் பற்றித் திட்டமிட்டவருக்கு அது நடக்க சாத்தியமே இல்லை என்றும் மீறி நடத்தினால் அது அவ்விருவரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்குச் சமம் என்று இன்றைய நிகழ்வு(குஷா மொட்டுவை அறைந்தது) உணர்த்திவிட்டது. (நேரம் கைகூடும்...)

கதை இண்டெர்வெல் பாயிண்டை அடைந்தது. ஆனால் இரண்டாம் பாதி சற்று சிறியதாகவே இருக்கும்(இன்னும் 18 அத்தியாயங்கள் இருக்காது... 15 வேண்டுமானால் வரலாம்...)





எப்ப பாரு நல்ல சீன் ல எண்டு கட் போடுறதே உங்க வேலையா போச்சு. மொட்டு பாவம் பாஸ்..... அவ மட்டும் என்னமோ தனியா இருக்க மாதிரி ஒரு பீல். வைத்திக்கு பேத்தி மேல ரொம்ப பாசம்..... அடி வாங்கிட்டு நிற்கிற பேத்தியை சமாதான பண்ணவே இவ்வளவு சங்கடப்பட்டடுறாரு. குடும்பத்தில இந்த மாதிரி ஏதாவது ஒரு கேரக்டர் இருக்கும் போல. மத்தவங்கல பார்த்து பொறாமைப்பட்டு அவங்க குடும்பத்தையே சிதச்சிடுவாங்க. முக்காவாசி சண்டையே..... இந்த மாதிரி குடிச்சிட்டு பேசும்போது தான் வருது. ரகுவும் நல்ல குணம் தான் அவருக்கு ஒன்னும் சொல்ல முடியல. மனைவியை வேலைக்கு அனுப்பிட்டு குழந்தைகளை பார்த்துக்றது ஒரு ஆண் ஆ ரொம்பவே கஷ்டம் இந்த சமூகத்துல. தேவையில்லாத பல பேச்சுக்கள் கேட்க வேண்டி வரும். அது எல்லாத்தையும் பொறுத்துக் கிட்டு தன்னுடைய குழந்தைகளுக்காகவும் மனைவிக்காகவும் ரகு பண்ண விஷயங்கள் எல்லாம் செம. ஒரு பிரச்சனை நடந்தா கொஞ்ச நாளிலேயே அதை சமாதான பண்ணனும். இல்லைனா இந்த மாதிரி பெரிய விரிசலா வந்துவிடும்.
தாத்தா கவலைப்படாதீங்க உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறும்.
மொட்டு குஷா சீன் எழுதுங்க பாஸ்... அடுத்த பதிவு க ❤️❤️❤️❤️
 
எப்ப பாரு நல்ல சீன் ல எண்டு கட் போடுறதே உங்க வேலையா போச்சு. மொட்டு பாவம் பாஸ்..... அவ மட்டும் என்னமோ தனியா இருக்க மாதிரி ஒரு பீல். வைத்திக்கு பேத்தி மேல ரொம்ப பாசம்..... அடி வாங்கிட்டு நிற்கிற பேத்தியை சமாதான பண்ணவே இவ்வளவு சங்கடப்பட்டடுறாரு. குடும்பத்தில இந்த மாதிரி ஏதாவது ஒரு கேரக்டர் இருக்கும் போல. மத்தவங்கல பார்த்து பொறாமைப்பட்டு அவங்க குடும்பத்தையே சிதச்சிடுவாங்க. முக்காவாசி சண்டையே..... இந்த மாதிரி குடிச்சிட்டு பேசும்போது தான் வருது. ரகுவும் நல்ல குணம் தான் அவருக்கு ஒன்னும் சொல்ல முடியல. மனைவியை வேலைக்கு அனுப்பிட்டு குழந்தைகளை பார்த்துக்றது ஒரு ஆண் ஆ ரொம்பவே கஷ்டம் இந்த சமூகத்துல. தேவையில்லாத பல பேச்சுக்கள் கேட்க வேண்டி வரும். அது எல்லாத்தையும் பொறுத்துக் கிட்டு தன்னுடைய குழந்தைகளுக்காகவும் மனைவிக்காகவும் ரகு பண்ண விஷயங்கள் எல்லாம் செம. ஒரு பிரச்சனை நடந்தா கொஞ்ச நாளிலேயே அதை சமாதான பண்ணனும். இல்லைனா இந்த மாதிரி பெரிய விரிசலா வந்துவிடும்.
தாத்தா கவலைப்படாதீங்க உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறும்.
மொட்டு குஷா சீன் எழுதுங்க பாஸ்... அடுத்த பதிவு க ❤❤❤❤
இந்த மாதிரி இடத்துல கட் பண்ணிட்டு தொடரும் போட்டா தான நீங்களும் இன்ரெஸ்ட்டா படிப்பிங்க... ? கண்டிப்பா மொட்டு வைத்தியின் பேவோரைட்... கண்டிப்பா எல்லாக் குடும்பத்துலையும் இருகாங்க... எஸ் உண்மையிலே இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள்... வரேன் நாளைக்கு நெக்ஸ்ட் எபிசொட் இருக்கு... ஜாலியா ஒரு சண்டை எபிசொட்... நன்றி??
 
Senna epi... meaningful one too ....kusha kavalaiyum kovamum niyayam thane.. chinnathu la irunthu lava health issues pathavan kinathula mayakathula patha bayam varathana seiyum.vilaiyattu ipdi than sila neram vinareethama poitum....... shabaaaaa mudiyala.intha sothu yaruthan kandu pidichangalo..nonthu poituvom.veetuku oru aal ipd than irupanga pola.evlo kotuthalum pathama poramaiya valarthu irukavanga nimmathiya kedukarathu.erichal than varuthu....enaku yerakanave Raghunath character pidikum.ipo rombave pidichi pochu....job decision Ellam satharanama enna.superuuuu....ipo theriyuthu y Raghu ivlo kovam.thatha nantha y ivlo sangadamnu.thappu pannitu atha saripanna mudiyama irukangala.ithula additional ah mottu kinarula vizhuthappo vera avara pesa vitama innum valarthu vitutanga....Raghu kovam sarithan.....intha epi la sonna points ellame unmai than?niraiyathu nanum pathuruken.
 
Senna epi... meaningful one too ....kusha kavalaiyum kovamum niyayam thane.. chinnathu la irunthu lava health issues pathavan kinathula mayakathula patha bayam varathana seiyum.vilaiyattu ipdi than sila neram vinareethama poitum....... shabaaaaa mudiyala.intha sothu yaruthan kandu pidichangalo..nonthu poituvom.veetuku oru aal ipd than irupanga pola.evlo kotuthalum pathama poramaiya valarthu irukavanga nimmathiya kedukarathu.erichal than varuthu....enaku yerakanave Raghunath character pidikum.ipo rombave pidichi pochu....job decision Ellam satharanama enna.superuuuu....ipo theriyuthu y Raghu ivlo kovam.thatha nantha y ivlo sangadamnu.thappu pannitu atha saripanna mudiyama irukangala.ithula additional ah mottu kinarula vizhuthappo vera avara pesa vitama innum valarthu vitutanga....Raghu kovam sarithan.....intha epi la sonna points ellame unmai than?niraiyathu nanum pathuruken.
கண்டிப்பா அவன் பயத்துலயும் பதட்டத்துலையுள் தான் அடிச்சிட்டான்... எஸ் வீட்டுக்கு ஒருத்தர் இப்படித்தான் இருகாங்க... கதை அவ்வளவு தான். ரகு சமாதானம் ஆனாரா அவரை எப்படி சமாதனம் செய்தார்கள் என்பது தான் அடுத்து வரப்போகும் கதை. நன்றி??
 
Top