Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-5

Advertisement

praveenraj

Well-known member
Member
கீழே அனைவரிடமும் சிறிது உரையாடிய லவா மற்றும் குஷா இருவரும் மாடியில் இருக்கும் தங்கள் அறைக்குச் சென்றனர். வைத்தியலிங்கத்தின் வீடானது மிகவும் விசாலமாகவும் இரண்டு தளங்களைக் கொண்டதும் ஆகும். அந்த வீட்டிற்கு எப்படியும் அறுபது வயதென்னும் இருக்கும். வைத்தியலிங்கம் தன்னுடைய இளம் பிரயாயத்தில் தன்னுடைய வீடு எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அது போலவே ஒரு வீட்டை அவர் தந்தையும் கட்டினார். பழங்கால பாரம்பரிய படியே வீட்டின் முற்றத்தில் திண்ணையும் வீட்டின் முன் பெரிய களமும் கொண்டு இருக்கும். அதை ஒட்டி வெளியே ஒரு கிணறு இருக்கும். அமுத சுரப்பி என்பதைப் போல் அந்தக் கிணறை ஒரு தண்ணீர் சுரப்பி என்று வேண்டுமானால் கூறலாம். கனகா இந்த வீட்டிற்கு மருமகளாக வந்த இந்த ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு தினம் கூட அக்கிணறு அவருக்கு தன்னுடைய அமுத நீரைத் தராமல் ஏமாற்றியதில்லை. வானம் பொய்த்த போதிலும் ஏன் அந்தப் பொன்னி நதியே வறண்ட போதிலும் அந்தக் கிணற்றில் மட்டும் வற்றாமல் தண்ணீர் சுரந்துகொண்டே இருக்கும். இருக்கிறது. இதன் பொருட்டே அந்தக் கிணற்றை ஒற்றி ஒரு துளசி செடியை நட்டு நிதமும் காலையில் அதற்கு பூசை செய்வதை தன்னுடைய ஐம்பத்தி ஐந்து வருட வழக்கமாகக் கொண்டுள்ளார் கனகா. இதை வெறும் மூடநம்பிக்கை என்று மட்டும் கருதி அதை ஒதுக்கி வைத்துவிடக் கூடாது. ஏனெனில் இது மூட நம்பிக்கையையும் கடந்த ஒரு நன்றி பாராட்டல் எனலாம்.

இன்றைக்கும் கிராமங்களில் தண்ணீரையும் காற்றையும் நெருப்பையும் கடவுளாக உருவகப்படுத்தி அதன் பால் அவற்றின் மீது ஒரு பயம் கலந்த பற்றைச் செலுத்துவதன் மூலமே இன்னும் இந்தப் பூமி பந்தில் ஆங்காங்கே பச்சையும் செழுமையும் வளமும் மனிதனின் சுயநலத்திற்கு அவனின் பேராசைகளுக்கும் இரையாகாமல் பாதுகாக்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை! sacred grooves என்று அழைக்கப்படும் பல இடங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே படர்ந்திருக்கிறது. திருநந்தவனம் என்றைக்கப்படும் அவ்விடங்களை ஒட்டி கட்டாயம் ஒரு சிறு தெய்வ வழிபாடு என்பது இருக்கும் (அய்யனார், கருப்பன், முனி... முதலியவை தான் சிறுதெய்வங்கள்) வருடம் ஒரு முறை மட்டும் அங்கு சென்று அவற்றுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு அந்த இயற்கையை இயற்கையின் கையிலே ஒப்படைத்து திரும்புவார்கள். சாரி கதையை விட்டு ரொம்ப வெளிய வந்துட்டேன்...

வைத்தியலிங்கத்திற்கு உடன் பிறந்தவர்கள் என்று இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும் மூன்று அக்காவும் ஒரு தங்கையும் இருந்தார்கள் இருக்கிறார்கள். ஆம் அவர்களில் பலர் தற்போது உயிருடனே இல்லை. அவருடைய ஒரு தம்பியும் தங்கையும் தவிர்த்து மற்றவர்கள் என்றோ காலஞ்சென்ற விட்டார்கள். வைத்தியலிங்கத்தின் இரண்டாவது அண்ணனான குமாரசாமிக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க அந்த வேளையில் தான் வைத்தியலிங்கம் கனகா தம்பதியருக்கு ஜானகி, நந்த கோபாலனை அடுத்து நான்காவதாக(அவரின் முதல் குழந்தை இறந்துவிட்டது) ஒரு ஆண் வாரிசு பிறந்தான். பிள்ளை இல்லாமல் தவித்த தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் அக்குழந்தையைத் தத்து கொடுத்து விட்டார் வைத்தியலிங்கம். உண்மையில் கனகாவிற்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும் தன் உடன் பிறந்தவர்களிலே தன் மீது அதிக பாசமும் பற்றும் வைத்திருக்கும் தன் அண்ணனான குமாரசாமிக்காக அதைச் செய்தார் வைத்தியலிங்கம். தன்னுடைய தம்பியின் இந்த தயாள குணத்தைக் கண்டு உளம் மகிழ்ந்தவர் அக்குழந்தைக்கு சுசீந்திரன் என்று பெயர் சூட்டி தன் சொந்த மகனாகவே வளர்த்தார். நம்முடைய முந்தைய தலைமுறையில் யாருக்கேனும் குழந்தையில்லை என்றால் தன் உடன் பிறந்தவரின் குழந்தையையோ இல்லை உறவினரின் குழந்தையையோ தத்தெடுத்து வளர்த்துவது என்பது நடைமுறையில் இருந்த வழக்கம். அவ்வாறு வளர்த்தப்பட்டவர்கள் பலரை இன்றைக்கும் நான் என் கிராமத்தில் பார்க்கிறேன்.

நந்த கோபாலுக்கும் சுசீந்திரனுக்கும் ஒன்றரை வருடங்களே வித்தியாசம். சுசீந்திரனுக்கு நந்த கோபாலின் மனைவியான சித்ராவின் தங்கையையே மணம் முடித்து வைத்தனர். சுசீந்திரன் காவேரி தம்பதியின் மூத்த மகள் தான் அனு என்கின்ற புல்வெளி. அனுவிற்கும் மொட்டுவிற்கும் ஆறு மாதங்களே வித்தியாசம் என்பதால் இருவரும் ஒரு ஈடாய்ப் பயின்றனர். நந்தகோபால் போல் அல்லாமல் சுசீந்திரன் ஒரு டிகிரி முடித்து திருச்சியில் இருக்கும் பெல் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அவருடைய திருமணம் முடிந்த சில வருடங்களிலே அவரைத் தத்தெடுத்து வளர்த்திய தாய் தந்தையர் இருவரும் இறந்து விட்டதாலும் வைத்தியும் கனகாவும் தான் தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தை என்ற உண்மை தெரிந்ததாலும் வைத்தியிடமே மீண்டும் ஒட்டிக்கொண்டார் சுசீந்திரன். அவர்களின் இரண்டாவது மகள் தான் ஆனந்தி. இந்த உண்மை வைத்தியின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

மேலே தங்கள் அறைக்குள் சென்ற லவா அக்கதவைத் திறக்க அங்கு மாட்டப்பட்டிருந்த தங்களுடைய இளம்வயது படத்தைப் பார்த்ததும் எப்போதும் போல் அவன் உதட்டில் குறுநகை ஒரு குடிகொண்டது. தன்னை தன் தந்தையும் குஷாவை தன் அன்னையும் கையில் வைத்தவாறு தஞ்சை பெரிய கோவிலின் பின்புறம் அந்தக் கோபுரம் தெரியுமாறு இருக்கும் அப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் லாவவுக்கு சில்லென்று வீசிடும் தென்றலாய் அவன் மனதில் ஒரு இதம் பரவும். தற்போதும் அது பரவ உள்ளே நுழைந்தவன் மேற்கொண்டு நகராமல் அங்கேயே நிற்க அவன் பின்னாலே வந்த குஷா வழிமறித்து நிற்கும் தன் அண்ணனைக் கண்டு,

"என்னமோ என் உடம்பு அவ்வளவு டையர்டா இருக்கு நான் தூங்கபோறேன் அப்படி இப்படினு சொல்லிட்டு வந்த? இங்க என்ன இப்படியே இருக்க?" என்று சீண்டியவனும் அப்படத்தைப் பார்க்க,

"ஓ இது தான் விஷயமா? அம்மா பேஸ் மாறவே இல்ல தானே? அப்படியே இருக்கு... ஆனா அப்பாவைப் பாரு ஆளே டோட்டலா மாறிட்டார்..." என்ற குஷாவுக்கு ஆமோதித்தவன்,

"பின்னே ஒல்லியா ஓமக்குச்சி நாராயணன் மாதிரி இருந்தவர் இப்போ குண்டு கல்யாணம் மாதிரி ஆகிட்டா மாறாம இருக்க முடியுமா?" என்ற லவாவுக்கு ஒரு சிரிப்பை பதிலாக உதிர்த்தவன்,

"இப்போ மட்டும் அப்பாவும் அம்மாவும் இதைப் பார்த்தா எப்படி இருக்கும்?" என்று மொழிந்து உடனே அதை போட்டோ எடுத்து பெற்றோருக்கு அனுப்ப,"நல்லாப் பாருங்க மகன்களே... எப்படியிருந்த உங்க அப்பாவை உங்க அம்மா இப்படி ஆக்கிட்டா..." என்று ரகு கமெண்ட் போட கோவமான ஸ்மைலியை தங்கள் நால்வர் மட்டுமிருக்கும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு தன் இருப்பைக் காட்டினார் ஜானகி.

"ஹா ஹா என்டெர்டெய்ன் மென்ட் ஸ்டார்ட்ஸ். அம்மா இட்ஸ் யுவர் டர்ன்..." என்று லவா பதிவிட சில கலகலப்பான வாட்ஸ் அப் உரையாடல்கள் அங்கு அரங்கேறியது. பிறகு சோர்வாக உணர்ந்த லவா அந்தக் கட்டிலில் விழுந்து,"செம்ம டையர்டா இருக்குடா..." என்று நெட்டி முறிக்க,

"ஏன்டா வண்டி ஓட்டிட்டு வந்த நானே கல்லு மாதிரி இருக்கேன்... பத்து ஆப்பத்தையும் பணியாரத்தையும் முழிங்கிட்டு உனக்கு டையர்டா இருக்கா? ஏன் சொல்லமாட்ட?" என்று ஒரு தலையணையைத் தூக்கி அவன் மீது வீசிய குஷா ஜன்னல் நோக்கிச் சென்று வெளியே வேடிக்கை பார்க்க,

"ஹே லவ் வேர் ஆர் யூ?" என்றபடி உள்ளே நுழைந்தாள் மொட்டு.

லவா ஒரு சிரிப்பை உதிர்க்கவும்,"அதுக்குள்ள படுத்துட்டய்யா? எந்தி எந்தி..." என்று அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டினாள் மொட்டு.

"இப்போ தான் சாப்பிட்டேன் வேணா... வேணா..." என்று கைப்புள்ள போல் சொன்னவன் அவள் மீண்டும் கிச்சுகிச்சு மூட்ட நெருங்கவும்,"வாந்தி எடுத்திடுவேன்... ப்ளீஸ்..." என்று சொல்ல,

"ஆமா எப்படி இருக்க? உடம்பெல்லாம் நல்லா இருக்கா?" என்றவளுக்கு,

"ரொம்ப நல்ல பழக்கம்டி... ஏன் புதன்கிழமை நாங்க ஊருக்குப் போகும் போது கேக்க வேண்டியது தானே? வந்து எவ்வளவு நேரம் ஆச்சு? சாப்பிட்டு சிரிச்சு பேசிட்டு இப்போ தான் குசலம் விசாரிப்பையா? நல்லா இருக்குடி உன் டக்கு..." என்றதும் கலகலவென சிரித்தவளையே கண்கொட்டாது பார்த்தான் லவா.

அவனை பலமுறை அழைத்தும் திரும்பாததால் அவனைக் கிள்ளியவள்,"என்ன சைட் அடிக்கிறியா?" என்று சொல்லி புருவம் உயர்த்த ஒரு கணம் திகைத்தவன்,

"மொட்டு, நான் உன்னை விரும்பல... உன் மேல ஆசை படல... நீ அழகா இருக்கன்னு நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு..." என்று அலைபாயுதே மாதவன் போல் லவா சொல்ல,

"ஓ இவர் அப்படியே மேடி... நான் உடனே ஓகே சொல்லிடணுமா? போடா டேய்..." என்று அவனை பதிலுக்குச் சீண்ட அப்போது தான் உள்ளே நுழைந்தார் கனகா.

"வா அம்மாச்சி..." என்று லவா சொல்ல அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவர் அனிச்சையாக அதே படத்தைப் பார்க்க, மூவரும் அங்கே தான் பார்த்தனர்.

சில கணங்களில் பெருமூச்சை விட்டவர் மதியத்திற்கு என்ன சமைக்க வேண்டும் என்று வினவ,"இப்போ சாப்பிட்டதே செமிக்க சாயுங்காலம் ஆகும் போ அம்மாச்சி..." என்று சொல்ல லவாவைத் தள்ளிப் படுக்குமாறு சொன்ன மொட்டு அருகே படுக்கவும் குஷா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"வேலையெல்லாம் எப்படிப் போகுது கண்ணுங்களா?" என்ற கனகாவிற்கு,

"பரவாயில்லை ஏதோ போகுது அம்மாச்சி..." என்று லவா சொல்ல,

"சூப்பரா போகுது..." என்றான் குஷா.

"அம்மாச்சி ஏன்னு கேளேன்..." என்ற லவாவை முறைத்தான் குஷா.

"என்ன விஷயம்?" என்று கனகா கேட்கவும்,

"அவன் க்ளாஸ்ல ஒரே பொண்ணுங்களா இருக்காங்களாம்..." என்ற லவாவின் பாதத்தைக் கிள்ளினான் குஷா.

"பாரு அம்மாச்சி என்னைக் கிள்றான்... அப்போ இதானே உண்மை?" என்று மேலும் லவா போட்டுக்கொடுக்க ஏனோ இந்த உரையாடல்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தாள் மொட்டு.

"உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லிடுறேன்... உங்க கல்யாணத்துக்கு நாங்க தான் பொண்ணு பாப்போம்... அப்றோம் மாட்டேன் கீட்டேன்னு எதையும் சொல்லக் கூடாது..." என்ற கனகாவிற்கு,

"ஐயோ அம்மாச்சி என்ன இப்படிச் சொல்லிட்ட? நாங்கல்லாம் பாண்டிய ராஜனோட சிஷ்யங்க... டில்லிக்கு ராஜானாலும் பாட்டிச் சொல்லைச் தட்டமாட்டோம்... பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டிச் சொல்லைச் தட்டமாட்டோம்... என்னடா லவா சரிதானே?" என்ற குஷாவிற்கு,

"டெபெனட்லீ டெபெனட்லீ... நீ ஒரு கழுதையைக் காட்டினாலும் குஷா அதுக்கு தாலி கட்டுவான்..." என்று லவா சொன்னதும் அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்தாள் மொட்டு. ஏனோ இதுவரை இலகுவாகவே இருந்த குஷாவின் முகத்தில் ரௌத்திர ரேகை தென்பட்டது.

"எனக்கு ஒரு முக்கியமான போன் வரும்... நான் கீழ போறேன்..." என்று குஷா விடைபெற பின்னாலே கனகாவும் சென்றுவிட லவாவின் கையை நறுக்கென்று கிள்ளினாள் மொட்டு.

"அம்ம்மா..." என்று அலறியவன்,"ஏன் டி?" என்று பொங்கிய லவாவிற்கு,

"ஏன்டா திடீர்னு அப்படிச் சொன்ன? நான் வேற அடக்கமுடியாம சிரிச்சு வேற தொலைச்சுட்டேன்..." என்ற மொட்டுவிற்கு,

"ஓ ஏற்கனவே உனக்கும் அவனுக்கும் வாய்க்கா தகராறு இல்ல? போ, கையைப் பிடிச்சு இழுத்தய்யானு பஞ்சாயத்தைக் கூட்டப் போறான்..." என்று லவா கிண்டல் செய்ய,

"எல்லாம் உன்னால தான்... போடா..." என்று அவனை அடித்தவள்,"நீ மட்டும் தான் லவா உங்க குடும்பத்துலையே விதிவிலக்கானவன்..." என்று ஏதோ ஞாபகத்தில் மொட்டு உளற,

"ஏ அப்படியெல்லாம் இல்ல... நான் என் அம்மா மாதிரி... அவன் என் அப்பா மாதிரி..." என்றதும் யோசித்தவள்,

"கரெக்ட்... ரொம்ப கரெக்ட் அவன் அப்படியே உங்க அப்பா மாதிரி..." என்னும் வேளையில் மீண்டும் உள்ளே நுழைந்தவன் அவளையே தீயாக முறைத்துவிட்டுச் சென்றான்.

இந்த நேரத்தில் அவனை மீண்டும் இங்கு எதிர்பார்க்காதவர்கள் திருதிருவென்று விழிக்க அவன் சென்றதும் வெளியே எட்டிப் பார்த்தவள் அவன் சென்றுவிட்டான் என்பதை அறிந்து பலமாகச் சிரித்தாள்.

"போச்சு போ உன் க்ரைம் ரேட் வேற கூடிட்டே போகுதே..." என்ற லவாவிடம்,

"அவனை விடு... அவன் கிடக்கிறான் பூச்சாண்டி... அப்பறோம் என்ன ஆச்சு நான் சொன்னது?" என்று மொட்டு வினவ,

"அதெப்படி மறப்பேன்? வா காருக்கு போலாம்..." என்று அவளை அழைத்தான்.

அதற்குள் மொட்டு மற்றும் லவா இருவரின் வாட்ஸ் அப்பும் சிணுங்க,"தாத்தா அம்மாச்சி வெட்டிங் டே செலிபிரேசன் பிளான்..." என்று பெயரிடப்பட்டிருந்த குரூப்பில்

"எனிபடி தேர்?"(யாராச்சும் இருக்கீங்களா?) என்று குஷா டைப் செய்திருந்தான்.

சில நிமிடங்களில்,"மாம்ஸ் நான் இருக்கேன்..." என்று பதிவிட்டான் அபிலேஷ்.

"எல்லோரும் எப்போடா வரீங்க?" என்ற குஷாவிற்கு,

"அண்ணாஸ் ரெண்டுபேரும் எப்போ வந்திங்க?" என்றாள் மெல்லினி.

"இன்னும் இந்த சர்ப்ரைஸ் பத்தி நம்மைத் தவிர வேற யாருக்குமே தெரியாது தானே?" என்ற மணவாளனுக்கு,

"யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. அப்போதான் இதுக்குப் பேர் சர்ப்ரைஸ்..." என்று பதிலளித்தான் அபி.

"அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எல்லோரும் எப்போ டா வரீங்க?" என்ற குஷாவிற்கு,

"நாங்க... அதாவது நானும் ரித்துவும் அனு அக்காவும் ஆனந்தியும் ஈவினிங் கிளம்பி நைட்டுக்குள்ள வந்திடுவோம்..." என்று பதிலளித்தான் அபி.

"அனு கண்டிப்பா வந்திடுவாளா? அவளை இன்னும் ஆளையே காணோமே?" என்ற குஷாவிற்கு,

"நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... நேத்து இந்த குரூப்ல கான்வெர்சேஷன் முடியும் போது அனு எப்படிப் போனாளோ அப்படியே வந்துட்டான்னு சொல்லு..." என்று டைப் செய்த அனு என்கின்ற புல்வெளியை கலாய்க்க ஒரு கூட்டமே தயாராக இருந்தது.

"ரைமிங் நல்லாவே இல்லை... கபாலி மாதிரி மாஸா பேசுவேன்னு பார்த்தா கபாலிகான் மாதிரி தமாஷா பேசுற..." என்று லவா ஆரமிக்க வரிசையாக எல்லோரும் அவளையே டார்கெட் செய்தனர்.

பொறுத்தது போதும் பொங்கி எழு என்று பொங்கிய அனு,"ஷட் அப் திஸ் நான்சென்ஸ் ஐ அம் ஸ்பீக்கிங் நோ க்ராஸ் ஸ்பீக்கிங்... வருஷம் முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாளும் என்னைத்தானே கலாய்கறிங்க? இன்னைக்காச்சும் எனக்கு ரெஸ்ட் குடுங்க டா... இப்போ நாம பேச வேண்டியது தாத்தா பாட்டியோட ஐம்பத்தி ஐந்தாவது வெட்டிங் ஏனிவெர்சரியை நாம எப்படி சர்ப்ரைஸா கொண்டாடப் போறோம்ங்கறதைப் பத்தி தானே ஒழிய என்னை எதுக்கு எப்படி கலாய்க்கலாம்னு இல்ல..." என்று லாவகமாக அனு டாபிக்கை மாற்றினாள்.

"இப்படியெல்லாம் சீரியஸா பேசுனா உன்னை எல்லோரும்னு மறந்திடுவோம்னோ இல்லை விட்டுடுவோம்னோ கனவிலும் நினைக்காதே கண்மணி..." என்று பதிவிட்டான் லவா.

"சரிப்பா என்னை எப்போ வேணுனாலும் கலாய்ச்சிக்கலாம்... அடுத்து என்ன பிளான்?"

"அதான் எல்லாமே அன்னைக்கே பேசியாச்சே? நீங்க எல்லோரும் நாளைக்குள்ள இங்க வரீங்க. டியூஸ்டே தாத்தா பாட்டி வெட்டிங் டேக்கு சர்ப்ரைஸ் செய்யுறோம். எல்லோரும் விடியற்காலைக்குள்ள வரப்பாருங்க... நாளைக்கு லாக் டௌனாம்..." என்ற குஷாவிற்கு,

"அதெல்லாம் நாங்க பார்க்காத லாக் டௌனா?" என்று ஒவ்வொருவராய் கலைய ஆரமித்தனர்.

லவாவும் மொட்டுவும் காரை நோக்கிச் சென்று அதில் வாங்கியிருந்த கிப்ட்ஸ் ட்ரெஸ்ஸஸ் எல்லாம் பார்த்துவிட்டு,

"இதெல்லாம் கார்லேயே இருக்கட்டும் லவா... அப்பத்தா கண்ணுல படமா இதையெல்லாம் மேல கொண்டுபோகவே முடியாது... சரியான கழுகு கண்ணு அதுக்கு..." என்று அவள் சிரிக்க தூரத்தில் இருந்த அந்த திண்ணையில் குஷா அமர்ந்து அங்கு வளர்க்கும் பூனைக்குட்டிகளிடம் விளையாடினான்.

"சரியான வெய்யில் இல்ல?" என்ற லவாவிற்கு,

"எல்லாம் உங்களை மாதிரி சிட்டி கைஸ் செய்யுற வேலையால தான்..." என்றாள் பனித்துளி. (நேரம் கைகூடும்...)அடுத்த அத்தியாயம் வெள்ளி அல்லது சனி
 
Last edited:
Palaya kaalaththu v2 nale super than illa,,,,enakum palaya kaalaththu v2 remba pidikum, athum thottu vasal thana athu peru v2 ku nadula mazhai thanni vizhukurathuku open a vitrupangale antha mathiri irukirathu remba pidikum,,,,, village la than nanmai tharra ellaththaiyum kadavula vananguranga,, namma pongal festival le kaduvala nenaichu nandri solrathuthane,,,, karupan, ayyanar, muni ivanga ellam kaval theivangal nu solluvanga,,, antha kadukalum ivangala kaakkapaduthunu nan nenaikren,,,, ha ha whatsapp chat semma,,, ragu sir matrathuku reason janu ma na then avanga samayal nalla thana irukum enna than ethum sollama saptalum ivlo changes varuma?,,,, Lava ni ethuku pa jerk aana, ava un thambi yoda aal pa no madi dialouges ok,,,, haha antha kazhuthaiye nithana mottu ma???,,,, intha whatsapp chat kooda super??,,,, epi ?????
 
முடிவிலி போல நண்பர்கள் கூட்டணி ஒரு வித அழகு என்றால் இது போல் சொந்தங்களின் கூட்டணியும் கலாய்த்தலும் இன்னொரு வித அழகு... சூப்பரோ சூப்பர் ?????????
 
Story la ulla veedu maathiri thaan oorla en ammayi veedum,semma super aa irukkum,
Lava,Kusha amma super aa cook pannuvaanga polaye,appa structure proove panniruche ,
Lava....Mottuva ennathaan kalaaichaalum unakkillaye pair,un brother ku thaan pair aa writer ji poatrukaanga.... great sathi.....
ha...ha...Mottu eppa kazhthaiyaana? enna coldwar rendu perukum,guess panna mudiyala,Kushaku vera semma kovam varuthu,Mottu...what is this? un hubby ya poochandinu yosikaama sollita....
Anu paavam, comedy pieceaa aakitaangale,ai.....Lavaku kanmaniyaama?
Ji....nalla trending la irukeenga..... lockdown laam....
 
அந்த வீட்டுக்குள்ள போனாலே ஒரு வாசம் வரும்... லவ் இட்... இந்தக் கதையிலே நிறைய விஷயம் எங்க ஊர்ல நடந்தது தான்... இங்க கொரோனா ஒழிய தெருவுக்கு தெரு கெடா வெட்டுனாங்க...எஸ் நிறைய நம்பிக்கைகள் இருக்கு... அதானே ரகுவை கேளுங்க??? எஸ் எஸ் கழுதையே மொட்டு தான்... nandri
 
முடிவிலி போல நண்பர்கள் கூட்டணி ஒரு வித அழகு என்றால் இது போல் சொந்தங்களின் கூட்டணியும் கலாய்த்தலும் இன்னொரு வித அழகு... சூப்பரோ சூப்பர் ?????????
கண்டிப்பா கசின்ஸ் எல்லோரும் ஒன்னு கூடிட்டாளே அந்த இடத்துக்கு கலகலப்புக்கு பஞ்சமிருக்காது... நன்றி??
 
Story la ulla veedu maathiri thaan oorla en ammayi veedum,semma super aa irukkum,
Lava,Kusha amma super aa cook pannuvaanga polaye,appa structure proove panniruche ,
Lava....Mottuva ennathaan kalaaichaalum unakkillaye pair,un brother ku thaan pair aa writer ji poatrukaanga.... great sathi.....
ha...ha...Mottu eppa kazhthaiyaana? enna coldwar rendu perukum,guess panna mudiyala,Kushaku vera semma kovam varuthu,Mottu...what is this? un hubby ya poochandinu yosikaama sollita....
Anu paavam, comedy pieceaa aakitaangale,ai.....Lavaku kanmaniyaama?
Ji....nalla trending la irukeenga..... lockdown laam....
கிராமத்து வீடுங்களே தனி அழகு... மேரேஜ் ஆனாலே எல்லோரும் வெய்ட் போட்டுடறாங்களே? ஹா ஹா லவா எவ்வளவு பெர்பார்மென்ஸ் பண்ணாலும் எல்லாம் வேஸ்ட் தான்? ஹா ஹா மொட்டு பாவம்? சொல்றேன் இந்தக் கதையே லாக்டௌன்ல நான் பார்த்ததும் கேட்டதும் படித்ததும் வெச்சு தான்... சோ லாக்டௌன் இல்லாமலா? நன்றி?
 
கீழே அனைவரிடமும் சிறிது உரையாடிய லவா மற்றும் குஷா இருவரும் மாடியில் இருக்கும் தங்கள் அறைக்குச் சென்றனர். வைத்தியலிங்கத்தின் வீடானது மிகவும் விசாலமாகவும் இரண்டு தளங்களைக் கொண்டதும் ஆகும். அந்த வீட்டிற்கு எப்படியும் அறுபது வயதென்னும் இருக்கும். வைத்தியலிங்கம் தன்னுடைய இளம் பிரயாயத்தில் தன்னுடைய வீடு எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அது போலவே ஒரு வீட்டை அவர் தந்தையும் கட்டினார். பழங்கால பாரம்பரிய படியே வீட்டின் முற்றத்தில் திண்ணையும் வீட்டின் முன் பெரிய களமும் கொண்டு இருக்கும். அதை ஒட்டி வெளியே ஒரு கிணறு இருக்கும். அமுத சுரப்பி என்பதைப் போல் அந்தக் கிணறை ஒரு தண்ணீர் சுரப்பி என்று வேண்டுமானால் கூறலாம். கனகா இந்த வீட்டிற்கு மருமகளாக வந்த இந்த ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு தினம் கூட அக்கிணறு அவருக்கு தன்னுடைய அமுத நீரைத் தராமல் ஏமாற்றியதில்லை. வானம் பொய்த்த போதிலும் ஏன் அந்தப் பொன்னி நதியே வறண்ட போதிலும் அந்தக் கிணற்றில் மட்டும் வற்றாமல் தண்ணீர் சுரந்துகொண்டே இருக்கும். இருக்கிறது. இதன் பொருட்டே அந்தக் கிணற்றை ஒற்றி ஒரு துளசி செடியை நட்டு நிதமும் காலையில் அதற்கு பூசை செய்வதை தன்னுடைய ஐம்பத்தி ஐந்து வருட வழக்கமாகக் கொண்டுள்ளார் கனகா. இதை வெறும் மூடநம்பிக்கை என்று மட்டும் கருதி அதை ஒதுக்கி வைத்துவிடக் கூடாது. ஏனெனில் இது மூட நம்பிக்கையையும் கடந்த ஒரு நன்றி பாராட்டல் எனலாம்.

இன்றைக்கும் கிராமங்களில் தண்ணீரையும் காற்றையும் நெருப்பையும் கடவுளாக உருவகப்படுத்தி அதன் பால் அவற்றின் மீது ஒரு பயம் கலந்த பற்றைச் செலுத்துவதன் மூலமே இன்னும் இந்தப் பூமி பந்தில் ஆங்காங்கே பச்சையும் செழுமையும் வளமும் மனிதனின் சுயநலத்திற்கு அவனின் பேராசைகளுக்கும் இரையாகாமல் பாதுகாக்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை! sacred grooves என்று அழைக்கப்படும் பல இடங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே படர்ந்திருக்கிறது. திருநந்தவனம் என்றைக்கப்படும் அவ்விடங்களை ஒட்டி கட்டாயம் ஒரு சிறு தெய்வ வழிபாடு என்பது இருக்கும் (அய்யனார், கருப்பன், முனி... முதலியவை தான் சிறுதெய்வங்கள்) வருடம் ஒரு முறை மட்டும் அங்கு சென்று அவற்றுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு அந்த இயற்கையை இயற்கையின் கையிலே ஒப்படைத்து திரும்புவார்கள். சாரி கதையை விட்டு ரொம்ப வெளிய வந்துட்டேன்...

வைத்தியலிங்கத்திற்கு உடன் பிறந்தவர்கள் என்று இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும் மூன்று அக்காவும் ஒரு தங்கையும் இருந்தார்கள் இருக்கிறார்கள். ஆம் அவர்களில் பலர் தற்போது உயிருடனே இல்லை. அவருடைய ஒரு தம்பியும் தங்கையும் தவிர்த்து மற்றவர்கள் என்றோ காலஞ்சென்ற விட்டார்கள். வைத்தியலிங்கத்தின் இரண்டாவது அண்ணனான குமாரசாமிக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க அந்த வேளையில் தான் வைத்தியலிங்கம் கனகா தம்பதியருக்கு ஜானகி, நந்த கோபாலனை அடுத்து நான்காவதாக(அவரின் முதல் குழந்தை இறந்துவிட்டது) ஒரு ஆண் வாரிசு பிறந்தான். பிள்ளை இல்லாமல் தவித்த தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் அக்குழந்தையைத் தத்து கொடுத்து விட்டார் வைத்தியலிங்கம். உண்மையில் கனகாவிற்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும் தன் உடன் பிறந்தவர்களிலே தன் மீது அதிக பாசமும் பற்றும் வைத்திருக்கும் தன் அண்ணனான குமாரசாமிக்காக அதைச் செய்தார் வைத்தியலிங்கம். தன்னுடைய தம்பியின் இந்த தயாள குணத்தைக் கண்டு உளம் மகிழ்ந்தவர் அக்குழந்தைக்கு சுசீந்திரன் என்று பெயர் சூட்டி தன் சொந்த மகனாகவே வளர்த்தார். நம்முடைய முந்தைய தலைமுறையில் யாருக்கேனும் குழந்தையில்லை என்றால் தன் உடன் பிறந்தவரின் குழந்தையையோ இல்லை உறவினரின் குழந்தையையோ தத்தெடுத்து வளர்த்துவது என்பது நடைமுறையில் இருந்த வழக்கம். அவ்வாறு வளர்த்தப்பட்டவர்கள் பலரை இன்றைக்கும் நான் என் கிராமத்தில் பார்க்கிறேன்.

நந்த கோபாலுக்கும் சுசீந்திரனுக்கும் ஒன்றரை வருடங்களே வித்தியாசம். சுசீந்திரனுக்கு நந்த கோபாலின் மனைவியான சித்ராவின் தங்கையையே மணம் முடித்து வைத்தனர். சுசீந்திரன் காவேரி தம்பதியின் மூத்த மகள் தான் அனு என்கின்ற புல்வெளி. அனுவிற்கும் மொட்டுவிற்கும் ஆறு மாதங்களே வித்தியாசம் என்பதால் இருவரும் ஒரு ஈடாய்ப் பயின்றனர். நந்தகோபால் போல் அல்லாமல் சுசீந்திரன் ஒரு டிகிரி முடித்து திருச்சியில் இருக்கும் பெல் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அவருடைய திருமணம் முடிந்த சில வருடங்களிலே அவரைத் தத்தெடுத்து வளர்த்திய தாய் தந்தையர் இருவரும் இறந்து விட்டதாலும் வைத்தியும் கனகாவும் தான் தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தை என்ற உண்மை தெரிந்ததாலும் வைத்தியிடமே மீண்டும் ஒட்டிக்கொண்டார் சுசீந்திரன். அவர்களின் இரண்டாவது மகள் தான் ஆனந்தி. இந்த உண்மை வைத்தியின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

மேலே தங்கள் அறைக்குள் சென்ற லவா அக்கதவைத் திறக்க அங்கு மாட்டப்பட்டிருந்த தங்களுடைய இளம்வயது படத்தைப் பார்த்ததும் எப்போதும் போல் அவன் உதட்டில் குறுநகை ஒரு குடிகொண்டது. தன்னை தன் தந்தையும் குஷாவை தன் அன்னையும் கையில் வைத்தவாறு தஞ்சை பெரிய கோவிலின் பின்புறம் அந்தக் கோபுரம் தெரியுமாறு இருக்கும் அப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் லாவவுக்கு சில்லென்று வீசிடும் தென்றலாய் அவன் மனதில் ஒரு இதம் பரவும். தற்போதும் அது பரவ உள்ளே நுழைந்தவன் மேற்கொண்டு நகராமல் அங்கேயே நிற்க அவன் பின்னாலே வந்த குஷா வழிமறித்து நிற்கும் தன் அண்ணனைக் கண்டு,

"என்னமோ என் உடம்பு அவ்வளவு டையர்டா இருக்கு நான் தூங்கபோறேன் அப்படி இப்படினு சொல்லிட்டு வந்த? இங்க என்ன இப்படியே இருக்க?" என்று சீண்டியவனும் அப்படத்தைப் பார்க்க,

"ஓ இது தான் விஷயமா? அம்மா பேஸ் மாறவே இல்ல தானே? அப்படியே இருக்கு... ஆனா அப்பாவைப் பாரு ஆளே டோட்டலா மாறிட்டார்..." என்ற குஷாவுக்கு ஆமோதித்தவன்,

"பின்னே ஒல்லியா ஓமக்குச்சி நாராயணன் மாதிரி இருந்தவர் இப்போ குண்டு கல்யாணம் மாதிரி ஆகிட்டா மாறாம இருக்க முடியுமா?" என்ற லவாவுக்கு ஒரு சிரிப்பை பதிலாக உதிர்த்தவன்,

"இப்போ மட்டும் அப்பாவும் அம்மாவும் இதைப் பார்த்தா எப்படி இருக்கும்?" என்று மொழிந்து உடனே அதை போட்டோ எடுத்து பெற்றோருக்கு அனுப்ப,"நல்லாப் பாருங்க மகன்களே... எப்படியிருந்த உங்க அப்பாவை உங்க அம்மா இப்படி ஆக்கிட்டா..." என்று ரகு கமெண்ட் போட கோவமான ஸ்மைலியை தங்கள் நால்வர் மட்டுமிருக்கும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு தன் இருப்பைக் காட்டினார் ஜானகி.

"ஹா ஹா என்டெர்டெய்ன் மென்ட் ஸ்டார்ட்ஸ். அம்மா இட்ஸ் யுவர் டர்ன்..." என்று லவா பதிவிட சில கலகலப்பான வாட்ஸ் அப் உரையாடல்கள் அங்கு அரங்கேறியது. பிறகு சோர்வாக உணர்ந்த லவா அந்தக் கட்டிலில் விழுந்து,"செம்ம டையர்டா இருக்குடா..." என்று நெட்டி முறிக்க,

"ஏன்டா வண்டி ஓட்டிட்டு வந்த நானே கல்லு மாதிரி இருக்கேன்... பத்து ஆப்பத்தையும் பணியாரத்தையும் முழிங்கிட்டு உனக்கு டையர்டா இருக்கா? ஏன் சொல்லமாட்ட?" என்று ஒரு தலையணையைத் தூக்கி அவன் மீது வீசிய குஷா ஜன்னல் நோக்கிச் சென்று வெளியே வேடிக்கை பார்க்க,

"ஹே லவ் வேர் ஆர் யூ?" என்றபடி உள்ளே நுழைந்தாள் மொட்டு.

லவா ஒரு சிரிப்பை உதிர்க்கவும்,"அதுக்குள்ள படுத்துட்டய்யா? எந்தி எந்தி..." என்று அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டினாள் மொட்டு.

"இப்போ தான் சாப்பிட்டேன் வேணா... வேணா..." என்று கைப்புள்ள போல் சொன்னவன் அவள் மீண்டும் கிச்சுகிச்சு மூட்ட நெருங்கவும்,"வாந்தி எடுத்திடுவேன்... ப்ளீஸ்..." என்று சொல்ல,

"ஆமா எப்படி இருக்க? உடம்பெல்லாம் நல்லா இருக்கா?" என்றவளுக்கு,

"ரொம்ப நல்ல பழக்கம்டி... ஏன் புதன்கிழமை நாங்க ஊருக்குப் போகும் போது கேக்க வேண்டியது தானே? வந்து எவ்வளவு நேரம் ஆச்சு? சாப்பிட்டு சிரிச்சு பேசிட்டு இப்போ தான் குசலம் விசாரிப்பையா? நல்லா இருக்குடி உன் டக்கு..." என்றதும் கலகலவென சிரித்தவளையே கண்கொட்டாது பார்த்தான் லவா.

அவனை பலமுறை அழைத்தும் திரும்பாததால் அவனைக் கிள்ளியவள்,"என்ன சைட் அடிக்கிறியா?" என்று சொல்லி புருவம் உயர்த்த ஒரு கணம் திகைத்தவன்,

"மொட்டு, நான் உன்னை விரும்பல... உன் மேல ஆசை படல... நீ அழகா இருக்கன்னு நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு..." என்று அலைபாயுதே மாதவன் போல் லவா சொல்ல,

"ஓ இவர் அப்படியே மேடி... நான் உடனே ஓகே சொல்லிடணுமா? போடா டேய்..." என்று அவனை பதிலுக்குச் சீண்ட அப்போது தான் உள்ளே நுழைந்தார் கனகா.

"வா அம்மாச்சி..." என்று லவா சொல்ல அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவர் அனிச்சையாக அதே படத்தைப் பார்க்க, மூவரும் அங்கே தான் பார்த்தனர்.

சில கணங்களில் பெருமூச்சை விட்டவர் மதியத்திற்கு என்ன சமைக்க வேண்டும் என்று வினவ,"இப்போ சாப்பிட்டதே செமிக்க சாயுங்காலம் ஆகும் போ அம்மாச்சி..." என்று சொல்ல லவாவைத் தள்ளிப் படுக்குமாறு சொன்ன மொட்டு அருகே படுக்கவும் குஷா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"வேலையெல்லாம் எப்படிப் போகுது கண்ணுங்களா?" என்ற கனகாவிற்கு,

"பரவாயில்லை ஏதோ போகுது அம்மாச்சி..." என்று லவா சொல்ல,

"சூப்பரா போகுது..." என்றான் குஷா.

"அம்மாச்சி ஏன்னு கேளேன்..." என்ற லவாவை முறைத்தான் குஷா.

"என்ன விஷயம்?" என்று கனகா கேட்கவும்,

"அவன் க்ளாஸ்ல ஒரே பொண்ணுங்களா இருக்காங்களாம்..." என்ற லவாவின் பாதத்தைக் கிள்ளினான் குஷா.

"பாரு அம்மாச்சி என்னைக் கிள்றான்... அப்போ இதானே உண்மை?" என்று மேலும் லவா போட்டுக்கொடுக்க ஏனோ இந்த உரையாடல்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தாள் மொட்டு.

"உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லிடுறேன்... உங்க கல்யாணத்துக்கு நாங்க தான் பொண்ணு பாப்போம்... அப்றோம் மாட்டேன் கீட்டேன்னு எதையும் சொல்லக் கூடாது..." என்ற கனகாவிற்கு,

"ஐயோ அம்மாச்சி என்ன இப்படிச் சொல்லிட்ட? நாங்கல்லாம் பாண்டிய ராஜனோட சிஷ்யங்க... டில்லிக்கு ராஜானாலும் பாட்டிச் சொல்லைச் தட்டமாட்டோம்... பட்டப்படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டிச் சொல்லைச் தட்டமாட்டோம்... என்னடா லவா சரிதானே?" என்ற குஷாவிற்கு,

"டெபெனட்லீ டெபெனட்லீ... நீ ஒரு கழுதையைக் காட்டினாலும் குஷா அதுக்கு தாலி கட்டுவான்..." என்று லவா சொன்னதும் அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்தாள் மொட்டு. ஏனோ இதுவரை இலகுவாகவே இருந்த குஷாவின் முகத்தில் ரௌத்திர ரேகை தென்பட்டது.

"எனக்கு ஒரு முக்கியமான போன் வரும்... நான் கீழ போறேன்..." என்று குஷா விடைபெற பின்னாலே கனகாவும் சென்றுவிட லவாவின் கையை நறுக்கென்று கிள்ளினாள் மொட்டு.

"அம்ம்மா..." என்று அலறியவன்,"ஏன் டி?" என்று பொங்கிய லவாவிற்கு,

"ஏன்டா திடீர்னு அப்படிச் சொன்ன? நான் வேற அடக்கமுடியாம சிரிச்சு வேற தொலைச்சுட்டேன்..." என்ற மொட்டுவிற்கு,

"ஓ ஏற்கனவே உனக்கும் அவனுக்கும் வாய்க்கா தகராறு இல்ல? போ, கையைப் பிடிச்சு இழுத்தய்யானு பஞ்சாயத்தைக் கூட்டப் போறான்..." என்று லவா கிண்டல் செய்ய,

"எல்லாம் உன்னால தான்... போடா..." என்று அவனை அடித்தவள்,"நீ மட்டும் தான் லவா உங்க குடும்பத்துலையே விதிவிலக்கானவன்..." என்று ஏதோ ஞாபகத்தில் மொட்டு உளற,

"ஏ அப்படியெல்லாம் இல்ல... நான் என் அம்மா மாதிரி... அவன் என் அப்பா மாதிரி..." என்றதும் யோசித்தவள்,

"கரெக்ட்... ரொம்ப கரெக்ட் அவன் அப்படியே உங்க அப்பா மாதிரி..." என்னும் வேளையில் மீண்டும் உள்ளே நுழைந்தவன் அவளையே தீயாக முறைத்துவிட்டுச் சென்றான்.

இந்த நேரத்தில் அவனை மீண்டும் இங்கு எதிர்பார்க்காதவர்கள் திருதிருவென்று விழிக்க அவன் சென்றதும் வெளியே எட்டிப் பார்த்தவள் அவன் சென்றுவிட்டான் என்பதை அறிந்து பலமாகச் சிரித்தாள்.

"போச்சு போ உன் க்ரைம் ரேட் வேற கூடிட்டே போகுதே..." என்ற லவாவிடம்,

"அவனை விடு... அவன் கிடக்கிறான் பூச்சாண்டி... அப்பறோம் என்ன ஆச்சு நான் சொன்னது?" என்று மொட்டு வினவ,

"அதெப்படி மறப்பேன்? வா காருக்கு போலாம்..." என்று அவளை அழைத்தான்.

அதற்குள் மொட்டு மற்றும் லவா இருவரின் வாட்ஸ் அப்பும் சிணுங்க,"தாத்தா அம்மாச்சி வெட்டிங் டே செலிபிரேசன் பிளான்..." என்று பெயரிடப்பட்டிருந்த குரூப்பில்

"எனிபடி தேர்?"(யாராச்சும் இருக்கீங்களா?) என்று குஷா டைப் செய்திருந்தான்.

சில நிமிடங்களில்,"மாம்ஸ் நான் இருக்கேன்..." என்று பதிவிட்டான் அபிலேஷ்.

"எல்லோரும் எப்போடா வரீங்க?" என்ற குஷாவிற்கு,

"அண்ணாஸ் ரெண்டுபேரும் எப்போ வந்திங்க?" என்றாள் மெல்லினி.

"இன்னும் இந்த சர்ப்ரைஸ் பத்தி நம்மைத் தவிர வேற யாருக்குமே தெரியாது தானே?" என்ற மணவாளனுக்கு,

"யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. அப்போதான் இதுக்குப் பேர் சர்ப்ரைஸ்..." என்று பதிலளித்தான் அபி.

"அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எல்லோரும் எப்போ டா வரீங்க?" என்ற குஷாவிற்கு,

"நாங்க... அதாவது நானும் ரித்துவும் அனு அக்காவும் ஆனந்தியும் ஈவினிங் கிளம்பி நைட்டுக்குள்ள வந்திடுவோம்..." என்று பதிலளித்தான் அபி.

"அனு கண்டிப்பா வந்திடுவாளா? அவளை இன்னும் ஆளையே காணோமே?" என்ற குஷாவிற்கு,

"நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... நேத்து இந்த குரூப்ல கான்வெர்சேஷன் முடியும் போது அனு எப்படிப் போனாளோ அப்படியே வந்துட்டான்னு சொல்லு..." என்று டைப் செய்த அனு என்கின்ற புல்வெளியை கலாய்க்க ஒரு கூட்டமே தயாராக இருந்தது.

"ரைமிங் நல்லாவே இல்லை... கபாலி மாதிரி மாஸா பேசுவேன்னு பார்த்தா கபாலிகான் மாதிரி தமாஷா பேசுற..." என்று லவா ஆரமிக்க வரிசையாக எல்லோரும் அவளையே டார்கெட் செய்தனர்.

பொறுத்தது போதும் பொங்கி எழு என்று பொங்கிய அனு,"ஷட் அப் திஸ் நான்சென்ஸ் ஐ அம் ஸ்பீக்கிங் நோ க்ராஸ் ஸ்பீக்கிங்... வருஷம் முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாளும் என்னைத்தானே கலாய்கறிங்க? இன்னைக்காச்சும் எனக்கு ரெஸ்ட் குடுங்க டா... இப்போ நாம பேச வேண்டியது தாத்தா பாட்டியோட ஐம்பத்தி ஐந்தாவது வெட்டிங் ஏனிவெர்சரியை நாம எப்படி சர்ப்ரைஸா கொண்டாடப் போறோம்ங்கறதைப் பத்தி தானே ஒழிய என்னை எதுக்கு எப்படி கலாய்க்கலாம்னு இல்ல..." என்று லாவகமாக அனு டாபிக்கை மாற்றினாள்.

"இப்படியெல்லாம் சீரியஸா பேசுனா உன்னை எல்லோரும்னு மறந்திடுவோம்னோ இல்லை விட்டுடுவோம்னோ கனவிலும் நினைக்காதே கண்மணி..." என்று பதிவிட்டான் லவா.

"சரிப்பா என்னை எப்போ வேணுனாலும் கலாய்ச்சிக்கலாம்... அடுத்து என்ன பிளான்?"

"அதான் எல்லாமே அன்னைக்கே பேசியாச்சே? நீங்க எல்லோரும் நாளைக்குள்ள இங்க வரீங்க. டியூஸ்டே தாத்தா பாட்டி வெட்டிங் டேக்கு சர்ப்ரைஸ் செய்யுறோம். எல்லோரும் விடியற்காலைக்குள்ள வரப்பாருங்க... நாளைக்கு லாக் டௌனாம்..." என்ற குஷாவிற்கு,

"அதெல்லாம் நாங்க பார்க்காத லாக் டௌனா?" என்று ஒவ்வொருவராய் கலைய ஆரமித்தனர்.

லவாவும் மொட்டுவும் காரை நோக்கிச் சென்று அதில் வாங்கியிருந்த கிப்ட்ஸ் ட்ரெஸ்ஸஸ் எல்லாம் பார்த்துவிட்டு,

"இதெல்லாம் கார்லேயே இருக்கட்டும் லவா... அப்பத்தா கண்ணுல படமா இதையெல்லாம் மேல கொண்டுபோகவே முடியாது... சரியான கழுகு கண்ணு அதுக்கு..." என்று அவள் சிரிக்க தூரத்தில் இருந்த அந்த திண்ணையில் குஷா அமர்ந்து அங்கு வளர்க்கும் பூனைக்குட்டிகளிடம் விளையாடினான்.

"சரியான வெய்யில் இல்ல?" என்ற லவாவிற்கு,

"எல்லாம் உங்களை மாதிரி சிட்டி கைஸ் செய்யுற வேலையால தான்..." என்றாள் பனித்துளி. (நேரம் கைகூடும்...)அடுத்த அத்தியாயம் வெள்ளி அல்லது சனி
super super... Ovvoru time name read panrapavum Wow Wow thn. unique ah feel pana mudiyudhu....
 
Top