Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 10

Advertisement

Sakthi bala

Active member
Member
மதிவதனியிடம் போன் பேசி விட்டு வைத்த மனோரஞ்சன் ரங்கராஜன் அங்கிளுக்கு போன் செய்து மறுநாள் தன்னை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தான். பின்பு சாயுங்காலம் வீட்டுக்கு கிளம்பினான்.

அவன் வீட்டுக்கு சென்றதும், வினோதன் அங்கு இருப்பதைக் கண்டான்.

“டேய். நீ எப்படா ஆபீசிலிருந்து கிளம்பினே? நானே இன்னிக்கு சீக்கிரம் கிளம்பிட்டேன். நீ எனக்கு முன்னாடி இங்க இருக்க?”

“ஹலோ. நீ தான் கம்பெனி பாஸ். நீ ரொம்ப நேரம் வேலை பார்க்கலாம். நான் உன் கம்பெனில சாதாரன ஸ்டாஃப். நான் சீக்கிரமே கிளம்பிடுவேன்.”

“ஓஹோ....ஸ்டாஃப், நீ கொஞ்ச நேரம் தான் வேலை பார்ப்ப, ஆனா பாஸ் நான் ரொம்ப நேரம் வேலை பார்க்கணுமா?”

“எஸ் அஃப்கோர்ஸ்”

“அது சரி, கிளம்பி உன் வீட்டுக்கு தானே போகணும்? இங்க எங்க வந்தே?!”

“கிரேட் இன்சல்ட்!ஏண்டா உன் வீட்டுக்கு வந்தவங்கள இப்படி தான் வரவேற்பியா?கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா உனக்கு?”

“மனோ அண்ணா......இன்னிமே அடிக்கடி நம்ம வினு அண்ணா இங்க தான் வருவாங்க. அப்படி தானே ணா?!” நிலா அவனை பார்த்து கிண்டலுடன் சிரித்தாள்.

“இனிமேல் வருவாரா? ஏன் அப்படி சொல்ற? என்ன விஷயம்?” மதிவதனி கேட்டாள்.

“அது...”நிலா ஏதோ சொல்ல வர, அதற்குள் வினோதன் அவள் வாயை பொத்தினான்.

“ஏய்! லூசு! கொஞ்சம் சும்மா இருடி.ஹாஹாஹா...அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சி. அவ ஏதோ உளறுறா...நான் சும்மா தான் வந்தேன். ஏன் நான் உங்களயெல்லாம் பார்க்க வரக் கூடாதா?”

“எங்களையெல்.....லாம் பார்க்க வந்தீங்களா? இல்லை ஒருத்தரை மட்டுமா?!”

“ஏய்! கொஞ்ச நேரம் சும்மா இரும்மா!”

“நிலா அது என்ன விஷயம் சொல்லுப்பா? யாரை பார்க்க வினு அண்ணா வந்திருக்காரு?” மதிவதனியும் ஏதோ விளையாட்டாக எடுத்துக் கொண்டு அவளிடம் கேட்டாள்.

வினோதன் தடுப்பதற்குள் நிலா போட்டு உடைத்து விட்டாள்,”வினோதன் அண்ணா பார்க்க வந்த அந்த ஆள் இன்னிக்கு ஹாஸ்டலலிருந்து வீட்டுக்கு வராங்க.” என்று கண் சிமிட்டிவிட்டு ஓடி விட்டாள்.

‘இன்னிக்கு நித்யா தானே ஹாஸ்டலலிருந்து வராங்க. அப்போ நிலா சொல்றது நித்யாவை பத்தியா? இது ஏதோ விளையாட்டு விஷயம்னு நினைச்சா இது எங்கேயோ போயிட்டு இருக்கே! இதுக்கு இவரு எப்படி ரியாக்ட் பண்ணுவாரு?’ என்று யோசித்துக் கொண்டே மனோரஞ்சனை ஓரக்கண்ணால் பார்த்தாள் மதிவதனி.

அவன் முகம் பாறையாய் இறுகி இருந்தது.”வினோ. ஒரு நிமிஷம் உள்ளே வா” என்று வினோதனை கூப்பிட்டான் மனோரஞ்சன்.
அவர்கள் இருவரும் அறைக்குள் சென்று சத்தமாக பேசிக் கொண்டது வெளியே நின்ற மதிவதனி காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது. மனோரஞ்சனுக்கு இருந்த கோபத்தில் கதவு திறந்திருப்பதையோ வெளியே மதிவதனி நின்று கொண்டிருப்பதையோ அவன் யோசிக்கவே இல்லை.

“வினு, நீ நித்யாவை லவ் பண்றியா?”

“சாரி டா மனோ. இந்த விஷயத்தை பத்தி நானே உன் கிட்ட பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள இந்த நிலா லூசு போட்டு உடைச்சுட்டா! நான் நித்யாவை லவ் பண்றேன் டா. நீ தான் உங்க அத்தை மாமா கிட்ட இதை பத்தி பேசணும். ப்ளீஸ் டா”

“இல்லை. இது நடக்காது” மனோரஞ்சன் கோபத்தில் கத்தினான்.

“ஏன்?ஏன் நடக்காது?நீ அவளை லவ் பண்றியா?”என்று கேட்டு வினோதன் மனோரஞ்சனையும், மதிவதனியையும் நிலைக் குலைய வைத்தான்.

“டேய்! என்னடா பேசுற நீ?”

“அப்புறம் என்னடா? நான் லவ் பண்ண வேண்டாம்னு சொல்றதுக்கு என்ன காரணம்? அதை முதல சொல்லு”

“இது நடக்காதுனா நடக்காது, விட்ரு டா. ப்ளீஸ்”

“எனக்கு ரீசன் தெரியனும் டா. ஓ....நான் உங்க குடும்ப ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வர மாட்டேன்னு நினைக்கிறியா?!”

“ஏய்!ஏதாவது லூசு மாதிரி உளறாத! ஸ்டேட்டஸ் பார்த்தா இவ்ளோ நாள் நாம பழகிட்டு இருக்கோம்.”

“அப்போ என்ன காரணம்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்?”

“அது....அது...அது வந்து...”ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் அப்போது தான் அறைக் கதவு திறந்திருப்பதை பார்த்தான். வெளியே மதிவதனி நிற்பதையும் பார்த்தான்.

உடனே சென்று கதவை பட்டென்று மூடினான். மதிவதனிக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது.

மதிவதனியின் மனம் அனலில் இட்ட புழு போலத் துடித்தது.திரும்ப திரும்ப அவள் மனம் அந்தக் கேள்வியை கேட்டது,’ஏன்?ஏன்?என்ன காரணம்?ஏன் நித்யாவை பத்தி பேசுனாலே இவரு கோபப்படுறாரு?அவரு மனசில் ஒன்னுமில்லேனா, வினோதன் அண்ணா கிட்ட சரின்னு சொல்லிருக்கனுமே? ரகசியமா பேசுற அளவுக்கு என்ன விஷயம்?’.

சிறிது நேரம் கழித்து வினோதன் வேகமாக அங்கிருந்து வெளியேறினான். மனோரஞ்சனும் கோபத்துடன் மாடி ஏறிச் சென்றான். மதிவதனி அங்கு நிற்பதை அவன் பொருட்படுத்தவேயில்லை.

அடுத்து வந்த நாட்கள் மதிவதனிக்கு முள் மேல் நிற்பது போல இருந்தது. எப்பொழுதுமே நித்யாவை பற்றியும், மனோரஞ்சன் பற்றியும் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.குரங்கை நினையாமல் மருந்தைக் குடி என்றால் குரங்கே முன்னால் வந்து நிற்குமாம்.
அதேபோல நித்யாவை பற்றி யோசிக்கக் கூடாது என்று நினைப்பு அவள் மூளையிலிருந்து மனதிற்குள் இறங்கும் முன்பே நித்யா அவள் முன்னாடி வந்து நின்றாள்.விடுமுறை முடிந்து அவள் ஹாஸ்டல் சென்ற பிறகே மதிவதனி சற்று நிம்மதியாக மூச்சு விட்டாள்.

மனோரஞ்சனும் ஒரு மந்தமான மனநிலையிலேயே இருந்தான். மதிவதனியிடம் பேசுவதை அவன் தவிர்க்கவில்லை, இருந்தாலும் முன்பு போல கலகலப்பாக பேசவில்லை.

இந்நிலையில் ஒரு நாள் மனோரஞ்சன் கொஞ்சம் சந்தோஷமான மனநிலையில் இருப்பது போல அவளுக்கு தெரிந்தது. அவளிடம் வந்து அவளை ஒரு இடத்துக்குக் கூட்டி செல்வதாக கூறினான். எங்கே என்று கேட்டதற்கு சஸ்பென்ஸ் என்றுக் கூறி விட்டான். மதிவதனிக்கு அது எந்த இடம் என்று தெரிந்துக் கொள்ள மிகவும் ஆவலாக இருந்தது.

அவர்கள் சென்ற இடத்தை பார்த்த மதிவதனிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மதிவதனி இண்டர்வியூவில் தேர்வான KN குரூப் ஆப் கம்பெனி முன் தான் அவர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் கார் உள்ளே நுழைந்ததும் செக்யூரிட்டி அவர்களை பார்த்து வணங்கினார்.மதிவதனிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இந்த கம்பெனி MD உங்களுக்குத் தெரியுமா?”

“ஓ...தெரியுமே.....இந்த கம்பெனி சேர்மேன், எம்.டி எல்லாரையும் நல்லா தெரியும்! இன்ஃபாக்ட் சேர்மேன் எனக்கு சின்ன வயசுலிருந்து தெரியும், சரி வா உள்ளே போகலாம்”

உள்ளே சென்றவுடன் அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர். பின்பு அவன் எம்.டி ரூம் கதவை திறந்துக் கொண்டு எம்.டி சேரில் சென்று அமர்ந்தான். மேஜையில் கோட்டை எழுத்துகளில் S மனோரஞ்சன் MD என்று போடப்பட்டிருந்தது.

மதிவதனி வாயை பிளந்துக் கொண்டு நின்றாள்.

மனோரஞ்சனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் வாயை பிளந்துக் கொண்டு நிற்பதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.
அவள் செல்ல கோபத்துடன் அவனை அடிக்கக் கையை ஓங்கினாள்,

“ச்சே என்னை இப்படியா ஏமாத்துவீங்க?! எல்லாம் பொய். ச்சே”

“ஏய்! நான் எப்போ பொய் சொன்னேன்?!”

“அன்னிக்கு நான் KN க்ரூப்ஸ் இண்டர்வியூல செலக்ட் ஆயிருக்கேனு சொன்னப்போ நீங்க ஒன்னுமே சொல்லல.”

“ஒன்னுமே சொல்லாம தானே இருந்தேன். நம்ம கம்பெனி இல்லேன்னு சொன்னேனா?”

“சரி இப்பவாது சொல்லிருக்கலாம்ல?”

“இப்பவும் நான் ஒன்னும் பொய் சொல்லலயே! எம்.டி எனக்கு நல்லா தெரியும்னு சொன்னேன். அது நான் தான்,எனக்கே என்னை தெரியாதா என்ன?அப்புறம் சேர்மேன் எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும்னு சொன்னேன். அதுவும் உண்மை தானே. என் அப்பாவை எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும் தானே.” என்று கூறிவிட்டு சிரித்தான்.

“ச்சே! எல்லாம் ஏமாத்து வேலை” கடிந்து விட்டு பின் ஒரு நிமிடம் யோசித்தாள்,”ஆனா நம்ம கம்பெனி பேரு ‘வானவில் இண்டஸ்ட்ரீஸ்’ தானே?

“ஹ்ம்ம்...அது தான் பேரன்ட் கம்பெனி. இது பார்ட்னர்ஸ் கூட ஆரம்பிச்சது. இதுல நமக்கு 60% ஷேர்ஹோல்ட் இருக்கு”

“ஓ.....சரி சரி,ஆனா.....நான் இண்டர்வியுவுக்கு வரும் போது உங்கள பாக்கவே இல்லையே?!”

“ஆமா அக்கௌன்டன்ட் போஸ்ட்க்கு உங்களுக்கு எம்.டி வந்து இண்டர்வியு எடுப்பாராக்கும்?!”

“ஆமால”

“உன் கேள்வியெல்லாம் முடிஞ்சுடுச்சா?”

“ஹ்ம்ம்.....இன்னொரு டவுட். மாமா எனக்கு நம்ம கம்பெனில வேலை குடுக்க வேணாம்னு தானே சொன்னாரு?”

“உனக்கு இப்போ வேலை குடுக்க போறேன்னு யார் சொன்னா?”
அவள் முகம் சுருங்கியது,”பின்ன எதுக்காம் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க?”

“நீயும் நம்ம கம்பெனி பத்தியெல்லாம் தெரிஞ்சு வச்சிகனும்ல”

“அவ்ளோ தானா?” தனக்கு வேலை குடுக்க அவன் கூட்டி வரவில்லையென்ற வருத்தம் அவள் குரலில் தெரித்தது.

“அவ்ளோ தான். வேற என்ன?”

அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று ஒருவர் உள்ளே வந்தரர்.

அவரை பார்த்ததும் அவர் தான் தன்னை இண்டர்வியு பண்ணினார் என்பது புரிந்தது.

“இதோ இவர் தானே உன்னை இண்டர்வியு பண்ணினது? இவர் அசோக். நம்ம சீனியர் அக்கௌன்டன்ட். ஆல்சோ மை அனதர் பெஸ்ட் ஃபிரெண்ட்” என்று அவரை அறிமுகப்படுத்தினான்.

“குட் மார்னிங் மேடம்” என்று அவளை பார்த்து அவர் வணங்கினார்.

மதிவதனிக்கு மிகவும் கூச்சமாக போய் விட்டது. நம்மளை இண்டர்வியு பண்ணினவரே நம்மை பார்த்து வணங்குறாரே என்று தயக்கமாக பதில் வணக்கம் சொன்னாள்.

“அசோக். நான் சொன்ன மாதிரியே நம்ம கிளயன்ட்க்கு மதுவை பத்தி ஒரு இன்ட்ரோ குடுத்துடுங்க.நான் அவங்க எம்.டி கிட்ட ஏற்கனவே பேசிட்டேன்.சோ நீங்க ஃபர்தரா கன்டின்யு பண்ணுங்க”

“ஓகே சார்.மேடம் நான் வெளிய வெயிட் பண்றேன். நீங்க வாங்க”

அவர் சென்றதும் மதிவதனி இடுப்பில் கை வைத்துக் கொண்டு
அவனை முறைத்தாள்.”என்ன நடக்குது இங்க?”
மனோரஞ்சன் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.

“ரஞ்சன்....உங்கள தான் கேக்குறேன்.என்ன நடக்குது இங்கே?”

“பார்றா! இன்னிக்கு என் பொண்டாட்டி என்னை பேர் சொல்லிக் கூப்புட்டுட்டா”

அவன் சொன்ன விதத்தில் மதிவதனியின் முகம் சிவந்தது. எதுவும் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அது ஒண்ணுமில்லேமா,யோசிச்சி பார்த்தேன்,உன்னோட இன்ட்ரஸ்ட் எது?டிசைனிங் தானே?அப்புறம் எதுக்கு சும்மா படிச்ச படிப்புக்காக உப்புக்கு சப்பா பிடிக்காத ஒரு வேலை பார்க்கணும்?படிப்புக்கு ஏத்த வேலை பாக்குறத விட, மனசுக்கு பிடிச்ச வேலை பாக்குறதில தான் சந்தோஷம் இருக்கு”

“நம்ம கிளயன்ட் ஒருத்தர், அவரு ஆரம்பிக்க போற புது யூனிட்டுக்கு கொஞ்சம் இன்னோவேடிவ் டிசைன்ஸ் வேணும்னு சொன்னாரு. அவரு கிட்ட உன்னை பத்தி சொல்லிருக்கேன். அவரு கிட்ட உனக்கு என்ன ஐடியாஸ் தோணுதோ அதை சொல்லு. அவருக்கும் பிடிச்சிருந்து, உனக்கும் இந்த வேலை பிடிச்சிருந்தா அப்படியே அதை அடுத்த லெவலுக்குக் கொண்டு போறத பத்தி யோசிக்கலாம். என்ன சொல்ற?”

மதிவதனிக்கு மயக்கம் போடாத குறை தான்.”ரன்....ரஞ்சன்....நீங்க இப்போ என்ன சொன்னீங்க?நான் டிசைனிங் பண்ண போறேனா?அதுவும் புதுசா ஆரம்பிக்க போற ஒரு கம்பெனிக்கு?”

“ஏன் டி? இவ்ளோ நேரம் வாய் வலிக்க அதைத் தானே சொல்லிட்டுருந்தேன்?

“அப்போ உண்மையாவே நான் டிசைனிங் பண்ண போறேனா?”

“அடிங்க....இன்னொரு தடவை கேட்டேனா,பிச்சிபுடுவேன். போ போய் அசோக்கை பார்த்து பேசு”

“இல்லே ரஞ்சன்.நான் டிசைனிங் சமந்தமா எதுவுமே படிக்கல. அதான்....”

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது மது. மேரி கோம் தெரியும்ல. அவங்க ஸ்கூல் படிப்பைக் கூட முடிக்கல. பாக்சிங் தான் அவங்க லட்சியம்னு அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. இதேமாதிரி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாருமே அவங்க கனவுகளை பின் தொடர்ந்து போனாங்க. அதுல அவங்க ஜெயிக்கவும் செஞ்சாங்க”

“உனக்கு திறமை நிறையவே இருக்கு மது. அன்னைக்கு நம்ம ரிசெப்ஷனுக்கு ஒரு சாரி நீயே டிசைன் பண்ணினியே. அது ரொம்ப நல்லா இருந்துச்சு. நான் இந்த ஃபீல்ட்ல இருக்கிறதால சொல்றேன். நீ பண்ணின அந்த டிசைன் ரொம்ப இன்னோவேடிவ். அதனால தான் இந்த வேலைக்கு ஏற்பாடு செஞ்சேன்” என்று கூறிவிட்டு அவளை அசோக்கை சென்று பார்க்குமாறு பனிந்தான்.

மதிவதனி அன்று நாள் முழுவதும் கனவில் மிதப்பது போலவே நடந்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்தபடியே அந்த கிளயன்டிடம் பேசிவிட்டு அவர்களுக்கு என்ன மாதிரி டிசைன்ஸ் வேண்டுமென்று குறிப்பெடுத்துக் கொண்டாள்.

வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலை இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர். காரில் ஏறி அமர்ந்து அவர்கள் கம்பெனி கேட்டை தான் தாண்டியிருப்பர், அப்பொழுது மதிவதனி வெளியே எதையோ பார்த்து அலறினாள்.....

புலரும்
 
Top