Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகிழ்ச்சியான பகிர்வு

Advertisement

வணக்கம் வாசக தோழமைகளே 🩷

ஒரு மகிழ்ச்சியான செய்தியை தங்களிடம் பகிரவே வந்திருக்கிறேன்.

சுந்தர நேசங்கள் கதை ஆரம்பித்தது சொக்கனின் மீனாள் கதையில் இருந்து தான்.

ஒரு மாதிரியான ரைட்டர்ஸ் பிளாக் என்பார்களே அப்படி இடையில் சில மாதங்கள் என்னால் எதுவும் எழுத முடியாமல் தடுமாறிய நாட்களில் இருந்து என்னை நானே மீட்பதற்காக எழிலன்பு தளத்தின் குறுநாவல் போட்டியில் பங்கேற்று சொக்கனின் மீனாள் எழுதினேன். ஈசனின் அருளால் பலரின் பாராட்டைப் பெற்றது.

கதை எழுதி முடித்ததும், இக்கதைக்கு கிடைத்த ஆதரவும் பாராட்டுக்களுமே அடுத்து சுந்தரராஜனுக்காக ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

அச்சமயம் பிரதிலிபி தளத்தில் 'சூப்பர் எழுத்தாளர் 4' போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போட்டிக்கு நூறு பாகங்கள் கொண்ட கதையாக அன்னத்தின் கதையும் சேர்ந்து எழுதலாம் என முடிவு செய்து சுந்தர நேசங்கள் என்று பெயரிட்டேன்.

அப்போட்டியில் நூறு பாகங்கள் கொண்ட சுந்தர நேசங்கள் கதையை எழுதி முடித்து விட்டு தான் இங்கு அடுத்து எங்கேயோ பார்த்த ஞாபகம் கதையை எழுத வந்தேன்.

அப்படி நான்‌ எழுதிய சுந்தர நேசங்கள் கதைக்கு அப்போட்டியில் சிறப்புப் பரிசு கிடைத்தது.

அப்பரிசுக்கான சான்றிதழ் இன்று என் கைக்கு வந்து சேர்ந்தது என்பதை தங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
Congratulations, well done 👏 👏👏
 
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your success ma💐💐💐
 
Top