மனைவி - 17

Advertisement

மனைவி - 17

“ இன்னைக்கு அப்பா! உங்க கூட தான் இருக்கப் போறேன். படிச்சு முடிச்சிட்டீங்களா? ஹோம் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டீங்களா?" என்று தன் மகன்களிடம் கேட்க,

"ஓ மை காட் அப்பா! நாங்க வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது. கொஞ்ச நேரம் விளையாடுறோம், அப்புறமா நாங்க ஹோம் ஒர்க் பண்றோம்," என்று அந்த வாண்டுகள் செல்லமாகச் சிணுங்கின.

இருவரும் கெஞ்சிக் கேட்கும் அந்த அழகைக் கண்ட பிறகு, பிரபாகரனால் 'வேண்டாம்' என்று சொல்ல முடியவில்லை.

ஆனால், ராதையின் தற்போதைய கோலமும் அவளது பிள்ளைகள் நிலையும் அவனை அடியோடு நிலைகுலைய வைத்திருந்தது. உள்ளுக்குள் ரத்தம் கசிவது போன்ற வலி. யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்காமல், கால்கள் பின்ன பின்ன, தன் அறைக்குள் சென்று ஒரு நடைபிணமாக சோர்வாக படுத்துக்கொண்டான்.

அதே சமயம், ஸ்ரீராம் அறைக்குள் தஞ்சம் புகுந்தவன், அந்த நான்கு சுவர்களுக்குள் தன்னைச் சிறை வைத்துக் கொண்டான். அறையை விட்டு வெளியே வரவே இல்லை. வெளியே நின்ற கலை, தன் மகனை எவ்வளவோ உருக்கமாக அழைத்துப்பார்த்தார்.

ஆனால், அவன் ஒரு கல்லைப் போல அசையவே இல்லை. உள்ளே அவன் மனம் எத்தனை துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது அவனுக்கும் அந்த இறைவனுக்கும் மட்டுமே வெளிச்சம்.

"இவன் இப்படியே இருந்தா நமக்குத்தான் சிக்கல். எதையாவது நோண்டி உண்மையை வெளியே கொண்டு வந்திடுவான். இவனை இதே கோபத்தோட, அந்த ராதைக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்ப வைக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம்?" என்று அந்த மூன்று பெண்களும் ஒரு மூலையில் கூடி ரகசியமாகச் சதித் திட்டம் தீட்டத் தொடங்கினர்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் யோசித்தும் அவர்களுக்கு ஒரு சரியான ஐடியா கிடைக்கவில்லை. அப்போது மலர் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்தாள்.

சட்டென்று அவள் முகம் பிரகாசமானது. "அம்மா! எனக்கு ஒரு சூப்பர் ஐடியா. இந்த மாதிரி நம்ம செஞ்சோம்னா, கண்டிப்பா எல்லாமே நமக்கு சாதகமாக நடக்கும்," என்றாள் வஞ்சகச் சிரிப்புடன்.

கலை தன் மகளைச் சந்தேகமாக பார்த்தார். "நாம மாட்டிக்கிற மாதிரி ஏதாவது சொதப்பலான ஐடியா சொன்னா, உன்னை இங்கேயே துவைச்சு எடுத்துடுவேன், ஜாக்கிரதை!" என்று எச்சரித்தார்.

"அம்மா! நான் சொல்றதை முதல்ல முழுசா கேளு, அதுக்கப்புறம் பேசு," என்று சொன்ன மலர், அந்தப் பயங்கரமான திட்டத்தை இருவர் காதுகளிலும் குசு குசுவென ரகசியமாக விளக்கினாள்.

அலர் தன் தங்கையை உற்சாகமாகக் கட்டிக்கொண்டாள். "உனக்கும் மூளை இருக்குன்னு இன்னைக்கு நிரூபிச்சிட்ட மலர்! ஐடியா சும்மா நச்சுன்னு இருக்கு. இதை அப்படியே ஃபாலோ பண்ணிட வேண்டியதுதான்," என்று சொல்ல, கலையும் அந்தத் திட்டத்தின் குரூரத்தை உணர்ந்து சம்மதித்தார்.

"சரி அலர், நீ போனை எடுத்துட்டு தூரமா போயிரு. மலர் இங்கேயே இருக்கட்டும். இந்த இடத்துக்குள்ளே இருந்தா குரல் சரியா கேட்காது, மாட்டிப்போம். நீ ரொம்பத் தூரம் போயிட்டாதான் அங்கிருந்து பேசுறது கரெக்டா இருக்கும்," என்றார் கலை.

பாவம் ராதை! அவசரத்திலும் பதற்றத்திலும் தன் செல்போனை அங்கே மறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அலர், போனைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு... கலை தன் நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கினார்.

"ராதை! வீட்டுக்கு வந்துடும்மா... ஸ்ரீராம் இன்னைக்குத்தான் ஊருக்கு வந்தான். இத்தனை வருஷம் காடு மேடுன்னு கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சுட்டு, இன்னைக்கு என் புள்ள வாழ்க்கை இழந்துட்டு நிக்கிறான். இப்ப நீ அவனை விட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்? அவன் இப்படித் தனிமரமா நிக்கலாமா? என் புள்ள வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே வீணாப்போறதை என்னால சும்மா பார்த்துட்டு இருக்க முடியலையே ராதை!" என்று நெஞ்சைப் பிசைவது போல் ஓவெனக் கதறி அழுதார்.

பெத்த தாயின் மரண ஓலமும், தன் உயிரான மனைவியின் பெயரும் காதில் விழவே, ஸ்ரீராம் வெறிபிடித்தவனைப் போலக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தான். அவன் கண்கள் சிவந்து போயிருந்தன.

மலர் தன் தாயின் கையை மெல்ல கிள்ளினாள். அதுதான் சிக்னல்!

உடனே கலை இன்னும் சத்தமாக, "நீ அப்படியெல்லாம் பேசக்கூடாது ராதை. என்ன இருந்தாலும் இது உன்னோட குடும்பம். ஸ்ரீராம் உன் புருஷன். புருஷன் பொண்டாட்டி குள்ள ஆயிரம் சண்டை வரும், அதுக்காக இப்படியா பேசுவ? இதைக் கேக்குறப்போ என் மனசும் பெத்த வயிறும் எப்படி எரியுது தெரியுமா?" என்று குலுங்கி குலுங்கி அழுதார்.

ஸ்ரீராமின் கண்கள் கூர்மை அடைந்தன. தாடை நரம்புகள் புடைக்க முகம் இறுகிப் போனான்.

"அம்மா! போனை என்கிட்ட கொடுங்க. என்னதான் சொல்றாங்க அந்த அண்ணி?" என்று கேட்ட மலர், வேகமாகப் போனைப் பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டாள். "ஹலோ அண்ணி!" என்று கத்தினாள்.

முட்டாளான ஸ்ரீராம்! பல வருடங்கள் பிரிந்திருந்ததால், தன் மனைவியின் குரலை ஒருமுறை கூட போனில் கேட்காத அந்த மந்தபுத்தி, அந்தப் பக்கம் பேசுவது தன் சொந்தத் தங்கையென்று கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரத்த பாசமே அவனைக் குருடாக்கி வைத்திருந்தது.

மறுமுனையில் அலர், ராதையின் குரலைப் போல மாற்றிப் பேசினாள்: "எனக்கு நீங்களும் வேணாம், உங்க பிள்ளையும் வேணாம்! அது ஒன்னும் என் குடும்பம் கிடையாது. எனக்கு அந்த வீடும் வேணாம், வாசல்ப்படியும் வேணாம். நான் தான் வந்துட்டேன்ல, அப்புறம் எதுக்கு எனக்குப் போன் பண்ணித் தொந்தரவு பண்றீங்க? நான் இனிமே என் வாழ்க்கையை எனக்காக வாழப்போறேன். உங்க கட்டுப்பாட்டுல இருக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. எனக்குன்னு ஒரு நல்ல பார்ட்னர் கிடைச்சிட்டான். அவன் கூட நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். எப்படா அந்த நரகத்துல இருந்து வெளியே வருவேன்னு காத்துட்டு இருந்தேன், இப்ப வந்துட்டேன். நான் ரொம்ப சுதந்திரமா இருக்கேன், இனிமே எனக்கு என் சந்தோஷம் தான் முக்கியம்!"

தொடர்ந்து அலர் கர்ஜித்தாள், "நீயும் உன் பிள்ளையும் என்ன ஆனா எனக்கென்ன? நீங்க செத்தே போனாலும் அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை. உன் புள்ளையெல்லாம் ஒரு ஆம்பளையே கிடையாது! அவன் கூட என்னால வாழவே முடியாது!"
ராதையாக மாறி அலர் பேசிய அந்தத் தரம் தாழ்ந்த வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீராம், ஆத்திரத்தில் ஒரு காட்டுமிராண்டியாக மாறினான்.

"மேலே! போனை என்கிட்ட கொடுங்க!" என்று பிடுங்கியவன்,

"நீ என்னடி என் கூட வாழ முடியாதுன்னு சொல்றது? நான் சொல்றேன்... இனிமே எனக்கு நீ வேண்டாம்! நாளைக்குக் காலையில உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புறேன். உன்னைப் மாதிரி ஒரு தப்பான, கேவலமான, தரங்கெட்ட பொம்பளையோட வாழ்றதுக்கு நான் காலம் முழுக்க தனியாவே செத்துடலாம். நீ மட்டும் தான் ஒரு ஆம்பளையைப் பிடிச்சு வாழ முடியுமா? என்னால ஒரு பொம்பளை பிடிச்சு வாழ முடியாதா? உன்னை விவாகரத்து பண்ண ஒரு வாரத்தில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக் காட்டுறேன். என்னைப் பார்த்து ஆம்பளை இல்லைன்னு சொன்னல்ல? நான் யாருன்னு நிரூபித்துக் காட்டுறேன்!" என்று வீறு கொண்ட சிங்கமாக, கனல் தெறிக்கும் கண்களுடன் கத்தினான்.

இதைப் பார்த்து கலையும் மலரும் மனதிற்குள் கொடூரமான சந்தோஷத்தில் மிதந்தனர்.

தன் ஆத்திரத்தை எல்லாம் அந்தப் போனில் கக்கித் தீர்த்த ஸ்ரீராம், மனதின் பாரம் தாளாமல் அந்தப் போனைத் தூக்கித் தரையில் அடித்துச் சுக்குநூறாக உடைத்தான்.

அது ராதையின் குரல் இல்லை என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை.
வேகமாக தன் தாயிடம் திரும்பியவன்,

"அம்மா! இன்னொரு முறை அவகிட்ட கெஞ்சிட்டு இருந்தீங்கன்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன். இப்படிப்பட்ட ஒரு பொம்பளையோட வாழணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. அவளுக்காகவா நான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேன்? என் புத்தியைச் செருப்பால தான் அடிச்சுக்கணும். நாளைக்கே லாயரைப் பார்த்து டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன். அவளை டைவர்ஸ் பண்ணிட்டுத் திரும்பவும் நான் வெளிநாட்டுக்கு போயிடப் போறேன். இனிமே நான் இங்கே இருக்க மாட்டேன்!" என்று வேதனையிலும் வலியிலும் கத்திவிட்டு, மின்னலென வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் வெறி பிடித்தவனைப் போல நடந்தே சென்றான். இத்தனை வருடங்கள் அயல்நாட்டில் ரத்தம் சிந்திச் சம்பாதித்தும், அவனுக்கு என்று அந்த வீட்டில் ஒரு பைக் கூட கிடையாது. அவன் உழைப்பு எல்லாம் எங்கே போனது?

தன் கண்கள் எதற்காகக் கண்ணீரைச் சொரிகின்றன என்று அவனுக்கே புரியவில்லை.

அவமானம், ஏமாற்றம், வலி எல்லாம் சேர்ந்து அவனைக் கசக்கி பிழிந்தன. கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவன் நீண்ட தூரம் நடந்து கொண்டிருந்தான். மன வலியைத் தாண்டி உடல் வலி அவனுக்குத் தெரியவில்லை.

ஏதேதோ ஆசைகளோடும், பல வண்ணக் கனவுகளோடும் ஊருக்கு வந்தவனுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டுமே. ஆனால், இந்தப் பாவப்பட்ட முட்டாள் குருடனுக்கு ஒன்று புரியவில்லை... அவன் பார்த்தது, கேட்டது எல்லாம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று!

இதன் பின்னால் இருக்கும் கசப்பான உண்மை தெரியவரும் போது, அவன் இப்போது துடிப்பதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக துடிக்க போகிறான் என்பது விதி.

அலர் மூச்சிரைக்க ஓடி வந்தாள். "அம்மா! எப்படி? நம்ம பிளான் வொர்க் அவுட் ஆச்சா?"

"வொர்க் அவுட் ஆச்சான்னு கேட்குற? ஸ்ரீராமை விட்டா இன்னைக்கே அவளைத் தூக்கி எறிஞ்சிடுவான் போல இருக்கு. இனிமேல்தான் நாம நினைச்சபடி ராஜாதி ராஜாவா சந்தோஷமா இருப்போம்!" என்று கலை இறுமாப்புடன் சொன்னார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்க மூன்று பெண்கள் சேர்ந்து சதி செய்து குத்தாட்டம் போடும்போது இன்பமாகத்தான் இருக்கும். ஆனால், இதே கொடுமை நாளை அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு நடக்கும்போது, காலம் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரும் என்பதை அவர்கள் மறந்தார்கள்.

இவர்கள் ஆடிய இந்த நாடகத்தை எல்லாம் அசோக் ஒரு ஓரமாக நின்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மனதுக்குள் அருவருப்பு பொங்கியது.
"இவங்க எல்லாம் பொம்பளைங்களே கிடையாது. எதுக்கு அந்தப் பிரபாகரன் இவங்களைப் பார்த்தாலே எரியுறான்னு இப்பதான் எனக்குப் புரியுது. பொம்பளைங்க உருவத்துல இருக்கிற பேய்கள்! மூணு பேரும் சேர்ந்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை வேரோடு அறுக்குறாங்க. இந்தப் பொண்ணை அனுப்பிட்டு வேற ஒருத்தியைக் கொண்டு வந்தாதான் இவங்களுக்குக் கஷ்டம் தெரியும். ராதை பாவம் அடங்கிப் போனா... வேற யாராவது வந்தா இவங்களை வீட்டை விட்டு ஓட விடுவா!" என்று நினைத்தான்.

தொடரும்......
அடக்கடவுளே இவனெல்லாம் ஒரு ஆம்பள முட்டாப்பயல் என்ன தான் வெளிநாட்டுல கத்துட்டு வந்தானோ பொண்டாட்டி குரல் கூட தெரியாத கூமுட்ட, இவனுக்கு ரெட்டை பெண் குழந்தைகள் இந்த லட்சணத்துல
 
intha thodappa kattaikku wife kurale theriyala avala vachi vazha thuppilla ivannukku innoru kalyanam vera kedu
 
அசோக்கே இப்படி யோசிக்க வெச்ச பெருமை அந்த கல்லு வீட்டு பொண்ணுகளை சேரும் 😏😏😏😏

ஸ்ரீராம் 🤬🤬🤬🤬🤬🔪🔪🔪🤐🤐🤐🤐 நீ எல்லாம் எப்படி வெளிய போய் சம்பாதிச்ச 🤐🤐🤐🙄🙄🙄🙄
 

Advertisement

Advertisement

Back
Top