மனைவி - 18
"ராதை மாதிரி ஒரு மனைவி கிடைக்க ஸ்ரீராம் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா அவனுக்கு வாழத் தெரியல. நமக்கு அப்படி ஒருத்தி கிடைக்கக் கொடுத்து வைக்கல," என்று அசோக் ஏக்கமாகப் பெருமூச்சு விட்டான்.
அங்கே, ராதை தன் மகளுக்குப் பாசத்துடன் ஊட்டி விட்டாள். தன் இரு மகள்களையும் அணைத்தபடி அவர்கள் உறங்கும் அழகை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த அந்த அமைதி அவளுக்குப் பெரிய நிம்மதியைத் தந்தது. சந்தோஷத்திலும் நிம்மதியிலும் அவள் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் மெல்ல வழிந்து கன்னங்களை நனைத்தது.
இந்த நாளுக்காக... இந்த ஒரு நொடிக்காக எத்தனை வருடங்கள் தவம் இருந்தாள்? அவளின் ஒரு காத்திருப்பு பொய்த்துப் போனாலும், இன்னொரு காத்திருப்புக்கான பலன் அவளுக்குக் கிடைக்காமல் போகாது என்றே காலம் அவளுக்குச் சொல்லாமல் சொல்லியது.
வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதிலேயே, ஸ்ரீராம் மெல்ல எழுந்து யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றிருந்தான்.
வழக்கமாக அந்த வீட்டில் விடியல் என்பது ராதையின் கைவண்ணத்தில் தொடங்கும்.
அவள் இருந்தவரை விடியும் முன்பே காபி வாசம் முதல் சமையல் வாசம் வரை அனைத்தும் அவர்கள் கைக்கு வந்து சேரும்.
ஆனால் இன்று? சமையலறை பாத்திரங்கள் கூட நேற்றைய எச்சங்களோடு கழுவப்படாமல் அநாதையாய் அடுக்கிக் கிடந்தன.
கலை மெதுவாகக் கண்ணைத் திறந்து எழுந்தவர், பல வருஷப் பழக்க தோஷத்தில், "ஏய் ராதை! டீ எங்கேடி?" என்று அதிகாரத் தொனியில் கத்தினார்.
கத்திய பிறகுதான் அவர் மண்டையில் உறைத்தது, அவள் அந்த வீட்டில் இல்லை என்பது. முகத்தைச் சுழித்துக்கொண்டு சலிப்போடு எழுந்து வெளியே வந்தவர், சமையலறையின் அலங்கோலத்தை பார்த்ததும் அப்படியே கடுப்பானார்.
அறை முழுவதும் பாத்திரங்கள் குப்பையாக இறைந்து கிடந்தன.
இவருக்கு வேலை செய்து துளியும் பழக்கம் இல்லை. இதில் இவர் செல்லமாக வளர்த்த மகள்கள் எழுந்து வேலை செய்து விடுவார்களா என்ன? ஆளுக்கு ஒரு அறையில் மின்விசிறி காற்றில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
"ஸ்ரீராம் எங்கே போனான்?" என முணுமுணுத்தபடி அவன் அறை கதவை திறந்து பார்த்தவர், அவன் அங்கே இல்லாததைக் கண்டு அதிர்ந்து போனார்.
"என்ன இவனைக் காணோம்? காலையிலேயே எழுந்துட்டானோ? எங்கே போயிட்டான் என் மகன்?" என்று பத்து மணி வரை வாசலுக்கும் அறைக்கும் மாய்ந்து மாய்ந்து தேடிக்கொண்டிருந்தார்.
சரியாக அந்த நேரம் ஸ்ரீராம் வீட்டிற்குள் நுழைந்தான். வாசலில் ஒரு நிழல் ஆடுவதைக் கண்டதும் கலை எட்டிப் பார்த்தார். மகனைக் கண்டதும் அவருக்குப் போன உயிர் திரும்ப வந்தது போல ஒரு பெருமூச்சு விட்டார்.
"ஸ்ரீராம், எங்கே போயிட்டு வர்ற இவ்வளவு காலையிலேயே?"
"லாயரைப் பார்த்துட்டு வரேன் அம்மா. ஆன்லைன் மூலமா ஒரு லாயரைக் கண்டுபிடிச்சு நேத்து நைட்டே பேசிட்டேன். இன்னைக்கு அவங்க அந்த நோட்டீஸை அனுப்பிடுவாங்க" என்று அழுத்தமாகச் சொன்னான்.
கலைக்குத் தூக்கி வாரிப் போட்டது. "மகன் நான் நினைத்ததை விட ரொம்பவே வேகமா இருக்கிறானே!" என்று மனதிற்குள் யோசித்தபடி சிலையாக நின்றார்.
அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க, ஸ்ரீராம் நேராகச் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
"அம்மா, என்ன சமைச்சிருக்கீங்க? சீக்கிரம் ஏதாவது எடுத்துட்டு வாங்க, பசி உயிர் போகுது" என்றான்.
"சாப்பாடா?" என்று கலை அப்படியே விக்கித்து நின்றார். மகனின் முகத்தைப் பார்த்தவர் சமாளிக்க முடியாமல் தவித்தார்.
தாயின் முகமாற்றத்தை கண்டவன், "என்ன ஆச்சுமா?" என்று கேட்டான்.
உண்மையைச் சொன்னால் மகனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், "இல்லடா... அம்மா கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்றியா? நான் இப்பவே ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வர்றேன்" என்றார் பதற்றமாக.
"சரி, நான் வெயிட் பண்றேன். நீங்க போய் சீக்கிரம் ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வாங்க" என்று அவன் சொல்ல, வேறு வழியின்றி சமையலறைக்குள் நுழைந்த கலை தன் பல்லைக் கடித்தார்.
"இப்ப எல்லா வேலையும் நானே செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சே! இவன் வேற பசிக்குதுன்னு உட்கார்ந்துவிட்டான்" என்று புலம்பிக்கொண்டே பிரிட்ஜை திறந்து பார்த்தார். நல்லவேளையாக தோசை மாவு இருந்தது.
வேகவேகமாக இரண்டு தோசைகளை ஊற்றி, ராதை ஏற்கனவே அரைத்து வைத்திருந்த இட்லி பொடியில் நல்லெண்ணெய் குழைத்து எடுத்து வந்து மகன் முன்பு வைத்தார்.
"அம்மா, சட்னி எதுவும் இல்லையா?" என்று ஸ்ரீராம் ஏமாற்றத்துடன் கேட்டான்.
"இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஸ்ரீராம். நேத்து அவ பேசின பேச்சு இருக்கே... அந்த வேதனை தாங்க முடியாம அம்மா நைட் எல்லாம் தூக்கமே இல்லாம கஷ்டப்பட்டேன். அதான் உடம்பு ஒரு மாதிரியா இருக்கு. மத்தியானம் உனக்கு பிடிச்ச மாதிரி நல்லதா சமைச்சு தரேன்" என்று ஒரு பொய்யை உருக்கமாக சொன்னார்.
தாயின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை கண்டு வருந்தியவன், "சரிம்மா, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என்று அந்தப் பொடியிலேயே தோசையைத் தொட்டுச் சாப்பிடத் தொடங்கினான்.
தன் தாயின் வேதனை உண்மை என்று நம்பும் இந்த அப்பாவியிடம், அவர்கள் செய்யும் துரோகம் மட்டும் தெரிந்தால் என்ன நடக்குமோ?
கலை மீண்டும் சமையலறைக்குள் சென்று, பாத்திரங்களை வேகமாகத் துலக்கி அடுக்கினார். ராதை அந்த வீட்டிற்கு மருமகளாக வருவதற்கு முன்னால் இந்த வேலைகளை எல்லாம் இவர்தான் செய்தார். இன்று காலம் ஒரு சுழற்சியாக மீண்டும் இவரிடமே அந்த வேலைகளைக் கொண்டு வந்து விட்டுவிட்டது.
அவர் செய்த சதியின் முதல் அடியாக, வீட்டு வேலைகள் அனைத்தும் இப்போது அவர் தலையிலேயே இடியாக விழுந்தன.
அவர் பெற்ற இரு பெண்களும் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்துக் கூடக் கிடையாது. அவரும் அவர்களை அப்படித்தான் செல்லம் கொடுத்து வளர்த்தார். ஆனால் இன்று அதுவே அவருக்குப் பெரும் வெறுப்பாக மாறியது.
"அம்மா, உன் மருமக சமைச்சு முடிச்சுட்டாளா?" என்று மலர் தூக்கக் கலக்கத்தில் சத்தமாகக் கேட்டபடி வெளியே வர, கலையின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
"மலர்! என்ன பேசிட்டு வர்ற?" என்று கலை அவளை அதட்ட, அண்ணன் ஸ்ரீராம் அங்கே உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மலர், திருதிருவென முழித்தாள்.
ஸ்ரீராம் அவள் சொன்னதைச் செவியில் வாங்காதது போல், சாப்பிட்ட தட்டை கொண்டு போய் சிங்க்கில் போட்டு விட்டு, கையை அலம்பிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
"அறிவு கெட்டவளே! எல்லாம் சரியா போயிட்டு இருக்கும்போது நீயே எல்லாத்தையும் கெடுத்துடுவ போல இருக்கே! கொஞ்சம் வாயை மூடிட்டுச் சும்மா இரு. இனிமேல் அவளைப் பத்திப் பேசுறதா இருந்தா, மரியாதையாப் பேசுற மாதிரி நடி. ஸ்ரீராமுக்குச் சந்தேகம் வந்துச்சு, அவ்வளவுதான் நம்ம கதை முடிஞ்சது" என்று மகளின் காதில் கடுகடுவென ரகசியமாகக் கத்தினார்.
"சாரிம்மா, பழக்க தோஷத்துல மறந்துட்டேன். சரி விடு... எனக்கு ரொம்பப் பசிக்குது, என்ன இருக்கு சாப்பிட?" என்றாள் மலர்.
"தோசையும் பொடியும் தான் இருக்கு, போய் தின்னு."
"என்னம்மா! யாராவது பொடி வெச்சு சாப்பிடுவாங்களா? எனக்கு இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி வேணும்" என்று அடம் பிடித்தாள்.
"பல்லையெல்லாம் கழட்டிடுவேன் பாரு! அண்ணனே இப்பதான் பொடி வச்சுச் சாப்பிட்டுப் போனான். உங்களுக்குத் தனியா செஞ்சா அவனுக்குச் சந்தேகம் வரும். பேசாம அதையே சாப்பிடுங்க. இல்லைன்னா மதியம் வரைக்கும் வாயைக் கட்டிக்கிட்டு இருங்க" என்று மகளை அடக்கிவிட்டு, மகனின் மனதில் சந்தேகம் வராதவாறு மீண்டும் வேலைக்குள் மூழ்கினார் கலை.
மலர் மீண்டும் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். அலர் இன்னும் எழுந்தே வரவில்லை.
கலை தனி ஒரு ஆளாக மொத்த சமையலறையையும் சுத்தம் செய்துவிட்டு, கடகடவென்று மதிய உணவைச் சமைக்கத் தொடங்கினார்.
மறுபுறம், ராதை அதிகாலையிலேயே எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்திருந்தாள். மகள்களைக் குளிப்பாட்டி, தலைவாரி அழகாக அமர வைத்தாள்.
"அம்மா, எங்களோட ஸ்கூல் பேக், யூனிபார்ம் எல்லாமே மாமா வீட்டிலேயே இருக்குதே... இப்ப என்ன பண்றது?" என்று கவலையோடு கேட்டாள் மூத்தவள்.
"அம்மா ஏதாவது ஒரு வழி பண்றேன் செல்லம். இன்னைக்குக் கலர் டிரஸ் போட்டுக்கிட்டே ஸ்கூலுக்குப் போங்க. நாளைக்கு எப்படியாவது உங்க யூனிஃபார்ம், புக்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுறேன்" என்று மகள்களைச் சமாதானம் செய்தாள்.
இருவரையும் இரு கைகளில் இறுக பிடித்தபடி அவர்களின் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்.
இருவரும் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். ஆட்டோவில் மகள்களை அழைத்துச் சென்ற சீதா, பள்ளி தலைமையாசிரியரிடம் நிலைமையை விளக்கி பேசி, அவர்களைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்தாள்.
ஆனால், அவளுக்குள் ஒரு தவிப்பு இருந்தது. அந்த வீட்டிற்குப் போய் எப்படித் தன் பிள்ளைகளின் பொருட்களை எடுப்பது?
அங்கு சென்றால் அவமானங்கள் காத்துக் கிடக்கும் என்று தெரிந்தும், மகள்களின் படிப்புக்காகப் போய் ஆக வேண்டும் என்று முடிவெடுத்து, நேராகத் தன் அண்ணன் வீட்டிற்குச் சென்றாள் ராதை.
ராஜலட்சுமி வாசலில் அமர்ந்து பல்லுக் குத்திக் கொண்டிருந்தாள். ராதை வருவதைக் கண்டதும் அவளுக்குள் ஒரு ஏளனம் பிறந்தது.
"என்னடி, அவ்வளவு வீராப்பா போனவ? ஒரே நாள்ல அட்ரஸ் தெரியாம திரும்பி வந்துட்டியா? ஆமா, இந்த ஒரு நைட்டு நீ எங்கே தங்கி இருந்த? எவன் கூடத் தங்கி இருந்தியோ?" என்று நாக்கற்றவள் போல் இழிவாகப் பேசினாள்.
"உங்ககிட்ட அனாவசியமா பேச நான் வரல. உங்க உதவியைத் தேடியும் நான் இங்க வரல. என் பிள்ளைகளோட ஸ்கூல் பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நீங்களா மரியாதையா எடுத்துக் கொடுத்துட்டா சத்தம் இல்லாம போயிடுவேன். இல்லைன்னா, நான் ஊர் தலைவர் கிட்ட போய் பஞ்சாயத்தை கூட்டி என் பிள்ளைங்க பொருளை எடுப்பேன்" என்று ராதை ஆணித்தரமாகப் பேச,
ராஜலட்சுமிக்கு தூக்கி வாரிப் போட்டது.
இதற்கு முன்பு ராதை இவ்வளவு துணிச்சலாகப் பேசியதே கிடையாது.
யார் என்ன சொன்னாலும் அழுதுகொண்டே தலைகுனிந்து நிற்கும் அந்தப் பழைய ராதை இவள் இல்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
அதற்குள் மருதுபாண்டி உள்ளிருந்து ஓடி வந்தான். "என்னடி வாய் ரொம்ப நீளுது? அண்ணிங்கிற மரியாதை கூட இல்லாமப் பேசுற? படிச்சிருக்கோங்கிற திமிருதானே உனக்கு? உன்னையெல்லாம் படிக்க வைக்க கூடாதுன்னு அன்னைக்கே சொன்னேன், உன் அம்மா கேட்டாளா? இன்னைக்கு அந்தத் திமிர் தானே புருஷனை விட்டுட்டு வந்து இப்படித் திமிரா பேசுற?" என்று சீறினான்.
தொடரும்.....