மனைவி - 25

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 25

நீதிபதி ஆணித்தரமாகத் தன் குரலை உயர்த்தினார், "உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன் மிஸ்டர் ஸ்ரீராம்! இப்படிப் பதில் சொல்லாம அமைதியா இருந்து கோர்ட் டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது. நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணி தான் இந்த டிவோர்ஸ் கேட்டு வந்திருக்கீங்களா இல்லையா? சொல்லுங்க!"

ஸ்ரீராமின் தொண்டை அடைத்தது. ஒரு கணம் தன் எதிரே நின்ற மனைவியைப் பாராமலேயே, "ஆமாம் மேடம்..." என்று மெலிதான குரலில் முதலில் பதில் சொன்னான்.

"என்ன காரணத்துக்காக இந்த டிவோர்ஸ்? சொல்ல வேண்டியது உங்க கடமை."

ஸ்ரீராமின் நெஞ்சு குமுறியது. 'என் மனைவி நடத்தையில் தவறானவள்' என்று இத்தனை பேர் முன்னிலையில், அந்தப் புனிதமான நீதிமன்றத்தில் அவனால் சொல்ல முடியவில்லை. வார்த்தைகள் நாக்கின் நுனி வரை வந்து வந்து தவித்தன.

அப்போது ராதை குறுக்கிட்டாள். அவளது குரலில் ஒருவிதமான வைராக்கியமும், அதே சமயம் சொல்ல முடியாத வலியும் கலந்திருந்தது.

"ரெண்டு பேருக்கும் இனி சேர்ந்து வாழ விருப்பம் இல்லை மேடம். மனசு ஒட்டாத இடத்துல உடம்பு மட்டும் ஒட்டி இருந்து என்ன பயன்? அதான் பேசிப் பிரிஞ்சிடலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டோம்," என்று மிகவும் நிதானமாக பதில் கூறினாள்.

நீதிபதி இருவரையும் ஒருமுறை ஆழமாகப் பார்த்தார். "என்னமோ போங்க... கல்யாணம் பண்ணி 13 வருஷம் ஆகுது. இத்தனை வருடம் ஒண்ணா வாழ்ந்துட்டு, இப்ப வந்து பிரியிறேன்னு வந்து நிக்கிறீங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா இன்னும் சின்னப் பசங்க மாதிரி தான் இருக்கீங்க. இவ்வளவு சீக்கிரம் ஏன் இந்த விபரீத முடிவு? கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பேசி, ஒருத்தரை ஒருத்தர் அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கிட்டு, பிரச்சனையைச் சரி பண்ணிட்டு ஒண்ணா வாழலாமே? யோசிச்சு பாருங்க..." அவர் அவர்களுக்கு ஒரு இறுதி வாய்ப்பாகக் கேட்டார்.

ராதை தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, "இல்ல மேடம்... நாங்க நிறைய ட்ரை பண்ணிட்டோம். இனிமேல் பேசிப் பேசி மனக்கஷ்டத்தையும், காயத்தையும் அதிகப்படுத்திக்க வேணாம்னு தோணுது. அதான் பிரியுறது தான் ரெண்டு பேருக்கும் நல்லதுன்னு முடிவுக்கு வந்துட்டோம்," என்றாள் வைராக்கியமாக.

"ஓகேம்மா... உங்களுக்கு டிவோர்ஸ் கொடுக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நீங்க ரெண்டு பேருமே மனசு ஒத்து தான் வந்திருக்கீங்க. ஆனா, சட்டப்படி ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. உங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. அந்தப் பெண் குழந்தைகளை இப்போதைக்கு அம்மா பொறுப்புல தான் ஒப்படைக்க முடியும்.

ராதை... உன்னால தனியா அந்த ரெண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியுமா? இங்கே கொடுத்திருக்கிற மனுவுல எந்த ஜீவனாம்சமும் வேண்டாம்னு சொல்லியிருக்க. உன் ஹஸ்பண்டோட வருமானம் ஒரு பைசா கூட வேண்டாம்னு சொல்லியிருக்க. அப்புறம் எப்படிம்மா அந்தப் பிள்ளைகளை தனியா வளர்ப்ப?" நீதிபதி அக்கறையுடன் கேட்டார்.

அந்த வார்த்தைகள் ஸ்ரீராமின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவனுக்கு உலகமே தலைகீழாகச் சுழல்வது போல் ஒரு பிரமை. கால்கள் தள்ளாடின. தலை 'விண் விண்' என்று தெறிக்கப் பார்த்தது. முகம் ரத்த ஓட்டமின்றி வெளிறிப் போனது. நெஞ்சம் அப்படியே பாரமாகி அடைத்தது.

தன் காதுகளில் விழுந்தது உண்மையாகவே தானா? அல்லது பிரமையா? அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றவன், தன் கண்கள் பிதுங்க நீதிபதியின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கே கலையின் முகம் அப்படியே சாயம் போன பழைய புடவை போல வெளுத்துப் போனது. ரகசியம் அம்பலமான பயம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

மலருக்குக் கை கால் ஓடவில்லை, என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றாள்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த மலர், "அசோக் வாங்க... நாம இங்க இருந்து சீக்கிரம் கிளம்பிடலாம்," என்று தன் கணவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிவிட்டாள்.

'எனக்கு... எனக்குப் பெண் குழந்தைகள் இருக்காங்களா?' ஸ்ரீராம் தன் வாழ்நாளில் முதல்முறை இந்த உண்மையைக் கேட்கிறான்.

அவனது இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் துடிப்பது போன்ற ஒரு பயங்கரமான உணர்வு. தலை சுற்றியது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

"என்னம்மா... நீ தான் பதில் சொல்லணும். அமைதியா இருந்தா எப்படி?" நீதிபதி மீண்டும் கேட்டார்.

ராதை நிமிர்ந்து நின்று பேசினாள், "மேடம், நான் நல்லா படிச்சிருக்கேன். இப்போதைக்கு ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலைக்குப் போயிட்டு தான் இருக்கேன். அதுமட்டுமில்லாம, குழந்தைகளுக்காக பார்ட் டைம் ஜாப் கூட ட்ரை பண்ணிட்டு இருக்கேன். என்னால என் பெண் குழந்தைகளைத் தனியா, கௌரவமா வளர்க்க முடியும். என்னுடைய தாய் வழிச் சொத்துக்கள் எனக்குக் கொஞ்சம் வர வேண்டியிருக்கு. அந்தப் பங்கீடு கிடைச்சுதுன்னா, என் குழந்தைகளோட எதிர்காலத்துக்கு எந்தப் பயமும் கிடையாது மேடம்."

நீதிபதி அவளை ஊடுருவிப் பார்த்து, "தனி மனுஷியா இந்தச் சமூகத்துல உங்களால பாதுகாப்பா பிள்ளைகளை வளர்க்க முடியுமா?" என்று கேட்டார்.

"கண்டிப்பா முடியும் மேடம்! எனக்கு அந்தத் தன்னம்பிக்கை இருக்கு. இந்த உலகத்துல எத்தனையோ பெண்கள் கணவனை இழந்துட்டுத் தன்னுடைய குழந்தைகளைத் தனியா வளர்க்கிறது இல்லையா? அவங்கெல்லாம் தன் இறந்த கணவன் சம்பாதிச்சுத் தரணும்னா தேடுறாங்க? எனக்குக் கணவர் உயிரோட இருந்தாலும், அவர் இருந்தும் இல்லைன்னு தான் அர்த்தம்.

அதுக்காக நான் கையேந்தி அவர் பின்னாடி போய் நிற்க மாட்டேன். நானும் என் இரட்டைப் பெண் குழந்தைகளும் அவர்கிட்ட போய் எதையும் எதிர்பார்த்து நிக்க மாட்டோம். எந்த விதத்திலும் அவருக்குப் பிரச்சனை தர மாட்டோம். எங்க தன்மானத்தை அடகு வைக்காம, எங்களால முடிஞ்ச சின்ன வாழ்க்கைக்குள்ள நாங்க சந்தோஷமா வாழ்ந்துப்போம்!" ராதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடியாக விழுந்தது.

'இரட்டைப் பெண் குழந்தைகளா! இதுவரை நான் அறியாத... என்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மை அல்லவா இது? நான் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனா?'

ஸ்ரீராமின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. அவனது உடல் அப்படியே நடுங்கியது.

சரியாக அந்த நேரத்தில், சொக்கன் ஐயா இரண்டு சிறுமிகளை அழைத்துக் கொண்டு கோர்ட் அறைக்குள் நுழைந்தார்.

சீதாவும் மகாவும் ஒருவிதப் பயத்தோடும், ஆச்சரியத்தோடும் முதல்முறையாகத் தன் அப்பாவைப் பார்க்கின்றனர்.

ஸ்ரீராமின் தாய் தன் மகனின் முகத்தைப் பார்த்து உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றார். இத்தனை வருடங்களாக ஒரு சொட்டு மூச்சு கூட விடாமல், கண்ணுக்குள் வைத்து பொத்தி பாதுகாத்து மறைத்த மிகப்பெரிய ரகசியம் இன்று தன் மகன் முன்பே அம்பலமாகிவிட்டதே என்று அவர் குன்றிப் போய் நின்றார்.

தன் மகனுக்கு எது தெரியவே கூடாது என்று அவர் இத்தனை காலம் வஞ்சகம் செய்தாரோ, எதற்காக ராதையுடன் அவனைப் பேச விடாமல் தடுத்தாரோ, எந்த உண்மையை மறைக்கத் துணிந்து இன்று மகனை விவாகரத்து வரை கொண்டு வந்து நிறுத்தினாரோ... அந்த கசப்பான உண்மை இன்று அவன் முன்னால் தோலுரிக்க பட்டு நின்றது.

இந்த விவாகரத்து மட்டும் ஒருவேளை நடந்து விட்டால், என்னை மகன் அவளை அறவே வெறுத்து ஒதுக்கி விட்டு, தன்னை விட்டுப் பிரியாமல் தன்னுடனேயே இருந்து விடுவான் என்று அவர் அத்தனை குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை ஒரு சிலந்தியின் வலை போல அவரைச் சுற்றியிருந்தது.

இத்தனை நீண்ட வருடங்களாக மகனிடம் இருந்தும், ஊர் உலகத்திடம் இருந்தும் தன் ரத்தமான சொந்தப் பேரப்பிள்ளைகளையே ஒரு பரம ரகசியமாக மறைத்து வைத்திருந்தவருக்கு, இந்தப் பெரிய நீதிமன்றத்தில் மட்டும் எல்லாவற்றையும் அப்படியே மறைத்து விட முடியும் என்று எப்படித்தான் நம்பத் தோன்றியதோ? அது ஒரு மாயை என்று அவருக்குத் தெரியவில்லை.

உண்மையில், சொக்கன் அந்தப் பிள்ளைகளை அங்கே அழைத்து வராமல் மட்டும் இருந்திருந்தால், அவர் ஆடிய ஆட்டத்தில் அந்த உண்மையை என்றென்றும் ஒரு இருட்டு அறைக்குள்ளேயே பூட்டி மறைத்திருப்பார்.

அவர்கள் தாக்கல் செய்திருந்த அந்த விவாகரத்து பத்திரத்தில், தங்களுக்கு இருக்கும் அந்த இரண்டு பெண் குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடாமல் மட்டும் இருந்திருந்தால், இப்போதும் அந்த ரகசியம் ஒரு புதை குழியில் மறைந்திருக்க கூடும்.

ஆனால் விதியின் சதி வேறாக இருந்தது. இன்று மொத்தக் குடும்பமும் இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த பாவ மூட்டைக்குக் கூலியாக, ஸ்ரீராமிடம் வசமாக மாட்டிக் கொண்டது.

நீதிபதி அங்கே அமர்ந்து கொண்டு என்னென்னவோ சட்டங்களைப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், ஸ்ரீராமின் காதுகளில் எந்த ஒரு சொல்லும் ஏறவில்லை. எதுவுமே அவனுக்குப் பதியவில்லை.

"எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்" என்கிற அந்த ஒற்றை உண்மை, ஒரு பேரிடியாக இறங்கி அவன் மூளையின் சிந்தனை நரம்புகளை அப்படியே அடைத்துவிட்டது. அவன் ஒரு நடைபிணமாக அங்கே நின்றான்.

"உனக்கு என்ன புள்ள குட்டியா இருக்குடா..." என்று காலையில் அவனது தாய் கேட்ட அதே வார்த்தைகள், இப்போது ஈட்டியை இதயத்தில் இறக்கியது போல துடிக்க வைத்தது.

"எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும்... என் ரத்தமே இந்த உலகத்தில் உலவிக் கொண்டிருந்தும்... அவர் எப்படி என்னிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிந்தது? ஏன் என்னிடம் இத்தனை காலம் மறைத்தார்?" - ஸ்ரீராமின் மூளைக்குள் ஓடிய இந்த வேதனை கேள்விகளால், அவன் மூளைக்குச் செல்லும் நரம்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து போவது போல உணர்ந்தான்.

உடல் முழுவதும் ரத்த நாளங்கள் சட்டென்று வெடித்துச் சிதறி விடுமோ என்கிற பயங்கரமான வலி அவனைக் கசக்கிப் பிழிந்தது.

மறுபுறம், பிரபாகரன் எவ்விதச் சலனமுமின்றி ஸ்ரீராமின் முகத்தையே மிகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

தன் வாழ்நாளில் தனக்கென்று பெண் குழந்தைகள் இருப்பதே ஸ்ரீராமுக்கு இப்போதுதான் தெரியும். இந்த நிலைகுலைந்த மனநிலையில், அங்கே வரிசையாக நிற்பவர்களில் எவர்கள் தன் குழந்தைகள் என்று அவனால் எப்படிக் கவனிக்க முடியும்? ஒருவேளை வெறித்துப் பார்த்தாலும், யாரென்று அவனால் அடையாளம் காணத்தான் முடியுமா? தெரியவில்லையே.

அங்கே, சொக்கன் அருகில் அந்த இரண்டு சிறுமிகளும் ஒருவித பயத்துடன் ஒண்டிக்கொண்டு நின்றிருந்தார்கள்.

தங்களுக்குத் தந்தை என்று சொல்லப்பட்ட அந்த மனிதனை ஏக்கமாகப் பார்த்தபடி அவர்கள் நின்றனர். ஆனால், ஸ்ரீராமின் கண்கள் அவர்களை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. துரோகத்தின் உச்சத்தில், நெஞ்சை துளைக்கும் தாங்க முடியாத துயரத்தில், அவன் கண்கள் சொருக அப்படியே தரையை நோக்கியபடி மயங்கி சரிந்தான்.

அந்த நீதிமன்ற வளாகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. பின் பெரும் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தது.

தொடரும்.....
 
உண்மையை எவ்வளவு நாள்தான் மூடி மறைக்க முடியும், அட புத்தி கெட்ட ஸ்ரீராம் உண்மை சுடுகிறதா?
 
சூப்பர் ராதை நல்லா செருப்பால அடிச்ச மாதிரி கேட்டா பாருங்க. புருஷன் உயிரோட இருந்தும் செத்ததுக்குச் சமம்ன்ற மாதிரி நச்சுனு கேட்டா. கலை இனி அடுத்து என்ன கேப்மாரித்தனம் பண்ணலாம்னு யோசித்து வையி.
 
ஶ்ரீராம்கிட்ட கலை மயக்கம் போட்டு நடிச்சு ஏமாத்த யோசிக்கறதுக்குள்ள ஶ்ரீராமே மயங்கி விழுந்துட்டானா? 😂

இனிமே தான் இருக்கு ஶ்ரீராமுக்கும் ஶ்ரீராம் ஃபேமிலிக்கும். - ஶ்ரீராம் அவன் குடும்பத்தை வெச்சி செய்யட்டும். ஆனால் ராதை ஶ்ரீராமை வெச்சி செய்வாளே!!
 
Advertisement

Advertisement

Back
Top