மனைவி - 4
"கொஞ்ச இடம் கொடுத்ததும் தலை மேல ஏறி உக்காந்துக்கிட்டா! இவளை நீ மட்டும் தான் அடிச்சே அடக்கி வைக்கணும்..." என்று அந்தக் கொடுமைக்காரக் குரல் ஒலித்தது. அப்பொழுதும் அவர் செய்த அந்தப் பாவச் செயலைப் பாவமாக அவர் நினைக்கவில்லை; மாறாக, அவளையே ஒட்டுமொத்தத் தவறுக்கும் காரணம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார்.
குளியலறைக்குள் தன் மீது கொட்டும் குளிர்ந்த நீருடன், அவரின் செயலால் வழிந்தோடிய அவளின் கண்ணீரும் கலந்து கரைந்து கொண்டிருந்தது. மனம் விட்டு அழுதுவிட்டு, ஈரத்துணியோடு வெளியே வந்து அவசரமாக வாசலைப் பெருக்கிக் கோலம் போடத் தொடங்கினாள். உள்ளுக்குள் இருந்த ரணம் அவளைத் துரத்த, மற்ற நாட்களை விட இன்று மிக வேகமாகச் சுழன்று வேலை செய்தாள். கைகள் பம்பரமாகச் சுழன்று கோலம் இட்டன.
பிரபாகரன் எப்பொழுதும் போல காலை ஆறரை மணிக்கு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். அவன் சரியாகத் தயாராகி வெளியே வந்தான். வாசலில் வேலை செய்து கொண்டிருந்த அவளை நேருக்கு நேர் பார்க்க துணிவில்லாமல், "நீங்க பொறுமையா செய்யுங்க, எனக்கு இன்னைக்கு ஆபீஸ்ல பார்ட்டி இருக்கு, நான் அங்கேயே சாப்பிட்டுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு தப்பிக்க நினைப்பவன் போல விறுவிறுவென வெளியே சென்றான்.
தன் கணவன் தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், அவளிடம் மட்டும் பேசிவிட்டுப் போகும் அந்தப் புறக்கணிப்பு அவளுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
அந்த ஆத்திரத்தை அவள் மீது திருப்பிய அலர், "மூதேவி! வீட்ல முடங்கிக் கிடக்கிற உனக்கு என்ன தெரியும்? வெளியில வேலைக்குப் போய் கஷ்டப்படுறவங்களைப் பத்தி உனக்கு என்ன புரியும்? நாள் முழுக்க உழைக்கிற அவருக்கு இந்த வீட்ல நிம்மதியா சாப்பிடக்கூட கொடுத்து வைக்கல. உனக்கெல்லாம் என்ன அப்படித் தூக்கம் வருது? நேரத்தோடு எழுந்து வேலை செஞ்சிருக்க வேண்டாமா? என் புருஷன் பட்டினியா போறாரு, அறிவு கெட்டவளே! நீ எந்த ராசியில் இந்த வீட்டுக்கு வந்தியோ, அன்னைக்கே இந்த வீடு குட்டிச்சுவரா போச்சு, நாசமாப் போச்சு!" என்று வாய்க்கு வந்தபடி வசைப்பாடினாள்.
அவளின் மகன்கள் இருவரும் இன்று தன் அத்தையைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் முன்னே இப்படித் தரக்குறைவாக அவமானப்பட்டு நிற்பதை நினைத்து அவளுக்குள் உள்ளம் புழுங்கியது. ஆனாலும், எதிர்த்துப் பேசினால் மீண்டும் அடி விழும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
அப்போது அரவிந்த் குறுக்கிட்டான், "அம்மா, அப்பா பார்ட்டி இருக்குன்னு தானே சொல்லிட்டுப் போறாங்க? பட்டினின்னு சொல்லலையே! எதுக்கு இப்ப இப்படி கத்திட்டு இருக்க? அவ்வளவு அக்கறை இருந்தா நீயே அந்த வேலையைச் செஞ்சிருக்கணும். காலை ஆட்டிக்கிட்டு உட்கார்ந்து அரட்டை அடிக்கிற மனுஷ ஜென்மங்கள் நீங்க எல்லாம்! உங்க கூட எல்லாம் இருந்தா நாங்களும் கெட்டுப் போயிடுவோம் போல இருக்கு. முதல்ல அப்பாகிட்ட சொல்லி நாங்க ஒரு ஹாஸ்டல் பார்த்துச் சேர்ந்துக்கிறோம். அம்மா, வந்துடாதீங்க" என்று தன் தாய் என்றும் பாராமல் திட்டிவிட்டு, தம்பி சத்யனை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அலருக்கு ஆத்திரம் தலைக்கேறியது. "இப்ப சந்தோஷமா? இப்ப சந்தோஷமாடி உனக்கு? உன்னால என் பிள்ளைகள் எல்லாம் என்னைத் திட்டுறாங்க. எல்லாத்துக்கும் காரணம் நீதான்டி! இரு உனக்கு... எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை நான் இந்த வீட்டை விட்டுத் துரத்துறேன்!" என்று கத்தினாள்.
"வீட்டை விட்டுத் துரத்துகிறாளா?" இந்தக் கேள்வி கேட்டதும் அவள் கைகள் அப்படியே செயலிழந்து நின்றன. கடந்த 13 வருடங்களில் அவர்கள் சொல்லாத ஒரே வார்த்தை இது மட்டும்தான். இப்பொழுது இந்த வார்த்தை இவர்கள் வாயிலிருந்து வருகிறது என்றால், இவர்கள் உள்ளுக்குள் என்ன விபரீத முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று அவள் மனம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.
"அலர், என்ன பேசிட்டு இருக்க?" என்று மலர் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
"நீயே எல்லாத்தையும் உளறிடுவ போல இருக்கே? கொஞ்சம் அமைதியா இரு, அண்ணன் வரட்டும்... அப்புறம் இவளை வீட்டை விட்டுத் துரத்தலாம்."
"மலர், நீயே பார்த்ததானே? இன்னைக்கு இவளால என் பையன் என்னைத் திட்டிட்டுப் போறான்!" என்று அழுது புலம்பினாள் அலர்.
"விடு அலர், அவன் சின்னப் பையன். அவன் பேசுறதெல்லாம் கண்டுக்காத. அதுவும் நம்ம பையன் நம்மளைப் பேசிட்டுப் போறான், அதெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது" என்று மலர் சமாதானம் செய்தாள். மலர் எப்பொழுதும் தன் அக்காவை 'அக்கா' என்று அழைக்க மாட்டாள், பெயர் சொல்லித் தான் அழைப்பாள்.
ஒரு வழியாகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீட்டு வேலைகளை முடித்தவள், மனமும் உயிரும் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. "அத்தை, எல்லா வேலையும் முடிச்சுட்டேன்..." எனத் தளர்ந்த நிலையில் மீண்டும் அவர்கள் முன்னே போய் நின்றாள்.
"அங்கே கிடக்கிற அழுக்குத் துணி எல்லாம் கையால துவைக்கணும், எடுத்துட்டுப் போய் துவை!" என்று கட்டளையிட்டாள் அலர்.
அவள் அந்தத் துணிக் குவியலைப் பார்த்தாள். கடந்த வாரம் மொத்த குடும்பமும் ஒரு திருமணத்திற்குச் சென்றபோது அணிந்திருந்த துணிகள் அவை. அந்த வீட்டுப் பெண்கள், அவர்களின் பிள்ளைகள், கணவர்கள் என அனைவரின் உடைகளும், ஏன் உள்ளாடைகள் வரை அவிழ்த்துப் போட்டிருந்தனர்.
பல்லைக் கடித்தபடி அந்தத் துணிகளை எடுத்துச் சென்று ஊற வைத்தவள், யாரும் பார்க்காத தருணத்தில் தன் தாய்க்கு அலைபேசியில் அழைத்தாள். அழைப்பு ஏற்கப்பட்டதும்,
"ராதை..." என்று தாயின் பாசமான குரல் கேட்டது. அந்தக் குரலில் இருந்த கனிவு இவளின் அழுகையை இன்னும் அதிகப்படுத்தியது. கண்ணீரை அடக்கிக் கொண்டு, தன் அழுகையை விழுங்கியவள், "அம்மா, நான் அங்க வந்துடவா?" என்று சட்டென்று கேட்டாள்.
தாய்க்குப் புரிந்து போனது, தன் மகள் அங்கே நரக வேதனையை அனுபவிக்கிறாள் என்று.
"இங்க வந்து என்ன பண்ணப் போற ராதை? எப்படியாவது உன் வாழ்க்கையை காப்பாத்திக்கப் பாரு. முடிஞ்ச வரைக்கும் சமாளி. இங்க வரணும் என்கிற எண்ணம் உனக்குத் துளி கூட வரவே கூடாது. அப்படி ஒரு எண்ணம் வந்தால் தான் உன்னால அங்க வாழ முடியாமல் போயிடும். இந்த வீட்டுக்கு வந்து சாப்பிடலாம்னு கனவுலயும் நினைக்காதே, அங்கேயே இரு" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.
தன் நிலையை எண்ணிக் கதறி அழுதபடி அந்தத் துணிகளைத் துவைக்கத் தொடங்கினாள். அவளின் கண்ணீரையும் கஷ்டத்தையும் அலர், மலர் இருவரும் ஒருவித வக்கிர சந்தோஷத்தோடு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் மனசுல குளுகுளுன்னு இருக்கு, இல்ல அலர்?" என்றாள் மலர்.
"ஆமாண்டி, நீ சொல்றது சரிதான். ஜூஸ் குடிச்ச மாதிரி அவ்வளவு குளிர்ச்சியா இருக்கு. இந்த மாதிரி தினமும் நடந்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்? இவ காலை ஒடிச்சு வைக்கணும், ரொம்பத்தான் ஓவரா ஆடுறா."
"மயிலுக்கு இறக்கையையே ஒடிச்சுடுவோம்! அண்ணா வரட்டும், அம்மா ஏதோ பெருசா பிளான் பண்ணியிருக்கு. இனிமேல் இந்த வீட்ல ஒரே டிராமாவைத் தான் பார்க்கப் போறோம் நம்ம."
"மலர், ஆனா நம்ம அம்மா வேற லெவல் தெரியுமா? அண்ணனை இத்தனை வருஷமா தன் கட்டுப்பாட்டுல வச்சிருக்கு. இதே மாதிரி நானும் என் பையனை என் கைக்குள்ள வச்சிருக்கணும். அப்பதான் நாளைக்கு பொண்டாட்டி வந்தா என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தாம இருப்பான்."
"ஆமா அலர், நீ சொல்றது உண்மைதான். நம்ம பிள்ளைகளை நம்ம கண்ட்ரோல்லதான் வச்சிருக்கணும். இல்லனா நாளைக்கு நமக்கு எதிரா மாறிடுவாங்க. இன்னைக்கு அண்ணன் எப்படி அம்மா பேச்சை மறுத்து ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேங்குறாரு? அந்த மாதிரி நம்ம பிள்ளைகளும் இருக்கணும்."
அதே சமயம் அரவிந்த் சத்யன் இருவரும் பிரபாகரன் வேலை செய்யும் இடத்திற்கே தேடி வந்தனர். வெளியே, "அப்பா, எங்களை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுறீங்களா?" என்று அரவிந்த் தன் தந்தையிடம் கேட்டான்.
"ஏன்டா?" என்று பிரபாகரன் பதறிப்போய்க் கேட்க,
"இவங்க எல்லாரும் அத்தையை ரொம்பக் கொடுமைப்படுத்துறாங்கப்பா. பார்க்கும்போது அழுகையா வருது. நம்ம குடும்பத்துல ஆளுங்க கொஞ்சம் குறைஞ்சாதான் அவங்களுக்குச் சமைக்க, துணி துவைக்கக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க," என்ற அரவிந்துக்குக் கண்கள் கலங்கின.
"ஆமாம்பா, இன்னைக்கு அந்த ராட்சசி அத்தையை அடிச்சுடுச்சு. அவங்களும் மனுஷங்கதானே, அவங்களுக்கு வலிக்கும் தானே? அம்மாவும் போய்ப் பாவம் அந்த அத்தையைத் திட்டுது. அண்ணன் தான் அம்மாவைத் திட்டிட்டு என்னைக் கூப்பிட்டு வந்துட்டான்," என்றான் சத்யன்.
பிரபாகரன் கண்ணீருடன் தன் மகன்களை அணைத்துக்கொண்டான். அலர் என்ற கொடூர புத்தி கொண்டவளுக்குப் பிறந்து இருந்தாலும், இரு பிள்ளைகளும் குணத்தில் தங்கம். பிரபாகரன் போன்றே இருக்கும் இந்த இரு பிள்ளைகளுக்காகவே அவன் இந்த நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
"என்ன பண்றது? உங்க மாமா சரியில்லை. கட்டின பொண்டாட்டி எப்படி இருக்கா, என்ன ஆச்சுன்னு ஒரு நாள் கூடக் கேட்டிருப்பானா?" என்று பிரபாகரன் மனம் தாங்க முடியாமல் மகன்களிடம் புலம்பினான்.
"அது எப்படிப்பா, மாமா எதுவுமே கண்டுக்காமலே இருக்காரு? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா அவருக்கு? பாட்டி எப்போதும் 'என் மகன் நல்லவன், என் மகன் நல்லவன்'னு சொல்லுதே... இப்படிப்பட்டவரை எப்படி நல்லவன்னு நாங்க நினைக்க முடியும்? எனக்கு அவரை சுத்தமா பிடிக்கவே இல்லை," என்று சத்யன் ஆவேசமாகக் கத்தினான்.
"அவன் நல்லவன்தான்டா, ஆனா அவனுக்கு அமைஞ்ச குடும்பம் சரியில்லை. தங்கமான பொண்டாட்டி கிடைச்சும், அவகூட வாழ அவனுக்குக் கொடுத்து வைக்கல. அவன் வாழ்க்கையை அவனே நாசம் பண்ணிக்கிறான். அம்மா பேச்சைக் கேட்கலாம், அதுக்காக இப்படியா பொண்டாட்டிகூட பேசக்கூடாதுன்னு சொன்னா இத்தனை வருஷம் பேசாம இருப்பாங்க? அவனுக்குன்னு ஒரு சின்ன ஆசை கூட இருக்காதா?"
"ஏம்பா, ஒருவேளை மாமா அங்கே வேற ஏதாவது ஃபேமிலி வச்சிருக்காரோ? அதனாலதான் அத்தையை இவ்வளவு தூரம் கண்டுக்காம இருக்காரோ?" என்று அரவிந்த் கேட்ட அந்த கேள்வி அந்தச் சூழலையே உறைய வைத்தது.
சிறுவர்களே சந்தேகம் கொள்ளும் படி ஶ்ரீராம் நிலை இருக்கிறதே.. அவனுக்கு எப்போது புத்தி வரும்? எப்போது திருந்துவான்? இப்படியே அம்மா பிள்ளையாக அவனால் இன்னும் எத்தனை காலம் வாழ முடியும்?
திருமணம் ஆகியும் இதுவரை அவன் சாமியார் மாதிரி வாழ்கிறான் அவனுக்கு உணர்ச்சிகள் இருக்கா? எப்போதும் போல் மனதிற்குள் புலம்பி கொண்டான்.
தொடரும்.....