மனைவி 6
"அத்தை, நீங்க எங்ககூட இங்கே உட்காருங்க. இப்போ யாரும் வெளிய வரமாட்டாங்க, வாங்க"ன்னு அரவிந்த் தன் பக்கத்துல இருந்த சேரை இழுத்துப் போட்டான்.
உள்ளே சத்தம் இன்னும் வேகமா கேட்டது. "நீங்க சொல்றதை என்னால ஒருக்காலும் கேட்க முடியாது. என் பசங்களை என்னால இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது"ன்னு மலர் தன் புருஷன் பிரபாகரன்கிட்டக் கத்திட்டு இருந்தா.
"உன்கிட்ட நான் அனுமதி கேட்கலடி. நான் சொன்னபடி பசங்களுக்கு இந்த வீட்டுல இனி ஒரு நிமிஷம் கூட இருக்க விரும்பல. இன்னைக்கு நான் வேலை செய்யுற இடத்துக்கே என்னைத் தேடி வந்து அவங்க ரெண்டு பேரும் இதைக் கேட்கிறாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்? அவங்களுக்குத் தங்களோட அம்மாவே வேணாம்னு தோணுது. உன்னோட இந்த மோசமான குணம் அவங்களுக்கும் வந்துடுமோன்னு அவங்க பயப்படுறாங்க. அந்த நிலைமையிலதான் நீ இப்போ இருக்க. பிள்ளைங்களுக்குப் பெத்தவங்க ஒரு முன்மாதிரியா இருக்கணும். ஆனா இந்த வீட்டுல ஒருத்தர் கூட அந்த மாதிரி இல்லையே!" என்று பிரபாகரனின் குரல் இடியாக முழங்கியது
"நான் தீர்க்கமா ஒரு முடிவு பண்ணிட்டேன் அலர். என் மகன்களும் இந்த நரகத்துல இருந்து கெட்டுப் போறத பாக்க நான் விரும்பல. அடுத்த ஸ்ரீராமா என் பசங்க உருவாக நான் ஒருகாலமும் விடமாட்டேன். உன் வாழ்க்கை என்ன ஆச்சு, உன் அண்ணன் வாழ்க்கை என்ன ஆச்சுன்னு ஊருக்கே தெரியும்... அதை பத்தி இனி நான் கவலைப்படப் போறதில்லை. ஆனா, என் மகன்கள் விஷயத்துல நான் தான் முழு முடிவும் எடுப்பேன். அவங்களை இப்பவே இந்த வீட்டை விட்டு கூட்டிட்டுப் போய், தனியா ஒரு வீடு எடுத்துத் தங்க வைக்கப் போறேன். இதுல உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை, நான் அதைப் பத்தி யோசிக்க போறதும் இல்லை!" என்று பிரபாகரன் உறுதியாகச் சொன்னான்.
"நீங்க என்ன சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருக்கீங்க? என்னால என் பசங்களை அனுப்ப முடியாது. என் பசங்க எப்போதும் என் கூடத்தான் இருப்பாங்க, அதுல மாற்றமே இல்லை!" என அலர் பிடிவாதமாகக் கத்தினாள்.
"அப்படியா? அப்போ நீ வர்ற அதே வழிக்கு நானும் வர்றேன். உன் பசங்க உன் கூடவே இருக்கணும்னு நீ நினைச்சா, முதல்ல நீ இந்த வீட்டை விட்டு வெளியில வரணும். என்கூட நான் இருக்கிற வீட்டுக்கு வந்து ஒரு மனுஷியா வாழணும். உனக்கு இதுக்குச் சம்மதமா?" என்று பிரபாகரன் ஆவேசமாக வார்த்தைகளால் அடிக்க, அலர் அப்படியே பேச்சு மூச்சில்லாமல் வாயடைத்துப் போய் நின்றாள்.
கலையும் ஒரு பக்கம் பிரபாகரனின் இந்த அவதாரத்தைப் பார்த்துப் பயந்து நடுங்கிவிட்டார். "மாப்பிள்ளை, விடுங்க... அவ இன்னும் சின்னப் பொண்ணு, ஏதோ தெரியாம விவரம் புரியாம பேசுறா..." என்று கலை பதற்றமாக கூற,
"நிப்பாட்டுங்க! இது புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குற தனிப்பட்ட விஷயம், இதுல மூணாவது மனுஷங்க யாரும் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. என்னை என்ன அந்த ஸ்ரீராம்னு நினைத்தீர்களா? நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டிட்டு பொம்மை மாதிரி நிக்கிறதுக்கு? முதல்ல உங்க வேலையை நீங்க பாருங்க. என் பிள்ளைங்களுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு பார்த்துக்க எனக்கு நல்லாவே தெரியும். உங்ககிட்ட என் பசங்களை விட்டா நீங்க என்ன பண்ணுவீங்கன்னு இந்த ஊருக்கே அப்பட்டமாத் தெரியும். உங்க வளர்ப்புல என் பசங்களும் சீரழிஞ்சு போயிடுவாங்க. கடைசியில என் பிள்ளைங்களுக்கு என் பேரோ, என் இனிஷியலோ கூட இல்லாமப் போயிடும் போல! பாவத்தை மட்டும் மூட்டை மூட்டையாச் சேர்த்து வைக்கிற உங்களுக்கு, நல்லது கெட்டது பத்திப் பேச என்ன தகுதி இருக்கு? யாரு... இவ சின்னப் பொண்ணா? ஒண்ணுமே தெரியாத அப்பாவியா இவ? ஒரு குடும்பத்தை எப்படிப் பிரிச்சு கெடுக்கணும், ஒரு பொண்ணோட மனசார வாங்குற சாபத்தை எப்படி மொத்தமா அறுவடை பண்ணணும்னு மூணு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பிளான் போட்டு யோசிச்சுட்டே இருங்க. இதையே எப்போதும் கேட்டுட்டு இருந்தா, என் பிள்ளைங்க மட்டும் எப்படி நல்லவங்களா வளருவாங்க?

இப்போ சொல்றேன் கேட்டுக்கோ... இவ இந்த வீட்டை விட்டு உடனே வெளிய வந்து, பசங்களுக்கு நல்ல அம்மாவா சமைச்சுக் கொடுத்து, வீட்டு வேலை செஞ்சு, அவங்களைக் குளிப்பாட்டி நேர்மையா வளர்க்கிற மாதிரி இருந்தா மட்டும் தான் இவ சொல்றதை நான் கேட்பேன். இல்லன்னா நான் எதைச் சொல்றேனோ அதைத்தான் இவ கேட்டாகணும். இப்போதே என் பசங்களை நான் இங்கிருந்து வெளியே கூட்டிட்டுப் போறேன்!"
அலர், கலை, மலர் என அங்கு நின்ற அனைவருமே பிரபாகரனின் பேச்சைக் கேட்டுத் திகைத்துப்போய் நின்றனர். பிரபாகரன் இப்படி ஒரு அதிரடியான, ஆவேசமான முடிவு எடுப்பான் என்று சொப்பனத்திலும் யாருமே எதிர்பார்க்கவில்லை. கலை கோபத்தில் தன் மகளைக் கடினமாக முறைத்தார்.
அப்போதும், அந்த இக்கட்டான நிலையிலும் கூட, அலர் தன் கணவனுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து ஒரு முழுமையான குடும்பமாக வாழலாம் என்று மனதார முடிவெடுக்கவில்லை.
"சரி, உங்க விருப்பப்படியே எதை வேணாலும் பண்ணிக்கோங்க... நாம இங்கேயே இருக்கலாம்," என்றாள் வேண்டாவெறுப்பாக, மனமில்லாமல்.
பிரபாகரன் தன் மனைவியைப் பார்த்து ஒரு கசப்பான ஏளனச் சிரிப்பைச் சிரித்தான். 'உன் புத்தி இவ்வளவுதான் என்று எனக்கு முதலிலேயே தெரியும்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
"உனக்கு உன் குழந்தைகளை விட, ஏன்... என்னை விடவும் இந்த வீடும் உன் அம்மாவும் தான் ரொம்ப முக்கியம். ஏன்னா ஸ்ரீராம் சந்தோஷமா இருந்திடக் கூடாது, அவன் பிள்ளை குட்டிலாம் நல்ல முறையில் வாழ்ந்திடக் கூடாதுங்கிற அந்த வன்மமான ஒரே ஒரு எண்ணம் தான் உன்னையும் உன் தங்கச்சியையும் நிம்மதியா வாழ விடாமல் பண்ணப் போகுது. இன்னைக்கு நீ எடுத்த இந்தத் தப்பான முடிவுக்காக எதிர்காலத்துல ரொம்ப வருத்தப்படுவ அலர். அப்போ வந்து என்கிட்ட நீ கோவிச்சுக்க கூடாது, என்னை ஒரு வார்த்தை குறை சொல்லக்கூடாது. நானும் ரத்தமும் சதையுமா இருக்கிற மனுஷன்தான், நானும் ஒரு ஆம்பளை தான். எனக்கும் சில ஏக்கங்கள், ஆசைகள்னு மனசுக்குள்ள இருக்கு. வெறும் இயந்திரமா பிணம் மாதிரி என்னால வாழ முடியாது. அது ஸ்ரீராமா வாழ முடியாது. உனக்கு நடக்கும் அன்னைக்குத் தெரியும் உங்களுக்கு வலி என்றால் என்னவென்று!" அவளை ஒரு புழுவை விடக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
அங்கு நடந்த அனைத்தும் ராதையின் காதுகளில் விழுந்தது. ஆனால் அவளால் அந்த இடத்தில் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாத ஒரு தர்மசங்கடம். பிரபாகரனையும் பிள்ளைகளையும் வேதனையோடு பார்த்தாள்.
"நீங்க எதுக்குப்பா இங்கிருந்து வெளியே போறீங்க? இங்கேயே இருங்களேன். உங்களுக்கு இங்கே ஏதாவது குறை இருக்கா? எதுவாக இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க. நான் உங்களை ஏதாவது ஒழுங்கா பார்த்துக்கலையா?" எனக் கவலையோடு கேட்ட ராதையை, அரவிந்தும் சத்யனும் பாவமாகப் பார்த்தனர்.
ராதையின் வேலைப் பளுவை குறைக்கவும், அவளின் மன வேதனையை சரி செய்யவும் தான் இந்த வீட்டை விட்டுச் செல்கிறோம் என்கிற கசப்பான உண்மையை அவர்கள் எப்படி அவளிடமே சொல்வார்கள்?
"அப்படியெல்லாம் எதுவும் கிடையாது அத்தை. இவங்க பேசுற விதம், நடந்துக்கிற விதம் எதுவுமே எங்களுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல. நாங்களும் இவங்களைப் மாதிரியே வன்மமா மாறிட்டோம்னா, நாளைக்கு எங்களுக்குன்னு ஒரு குடும்பம் வரும்போது அது ரொம்பக் கஷ்டமாப் போயிடும். நாலு பேர் கூட எங்களாலயும் சகஜமா பழக முடியாம போயிடும்... இவங்களைப் மாதிரி நாங்களும் தனிமைப்பட்டு போயிடுவோம். அதான் நாங்களும் தனியா வாழ நினைக்கிறோம். இது வந்து எங்க வீடு கிடையாது அத்தை, இது உங்க வீடு. உங்க பிள்ளைகளுக்கும் உங்க அடுத்த வாரிசுகளுக்கும் போய்ச் சேர வேண்டிய சொத்து. அது உங்களுக்குப் புரிய மாட்டேங்குது, ஆனா வளர்ந்த பசங்களா எங்களுக்கு அது புரியுது. எங்களுக்குத் தெரியும், அப்பா எங்களுக்காக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறார். எங்க தாத்தாவும் பாட்டியும் அங்கே இருக்காங்க... ஆனா இவங்க எங்களை அவங்க கூடச் சேர விடாமத் தடுக்குறாங்க. இப்பவும் நாங்க இவங்க பேச்சைக் கேட்டு ஆட ஆரம்பிச்சிட்டோம்னா, என் அம்மா எங்களையும் அந்த மாமா மாதிரி மாத்திடுவாங்க," என அரவிந்த் மிகவும் முதிர்ச்சியாகத் தெளிவாகக் கூற, ராதை அப்படியே வாயடைத்துப் போனாள்.
"நீங்க ரெண்டு பேரும் உலகத்துல எங்க இருந்தாலும் ரொம்ப நல்லா இருப்பீங்கடா. உங்களுக்கு உங்க அப்பா குணம் அப்படியே வந்திருக்கு, அது ரொம்ப நல்ல குணம். நீங்க எங்க போனாலும் ஒருநாளும் கெட்டுப் போக மாட்டீங்க. உங்க எதிர்காலமும் ரொம்ப பிரகாசமா நல்லா இருக்கும்டா. மனசார சொல்றேன், சந்தோஷமா இருப்பீங்க," என்று இருவரையும் ஆசீர்வதித்து வாழ்த்தினாள்.
அரவிந்த் தன் அத்தையை ஒருவிதமான கலக்கத்தோடு பார்த்தான். அவனுடைய அந்தப் பார்வை ராதையின் மனதை ஏதோ செய்தது. "ஏதாவது சொல்லணுமா அரவிந்த்?"
"ஒண்ணுமில்ல அத்தை... நீங்க இந்த நிலைமையில இருக்கும் போதும் எங்களுக்காக இவ்வளவு யோசிக்கிறீங்க, ஆனா உங்களுக்காக யோசிக்க இந்த வீட்ல ஒருத்தர் கூட இல்லையே..." பேசும்போதே அரவிந்தின் கண்கள் தானாகக் கலங்கியது, தொண்டை அடைக்க குரல் கம்மியது.
"அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது அரவிந்த். இங்க இல்லன்னா என்ன, வெளிய எனக்காக ஒரு உயிர் இருக்கு. நான் சந்தோஷமா இருக்கணும், நான் நிம்மதியா இருக்கணும்னு துடிக்கிற ஒரு உயிர் இருக்கு. அவங்க சந்தோஷத்தையும் அவங்க வாழ்க்கையையும் எனக்காகத் தியாகம் பண்ணிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க," என்று சொல்லும் பொழுது அவளுக்குக் கன்னம் தாண்டி கண்ணீர் ஆறாக இறங்கியது. அந்த நினைவுகள் அவளுக்குள் வரும் போதெல்லாம் அவளின் உயிரை ஏதோ அறுப்பது போல இருந்தது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு இரண்டு நாட்களில் அரவிந்த் மற்றும் சத்யன் இருவரையும் பிரபாகரன் தான் புதிதாக கட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அந்த வீடு கீழ் வீடு, மேல் வீடு என்று இரண்டு பகுதிகளாக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தது. இரண்டு வீடுகளுமே வசதிகளில் ஒரே மாதிரிதான் இருந்தது.
தொடரும்.....