மனைவி - 8
ஸ்ரீராமின் குரலைக் கேட்ட அந்த நொடி, கலைவாணியின் முகம் மலர்ச்சியில் திளைக்கிறது. தன் மகனிடம் பேசுகிறோம் என்ற பெருமிதத்தில் அவள் அகமகிழ்ந்து கொள்கிறாள்.
"அம்மா... நான் நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்று ஸ்ரீராம் அக்கறையோடு நலம் விசாரிக்கிறான்.
அவன் கேட்டதற்குப் பதிலாக, "நாங்க எல்லாரும் இங்கே நல்லாத்தான் இருக்கோம்ப்பா... யாருக்கும் எந்தக் குறையும் இல்லை! நீதான் யாருக்கும் எந்தக் குறையும் வைக்கலையே..." என்று கலை மிகுந்த பெருமையோடு பேச, மறுமுனையில் சில நொடிகள் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
ஸ்ரீராம் பக்கம் நிலவிய அந்த அமைதி ஒருவித பாரத்தை அங்கே படரச் செய்தது.
"என்னப்பா... இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கே?" என்று கலை கேட்க,
"ஒன்னும் இல்லம்மா... சும்மா தான் கால் பண்ணேன்" என்றான் ஸ்ரீராம்.
ஆனால், அந்தப் பதிலுக்குப் பின்னால் ஏதோ ஒன்றைச் சொல்ல அவன் தயங்குவது அவனது குரலிலேயே தெரிந்தது.
"அப்படியா? சரி... வரதுக்குத் தேவையான பொருள் எல்லாம் எடுத்து வச்சுட்டியா? டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுச்சா?" என்று அடுத்தடுத்த கேள்விகளை தாய் அடுக்கினாள்.
"எல்லாம் ஆயிடுச்சு மா... நாளைக்கு கிளம்பிடுவேன். எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டேன். அவளுக்கு மட்டும் சைஸ் தெரியல... கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா?" என்று தயங்கி தயங்கி தன் மனைவியைப் பற்றிக் கேட்டான்.
அவ்வளவுதான்! அந்தப் பேச்சைக் கேட்டதும் அங்கிருந்த தாய் மற்றும் மகள்கள் இருவர் முகமும் கொதித்தது.
‘ஒரு மனைவியின் ஆடை அளவு கூடத் தெரியவில்லை என்று சொல்கிறானே! ஏன் அதை அவளிடமே நேரடியாகக் கேட்கத் தெரியாதா? இவனெல்லாம் என்ன கணவன்? அதைக் கூடத் தாயிடம் சொல்லித் தான் கேட்க வேண்டுமா? 'அசிங்கமாக இல்லை ஐயா இவனுக்கு?' என்று நினைத்தபடி பிரபாகரன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
அசோகனும் மனதிற்குள் ஏளனமாக நினைத்துக் கொண்டான்.
ஆனால், அவர்கள் இருவரும் வெளியே இருந்ததால் அவர்களின் எண்ணங்கள் உள்ளே இருப்பவர்களுக்குக் கேட்கவில்லை. அதுவரை ஸ்ரீராமுக்கு நல்லது.
கலை உடனே தன் வேலையைக் காட்டத் தொடங்கினார். "அவளுக்கு என்னப்பா... வீட்ல இல்லாத டிரஸா? நீ எதுக்கு எல்லாருக்கும் டிரஸ் எடுக்குற? ஏன் காசை வேஸ்ட் பண்ற? யாருக்கு எதுவும் எடுக்க வேணாம். வாங்கியதை எல்லாம் கடையில் கொண்டு போய் ரிட்டர்ன் கொடுத்துட்டு பத்திரமா வீடு வந்து சேரு, அது போதும் எங்களுக்கு! இப்ப யாரு உன்கிட்ட வாங்கிட்டு வரச் சொல்லித் துணி கேட்டா? இங்கே கிடைக்காத துணியா அங்க கிடைச்சிறப் போகுது? அங்க எல்லாம் விலை அதிகமாக இருக்கும்... காசை வீணாக்காத! உன் கிட்ட தான் காசு இல்லையேடா... அப்புறம் எப்படி துணி வாங்குற?" என்று அடுக்கடுக்காக கேட்டு அவனை முடக்கினார்.
அவன் கேட்க வந்த கேள்விக்குப் பதில் கூறாமல், அவன் மனதையும் மூளையையும் மாற்றிச் சிந்திக்க வைத்து விட்டார் கலைவாணி.
இப்படியே இத்தனை வருடங்களை ஓட்டியவருக்கு, மகனை இந்த முறை சமாளிக்கத் தெரியாதா என்ன?
ஸ்ரீராம் மெல்லச் சமாளித்தபடி, "இல்லம்மா... வெறும் கையா வந்தா நாகரிகமா இருக்காது. வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருக்காங்க, அவங்களும் எதிர்பார்ப்பாங்க இல்ல? அப்புறம் தங்கச்சிங்க எதிர்பார்க்கும்... 'அண்ணன் ஒண்ணுமே வாங்கிட்டு வரலேன்னு' மச்சான் எதுவும் தப்பா நினைச்சிடக் கூடாது, அதான் எல்லாருக்கும் வாங்கிட்டேன்" என்றான்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதையோ உள்ளுக்குள் சுக்குநூறாக உடைந்தாள்.
'எல்லாருக்கும் வாங்கிட்டு கடைசியாக தான் என் ஞாபகம் வந்திருக்கு... அப்போ கூட அவருக்கு அவங்க ஞாபகம் வரல போல' என்று குமுறினாள்.
அவள் இதயம் கனத்தது. அவன் மீது அவள் வைத்திருந்த அந்த கடைசிச் சொட்டு ரத்தம் போன்ற நம்பிக்கையும் ஏனோ இன்று ஆட்டம் கண்டது.
'இனி அவரை நம்பி என் வாழ்வில் எந்த மாற்றமும் உருவாக போவதில்லை. 13 வருட வாழ்க்கை ஒரு வனவாசம் என்று நினைத்துக் கொண்டாள்...' என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
அவன் குரலைக் கேட்ட பிறகு அவள் தன்னிலையில் இல்லை. மனதின் பாரம் தாளாமல் யார் மடியிலாவது சாய்ந்து அழ வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கியது.
ஆனால் அவளுக்குத் தோள் கொடுக்கவோ, தட்டிக் கொடுக்கவோ அங்கே யாரும் இல்லாத பொழுது அவள் யாருடைய மடியில் அழுவாள்? அப்படியே தரையில் சுருண்டு அமர்ந்தவளுக்கு, வேதனை நெஞ்சைத் தாண்டி கண்ணீர் வழியாக வெளியேறியது.
'இவன்லாம் என்னதான் மனுஷனோ? எதுக்கு தான் இவன் எல்லாம் கல்யாணம் பண்ணினான்? புடிக்கலைன்னா வேணாம்னு தான் அந்தப் பொண்ண வெளியில அனுப்பி இருக்கணும்... ஆனா இவன் இந்த வீட்டுக்குள்ளேயே வச்சுட்டு சித்திரவதை பண்றான். பொண்டாட்டிக்கு டிரஸ் என்ன சைஸ்ன்னு தெரியல...' என்று பிரபாகரன் தன்னால் முடிந்தவரை மனதிற்குள் ஸ்ரீராமைத் திட்டினான்.
ஸ்ரீராம் மீது அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் மொத்தமாக இந்த நொடி விலகிச் சென்றது.
"அம்மா! எப்படியோ அவளுக்கு எதுவுமே வாங்க விடாம பண்ணிட்ட..." என்று மலர் சந்தோஷமாகச் சத்தமிட்டுக் கூச்சலிட,
"அவளுக்கு எதுவுமே என் பையன் கையால இருந்து கிடைக்காது! அவன் வரப்போறான்... நீங்க ரெண்டு பேரும் முடிஞ்ச வரைக்கும் அமைதியா இருங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" என்று கலை ஏதோ ஒரு தீர்க்கமான முடிவுடன் கூறினாள்.
"அம்மா! நாங்க எப்பவுமே உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம். நீங்க நினைச்சது கண்டிப்பா நடக்கும்" என்று மலர் தன் அன்னையை கட்டியணைத்தபடி உற்சாகப்படுத்தினாள்.
ராதையை வீட்டை விட்டு அனுப்புவதில் இவ்வளவு தீவிரமாக இருக்கும் இவர்களுக்கு ஒன்று தெரியாது. அவள் வெளியே சென்றால் இவர்கள் தலையில் விழும் வேலைகளைச் செய்வது யார்? அவர்கள் திண்டாடி நிற்கும் பொழுதுதான் அவளின் அருமை புரியும்.
ராதை அழுது முடித்து தன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினாள். பின் தன் புடவை முந்தானையில் முகத்தை துடைத்தபடி பின் கதவு வழியே உள்ளே வர,
"உன்னை எங்கெல்லாம் தேடுவது? எப்படி மகாராணி! நீ பாட்டுக்கு ஜாலியா இருக்க வேண்டியது... வீட்ல ஒரு வேலை செய்யறது கிடையாது. வீட்டு ஆம்பளைங்க வந்துட்டாங்க... குடிக்க ஏதாவது கொடுப்போம், சாப்பிட ஏதாவது கொடுப்போம்னு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எப்ப பாத்தாலும் எங்கையாவது போய் ஒரு ஓரமா உக்காந்துக்க வேண்டியது... சோம்பேறியா இருந்தா இந்த வீட்டுல இருக்கவே முடியாது! எதுக்கு தான் நீ எல்லாம் உயிர் வாழ்கிறாய்?" என்று அலர் தன் வாய்க்கு வந்தபடி ராதையை திட்டினாள்.
"சாரிங்க... ஒரு பத்து நிமிஷத்துல நான் ரெடி பண்ணிடுறேன் எல்லாத்தையும்" என்று ராதை கூறினாள்.
அதற்கு மேல் அவளிடம் பேசக்கூட வார்த்தைகளுக்குப் பஞ்சமாகிப் போனது. அவளது கைகள் மட்டும் வேகமாக வேலை செய்தன. வரப்போகும் அனைத்திற்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.
இருந்தாலும், கணவன் என்ற உரிமையால் தொட்டுத் தாலி கட்டியவன் என்ற உறவில் அவன் மீது ஒரே ஒரு சதவீதம் நம்பிக்கையோடு இவள் காத்திருந்தாள்.
இரண்டு நாட்கள் ஓடி மறைந்தன. இன்று ஸ்ரீராம் வருகிறான்.
கணவனுக்காக வாசலிலே காத்திருக்க வேண்டிய மனைவிக்கு, அவன் எப்படி அவனை எதிர்கொள்வது என்று தெரியாத தவிப்பு. அன்று வெள்ளிக்கிழமை. வழக்கத்திற்கு மாறாக அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்தவள், வீட்டு வேலைகளை அனைத்தையும் முன்னதாகவே முடித்தாள். வாசலில் பெரிய கோலமிட்டு, வண்ணப் பொடிகளால் கலர் அடித்து வைத்திருந்தாள்.
கணவனுக்குப் பிடித்த பால் பாயாசத்தை செய்தாள். உளுந்து வடையை சுட்டு வைத்தாள். இட்லி, சாம்பார் மற்றும் அவனுக்கு மிகவும் பிடித்த தக்காளி சட்னியை நன்றாகக் காரமாக செய்தாள். மதியத்திற்கு சாதம், அவனுக்குப் பிடித்த வெஜிடபிள் பிரியாணி, பட்டாணி குருமா, காலிபிளவர் சில்லி என அனைத்தையும் அதிகாலை நான்கு முப்பது மணி அளவிலேயே முடித்து வைத்திருந்தாள்.
அவனுக்கு வேண்டியதை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தவளுக்கோ, அவனுக்காகத் தன்னை அலங்காரம் செய்யத் தோன்றவில்லை. எப்போதும் போல் குளித்துவிட்டு, சாதாரண ஒரு சாயம் போன காட்டன் புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். முடிகளைப் படிய வாரி பின்னல் இட்டு ரப்பர் பேண்ட் போட்டு கொண்டவள், நெற்றியில் ஒற்றை பொட்டும், வகுட்டில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டு, அன்று கலை இடம் கூடக் கூறாமல் கோவிலுக்கு கிளம்பினாள்.
சரியாக ஐந்து மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினாள்.
மொட்டை மாடியில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்த பிரபாகரன் கண்களில், ராதை வீட்டை விட்டு வெளியேறுவது பட்டது. அவளது அந்தக் கோலத்தைக் கண்டு அவன் மனம் ஒரு கணம் நின்றது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு வரும் கணவனுக்காக ஆசை ஆசையாக காத்திருக்க வேண்டியவள், அவனைப் பார்க்க முடியாமல் இங்கிருந்து வெளியேறி சொல்கிறாளே! எந்தப் பெண்ணிற்கு வரும் இப்படிப்பட்ட அவல நிலை? அவளை நினைக்கும் பொழுது அவன் நெஞ்சம் ரம்பம் வைத்து அறுப்பது போன்ற வேதனையை உணர்ந்தான்.
அவளைத் தன் உடன்பிறந்த தங்கையாக அவன் பார்க்கிறான், அதனால் என்னவோ அவனுக்கு இதயம் இப்படி துடித்தது.
வேகமாக மாடியில் இருந்து இறங்கி வந்தவன், காலில் செருப்பு மாட்டிக் கொண்டு அவள் பின்னால் சென்றான். மணி ஐந்தாகி இருந்தாலும் தெருவில் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. சாலையோர திருவிளக்கு வெளிச்சம் மட்டுமே துணையாக இருந்தது. அவளோ பயம் ஏதுமில்லாமல், திக்குத் தெரியாத பாதையில் நிர்கதியாய் நிற்கும் பெண்ணைப் போல் நடந்து கொண்டிருந்தாள்.
கோவில் கூட அந்த நேரத்தில் திறக்கவில்லை. கோவில் வாசலில், தன் விதியை எண்ணியபடி அப்படியே அமர்ந்திருந்தாள். பூமியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளை நோக்கி இரு பாதங்கள் நெருங்கி வந்தன.
'ஒருவேளை கணவனா? என் கணவனா என்னை தேடி வந்தது?' என்று அவள் உள்ளம் ஒரு கணம் மெய் சிலிர்த்துப் போனது.
அந்த ஏக்கப் பார்வையோடு அவள் நிமிர்ந்தபோது, கண்கள் கண்ணீரால் நிறைந்தன. காரணம் அங்கே நின்றது பிரபாகரன். அவள் கண்ட அந்த ஏக்கம் வெறும் கனவாகிப் போனது... கானல் நீராக மாறி போனது.
அவள் முகம் கண்டு பிரபாகரனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளைப் பார்க்கும் துணிவின்றி அவளிடம் இருந்து சற்று விலகிச் சென்றான். கோவில் வாசலில் இருந்த டீக்கடையில் இரண்டு டீ வாங்கிக் கொண்டு அவளை நோக்கி வந்தவன், அவளுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு தானும் ஒன்று எடுத்துக் கொண்டான். மறுக்காமல் அந்த டீயை அவள் கையில் வாங்கிக் கொண்டாள்.
தொடரும்.....