Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்! - 11

Advertisement

praveenraj

Well-known member
Member
மழைக்கால மேகங்கள்! - 11

கடந்த கால நினைவுகளில் தூரியும் கிரிஜாவுக்கு மூழ்கியிருக்க,

"அக்கா... ஏ தூரி நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன் நீங்க என்ன பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்க?" என்ற அரசியின் உலுக்கலில் நினைவுக்கு வந்தார்கள்.
அப்போது தான் சூர்யா கேட்டிருந்த சைக்கிளை பற்றி தூரிகாவுக்கு நினைவுக்கு வர இரண்டு தினங்களுக்கு முன்பு மூர்த்தி மிரட்டிச் சென்றது வேறு அவளுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. அவள் படிப்பிற்கு ஏற்ற வேலைக்குச் சென்றிருக்கலாமோ என்றும் ஒருவேளை அவ்வாறு செய்திருந்தால் இன்று இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாமோ என்று ஒரு சராசரி மனிதனுக்குள் வரும் அதே சிந்தனைகள் வந்து போனது.

தூரிகாவின் மனதைப் படித்தவர் போல் கிரிஜா அவளை அழைத்து,"நான் ஒன்னு சொல்லுவேன் தூரி குட்டி நீ சம்மதிக்கணும்..." என்று கிரிஜா பேசும் போது அவரையே கூர்ந்து கவனித்தாள் தூரிகா.

"வண்ணன் மேல நான் ஒரு எல்.ஐ.சி பாலிசி போட்டிருந்தேன். இந்த மாசத்தோட அது முடிந்து கைக்குக் கொஞ்சம் பணம் வரும். நாம இந்த வாரம் சேலத்துக்குப் போய் ஒரு சைக்கிள் வாங்கிட்டு வந்திடலாமா?" என்று அவர் கேட்டதும் அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது. நாம் ஒருவருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாது இருக்கும் போதே அவர் நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்ய தயாராக இருக்கும் நிலை போல் ஒரு மகிழ்ச்சியும் தர்மசங்கடமும் ஒருங்கிணைந்த உணர்வு இருக்கிறதே? அதை வார்த்தையில் விவரிக்க முடியாது. அதே நேரம் அவரை நாம் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிறோமோ என்ற குற்றயுணர்ச்சியும் மேலோங்கும். தூரியின் தற்போதைய நிலையும் அதுவே!

"அத்தை நீங்க கேட்டதே எனக்கு அவ்வளவு எனெர்ஜி கொடுத்திருக்கு. நானே பார்த்துக்கறேன். கையில கொஞ்சம் பணமிருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க..." என்று தூரிகா உரைத்தாலும் அவளுடைய மனதை மட்டும் கிரிஜாவால் புரிந்துகொள்ள முடியாதா என்ன? தூரிகாவுக்கு சுயமரியாதை கொஞ்சம் அதிகம். இதுவரை அவளுக்குக் கொடுத்த பணத்திற்கே பலமுறை தன் நிலத்துப் பத்திரத்தை அவரிடம் மறைமுகமாகக் கொடுக்க முயற்சித்துள்ளாள். ஒருமுறை வெள்ளிமலையில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி அவளுடைய வீட்டிலும் தண்ணீர் புகுந்துகொண்டது. அதைச் சாக்காக வைத்து அவளிடம் இருக்கும் நகை பத்திரம் ஆகியவற்றை அவரிடம் கொடுக்க வந்தாள். இதை இப்போது தான் வாங்கிக்கொண்டாள் மீண்டும் அவளிடம் இதை ஒப்படைப்பது சிரமம் என்றுணர்ந்த கிரிஜா சரவணனின் பழைய இரும்பு பெட்டியை(எடை டன் கணக்கில் இருக்கும். இன்றைக்கும் என் தாத்தாவிடம் அப்படியொரு இரும்பு பெட்டி இருக்கிறது) ஞாபகப்படுத்தி அதிலே வைத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கிவிட்டார்.

சமயங்களில் தன்னிடம் இருக்கும் பணத்தையும் வண்ணனிடம் இருக்கும் பணத்தையும் கொண்டு நிரந்தரமாக அவளை கடனில் இருந்து மீட்டு விட்டால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது அவள் நிலை உயர்ந்து நிச்சயம் தனக்கு கடனை அடைத்துவிடுவாள் என்றும் கிரிஜா எண்ணியதுண்டு. ஆனால் இது நாள் வரை தன்னிடம் இருக்கும் பணத்தைப் பற்றியோ தங்களது சொத்தைப் பற்றியோ எந்தக் கேள்வியும் கேட்காமல் இருக்கும் வண்ணன் திடீரென்று அதைக் கேட்டு இதனால் அவனுக்கும் தனக்கும் இடையே விரிசல் உண்டாகிடக் கூடாதென்று அவரும் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

ஜெயசீலன் இறந்த போது அவர் விட்டுச் சென்ற கடன் வண்ணனின் படிப்பு என்று கிட்டத்தட்ட இன்று தூரிகா இருக்கும் அதே நிலையில் தான் கிரிஜாவும் இருந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. அதும் உதவி என்று எப்போது ஜெகதீசனிடம் தான் சென்று நிற்போம் என்று அந்த நாளையே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தார் ஜெகதீசன். இதை கிரிஜாவும் அறிவார். எங்கே அது போல் ஒரு நிலையில் மூர்த்தியிடம் தூரிகா சிக்கிக்கொள்வாளோ என்ற அச்சமே கிரிஜாவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் அவள் அந்தப் புதைகுழியில் என்றோ காலை விட்டுவிட்டாள் என்று பாவம் கிரிஜா அறியவில்லை.

அந்த வாரத்தின் இடையில் ஒரு நாள் பொது விடுமுறை வந்திருக்க சூர்யா தன் நண்பர்களுடன் விளையாடச் சென்றிருந்தான். வண்ணன் இப்போதெல்லாம் தன்னுடைய லேப்டாப்பில் டிசைன் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு வேலை இல்லையென்றால் என்ன கற்பனைகள் இருக்கிறதே? கற்பனைகளுக்கு ஏது கட்டுப்பாடு? புதியதாக நிறைய கட்டிட மாதிரிகளை அவன் வடிவமைத்துக்கொண்டிருந்தான்.

அன்றும் அவ்வாறே வரைந்துகொண்டிருந்தவன் சற்று இளைப்பாற வெளியே சென்றுவிட அவனுக்கு வழக்கமாகக் கொடுக்கும் எலுமிச்சை சாறைக் கொடுக்க அவன் அறைக்குள் வந்த கிரிஜா அவனது லேஅவுட் பிளானை கண்டவர் அதன் தத்ரூபத்தைக் கண்டு உண்மையிலே அதிசயத்துப் போய்விட்டார். அந்நேரம் அங்கே வந்த தூரிகாவிடம் அதைக் காட்டி,

"திறமையெல்லாம் நிறையவே இருக்கு. ஆனா அதுக்கேத்த திமிரும் ஜாஸ்தி இருக்கு..." என்று அங்கலாய்க்க,

"இருக்காதா பின்ன? தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலைனு சும்மாவா சொன்னாங்க? நம்ம கிரிஜா அத்தையோட பையனாச்சே?" என்று தூரிகா உரைக்க,

"ஏய் இப்போ நீ பாராட்டறையா இல்ல கிண்டல் செய்யறயா?"

"ஐயோ அத்த நான் போய் உங்களைக் கிண்டல் பண்ணுவேனா?" என்றவள் இடைவெளி விட்டுச் சிரித்தாள்.

"இந்தப் பையன் என்ன திட்டத்தோட இங்க இருக்கான்னு எனக்குத் தெரியல தூரி. நான் அவன்கிட்ட முகம்கொடுத்துப் பேசி ஒரு மாசம் ஆகுது. அன்னைக்கு அந்த சரிதா பொண்ணு கூட என்னமோ சொல்ல வந்தா. ஆனா அதுக்குள்ள அவன் வந்துட்டான். இப்போதைக்கு உங்க பையன் எங்கயும் போகமாட்டான்னு என்னமோ சொன்னா. அதுக்கான அர்த்தம் என்னனு தான் என்னால புரிஞ்சிக்க முடியல..." என்று கிரிஜா புலம்பினார்.

அன்று தன் நண்பர்களுடன் வண்ணன் பேசியதை எல்லாம் கேட்டிருந்த தூரிகா,

"ஆமா அத்த. இனி அவர் அந்த கம்பெனில வேலை செய்யப்போறதில்லையாம். பிரதோசம் அன்னைக்கு வாழைநார் எடுக்க நான் உள்ள வந்தப்போ அவர் யார்கூடவோ பேசிட்டு இருந்தார். ஆனா நான் கூட முதல நம்பல. ஆனா இப்போ அவர் இங்கயே இருக்குறத பார்த்தா எனக்கும் அப்படித் தான் தோணுது. அன்னைக்கு ஏதோ ஒரு கோவத்துல கூட அவர் உங்ககிட்ட அப்படிப் பேசியிருக்கலாமில்ல? அவர் தான் வீம்பு பிடிக்கிறார்னா நீங்களும் ஏன் இப்படி வீம்பு பிடிக்கறீங்க அத்த... எனக்கென்னமோ அவர் இப்போ இங்க வரும் போதிருந்த ஆளு இல்லைனு தோணுது. நீங்க கொஞ்சம் இறங்கிப் போலாம் அத்த..." என்று தூரிகா சொல்ல கிரிஜாவுக்கோ இது வியப்பாக இருந்தது. நிச்சயம் அவர்களுக்குள் ஒரு சண்டை இருக்கிறதென்று அவருக்கும் ஊர்ஜிதமாகிவிட்டது. அப்படியிருந்தும் அவனுக்காக இவள் பேசுவது அவருக்கு வியப்பளிக்காமல் இருந்தால் தான் வியப்பு!

"தூரிமா நீ எனக்கு இன்னொரு உதவி செய்யணும்"

"ஐயோ அத்த என்ன உதவின்னு எல்லாம் சொல்றிங்க? என்ன செய்யணும் சொல்லுங்க செய்யுறேன்"

"எனக்கென்னமோ அந்த சரிதா பொண்ணும் இவனும் காதலிக்கறாங்களோனு தோணுது..." என்று கிரிஜா சொல்ல அப்படியேதும் இருக்காது என்று தூரிகா திடமாக நம்பினாள். அவர்களுடைய உரையாடலை சிலமுறை இவளும் கண்டிருக்கிறாள் தான். ஆனால் அதில் காதலேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் அவன் அலைபேசியில் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்ததாக சூர்யாவே ஒருநாள் இவளிடம் சொன்னான். ஒருவேளை அது சரிதாவாக இருக்குமோ என்று அறிய தூரிகா விசாரித்ததில் அது அவளில்லை என்று தெரிந்துகொண்டாள். அவள் கணிப்பின் படி அது நிஹாரிகாவின் படமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

"அத்த நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"கேளுடா"

"நீங்க ஏன் அத்தை அவர் காதலிச்ச பெண்ணை வேண்டாம்னு சொன்னிங்க?"
"அவன் இன்னொரு மணிகண்டன்..." என்று கிரிஜா வாய்திறக்கும் வேளையில் வண்ணன் அங்கே பிரவேஷிக்க அந்நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்காதவர்கள் திருதிருவென விழிக்க, எதுவும் பேசாமல் வந்து அவன் மடிக்கணினியின் முன்பு அமர்ந்தான்.
இருவரும் சப்தமேதும் இன்றி அங்கிருந்து வெளியேறினார்கள். தன்னைப் பற்றி அவன் என்ன நினைத்திருப்பான் என்று கிரிஜாவுக்கு தூரிகாவும் அவர்களுக்குள்ளாகவே யோசிக்க வழக்கமாக குளிக்க போகும் முன் அவன் செல்லும் உடையில் அங்கிருந்து வெளியேறினான் வண்ணன்.

குளிக்க போனவன் வழியில் தனியாக நின்றுகொண்டிருந்த சூர்யாவைப் கண்டு அவனை விசாரித்ததில் அவன் நண்பர்கள் அனைவர்க்கும் அவர்கள் தந்தை நீச்சல் கற்றுத்தருவாக உரைத்தவன் தானும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுதான்.

தங்கள் தோட்டத்து கிணற்றில் கயிற்றைக் கட்டி வண்ணனைத் தூக்கி கிணற்றில் வீசிய ஜெயசீலன் அவன் பயத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் முன் அவரும் கிணற்றில் விழுந்த அந்த நாளின் நினைவு மழைக்காலத்தில் சரியாக சிக்னல் கிடைக்காத டிஷ் ஆன்டெனா போல் காட்சிகள் எல்லாம் வந்து வந்து போனது.

"நான் சொல்லித் தரேன் வரயா?" என்று வண்ணன் கேட்டதும் வேகமாகத் தலையாட்டினான் சூர்யா.

ஒருமணிநேரத்திற்கும் மேலாக வண்ணன் சூர்யாவுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தான். அங்கே இவ்வளவு நேரமாகியும் சூர்யாவைப் காணாமல் பதறிய தூரிகா ஊரெங்கும் தேட வண்ணனுடன் அவனைக் கிணற்றில் பார்த்ததாக ஒருவர் உரைத்ததும் அங்கே வந்தவள் சூர்யாவைப் பார்த்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது.
அதே நேரம் வண்ணனிடம் அவன் அதிகம் ஒன்றுவதை தூரிகாவும் விரும்பவில்லை. வண்ணன் மீது அவள் மனதில் எங்கோ ஒரு மூலையில் நல்ல அபிப்ராயம் தோன்றியிருந்தாலும் அன்று குடித்துவிட்டு அவன் நின்ற கோலம் தான் அவள் மனதெங்கும் ஆக்கிரமித்திருந்தது.

தூரிகாவின் பதற்றத்தை வைத்தே சூர்யா தனக்கு விழப்போகும் அடியை எண்ணி அச்சம் கொள்ள அவனுடன் மேலே எறியவன் அவனைத் தலை துவட்ட ஓரமாக அனுப்பிவிட்டு,
"அவனை எதுக்கெடுத்தாலும் இப்படிப் பொத்தி பொத்தி வளர்க்காத. நீ அப்படியே என் அம்மாவோட ஜெராக்ஸ். ஆனா என் அப்பா மூலமா எனக்கிருந்த அந்தச் சுதந்திரத்துல நூத்துல ஒரு பங்கு கூட சூர்யாவுக்கு இல்ல. சின்ன வயசுல புருஷன் இல்லாம குழந்தையோட நீ படுற கஷ்டம் எனக்குப் புரியுது. இதுக்காக அவனையும் ஏன் கஷ்டப்படுத்துற? பெரியவங்களோட கஷ்டம் பெரியவங்களோடவே போகட்டும். குழந்தைகளோட அழகே அவங்க குழந்தைத்தனம் தான். அதை சூர்யாவை அனுபவிக்க விடு. நீ பயப்படுற மாதிரி அவனை உனக்கெதுரா எல்லாம் நான் திருப்பிட மாட்டேன். எல்லாம் கொஞ்ச நாள். வளர்ந்தா எல்லாம் அவனே புரிஞ்சிப்பான். அவன் தலையைத் துவட்டி விடு. சளிபிடிச்சிக்க போகுது..." என்று வண்ணன் சென்றுவிட்டான்.

வண்ணனின் குரலில் துளியும் அதட்டல் இல்லை. மிக மென்மையாக அதே நேரம் மிக உறுதியாக ஒலித்தது அவன் குரல். வண்ணன் சாதரணமாகக் கூறிச் சென்ற அந்த வார்த்தைகள் கூட அன்று கிரிஜாவுக்கு அவனொரு நல்ல மகனில்லை என்று சொன்னதிற்கு பதிலாக இன்று சூர்யாவுக்கு தானொரு நல்ல தாயில்லை என்பதை மறைமுகமாக அவன் உணர்த்திச் சென்றதாகவே தூரிகாவுக்குப் பட்டது.

"ம்மா சாரி மா. நான் சொல்லாம வந்தது தப்புதாம்மா. அந்த திலீப் இருக்கானில்ல அவன் எனக்கு யாருமே நீச்சல் சொல்லித்தர மாட்டாங்கன்னு கிண்டல் பண்ணான். அவனுக்கு அவன் அப்பா சொல்லித்தருவாராம். எனக்கு யார் சொல்லித் தருவாங்கனு கேட்டான். அப்போ தான் வண்ணன் மாமா வந்தாங்க. வண்ணன் மாமா ரொம்ப நல்லவங்க தெரியுமா? இனிமேல் உனக்கு எதுனாலும் என்னைக் கேளு நான் செஞ்சுத் தரேன்னு சொன்னாங்க. ஒருவேளை எனக்கு அப்பா இருந்தா அவரும் வண்ணன் மாமா மாதிரி எனக்கு ஹோம் ஒர்க் செய்ய அசைன் மென்ட் முடிக்க நீச்சல் கத்துக் கொடுக்கனு எல்லாமே அவர் தானே செஞ்சிருப்பார்?" என்று கேட்ட சூர்யா தூரிகாவுடன் வீட்டிற்குச் சென்றான்.

இதுநாள் வரை தந்தையைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவர் சாமிகிட்டப் போயிட்டார் என்று சொல்லிச் சமாளித்தவளால் இனியும் அதையே செய்ய முடியுமா என்ற ஐயம் துளிர்விட்டது.

இருபத்தி ஏழு வயதிலும் சரவணன் நடையுடை இல்லாவிட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதே தூரிகாவுக்கு யானை பலம் கொடுத்துக்கொண்டிருக்க பிறந்ததில் இருந்தே தந்தை பாசத்தை உணராத சூர்யாவை நினைக்கையில் அவளுக்கும் வருத்தமாகவே இருந்தது.

அந்த வார வெள்ளிக்கிழமை இரவில் சரிதாவுடனான தன் சென்னை பயணத்தைக் தொடங்கினான் வண்ணன். வெள்ளிமலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்குச் சென்றவர்கள் அங்கிருந்து சென்னை பேருந்தில் பயணித்தனர்.

செமி ஸ்லீப்பர் பேருந்தில் அருகருகே அமர்ந்து கதைபேசிக்கொண்டே பயணித்தவர்கள் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் நெருங்கிப் படுத்தவாறு உறங்கிப் போனார்கள்.
(மழை வருமோ?)
 
கடைசி எப்பிய படிக்கிறதுக்கு முன்னாடி யார் ஹீரோயின் ன்னு கண்டுபிடிக்கலாம்னு பார்த்தா முடிய மாட்டேங்குதே ???
 
Top