Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு கண்ணே வருக!! 1

Advertisement

மாசறு ண்ணே வருக



ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -1

மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா

உடுக்கை பம்பை முரசொலிக்க
உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா

என்ற எல் ஆர் ,ஈஸ்வரியின் குரல் ஊரின் மத்தியில் உள்ள அம்மன் கோவிலில்,உரத்து ஒலித்து துயிலில் இருந்தவர்களை எல்லாம் தட்டி எழுப்பி கொண்டிருந்தது .

அந்த பாடல் சத்தத்தையும் மீறி இங்கு பார்வதி "சிவா ,சிவா" என்று உரத்த குரலில் தனது பேத்தியை எழுப்பி கொண்டிருந்தார் .

அவர் கத்திய கத்திய கத்தலில் அந்த சிவாவாக பட்டவள் ,'இந்த கோவிலுக்கு பக்கத்துல எதுக்கு தான் வீடு கட்டுனாங்களோ , வாரத்துல செவ்வாய் ,வெள்ளி ரெண்டு நாள் தூங்கவிடாமல்,சாவடிக்குறாங்க' என்று நினைத்தபடியே !



கண்ணை திறப்பேனா! என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு, அங்கும் இங்கும் படுக்கையில் பிரண்டு கொண்டிருக்க,

அவளின் அருகில் படுத்திருந்த அவளின் சகோதரி பார்கவி கண்விழித்தவள். "என்ன ஆயா "என்று அவரை விட சத்தமாக கேட்டவாறே! கடிகாரத்தை திரும்பி பார்க்க ,அது நேரம் ஐந்து என்று காட்டியது .

இது வழக்கமாய் பார்வதி எழும் நேரம் தான், ஆனால் அக்கா ,தங்கை இருவரும் ஆறு மணி போல தான் எப்போதும் கண்விழிப்பர் , அதனால் பார்கவி இப்படி கேட்டிருக்க ,

"இன்னைக்கு வெள்ளி கிழமை இல்லை , வாசல்ல போய் கோலம் போட சொல்லலாம்னு எழுப்பினேன் கண்ணு ," என்று அவர் கூறிக்கொண்டிருக்கையிலே !

பக்கத்துக்கு வீட்டில் இருந்து "பெரியத்தை தண்ணி வருது,சீக்கிரம் வந்து பிடிங்க," என்று பார்வதியின் கொளுந்தனாரின் மருமகள் சத்தம் கொடுக்க ,

யாரோ அழைக்கிறார்கள் என்று புரிகிறது. ஆனால் என்ன கூறுகிறார்கள் , என்று கேட்காமல் ,தனது மந்தமான காதை தேய்த்தபடி பாட்டி பார்கவியை பார்க்க அவருக்கு பதிலளிக்காமல்

பார்கவி அவசரமாய் குடத்தை எடுத்து கொண்டு குழாய் அருகில் ஓடி சென்றாள். இது வீட்டுஉபயோகத்திற்காய் விடப்படும் பஞ்சாயத்து தண்ணி,அந்த கிராமம் முழுவதும் வீதி வாரியாக ,ஒரு வீதிக்கு இருபது நிமிடம் என்னும் கணக்கில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விடுவார்கள்.

அவள் ஓடியதிலேயே!தண்ணீர் வருகிறது என்று புரிந்து கொண்டிருந்தவர் இப்போது வரும் தண்ணீரை பிடித்து வைத்தால் தானே இன்னும் இரு நாட்களுக்கு இவர்களின் வீட்டு உபயோகத்திற்கும் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு ,கோழிகளுக்கும் பஞ்சமில்லாமல் தன்னீர் கிடைக்கும் என்கிற பதட்டத்தில்,

இத்தனை நேரம் இருந்த பொறுமையை காற்றில் பறக்க விட்டு "அடியே சிவா எழுந்துருடி "என்று அவளின் முதுகில் ஒரு போடு போட ,

"ஆ ...கிழவி ,வலிக்குது கிழவி "என்று கத்தியவாறு எழுந்து அமர்ந்திருந்தாள், சிவன்யா,அதற்குள் கையில் தண்ணீர் குடங்களோடு வந்திருந்த பார்கவி சமயலறையில் ,

பாட்டி கழுவி வைத்திருந்த அண்டாவில் நீரை ஊற்ற,கிழவியை முறைத்து விட்டு அக்காவின் கையில் இருந்த குடத்தையும் பிடிங்கி கொண்டு,

"கோவில் தொல்லை ஒரு பக்கம்ம்னா ,இந்த தீர்த்தகிரி தொல்லை மறுபக்கம். தாங்கலைடா சாமி ,காலங்காத்தால அஞ்சு மணிக்கு தான் தண்ணி விடணுமா ஏழு மணிக்கு விட்டா ஆகாதா ,"என்று புலம்பியபடி வந்தவள் .

தண்ணீர் பைப்பிலேயே முகத்தை கழுவி ,வாயை கொப்புளித்து கொண்டு நேற்று போட்டிருந்த பள்ளியின் நீல நிற பாவாடையை கழட்டாமல் உறங்கி இருந்ததால் ,

குனிந்து அதிலேயே முகத்தை அழுந்த துடைத்து கொண்டு ,தண்ணீர் நிரப்ப குடத்தை வைத்திருந்தாள் .





அதற்கடுத்து அத்தனையும் வேகம் தான் ,காலில் சக்கரம் கட்டியிருப்பவளை போல,வீட்டுக்கும் வாசலுக்கும் ஓடி ஓடி தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தாள்.

அனைத்தும் நிரப்பி முடித்து அவளின் ஜாதி மல்லி செடிக்கு நீர் பிடித்து கொண்டிருக்கையிலேயே !நீர் நின்று விட , கடுப்பாகி விட்டது , பெண்ணுக்கு



இன்றய முறை படி இவர்களின் வீதியில் தான் முதலில் விட வேண்டும் ஆகையால் சரியாய் விட்டவர். இப்போது அடுத்த வீதிக்கு திருப்பி இருக்க ,

"ஓய் ,தீர்த்தகிரி எதுக்கு தண்ணியை ஆப் பண்ண ,ஒழுங்கா திருப்பி விடு" என்று தண்ணீர் திறந்து விடும் ,அவளின் தாத்தா வயது இருக்கும் மனிதரிடம் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு சண்டைக்கு எகிறி கொண்டு போனாள்.

இவளின் கத்தலுக்கு எல்லாம் மனிதர் பெரிதாய் அலட்டி கொள்ளவே இல்லை.இந்த சின்னவளின் மேல் மனிதருக்கு ஏனோ அத்தனை பிடித்தம்.

"வா சிவா குட்டி ,நேத்து டவுனுக்கு போனேன்,இந்தா "என்று அவளுக்கு பிடித்த ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டையே அவளின் முன் நீட்ட,

வந்த கோவம் எல்லாம் மிட்டாயை பார்த்ததும் , விருட்டென்று ஓடி விட , அவரின் கையில் இருந்த பாக்கெட்டை இவள் வாங்கபோக, "என்னை கல்யாணம் கடிக்கிறேன்னு சொன்னால் தரேன்." என்று அவர் உயரத்திற்கு தூக்கி பிடித்து கொள்ள ,

"யோவ் கிழவா காலம் போன கடைசில உனக்கு, எதுக்கு இந்த விபரீத ஆசை,நான் சிவன்யா தெரியும் இல்லை ,என்னை கட்டிக்க அந்த சிவனே வருவான்." என்று கண்களில் கனவு மிதக்க கூறிவிட்டு ,ஒரு குதி குதித்து பாக்கெட்டை பிடுங்கி கொண்டு ஓடி போனாள்.

சிவனே வருவான் என்றுவிட்டு செல்லும் அவளையே அந்த மனிதர் வாஞ்சையாய் பார்த்திருந்தார்.பாவம் அந்த சிறு பெண் ,சிறு வயதிலேயே தாய் , தந்தை இல்லாமல் வயதான பாட்டியின் அரவணைப்பில் கிடக்கிறாள் .

அவளின் பாட்டி எப்படி தான் இரு பெண்களையும் ,வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செய்து வைக்கப்போகிறாளோ !

அந்த சிவனே வந்தாலும் சும்மா கட்டிக்கொண்டு போகமாட்டானே , பெரிதாய் போடவில்லை என்றாலும் காது மூக்குக்காவது,கடுகு மணியளவாவது தங்கம் போட்டாள் தானே கல்யாண சந்தையில் விலை போக முடியும். ஒரு பெரு மூச்சு அவரிடம்.

அவர் நினைக்கும் அளவுக்கு சிவாவின் குடும்பம் ஒன்றும் ஏழ்மையான குடும்பம் இல்லை .சிவாவின் ஐந்துவயது வரை அவர்களின் வாழ்வு ஊரே மெச்சும்படி தான் இருந்தது .

சிவாவின் தாத்தா,பார்வதியின் கணவர் ராஜகோபால் பரம்பரை பணக்காரர்,அவருக்கு சங்கர் ,சரவணன் என்று இரண்டு ஆண்பிள்ளைகள். சரஸ்வதி என்று ஒரு பெண் ,அந்த பெண்ணின் பிள்ளைகள் தான் பார்கவியும், சிவன்யாவும்.

ஆண்பிள்ளைகளை விட பெண்ணின் மீது மனிதருக்கு ,கொள்ளை பாசம் அந்த பாசத்தால் தான் மனிதர் வாழும் பொழுதே பணம்,சொத்து ,சுகம் , மகன்களின் வளமான வாழ்வு என அனைத்தையும் இழந்தார்,

அப்போதும் அவர் தளராமல் திடமாகவே இருந்தார் , ஆனால் கண்ணின் முன்னாள் செல்ல மகளின் உயிரற்ற சடலத்தை பார்த்து, அதிர்ந்து சரிந்தவர் தான் எழவே இல்லை ,விளைவு ஒரே நாளில் இரண்டு இழப்புகள் ,




......................................................................



ராஜகோபால் அத்தனை வருடம் வெறும் விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்த மனிதர் .சரஸ்வதி பிறந்தபின்பே ,ஊரின் அருகே உள்ள சேலத்தில்.மகளின் பெயரில் ஒரு மளிகை கடை ஆரம்பித்திருக்க ,அது நாளடைவில். பெயர் சொன்னால் தெரியும் அளவு மக்களிடையே பிரபலம் ஆகி இருந்தது.

வருடங்கள் உருண்டோட, சங்கருக்கு திருப்பூரில் வேணி என்ற பெண்ணையும் சரவணனுக்கு பக்கத்து ஊரில் சுகுணா என்ற பெண்ணையும் மணமுடித்து வைத்தார் .

இரு பெண்களும் அவர்களின் குடும்பத்திற்கு இணையான வசதி படைத்தவர்கள் தான் .அடுத்து மகளுக்கு அவர் பார்க்கையில். பெரிய மருமகளின் அண்ணனுக்கு அவளை கேட்டு வர ,

ராஜகோபாலிற்கு அவ்வளவு தூரத்தில் பெண்ணை கொடுக்க விருப்பம் இல்லாமல். அருகில் வீட்டோடு மாப்பிள்ளையாக வரும் வரன்களை தேட ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவர்களின் கடையில் ,டீலர் ஒருவரின் சிபாரிசில் மணி என்பவர் வேலைக்கு சேர்ந்திருக்க ,ராஜகோபாலிற்கு அவரின் அமைதியான குணம் பிடித்து போனது,

ஆனால் அவருக்கென்று பின்புலம் ஒன்றும் இல்லை ,தாய் ,தந்தை உறவுகள் என்று யாரும் இல்லாமல் இருப்பவருக்கு ,அவரின் நல்ல குணத்துக்காக பெண்ணை திருமணம் செய்து வைத்து தங்களோடே வைத்து கொண்டார்.

மணி அப்படி ஒன்றும் திருமணத்திற்கு உடனே ஒத்துக்கொள்ளவில்லை , நீங்கள் முதலாளி வர்க்கம் ,நங்கள் தொழிலாளி வர்க்கம்,இப்போது சரி சரி என்றாலும் வருங்காலத்தில் நிச்சயம் சரிவராது,என்று மிகவும் நல்விதமாகவே மறுத்தார் ,

வருங்காலம் இதை தான் வைத்திருக்கும் என்று முன்பே தெரிந்தால் ராஜகோபால் மிகவும் கவனமாய் இருந்திருப்பார், மகளை திருமணம் செய்து வைத்திருக்கவே மாட்டார் ,

ஆனால் விதி வலியதாகிற்றே ,அதன் படியே அனைத்தும் நடந்தேறியது .

சங்கருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் , சரவணனிற்கு பெண் ஒன்று ஆண் ஒன்று சரஸ்வதிக்கு இரண்டு பெண்பிள்ளைகள் ,என அடுத்தடுத்து பிறந்து ஒரே வீட்டில் அனைவரும் வசித்திருந்தனர்.

சரவணன் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராய் இருந்தார் ராஜகோபால் ,பார்வதி மற்றும் வீட்டு பெண்கள் ,ஊரில் விவசாயம் பார்க்க சங்கரும் ,மணியும் தான் கடையை கவனித்து கொண்டனர் .





எந்த தடைகளும் இன்றி அவர்களின் வாழ்க்கை எட்டு வருடங்கள் நலமாக சென்று கொண்டிருக்கையில் ,மணி தங்களின் தூரத்து உறவு என்று ஒரு தம்பதியினரை,அழைத்து வந்து கடையில் வேலை வாங்கி கொடுத்தார் .

அத்தோடு கடைக்கு அருகில் உள்ள இவர்களின் மற்றொரு வீட்டிலும் தங்கவைக்க, வீட்டினரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை .

சாதாரணமாகவே நாட்கள் விரைந்தோட ,அந்த பொல்லாத நாளும் வந்தது. இன்னும் சில நாட்களில் தேர்தல் என்பதால் ,அணைத்து கட்சிகளின் பிரச்சாரமும் நாடு முழுவதும் விறுவிறுப்பாகவே நடந்து கொண்டிருந்தது .

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதவு தெரிவித்து அதே கட்சியியை சார்ந்த மத்திய அமைச்சர்.சேலத்திற்கு வருகை தந்திருந்தார் .அன்றய இரவு பிரச்சாரம் முடிந்து மேடையில் இருந்து அவர் இறங்குகையில் ,

பெண் ஒருவர் அவருக்கு வாழ்த்து கூறுவது போல அருகில் சென்றார் , அடுத்த நொடி குண்டு வெடித்து சிதற ,அந்த இடமே புகைமண்டலமாய் காட்சியளித்தது .

அந்த அமைச்சர் மட்டும் இன்றி பொதுமக்கள் சிலர் உயிரிழந்திருக்க பெருபாலானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .

அமைச்சர் அருகில் சென்ற பெண் இவர்களின் கடையில் உறவினர் என்று மணியால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் ,சம்பவ இடத்திலேயே! மணி உட்பட மூவரும் இறந்துவிட ,

அங்கு ஆரம்பித்த பிரச்சனை தான் இந்த குடும்பத்திற்கு,அதன்படி முதலில் கைதானவர் சரஸ்வதி, அடுத்ததாய் பிள்ளைகள் உட்பட அணைத்து குடும்ப உறுப்பினர்களும் ,காவல் நிலையம் கொண்டு செல்ல பட்டனர் .

அந்த காலத்தில் கைபேசி எல்லாம் கிடையாது ,அதனால் தொலைக்காட்சயிலும்,செய்தித்தாளிழும். செய்தி அறிந்து வேணியின் குடுமபத்தினர் ,வக்கீலோடு வந்து ராஜகோபால் மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் .

அப்போதும் சரஸ்வதியை அழைத்து வரமுடியவில்லை ,ஆண்கள் இருவரும் சேலத்தில் உள்ள ஆண்கள் சிறையில் இருக்க ,சரஸ்வதி மட்டும் வேலூரில் பெண்கள் சிறைக்கு மாற்றபட்டிருந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் கடையை மூடி அரசாங்கம் சீல் வைத்திருந்தது ,ராஜகோபால் அவரால் முடிந்த அளவிற்கு அங்கும் இங்கும் போராடினார்.

பார்ப்பவர் எல்லாம் எனக்கு உனக்கு என்று சளைக்காமல் கைநீட்ட , கையிருப்பும் கரைந்து விட்டிருக்க ,மனிதர் பிள்ளைகளை அழைத்து வந்தே ஆகவேண்டிய கட்டாயம் என்பதால் ,வீட்டை தவிர்த்து அவரின் அணைத்து சொத்துக்களையும் விற்க ஆயத்தமாக ,

அதே ஊரில் இருந்த அரசியல்வாதி அன்றய மதிப்பின் பாதி விலைக்கே சொத்தை வாங்கியிருந்தார் ,ராஜகோபாலிற்கும் தெரியும் . இது அநியாய விலை என்று ஆனால் இந்த நேரம் பொறுமையாய் ஆட்கள் தேடி விற்க முடியாத கட்டாயம் .

அவரின் மனமெல்லாம் பிள்ளைகளே ,அதுவும் தகப்பனின் சொல் மறுக்காமல் காட்டியவனுக்கு கழுத்தை நீட்டிய பெண்ணின் எண்ணமே!உண்மையில் சரஸ்வதிக்கு அதிர்ந்து கூட பேசுவராது ,

அவ்வப்பொழுது அண்ணிகள் இவரை புண்படும் படி ஏதும் கூறினால் கூட இதுவரை ஒரு நாளும் அவ்ர்களை எதிர்த்தது இல்லை. வீட்டினரிடம் கூட இவ்வாறு பேசுகிறார்கள் என்று குறை கூறியது கிடையாது ,மனிதர் அப்படி இப்படி என்று மகளை அழைத்து வர வேலை பார்த்து கொண்டிருக்க ,

தகாத செயல்களோ !தகாத வார்தைகளோ !எதனால் காயம் கொண்டாரோ! என்ன ஆனதோ !ஏது ஆனதோ ! அந்த பெண் என்ன பாடு பட்டதோ! தெரியவில்லை .

மூன்று நாளில் சரஸ்வதியின் சடலம் மட்டுமே வீடு வந்திருந்தது . அதையும் கொண்டுவர வீட்டினர் படாத பாடு பட்டு தான் கொண்டு வந்தித்திருந்தனர் .

மகளின் உயிரற்ற சடலத்தை கண்டு அமைதியாய் சரிந்தவர் தான் , அவரின் உயிர்பரவை பறந்து விட்டிருந்தது .







மகன்கள் சிறையில் இருக்க,பார்வதி தான் செய்வதறியாது மகளின் சடலத்தையும் ,கணவர் சடலத்தையும் கண்டவாறு விம்மி கொண்டிருந்தார் .

உறவுகள் தான் அனைத்தையும் எடுத்து கட்டி செய்து கொண்டிருக்க , அடுத்த நாள் போலீசார் கண்காணிப்பிலேயே மகன்கள் வந்து தந்தைக்கும் ,தங்கைக்கும் எல்லாம் செய்து எடுத்திருந்தனர் .

அதன்பிறகும் அவர்கள் சிறை சென்று விட , வேணியின் குடுப்பதினரும் , சுகுணா குடும்பத்தினரும். போராடி மூன்று மாதம் ஆனது. அவர்களை வெளியில் கொண்டுவர ,

வந்த இரு ஆண்களுமே ஒரு வித மன உளைச்சலில்,வீட்டினரோடு கூட பேசாமல் ஒரு மாதிரி இருக்க ,அடுத்து எப்படி வாழுவது என்று தெரியவில்லை .சரவணன் ஒரு முறை தற்கொலைக்கும் முயன்று விட அதற்குமேல் சுகுணாவும்,வேணியும் தாமதிக்கவில்லை .

மாமனார் சொத்து விற்று வைத்திருந்த பணத்தை சரிபாதியாய் பிரித்து கொண்டு ,அவரவர் பிறந்தகத்தை நோக்கி , கணவனையும் பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்று விட்டனர் .

இறுதியில் பார்வதி தான் ராணியாய் வளம் வந்திருந்த ஊரில் , அனாதையாய் ஐந்து வயதிலும் ,ஏழு வயதிலும் என்ன நடக்கிறது, என்றே புரியாத இரு பெண் பிள்ளைகளோடு நின்றார் .

அப்போதும் அந்த பெரிய மனுசி இன்றுவரை தளராமல் , பெண்களுக்காக உழைத்து கொண்டு தான் இருக்கிறார் .அவரின் முகத்தில் மட்டுமே மூப்புத்தெரியுமே!தவிர ,அவரின் வேலையில் அது தெரியவே தெரியாது .

சேற்றில் இறங்கி நடவு நட்டால் ,அவர் தான் முதலில் முடித்து கரை ஏறி இருப்பார். என்ன காது மட்டும் சற்று அதிகமாகவே மந்தமாகிவிட , பேசுபவரின் உதட்டசைவில் தான் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்வார் .

அவரின் மகன்களும் அந்த நேரம் மனைவிகளோடு சென்று இருந்தாலும் . அப்படி ஒன்றும் அவரை சும்மா விட்டுவிடவில்லை , அவ்வப்பொழுது வந்து பார்த்து விட்டு தான் செல்கின்றனர்.

என்ன அவர்களின் தேவைக்கு பணம் தான் பெரிய பிரச்சனை ,இதோ சென்ற வருடம் பார்கவி பெரிய மனுசியானத்திற்கும் சரி , ஆறு மாதம் முன்பு சிவன்யா பெரியமனுசியானத்திற்கும் சரி, அவர்களால் முடிந்த முறையை வந்து செய்து விட்டு தான் சென்றிருந்தனர் .

மகன்கள் வந்து போக இருந்தாலும்.மருமகள்கள் அப்படி கிடையாது. சுகுணாவாவது பிள்ளைகளின் மேல் பாசம் இல்லாவிட்டாலும். கடமைக்காக வந்து எடுத்து கட்டி செய்தார் .

பார்கவியின் விசேஷத்தில் வேணி கொண்டுவந்த தட்டை சபையில் வைத்து விட்டு ஓரமாய் அமர்ந்தவர் தான்,கிளம்பும் வரை அங்கிருந்து எழுந்து கொள்ளவே இல்லை .

அடுத்து சிவன்யாவிற்கு குடிசை கட்ட ,சங்கருக்கு அவர் பணிபுரியும் கார்மென்சில் விடுமுறை கிடைக்காததால் ,அவரின் மூத்தமகன் சர்வேஸ்வரன் தனது அன்னையோடு வந்திருக்க ,

ஏதோ வேலையாய் தங்கை அருகில் இருந்த பார்கவி ,குடிசைக்கட்டி கொண்டிருந்த சர்வாவிடம்,சிறு வயதில் கூப்பிட்டு பழகியது போலவே "மாமா " என்று அழைத்து,

அவன் குடிப்பதற்காக தண்ணீரை நீட்டி இருக்க ,அவன் இப்பொழுது அக்கா தங்கை இருவரையும் அந்நியமாய் பார்த்து கொண்டிருக்கையிலேயே !

வேணி"அடிங்க ,மாமனாம் இல்லை மாமன் ,என்ன இப்போவே என் மகனை மயக்கலாம்னு பாக்குறீங்களா ,பல்லத்தட்டி கையில குடுத்துருவேன்.மேனாமினுக்கிங்களா "என்று அடிக்குரலில் சீற,

பார்கவி கண்ணிரண்டும் கலங்கி போனது ,சிவன்யா ஏதோ சூடாய் பதில் கொடுப்பதற்குள் ,அக்கா தங்கையின் கையை இறுக்கி பிடித்து கொண்டாள்.அங்கு நின்றிருந்த சர்வா கூட தாயை எதுவுமே கூறாமல் வந்த வேலையை முடித்து கொண்டு கிளம்பி இருந்தான் .

பேத்திகள் சொல்லாததால் பார்வதிக்கும் இந்த விடயம் தெரியாது .ஆக பெண்களுக்கு மாமன்கள் உறவு இருந்தும் இல்லாத நிலை தான் .

பல்லை கூட விளக்காமல் ஆரஞ்சு மிட்டாயை சுவைத்து கொண்டிருந்தவளை முறைத்த பார்வதி பாலை கறந்து எடுத்து கொண்டு சொசைட்டிற்கு செல்ல ஆயத்தமானார் .

அதற்குள் அரசாங்கத்தில் கொடுத்த கேஸ்டவ்வில் ,தேநீர் வைத்திருந்த பார்கவி "ஆயா ,சொசைட் வண்டி வர இன்னும் நேரமிருக்கு டீ குடிச்சிட்டு போ "என்று குரல் கொடுக்க ,

அது காதுகேட்காததால் அவர் வீட்டை தாண்டி ரோட்டிற்கு செல்ல , சிவன்யா ஓடிச்சென்று பாட்டியின் கைபிடித்த்தவள் அக்கா கூறியதை சத்தமாய் கூற ,

பேத்தியின் பிடியில் இருந்து கையை விலக்கிக்கொண்டு "நீங்க குடிங்க கண்ணு நான் போறேன் ,"என்று புன்னகையோடு சென்றார். அந்த பெண்மணி


சென்றவர் சென்றவர் தான் திரும்பி வரவே இல்லை ,அன்றாவது தாய் தந்தை இல்லாமல் போனாலும் ,நிழலாய் அவர்களின் பாட்டி இருந்தார். இன்று அவரும் இல்லை இனி அவர்களின் நிலை ?
Very ?
 
மணியின் மூலம் இந்த குடும்பமே இப்படி ஆகிடுச்சே. இப்ப பாட்டியும் போக போறாங்களா. பாவம் இந்த பிள்ளைகள்.
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள்மா ? ? ? :love: :love: :love:
 
Top