Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு கண்ணே வருக-3

Advertisement

விதியின் நரக பிடியில் சிக்கி தாய், தந்தை இன்றி உறவுகளை அன்றி வாழும் இந்த இரு சகோதரிகளின் நிலைமை கண்டு நெஞ்சம் கண்ணீர் வடிக்கக்கிறது,????.

உண்மையில் ஒரு உறவு முறையில் மாமனை அண்ணா என்று அழைப்பது எல்லாம் எந்த அளவுக்கு அந்த மங்கை மனம் வேதனை கொண்டிருக்கும் கடவுளே ?????.


சர்வா உன்னுடைய வார்த்தைகள் கேட்டு ஷிவானி மனம் எப்படி துடித்து போயிருப்பாள், கொட்டிய வார்த்தைகளை அல்ல முடியாது ???????.

கனமான பதிவு ?????
 
எனக்கு படிக்கும் போது என்னவோ கண்ணு கலங்கிடுச்சு.. பெற்றவர்கள் இல்லனா பிள்ளைகள் நிலை கொடுமை தான் .... என்ன சிவா இப்படி ஒரு நிலமையில் நீ அவனை ரசிக்க வேண்டாம் டா..
 
எத்தனை பெரிய வார்த்தை
அழுங்காம சொல்லிட்டான்

சின்ன பிள்ளை இனி
இவங்க வீட்டில் எப்படி சமாளிக்கப்போறா
 
மாசறு கண்ணே வருக

அத்தியாயம் -3



கணவனுக்கு பயந்து தான் சுகுணா பெண்களை அழைத்து வந்தார்,ஆனால் அவருக்கே இப்போது பெண்களை,அத்தனை பிடித்திருந்தது . இவர்கள் வருவதற்கு முன் சுகுணாவின் காலை நிற்க நேரமில்லாமல் அத்தனை வேலைகளோடு பரபரப்பாகவும், எரிச்சலாகவும் இருக்கும்.

பல நாட்கள் காலை உணவு உண்ணாமல் தான் வேலைக்கு செல்வார்.இப்போதெல்லாம் அத்தனை நிம்மதியாக இருந்தது ,அவருக்கு இந்த வீட்டில் வேலையே இல்லை, என்பது தான் உண்மை.



காலையில் பார்கவி சமையல் செய்து முடித்த கையோடு ,அனைவருக்கும் மதிய உணவையும்,கட்டி வைத்து விடுவாள் . சமைக்க தெரியாததால் மற்ற வெளி வேலைகள் அனைத்தையும் சிவன்யா செய்து விட்டு .

தனியார் பள்ளிக்கு செல்லும் இவர்களின் பிள்ளைகளையும் எழுப்பி ,கிளப்பி,வேண் வரும் நேரம் வரை காத்திருந்து அவர்களை அனுப்பிய பின்னே சிவா வந்து கிளம்புவாள் ,அதன் பிறகு உண்டு விட்டு அக்காவும்,தங்கையும் பள்ளி கிளம்புவார்கள்.

மாலை வந்தாலும் அப்படித்தான் ,வீட்டு பாடம் முடித்து விட்டு ,பார்கவி சமைக்க சென்றால் , சிவன்யா இவர்கள் பிள்ளைகளுக்கு ஹோம் ஒர்க் செய்ய உதவி விட்டு,துவைத்து வைத்த துணி அடுக்குவது,அடுத்த நாளுக்கு தேவையானவைகளை தயார் செய்வது என இருப்பவள்.

இரவு உணவை உண்டு முடித்ததும்,ஹாலில் பாயை விரித்து படுத்து விடுவார்கள்.எந்த விதத்திலும் மாமன் குடும்பத்தை. அவர்கள் எந்த தொந்தரவும் செய்வதே இல்லை.

இதோ கோடை விடுமுறையில் ,அடுத்த வருடம் புத்தகம் வாங்க நாங்களே சம்பாதிகிறோம்,என்று பக்கத்துக்கு வீட்டு பூக்கார அம்மாவிற்கு , பூ கட்டி கொடுக்கிறார்கள்.

காலை அந்த வேலை முடிந்ததும்.அடுத்த வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஊதுவத்தி எண்ணி பேக் செய்து கொடுக்கிறார்கள். முதலில் சுகுணா கூட கணவர் ஏதேனும் சொல்வாரோ என்றெண்ணி இது எல்லாம் வேண்டாம் என்க ,

சரவணன் "அவங்க சுயமா சம்பாதிக்க ஆசைபடுறாங்க,அது எல்லாம் தடுக்கதே"என்று விட்டார் ,இவர்களை பார்த்து,இப்போது அவரின் பிள்ளைகளும்,ஊதுவத்தி பேக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

அது போன்றதொறு காலையில் தான் சர்வா சித்தப்பா வீடு வந்திருந்தான்.சரவணன் பள்ளியில் ஒரு மீட்டிங் இருக்க , அதற்கு கிளம்பி கொண்டு இருந்தார்,







சொல்லமால் கொள்ளாமல் தீடீரென்று வந்து ,அத்தை பெண்ணை அழைத்து செல்கிறேன்.என்ற அண்ணன் மகனை யோசனையோடு பாத்திருந்தார்.சரவணன் ஊரில் இருந்து கிளம்பி சென்ற இரண்டு நாட்களில் அவரை அழைத்த சங்கர்,

" இந்த வருஷம் முடிய இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு. பாப்பா அங்கவே படிக்கட்டும் , அடுத்த வருஷம் நான் கூட்டிட்டு வந்து இங்க பள்ளிக்கூடம் சேர்த்துகிறேன்." என்று கூறும்பொழுது அது வெறும் கண்துடைப்பு, என்று தான் நினைத்திருந்தார். இப்போது உண்மையாகவே அவரின் மகனை அனுப்பி வைத்திருக்க,

அண்ணியின் குணம் தெரிந்துகொண்டே! எப்படி பெண்ணை அனுப்புவது என்று தான் யோசித்தபடி அமர்ந்திருந்தார்,

அந்த யோசனை ஏதும் இல்லாத சுகுணா ,"எந்த பாப்பாவை கூடிட்டு போறே! சர்வா" என்று கேட்கவும் .அப்போது தான் அப்பா இதை சொல்லவில்லையே! என்று உணர்ந்து கொண்டவன் ,

சட்டென நிமிர்ந்து தங்களுக்கு எதிரில் அமர்ந்து, பூக்கள் தொடுத்து கொண்டு இருந்த அத்தை மகள்களை பார்த்தான் ,பார்கவி மிகவும் சாதாரணமாக தொடுத்து கொண்டிருக்க ,எங்கே தனது பெயரை சொல்லி விடுவானோ! என அச்சத்தில் சிவன்யா அவனை பார்ப்பதும், கீழே குனிவதுமாய் இருக்க,

அந்த நொடி சர்வா வேகமாய் " சிவன்யா" என்று விட்டான் .அவனை விட வேகமாய் "ஆஹான் நான் எல்லாம் மாட்டேன் ,அந்த அத்தை திட்டுவாங்க ,"என்று சிவன்யா கண்ணை கசக்கி கொண்டு அழுதிருந்தாள்.

அவள் அழுகை அதிகரிக்க,அதிகரிக்க ....இவளை தான் அழைத்து செல்ல வேண்டும் என்கிற சர்வாவின் முடிவும் இன்னும் ஸ்திரமாகி கொண்டே போனது.அவன் நிமிர்ந்து அவளை முறைக்க,

இப்போது பார்கவி தான் தங்கையின் கையை அழுந்த பற்றி, சின்ன குரலில் ஏதோ சமாதானம் கூறி கொண்டிருந்தாள்.

சுகுணாவிற்குமே சிவன்யா இவ்வாறு மறுத்ததும் .பார்கவியை அனுப்பலாமா என்ற எண்ணம் எழத்தான் செய்தது ,ஆனால் அவள் சர்வாவை விட மூன்று வயதே சிறியவள்,சதாவை விட ஒரு வயது சிறியவள் .

தாங்கள் பாட்டிற்கு இவளை அனுப்பி, அங்கே பிள்ளைகளுக்குள் ,ஏதேனும் விருப்பம் முளைத்து விட்டது எனில் வேணி சாமி ஆடிவிடுவார் . அதனால் தான் அவரும் சிறு பெண்ணான சிவன்யாவை அழைத்து வர சொல்லி இருக்கிறார் போலும். என்று நினைத்து கொண்டவர் . அமைதியாய் இருக்க ,

அனுப்பலாமா வேண்டாமா என்று யோசனையில் இருந்த சரவணனுக்கு, இப்போது சிவன்யாவின் மறுப்பில் ,இரு பிள்ளைகளும் இங்கேயே இருந்து கொள்ளட்டும்.

சுகுணா எப்படி இருந்தாலும் நன்றாகவே கவனித்து கொள்வார். ஆனால் வேணி அப்படி இலையே அதனால் ,அவர் மறுத்து சொல்ல வரவும் , அவரின் எண்ணம் புரிந்தது போல "சித்தப்பா இங்க வாங்களேன்" என்று அண்ணன் மகன்,வீட்டிற்கு வெளியே தனியாக அழைத்து கொண்டு போனான்.

அவர் வந்ததும் காலையில் வீட்டில் நடந்த அணைத்து பிரச்சனைகளையும் சொல்லி "அப்பா, சிவன்யாவை கூட்டிட்டு வரதுன்னு முடிவு பன்னிட்டாங்க,இப்போ நீங்க அனுப்பலைனா,அம்மா எப்பவும் இவங்களை சேத்துக்கவே மாட்டாங்க,"

"நாங்க உதவி பண்ணலை நாளும் ,நீங்களே பாத்துக்குவிங்க தான். ஆனால் பாரு அடுத்த வருஷம் காலேஜ் போகணும், சிவாவும் இப்போ பத்தாவது,அடுத்தடுத்து அவ மேல படிக்கபோகணும் ,நம்ம தம்பி, பாப்பாவுக்கும். நீங்க பீஸ் கட்டனும் .அவங்க காலேஜ் படிக்க சேத்து வைக்கணும்."

"பாரு படிச்சு முடிச்சதும் வரன் பாக்கணும். அடுத்து சிவாவுக்கு பாக்கணும் ,இன்னும் எவ்ளோ பாரம் தான் நீங்க தாங்குவிங்க, நான் சீக்கிரம் படிச்சு முடிக்க போறேன்,சதாவும் காலேஜ் போய்ட்டான்.அங்க இனி செலவு கம்மி தான்,நாங்க சிவாவை பாத்துகிறோம் சித்தப்பா ,"என்று தன்மையாய் எடுத்து கூற,

அப்போதும் அவர் இவனின் அண்ணையை நினைத்து தயங்க,"அம்மா அப்படி தான் அவங்களை மாத்த முடியாது. ஆனால் அப்பா இருக்காங்க ,நானும் தம்பியும் இருக்கோம் விட்ருவோமா ,அவ என்ன படிக்கணும்னு ஆசைப்படுறாளோ அதை நிச்சயம் படிக்க வைப்போம் சித்தப்பா" என்று உறுதி கொடுக்க,

சொன்னதை எல்லாம் இவன் செய்வானோ மாட்டானோ ,ஆனால் மகனின் பேச்சில்,இப்போவே எவ்ளோ பொறுப்பு ,எங்க பிள்ளைக்கு , என்று சித்தப்பன் உருகி போனார்.

"சிவன்யா ,போக மாட்டேன்னு அழுகுறாளே!" என்றவர் அண்ணனுக்கு அழைத்து தயக்கமாய் கூற," அவ சின்னப்பொண்ணு,அவளுக்கு என்ன தெரியும் ,போக போக சரி ஆகிடுவா,அனுப்பி வை "என்று சங்கர் முடித்து விட .......

சரவணன் "அழைச்சிட்டு போ," என்று சம்மதம் அளித்தவர், பள்ளிக்கு சென்று விட்டார்.

அப்போதும் சிவா அழுது கொண்டே தமக்கை இடம் ஏதோ கூறி கொண்டு இருக்க, சிவன்யாவை பற்றி எல்லாம் சர்வா கவலை கொள்ளவே இல்லை.உள்ளே வந்தவன் பாருவிடம் "அவளை கிளம்ப சொல்லு ,டீசி வாங்க போகணும்."என்றவன்.

காலில் சூடு தண்ணீர் கொட்டியவனை போல ,அவசரமாய் வீட்டை அளந்து கொண்டு நிற்க . சிவாவிற்கும் வேறு வழியில்லை .

பள்ளி அருகில் இருப்பதால்,கடனே என்று அவனோடு கிளம்பி நடந்தவளின் மனம் முழுவது எப்படியாவாது இவனோடு அவங்க வீட்டிற்கு செல்ல கூடாது என்ற எண்ணமே இருந்ததால்.

இவனிடம் பேசி தான் வரவில்லை என்று கூறிவிட வேண்டும்.என்ற முடிவோடு .மாமா என அழைத்தால்,பிடிக்காது என்று தெரிந்ததால் ,

ஜாக்கிரதையாக ,"சர்வா அண்ணா" என்று அழைத்து ஆரம்பிப்பதற்குள் ,

அவன் இவள் முகத்தை பார்த்து முறைக்கவும்.அப்போதும் தளராமல் மிகவும் தயக்கத்தோடு ஆரம்பிக்க,என்னவோ முதல் முறை சிவாவிற்கு, அவனை கண்டு பயமாய் இருந்தது. அதனால் தனது கண்ணை இருக்கமாய் மூடிகொண்டவள்.

"அண்ணா ,நா... நான் உங்க வீட்டுக்கு வரலை, எங்க மாமா வீட்டுலயே இருந்துகிறேன்,ப்ளீஸ் என்னை விட்டுட்டு போய்டுங்களேன்." என்று அவள் கெஞ்சலாய் கூறி முடித்து ,சில நிமிடம் கடந்தும். அவளின் முன் எந்த சத்தமும் இல்லாமல் போக . மெல்ல அவள் விழிகளை திறந்து பார்த்தாள் ,

அவளின் முன்னே இரு கரங்களையும் கட்டிக்கொண்டு ,ருத்ர சிவனாய் சர்வா நின்று கொண்டிருக்க ,பார்த்த பெண்ணுக்கு தேகம் நடுங்கியது.தவறாக ஏதும் பேசிவிட்டோமோ! என்று அவள் உதிர்த்த வார்த்தைகளை, கோர்த்து பார்க்க அப்படி எதுவும் தவறாக கூறவில்லையே ,

'பின் ஏன் முறைக்கிறான்.' என்று நடுக்கத்தோடு அவள் பார்க்க,சர்வா உருவத்தில் மட்டும் அல்ல, குணத்திலும் தனது தந்தையை கொண்டு தான் பிறந்திருந்தான்,

ஆக அதே அழுத்தம். சற்று அதிகமாகவே அவனிடம் இருந்ததது.

"உங்க மாமா வீடா , வாட் அ ஜோக், உனக்கு போக வீடுஇல்லை .அதுனால அடைக்கலம் தான் கொடுத்திருக்கார். அதை சொந்தம் கொண்டாட கூடாது."

"because,beggars not choosers,"

"உன்னை எங்க வீட்டுக்கு பாசமா கூட்டிட்டு போறேன்னு நினைக்குறியா ,சில்லி கேர்ள் என்னோட அம்மாக்கு ஹெல்பரா ,கூட்டு போறேன் , சோ உன்னோட இடம் எதுன்னு தெரிஞ்சு நடந்துக்கோ!"என்று இளக்காரமாய் அவன் கூற

ஒரு நொடி அதிர்ந்து நின்ற பெண்மனது, மிகவும் அடிபட்டு போனது,

'நிஜம் தானே !வேறு போக்கிடம் இல்லாததால் தானே! மாமா அவர் குடும்பத்தோடு தங்க வைத்திருக்கிறார் .பிச்சைக்காரர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை ,

அவன் ஒரு முறை கூறிய வார்த்தை தான், ஓயாமல் அவளின் காதினுள் ஒளித்து கொண்டே இருந்தது .அப்படி ஒரு வலியையும் கொடுத்தது .



சிவன்யா அவனுக்கு பதிலே சொல்லாமல் ,அமைதியாய் அவனை விட்டு ஓரடி பின்னால் நடந்து வந்தாள்.அப்போது மட்டும் அல்ல, சான்றிதழ் வாங்கி கொண்டு திரும்பிய வேளையில் கூட ,

"ரொம்ப வெயில் ஜூஸ் குடிக்கலாம்," என்றவன். இவளுக்கும் ஒன்றை வாங்கி கொடுத்த போதும் .

வேண்டும் என்றும் சொல்லாமல் ,வேண்டாம் என்றும் சொல்லாமல் அமைதியாய் கொடுத்ததை வாங்கி பருகி விட்டு நின்றிருந்தாள்.

வீட்டிற்கு வந்த வேகத்திலேயே அவன் கிளம்ப முற்பட ,அவன் சித்தப்பாவும் வீட்டில் இருந்தவர் தானும் சிவா விடம் ,"போக விருப்பமா," என்று கேட்க ,

"போறேன்" என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தி கொண்டாள்.

சுகுணாவிடம் இருந்து சில பல அறிவுரைகள் வந்தாலும் ,பார்கவியிடம் இருந்து தான் ஏராளமான அறிவுரைகள் ,

"அந்த அத்தை கொஞ்சம் கோவமா தான் பேசுவாங்க ,இங்க மாதிரி எதிர்த்து வாய் பேசாமல் , அமைதியாய் இரு,சீக்ரம் எழுந்துகோ , உன்னோட வேலைகளை சரியா செஞ்சிட்டு... கொஞ்சம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு,சரியா சாப்பிடு , முக்கியமா நல்லாப்படி,படிப்பு மட்டும்தான் நம்மளை உயர்த்தும்."

"உன்னோட கவனம் முழுசும் படிப்புல தான் இருக்கனும் ,பெரியமாமா வீட்ல இருக்கும்பொழுது,அவர்கிட்ட மட்டும் வாங்கி போன் பண்ணு , தேவை இல்லாமல் அவங்க பசங்க கிட்ட பேசவே பேசாத ,அப்டியே பேசினாலும் அண்ணா மட்டும் தான் சொல்லணும்."

"உனக்கு எந்த பிரச்சனை நாளும் ,எப்பவும் உன்னோட அக்கா நான் இருப்பேன் லீவுக்கு இங்க வா சரியா ,"என்று ....

இவை அனைத்தையும் அவரகள் அறைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தாலும்,வெளியில் இருந்த சர்வா காதிலும் விழ,இகழ்ச்சியாய் சிரித்து கொண்டான்.

சிவா அக்கா சொன்னது அனைத்திற்கும் தலையை ஆட்டியவள் .கடைசியாய் பெரியவள் கண்ணீரோடு விடை கொடுகையில் ,

எங்கே தான் அழுதாள். சர்வா ஏதேனும் அக்கா மனம் புண்படும் படி பேசிவிடுவானோ! என்ற அச்சத்தில். பல்லை கடித்து கொண்டு அழுகாமல் விடை கொடுத்தாள் .

சரவணன் பேருந்து நிலையம் வரை வந்து பேருந்து ஏற்றி விட்டவர்." பத்திரமா போட்டுவியா, இல்லை வந்து விட்டுட்டு வரட்டுமா,"என்று பத்தாவது தடவையாய் கேட்டிருக்க ,

"சித்தப்பா ,நான் இன்னும் சின்ன பையன் இல்லை ,காலேஜ் போறேன். பெரிய பையன் ஆகிட்டேன் , "என்று சர்வா புன்னகைக்க ,

"பசங்க எவ்ளோ பெரியவங்க ஆனாலும் ,பெத்தவங்களுக்கு சின்ன பிள்ளைங்களா தான் தெரிவாங்க" என்றவர் ,"போன உடனே போன் பண்ணி சொல்லு ," என்று விட்டு தங்கை மகளின் கையில், சில நூரு ருபாய் தாள்களை திணித்தார்.

வீட்டில் சுகுணாவும் சில நூறுகளை கொடுத்திருக்க ,"இல்ல வேண்டாம் ,அத்தை கொடுத்தாங்க" என்று இவள் மறுக்க ,

"பரவாயில்லை வச்சுக்கோடா ,"என்றவர். பெண்ணின் உச்சந்தலையில் கைவைத்துஅழுத்தி விடை கொடுத்து ,கலங்கிய கண்களை மருமகள் அறியாமல் துடைத்து கொண்டார் .

ஆனாலும் மகன் கண்ணிலிருந்து இந்த கண்ணீர் தப்பவில்லை,சிவன்யாவிற்கு மறைக்காமல் இந்த கண்ணீரை இவர் காட்டியிருந்தால் , எங்களுக்கு உரிமையாய் தங்க வீடு இல்லை , அன்பாய் பார்த்து கொள்ள உறவுகள் யாரும் இல்லை,

நானும் எனது அக்காவும் அனாதைகள் ,மற்றவர்களின் பார்வையில் பிச்சைகாரிகள் என்ற எண்ணம் ,அந்த இளமனசில் பசுமரத்தாணி போல் பதியாமல் இருந்திருக்குமோ! என்னவோ!

அந்த அரசு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டதும் ,சிவன்யா கண்களை அழுந்த மூடி அமர்ந்து கொண்டாள். காலம் அவளுக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ !அத்தனை அச்சமாய் இருந்தது .

சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பி விட , "எங்க போகணும் ,டிக்கெட் வாங்குமா" என்ற நடத்துனர் குரலில்,கண்விழித்தவள்.தன்னருகே பார்க்க , அங்கு வேறு ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார் ,

எங்கே அவன் ,என்று பேந்த பேந்த விழித்தாள் ,அவளின் பார்வை அந்த பேருந்து முழுவதும் அவசரமாய் அலசியது .காணவில்லை அவனை ,

'அய்யோ!எங்கே போனான் ,டிக்கெட் வாங்க.. காசு கூட இல்லையே !'

பின்னே மாமா குடுத்த காசை சிறிய பர்சில் போட்டு ,அவளின் பையில் வைத்திருக்க ,

சர்வா "வழியில் வச்சிருக்க ,எப்படி மத்தவங்க நடந்து போவாங்க" என்று கடிந்து கொண்டவன்.

அதை எடுத்து மேலே வைப்பதற்கு இடம் பார்த்து கொண்டிருக்கையில் தான் .இவள் விழி மூடியது ,அவள் விழி மூடிய சில நிமிடங்களில். யாரோ அருகில் அமரும் அரவம் கேட்க , கண்ணை திறக்காமல் அவன் தான் போலும் .என்று எண்ணி கொண்டாள்

இப்போது தானே தெரிகிறது ,அது அவன் இல்லை என்று ,'மாமா கூட இன்னேரம் போயிருப்பங்களே ,ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி என்னை பஸ்ல உட்கார வச்சிட்டு போய்ட்டானா ,'

'நான் எப்படி வீட்டுக்கு போவேன்,நான் தொலஞ்சி போய்ட்டேனா ,அய்யோ! பாரு உன்னை நான் இனி பாக்கவே முடியாதா ,நான் இப்போ என்ன பண்ணுவேன்."என்று செய்வதறியாது கண்கள் கலங்க ,அவள் விழித்து கொண்டிருக்கையில்.

பின்னிருந்து "அண்ணா ரெண்டு திருப்பூர் ,"என்ற அவனின் குரல் தேனாய் பாய்ந்தது அவள் செவிகளில்,படக்கென்று குரல் வந்த திசையில் பின்னால் திரும்பி பார்க்க , பேருந்து படிகளில் நின்று கொண்டு ,காதில் அலைபேசியை வைத்திருந்தவன். யாரோடோ! புன்னகையுடன் பேசி கொண்டிருந்தான்.

அவனின் பார்வை ஒரு நொடி இவளின் மேல் அழுத்தமாய் பதிந்து மீண்டது.

'அப்பாடா ,என்னை விட்டுட்டு போகலை' என்று உயிர் வந்த உணர்வு மாதுவிற்கு , "ரெண்டுன்னா இந்த பாப்பாவுக்கும் சேர்த்தா," என்ற நடத்துனர் குரலில்,

அவன் காற்றில் அலைபாய்ந்த சிகையை , அழகாய் கோதி கொண்டு, ஆம் என்று தலை அசைக்க ,

அவனின் செயலை கண்ட பெண்ணுக்கு,இங்கு மூச்சு முட்டியது.ஓடி சென்று அவன் கோதிய தலையை,மீண்டும் கலைத்து விடும் வேகம் வேறு தோண்ற,தன்னை அறியாமல் அவனையே பார்த்திருந்தாள்.

வெகு நேரம் கழித்து நடத்துனர் விசில் சத்தத்தில் கவனம் கலைந்தவள் ,அப்போதே அவனை ரசித்து கொண்டிருப்பது புரிய ,வேகமாய் முன்னாள் திரும்பி அமர்ந்து கொண்டாள்.

ஆனாலும் ஊர் வந்து சேரும் வரை,அவ்வப்பொழுது பேருந்தில் இருக்கிறானா ,இல்லை தன்னை விட்டு இறங்கி விட்டானா, என்று அடிக்கடி அவனின் இருப்பை உறுதி செய்து கொண்டாள்.



சர்வாவின் முழங்கை வரை தான், சிவன்யாவின் உயரம் இருந்தாலும் .பருவ வயது பெண்ணின் வனப்பு சற்று அபரிமிதமாகவே இருக்க, அவனோடு நடந்து வருகையில் அவனுக்கு அத்தனை பொருத்தமாய்,பாந்தமாய் இருந்தாள்.



மாலை மங்கிய வேலையில் ,கையில் பையோடு ஒரு பெண்ணுடன் சர்வேஸ்வரன் வருவதை , அந்த தெருவில் உள்ளவர்கள் சற்று சுவாரஸ்யமாய் பார்த்திருக்க,வேணி கூட இவர்களின் ஜோடி பொருத்தத்தை கண்டு திடுக்கிட்டு போனார்.







லைக்ஸ் ,கமன்ட் கொடுத்து உற்சாக படுத்தும் அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் ,
Very nice ?
 
பாவம் சிவன்யா.. ??சர்வா எவ்வளவு மோசமான வார்த்தைகள்.. அம்மா மாதிரியே பிள்ளை.. இன்னும் என்னவெல்லாம் கஷ்டப்படப் போறாளோ..
 
ஒவ்வொரு எபிலையும் கணகலங்க வைக்கிறீங்கப்பா.
சர்வா எப்படியெல்லாம் பேசுறான்.
அண்ணான்னும் சொல்றா சைட்டும் அடிக்கிறா.
பாருவின் அட்்வைஸ் அருமை
 
???

சர்வா வீட்டுக்கு எதிர்கால மருமகளை கூட்டிட்டு வந்துட்டான்....
 
Top