Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக4

Advertisement

அத்தியாயம் -4

சிவன்யா மாமன் வீடு வந்து சில மாதமாகியிருந்தது.இன்று ஞாயிறு என்பதால்.வீட்டில் இருந்தவள் .அவளின் தனிப்பட்ட அணைத்து வேலைகளையும்,முடித்து விட்டு அவளுக்கு என ஒதுக்கி இருக்கும் வாயிற்புறம் இருந்த அறையின்.சாளரத்தின் வழியே எதிரில் இருக்கும் க்ரவுண்டில் வாக்கிங் செல்பவர்கள் மற்றும் செட்டில் விளையாடி கொண்டிருப்பவர்களை வெறித்தபடி நின்றிருந்தாள்.

அங்கு விளையாடுபவர்களில் அவளின் மாமன் மகன் சதாவும் அடக்கம்.இன்று சர்வாவை அங்கு காணவில்லை.அவனும் அவனின் தோழமைகளோடு வேறு ஒரு பக்கம் கால்பந்து விளையாடுவான்.

கண்ணை முடி ஒரு நிமிடம் அவனின் குரல் இன்று வீட்டில் கேட்டதா என்று யோசித்தவள்.அவனின் தாயிடம் மதியம் அவன் தோழர்களோடு கோயம்பத்தூர் செல்கிறேன்.என்றது நினைவில் எழவும்.

கண்ணை திறந்து மீண்டும் வேடிக்கை பார்க்கலானாள்.பார்வை அங்கே இருந்தாலும்.மனம் முழுவதும் கடந்து வந்த மாதங்களை பற்றிய சிந்தனை தான்.



அன்று மகனின் பின்னோடு தயக்கமாய் வந்த சிவன்யாவை கண்டு வேணி முறைத்த முறைப்பில்,இதோ இப்போது கூட சிவன்யாவிற்கு அச்சமாய் இருத்தது.

அவரின் பார்வையில் பயந்தவள் அப்படியே வாயிலிலேயே நின்று விட ,இவளை கண்டு கொள்லாமல்," சர்வா,என்னடா இது,தெருவுல இருக்குற அத்தனை பெரும் பாக்குறமாதிரி , இவளோடு ஜோடி போட்டுக்குட்டு வர"என்று வேணி மகனை கடிய ,

"அம்மா" என்று அழுத்தமாய் அழைத்தவன்.வேறு ஏதும் பேசாமல் வீட்டினுள் நுழைந்து விட்டான் " என்னடா அம்மா" என்று எரிந்து விழுந்தவர்.மகன் சென்று விட்டதால். மிரட்ச்சியோடு நின்றிருந்த சிவன்யா புறம் திரும்பி.

"என்ன அங்கேயே நிக்கிற ,அதான் வாசல் வரைக்கும் வந்தாச்சே !அப்புறம் என்ன,உன்ன ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள அழைக்கணுமோ!"என்று நக்கலாய் கேட்கவும் .

பதறி அடித்து கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.அவளுக்கு வலது புறம் இருந்த அறையை காட்டியவர் ,"அங்க போய் இருந்துக்கோ!நானா கூப்பிடாமல் வீட்டுக்குள்ள நுழைய கூடாது ."

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சதா,சிவன்யா அருகில் வந்தவன்.அவளை வெளிப்படையாக முறைத்து விட்டு ,"அம்மா அது என்னோட பிலே திங்ஸ் வைக்குற ரூம் ,என்னோட பிரண்ட்ஸ் வந்தா அங்க தானே கேரம் விளையாடுவோம் "என்கவும் ,

"உன் பொருள் எல்லாம் எடுத்து வெளிய மாடி படிக்கு அடியில் வச்சிக்கோடா, இனிமேல் உன் ப்ரண்ட்ஸ்னு சொல்லிட்டு யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வராதே! அப்புறம் ஏதாவது தேவையில்லாத பிரச்சனை கிளம்பும்."என்று அவர் முடிக்கும் முன்பே

அண்ணனை போலவே இவனும் "அம்மா "என்று அழுத்தமாய் அழைக்க ,சர்வா மேல் இருந்த கோபமும் இவன் புறம் திரும்பி விட்டது வேணிக்கு ,

"என்னங்கடா ஆளாளுக்கு அம்மா அம்மான்னு ஏலம் போடுறீங்க ,உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா ,உன் அப்பாகிட்ட சொல்லி இவள துரத்தி விட்டுட்டு ,உன்னோட பிரான்ஸை கூட்டிட்டு வந்து விளையாடு எனக்கென்ன"என்று ஏக கடுப்பில் உரைத்தவர் சமயலறைக்குள் நுழைந்து விட்டார்.

'எது இவளை அப்பாகிட்ட சொல்லி நான் துரத்துறதா, காலையில் தாய் வாங்கிய அறை நினைவில் எழ,நமக்குஎதுக்கு வம்பு 'என நினைத்தவன்.

"இங்க பாரு பாப்பா,இது எங்க வீடு ,இருக்குற எல்லாமே எங்களோட பொருள் ,நீ சும்மா தங்க தான் வந்துருக்க ,அதுனால என்னோட பிளே திங்ஸ்,உள்ள தான் இருக்கும்.நான் விளையாட போகும் பொழுது எடுத்துப்பேன்.திரும்ப கொண்டு வந்து வைப்பேன்.நீ அம்மா கிட்ட சொல்ல கூடாது "என்று மிரட்டவும்.

"ம்ம்ம் சரிங்க அண்ணா "என்று அவள் மிரட்சியோடு தலை ஆட்டிய பிறகே அவன் அங்கிருந்து நகரவும்,பெண்ணுக்குள் வெளியில் பகிர முடியாத அளவிற்கு ஆழமான வழி ,மிக பெரிய மன அழுத்தம்.

அந்த சிறிய அறைக்குள் நுழைந்து .கையில் இருந்த பையை கீழே வைத்தவள்.தயங்கியபடியே மீண்டும் வெளியில் வர ,அதற்குள் இலகுவான உடைக்கு மாறி ,ஹாலில் உள்ள சோபாவில்.தம்பியோடு அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான்.சர்வேஸ்வரன்

அவனை தயக்கமாக ஏறிட்டவள்.அவனின் கவனம் இவளிடம் இல்லை எண்பதை உணர்ந்து பார்வையாலே வீடு முழுவதும் சுற்றி வந்தாள்.அப்போதும் அவளுக்குத்தேவையானது கிடைக்காமல் போய்விட,

ஒரு சிறிய முக சுளிப்போடு மறுபடியும் அறைக்குள் நுழைய போனவளை ஒரு சொடக்கு ஒலித்தடுத்து நிறுத்தியது.அமைதியாய் ஒலி வந்த திசையை பெண் நோக்க,சொடக்கிட்ட கையாலேயே !பின்கட்டை சுட்டி காட்டிய சர்வாவின் பார்வை என்னமோ தொலைக்காட்சியில் தான் இருந்தது.

அவனை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் ,பெண் அவசரமாக ,பின்கட்டிற்கு விரைந்து , கழிவறைக்குள் சென்று தனது தேவைகளை முடித்து கொண்டு, அந்த அறையினுள் நுழைந்தவள். அற்க்கு பின் அடுத்த நாள் காலை வரை வெளியில் வரவே இல்லை.

மாலை வீட்டிற்க்கு வரும்பொழுதே அவன் சிற்றுண்டி வாங்கி கொடுத்திருக்க ,அதுவே வயிறு நிறைந்து விட்டதால்.இரவு உணவிற்கு அத்தை அழையாது விட்டதை கூட கவனிக்காமல் உறங்கியிருந்தாள்.

அடுத்த நாள் காலையில் அறைக்கு வெளியில் இருந்து சங்கர்" பாப்பா ,சிவா கண்ணு" என்று அழைத்த பிறகே எழுந்து வெளியில் சென்றாள்.சங்கருக்கு உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் . சரவணன் போல் வெளியில் காட்ட வராது.

இருப்பினும் மனைவியை பற்றி அறிந்தவர் என்பதால்."குளிச்சிட்டு சாப்டுட்டு கிளம்பு , உன்னை சர்வா ஸ்க்கூல்ல சேத்து விடுவான்" என்க,அங்கு காபி அருந்தியபடி அமர்ந்த்திருந்தவன்.

"அம்மா ,என்னால யாரோடும் போக முடியாதும்மா ,"என்று வேகமாய் மறுக்க , மகனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் , "நான் வரேன் நீ கிளம்பு கண்ணு" என்று இவளிடம் கூறிவிட்டு , அலைபேசியை எடுத்து தனக்கு பர்மிசன் சொல்லியவர்.வெளி வாசலில் இவளுக்காய் காத்திருக்க ,குளித்து விட்டு வேண்டா வெறுப்பாய் அத்தை கொடுத்த உணவை ,

முழுங்க முடியாமல் திணறிய வேளையில் ,"ஏன் சர்வா நீ அழைச்சிட்டு போய் சேத்துவிட்டு வரக்கூடாதா ,அப்பா பாவம்டா ,நமக்காக ஒரு நாளைக்கு ரெண்டு ஷிப்ட் பாக்குறார்."

"இப்போ இவளுக்காக வேற வெளில அலைஞ்சா அவரு உடம்பு என்னத்துக்கு ஆகும் ." என்ற தாயின் புலம்பலுக்கு ,"இப்போ இப்படி சொல்லுங்க, அப்புறம் எல்லாரும் பாக்க ஏன்?ஜோடி போட்டு வந்தேன்னு கேளுங்க ,"என்று அவன் எரிந்து விழுக ,

"சாரிடா" என்று மகனை கொஞ்சி ,கெஞ்சி அவர் சரிக்கட்டவும். "போய்த்தொலையுறேன்." என்று கிளம்ப சென்றான்.தாய் மகன் உரையாடலை கேட்டபடி , உண்ண அமர்ந்திருந்தவளுக்கு,

மிக பெரிய கேவல் வெடித்து எழ ஆரம்பிக்க ,உணவோடு சேர்த்து அழுகையையும் விழுங்கியவள்.தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு, சிறுஇடைவெளி விட்டு அவனை பின் தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற முடிவோடு ,வெளிவாசலில் வந்து நின்று கொண்டாள்.





வெளியில் இருந்ததால் ,சங்கருக்கு இவர்களின் உரையாடல் கேட்காமல் போய்விட வேணி வந்து "தம்பி அழைச்சிட்டு போறானாம் ,நீங்க உங்க வேலையை பாருங்க" என்று கணவரிடம் கூறி கொண்டிருந்த வேளையில் கிளம்பி வந்தவன்.

தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு ,அவனின் இரு சக்கரவாகனத்தை கிளப்பியபடி , சிவன்யாவை ஏறிட,உள்ளுக்குள் 'அய்யயோ வண்டிலயா' என்று அபாயமணி அடித்தாலும்.வெளியில் சாதாரணம் போல் காட்டிக்கொண்டு வண்டியில் ஏற அய்யகோ முடியவில்லை.

அவள் தான் இதற்கு முன்பு இருசக்கரவாகனத்தில் சென்றது இல்லையே அதனால் அவளுக்கு ஏற தெரியவில்லை என்பதே நிதர்சனம் .

தட்டுத்தடுமாறி ஏறியமர்ந்தவள்.அவனோடு இடைவெளி விட்டு நடக்க வேண்டும் என்ற முடிவை காற்றில் பறக்க விட்டு ,அதற்க்கு நேர் மாறாய் .அவனோடு முட்டி மோதி ,ஒட்டி உரசி அவனின் ஒவ்வொரு அசைவிற்கும் இவளும் அசைந்து,

எங்கே தடுமாறி விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி அவனின் இரு பக்க இடையின் டீசர்டை இறுக்கமாய் பற்றி கொண்டு ,சென்ற வேலையை சிறப்பாய் முடித்து கொண்டு வீடு வந்து சேருவதற்குள் அறை உயிராகி போனாள்.இத்தனைக்கும் பள்ளி வீட்டில் இருந்து மூன்று தெரு தள்ளி தான் இருந்தது.

இதில் அவள் நிம்மதி கொள்ளும் நிகழ்வு என்னவென்றால் ,வீட்டிற்கு வந்ததும் எதற்கு சட்டையைப்பிடித்தாய் என்று எகிராமல் ,அப்படியே இவளை கடந்து சென்றது தான் .

நாட்கள் அதன் போக்கில் விரைய ,சிவன்யா பள்ளி செல்ல ஆரம்பித்திருந்தாள்.அது ஒரு பெண்கள் மேல் நிலை பள்ளி ,வகுப்பில் உள்ள அனைவரும் இத்தனை வருடம் ஒன்றாய் படித்தவர்களாய் இருக்க ,

இவள் மட்டுமே புதியவள்,இவளை பார்த்து சிரிக்க கூட செய்யாமல் ,சிலர் அமர்ந்திருக்க , வழிய சென்று முயன்றும் பெண்ணுக்கு நட்பு வட்டாரம் அமையாமல் போய்விட , பள்ளியிலும் சோர்ந்து போனாள்.

அப்படி ஒன்றும் ஆஹா! ஓஹோ! என படிப்பவளில்லை என்றாலும் ,ஓரளவிற்கு படிக்கும் பெண் தான்,இந்த புது சூழ்நிலை அவளுக்கு சவாலாய் இருக்க ,மனம் விட்டு யாரோடும் பேசாமல் தான் மட்டும் தனித்து இருப்பது என்னவோ போல் இருக்க,

எப்போதும் துரு துறுவென சுற்றி கொண்டு, கலகலவென பேசும் அவளின் இயல்பு தொலைந்து ஒருவித மந்த நிலையில் மிகவும் சோர்ந்து போய் இருந்ததின் விளைவு கடந்து வந்திருந்த காலாண்டு தேர்வில் ,மற்ற பாடங்களில் பார்ட்டரில் பாஸ் செய்திருந்தவள் .கணக்கு பாடத்தில் தோற்றே விட்டிருந்தாள்.

நேற்று மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கும் பொழுதே ,"என்ன பத்தாவது தாண்டும் ஆசை இல்லையா ,"என்று ஆசிரியர் திட்டி இருக்க ,நாளை பள்ளி செல்லும் பொழுது மாமாவிடம் கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும்.

அவர் இன்றும் கார்மன்ஸ் சென்றிருக்க அவரின் வரவிற்கு தான் வாசலை பார்த்தவாறு காத்திருந்தாள். அவள் இப்படி நின்று கொண்டிருக்கையிலேயே !அவள் பார்த்து கொண்டிருந்த , ஜன்னல் படாரென்று சத்ததோடு அறைந்து சாற்றப்பட ,அந்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவள்

சாற்றியது யார் என்று அதிர்ந்து விழிக்க ,விழிகளில் ரௌத்திரம் கொப்பளிக்க அங்கே நின்றிருந்தது சர்வேஸ்வரன்.'இவன் எப்போ வந்தான்' என்று அச்சத்தோடு அவனை பயத்தோடு பார்க்கவும் .

அனுமதி இல்லாமலே அவள் அறைக்குள் நுழைந்தவன். வெளியில் நின்று அவன் சாற்றிய ஜன்னலின் கொக்கியை உள்ளே இழுத்து சொருகிவிட்டு,அவளை இப்போதும் அப்பட்டமாய் முறைத்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.

ஏன் வந்தான் ,எதற்கு ஜன்னலை சாற்றினான் ,ஏன் முறைத்தான் என்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவள்.விழிகளில் நீரோடு அப்படியே அமர்ந்து கொண்டாள்.கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலை

பார்கவியிடம் பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும்.பேச முயற்சிக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தால்.வந்த அன்று வேணி அவளை கடிந்ததோடு சரி , அவரின் விருப்பம் போல இவள் அறையில் அடைந்து கிடப்பதாலோ!இல்லை இவளை வெளியேற்ற முடியாது ,வீட்டில் இருக்கும் சோபா ,சேர் ,மெத்தைபோல் இவளும் இருந்து விட்டு போகட்டும் என எண்ணி விட்டாதாலோ என்னவோ!

பெரிதாய் குத்தி பேசமால் ,எப்போதாவது ஒரு முறை மட்டும் பேசுவார் .அது கூட ஆரம்ப நாட்ட்களில் வழித்ததை போல் வலிப்பது இல்லை. பாவைக்கு ......மனம் மறத்து விட்டது போலும்

அவள் கேட்டால் அவரிடம் இருக்கும் அலைபேசியை தருவார் தான். ஆனால் இவள் என்ன பேசுகிறாள் என்று கவனம் முழுவதும் இவளின் மேலே வைத்திருப்பதால். சுதந்திரமாய் பேச முடியாததால்.சுகுணாவின் அலைபேசியில் இருந்து பார்கவியே அழைத்தால் மட்டும் ஓரிரு வார்த்தை பேசுவாள்.

இவளின் சோகத்தில் மூழ்கி இருந்தவளுக்கு,முதலில் மாமனின் வரவு தெரியாமல் போய்விட , பிறகே அவர் வந்திருப்பார் என்று உணர்ந்து,ரேங்க்கார்டை எடுத்து கொண்டு வெளியில் ஓட,அவர் அதற்குள் அடுத்த ஷிப்ட்டிற்கு கிளம்பி இருந்தவர் காலனி அணிந்து கொண்டிருக்க ,

இப்போது சென்றால் ,நாளை இவள் பள்ளி சென்ற பிறகே அவர் வீடு திரும்புவார் என்பதால் , அவசரமாய் வெளியில் செல்பவரை மறிப்பது போல இவள் சென்று நிற்கவும்.

மாமனின் முன்பே வேணி அவரின் பஜனையை தொடங்கி விட ,மனைவியை கடிய நேரம் இல்லை என்பதால்,"என்ன பாப்பா "என்று அவர் இவளிடம் கேட்கவும் இவள் கார்டை நீட்டுவதற்குள்,

அதை வெடுக்கென்று சர்வா தனது கையில் பறித்து இருந்தான்.மகன் வாங்கியதும் "சர்வா போடுவான் கண்ணு" என்றுவிட்டு ,அவர் கிளம்பி விட ,வெளிடையாகவே இவளின் பயம் அப்பட்டமாய் தெரியவும் ,

வேணிக்குக்கூட சற்று சுவாரஸ்யமாய் இருந்தது ,பின்னே சர்வா படிப்பில் படு கெட்டி, சதாவே அவ்வப்பொழுது அவன் கையில் சிக்கி சின்னா பின்னமாவான்.என்று அறிந்திருந்தால்.இவளின் கதி என்னவோ என்று நடப்பதை வேடிக்கை பார்கலானார்.

அவரின் நினைப்பை சிறிதும் பொய்யாகாமல் மகன் எகிறிக்கொண்டிருக்க,காதில் வாங்கியவாறே அவரது வேலைகளை பார்த்து கொண்டிருந்தார்.

இங்கு சர்வாவோ! "இந்த வீட்டில, நீ ஏதாவது வேலை செய்யிறயா,உன்னை படிக்க விடமால் யாராவது தொந்தரவு பண்றங்களா ,உனக்கு இருக்குற ஒரே வேலை, படிக்கிறது மட்டும் தானே அதை பண்றதுக்கு என்ன," என்று ஆரம்பிக்க

அதற்குள் சிவன்யா கண்ணிலிருந்து விழிநீர் உடைப்பெடுக்க ,"மூச்" என்று அதட்டியவன்."கண்ணுல தண்ணி வந்துச்சு .கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன்' என்று அதட்டியவன் .அடுத்தடுத்து என்ன பேசினான் என்று கேட்டால் .சிவன்யாவிற்கே தெரியாது.'எப்பா ராசா விட்டுடுடா' என்னும் நிலை அவளுக்கு ,

"நீயெல்லாம்கல்யாணம் பன்னிட்டு ,சமையல் கட்டுல, பத்து பாத்திரம் தேய்க்க தான் லாயக்கு , "என்று அவன் இறுதியாய் முடிக்க,அவள் முகத்தில் மெல்லிய புன்னகை,உண்மையில் அவளுக்கு படித்து பெரியவளாகி அப்படி வாழனும் இப்படி வாழனும்.எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று ஆசை எல்லாம் இல்லை.

அவளின் மனம் முழுவதும் வளர்ந்து பெரியவளாகுறோம்.கல்யாணம் பண்றோம்.வீடு முழுசும் பிள்ளை குட்டி பெத்து செட்டில் ஆகுறோம்.தனக்கென யாருமே இல்லை என்ற உலகில்.எனக்கே எனக்கென ஒரு அழகான கூடு,அதில் நான் தான் ராணி,எண்ணும் எண்ணம் கொண்ட பக்கா ஹவுஸ்வைப் மெட்டீரியல் அவள்.

இயல்பாக கிடைக்காத ஒன்றிற்கு தானே மனித மனம் ஏங்கும். அது போலவே அவளுக்கு கிடைக்காத அன்பான குடும்ப வாழ்விற்கு மனம் ஏங்க ,அதுவே ஆழ்மனதின் ரகசிய லட்சியமாய் இருக்க ,

இன்று சர்வா வாயால் அதை கேட்டதும் அவளை அறியாமலே ஒரு கள்ள புன்னகை தோன்றிவிட்டது.இதை கண்ட சர்வா மேலும் காண்டாகி போய் கத்த ஆரம்பித்தவன்.

"ஹோ! நிரந்திரமா சமையல் கட்டுல செட்டில் ஆகிடலாம்ன்ற, எண்ணத்துல தான்.பார்க்குல இருந்து உன்னை சைட் அடிச்சவனுக்கு ,போஸ் குடுத்துட்டு நின்னியா," என்று தாய்க்கு கேட்காமல் மெல்லிய குரலில் ,சற்று அழுத்தமாய் இவன் கேட்கவும்.

தீசுட்ட உணர்வில் அவள் அதிர்ந்து அவனை பார்க்க ,அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்."உங்களால் எங்களோட சொத்தை இழந்திருந்தாலும். மானம், மரியாதையோடு இந்த ஊருல வாழ்ந்துட்டு இருக்கோம். அதையும் முடிச்சி விட்டுடலாம்னு பாக்கறியா ,"என்று எள்ளளாய் கேட்கவும்.

கேட்ட வார்த்தைகளின் தாக்கத்தில் பெண்ணின் உடல் நடுங்க,"நான் ....நான் ....அப் ,..." என்று சொல்ல நினைத்த வார்த்தைகளை கூட சொல்ல முடியாமல் அழுகை வெடித்து கிளம்பவும்.

அடக்க முயன்றும் முடியாமல் சத்தத்தோடு இவள் கேவ,"நீ அப்படி பட்ட பொண்ணு இல்லைனா. அதை உன்னோட வாயால சொல்ல வேண்டியது இல்லை .படிப்புல காட்டு,அதுக்கு முன்னாடி இந்த ட்ராமாவை நிப்பாட்டு ,"என்று அவளையே ஊடுருவிய பார்வையால் மிக நிதானமாய் அவன் கூறியிருக்க ,

அவன் ட்ராமா என்றபின் ,அவள் நிறுத்த நினைத்த பின்னும் .முடியாமல் பல நாள் அவள் அடக்கி வைத்திருந்த அவளின் உணர்வுகள்.இன்று அழுகையாய் பீறிட்டு வெளிபட்டிருக்க,

தாள முடியவே இல்லை பெண்ணால் ,அங்கேயே மடங்கி அமர்ந்து அப்படி ஒரு அழுகை.அவன் வார்த்தைகளால் கிளம்பி இருந்த அழுகை, அவளின் ஆயா ,தாய் தந்தை,அக்கா என்று பல்வேறு நினைவுகளால் சூழ்ந்து நிற்காமல் தொடர,

சமயலறையில் இருந்து வேணி வெளியில் வந்தவர் அதிர்ந்து போனார்.'அவளின் பாட்டி இறப்பில் கூட இவள் இந்த அளவு அழுகவில்லையே!மகன் ஒருவேளை இவளை அடித்து விட்டானோ!' என்று அவரின் மனம் பதைபதைக்க,

"சர்வா என்னடா பண்ண, ஏன் இப்படி அழுகுறா,"என்றவாறே!

"ஏய் குட்டி எழுந்துரு.... எதுக்கு அழுகுற ,முதல்ல கண்ணை துடை,உன்ன அடிச்சிட்டானா , எங்கயும் வலிக்குதா," என்று அவர் அதட்ட.

அவருக்கு பதில் அளிக்கும் வண்ணம் இல்லை என்று அவள் மறுப்பாய் தலை அசைக்கவும்.நிம்மதி பெரு மூச்சோடு அவளை எழுப்பி நிற்க வைத்தவர்.

"இங்க பாரு சர்வா அவள் ஒன்னும் படிச்சு இந்தியாவை திருப்ப போறது இல்லை.குறிப்பிட்ட வயசு வந்ததும் நல்லவன் ஒருத்தன் கையில் புடிச்சு குடுத்தா அவன் பாத்துக்க போறான் . நீ இனிமேல் இவளை திட்டுற வேலை எல்லாம் வச்சிக்காத,"என்று அவர் கடியவும்.

"அந்த நல்லவன் கிடைக்க, இந்த அம்மா ஸ்க்கூல்லாவது முடிக்கணும் இல்லையா ," ஒரு நக்கல் புன்னகையோடு சிவாவை அவன் ஏறிட ,அந்த புன்னகை பெண்ணை உசுப்பு ஏற்றிவிடவும் , வீம்பாய் "அது எல்லாம் முடிச்சிடுவேன்" என்று அவள் வாய் விட ,

"அதான் பாத்தேனே!" என்று ரேங்கார்ட்டை தூக்கி காட்டியவன்."அடுத்த முறை இதே மாதிரி , வந்து நின்னால் ,கார்டை கிழிச்சி மூஞ்சில எறிவேன்."என்றவாறே அவளை எரித்து விடுவது போல பார்த்து விட்டு கையெழுத்து இட்டு நீட்ட,

"சர்வா அவ தான் சொல்றா இல்லை போ ,இனிமேல் படிப்பா," தாய் மகனை சமாதானம் செய்து அனுப்பியவர்.

"இங்க பாரு குட்டி ஏருதோ!இல்லையோ முயற்சி பண்ணி படி ,அப்போதான் எங்க அண்ணன் கார்மன்ஸ்ல,பீஸ் செக் பண்ற வேலையாவது கிடைக்கும் ."என்று அவர் இதமாய் கூற,அத்தையை நிமிர்ந்து வறண்ட பார்வை பார்த்தவள்.ஒரு தலை அசைபோடு ,அவர் கொடுத்த உணவை விழுங்கி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மனம் முழுவதும் கடைசியாய் அவளின் அக்கா பார்கவி "படி சிவா ,படிப்பு தான் நம்மளை உயர்த்தும் "என்று கூறியதும் ,சர்வாவின் நக்கல் குரலுமே வலம்வர ,'படி சிவா.. படி சிவா..' என்று உருப்போட்ட வாறு ,கண்ணயர்ந்தவளின் முகத்தில் யாரோ நீரை வாரி இறைத்திருக்க,

திடுக்கிட்டு விழித்தவளின் முன்னாள் சர்வா நின்றிருந்தான் ,கனவு போலும் என நினைத்தவள் . "நான் பாஸ் ஆகிடுவேன்."என்று விறைப்பாய் கூறிவிட்டு விழிகளை முடி கொள்ள ,

"ஆமா.. ஆமா... உக்காந்துட்டே தூங்கினா பாஸ் ஆகிடுவ,"என்று அவன் அதே நக்கல் குரலில் கூற 'ஆஹா நிஜமா இங்க தான் இருக்காங்களா ,அதுக்குள்ள விடிஞ்சிருச்சா 'என்று அவள் விழிவிரித்து பார்க்க ,

"போய் முகத்தை கழுவிட்டு வந்து ஹால்ல உக்காந்து படிக்கிற ,நீ படிக்கிற சத்தம் என்னோட ரூம்க்கு கேட்கணும்.ஒரு மணி நேரம் கழிச்சு, என்ன படிச்சேன்னு என்கிட்ட சொல்லணும்." என்றுவிட்டு போக ,

"அய்யயோ" என்று புலம்பியபடி வெளியில் வந்து அமர்ந்தவளுக்கு ,முதலில் உறக்கம் வந்தாலும்,அவன் வந்து கேட்டால் கூற வேண்டுமே என்றதற்காக ,தலையில் கொட்டி கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.

சொன்னது போலவே அவன் திரும்ப வந்து கேட்க ,அவன் முகத்தை பார்த்ததும் பெண்ணுக்கு வெறும் காத்து மட்டும் வரவும் ,அவனின் முகத்தில் ஏக நக்கல் வழிய , கண்ணை இறுக்கமாய் மூடியவள்.

திக்கி திக்கியாவது ஓரளவுக்கு படித்ததை ,ஒப்புவிக்க,

"ஒரு முறை எழுதி பாரு , அப்போதான் மறக்காது,இனிமேல் தினமும் நீயாவே அஞ்சு மணிக்கு எழுந்து படிக்கிற,ஆறு மணிக்கு என்ன படிச்சேன்னு எங்கிட்ட ஒப்பிக்கிற இதை எல்லாம் ஏன்? சொல்றேன்னு உனக்கு புரியுது இல்லை ,"என்று அவன் மென்மையாய் கேட்க,

ஒன்னும் புரியவில்லை என்றாலும் .அவன் குரல் உள்ளுக்குள் ஏதோ செய்ய புரிந்தது என்றது போல் மிரட்சியோடு தலை அசைத்தவள்.பள்ளிக்கு ஆயத்தமாகி சென்று விட்டாள்.

வருவாள் .......................................



என்னை சில பேரு தேடி இருக்கீங்க,ரொம்ப சாரி ,எனக்கு எக்ஸாம் இருந்தது.அதான் அப்டேட் தர முடியல ,இப்போ முடிஞ்சது ,இனி ரெகுலரா தர பார்க்கிறேன் .நன்றி
Super ud ?
 
Nice ???
சர்வா சிவாவை படிக்க வைக்க நினைக்குறது நல்ல விஷயம் தான்.. ? என்ன பேச்சு தான் கடினமா இருக்கு..
 
ஓ நீங்களும் படிக்கிறீங்களா.. சூப்பர்.
அடேங்கப்பா சிவாவின் கனவுகள் பாவம் எவ்வளவு ஏக்கம்.
இனி படிக்க ஆரம்பிச்சுடுவா சர்வாவுக்காகவே.
வேணி கொஞ்சம் பரவாயில்லையே
 
???

அடேய் சார்வா, அந்த புள்ள நல்லா படிக்கணும்னு நினைக்கிறது நல்ல விஷயம் தான்... ஆனா அதையே கொஞ்சம் இதமா, பதமா சொல்றது... ??
 
Top