மான்விழியில் வீழ்ந்தேனடி! - அறிமுகம்

Advertisement

Siva Yazhini

Well-known member
Member
சித்தார்த் அபிமன்யு மெல்ல திரும்பி அதிர்ச்சியுடன் மணமேடையை பார்த்தான். மணமேடையை விட்டு எழுந்திருக்க கூடாது என்று புரோகிதர் சொல்லியிருந்ததால் அங்கேயே அமர்ந்து பார்வையை மட்டும் இங்கே வைத்திருந்தவள் நிறைய அழுதிருப்பாள் போலும், கண்ணீரில் அவள் மேக்கப் எல்லாம் கலைந்து அவள் அழகை மேலும் அலங்கோலமாக்கி காட்டியது.

******

மணமகன் அறைக்குள் தந்தையை இழுத்துச் சென்று கதவை மூடினான் சித்தார்த் அபிமன்யூ, “அப்பா என்ன சொல்றீங்கனு புரிஞ்சு தான் பேசறீங்களா? நீங்க பேசறதை பார்த்தா, என்னை மணமேடையில் உட்கார்ந்து தாலி கட்ட சொல்லுவீங்க போல இருக்கே” என்றான் படபடப்பாக.

“சித்து நீ புத்திசாலிடா, என் மனசுல நான் என்ன நினைக்கிறேனோ அப்படியே புரிஞ்சுக்கிறே? என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே” என்று நேரம் காலம் தெரியாமல் மகனை பாராட்டினார் மகேந்திரன்.

இந்த பாராட்டு ரொம்ப முக்கியம் என்று மனதிற்குள் நொடித்தவன், “டாடி ஐயம் சீரியஸ், என்னால எல்லாம் அந்த பெண்ணுக்கு தாலி கட்ட முடியாது. வேணும்னா ஒரு நல்ல படிச்ச மாப்பிள்ளையா பார்த்து, நம்ம செலவிலேயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் செய்து வச்சிடலாம். உங்க பிரெண்டோட கடனை எல்லாம் நானே அடைச்சிடறேன். அவருக்கு பேசி புரிய வையுங்க” என்றான் சித்தார்த்.

“என் பிரெண்ட் என்ன உனக்கு பிச்சைகாரனா தெரியறனா? நான் இருக்கும் போது நீ என்ன அவன் கடனை தீர்க்கறது?” என்றார் மகேந்திரன் கோபமாக.

“சரி யார் கொடுத்தா என்ன? நீங்களே அவருக்கு தேவையான பணத்தை கொடுங்க, நம்ம ஆஸ்பிட்டல்லயே அவ வேலை செய்யட்டும். வேணும்னா ஒரு டாக்டர் மாப்பிள்ளையா பார்த்து நாமளே கல்யாணம் செய்து வச்சிடலாம்” என்றான் சித்தார்த் தந்தையை சமாதானம் செய்யும் நோக்கில்

“சித்து நீ சிவாவை பத்தி தெரியாம பேசறே. நான் பணமா கொடுத்தா அவன் எதையும் வாங்க மாட்டான் டா, அவனுக்கு தன்மானம் அதிகம். எத்தனையோ கஷ்டம் வந்தாலும் ஒரு முறைக்கூட அவனுக்கு பணத்தேவை இருக்குனு என்கிட்ட காட்டிக்கவே மாட்டான்.

அவன் பொண்ணு கல்யாணத்துக்கு தடபுடலா சீர் செய்ய நான் தயாரா இருந்தேன், ஆனா அவன் அதை எல்லாம் பிடிவாதமா வேணாம்னு சொல்லிட்டான். என்கிட்ட முதல்முறையா கேட்டது அவன் பொண்ணுக்கு ஒரு வேலை மட்டும் தான். அதனால் தான் வேலைக்கான ஆர்டரை உன்னையே நேரில் கொண்டு வந்து கொடுக்க சொன்னேன்.

என்னால பணமா கொடுத்துதான் அவனுக்கு உதவி செய்யமுடியலையேனு கல்யாண வேலை எல்லாம் நானே பார்த்தேன். அவன் மட்டும் இந்த கல்யாணம் ஏற்பாடு செய்யறதுக்கு முன்னாடியே என்கிட்ட வந்து அவன் பொண்ணுக்கு வரன் பார்க்க போறதாக சொல்லியிருந்தா போதும், நான் அப்பவே உன்னை தான் அவனுக்கு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன்” என்ற தந்தையை எரிச்சலோடு பார்த்தான் சித்தார்த்

“சும்மா அந்த பொண்ணோடு என்னை சேர்த்து வச்சு பேசாதீங்கப்பா, அந்த பெண்ணை நம்ம ஆஸ்பிட்டல்ல நர்ஸ் வேலைக்கு எடுக்கவே யோசிச்சவன் நான், அவளை எனக்கு லைப் பார்ட்னரா ஒரு நாளும் என்னால ஏத்துக்கவே முடியாது. எல்லார் முன்னாடியும் உங்களை எதிர்த்து பேச வேணாம்னு தான் தனியா கூட்டிட்டு வந்தேன். என்னால அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது” என்றான் சித்தார்த் அபிமன்யூ தீர்மானமான குரலில்.

மான்விழியில் வீழ்ந்தேனடி! - 2024 ல் நடந்த போட்டியில் பரிசு பெற்ற கதை. இந்த கதையை TNW தளத்தில் ரீரன் செய்ய போறேன். யாரையெல்லாம் டேக் பண்ணனும்னு கமென்ட்ல சொல்லிவிட்டு போங்க டியர்ஸ்‌.
❤️
😍
வசிக்கு கொடுத்த வரவேற்பு சித்துவுக்கும் கிடைக்கும்னு நம்பறேன். ஆரம்பிக்கலாமா?
 

Advertisement

Advertisement

Back
Top