Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -18

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -18

காலை 10.30 மணிக்கு ,காலேஜில் முதல் பீரியட் நடந்துக்கொண்டிருந்தது... அப்பொழுது அந்த வகுப்புறையின் உள்ளே நுழைந்த ப்யூன்... அங்கே பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியரிடம்.. ஸார் எச்.ஓ.டி, ஆராவ பேக் எடுத்துட்டு வரச்சொன்னாரு...

ஆரா எழுந்து நிற்க... போம்மா என்றார் ஆசிரியர்...

தலையை ஆட்டிவிட்டு எச்.ஓ.டி கேபினை நோக்கி காரிடரில் நடந்தாள்... தேனு ,ஸார் கூப்பிட்டிங்களா..

ம்ம்... ஊருல உங்க பாட்டி தவறிட்டாங்களாம்... இப்போதான் மெசேஜ் வந்தது.. உங்க மாமா சொன்னாரு நீ கிளம்புமா என்றார்..

பாட்டி தவறிட்டாங்களா.. கேட்டவுடன் கண்கலங்கி விட்டது தேனுவிற்கு... மாமா என்று வெளியே பார்க்க.. இனியன் நின்றிருந்தான்.. லட்டர் கொடுத்துவிட்டு அவளை கூட்டிக்கொண்டு காரில் ஏறினான்..

மாமா... அப்பா, அத்தை, அபி யாரும் காணோம்...

ஹாங் தேனு அவங்க விஷியம் கேட்டவுடனே கிளம்பிட்டாங்க... எனக்கு ஆபிஸல சின்ன வேலையிருந்தது... அதை முடிச்சிட்டு உன்னை என் கார்ல கூட்டிட்டு வரச்சொன்னாங்க..

மாமா... காலையில அப்பத்தா கிட்ட பேசினேன் மாமா... நல்லாதான் பேசிச்சு.. ஆழ ஆரம்பிக்க...

டிஷ்யூ எடுத்து அவளுக்கு கொடுத்தான்... அழாத தேனுமா..

எப்படி மாமா..

அது ஹர்ட் அட்டாக்... வந்துடுச்சாம்.. கார் ஓட்டியபடி பேசினான் இனியன்...

எங்க அப்பத்தா என்னை எப்படி பார்த்துக்கும் தெரியுமா... பாலூட்டி, சோறு ஊட்டி எப்படி வளர்த்துச்சு... கண்களை கையால் துடைத்தபடி...

தேனுமா எல்லா பாட்டியும் சோறுட்டி தான் வளர்ப்பாங்க.. பின்ன பீர்ரா ஊத்துவாங்க.

அவனை முறைத்து பார்த்துவிட்டு... உனக்கு எங்க பாட்டிய பிடிக்காது... அந்த காண்டுல பேசாதே...

யாருக்கு பிடிக்காது.. எனக்கா இல்ல உங்க பாட்டிக்கா... நான் தேனுன்னு பெயரை வச்சா... இந்த திமீர் பிடிச்ச கிழவி ஆரான்னு வைக்குது...

மாமா... இப்போ செத்து சாமிகிட்ட போயிட்டாங்க.. இப்படி பேசாதே சொல்லிட்டேன்... திரும்பவும் அழுதாள்.. ஆனா என் மேல எவ்வளவு பாசம் தெரியுமா..

கார் சிட்டியை தாண்டி சென்றது... ஏதாவது சாப்பிடுறீயா தேனு..

வேணா மாமா...

காரை ஒரமாக நிறுத்திவிட்டு... அய்யோ அழுது அழுது மூக்கே சிவந்துபோயிடுச்சு தேனு.. அவள் கண்களை துடைத்துவிட்டான்... அவன் தோளில் சாய்ந்து மாமா, பாட்டிக்கு ரொம்ப நாளா ஆசை.. என் கல்யாணத்தை பார்க்கனும்.. அதுக்கு கொள்ளு பேரனை கொஞ்சனும்... ஆசை நிறைவேறாம போச்சு..

என்னடி இப்படி சொல்லுற...

ஏன் மாமா என்று அவனை பார்க்க..

முதல்ல பின் சீட்டுக்கு வா.. அவளை அழைத்துக்கொண்டு பின்னாடி சீட்டிற்கு போனான்..

தேனு... பாட்டி ஆசை நிறைவேறாம அது ஆத்மா சாந்தியடையாது... மூனு மாசமா சுத்திட்டே இருக்குமா... உனக்கு பிடிச்ச பாட்டி ஆத்மா நிம்மதியா இருக்கனும்தானே..

ஆமாம் மாமா என்று தலையை ஆட்டினாள்... பாவம் அப்பத்தா..

நானும் ரொம்ப ஃபீல் செய்றேன்.. அது நம்ம கையில தான் இருக்கு... நீ கவலைப்படாதே என் செல்லக்குட்டி.. நாம்ம இரண்டுபேரும் சேர்ந்து உங்க பாட்டிய நல்லபடியா சாந்தியடைய வைக்கலாம்...

புரியாமல் இனியனை பார்க்க... உங்க பாட்டி ஆசையை நிறைவேற்றலாம்... நீயும்.. நானும் சேர்ந்து பாட்டிக்கு கொள்ளு பேரனை உருவாக்கலாம்... ம்ம் நீ அழாத. இதோ மாமா ரெடி என்று தன் பெல்டை கழிற்றினான்..

என்னடா செய்யற..

ம்ம்.. அதுதான்டி பாரின்ல காருக்குள்ளே எல்லா கில்மாவும் முடிச்சிடும்... தன் சட்டை பட்டனை கழிற்றினான்..

இவனொருத்தன் நேரங்காலம் தெரியாம... மாமா என்று பல்லை கடித்தாள்..

கவலைப்படாத நம்ம உங்க பாட்டியோட ஆத்மா சாந்தியடைய சொல்லிக்கொண்டு அவளை அள்ளி தன் மேல் போட்டுக்கொண்டான்...

டேய்.. ஊருல பாட்டி செத்துபோயிட்டாங்க.. உன்ன.. பேசும்போதே தேனுவின் செல் ஒலிக்க...

போனை எடுத்துபார்த்தாள்.. அம்மாதான்... ஆன் செய்தாள்.

ஹலோ ஆரா.. நான் வீட்டுக்கு வந்துட்டேன்... காலேஜிலிருந்து நேரா வீட்டுக்கு வா..

அம்மா அப்பத்தா...

ம்ம் அவங்களும் கூட வந்திருக்காங்க... இங்கவே பார்த்துக்கலாம் கூட்டிட்டு வந்துட்டேன்.. அகிலா கூற..

சரிமா வைக்கிறேன்...

இனியன் தேனுவை பார்த்து சிரிக்க... டேய் அறிவில்லடா உனக்கு அவன் நெஞ்சில் இரு கையால் அடித்தாள்... ஏன்டா பொய் சொன்னே.. நான் பயந்தே போயிட்டேன்.. திரும்ப அடிக்க..

அவள் கையை பிடித்துக் கொண்டான்.. ஏன்டி போன் போட்டா கட் செய்யற.. நேத்தே சொன்னேன் தானே...

அதுக்கு எங்க அப்பத்தா செத்துட்டாங்க சொல்லுவீயா..

ஆமாம் அப்படிதான் சொல்லுவேன் என்ன செய்வ அவளின் இதழில் உரசிக்கொண்டே பேசினான்... எப்ப ஃபிரன்ச் கிஸ் தருவ..

ம்ம் ரொம்ப முக்கியம்... கல்யாணத்திற்கு பிறகுதான் மாமா..

எங்கே போலாம் மால், சினிமா...

வேணாம் மாமா அமைதியான ஒரு இடத்திற்கு எந்த தொந்திரவும் இல்லாம இருக்கனும்... நீயும் நானும் மட்டும்..

கள்ளி உன் பாட்டி ஆசையை நிறைவேற்ற போறோம் கரெக்டா...

ச்சீ.. அதுலே இரு... அவளை மாயாஜாலுக்கு கூட்டிச்சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தான் அங்கே மதிய உணவை முடித்துவிட்டு... அங்குள்ள இ.சி.யார் ரோட்டில் இனியனின் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தார்கள்..

கடற்கரை காற்று வீச. அந்த பால்கனியில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்தார்கள் இனியனும் தேனும்...

இனியன் தேனுவின் மடியில் படுத்து தேனுவை பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தான்.. இருவர் மனதிலும் காமம் இல்லை... எனக்கானவன் இவன்... என் வாழ்க்கை துணையானவன்.. உயிரின் மூச்சாக அவன் இருந்தான்... இருவரின் மனதில் நிறைவு மட்டுமே... தன் கூட்டில் போய் சேர்ந்ததுபோல் நிம்மதி..

அவன் தலையை கோதினாள் தேனவள்...

தேனு... நாம்ம எப்ப கல்யாணம் செஞ்சிப்போம்...

இன்னும் இரண்டுமாசமிருக்கு மாமா என் படிப்பு முடிய... அப்பறம் ஒரு வருஷம் ஜாலியா ஊர சுத்தலாம்.. பிறகு மேரேஜ்...ஓகே வா..

இல்ல... இப்பவே பண்ணிக்கலாம்... என்னால உன் பிரிஞ்சி இருக்க முடியாது தேனு...

போடா.. ஒரு வாரம் என்னைய பார்க்கல...

நீ தூங்கிட்ட பிறகு நான் வந்து பார்ப்பேன் தெரியுமா... நீ உங்கவீட்டுக்கு போற... ஐ மிஸ் யூ..

வெளியே பார்த்துக்கலாம் மாமா..

முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.. எனக்கு நீ வேணும்... உடனே கல்யாணம் வச்சிக்கலாம்.. நீ நைட்ல எங்க தூங்க விடுற... சும்மாயில்லாம ஏடாகூடமா பண்ணுற... எனக்கே கூச்சமாயிருக்கு என்று இரு கையை எடுத்து முகத்தை மூடினான்...

நானா..

ம்ம்... கனவுல.. நீ ரொம்ப பேட் கேர்ள்டி... மாமாவ ஃபீரியா இருக்கவிட மாட்டுற... நீ என்ன செஞ்சே சொல்லட்டா.

அவன் வாயை தன் கையால் மூடி... என்ன பிரச்சனை வர போகுதோ.. மாமா அதை நினைச்சா பயமாயிருக்கு... அம்மா வேற விக்கி மாமாவதான் முடிவு பண்ணிருக்கு..

யாரு அந்த சப்ப மூஞ்சி விக்கியா...

மாமா... அப்படி பேசாத விக்கி நல்ல மாமா... அவருக்கு அந்த மாதிரி ஃபீலிங்க்ஸ் இல்ல..

அவள் கையில் முத்தமிட்டு... உங்கம்மா சம்மதிக்கல நான் தூக்கிட்டு போயிடுவேன்... தேனு ஒரு வாரம் ஆச்சுடி நான் சரியா தூங்கி...

அவளின் இடுப்பில் கையை போட்டு ஒரு பக்கமாக படுத்துக்கொண்டான்...

தேனுவிற்கு சிறிய வயதிலே நகம் கடிக்கும் பழக்கம் உண்டு.. இனியனின் கை விரலை எடுத்து கடிக்க ஆரம்பித்தாள்...

ஏய் தேனு இது பேட் ஹாபிட்... இனியன் சொல்ல.. பரவாயில்ல என்றாள்..

அசதியில் தூங்கியும் போனான்... இனியனின் முகத்தையே பார்த்திருந்தாள் தேன் மொழியாள்...

ஒரு மணி நேரத்தில் இனியன் போனில் அழைப்புவர... தேனு போனை எடுடி என்று பேன்ட் பாக்கெட்டை காட்ட..

போனை எடுத்து பார்த்தாள்.. சரண் அண்ணாதான் போன்ல..

ம்ம்... கொடு என்று அழைப்பை ஏற்றான்.. மச்சான் கிளம்பிட்டோம்..

சரிடா வைக்கவா.. அவளின் நெற்றியில் முத்தமிட்டு கிளம்பலாமா தேனு டைமாயிடுச்சு.. கவரை பிரித்து புதிதாக எடுத்துவந்த ஷர்டை மாற்றினான்...

காரில் போகும்போது... இனி மாமா... காலேஜ் முடிஞ்சபிறகு நீ வந்து பார்ப்பியா ஏன்னா அம்மா வந்துட்டாங்க வெளியே விடமாட்டாங்க..

எனக்கு ஆபிஸ் இருக்கே தேனுமா...

சரி அப்ப வீக்லி சனிக்கிழமை பார்க்கலாமா... மதியம் கிளாஸ்யிருக்காது...

சிறிது யோசித்துவிட்டு பார்க்கலாம்.. என்றான்..

என்னடா ரொம்ப பிகு செய்யற.. நீ ஒண்ணும் பார்க்க வரவேண்டாம்.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள்...

மெசேஜ் வர... அதை எடுத்து பார்த்துவிட்டு போனில் சரணை அழைத்தான் இனியன்.. நான் தேனுவ விட்டுட்டு வரேன்... பிரச்சனை பெரியதாகாம பார்த்துக்கோ... என் டாடி என்ன செய்து..

ம்ம் அவரா வழக்கமா அமைதியாயிருக்காரு... காஞ்சனா 3 பார்க்கிற மாதிரியே இருக்குதுடா.. சொல்லிட்டு போனை வைத்துதான் சரண்..

மாமா ஏதாவது ப்ராபளமா..

ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்ல...

இந்த தெருமுன்னே விட்டுரு.. அம்மாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..

வீட்டுக்கு வெளியே விடுறேன்.. ஏன் பயப்படுற.. யாருக்கும் தெரியாது.. உடனே கிளம்பிடுவேன்..

அவளின் வீட்டுவாசலில் விட்டான்.. இனியனை பிரிந்துபோகும் ஏக்கத்தோடு ஒரு பார்வை பார்த்தாள்..வீட்டிற்குள் வர.. அப்படியே நின்றுவிட்டாள்.. அகிலா கத்தி திட்டிக்கொண்டிருக்க.. சோபாவில் லதா. சக்கர, அபி சரண் உட்கார்ந்திருந்தார்கள்.. முன்னே தாம்பூலத்தில் பூ, பழம், ஸ்வீட், புடவையிருந்தது..

தெரிந்துக்கொண்டாள் பெண்கேட்க சக்கர மாமா வந்திருக்கிறார்கள்.. அதான் அம்மா கத்துகிறாள் என்று... அனைவரும் தேனுவை பார்க்க.

எல்லாத்துக்கும் காரணம் நீதான்டி, அகிலா தேனுவை அடிக்க வர... கண்களை மூடி தலையை குனிந்து நின்றாள். அவளை ஒரு கை அனைத்துக்கொள்ள அந்த ஸ்பரிசமே சொன்னது, வந்தவன் இனியன் என்று.. மாமா என்று உதடு மூனுக அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

எதுக்கு அவளை அடிக்கிறீங்க... முறைத்துக் கொண்டு வந்தான்.. சிறுவயதில் பார்த்தது இனியனை, இன்று அவனை இளைஞனாய்.. ஆணழகனாய் பார்க்கிறாள் அகிலா.. அதுவும் தன் பெண்ணின் பக்கத்தில் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது அகிலா நினைத்த ஒரு நொடி.. ச்சே என்ன யோசிக்கிறோம்..

நாங்க இரண்டுபேரும் விரும்புறோம்.. அதுக்குதான் பொண்ணுகேட்டு வந்திருக்கேன் கணீர் குரலில் தெளிவாக கூறினான் இனியன்... ஓகே சொன்னா உங்க இஷ்டபடி கல்யாணம்.. இல்லன்னா என் இஷ்டபடி கல்யாணம்.. நீங்க யோசிச்சு சொல்லுங்க..

அவ என்ன முடிவெடுக்கிறது நீதான்டா இனியா என் மருமகன் சத்திய அகிலா முன்னே குரலெடுத்து சொல்ல..

தன் மகளை உற்று நோக்கினாள் அகிலா... அவன் அனைப்பில் தன் தாயிடம் கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தாள்... ஒரே பெண்ணாயிற்றே... உயிராக வளர்ந்தவள்... அவளுக்கு மிஞ்சி என்னயிருக்க போது... மணம் சம்மத்திக்க ஆரம்பித்தது..

லதாவும், சக்கரவர்த்தியும் அகிலாவிடம் பேசினார்கள்... அனைவரும் பேசி சம்மதிக்க வைத்தார்கள்.. லதா தட்டை தேனுவிடம் கொடுத்து.. புடவை மாத்திட்டு வா ஆரா என்றாள்..

அபியும் தேனுவை தயார் படுத்த அவளுடன் ரூமிற்கு சென்றாள்... தலைபின்னி பூ சூடி... கழுத்தில் ஆரம் போட்டு... சிறிதாக மேக்கப் செய்திருந்தாள்.. தங்க பட்டு ஜொலிக்க நாணம் கொண்டு ட்ரேயில் காபி எடுத்து மெல்ல நடந்து வந்தாள்...

----- மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
ரொம்ப நல்லா இருக்கு
அப்ப நிச்சயம் நடந்தது
 
Top