Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 10

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----10

இதோ கதிரவனும். நிலவும் எந்த மாறுதலும் இல்லாது தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க தாமரை மட்டும் தன் ஒரே சொந்தமான பாட்டி இறந்ததில் இருந்து ஏதோ கடமைக்கு என்று குளித்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தாள். அதுவும் ஆதித்யா ஏற்பாடு செய்திருந்த வசந்தியின் கட்டாயத்தில் தான்.

இல்லை என்றால் இந்த ஒரு மாதத்தில் அவளும் ஊன் உறக்கம் மறந்து தன் பாட்டியுடனே அவளும் போய் சேர்ந்து இருப்பாள்.ஆம் வள்ளியம்மா மறைந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைகிறது.

அதற்க்கு தான் ஆதித்யா காலையிலேயே வசந்திக்கு போன் செய்து “வீட்டில் பூஜை செய்யவேண்டும் அதற்க்கு உண்டானதை பார். நான் மதியம் வந்து விடுவேன்.” என்று போனை வைத்து விட்டான்.

அதற்க்கு தான் வசந்தி எதுவும் சாப்பிடாமல் படுத்துக் கொண்டு இருக்கும் தாமரையிடம் “ கொஞ்சமா சாப்பிட்டு அப்புறம் படுத்துக்கோ….எனக்கும் பூஜை வேலை எல்லாம் இருக்கு.” என்று சொல்ல.

“ என்ன பூஜை வசந்தி “ என்று கேட்டாள்.

வசந்திக்கு தாமரை வயது தான் இருக்கும் .அது தான் தாமரை வசந்தியை பெயர் சொல்லியே அழைப்பாள். அது போல் தான் வசந்தியும் தாமரையைய் நீ என்று ஒருமையில் தான் அழைப்பாள்.

இந்த ஒரு மாதத்தில் வசந்தி மட்டும் இல்லை என்றால் தாமரை என்னவாகி இருப்பாளோ....வசந்தி ஆதித்யாவின் கட்டாயத்தில் மட்டும் தாமரைக்கு பார்த்து பார்த்து செய்யவிலை.

தாமரையின் நிலையைய் பார்த்து அவளே பரிதாபப்பட்டு தான் அனைத்தையும் செய்கிறாள். வசந்தி ஆதித்யா ஏற்பாடு செய்த வேலையாளாய் இருந்தாலும் அவள் சத்யாவின் வீட்டில் அருகில் இருப்பவள்.

தாமரை போல் விவரம் அறியாதவள் இல்லை வசந்தி. ஆதித்யாவும் சத்யாவும் ஏன் தாமரையை இவ்வளவு அக்கரையுடன் பார்த்துக் கொள்கிறார்கள் என்று வந்த கொஞ்ச நாளிலேயே புரிந்துக் கொண்டு விட்டாள்.

ஆனாலும் அதை தாமரையிடன் வெளிபடுத்த வில்லை. கத்தரிக்கா முத்தினா கடை தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும். அது போல் கண்டிப்பாக இவர்களின் நோக்கம் என்ன என்று தாமரைக்கு புரிந்து விடும் என்று நினைத்து சொல்லாமல் விட்டாலும்.

முக்கியமான காரணம் தன் வீட்டின் நிலை தான். குடிகார அப்பன் வீட்டு வேலை செய்யும் அம்மா. இவளுக்கு அடுத்த படியாக ஒரு தம்பியும் ஒரு தங்கையும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஆதித்யா கொடுக்கும் சம்பளம் தேவைபடுவதாக இருந்தது. அதுவும் இல்லாமல் ஆதித்யா சத்யா மத்த விஷயத்தில் எப்படியோ பெண்கள் விஷயத்தில் நம்பிக்கை ஆனவர்களே….

யானைக்கும் அடி சருக்கும் என்பது போல் தாமரையின் விஷயத்தில் தான் ஆதித்யா இப்படி இருக்கிறான். மற்றபடி பெண் இங்கு பாதுகாப்பாக தங்க ஏற்ற இடம் தான்.வசந்திக்கு தாமரையோடு தங்க வேண்டும்.

வேளா வேளைக்கு தாமரையைய் குளிக்க சாப்பிட தூங்க வைப்பது தான் அவள் வேலை.மத்தபடி அங்கு சமைப்பதற்க்கு மத்த வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதனால் கஷ்டமான வேலை கூட வசந்திக்கு இல்லை.

அப்படி இருக்கும் போது உண்மையை சொல்கிறேன் என்று இந்த வேலைக்கு ஆப்பு வைத்துக் கொள்ள அவள் ரெடியில்லை. இருந்தாலும் ஒரு பெண்ணாய் தாமரையை நினைத்து பார்க்கும் போது மனம் வேதனை பட்டது.

அப்போது தான் யாரும் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தாள். அதனால் ஆதித்யாவின் கட்டளைக்கு மட்டும் அல்லாது தாமரையை நன்றாக பார்த்துக் கொண்டாள்.

இன்று என்ன பூஜை என்று கேட்ட தாமரைக்கு “இன்று ஆயா இறந்து ஒரு மாதமாகிறது தாமரை. அது தான் ஆதித்யா அய்யா….இன்று பூஜை செய்ய ஏற்பாடு செய்ய சொன்னார்.” என்றதும்.

தன் ஆயா இறந்து ஒரு மாதமாகி விட்டதா….பிறந்ததில் இருந்து ஆயா என்ற உறவை தவிர வேறு உறவை பார்த்தது கிடையாது.நட்பு என்பதும் தாமரைக்கு அதிகம் கிடையாது.அதற்க்கு காரணமும் தன் ஆயா தான்.நட்பு என்றால் எங்காவது கூப்பிடுவார்கள் போக வேண்டும். குறைந்த பட்சம் அவர்கள் வீட்டுக்காவது செல்ல வேண்டும்.

அதை தன் ஆயா விரும்ப மாட்டார்கள் என்று நினைத்து தான் தன் நட்பு வட்டத்தையும் தன் பள்ளியோடு முடித்துக் கொண்டாள். கல்லூரியில் படிக்கும் போது ஒரு சிலரோடு மட்டும் தான் பேசுவாள்.

அதில் ஒருத்தி தான் சமீபத்தில் தான் விரும்பியவனோடு திருமணம் செய்துக் கொண்டாள். அப்படி தன் பாட்டியே தன் உலகம் என்று வாழ்ந்தவளுக்கு மீதி இருக்கும் காலத்தை எப்படி கழிப்பது என்பது கவலையாக இருந்தது.

அதுவும் இப்போது வசந்தி சொன்ன பாட்டி இறந்து ஒரு மாதமாகி விட்டது. அதற்க்கு உண்டான பூஜையை ஆதித்யா ஏற்பாடு செய்ய சொன்னார் என்று கேட்டதிலிருந்து இன்னும் எத்தனை நாளைக்கு ஆதித்யா வீட்டில் இருப்பது.

தன் பாட்டிக்காக தான் ஆதித்யா இங்கு கூட்டிக் கொண்டு வந்தார். பாட்டியே போன பிறகு இங்கு தான் இருப்பது நல்லதுக்கு அல்ல. என்று முதன் முறையாக சரியாக யோசித்தாள்.

இன்று ஆதித்யா வந்ததும் ஏதாவது ஹாஸ்ட்டல் பார்த்து கொடுக்கும் படி கேட்க வேண்டும். வேலை பற்றி பயம் கிடையாது. அது தான் முதலிலேயே அவளுக்கு தன் ஹாஸ்பிட்டலில் வேலை தருவதாக சொல்லி விட்டானே… தன் படிப்பு முடிக்கும் வரைக்கும் தன் பாட்டி சேர்த்து வைத்த பணம் இருக்கிறது என்று மிக எளிதாக திட்ட மிட்டாள்.

பாவம் இனி தன் வாழ்க்கை தன் திட்டமிட்ட படி நடக்க போவது இல்லை.அனைத்தும் ஆதித்யாவின் கைக்கு சென்று விட்டதை அவள் அறியும் போது…..

திட்டமிட்டதை செயல் படுத்த ஆதித்யா வருவதற்க்குள் குளித்து ரெடியாக இருக்க வேண்டும் இனி நாம் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது. பாட்டியின் இறப்பை தாங்கிக் கொள்ள தான் வேண்டும்.

அந்த துக்கத்திலேயே இத்தனை நாள் இங்கேயே இருந்து விட்டனே….பாவம் வசந்திக்கு என்னால் அதிக படியான வேலை. இனி நான் இது போல் இருக்க கூடாது.என்று நினைத்துக் கொண்டே குளிக்க சென்றாள். அவளுக்கு தெரியாதது அவளுக்காக மட்டும் தான் வசந்தியை வேலைக்கு அமர்த்தியது.

தாமரையின் முகத் தெளிவே இனி நாம் தாமரையைய் பார்க்க தேவையில்லை என்று புரிந்து அவள் பூஜை வேலையைய் பார்க்க சென்றாள்.தாமரையும் குளித்து முடித்து விட்டு வசந்திக்கு உதவியாக பூஜை வேலை பார்க்க ஆராம்பித்து விட்டாள்.

மதியம் வருவதாக சொன்ன ஆதித்யா பதினொறு மணி வாக்கிலேயே வந்து விட்டான். கூடவே சத்யாவும் தான்.எப்போதும் போல் பின் பக்க வழியாக வந்தவன் சத்யாவை ஹாலில் அமரும் படி சொல்லி விட்டு தாமரையின் அறை வாசலில் நின்று கதவை தட்டியும் பதில் இல்லாது போக தானே திறந்துக் கொண்டு உள்ளே பார்க்க.

அங்கு தாமரை இல்லாது போக எங்கே சென்று இருப்பாள் என்று நினைத்துக் கொண்டே கீழே இறங்கினான். இந்த ஒரு மாத காலமாக ஆதித்யா எந்த வித தடையும் இல்லாது வந்த உடன் நேராக தாமரை அறைக்கு சென்று விடுவான்.

அங்கு அவளுக்கு ஆறுதலாக பேசி உடனே சென்று விடுவான் என்றாலும் ஒரு பெண் இருக்கும் அறைக்கு ஒரு ஆண்மகன் செல்வது தவறு என்பது அவனுக்கு புரியவில்லையா….?இல்லை இனி யார் தன்னை கேள்வி கேட்பார்கள் என்று நினைத்து விட்டானோ….?அது அவனுக்கே வெளிச்சம்.

இத்தனை நாள் அந்த செயலை கூட அறிந்திடாது இருந்த தாமரையைய் என்ன சொல்ல!!! இந்த நடவடிக்கை எல்லாம் பார்த்து தான் வசந்திக்கு சந்தேகம் வந்தது. அதுவும் ஆதித்யா தாமரை அறைக்கு சென்று விட்டால் தன்னை அந்த அறைக்கு செல்ல விடாமல் சத்யா ஏதாவது ஒரு வேலையைய் தனக்கு கொடுத்து தடுத்து விட்ட அவன் நடவடிக்கை அவளின் சந்தேகத்தை உறுதி செய்தது.

இப்போதும் அதே போல் ஆதித்யா தாமரையின் அறைக்கு சென்றதும் சத்யா வசந்தி எங்கு என்று பார்க்க. பூஜை அறையில் வசந்தியோடு தாமரையும் இருப்பதை பார்த்து ஹாலுக்கு வந்த சத்யா மாடி படிக்கட்டில் இறங்கி வந்துக் கொண்டு இருந்த ஆதித்யாவை பார்த்து.

“தலைவா அண்ணி பூஜை அறையில் இருக்காங்க.” என்று சொன்னான்.

சத்யா இப்போது எல்லாம் ஆதித்யாவிடம் தாமரையை பற்றி பேசும் போது அண்ணி என்று தான் கூறுகிறான். அந்த வார்த்தை கேட்கும் போது ஆதித்யாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்படும்.

அந்த சொந்தத்தில் தான் என்னவோ ஆதித்யா தாமரையின் அறைக்கு உரிமையுடன் சென்று வந்தானோ...?என்னவோ…?

தாமரை பூஜை அறையில் இருக்கிறாள் என்று சத்யா சொன்னதும். அப்போ தாமரை சகஜ நிலைக்கு வந்து விட்டாள் என்பதை ஆதித்யா புரிந்துக் கொண்டான். இப்போது எல்லாம் தாமரை தன் உடமை என்றே ஆதித்யா நினைக்க ஆராம்பித்து விட்டான்.

அவள் சகஜ நிலை தனக்கு ஆபாத்து ஆயிற்றே அவள் யோசிக்க ஆராம்பித்து விட்டால் இனி இங்கு இருந்து போவதை பற்றியும் யோசிப்பாளே என்று நினைத்தவன். தாமரை பூஜை அறையில் இருந்து வருவதற்க்காக ஹாலில் காத்திருந்தான்.

சத்யாவும் ஆதித்யா யோசித்தது போல் தான் யோசித்தான். தாமரை கண்டிப்பாக இந்த வீட்டை விட்டு போவதை பற்றி பேசுவாள் அதை எப்படி தடுப்பது என்பதை பற்றி தான் அவன் எண்ணம் முழுவதும் இருந்தது.

இந்த யோசனையுடன் ஆதித்யாவை பார்க்க ஆதித்யாவும் பலமாக ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து “தலைவா எல்லாம் உங்கள் எண்ணப்படி தான் நடக்கும்.” என்று சொல்ல.

“அது எப்படி சத்யா….? என்று கேட்டவன்.

பின் “எனக்கு தாமரை வேண்டும் சத்யா.ஆனால் அதே சமயம் எனக்கு இந்த பதவி மிக முக்கியம். அதை எந்த காரணத்துக்காகவும் இழக்க மாட்டேன்.” என்று எனக்கு மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்பது போல் தன் விருப்பத்தை சத்யாவிடன் கூறினான்.

“கவலை படதீங்க தலைவா….நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கூற.

அப்போது தான் ஆதித்யாவுக்கு சத்யா வள்ளியம்மா சாகும் போது தாமரையின் கையைய் தன் கைய் மீது வைத்து வள்ளியம்மாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது. அப்போ பயப்புள்ள ஏதோ திட்ட மிட்டு விட்டான் போலவே ...என்று நினைத்துக் கொண்டு சதயாவை பார்க்க.

சத்யா “யாம் இருக்க பயமேன்.” என்று முருகர் போல் தன் கையைய் வைத்து காமித்து கூற.

அதை பார்த்து சிரித்துக் கொண்டே “ எந்த பிரச்சனை இருந்தாலும் உன்னிடம் பேசினால் அதை மறக்கடித்து விடுகிறாய்டா….” என்றதற்க்கு.

“நான் இருக்கும் போது உங்களுக்கு பிரச்சனையும் வரக்கூடாது. கவலையும் இருக்க கூடாது.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பூஜை அறையில் இருந்து தாமரையும் வசந்தியும் ஹாலுக்கு வந்தார்கள்.

ஹாலில் ஆதித்யாவையும் சத்யாவையும் பார்த்து வசந்தி அந்த இடத்தை விட்டு அகன்றாள். அவளுக்கு தெரியும் தான் அங்கு இருந்தால் சத்யா ஏதாவது சொல்லி அந்த இடத்தை விட்டு அகற்றி விடுவான் என்று.

அவன் போக சொல்லி நான் ஏன் போவானேன். நாமே போகலாம் என்று தான் தோட்டத்து பக்கம் தன் காலை செலுத்தினாள். தன்னை விட்டு வசந்தி ஏன் போகிறாள் என்று கூட உணராது வெள்ளந்தியாக ஆதித்யாவையும் சத்யாவையும் பார்த்து சிரித்துக் கொண்டே …

“வாங்க சார். வாங்க சத்யா” என்று அழைத்தவள் அவர்களுக்கு எதிரில் நின்றுக் கொண்டு “பூஜை வேலை எல்லாம் முடிந்து விட்டது.படையால் மட்டும் தான் போட வேண்டும்.” என்று சொன்னவள்.

பின் ஆதித்யாவை பார்த்து “பூஜை வரை இருப்பீர்களா சார்,…..” என்ற கேள்விக்கு.

“இருப்பேன்” என்றவன் பின் “எதற்க்கு கேட்டாய்….?” என்றதற்க்கு.

“இல்லை சார் பூஜை முடிந்தவுடன் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.” என்று சொன்னவள்.

ஆதித்யாவின் யோசித்த முகத்தை பார்த்து “நேரம் இல்லை என்றால் பரவாயில்லை சார். நாளை கூட பேசலாம்.” என்ற அவள் பேச்சில் ஆதித்யாவின் முகம் தான் சுருங்கி போயிற்று.

பின் என்ன அவன் அவளை தன் நெருங்கிய சொந்தம் என்று நினைக்கயில் அவள் அவனை வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு கூப்பிட்டது. ஏதோ தன்னை தள்ளி வைப்பது போல் அவனுக்கு தோன்றியது.

அதுவும் சத்யாவை பார்த்து சத்யா என்று கூப்பிடும் போது காரணம் இல்லாமல் சத்யாவின் மீது பொறாமை கூட உண்டாயிற்று.அதுவும் தன்னிடம் பேச வேண்டும் என்பதிலேயே அவள் என்ன பேச போகிறாள் என்பதும் அவனுக்கு தெரிந்து தான் இருந்தது.

அவள் இங்கு இருந்து போவதை பற்றி பேசினால் நான் என்ன சொல்வது என்பதை பற்றி யோசித்துக் கொண்டே சத்யாவை பார்க்க. சத்யா அத்தனை நேரமும் ஆதித்யாவின் முகத்தையே பார்த்திருந்தவன். ஆதித்யா தன்னை பார்த்ததும்.

நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண் ஜாடை காட்டியவன் தாமரையிடம் “நாங்களும் உன்னிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தோம்.ஆனால் இன்று வேண்டாம் தாமரை.நாளை பேசலாம்.” என்று சொல்லி முடித்தவன்.

வசந்தியை அழைத்து படையளை போட்டு விட்டு அங்கயே சாப்பிட்டு விட்டு தான் ஆதித்யாவும் சத்யாவும் சென்றனர். என்றும் இல்லாது ஆதித்யா அன்று மனநிறைவுடன் உண்டான்.

அதற்க்கு காரணம் தாமரை அவனுக்கு பரிமாறியதே….அதித்யாவும் சத்யாவும் சாப்பிட அமர்ந்ததும். தாமரை நாமும் ஆதித்யாவிடம் வேலை பார்ப்பவரின் பேத்தி தானே வசந்தி பரிமாற தான் சும்மா இருப்பது நல்லது அல்ல. என்ற முறையில் தான் வசந்தியிடம்

“நீ போ வசந்தி நான் பரிமாறுக்கிறேன்.” என்று பரிமாறினாள்.

ஆனால் ஆதித்யாவின் மனதுக்குள் அது பல பல கற்பனை தோன்ற காரணம் ஆயிற்று. வசந்திக்கு தாமரையின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொள்ள தான் தோன்றியது.

தாமரை ஏதும் செய்யாத போதே ஆதித்யாவின் கண் தாமரைமீது மைய்யலோடு தான் பார்த்து வைக்கும். இப்போது சொல்லவே வேண்டாம் என்று நினைத்து வசந்திஅந்த இடத்தை விட்டு அகலாது அங்கேயே நிற்க.

அதை பார்த்த சத்யா அவன் எப்போதும் செய்வது போல் “அது தான் தலைவருக்கு தாமரையே பரிமறுதா சொல்றங்களே...அப்புறம் என்ன நீ வேறு வேலை இருந்தால் பார்.” என்று சொல்லி அவளை அவ்விடத்தை விட்டு அகற்றி விட்டு.

சத்யாவும் ஏதோ பேருக்கு கட கட என்று உணவை உட்கொண்டவன். அவர்களுக்கு தனிமை கொடுத்து அவ்விடத்தை விட்டு அகன்று ஹாலில் அமர்ந்துக் கொண்டான்.

இதை பார்த்த வசந்தி கட்சி வேலை சரியா செய்கிறோனோ இல்லையோ இந்த வேலை நல்லா செய்றான் என்று நினைத்துக் கொண்டே அவனை ஒரு பார்வை பார்க்க. அந்த பார்வையின் அர்த்தம் புரியாத சத்யா.

இவள் ஏன் என்னை பார்க்கிறாள் என்று நினைத்தவன். அவள் பார்வை என்ன பார்வை என்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன். ஆமாம் இவள் என்ன ஜாதி என்று தான் நினைக்க தோன்றியது அந்த மாங்க மடையனுக்கு.
 
ஏன்டா சத்யா வசந்தி என்ன ஜாதியாக இருந்தால் உனக்கென்ன?
பதவி போயிடுமேன்னு பயப்பட
நீ என்ன ஆதித்யா மாதிரி எம்மெல்லேவா?
 
Last edited:
Top