Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-14

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??

அவன் கிளம்பிச் சென்று இருபத்தைந்து நாட்கள் ஆகிவிட்டன...ஒரு கடிதம் கூட வரவில்லை....

அவள் வீட்டிற்கு முதல் தடவை என்பதால் அவனில்லாமல் தனியாக சொல்லக் கூடாது என்று அவளுக்கும் செல்ல அனுமதி இல்லை......

மால்ராஜாக்கு மஞ்சள் காமாலை வந்ததால் அவனாலும் சென்னைக்கு போக முடியவில்லை....

மேலும் இரண்டு நாட்கள் கழித்து கண்மணிக்கு காலையில் எழுந்து வரும் போதே சோர்வாய் இருந்தது...

ஆனால் ரஞ்சிதத்திடம் எதுவும் சொல்லாமல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்...நேரம் ஆக ஆக காலையில் சாப்பிடாதது வேற சேர்ந்து சோர்வு அதிகமாக திடிரென்று மயங்கி விழுந்தாள்...
ரஞ்சிதம் பயந்து போய் பக்கத்து வீட்டு வைத்திய பெண்மணியை வர சொல்லி பார்க்க வைத்தார்....

அவள் கையை பிடித்துப் பார்த்து,"நல்ல விஷயம் தான்...உன் மருமகள் உண்டாயிருக்கிறாள்....நல்லா சாப்பிட வை.... பலவீனமாய் இருக்கிறாள்...."என்று கூறிவிட்டு சிறிது தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து எழ வைத்து அவளை அமரவைத்து விட்டு அந்த வைத்திய பெண்மணி கிளம்பி விட்டார்....

அவளுக்கு என்னாயிற்று என்றுக்கூட தெரியவில்லை....ஏன் ரஞ்சிதம் சந்தோசமாக இருக்கார் என்றும் புரியவில்லை...

அவள் முளிப்பதை பார்த்து ,"எல்லாம் சந்தோசமான விஷயம் தான்....உன் வயித்துல இந்த வீட்டு வாரிசு வளருது"என்றார்...

அவளுக்கும் மகிழ்ச்சி தான்....ஆனாலும் சிறிது கவலையும் வந்தது.....

இந்த தகவல் கண்மணியின் வீட்டிற்கு சென்றது.... அவர்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர்...

கேசவனுக்கு கடிதம் போட்டனர்...அவனோ பதில் கடிதம் அனுப்பினான்...

தனக்கு இதில் மகிழ்ச்சியே....ஆனால் இங்கு தற்போது அதிக வேலையின் காரணமாக விடுப்பு எடுக்க முடியல என்றும் சில மாதங்களில் விடுமுறை எடுத்து கொண்டு வருவதாக எழுதிருந்தான்....

நாட்கள் கடந்தன....அவள் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வர்.... ரஞ்சிதமும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்.....

கற்பகத்திற்கு காலேஜில் இடம் கிடைத்தது.... அவளுடைய தாத்தா இறந்து விட்டதால் அவள் கெஞ்சி அவள் அப்பாவிடம் சொல்லி படிக்க திருநெல்வேலி சென்றாள்....அதன் பிறகு தோழிகள் சந்தித்து கொள்ள வில்லை....


கண்மணிக்கு எட்டாம் மாதம் முடியும் நிலையில் அவளை பார்க்க வந்திருந்த அவள் பெற்றோரிடம் அடுத்த மாதம் கண்மணிக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று ரஞ்சிதம் கூறினார்....

அவர்களும் மகளை அழைத்து செல்வதில் மகிழ்ச்சியுடன் சரி என்றனர்...


வளைகாப்பு நாளும் வந்தது.... ஆனால் கேசவன் வரவில்லை.....அவன் மேலதிகாரி தனக்கு விடுமுறை தர இயலாதுனு கூறிவிட்டதாக கடிதம் மட்டும் வந்தது....அவன் இல்லாமலே விழாவும் முடிந்துவிட்டது.... ரஞ்சிதத்திற்கு தான் எல்லாருக்கும் பதில் சொல்லி முடியவில்லை....

தங்கள் பெண்ணை அழைத்து கொண்டு சென்றனர்.....

அவள் வந்து பத்து நாட்கள் ஆகியும் கேசவன் வரவில்லை.....அவளும் அவனை எதிர் பார்க்கவே இல்லை....அம்மா அப்பா கூட இருப்பதில் மகிழ்ச்சியே....

ஆனால் மால்ராஜாக்கு மட்டும் ஏதோ தவறாக பட்டது....

அவன் யாரிடமும் சொல்லாமல் சென்னை சென்றான்....அங்கு சென்று அவன் நண்பர்களுடன் சென்று விசாரித்ததில் அவன் தெரிந்து கொண்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை....கேசவனை பார்க்கவும் முடியவில்லை...

வீட்டில் போய் இதை எப்படி சொல்லனு யோசனையுடனே வீட்டிற்கு வந்தான்....

அன்று கண்மணியை பார்க்க கேசவனின் பெற்றோர் வந்திருந்தனர்....அப்போது கண்மணி தூங்கி கொண்டிருந்தாள்...

எங்கபா போன???இரண்டு வாரம் கழித்து தா வீட்டுக்கு வந்திருக்க.????... அன்னபூரணி..

------பதிலில்லை....பார்வை முழுவதும் தங்கையின் மேலே இருந்தது....

"ஏன்ப்பா....எங்கயாவது வெளியே போகும் போது வீட்ல இங்க போறேன் ....இத்தனை மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு போகமாட்டியா???.....நல்லபுள்ள தான் நீ....
என் பிள்ளைலாம் வாசல்ல போய் நிற்கனும்னா கூட எங்கிட்ட சொல்லி விட்டு தான் போவான்..ஏன்னா அவன் அருமையான மகன்..... "பெருமை பொங்க கூறினார் ரஞ்சிதம்...

கோபத்தில் கைகளை இறுக்கி கொண்டு"அப்போ உங்க அரும மகன்ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்து இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இப்போ அவன் முதல் மனைவி மறுபடியும் உண்டாகி இருக்கறது தெரிந்து தான் என் தங்கச்சிய இரண்டாந்தாரமா மணமுடிச்சு வைச்சிங்களா?...நான்கூட உங்களுக்கு தெரியாதுனு தான் நினைத்தேன்....உங்க மகன்தான் உங்கட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பான்ல"கேட்டுவிட்டான்.....

யார பார்த்து என்ன சொன்ன?....

உங்க மகன பத்தித்தான் சொல்றேன்....
நான் மெட்ராஸுக்கு போய் விசாரிச்சு தெரிந்துள்ளது தான் வந்தேன்....


இல்ல...நீ பொய் சொல்ற....என் பையன் அப்படி கிடையாது.....


"அதுதான் உண்மை....இப்பவே கிளம்பி போய் பாருங்க...உங்க புள்ள லட்சணத்தை"....மால்ராஜா.

"உங்களுக்கு இது முன்னரே தெரியுமா சம்மந்தி?..... "அன்னபூரணி...

"இல்ல சம்மந்தி....தெரியாது...இப்படி ஒரு காரியத்தை அவன் பண்ணியிருந்தது தெரிந்திருந்தால் உங்க பொண்ண பார்க்க கூட வராம இருந்திருப்பேன்....ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்கிற அளவுக்கு நான் மோசமில்லமா.... அவனுக்கு இந்த கல்யாணம் வேண்டாம் னு சொன்னான்.... ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்புறேனு சொன்னான்....
மெட்ராஸ் காரிய கல்யாணம் பண்ணுனா ஊர் பக்கமே வராம போயிருவானு பயந்து தான் அவசரமா கல்யாணம் பண்ணி வைத்துருவோம்னு பொண்ணு பார்க்க வந்தோம்... கல்யாணம் முடிந்துட்டுனா எல்லாத்தையும் மறந்து இவளோட சந்தோசமாக வாழ்வான்னு கணக்கு போட்டேன்.... இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்ல ".....அழுதார்....

"இப்ப எங்க பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?.."அன்னப்பூரணி...

இதை எல்லாம் கேட்டு இடிந்து போய் அமர்ந்திருந்தார் கண்ணப்பன்....

முதல்ல வெளியே போங்க....இது கண்மணி க்கு தெரிய வேண்டாம்....முதல்ல குழந்த நல்லபடியாக பிறக்கட்டும்....அப்புறம் அவன கூப்பிட்டு பேசுவோம்...மால்ராஜா

அவர்கள் சென்றதும்,அம்மா அப்பா இந்த விசயம் நம்ம மூன்று பேருக்கு மட்டும் தெரிந்தா போதும்....இந்த ஊரில் யாருக்கும் தெரிய வேண்டாம்.... ஏற்கனவே இந்த வருஷம் மழையில்லாம எல்லாம் போச்சில...அதுனால நம்ம ஊர விட்டு போய்ட்டோம்னு எல்லாரும் நினைச்சிகிடட்டும்... என்னென்ன வேணுமோ எடுத்துக்கோங்க....

கண்மணி க்கு என்ன பதில் சொல்லபா???

அவளால் இத தாங்க முடியாதுமா....அதனால வேற எதுவும் சொல்ல வேண்டாம்...என்னோட முடிவுனு சொல்லி சமாளிப்போம்....

எங்கப்பா போக???

அழுகுறத நிறுத்துங்க....தஞ்சாவூர்ல ஒரு கடைல வேலைக்கு ஏற்கனவே வரச் சொல்லி இருக்காங்க....அங்க போய் பார்த்து இதலாம் முடிவு செய்து வீடும் பார்த்து வைச்சிட்டு தான் வந்தேன்...கிளம்புங்க...‌

"ரொம்ப முக்கியம்... கண்மணி க்கு தெரிய கூடாது..."என்று கூறி அவன் தாய் மடியிலே படுத்து கதறினான்....


"எங்கள் அழக்கூடாது னு சொல்லிட்டு நீயே இப்படி அழுதா எப்படிப்பா"....கண்ணப்பன்...

அழலப்பா ‌...... அழக்கூடாது னு தான் நினைக்கேன்...முடியலப்பா....நம்ம கண்மணி வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதேப்பா....


சரி கிளம்ப ஏற்பாடு பண்ணுவோம்....

இவ்வளவு நேரம் இது எல்லாவற்றையும் பார்த்து விட்டு அன்னப்பூரணி எழுவதை பார்த்து மறுபடியும் போய் படுத்துக் கொண்டாள்....

அவளால் இது எதையுமே தாங்க முடியவில்லை....தங்கள் குடும்பத்தை அவன் ஏமாற்றி திருமணம் செய்தது ஏன்?தாங்கள் என்ன தவறு செய்தோம்???வேறொருத்தியின் கணவனாக இருந்து கொண்டு என்னுடன் அப்படி இருந்திருக்கிறான் என்றால் என்னை என்னவாக நினைத்திருக்கிறான்....இனி தன் வாழ்க்கை என்னவாகும்??? எப்படியும் தன் வாழ்வில் இனி அவனுக்கு இடமில்லை....தன் குழந்தை....அதன் வாழ்க்கை....அய்யோ!!!!ஏன் இப்படி ஆனது!!!எனக்காக இந்த ஊரையே விட்டு போகனும்னு முடிவு பண்ணிருக்க இவங்களுக்கு எனக்கு தெரியும் என்று தெரிய வேண்டாம்....தனக்கு தெரியாதுன்னு நினைச்சி கிடட்டும்..தான் இங்கிருந்தால் எல்லாருக்கும் தெரிந்து தன் குடும்பத்தின் மானம் போய்ரும்..இந்த ஊரைவிட்டு போறது தான் சரி.இன்னும் என்னென்ன வோ எண்ணினாள்....

"அண்ணனுக்கு தஞ்சாவூர்ல வேலை கிடைச்சிருக்கு....இங்கயும் மழை இல்லாம விவசாயம் பண்ண முடியல....அதனால எல்லாரும் அங்கே போயிருவோம்னு அப்பா சொல்றாங்க.... "அன்னபூரணி

சரிமா....

வேறேதும் செய்தா???

இல்லமா...

சரி... உனக்கு என்ன வேணுமோ எடுத்து வச்சிக்கோ....

சரிம்மா...

இரவோடு இரவாக யாரிடமும் சொல்லாமல் தஞ்சாவூர் சென்று விட்டனர்...

அங்க போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது...கண்ணப்பண்ணும் ஒரு வேலையில் சேர்ந்தார்...

கண்மணி உறங்கியதும்,அம்மா...கண்மணிக்கு குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடங்களுக்குள் ஒரு நல்ல பையனை பார்த்து மறுமணம் செய்திரனும்மா.... அவளுக்குனு ஒரு வாழ்க்கை வேணும்..

சரிப்பா....ஆனால் குழந்தையை காட்டி யாரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளளலனா...

நான் வச்சிக்குவேன்....என் குழந்தையா வளர்ப்பேன்...

உனக்கு வர்ரவ ஒத்துக்கலனா?

ஓத்துக்கிட்டா தான் கல்யாணம்...

வேண்டாம் ப்பா..... நானும் அப்பாவும் வளர்த்துக்கிறோம்....

சரி...அத அப்ப பார்ப்போம்.....இன்னும் கொஞ்ச நாளிலே குழந்தை பிறந்திரும்லமா?....

ஆமாபா...சரி...போய் படு...காலைல சீக்கிரம் போனும்ல....

ஆமாம்மா....

எல்லாரும் படுத்ததும் இதலாம் கேட்டுக் கொண்டிருந்த கண்மணிக்கோ மூளை வேறுமாதிரி வேலை செய்தது....

எனக்காக இவங்கலாம் இவ்வளவு யோசிக்கிறாங்க....என் ஒருத்தியால எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்...நான் இல்லனா....என் குழந்தையும் இல்லனா....நான் என்க் குழந்தையையும் கூட்டிட்டு போயிருறேன்..... இல்லாட்டி அதுவும் கஷ்டப்படனும்...என்று எண்ணி தூக்கிட்டு கொண்டாள்....


உள்ளம் வசமாகுமா??-தொடரும்











 
என்ன sis... இப்படி முடிச்சிட்டிங்க... ?

அப்போ மகிழ் ,எப்படி கேசவன் கிட்ட போறா...

Interesting
மிக்க நன்றி சகோதரி ?...

அடுத்த பதிவு நாளை காலையில் வரும் சகோதரி.....
 
Top