Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம். -15

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??




இரவு தண்ணீர் குடிக்க உள்ளே சென்ற அன்னப்பூரணி மகளை பார்க்க அந்த ரூமிற்குள் நுழைந்ததும் அதிர்ச்சி யில் ஆஆஆஆஆஆ....வென கத்திவிட்டார்...

சத்தம் கேட்டு வந்த மால்ராஜா தங்கையை அழுதுகொண்டே இறக்கி மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு சென்றான்....

உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கண்மணியின் உடலில் உயிரில்லை...ஆனால் குழந்தைக்கு உயிர் இருக்கு ...அதனை காப்பாற்றிரலாம் னு அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு குழந்தையை காப்பாற்றி அவர்களிடம் ஒப்படைத்தனர்....

மால்ராஜா கடையின் முதலாளி மூலமாய் யாரோ சிலரின் உதவியுடன் போலிஸ் கேஸ் ஆகாமல் கண்மணியின் உடலை வாங்கி சென்று இறுதி காரியம் செய்தனர்....

அவள் தூக்கிட்டுக் கொண்டதன் மூலம் அவளுக்கு உண்மை தெரிந்திருக்குனு முடிவு செய்து குழந்தைக்காக தேறி வந்தனர்....

குழந்தைக்கு மகிழினி என்று பெயரிட்டனர்....அவள் இரண்டு வயது வரை அங்கேதான் இருந்தனர்....

அப்போது கண்ணப்பன்னுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.... பக்கவாதம் வந்து படுத்த படுக்கை ஆகினார்....அவருக்கு அவருடைய உயிர் அவருடைய ஊரிலேயே பிரிய ஆசை....
அதனால் மறுபடியும் மால்ராஜாவை தவிர மூவரும் அவர்கள் ஊருக்கே சென்றனர்....

அங்கு சென்றதும் மால்ராஜாக்கு பெண் பார்க்க குழந்தையை ஏற்று திருமணம் செய்ய யாரும் தயாராயில்லை.....அன்னப்பூரணி குழந்தை தன் பொறுப்புனு சொல்ல குந்தவை சம்மந்தம் வந்தது.... திருமணம் முடிந்ததும் மால்ராஜா,குந்தவையை தஞ்சாவூர் அனுப்பி வைத்துவிட்டு தான் கணவர் மற்றும் மகிழினியுடன் இங்கிருந்து கொண்டார்....

ஒரு வருடத்திலே கண்ணப்பன் இறந்துவிட மால்ராஜா இனி தான் இங்கேயே இருந்து விவசாயம் பார்த்து கொள்வதாக முடிவு செய்தான்....

அன்னபூரணி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை....அதன்பின் வீட்டின் பின்புறம் வீடு கட்டி அவரை அங்கே குடிவைத்து அவர்வீட்டுக்கு முன் வாசல் அந்தப்பக்கம் வைத்தவர் ஏற்கனவே இருந்த முன் வாசலில் அவர் புழங்கி கொண்டார்....

ஏற்கனவே ஊருக்கு வெளியே இவர்கள் வீடு இருந்ததால் யாரும் கண்மணியை பற்றிக் கேட்டுக் கொண்டு வரவில்லை.....

மகிழினியின் வாழ்க்கை அவள் ஆறு வயது வரை நன்றாகவே சென்றது.... அன்னபூரணி க்கும் இப்போது அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகி விடுகிறது...குந்தவையும் மகிழினியிடம் நெருக்கம் காட்ட மாட்டார்..... மால்ராஜாவும் முன்பு போல் பாசம் காட்டுவதில்லை....அவனுக்கும் குடும்பம்னு ஆனபின் இதையெல்லாம் எதிர்பார்க்க கூடாதுனு அவரே மகிழினியை பார்த்துக் கொண்டார்...

திடிரென்று ஒருநாள் கேசவன் வந்து நின்றான்....மகிழினியை தன்னுடன் அனுப்புமாறு சண்டையிட்டான்...முடியாதுனு இவர்கள் சண்டையிட்டனர்.....நான் கவர்மெண்ட் உயர் அதிகாரி....போலீஸில் புகார் குடுத்து குடும்பத்தை அவமானப்படுத்தி விடுவதாக மிரட்டினான்....

நீண்ட நேர யோசனைக்குப்பின் என் பெண்ணை கொன்றது போல் இவளை கொல்லமாட்டனு என்ன நிச்சயம் என்று கேட்டார்....

இவள் என் பெண்....இவளை அவள் விருப்பத்திற்கு படிக்க வைத்து அவள் தவிரும்புவனுக்கே மணமுடிப்பேன்....இது சத்தியம்... என்று வாக்களித்தான்....நான் இப்போது நல்ல வசதியில் இருக்கிறேன்....அங்கிருந்தால் அவள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்....இங்கே சாப்பாட்டுக்கே கஷ்டப் படுகிறீர்கள்....என் மனைவி காஞ்சனா மிக நல்லவள்....ஏற்கனவே இருமகள்களுடன் இவளையும் ஏற்க தயாராயிருக்கிறாள்....என்று அவர் மனதை கரைத்தான்.....மால்ராஜாவோ அம்மாவின் விருப்பப்படி விட்டுவிட்டான்....

கடைசியில் அவர்கள் சம்மதிக்க சிறுமியை கூட்டிச் சென்றான்.....

ஏற்கெனவே தன்னைத் தவிர இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததற்கே அப்படி சண்டையிட்ட காஞ்சனா இப்போது குழந்தை யுடன் வந்தததில் தன் ஆத்திரத்தை எல்லாம் அந்த சிறுமியிடம் காட்டினார்....

பட்டினி போடுவது, வீட்டு வேலைகளை செய்ய வைப்பது,இரவில் இருட்டில் பூட்டி வைப்பது ,வெளியே எங்கும் அழைத்துச் செல்லாதது ,தன் குழந்தைகள் பயன்படுத்திய துணியையே அவளுக்கு குடுப்பது ,தவறு செய்தால் சூடு வைப்பது என கொடுமை செய்தார்..... இதெல்லாம் தெரிந்தும் கேசவன் கண்டுகொள்ளாமல் இருந்தார்

அவளோ அவளுடைய அம்மாவை போட்டோவில் கூட பார்த்தது இல்லை.... அவளுக்கு அம்மான்னா இப்படி இருப்பாங்கன்னு குந்தவை மற்றும் காஞ்சனா விடம் பார்த்ததால் தன் அம்மா எப்படி இருந்திருப்பார்....இப்போ உயிருடன் இருந்திருந்தால் எப்படி தன்னுடன் இருந்திருப்பார்னு கனவில் வாழ ஆரம்பித்தாள்....

இதை தெரிந்து கொண்ட காஞ்சனா அடுத்த முறை ஊருக்கு சென்ற போது கேசவன் திருமண ஆல்பத்தை தேடி எடுத்து எரித்தார்....ஏற்கனவே திருமணம் செய்து தங்களிடம் மறைத்து கண்மணியை திருமணம் செய்து அவளை கைவிட்ட பாவத்திற்கு கேசவனின் பெற்றோர் இருவரும் கண்காணாத இடம் சென்று விட்டனர்....ஆதலால் எல்லா பொறுப்பும் இப்போ காஞ்சனா விடமே.....

அவள் வந்து சிறிது மாதங்களிலே மறுபடியும் குழந்தை உண்டானார்....இந்த முறை பையன் பிறக்கவே இவள் ராசினு முடிவு செய்தார்....
ஆதலால் அவளை படிக்க மட்டும் அனுமதித்தார்......மீதிக் கொடுமைகளை தொடர அவள் பழகிக் கொண்டாள்....

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அன்னபூரணியை பார்க்க அனுமதி கிடைக்கும்....
அவள் பதினாறாம் வயதிற்கு பின் அதற்கும் அனுமதியில்லை.....

அவளை பார்க்க வந்த மால்ராஜாவையும் அவமதிப்பதால் அவரும் வந்து பார்க்கவில்லை.....

பத்து வருடத்திற்கு பின் இப்போது தான் அவள் பார்க்கிறேன்"என்றுக்கூறி முடித்தார்....


சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது.... குழந்தைகள் மூவரும் உறங்கியிருந்தனர்...

"கண்மணிய நினைத்து அழுவதா???இல்ல அவப்பொண்ணே எனக்கு மருமகனு சந்தோசம் படுவதா???...தெரியலமா"...

அவதான் அவ மகள்ப்பட்ட கஷ்டத்துக்கு அவள உன்ட்ட சேர்த்துருக்காமா..

இதெல்லாம் அவளுக்கு தெரியுமா???

தெரியும்....அவகடைசியா இங்க வந்திருந்தப்போ என்ன நச்சரித்து கேட்டு தெரிந்து கொண்டா...

அவள எங்க?

அச்சோ!!! மறந்துட்டேன் பாரு!!!உன்ன தேடி தான் போயிருக்கா?

என்னையா???எங்க???என்ன தெரியாதுல அவளுக்கு???அப்புறம் எப்படி?


உன் வீட்ட பார்க்க போயிருக்கா.....

அவருக்கு புரிந்தது...எங்க வீடு புழக்கத்தில் இல்லை மா...வேற இடத்துலே கட்டி அங்கதா தங்குவோம்.....

எதுக்குமா போயிருக்கா???

அவ அம்மாபோட்டோ உன்ட்ட ஒன்று இருக்குல....அது பார்க்க தான்..

அதன்பின் என்ன பேசனு தெரியாம அமைதியாயிருந்தனர்.....


வாடிய முகத்துடன் மகிழினி வந்தாள்...

அனைவரையும் பார்த்ததும் முகத்தை மாற்றிக் கொண்டதை அனைவரும் கண்டுக் கொண்டனர்...

அம்மாடி!!!இங்க வா!!!உன் அம்மா போட்டோ இதோ உன் அத்தைட்ட தான் இருக்கு.....இவ தான் உன் அம்மாவின் உயிரத் தோழி.....

அதிர்ச்சியில் அப்படியே நிற்க சந்தோசத்தில் கண்ணீர் மட்டும் வந்தது.... ஓடிச் சென்று அவரை கட்டிக் கொண்டாள்....

அவளை தான் நன்றாக பார்த்துக் கொள்ள வதாக அன்னப்பூரணிஅம்மாவிடம் கூறிக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றனர்....

யாரும் எதுவும் பேசவில்லை.... கற்பகம் மட்டும் மகிழினி கையை விடவேயில்லை....

எல்லாரின் இரக்கமான பார்வையும் அமைதியும் அனைவருக்குமே தன் பிறப்பின் உண்மை தெரிந்து விட்டது என புரிந்து கொண்டாள்...


அடுத்த நாள் காலையிலேயே சென்னைக்கு கிளம்புவதாக முடிவு செய்து இரவு உறங்க சென்றனர்....

உள்ளம் வசமாகுமா??-தொடரும்
 
Last edited:
Top