Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-2

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே,

கதைக்கு லைக்ஸ் & கமெண்ட்ஸ் குடுத்த அனைத்து சகோதரிகளுக்கும் மிக்கநன்றி...???

வாருங்கள் கதைக்குள் போவோம்...


அத்தியாயம் 2:

ஒருமாதமாயிற்று....ஆனாலும் இருவரும் வேறேதும் பேசிக் கொள்ள வில்லை...

இன்று இங்கே சரவணனும் ஸ்வேதாவும் அந்த மாதத்திற்கான செக்கப் போய்விட்டு வந்திருந்தனர்...அவர்களிடமும் மகிழினி நல்ல விதமாக நடந்து கொண்டது அனைவருக்குமே மகிழ்ச்சி..

குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கற்பகம் கூறவும் எல்லாரும் யோசித்து கார்த்திக் காவ்யா னு பெயர் சூட்டினர்...

மாலை சரவணன் ஸ்வேதா உடன் கற்பகம் மற்றும் கணேசனும் கிளம்பினர்...
இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்...

கற்பகம், ஏற்கனவே நிறைய நாட்கள் இருந்தாயிற்று....இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வருகிறோம்னு சொல்லிக் கொண்டு கிளம்பினர்...

காரில் ஏறியதும் சரவணன்,அண்ணி தான் கேட்கிறாங்கள.... குழந்தைகள பார்த்ததக்க கஷ்டமாயிருக்கும் போல...உங்களுக்கு அங்க இருக்க கஷ்டம்னா அண்ணா,அண்ணி மற்றும் குழந்தைகள இங்க வரசொல்லிருவோம் மா...

கற்பகம்,மகிழினி எல்லாத்துக்கும் என்னிடம் தான் வந்து நிற்கா...இப்படியே போச்சினா எப்படி காலம் முழுவதும் இரண்டு பேரும் சேர்ந்து வாழ முடியும்...இப்போதைக்கு இரண்டு பேரும் நம்ம கூட இருக்க வேண்டாம்...அப்போ தான் அவங்களுக்குள் நல்ல புரிதல் வரும் சரவணா...ஏங்க...நான் சொல்றது சரிதானா?

கணேசன்,சரிதான்...நானே இந்தப் பத்தி உன்னிம் பேசனும்னு நினைத்தேன்மா...

வீட்டை அடைந்ததும் ஹர்சித் க்கு தகவல் சொல்லிவிட்டு அவர்கள் வேலையை பார்த்தனர்...


இங்கே குழந்தைகளை கவனித்து கொள்ளவே மகிழினிக்கு நேரம் சரியாக இருந்தது....இருவரும் இப்பொழுது குழந்தைகளை பற்றி பேசி என அவர்கள் வாழ்வும் மகிழ்ச்சியாக சென்றது...



இப்படியே ஏழு மாதங்கள் சென்றது...
ஹர்சித்திற்கு மகிழினி மேல் மிகவும் நம்பிக்கை வந்திருந்தது...
இவளுக்கு ஏன் கடவுள் இப்படி ஓர் குறை வைத்துள்ளார் என்று எண்ணினான்...

ஸ்வேதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது...இவர்கள் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தனர்...

சரவணன்-ஸ்வேதா குழந்தைக்கு சுஷ்மிதா என பெயர் சூட்டினார்...

இப்பொழுது முரளி மற்றும் பார்வதியை யும் அவர்கள் மகன் அழைத்து செல்ல வந்திருந்தான்...
அவனுக்கு நல்ல அரசாங்க வேலை கிடைத்து விட்டது ஆதலால் கூட்டிட்டு போறேன்னு சொல்லும் போது இவர்களால் தடுக்க முடியவில்லை...அவர்களும் கிளம்பி விட்டனர்....

காவலாளி வேலைக்கு ஆள் கிடைத்து விட்டது....வீட்டு வேலைக்கு தான் கிடைக்க வில்லை...


கார்த்திக் மற்றும் காவ்யா வின் முதல் பிறந்த நாளை எல்லாரும் காலை கோவிலுக்கு சென்றனர்...கேசவன் கோவிலில் மறைவில் நின்று குழந்தைகளுடன் மகிழினி மற்றும் ஹர்சித்தை சேர்ந்து பார்த்தபோது அவர்கள் முகமலர்ச்சி பார்த்து அவர் மனம் நிறைந்தது....

கேசவனை ஹர்சித் பார்த்து விட்டான்...
ஆனால் இவர் ஏன் மறைவாக நின்று நம்மை பார்க்கிறார் என்று யோசித்தவன் காவ்யாவின் அழைப்பில் விட்டு விட்டான்...
மாலை கேக் கட் செய்து குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



இப்போதெல்லாம் ஹர்சித், சரவணன் மற்றும் அப்பா விடம் அன்பாக பேசுகிறான்.. அலுவலகத்தில் மூவரும் சேர்ந்தே மதிய உணவு உண்ணுகிறனர்...
அவன் வியாபாரம் தவிர பேசுவது முழுவதும் குழந்தைகள் மற்றும் மகிழினி பற்றியே....

அவன் சொல்வதனைத்தையும் இருவரும் ஆர்வமாக கேட்டனர்...பின்னே இருக்காதா!!இத்தனை வருடத்திற்கு பிறகு அவனின் இயல்பு குணம் வெளி வருகிறது அல்லவா!!!

கணேசன்,சித்து நீங்கள் பெரிய வீட்டிற்கு வந்து விடுங்கள்... அனைவரும் ஒன்றாக இருப்போம்னு...

வேண்டாம் அப்பா....நான் அங்கே இருந்து கொள்கிறேன்... தம்பிக்கு விருப்பம்னா அவனையும் தனிக் குடித்தனம் வைங்க... பிரச்சினை முடிந்தது என்று கூறி நகைத்தான்....

என்னால் தனியாக போய் லாம்இருக்க முடியாது.... ஆதலால் இந்த பேச்சை இப்படியே விட்டு விடுங்கள் என்று சரவணன் கூறிவிட்டு அவன் கேபினுக்கு சென்று விட்டான்......

இதை எல்லாம் கணேசன் கற்பகத்தின் பகிர்ந்திருந்தார்....

சுஷ்மிதா பிறந்தநாளை கொண்டாட பெரிய வீட்டிற்கு சென்றிருந்தனர்...
மாலை தான் விழா என்பதால் மதியம் சாப்பிட்ட பின் குழந்தைகள் உறங்கி விட்டனர்...

மகிழினிக்கு இப்படி எல்லாரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது...

கற்பகத்திடம் ,அத்தை நாங்களும் இங்கே உங்களுடன் சேர்ந்து இருக்கிறோமே என்றாள்...

ஸ்வேதாவுக்கும் இதில் மகிழ்ச்சியே...
மாமியார் என்ன சொல்ல போகிறார்கள் னு அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

கற்பகமோ,எங்களுக்கும் இதில் விருப்பம் தான்மா...ஆனால் சித்து ஒத்துக் கொள்ள மாட்டானே என்றார்...

மகிழினி முகம் வாடிவிட்டது...அதை கற்பகமும் ஸ்வேதாவும் கவனித்தனர்...

விழா கொண்டாடி விட்டு வீட்டிற்கு வந்தனர்...

இப்போது லாம் மகிழினியே ஹர்சித் உதவியுடன் குழந்தைகளை சமாளிக்க பழகி கொண்டாள்...

குழந்தைகளின் மழலையில் அகிலம் மறந்தாள்...(சும்மாவா சொன்னார்- குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்)....

அவன் அலுவலகம் கிளம்பும் முன் வீட்டு வேலைகளை முடித்து விடுவாள்...பின்னர் முழுநாளும் குழந்தைகள் தான் அவள் உலகம்....
குழந்தைகளும் அவளுடன் பாசமாக மற்றும் குறும்பாக இருந்தனர்...அவர்களிருவருடையே உள்ள உறவும் அதற்கு மேல் செல்ல வில்லை...
இப்படியே இன்னும் இரண்டு வருடங்கள் சென்றன...


கார்த்திக் மற்றும் காவ்யா வை பள்ளியில் சேர்த்தனர்...அவர்களும் காலையில் செல்லும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி தான் செல்ல ஆரம்பித்தனர்...பள்ளியில் விட்டுவிட்டு அவன் அலுவலகம் சென்று விடுவான்.

அவர்களை அனுப்பி விட்டு மகிழினிக்கும் பொழுது போகவில்லை..

இப்படி சென்று கொண்டிருந்த போது தான் ஒருநாள் அவன் குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான்....வந்தவன் அவன் அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்...

அவன் எப்பொழுதும் அவன் புது ப்ராஜக்ட் டெண்டர் பேப்பரை பூஜையறையில் வைத்திருந்து எடுத்து கொள்வான்...
இப்பொழுதுள்ள பேப்பரை எடுக்க வேண்டும்...சோம்பேறித்தனமாக இருந்ததால் எடுக்காமல் அப்படியே உட்கார்ந்து இருந்தான்...

அப்பொழுது அவனுக்கு பழச்சாறும் சுண்டலும் கொடுக்க வந்தவளை அதை எடுத்து தருமாறு கூறினான்..

அவள் செல்லாமல் தயங்கி போய் நின்று கொண்டே இருந்தாள்...என்னவென்று பார்த்ததுக்கு நான் இன்று பூஜை அறை செல்லக் கூடாது என்று கூறிவிட்டு சென்று விட்டாள்....

அவனும் அதை பெரிதாக எடுக்க வில்லை...

அவனே போய் எடுத்து விட்டு வந்து வேலை செய்ய ஆரம்பித்தான்..

திடிரென்று தான் நினைவு வந்தது...இது எப்படி சாத்தியம்....நினைக்க நினைக்க அவன் கண்கள் சிவக்க ஆத்திரம் வந்தது...

அறையை விட்டு வெளியே வந்தவன் அவள் பெயரை கூறி கர்ஜித்தான்..

அவள் பயந்து போய் இவனிடம் வந்தாள்...
ஆத்திரத்துடன் அவளை அப்படியே அறைந்து விட்டான்...அவள் கீழே விழுந்து விட்டாள்...

அவள் முடியை கொத்தாக பிடித்து என் முழு குடும்பத்தையுமே ஏமாற்றி உள்ளீர்களா?னு மறுபடியும் கீழே தள்ளி விட்டான்...

இவள் குடும்பமே சேர்ந்து நம் குடும்பத்தை ஏமாற்றி இருக்கிறார்கள்னு ஆத்திரம் அடங்காமல் என்ன செய்கிறோம் என்றே தெரிய வில்லை..... அதன்பின் வீட்டை விட்டு காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்...

ஏற்கனவே மாதவிடாய் தொந்திரவோடு கீழே விழுந்ததும் சேர்ந்து உயிர் போகும் வலியில் துடித்துக் கொண்டு இருந்தாள்....

போனவன் வரவேயில்லை...இவளாக எழுந்து உட்கார்ந்து இருந்தாள்...எதுவும் சமைக்கவும் இல்லை...சாப்பிடவும் இல்லை....

இதற்குமுன் இப்படி இவனை பார்த்ததுமில்லை.....ஏன் கோப பட்டான்,அடித்தான் என்றும் புரியவுமில்லை...

உள்ளம் வசமாகுமா??????!!!!!
 
Nice epi dear.
Tq for daily updates.
Katha romba kudukudu nu oduthey?oru epi la ye varushangal poguthey inni than heart of the story irruka?
Feel good story,kudumbam ottrumaya,sernthu irrupathu manasukku ithama irruku.
Nice dear.
 
Nice epi dear.
Tq for daily updates.
Katha romba kudukudu nu oduthey?oru epi la ye varushangal poguthey inni than heart of the story irruka?
Feel good story,kudumbam ottrumaya,sernthu irrupathu manasukku ithama irruku.
Nice dear.
நன்றி சகோதரி...
ஆமாபா...இனிதான் கதையின் கரு வரும்..
இனி மெதுவாக தான் செல்லும்....
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி...
:love: :love: :love:
 
Top