Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-3

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே,

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்...
லைக்ஸ் & கமெண்ட் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... ? :love: ??:love:?:love:

வாசித்து விட்டு அமைதியாக இருக்கும் அன்பு சகோதரிகளும் ஒரிரு வரிகள் கமெண்ட் செய்தால் இன்னும் ஊக்கமாக இருக்கும்....

இதோ கதை பகுதிக்குள் செல்வோம்....



குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் நேரம் ஆகிவிட்டது....இவங்க எங்கே போனாங்கனு தெரியாமல் அவள் வாசலுக்கு வந்து நின்றாள்..‌

வாயிற் காவலாளி பார்க்காத வண்ணம் திரும்பி நின்றாள்...நல்ல வேளை குழந்தைகளை அழைத்து கொண்டு அவன் வந்துவிட்டான்....

குழந்தைகள் ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டன...

கண்ணத்தில் என்ன பட்டதுனு கார்த்திக் கேட்கவும் தான் அவள் கண்ணத்தை பார்த்தான்.....ஆனால் ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்று விட்டான்...

கீழே விழுந்துட்டேன்னு சொல்லி சமாளித்து விட்டு குழந்தைகளை குளிக்க வைத்து உடைமாற்றி விட்டு பால் ஆற்றிகொடுத்து வீட்டிலிருந்த முறுக்கை கொடுத்து சாப்பிட வைத்துவிட்டு வெளியே விளையாட வைத்து அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள்....

சிறிது நேரம் கழித்து குழந்தைகளை உள்ளே கூட்டி சென்று கைகால் கழுவ வைத்து டிவி பார்க்க வைத்து விட்டு சமையலறை சென்று இரவு உணவுக்கு சமைக்க சென்று விட்டாள்...

அவள் இரவு உணவை குழந்தைகளை சாப்பிட வைத்து வேலைகளை முடித்து விட்டு உறக்க வைத்து விட்டு அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்....

பத்து மணியாகியும் அவன் வரவில்லை..
அவனை அழைக்க கீழே உள்ள ஆபிஸறையிலுக்குள் சென்று சாப்பிட அழைத்தாள்...

எதுவும் பேசாமல் சாப்பிட்டு குழந்தைகளுடன் சென்று படுத்தான்...

எப்போதும் போல் சமையலறையை தூய்மை செய்துவிட்டு படுக்க அறைக்குள் நுழைந்ததும்,இனி நீ இங்கே படுக்க கூடாது .... சமையலறையில் கீழே படு என்றான்...

மகிழினி,குழந்தைகள் இரவு எழுந்தால் தேடு வார்களே.....

ஹர்சித், அவர்கள் தேடினால் கூப்பிடுகிறேன்...

மகிழினி அசையாமல் அப்படியே நின்றாள்... சிறிது நேரம் கழித்து "நான் இங்கே கீழே படுத்துக் கொள்ளவா?"என்றாள்...

ஏன்!!?!இந்த சொகுசு படுக்கை மற்றும் ஏசி வசதி அங்கே இல்லை என்று அங்கு போக மனசுவரலையோ....என்று நக்கலாக கூறினான்..

உடனே திரும்பி சென்றாள்..
கீழேயுள்ள அறைக்குள் சென்று ஒரு தலையணை யும் இரு போர்வை யும் எடுத்து சென்று ஒன்றை விரித்து ஒன்றை மூடி படுத்தாள்...

ஆனால் இருவருமே தூங்க வில்லை...
ஏன் இப்படி செய்கிறான்?? குழந்தைகள் தேடுவார்களோ??நான் இங்கு வந்ததிலிருந்து குழந்தைகள் அருகே தான் தூங்குவேன்...இன்று மட்டும் ஏன் இப்படி கூறினாங்க? என்று அவளும்
அவளை துரோகி என்று அவனும் எண்ணி னர்...

மறுநாள் குழந்தைகளை பள்ளியில் விட்டு வந்தவன் அலுவலகம் செல்ல வில்லை...
வீட்டிலிருந்தே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்....

அவளும் அதன்பின் அவனிடம் எதுவுமே பேசவில்லை....
வேலைகளை முடித்து விட்டு மதிய சாப்பிட அழைத்தாள்.... சாப்பிட்டு விட்டு அவள் சாப்பிட அமரவும் சண்டை போட ஆரம்பித்தான்...

"இப்படி சுகபோக வாழ்க்கை வாழத் தான் இரண்டாந்தாரமானாலும் பரவாலனு தான் இந்த வாழ்க்கைக்குள்ளே வந்தியா??"....ஹர்சித்...

"இங்க வர்ரவரை திருமணம்னு மட்டும் தான் எனக்கு தெரியும்.....வந்து குழந்தைகளை பார்த்த பிறகு தான் எனக்கு இதுதான் தெரிந்தது"....மகிழினி

"ஆக மொத்தம் பணம் மட்டும் தான் உனது எண்ணம்...இல்லனா ஏன் இது தெரிஞ்ச பிறகு திருமணத்த நிறுத்திருக்கலாமே!!"...
ஹர்சித்

"எனக்கு யாரையுமே திருமணம் செய்ய விருப்பம் இல்லை,எங்க வீட்ல சொல்லி பார்த்தேன்...கேட்கல..
இங்க வந்து உங்க எல்லாரிடமும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைனு சொல்லனும்னு நினைத்து தான் வந்தேன்...வந்து பார்த்தால் அனுசியா போட்டோ.....என்று நிறுத்தினாள்...

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்...எதுவும் பேசவில்லை...
அவன் அனுசியா பற்றி ஏதேனும் கேட்பான் என்றுப் பார்த்தாள்...

அந்தோ பரிதாபம்....
ஆதலால் தொடர்ந்தாள்..."அனுசியா என் பள்ளிகால உயிர்த் தோழி...அவளை பள்ளி படிப்பிற்கு பிறகு பார்க்கவில்லை... நேரம் கிடைக்கும் போது எல்லாம் நினைத்து பார்ப்பேன்....ஆனால் தொடர்பு கொண்டதில்லை.... ஆனால் இப்படி போட்டாவில் தான் பார்ப்பேன் என்று நினைக்க வில்லை...அவள் குழந்தைகள் அம்மா இல்லாமல் இருக்க கூடாது என்று மட்டுமே நினைத்தேன்..ஒருவேளை நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி வேறு யாராவது இக் குழந்தைகளுக்கு தாயாக வந்து பின் மனமாறி இக்குழந்தைகளை கொடுமை படுத்தி அவர்கள் வாழ்வு வீணாகுவதைவிட ஏற்கனவே வீணாக போகட்டும் என்று எண்ணிய என் வாழ்வு இவர்களுக்காவது உபயோகமாகும் என்று தான் முடிவு செய்தேன்....அதற்குள் நீங்களும் என் கழுத்தில் தாலி கட்டி விட்டீங்க"என்றாள்...

"இந்த கதைலாம் கேட்க நன்றாக தான் இருக்கிறது...இதை எதுவும் நான் நம்ப போறதில்லை...முதலில் ஏன் இந்த பொய் சொல்லி இங்கே வந்தீர்கள்??உனக்கு தான் எந்த குறையும் இல்லையே?!??? என்றான்...

அவன் பேசுவது அவளுக்கு ஏதும் புரியவில்லை.....ஆனால் இவன் தன்னை நம்பவில்லை என்று மட்டும் புரிந்தது...





உள்ளம் வசமாகுமா????
 
Last edited:
Tq dear for spl epi.
Nice epi.
Avalai enga pesavitteenga?
Manaiviyai adipavan aanpillaye illa.
நன்றி சகோதரி... :love:
இன்று இரவு வேலை குறைவாக இருந்தது..ஆதலால் 1பதிவு குடுக்க முடிந்தது...

அதான ....அவள பேசவே விடல...

சரிதானே....பெண்ணை அடிப்பவன் ஆம்பிள்ளையே இல்ல...
இங்கே மிகப் பெரிய துரோகம் னு நினைத்து கை ஓங்கிட்டான்....
இதுக்காக அவன முக்கியமான நேரத்தில் நல்லா கெஞ்ச விடுவோம்....ஓகே வா @Leenu
 
நன்றி சகோதரி... :love:
இன்று இரவு வேலை குறைவாக இருந்தது..ஆதலால் 1பதிவு குடுக்க முடிந்தது...

அதான ....அவள பேசவே விடல...

சரிதானே....பெண்ணை அடிப்பவன் ஆம்பிள்ளையே இல்ல...
இங்கே மிகப் பெரிய துரோகம் னு நினைத்து கை ஓங்கிட்டான்....
இதுக்காக அவன முக்கியமான நேரத்தில் நல்லா கெஞ்ச விடுவோம்....ஓகே வா @Leenu
Hmm, hmm deal ok. Nalla , romba nalla kenjanum.suthal ah vittudalam ok va.
 
Top