Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா!!!!-8

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.... ? ? ?

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....

தந்தை தன்னுடன் ஏதோ தனியே பேச நினைக்கிறார் என்று புரிந்து கொண்டு அவரையும் அழைத்து சென்றான்...

பள்ளியில் குழந்தைகளை பார்த்ததும் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.... கார்த்திக் மற்றும் காவ்யா யும் அவருடன் பேசிக் கொண்டே வந்தனர்...

பின் பக்கம் காரீனுள் ஏறியதும்.... குழந்தைகளை மடியில் அமர்த்தி மகிழ்ந்தார்....

"தாத்தா, ஐஸ்கிரீம் வாங்கி தாங்க".....காவ்யா....

" சித்து ஐஸ்கிரீம் கடைக்கு செல்வோம் "என்றார்....

ஹர்சித்தும் அவர்களை ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றான்....அவன் காரை பார்க் செய்து வருவதற்குள் அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்...

அவன் வந்து அமரவும் அவர்கள் கேட்ட ஐஸ்கிரீம் ஆர்டரும் வந்தது....
அது வந்ததும் அவன் இருவரையும் முறைத்ததும்..." தாத்தா"...என்றனர்..

பின்னே!!! ஆளாளுக்குஇரண்டு ப்ளேவர்கள்....

"விடுடா..இன்று ஒருநாள் தானே!!ஏன் இப்படி முறைக்கீறாய்..... நீங்க சாப்பிடுங்க குட்டீஸ்களா!!!...."என்றார்...

"சாப்பிடவாப்பா?"காவ்யா...

"வேண்டாம் னா எந்திருச்சிரமாதிரி தான்... மனதுக்குள் நினைத்துக் கொண்டு"சரி"என்றான்....

அவர்கள் ஐஸ்கிரீமில் மூழ்கியதும் ,"சித்து....உனக்கு அறிவுரை தேவையில்லை...இருந்தாலும் மனது கேட்கல....இது உன் வாழ்க்கை....வீணாக்காதே....உன்னை நம்பி வந்த பெண்ணை துன்புறுத்தாதே....உனக்காக உன் குழந்தைகளுக்காக அவள் வாழ்வையே தியாகம் செய்துள்ளாள்...அனுசியாவை உடனே மறந்து மகிழினியை ஏற்க கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்....ஆனாலும் நீ நிதர்சனத்தை புரிந்து கொள்ள வேண்டும்....மகிழினிக்கும் சாதாரண பெண்ணை போலவே ஆசைகள் இருக்கும்...அவளை புரிந்து நட.....அவளை பார்த்ததில் நல்ல பெண்ணாகவே தெரிகிறாள்.... இரண்டு குழந்தைகளை யும் தன் குழந்தைகள் போலே எண்ணுகிறாள்....எக்காரணத்திற்காகவும் கை ஓங்காதே!!!அது நல்ல ஆண்மகனுக்கு அழகல்ல..... புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழு....இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போறதில்லை...."என்றார்....

"புரிந்து கொண்டேன்பா....இனி மிக கவனமாக இருப்பேன்"....என்றான்...

அவரும் புன்னகைக்க எழுந்து சென்று பார்சல் ஆர்டர் செய்து வாங்கிவிட்டு வர குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்ததும் கிளம்பினர்....

வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் இருவரும் மகிழினியை வந்து அணைத்தனர்....பின்னரே பாட்டியிடம் சென்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.....

ஹர்சித் ஐஸ்கிரீம் பார்சலை அவளிடம் தர அவள் அனைவருக்கும் சிறு சிறு கிண்ணத்தில் போட்டு பரிமாற அனைவரும் மகிழ்ச்சியுடன் உண்டனர்....

"அனைவரும் கிளம்பலாமா!"..... ஹர்சித்

இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம்பா....கார்த்திக்

"இப்போ கிளம்புவோம் கார்த்திக்...இனி ஞாயிறு வருவோம்"

"மாற்றுடை கூட கொண்டு வரவில்லை..எவ்வளவு நேரம் யூனிபார்ம் லேயே இருப்பீர்கள்"...

குழந்தைகள் இருவரும் மகிழினியை பார்க்க அவள்" கிளம்புவோம் ...அப்பா சொல்றது தான் சரி"....என்று சொன்ன பிறகு குழந்தைகளும் கிளம்ப தயாராகினர்....

"நாங்கள் கிளம்புகிறோம்மா... கிளம்புகிறோம்பா...."ஹர்சித்..

ஹர்சித் முன் செல்ல குழந்தைகளை அழைத்து கொண்டு கணேசன் சென்றார்....

மகிழினியோ குழந்தைகளின் பேக்கை எடுத்துக் கொண்டிருந்தாள்....

"நாங்க போய்ட்டு வரோம் அத்தை.... நீங்களும் அடிக்கடி அங்கே வாங்க...வந்து இருங்க" என்றாள்..

"அவன் உன்னை அடித்ததை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை....மன்னித்துக்கொள்மா ...."

"அத்தை‌.....ஏன் இப்படி பெரிய வார்த்தை லாம் சொல்றீங்க..நீங்க எனக்கு எவ்வளவு அருமையான வாழ்க்கை அமைத்துக் குடுத்துறீக்கிங்க...அதுவே போதும்....நாம் இனி இதை எல்லாம் மறந்து சந்தோசமாக இருப்போம்...."

"நீ சொன்ன பிறகு சரிதான்...."

நீங்களும் எங்க கூடவே வந்து இருங்க....இல்லானா நாங்க இங்க வந்து இருக்கோமே...

அது மட்டும் வேண்டாம் மா....நீங்க அங்க இருக்கிறது தான் நல்லது...புரிஞ்சக்கோ...என்ன கட்டாயபடுத்தாத....நீ சந்தோசமாக தான் சொல்ற..ஆனாலும் வேண்டாம் மா....
அப்புறம் நீயும் மகிழ்ச்சியான செய்தி சொல்.நான் வந்து உன்னுடன் கொஞ்ச நாள் இருக்கிறேன்".....என்றுக்கூறிக் கொண்டே வெளியே வந்தனர்....அவளும் காரில் ஏறிக் கொண்டாள்...

பாய்..டாடா....என்று மாறி மாறி குழந்தைகள் சொல்ல கிளம்பினர்...

"கவலைப்படாதே...இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்".....கணேசன்...

கற்பகமும் தலையசக்க வீட்டிற்குள் சென்றனர்....

வீட்டிற்கு வந்து குழந்தைகளை குளிக்க வைத்து உடைமாற்றி விட்டு பால் குடிக்க செய்து விளையாட சொல்லிவிட்டு இரவு உணவை செய்ய ஆரம்பித்தாள்...

ஹர்சித் குழந்தைகளுடன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்...

சமையலை முடித்து வர குழந்தைகளும் விளையாண்டு முடித்து டிவியில் பெப்பா பிக் ஓடிக் கொண்டிருந்தது.....அவன் அலைபேசி க்குள் மூழ்கிருந்தான்....

சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு முடித்ததும் ..."நீயும் குழந்தைகள் அருகே படுத்துக் கொள்....."என்றான்.

ம்ம்ம்.... தலையாட்டினாள்...

கோபமா???

ம்ஹம்ம்‌.. தலையாட்டினாள்...

வாயை திறந்து சொல்லு....

"கோபம் இல்லை..... குழந்தைகளுடன் படுத்து கொள்கிறேன்..... குழந்தைகள் அருகில் இல்லாமல் சரியாக தூக்கமேயில்லை..."என்றாள்....


இருவரும் ஆளுக்கொரு பக்கம் படுக்க குழந்தைகள் நடுவில் படுத்துறங்கினர்...

குழந்தைகள் உறங்கியதும்,
"அம்மா அப்பாவுடன் கண்டிப்பாக ஊருக்கு செல்ல வேண்டுமா??"...

ம்ம்ம்‌.. குழந்தைகளுக்கும் பத்து நாட்கள் லீவு வருகிறது..... அதுவுமில்லாமல் நீங்க அத்தைட்ட அனுப்புறேன்னு சொல்லிருக்கீங்க....

ம்ம்ம்...போய்ட்டு வாங்க...

ம்ம்ம்...சரி...

அப்படியே அவள் தூங்கிவிட்டாள்...
அவளையே பார்த்திருந்தான்... கார்த்திக் மேல் இடக்கையை வைத்து சரிந்து படுத்திருந்தவளின் முகத்தையே ரசித்து கொண்டிருந்தான்....

இவளை நான் காலேஜ் படிக்கும் போது பார்த்திருந்தால் பார்த்ததும் காதல் வந்திருக்குமா???இவள் பின்னால் சுற்றி என் காதலை அவளுக்கு உணர்த்தி என்னை ஏற்றுக் கொள்ள வைத்திருப்பேனா??இவளையை திருமணம் செய்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்???....என்று எண்ணினான்....

விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவளின் வரிவடிவம் தெரிந்தது....
இப்போது பார்வை முகத்தில் இல்லை...
புடவையின் முந்தியை வைத்து இடுப்பு பகுதி தெரியாதவாறு மறைத்திருந்தாள்..
தலை முதல் கால் வரை அவளை ரசித்திருந்தவன் இது சரிவராது என்று மறுபுறம் திரும்பி படுத்து கொண்டான்....சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்...

உள்ளம் வசமாகுமா??? தொடரும்....
 
Last edited:
Top