Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 3 1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 3

மறுநாள் ஹரிஹரன் வழக்கம் போல் வகுப்பிற்குத் தனது வண்டியில் வந்து கொண்டிருந்தான். தெருமுனை திரும்பும் போது... ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த அனிதா... வண்டியில் இருந்தவரிடம் தூக்கு தூக்கு எனப் பரக்க..... அவரும் தூக்கி அவளை முன்னால் வைத்துக் கொண்டதும், அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

மேடம் எங்கையோ போறாங்க போலிருக்கு.... அதுதான் இவ்வளவு சந்தோசம் என நினைத்தவன், ஸ்கூல் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க.... அனிதாவை வைத்து வண்டியில் ஒரு ரவுண்டு மட்டும் அடித்துவிட்டு இறக்கிவிட்டவன், அதே வண்டியில் தன் மனைவி மகனுடன் எங்கோ வெளியில் செல்ல... அனிதா அவர்களையே ஏக்கத்தோடு பார்க்க... மீனா அவளைச் சமாதனம் செய்தது அழைத்துக்கொண்டு சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹரிஹரனுக்குக் கோபமாக வந்தது. சின்னக் குழந்தை தானே அவளையும் அழைத்துக்கொண்டு போனால் என்ன? என நினைத்தான்.

நேற்று அனிதாவை பற்றி தெரிந்ததில் இருந்து.... இப்படி ஒரு குழந்தைக்கு அப்பனாக இருக்க அந்த ராஸ்கலுக்குக் கொடுத்து வைக்கவில்லையே.... அவனால் தானே இந்தப் பிஞ்சின் மனதில் இவ்வளவு ஏக்கம் என நினைத்து அவனுக்குக் கோபமாக வந்தது. அவன் அப்போதும் அனிதாவை பற்றித் தான் நினைத்தானே தவிர மீனாவை பற்றி இல்லை.

அவனுக்கு இப்போது உலகத்தில் அனிதாவின் மகிழ்ச்சி மட்டும் தான் முக்கியம். அவள் முகம் வாடினால் அவனால் தாங்க முடியவில்லை....

சிறிது நேரத்திலேயே அனிதா அங்கு வந்தாள். சற்று நேரம் முன்பு இருந்த வருத்தம் இல்லாமல்... துள்ளிக்கொண்டு வந்து அவன் மடியில் அமர்ந்தாள்.



அவளை மிருதுவாக அணைத்துக்கொண்டவன் “அனி குட்டி வண்டியில ரவுண்டு போனீங்களா.... என்னைக் கூடக் கவனிக்கலை....”

ஹரி கேட்டதும் தன் கண்களைப் பெரிதாக விரித்தவள் “நீங்க பார்த்தீங்களா சார். அது என்னோட மாமா, அவங்க யார் வீட்டுக்கோ போறாங்க. என்னை மட்டும் விட்டுட்டு போய்டாங்க.” என்றாள் குறையாக.

“அனி குட்டிக்கு பைக்ல போகப் பிடிக்குமா....நாம ஒரு ரவுண்டு போகலாமா....” என்றதும், துள்ளிக்கொண்டு எழுந்தவள் “வாங்க என்று அவன் கைபிடித்து இழுக்க....

“இப்ப கிளாஸ் இருக்கு... கிளாஸ் முடிஞ்சதும் போகலாம் சரியா....” என்றதும், சமத்தாகக் கேட்டுக்கொண்டாள்.

வகுப்பு முடிந்து மாணவர்கள் சென்றதும், அவளைப் பைக்கில் முன்புறம் அமர வைத்தவன், தானும் அமர்ந்து அதை ஒட்டிக்கொண்டு சென்று, இரண்டு மூன்று ரவுண்டு அடித்துக் கொண்டு வந்து அவள் வீட்டின் முன்பு இறக்கி விட.... மாடியில் இருந்து மீனா இவர்களைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

எப்போதும் மகள் வரும் நேரம் ஆகியும் இன்னும் வரவில்லையே என நினைத்து மாடியில் இருந்தே அவள் எட்டி பார்க்க.... மகளை வைத்து ஹரி வண்டியில் செல்வதைப் பார்த்தாள். சொல்லாம... எங்க போறாங்க? என்று பதற்றத்துடன் அவள் பார்க்கும் போதே... ஹரி வண்டியை திருப்பிக்கொண்டு வந்தான்.

ஓ ரவுண்டு அடிக்கிறங்களா... என நினைத்தவளுக்குத், தன் மகளின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்தும் நெஞ்சம் விம்மியது. அவளின் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே என வருத்தபட்டாள்.

அப்போது அங்கே சந்தோஷமாகத் துள்ளிக்கொண்டு வந்த அனிதா “அம்மா சார் கூடப் பைக்ல ரவுண்டு போனேன்.” என்றாள் கண்கள் மின்ன....

“நானும் அதைப் பார்த்தேன்.” மீனா சொல்ல....

“பார்த்தியா மா.... ரொம்ப ஜாலியா இருந்தது.” மகள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க....

“அவரை ரொம்பத் தொந்தரவு பண்றியா நீ..... சார் தப்பா நினைச்சுக்கப் போறார்.” என்றதும்,



“நான் கேட்கவேயில்லை.... சார் தான் கூடிட்டு போனார்.” என்றாள்.



மாலையில் அவள் அண்ணன் குடும்பம் வெளியே செல்லும் போது ஹரி அவர்களைக் கடந்து சென்றதை அவள் பார்த்திருந்தாள். அனி வருத்தப்பட்டதைக் கவனித்ததால் தான் அவனே அழைத்துச் சென்றிருக்கிறான் எனப் புரிந்தது.

நாளுக்கு நாள் பைக்கில் செல்வது நீண்டு கொண்டே போனது. முதலில் தெருவை வட்டம் அடித்தவர்கள் அடுத்த நாள் இரண்டு மூன்று தெருவை சுற்றிவிட்டு வந்தனர். அதற்கு அடுத்த நாள் இன்னும் கொஞ்ச அதிகத் தூரம்....



இப்படியே அந்த வார இறுதியில், “சார் கூட வெளிய போறேன். ஒரு மணி நேரம் கழிச்சு சார் கொண்டு வந்து விடுவாறாம்.” என்று அனிதா வந்து நிற்க.... மீனா அவளை முறைத்தாள்.
“ப்ளீஸ் மா....” அனிதா கெஞ்ச....

“என்னப்பா இது?” மீனா தன் தந்தையைப் பார்க்க....

“நீ முதல்ல அவளை அனுப்பு. நாம பிறகு பேசலாம்.” என்றதும், அனிதா துள்ளிக்கொண்டு கிளம்ப....

“ஏய் ! நில்லு இப்படியே போவியா....” என்றவள், மகளுக்கு முகம் கழுவி பவுடர் போட்டு... வேறு நல்ல உடை எடுத்து மாற்றி விட.... அந்த உடைக்குப் பொருத்தமான பூனை குட்டி கிளிப்பை கொண்டு வந்து அனிதா மீனாவிடம் கொடுக்க... அவள் தலைவாரி அதையும் போட்டு விட.... தன் புது ஷுவை எடுத்துப் போட்டுக்கொண்டு அனிதா குஷியாகக் கிளம்பி சென்றாள்.

“நீங்களும் அவளோட போய் எங்க போறாங்கன்னு கேட்டுட்டு வாங்கப்பா....இனி அடிக்கடி இப்படிக் கூடிட்டு போக வேண்டாம்ன்னு சொல்லுங்க.” என்று தன் தந்தையை அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்றதும் மீனா மாடியில் இருந்து பார்க்க.... தளிர் நடை நடந்து வந்தவளை விழி எடுக்காமல் பார்த்து ரசித்த ஹரி, அவள் அருகில் வந்ததும், அவளைத் தூக்கி கொண்டவன் “சூப்பரா இருக்கீங்க குட்டி.” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, வண்டியின் முன்பக்கம் அவளை உட்கார வைத்துக்கொண்டான்.

விஷ்வம் அவனிடம் எதோ கேட்க... அவனும் அதற்குப் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.



தெருமுனைக்கு வந்த போது, “ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க....” என அனி கத்த....என்னவோ எதோவென்று அவன் உடனே வண்டியை நிறுத்த....



அவர்கள் வீட்டின் முன்பு நின்றிருந்த அஸ்வத்திடம், “நாங்க வெளிய போறோமே.... ரொம்பத் தூரம் போறோம் இல்ல சார்....” என அனி அவனைப் பார்க்க... முறுவலுடன் ஆமாம் என்று தலையசைத்தவன், வண்டியை கிளப்ப... “பாய் அஸ்வத்....” என்று உல்லாசமாய்க் கை அசைத்தபடி செல்பவளை.... ரதியும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

சிறிது நேரம் சென்று வந்த விஷ்வம் “அவர் ப்ரண்ட் எதோ புதுசா ஹோட்டல் திறந்திருக்காராம். அங்க குழந்தைகளுக்காக நிறைய விளையாட்டு எல்லாம் வச்சிருக்காங்களாம். கொஞ்ச நேரம் விளையாட வச்சி சாப்பிட்டதும் கூடிட்டு வரேன்னு சொன்னாருமா....”

“பாவம், அனியும் எங்க போறா சொல்லு.... இந்த வீட்டை விட்டா உங்க அண்ணன் வீடு... இல்லைன்னா செஸ் கிளாஸ்.... உனக்கு எங்கயும் அவளைக் கூடிட்டு போக டைம் இல்லை.... குழந்தை ஒரு நாள் தான் சந்தோஷமா இருந்திட்டு வரட்டுமே.....” என்றார் வாஞ்சையாக.


“அதெல்லாம் சரி தான். ஆனா அவங்க வீட்ல என்ன நினைப்பாங்க? அவங்களுக்குத் தொந்தரவா இருக்காதா....”

“ஹரியோட மனைவி உயிரோட இல்லையாம்.... அவங்களுக்குக் குழந்தையும் இல்ல போலிருக்கு. தனியா தான் இருக்காறாம். இன்னைக்குத் தான் கிருஷ்ணன் சொன்னான். அது தான் அப்புறம் சொல்றேன்னு சொன்னேன். குழந்தை முன்னாடி சொன்னா அவ அப்படியே போய் அவர்கிட்ட சொல்வா... அவ வறுத்தபடுவார் இல்லையா....”

தந்தை சொன்னதைக் கேட்டதும் மீனாவுக்கு வருத்தமாக இருந்தது. உலகத்தில் சந்தோஷமான மனிதர்கள் என்றும் யாரும் இல்லையா... எல்லோருக்குமே எதாவது ஒரு துன்பம் இருக்கத் தான் செய்கிறது. தனக்காவது அனி இருக்கிறாள். பாவம், அவருக்கு யாருமே இல்லையே எனக் கவலை கொண்டாள்.

அனிதாவோடு ஹோட்டல் சென்ற ஹரிஹரனை அவன் நண்பன் தேவ் வந்து வரவேற்றான்.

“வா டா ஹரி.....இப்ப தான் வழி தெரிஞ்சுதா....” என்றவன் அப்போது தான் அனிதாவை கவனித்து விட்டு “ஹாய் ஏஞ்சல்....” என்று கைகொடுக்க.... அனிதாவும் அவனுக்குப் புன்னகையுடன் கை கொடுத்தாள்.

அவள் கையைப் பற்றி மென்மையாகக் குலுக்கிய தேவ் “இவங்க தான் நீ இங்க வர காரணமா....இல்லைனா வரமாட்டியே....” என்றதும், புன்னகைத்த ஹரி “ஆமாம், அனிதாவை கூடிட்டு எங்கையாவது வெளிய போகணும்ன்னு இருந்தது. எங்க போறதுன்னு தெரியலை... சரி இங்க வரும்வோம்ன்னு வந்தேன்.” என்றான்.

அனிதாவை முதலில் அங்கே இருந்த சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் விளையாட விட்டு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
“எப்படிப் போகுது உன் பிஸ்னஸ்?”



“ம்ம்... எப்பவும் போலத்தான் தான். உன்னோட இந்தப் புது ஹோட்டல் எப்படி நல்லா போகுதா?”

“இப்ப தானே ஆரம்பிச்சிருக்கோம் கொஞ்ச நாள் போனாத்தான் தெரியும். தீப்தி உன்னைப் பார்க்கனும்ன்னு சொல்லிட்டே இருக்கா.... மரியாதையா அடுத்த வாரமாவது வீட்டுக்கு வா டா....”

“சரி வரேன்...”

“ஆமாம் யாருடா இந்தப் பொண்ணு....”

“என் ஸ்டுடென்ட் டா.... ஜெஸ் கிளாஸ் வரும் போது என்னோட ஒட்டிகிட்டா.... எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிடுச்சு. அவளோட இருந்தா எனக்கும் மனசு அமைதியா இருக்கு....”

“எதுக்கு டா இப்படி ஊரான் வீட்டு பிள்ளையைத் தூக்கி வச்சிட்டு இருக்க... உங்க அம்மா சொல்ற மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா உனக்கே இப்படி ஒரு குழந்தை வருமே....”

 
???
மீனா நிலை ஹரிக்கும் ஹரி நிலை மீனாக்கும் தெரிஞ்சாச்சு......
இப்போதைக்கு அனிதா தான் முக்கியம்......

மீனா அப்பா ஹரி அனிதா உறவு இருக்கட்டும்னு நினைக்கிறார்.....
ரதி???
 
Last edited:
Top