Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 10

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
heyyyyyyyyyy ladiesssssss and girliesssssssss.. :love: :love: :love: :love: :love:

thankssssssssssss alot.........

share your viewssss

here comes the next update of Raja Rani ? ❤ ?

---------------------------------------------------------------------

காதல் 10:



புயலின் வேகத்திலும் புலியின் சீற்றத்தோடும் உள்ளே நுழைந்த ராஜ் நந்தனையும் அவன் பின்னால் கலவரமான முகத்தோடு வந்த ராஜ தீபனையும் பார்த்தக் குடும்பத்தாருக்கு ஒன்றும் விளங்கவில்லை.



ஹாலுக்குள் நுழைந்தவுடனேயே தீபனின் கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டான் ராஜா. டைனிங் டேபிளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த வைரம் இதைக் கண்டு பதறி, “ராஜா என்னாச்சுடா…?” எனக் கேட்க,



டீவி பார்த்துக் கொண்டிருந்த அப்பாவும் மகளும் ராஜாவின் செயலில் அதிர்ந்து போய் எழ,



தீபனோ, “அண்ணா சாரிண்ணா…..இனி செய்ய மாட்டேன்…ப்ளீஸ்ணா….” எனக் கெஞ்ச



“ஷட் அப் ராஸ்கல்…..! இப்போ ஏன் டா இப்படி செஞ்ச…” என மீண்டும் தீபனை அடிக்க,



வைரமோ, “ராஜா என்னாச்சுடா…. தீபா என்னடா செஞ்ச…. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டா… பொறந்த நாள் அதுவுமா அடிக்காதப்பா ப்ளீஸ்…” எனக் கண்ணீரோடு கெஞ்ச,



“பொறந்த நாள். ப்ளடி…….. அதை சாக்கா வைச்சு என்ன செஞ்சான்னு தெரியுமாம்மா…?” என சிவந்த முகத்தோடு கர்ஜித்தான்.



“பர்த்டேக்கு டிரிட்னு சொல்லி ப்ர்ண்ட்ஸோட சேர்ந்து குடிச்சிட்டு ஒரு பொண்ணை கிண்டல் செஞ்சு…… போலிஸ் ஸ்டேஷன் போய் நான் இவனை கூட்டிட்டு வரேன்…….” என்றான் ஆத்திரத்தில் இம்மியளவும் குறையாமல். ராஜா எப்போவுமே இப்படித்தான்.அன்பென்றாலும் சரி ஆத்திரமென்றாலும் சரி அவனுக்கு அதிகம் தான்.



அன்பு கொண்டவர்களிடம் அண்டார்டிகா பிரதேசத்தைப் போல் அவர்களை உறைய வைப்பவன், கோபம் என்று வந்துவிட்டால் நெருப்பு பிழம்பாய் வெறுப்பையும் ஆத்திரத்தையும் உமிழ்வான்.



ராஜ்நந்தனைப் பொருத்தவரை எல்லாமே அதீதம்தான்.

அதீதங்கள் என்றுமே ஆபத்தானவை தானே..!!



தீபனின் பிறந்த நாள் பார்ட்டிக்காக அவனது நண்பர்கள் டிரிங்க்ஸ் பார்ட்டி கேட்க, தீபனும் அதற்கான ஏற்பாடுகள் செய்துக் கொடுத்து அவனும் கொஞ்சம் குடித்து விட, அவனது நண்பர்கள் எல்லை மீறிக் குடித்து ரோட்டில் போவோர் வருவோரிடம் எல்லாரிடமும் வம்பு செய்ய, ரோந்து வந்த போலிஸ் அவர்களை பிடித்துக் கொண்டு போய் விட, விசயம் அறிந்த ராஜாவுக்குக் கோபம் உச்சத்தைத் தொட்டது.



ராஜாவைப் பொருத்தவரையில் என்ன தான் பணமிருந்தாலும் இந்த குடி, போதை, சிகரெட் போன்ற பழக்கங்கள் எல்லாம் சுத்தமாய் பிடிக்காது. அவனது தந்தைக்கு இப்பழக்கமில்லாததால் அவனும் அவரைப் பின்பற்றி ஒழுக்கமானவனாய் இருந்தான்.



இந்த சோசியல் டிரிங்கர் போன்ற பசப்பு வார்த்தைகள்பால் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. அதெல்லாம் குடிகாரர்கள் கள்ளச்சாராயத்தைக் கலர் டின்களில் திருட்டுத்தனமாய் அல்லாது கௌரவத்துக்காக குடிக்கச் செய்த நாகரீக ஏற்பாடு.



ஆதலால் கல்லூரி காலத்தில் கூட நண்பர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் கூட அவன் மதுவை தொட்டதெயில்லை. தனது தம்பி மது குடித்ததே ராஜாவுக்குக் கோபமென்றால் அவன் போலிஸ் ஸ்டேஷனில் இருந்துக் கொண்டு போன் செய்யவும் அது பெருங்கோபமாயிற்று.



தனது தம்பி போலிஸ் ஸ்டேஷனில் அதுவும் படிக்கும் பையன் இருப்பதை அவனால் என்ன முயன்றும் ஜீரணிக்க முடியவில்லை. வண்டியில் வரும்வரை அடக்கி வைத்திருந்த அனைத்து கோபத்தையும் தனது ஒற்றை அடியில் காட்டினான் ராஜ்நந்தன்.



போலிஸ் ஸ்டேஷன் சென்றதும் பயந்து போன தீபன் தந்தைக்குத் தெரிந்தால் திட்டுவார் என பயந்து தமையனை அழைக்க, அவனோ தந்தைக்கு மேல் இருப்பான் என தீபன் கிஞ்சிற்றும் நினைக்கவில்லை.



நல்ல தமையன் தந்தையைப் போல் தானே..!!



நடந்ததை ராஜா சொல்லி முடிக்க, தீபன், “சாரிம்மா…சாரிப்பா…நான் யாரையும் கிண்டல் செய்யல… என் ப்ர்ண்ட்ஸ் தான்……” எனச் சொல்ல



“அப்படி பட்ட ப்ர்ண்ட்ஸை வைச்சிக்கிட்டது உன் தப்புடா… ராஸ்கல்… படிக்கிற வயசில குடிக்கிற நீ……” என சீற



அவனது கோபத்தில் நியாயம் இருப்பதால் வைரம் அமைதியாய் இருந்து விட்டார். அவருக்குமே மகனது செயலில் வருத்தம் தான். தனது வளர்ப்பா இப்படி என..



சுந்தரமோ, “அடிச்சு திருத்த முடியாது விடு ராஜா….. இவனுக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு….” என அவரும் சீற, கீர்த்தியோ பயந்த விழிகளில் கண்ணீர் பாத்திக் கட்டியிருக்க நிற்க,



“கீர்த்தி உள்ளே போ…” என அதட்டினான் ராஜா.



“அண்….ணா..” என அவள் திக்க,



“ஐ சே யூ டூ கோ….போ” என அவனது சத்தத்துக்குக் கட்டுப்பட்டு அவள் அறைக்குச் செல்ல, அந்த சத்தம் தான் ஒரு யுத்தம் நடைபெற காரணமாய் அமைந்தது.



நந்தனின் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த ராஜகோபாலும் வைதேகியும் வர,



தீபன் அப்போதுதான், “அண்ணா… இப்படில்லாம் ஆகும்னு எனக்குப் ப்ராமிஸா தெரியாதுண்ணா….. நான் எந்த தப்பும் செய்யல..” எனக் கண்ணீரோடு மன்றாட,



“தெரியாத நீ எந்த ஈர வெங்காயத்துக்குடா குடிச்ச….. டிரிங்க்ஸ் பார்ட்டி வைக்கிற அளவுக்கு பெரிய மனுசனாயிட்ட நீ….. காலேஜ் சேர்ந்து ஒரு எக்சாம் கூட எழுதி முடிக்கல…. பாடம் கத்துக்காம இப்படி குடிக்கவும் பொறுக்கித்தனம் செய்யவும் தான் கத்துக்கிட்டியா டா….” என அவனை மீண்டும் ஒரு அடி அடிக்க,



“நிறுத்துடா…” என மேல் மூச்சு கீழ மூச்சு வாங்க கத்தினார் ராஜகோபால்.



“படிக்கத் துப்பில்லாம யாரும் எடுக்காத குருப் எடுத்துப் படிச்ச நாயீ நீ… என் பேரனை குறை சொல்றீயா..?” என நடந்ததெதுவும் அறியாது ராஜகோபால் நந்தன் தீபனை அடித்த ஒன்றை மட்டும் கண்டு விட்டு எகிற,



எப்போதும் இருக்கும் கட்டுப்பாடு கட்டுப்பாடற்று போய்விட அதீத கோபத்தில் இருந்த ராஜாவும் தாத்தாவின் பேச்சில் கட்டுப்படாமல் கத்தத் தொடங்கினான்.



“வாயை முடுங்க தாத்தா… இவன் என்ன செஞ்சான் தெரியுமா…?” எனக் கத்த , நிலைமையின் தீவிரம் உணர்ந்த சுந்தரம் ,



“அப்பா…இவன் ப்ர்ண்ட்ஸோட சேர்ந்துக் குடிச்சிட்டு கலாட்டவாகி போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் பிரச்சனை ஆகியிருக்கு…. அதனால தான் ராஜா கண்டிக்கிறான்…. அவனை எதுவும் சொல்லாதீங்க…” என மூத்த மகனுக்குப் பரிந்துப் பேச



பேரனின் செய்கையில் பிடித்தம் இல்லாமல் இருந்தாலும் கூட ராஜாவின் முன் அவனை விட்டுக்கொடுக்க முடியாமல், “ஊர் உலகத்துல யாரும் செய்யாததையா என் பேரன் செஞ்சான்….? வயசு பிள்ள கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்… அதுக்காக இவன் இப்படி மாடு மாதிரி அடிப்பான் நீயும் உன் பொண்டாட்டி கூடச் சேர்ந்து வேடிக்கைப் பார்க்கிறியா சுந்தர்…. என்னடா நீயும் உன் பொண்டாட்டி மாதிரி பெத்தவனை விட வளர்த்தவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சீட்டீங்களா…?” என கேட்ட நொடி அனைவரும் அவரை அதிர்ந்து நோக்க



“என்னங்க… சும்மா இருங்க…… சின்னவன் செஞ்சது தப்புதான்…” என வைதேகி சொல்ல



“அப்பா…… என்னப்பா……” என சுந்தரமும் தந்தையைத் தடுக்க முயற்சி செய்ய



“என்னடா… என்ன அப்பா…. என்ன வைதேகி… சின்னவன் தப்பு செஞ்சா.. அதைக் கேட்க அவன் அப்பா அம்மா இருக்காங்க… அநாதை கழுத.. இவன் எப்படி என் பேரனை… அதுவும் ராஜகோபாலோட ஒரே வாரிசை அடிக்கலாம்…..” என உண்மையைப் போட்டு உடைக்க,
 
வைரம் , “மாமாஆஆஆ” என அலறிவிட



“நீ சும்மா இரு…. உன்னால சரியான நேரத்துக்கு ஒரு புள்ளையைப் பெத்துக் கொடுக்க முடிஞ்சிருந்தா இந்த பயலைத் தத்தெடுக்க வேண்டியதா போயிருக்காது… இன்னிக்கு என் குடும்ப வாரிசு இந்த அப்பன் ஆத்தா பெயர் தெரியாத வெறும்பயல்கிட்ட அடிவாங்குமா….?” என விசம் பொதிந்த வார்த்தைகளை உமிழ, அதன் வீரியம் தாங்காத ராஜா,



“தாத்தா…. கோவத்தில கண்டபடி பேசாதீங்க… அவ்வளவுதான்..” எனக் கை நீட்டி எச்சரிக்க



“என்னடா கோவம்….. நான் நிஜத்தை தான் சொல்றேன்… நீ அநாதை தான்……… எந்த குலத்தில எவளுக்குப் பொறந்தியோ……. சீ…. என்னை தாத்தான்னு உன் வாயால இன்னொரு வாட்டி சொன்ன… தொலைச்சிருவேன் டா..”



தீபனோ தனது தவறை உணர்ந்தவன் தாத்தா அண்ணனை மோசமாகப் பேச முடிவதை தாங்காமல், அதுவும் அவன் பொருட்டு இப்படி பேசுவது பிடிக்காதவன் ,



”தாத்தா… தப்பு என் மேல… அவனை எதுவும் சொல்லாதிங்க.” என வக்காளத்து வாங்க,



“இப்படி இருக்கறதால தான் டா உன்னோட எல்லாத்தையும் அவன் பறிச்சிக்கிறான்…. இந்த வீட்டோட மூத்த பிள்ளை நீதான்.. அவன் இல்ல.. முதல்ல வாயை மூடிட்டு இரு…” எனத் தீபனைத் திட்டினார்.



ராஜ்நந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவனால் கிரகிக்க முடியவில்லை. அவனால் முதலில் நம்பமுடியவில்லை. நம்பினால் தானே அது குறித்து சிந்திக்க முடியும்.



சிந்தை அடைத்திருக்க, சிந்தனைகள் தடைப்பட்டிருக்க அதிர்வலைகள் முகமெங்கும் பரவ, பசுவைத் தேடும் கன்றென அவன் தாயைப் பார்க்க,



‘எந்த ரகசியம் தான் சாகும் வரையில் மகனுக்குத் தெரியக்கூடாதென நினைத்தாரோ அது உடைந்து விட’ வைரம் உடைந்தழ ஆரம்பித்தார்.



சுந்தரத்துக்கோ மகனையும் மனைவியையும் காண சகிக்கவில்லை. தந்தையையும் தடுக்கவியலா கையறு நிலையில் நின்றவர் மகன் நின்ற நிராதராவான நிலை நெஞ்சை உலுக்க,



“அப்பா.. போதும்பா… நிறுத்துங்க…… சும்மா எதையாவது உளறாதீங்க…” எனத் தந்தையை நிறுத்த



இத்தனை நாள் ராஜாவின் மீது கொண்ட கோபமனைத்தையும் கொட்ட கிடைத்த நேரத்தை வீண் செய்ய விரும்பாத ராஜகோபால், “என்னடா ரோட்ல கிடந்தவனுக்காகப் பெத்த அப்பனையே எதிர்த்துப் பேசுறியா…?”



“அப்பா… நீங்க சொல்லுங்க…. நான் உங்க பையன் தானே இவர் கோவத்துல தானே சொல்றார்…” என ராஜா தனது உரிமையை நிலை நாட்டிடும் வேகத்தில் கேட்க,



“சொல்லுடா… இவன் உன் புள்ளன்னு உன் அம்மா மேல சத்தியம் பண்ணு பார்ப்போம்……” என மகனுக்குக் கிடுக்குபிடிப் போட்டார் ராஜகோபாலன்.



“அவன் என்னடா சொல்றது…. இவங்களுக்கு கல்யாணம் ஆகியும் ரொம்ப வருசமா புள்ள இல்ல.. அதனால தான் உன்னைத் தத்தெடுத்தாங்க.. போதுமா.. நீ ஒரு அநாதை.. ஊர் பேர் உன்னை பெத்தவங்க பேரு கூடத் தெரியாத அநாதை போதுமா… நீ என்ன தைரியம் இருந்தா என் வீட்டு வாரிசை அடிப்ப… எல்லாம் இவங்க கொடுத்த இடம்…..” என சீற



ராஜ்நந்தன் கொஞ்சம் கொஞ்சமாய் உண்மையை உணரத் தொடங்கினான். உணரத் தொடங்கிய நொடி உள்ளமும் உடலும் உஷ்ணமாய் கொதிக்கத் தொடங்கியது. அவனால் அந்த உண்மையை ஏற்கப் பிடிக்கவில்லை.



பெரும் சுழலில் சிக்கியவன் ஒரு துரும்பாவது பற்றிக் கொள்ளக் கிடைக்குமா எனக் கடைசி நம்பிக்கையோடு பார்ப்பது போல், அவன் தன் தாயை நோக்கி, “அ…ம்..மா…நா…ன் உ…ன் பு…ள்ள..இ..ல்ல..யா…” என வார்த்தைகளை நெஞ்சம் வலிக்க வலிக்கக் கேட்க



வைரம் ‘இல்லை’ என்பதாய் தலையசைத்து விட்டு கதறியழ, இருந்த ஒரே பிடிப்பும் இல்லாமல் போக அந்த ஆண்மகன் வேரொடிந்து போன மரமானான். ஒரு வேளை வைரம் பொய்யாக ஆம் என்று கூறியிருந்தால் கூட அவன் நம்பிக்கை இழந்திருக்க மாட்டான்.



சுந்தரத்துக்கு வைரம் அத்தை மகள். இருவருக்குமே ஒருவர்பால் ஒருவர் அன்பிருந்தாலும் பெற்றோர் விருப்பப்படியே திருமணம் செய்தனர். ஆனால் திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க, ஒரு ஜோசியரின் ஆலோசனைப்படி ஆசிரமத்திலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர். ராஜகோபாலுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. வைரம் ஒரு வேளை இவரது தங்கை மகளாக இல்லாமல் போயிருந்தால் மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்திருப்பாரோ என்னவோ..? ஆனால் தங்கை மகளாகப் போன காரணத்தால் இந்த சுவீகாரத்துக்கு ஒத்துக்கொண்டார்.



நந்தன் வைரத்தின் வாழ்க்கையைப் பிரகாசமைடையச் செய்தான். இரண்டு மாதக்குழந்தையாய் அவர்களிடம் வந்தவனை அவர்கள் பெற்ற மகனாகத்தான் வளர்த்தனர். சுந்தரமும் வைரமும் ராஜா ‘அம்மா அப்பா’ என்றழைத்த நாள் அடைந்த உவகைக்கு அளவே இல்லை. இத்தனை நாட்கள் சமூகத்தில் பட்ட கஷ்டங்கள், கூரிய பார்வைகள் அனைத்தும் தவிடுபொடியான உணர்வு.



அதன் பிறகு இரண்டு மகவுகள் வைரத்தின் மணி வயிற்றில் உதித்து அம்மா என்றழைத்த போது கூட முதல் முதலாக நந்தன் அழைத்த அந்த சொல்லுக்கு ஈடாகவில்லை. நந்தன் மிக மிக பொசஸிவ். தாயிடம் அவன் எப்போதுமே குழந்தையாகத் தான் இருப்பான். அப்படிப்பட்டவனுக்கு இது பேரிடியாய் அமைந்தது. எப்போதுமே ராஜாவுக்குக் கிடைக்கும் பாசம், மரியாதை அனைத்தையும் கண்டு தனது சொந்த ரத்தமான தீபனுக்குக் கிடைக்கவில்லையே என ராஜகோபாலுக்கு வருத்தம் அதிகம். அந்த வருத்தம் காலப்போக்கில் ராஜாவின் மீது வெறுப்பாய் மாறியது.



அவனை நொகடித்ததுப் பத்தாது என்று நினைத்தாரோ என்னவோ நொடிந்து போயிருந்தவனை, “இப்போ தெரியுதா உன்னோட தகுதி என்னன்னு…?….எதுக்காக பொறந்தியோ.. நல்ல பொறப்போ என்னமோ…. உன்னை பெத்தவ எப்படி பெத்தாளோ” என்று வார்த்தைகளில் வஞ்சம் தொனிக்கக் கேட்க,

சுந்தரத்துக்கும் கோபம் வந்தது, “அப்பா மரியாதையா பேசுங்கப்பா…உங்க வயசுக்கு இது அழகா…?” என எரிந்து விழ,



யாரென அறியாவிடினும் தனது பிறப்புக்குக் காரணமானவளை கொச்சைப்படுத்துவது பிடிக்காதவன் ராஜகோபாலனின் சட்டையைப் பிடித்து,



“இதுக்கு மேல பேசினா அவ்வளவுதான் உனக்கு மரியாதை…. என்னையோ என்னைப் பெத்தவளப் பத்தி பேச உனக்கு உரிமையில்ல….” என்று கர்ஜிக்க



“டேய்… அநாதைப் பய நீ… உனக்கு ஒரு அடையாளம் இல்ல… இன்சியல் இல்லாதவன் நீ.. என் சட்டையைப் பிடிக்கிற…..” என அவனைத் தள்ள, அவரது வயதுக்கு அவனை தள்ள முடியாமல் போக ராஜா அவரை உதறித் தள்ள அப்படியே சோபாவில் அவர் விழ,



தன் மேலயே கைவைத்துவிட்டான் என்ற ஆத்திரத்தில், “என்னையேவா தள்ளுற நீ…. அவ்வளவு துணிச்சலடா உனக்கு.. பாருங்க… நீங்க வளர்த்த கிடா என் மார்ல முட்டுறத……” என்று மகனையும் மருமகளையும் பார்த்து சொன்னவர் ராஜாவைப் பார்த்து



“முதல்ல வீட்டை விட்டு வெளியே போடா……. போ.. இனி இந்த வீட்டு வாசப்படியை நீ மிதிக்கக் கூடாது…..” என்று உத்தரவிட ,



அந்த நொடி தன்னை முழு அநாதையாக உணர்ந்தான் ராஜ்நந்தன்.



“அப்பா….. எதுக்கு இப்படி ப்ரச்சனை செய்றீங்க…நீங்க…விடுங்க….”



“என்னங்க…..நீங்க…. அவனும் நம்ம பேரன் தானே… இப்படி பேசாதீங்க…. ராஜா நீ உன் ரூம்க்கு போய்யா….” என வைதேகி சொல்ல



வைரமோ, “மாமா….. அவனை அப்படில்லாம் சொல்லாதீங்க……. என்னால தாங்க முடியல…..ராஜா….” எனப் பரிதவிப்போடு மகனைப் பார்க்க, அவனோ கண்ணில் நீர் வழிய வாசலை நோக்கி நடந்தான்.



வைரம் அவன் பின்னால் ஓட, சுந்தரமும் மகனின் பின் செல்ல,



“சுந்தர்…. நீ போனா… எனக்கு கொள்ளி போட பிள்ளை வேண்டாம்னு ஒதுக்கி வைச்சிடுவேன்…….. அநாதை பயப் பின்னாடிப் போன உன்னை பெத்த நான் அநாதை பொணமா தான் போவேன்….. அப்படி அவன் தான் முக்கியம்னா நீ உன் பொண்டாட்டியோட போ” என ராஜகோபால் மகனை எச்சரிக்க



“உன் பொண்டாட்டி இனிமே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது…. அவன் பின்னாடி போனா…”

சுந்தரம் பெற்று வளர்த்த தந்தையின் பேச்சை மீறவியலாது அப்படியே நிற்க, வைரத்தின் கையையும் அவர் பிடித்து நிறுத்தினார்.



“விடுங்க என்னை….. அவன் போறாங்க… என் புள்ளப் போறான்…” என அழ



“வைரம்……… அப்பாவோட கோவத்தை கிளறாத.. விடு… அவனை சமாதானம் படுத்திக்கலாம்……. சொன்னா கேளுமா…” எனத் தடுத்து விட, அந்த தெருவின் முனையில் நின்ற நந்தன் ஒரு முறை அவனது வீடாக இருந்த வீட்டைத் திரும்பிப் பார்க்க ஒரு ஜீவன் கூட இல்லை என்பதை ராஜாவால் தாங்க முடியவில்லை.


ஒரு மனிதனை செயலிழக்கச் செய்யத் தான் நேசிக்கப்படவில்லை புறக்கணிப்படுகிறோம் என்ற உணர்வே போதும். இங்கே ராஜா தனது குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டான்.



அவனது மனச் செல்களின் ஒவ்வொரு துவாரமும் யாராவது அவனுக்காக அவன் பின்னால் வரமாட்டார்களா என ஏங்கிற்று.

அந்த ஆறடி ஆண்மகன் அன்புக்காய் ஏங்கினான்.



அப்படியே செல்கள் அனைத்தும் மரத்துப் போக நடந்தவன் ஒரு பஸ் ஸ்டாண்டில் போய் அமர்ந்தான். போகும் பேருந்துகளைப் பார்த்தவனுக்கு தான் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப் போகிறோம் என ஒன்றும் தெரியவில்லை. கையில் இருந்த அலைப்பேசியை அடிக்கொருதரம் திரும்பிப் பார்த்துத் தன்னை யாராவது தேடுகிறார்களா எனப் பார்த்தான்.



தூரத்தில் தெரிந்த இருளைப் போல் அவனது வாழ்வும் இருக்க, மனம் வலித்தது. ஒரு சம்ராஜியமே அழிந்து போக ஒரு போர் போதும் என்பதை போல் அவனது வாழ்வின் அனைத்து சந்தோசங்களும் அழிந்து போக அந்த ஒரு நாள் காரணமாய்ப் போனது.



ஒரு பூவுக்குக் கூட தான் பூத்த செடி இதுதான் என அடையாளம் இருக்கும். எறும்புக்குக் கூட புற்று இருக்கும். ஆனால் அவனுக்கோ அவனது அடையாளம் என்பதே இல்லை. வெறும் மனிதனாக, அதுவும் இத்தனை ஆண்டுகள் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து ஓர் அடையாளத்தோடு முகவரியோடு சமூகத்தில் இருந்து இப்போது அனைத்துமே பொய் என்பதை அவனால் தாங்கவியலவில்லை.

நமக்கு யாரும் இதுதான் உன் குடும்பம் எனச் சொல்லிக் கொடுப்பதில்லை அல்லவா..? பிறந்த கணம் முதல் நாம் நம்புவது நம்மை பெற்றவர்களைத் தானே..!!



இன்று அந்த நம்பிக்கை பொய்யாய் போன வலி ரணமாய் வலித்தது. அதை விட அதிகமாய் வீட்டை விட்டு வந்தும் கூட இன்னும் யாரும் அவனைத் தேடாதது அவனை நரகத்தில் தள்ளியது.



வலிக்க வலிக்க நீ ஒரு அநாதை. உனக்கான இடம் இதில்லை என்று ராஜகோபால் சொல்லிய சொற்கள் அவனது நெஞ்சை அறுத்தன.



விசத்தை விட மிகவும் கொடியவை வீரியம் கொண்ட வார்த்தைகள் அன்றோ? ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது எத்துனை தூரம் உண்மை..? இன்று அநாதை என்ற ஒற்றைச் சொல் ராஜாவை உயிரோடு கொன்றது.



தன்னைத் தேடக் கூட ஒரு ஜீவனில்லையா? தான் பிறக்கும்போதும் தனிதான். இனி இறக்கும்போதும் தனிதானா? எனக்காக யாருமே இல்லையா?ஒரு உயிர் கூட எனக்காய் எனக்காக மட்டும் துடிக்கவில்லை? என்று எண்ணங்கள் ஏவுகணையின் ரேஞ்சில் போக அப்படியே அந்த பஸ் நிறுத்தத்தின் தூணில் சாய்ந்தமர்ந்தான்.



அந்த கொடிய நாள் நிறைவுற்று அடுத்த நாளின் விடியல் வர, “அண்ணா..எழுந்திருங்கண்ணா….அண்ணா…” என்ற ரகுவின் குரலில் எழுந்தான் ராஜா.



ரகு ராஜாவின் பள்ளியில் ஜூனியர். அவன் ஒரு அநாதை என்பதால் அவனை தத்தெடுத்து அவனது கல்விக்கு உதவுமாறு கேட்டான் ராஜா. சுந்தரமும் மகனது நற்செயலை பாராட்டி அந்த உதவியை செய்தார். இப்போது ஒருவருடமாக ராஜாவே ரகுக்கான ஃபீஸை கட்டுகிறான். கல்லூரி செல்வதற்காய் ரகு பேருந்து நிறுத்துமிடம் வர அங்கே கசங்கிய ஆடையுமாக, மழையில் நனைந்திருந்த ராஜாவைக் கண்டவன் பதறிப் போய் அவனை எழுப்ப,



“அம்மா…” என்றபடி கண்விழித்தான் ராஜா. சிறிது நேரத்துக்கு பின் தான் காதில் கேட்ட இரைச்சல் நிதர்சனம் உணர்த்த ,



“என்னாச்சுண்ணா….?” என்றான் ரகு. ராஜாவின் நிலை அவனுக்கு புதிராய் இருந்தது.



“எல்லாமே முடிஞ்சிடுச்சு.. ரகு…. நானும் உன்னை மாதிரி…..எனக்கும் யாருமே இல்லடா….யாருமில்ல..” எனக் கண்ணீர் விட



“அய்யோ என்னதுண்ணா இது… அழாதீங்க… ப்ளீஸ்… என்னாச்சுண்ணா...”



ராஜா நேற்றைய சம்பவங்களைச் சொல்ல, ரகுவுக்குமே அதிர்ச்சி. அநாதையாகப் பிறந்த கணம் முதலே வாழ்வது வேறு. இப்படி அநாதையாக ஆக்கப்படுவது வேறல்லவா?

பாற்கடலில் இருந்தவனுக்குப் பாலைவனம் நரகமல்லவா? பாலைவனத்தில் இருப்பவன் பசுஞ்சோலைக்குப் போனால் அது வேறு.. ஆனால் பசுஞ்சோலையில் இருந்தவனுக்குப் பாலைவனத்தைக் காட்டினால் அது கொடுமையிலும் கொடுமையல்லவா?


 
அதுவும் ராஜா போல் ஒருவன் குடும்பத்திடம் எவ்வளவு பற்றோடு இருப்பான் என்று கண் கூடாய்ப் பார்த்தவன் ரகு. ராஜாவைப் போல் அன்பான மனிதனை அவன் கண்டதில்லை. ஆஸ்ரமத்தின் உதவியோடு அவனது பள்ளியில் படித்தவன் ராஜாவோடு ஒன்றாய் தேர்வெழுத அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக ரகு படிக்கவும் உதவி செய்தான். செய்கின்றான். கொஞ்சம் கூட ஏற்றத்தாழ்வுக் காட்டாது பழகும் அவனுக்கு இத்தனை பெரிய ஏமாற்றம் வந்திருக்க வேண்டாம் என உண்மையாய் வருந்தினான் ரகு.



அதன்பின் ரகு தனது இருப்பிடத்துக்கு மல்லுக்கட்டி அந்த காளையை கூட்டிச் செல்ல, ராஜா கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனத்தை உணரத்துவங்கினான். ஒரு வாரம் கழிந்த நிலையில் அவனிடம் பேச வந்த சுந்தரை பார்க்க மறுத்துவிட்டான். அவரும் தீபனும் அவனைப் பார்க்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின.



“ராஜா கொஞ்ச நாள் நீ நான் சொல்ற இடத்துல இருடா. அப்பாவுக்கு கோபம் போனதும் உன்னை அப்பா வீட்டுக்குக் கூப்பிடுக்கிறேன்… இப்படி இருக்காதடா… உன்னை பார்க்க முடியல.. அம்மா ஆத்தா கீதும்மால்லம் அழறாங்கப்பா… ஒரு தடவ போன் பேசேன்…..”



அவர் அப்போது கூட உன்னை வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என சொல்லாமல் தாத்தாவின் கோபம் குறையட்டும் என்று சொன்னதை எண்ணி அவனுக்குக் கசந்த முறுவல் பிறந்தது. இதே பெற்ற மகனாய் இருந்தால் இப்படி பேசுவாரா? முதலில் பெற்ற மகனாய் இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பாரா? என்று நினைத்தவனுக்கு வேதனையில் உள்ளம் விஞ்சியது.



“இன்னொரு முறை யாரையும் நம்பி ஏமாற நான் தயாரா இல்ல.. நான் பொறக்கும்போது அநாதைதானே இனி அப்படி இருந்துட்டுப் போறேன்….. உங்க அடையாளத்தை நான் பயன்படுத்த மாட்டேன்” என்றான் ரோசமாக.



அவனது குணம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுகிப்போனது. தன்னை மிகவும் சுருக்கிக் கொண்டான். கிட்ட தட்ட பதினைந்து நாட்கள் அவன் இருந்த மன நிலையில் வேலைக்குச் செல்லாமல் இருக்க, கம்பெனி நிர்வாகம் அவன் மீது உச்சக்கட்டக் கடுப்பில் இருந்தது. அதன்பின்னரும் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.



விரக்தி..! விரக்தி.! விரக்தி.. அதை தவிர்த்து ஒன்றுமில்லை. சில காலம் கழித்து கொஞ்சம் மனம் தேறி அவன் வேலை தேட, வயதில் பெரியவரான அவரை ராஜா தள்ளியதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாவுக்கு முட்டுக்கட்டைப் போடப் பார்த்தார்.



ராஜகோபால் அப்படி இழிவாகப் பேசியப் பின்னர் அவனால் அவர்கள் மூலம் கிடைத்த எதையுமே அனுபவிக்க முடியவில்லை. அவனது படிப்பு உட்பட.



வீடு இல்லை வாசல் இல்லை. சொந்தம் இல்லை பந்தம் இல்லை. வேலை இல்லை. அடையாளம் இல்லை. ஆக மொத்தம் அவனுக்கு பெயரை தவிர ஒன்றுமே இல்லை. ராஜகோபால் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாவுக்கு முட்டுக்கட்டைப் போடப் பார்த்தார். அப்போது ரகு தான் “அண்ணா… என் ப்ர்ண்ட் ஒரு மியுசிக் ஆல்பம் பண்றான்.. நீங்க பாடுறீங்களா… மனசுக்கு இதமா இருக்கும்ணா..” என அவன் மனமாற்றத்துக்காகச் சொல்ல, அவன் பாடிய அந்த ஆல்பம் வைரல் ஹிட்டாக, அவனுக்கு பாடல் பாடும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.



அவனது குரல்.. அது அவனது தந்தையுடைதாய் இருக்கலாம். இல்லை தாயுடைதாக இருக்கலாம். ஏனெனில் சுந்தரம் வீட்டில் யாருக்கும் நல்ல குரல்வளம் இல்லை. ஆகையால் அவனது அடையாளமாய் அவனது இனிய குரல் மாறிப் போனது. வேரொடிந்த மரமாய் நின்றவனுக்கு வேராய் மாறியது.



இரண்டு வருடம் கழித்து ராஜகோபால் இறந்த அன்று மட்டும் ராஜா வாசலிலேயே நின்று விட்டு வந்தான்.வளர்த்த பாசத்துக்காக..!!



அதன்பின் அவனது வீட்டினர் செய்த சமரசத்துக்கெல்லாம் அவன் மசியவில்லை. ஆனால் கீர்த்தி மட்டும் அவனோடு அவன் வீட்டை விட்டு சென்று ஒரு மாசம் ஆனப்பின் யாருக்கும் தெரியாமல் தாத்தாவுக்குப் பயந்து பிசிஓவில் பேசுவாள். முதலில் அவளிடமும் பேசாமல் இருக்க நினைத்தவன், கீர்த்தி



“ஏன்ணா.. என்ட்ட பேச மாட்ற… நீதான என்னை மேல போக சொன்ன... நீ சொன்னதை நான் கேட்டேன் தானே… தாத்தாக்கும் உனக்கும் தானே சண்டை... நான் என்ன செஞ்சேன்……” என அழ

மாசற்ற அன்பைக் காட்டும் அவனது தங்கையை அவனால் வெறுக்க முடியவில்லை. அவளோடான உறவு மட்டும் இன்றுவரையிலும் அவனுக்குத் தொடர்கிறது.

******************************************************************************

இதையெல்லாம் மதுவிடம் சொல்லிய நந்தன் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்திருந்தான்.



வலிகள் போனாலும் வடுக்கள் போகதல்லவா? ஏழு ஆண்டுகள் கழிந்தப் பின்னும் காயங்கள் மாறவில்லை. அதன் சுவடுகள் உயிருள்ளவரை தொடரும் தானே..! உலகை தானாக சமூகத்தை தனியாளாக சமாளிக்க ஆரம்பித்த இருபத்தி இரண்டாவது வயதில் அவனுக்கு ஏற்பட்டப் பேரிடியானது அவனது பிடிவாதக்குணத்தை அதிகரிக்கத்தான் செய்தது.



மதுரவசனிக்கும் அழுகை பீறிட்டது. இத்தனை கோடி மனிதர்கள் வாழும் பூமியில் ஓர் உயிர் அன்புக்காக ஏங்குவதும் நேசிக்கப்படவில்லை என உணர்வதும் எத்துனை தூரம் கொடுமையானது. அவளால் எல்லாம் அவனது நிலையில் இருந்த நினைக்க முடியவில்லை. தன் குடும்பம் தனதே இல்லையா? அப்படி கற்பனைச் செய்யக் கூட மதுவால் முடியவில்லை.



“இப்போ சொல்லு மது… எனக்கெதுக்கு அவங்க… நான் என்ன குடிக்கிறேனா… சிகரெட் பிடிக்கிறேனா.. எதாவது கெட்டப் பழக்கமிருக்கா… என்னை பத்தி எதாவது தப்பான நியூஸ் இருக்கா. அப்படி இருக்கதும் நீ எழுதியதுதானே.. அப்புறம் என்ன…? எனக்கு பொண்ணுக் கொடுக்க என்ன பிரச்சனை…?”



“இல்ல நந்தன்… நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் என் குடும்பத்துல ஒத்துக்க மாட்டாங்க…… நீங்க சொல்ற எல்லாம் சரிதான் நந்தன்….. வெளிநாட்டில வேணும்னா பொண்ணுக்கும் பையனுக்குப் பிடிச்சிருந்தா போதும்…. ஆனா அதெல்லாம் இங்க செட் ஆகாது.முதல்ல இரண்டு குடும்பத்துக்குத்தான் பிடிக்கனும்….. சோ எனக்காக இந்த விசயத்துல மட்டும் விட்டுக்கொடுங்களேன்…”



“எழுந்து நின்றவன், “நோ மது.. என்னை விட்டுக்கொடுக்காத நீயே இப்போ என்னோட கௌரவத்தை விட்டுக் கொடுக்க சொல்றியா…? இன்னிக்கு வரைக்கும் நான் அவங்க கிட்ட எதுக்கும் போய் நின்னதில்லை… இப்போ மட்டும் நான் ஏன் போகனும்… நெவர் எவர் ஐ வில் டூ தட்… அண்ட் உனக்காகவும் நான் அதை செய்வேன்னு நினைக்காத…”



“அப்போ நம்ம கல்யாணம்….”



“உன்னால முடிஞ்சா உன் குடும்பத்தை கன்வின்ஸ் செய்… இல்லனா… அவங்க விருப்பமில்லாம தான் நம்ம கல்யாணம் நடக்கும்… எனக்காக நீ இதை செய்ய மாட்டியா மது… நான் உனக்கு வேண்டாமா..?” என அவளை கார்னர் செய்ய



“அதையே தான் நானும் கேட்கிறேன்… நான் வேணுமா வேண்டாமா….?” என மதுவும் அவனுக்குச் சளைக்காமல் கேட்க



“நீ வேணும் மது… அதுக்காகத்தான் நான் இவ்வளவு தூரம் பேசுறேன்…. நீ என்னை எனக்காக ஏத்துக்கனும் மது… இப்போ நீ உன் குடும்பத்தை விட்டு வந்தாலும் நான் உன்னை ஏத்துப்பேன் மது… நீ ஏன் எனக்காக வரமாட்ற….?”



“நந்தன் உங்க நிலைமை வேற... என்னோடது வேற… நீங்க பையன்… நான் பொண்ணு நந்தன்… நான் இப்போ வீட்டை விட்டு வந்தா என்னோட குடும்பத்துக்கு அவமானம் தானே... ஒரு பெண் தவறு செஞ்சா அது அவ குடும்பத்தையே பாதிக்கும்… எனக்குப் பின்னாடி என் சித்தப்பா பசங்களாம் இருக்காங்க… என்னால அப்படி சுயநலமா யோசிக்க முடியல…” என்று தனது நிலையைத் தெளிவாக மதுரவசனி எடுத்துச் சொல்ல



“என்ன என்னோட நிலைமை... நான் அநாதைன்னு சொல்ற.. அதானே…..!” என்று அவன் கண்கள் இடுங்கக் கேட்க



“நந்தன் நான் சொல்லவரதை ஏன் சரியா புரிஞ்சிக்காம இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க…”



“இது பிடிவாதமில்ல மது.. உன்னைப் பிடிச்சதால செய்ற வாதம்…”



“அப்போ நீங்க முடிவா என்னதான் சொல்றீங்க…?”



“என்னால அவங்கப் பார்த்த சம்பந்தத்துக்கு ஒத்துக்க முடியாது…மது…..”



“அவங்க சூழ்நிலை அப்படி இருந்திருக்கும் நந்தன்.. ஆனா எனக்கே தெரியுது அவங்க உங்க மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்காங்கன்னு.. ஆனா உங்க கோவத்தால் நீங்க புரிஞ்சிக்க மாட்றீங்க…”



“என்ன அப்படி ஈரவெங்காய சூழ்நிலை…? அன்னிக்கு நிலைமையில மோசமான சூழ்நிலை என்னோடதுதான்… ஒருவாரம் வரைக்கும் அவங்க நான் இருக்கேனா செத்தேனா கூடப் பார்க்கல… மது… வேண்டாம் மது… இப்படி அவங்களைப் பத்திப் பேசி சண்டைப் போட வேண்டாம்… நான் உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் மது…ஆனா அவங்க மட்டும் வேண்டவே வேண்டாம்… இதே தீபனோ கீர்த்தியோ அவர்ட்ட சண்டைப் போட்டு இப்படி வீட்டை விட்டுப் போயிருந்தா அப்பா அம்மா சும்மா இருந்திருப்பாங்களா…? என் பிள்ளைனு பின்னாடியே போயிருப்பாங்கள…! ஆனா என் பின்னாடி வர யாருமே இல்ல மது… ரகு இல்லன்னா நான் செத்து போயிருந்தா கூட ஆச்சரியம் இல்ல….”



“நந்தன் ப்ளீஸ்…”



“மது… உன் குடும்பத்திட்ட நான் வந்து பேசுறேனே..”



“அதெல்லாம் நடக்காது நந்தன்…”



“அப்போ கல்யாணமும் நடக்காது… மது… என்னால கீழறங்க முடியாது… என்னை நீ எனக்காகக் கல்யாணம் செய்யனும்… மத்தபடி யாருக்காகவும் இல்ல… எனக்கு வேற யாரோட அடையாளமும் வேண்டாம்…” என அவன் திட்டவட்டமாய் கூற



“அப்பன்னா. நான் வீட்ல சொல்ற மாப்ளைய தான் கல்யாணம் செஞ்சிக்கனும்ங்க… இருபத்தியொரு வருசம் என்னைப் பெத்து வளர்த்தவங்களை எப்படி என்னால ஜஸ்ட் லைக் தட் உதற முடியும்… இப்போ ஒரு மாசமா தெரிஞ்ச உங்களையே என்னால விட்டுக் கொடுக்க முடியலன்னா... என்னோட குடும்பத்தை எப்படி விட முடியும்… நான் வேண்டாம்னு நீங்க முடிவு செஞ்சிட்டீங்க... அப்புறம் உங்க இஷ்டம்” என மது அவனைக் கரைத்து விடும் நோக்கில் பேச



கரைவானா அவன்?



அவளது கையைப் பிடித்தவன், “என் முகத்தைப் பார்த்து சொல்லு… என்னை தவிர வேற யாரவதை உன்னால கல்யாணம் செய்ய முடியும்னு… என் கண்ணைப் பார்த்து உண்மையை சொல்லு மது... நான் விட்டுடுறேன் உன்னை”



அவனது கேள்வி அவளது ஈகோவைத் தூண்ட, எவ்வளவு தூரம் தான் விட்டுக்கொடுப்பது இப்படி பிடிவாதம் பிடிக்கிறானே என்ற கோவத்தில் , தன்னிலை இழந்து அவனது சட்டையைப் பிடித்தவள்



“முடியாதுடா… முடியவே முடியாது… எனக்கு நீதான் வேணும்... நீ தான் என் கழுத்தில தாலி கட்டனும்… கட்டனுமில்ல… கட்டுற… சும்மா சும்மா எதாச்சும் பேசினா… கொன்னுடுவேன் டா… உன்னை… எப்படி நீ தாலி கட்டாமப் போறன்னு நானும் பார்க்கிறேன்…..” என்று கோபத்தில் இரைந்தவள் விடுவிடுவென இறங்கிச் சென்றாள்.



ஆட்டம் தொடரும்..!!!
 
என்னோட செல்லாக்குட்டி
ராஜ்நந்தனின் இந்த நிலைமையை
நினைத்து எனக்கு இப்போக்
கூட ஒரே அழுகையாக வருது,
பவித்ரா டியர்
ரொம்ப நாள் கழிச்சு நானே இப்ப தான் இதை post பண்ண வேண்டி ஒரு முறை படிச்சேன்..பானுமா..எனக்கே feeling sad...??
 
Top