Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 5

Advertisement

காதல் 5

ஹாஸ்பிட்டலில் மதுவை அனுமதித்து விட்டு வெளியே காத்திருந்தனர் ஹம்சகீதாவும் ராஜதீபனும். தோழிக்கு என்னவாகிற்று என்றப் பதட்டத்தில் ஹம்சா தீபனிடம் ,

“சார் என்னாச்சு… மதுக்கு… அவ நீங்க கூப்பிட்டீங்கன்னு தானே வந்தா….?” எனப் பதட்டமாய்க் கேட்க

தீபனோ அவனுக்கிருந்த டென்ஷனில், “ஹம்சா கொஞ்சம் அமைதியா இரு…..” என்று அதட்ட

“என்ன அமைதியா இருன்னு சொல்றீங்க….. என்ன செஞ்சீங்க என் ப்ரண்டை… சொல்லுங்க.. அவ உங்களைப் பார்க்கதானே வந்தா.. இப்போ சொல்லப் போறீங்களா இல்லயா…?” எனக் கத்த

“ஷ்…..ஷட் அப்… நான் என்னடி செஞ்சேன் உன் ப்ரண்டை… அவளா போய் தேவையில்லாம எதையாவது இழுத்துட்டு வந்தா நான் பொறுப்பா….?” என்று அவனும் பதிலுக்குக் கத்தினான்.

காலையிலிருந்து எதிர்ப்பாராத சம்பவங்களாக நடப்பதால் அவன் ஏகக்கடுப்பில் இருந்தான்.

ஹம்சாவுக்குத் தீபனின் கோபம் கண்டு பயமெல்லாம் இல்லை. அவள் பாட்டிற்கு தன் போனை எடுத்து செல்வத்திற்குப் போன் செய்யப் போனாள். செல்வமும் அவர்களுக்கு உறவு தான். சென்னையில் தனியாக இருப்பதால் எந்த உதவியாய் இருந்தாலும் அவனிடம் கேட்டுக்கொள்ளுமாறு ஏற்கனவே இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஹம்சாவிடம் வேறு தன் கோபத்தைக் காட்டி விட்டோமே என்று வருத்தத்தோடு தீபன் ஹம்சாவைப் பார்க்க, அவளோ போனை காதில் வைத்திருக்கக் கண்டவன் ,

“ஹம்சா………. என்ன செய்ற நீ…?”

“என்ன செஞ்சா உங்களுக்கு என்ன…..? எங்க ரிலேஷனுக்குப் போன் செஞ்சு வர சொல்லப் போறேன் போதுமா…?”

“ஏய்… அதெல்லாம் வேண்டாம். சொல்றதைக் கேளு…” என்றான் அவசரமாய். யாராவது வந்து விசாரித்து நந்தனின் பெயர் அடிபடுமோ என்ற கவலை அவனுக்கு.

ஆனால் ஹம்சாவோ மதிக்காமல் போனைக் காதில் வைத்திருக்க, அவளிடமிருந்து பட்டென்று செல்லைப் பிடுங்கி, தன் பாண்ட்ப் பாக்கெட்டுக்குள் போட்டான்.

“சார்………….என்ன செய்றீங்க…..?”

சரியாக அந்த நேரம் பார்த்து டாக்டர், “மிஸ்டர்.தீபன்…. நோ ப்ராப்ளம்.. பேஷண்ட் இஸ் ஃபைன்…. கொஞ்சம் பிபி குறைஞ்சிருக்கு.. சரியா சாப்பிடல போல… அதான் மயங்கிட்டாங்க…. ட்ரிப்ஸ் போட்டுருக்கேன்…. இப்போ கண்முழிச்சிடுவாங்க…..” என்றவர்

“ஆமா…அவங்க காலையில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாங்களா…?” என விசாரிக்க

“இல்ல…டாக்டர்….. காலையில ரெண்டு பேரும் லேட்டா எழுந்தோம்.. சோ டைம் ஆச்சுன்னு சாப்பிடாம வந்துட்டோம்..” என்றவளைக் கடுமையாக முறைத்தான் ராஜதீபன்.

“இப்படி ப்ரேக்ஃபாஸ்ட்லாம் ஸ்கிப் செய்யலாமா நீங்க… சின்னப் பசங்களா என்ன…? முதல்ல போய் சாப்பிடுங்க… அவங்களுக்கு டிரிப்ஸ் முடிஞ்சதும் அவங்களையும் சாப்பிட வைங்க…….” என்று அறிவுறுத்தி விட்டுச் செல்ல

“ஹம்சா… வா… மது கண்முழிக்கறதுக்குள்ள.. கேண்டீன்ல போய் சாப்பிடலாம்…” என்று அழைத்தான் தீபன்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நான் மது கூட இருக்கேன்…. அவ கண்முழிக்கட்டும்…” என அவள் மறுக்க

“சொன்ன எதுவுமே கேட்க மாட்டியா நீ…. அவ முழிக்கட்டும்… நீ வா… ஒரு ஐஞ்சு நிமிசம்… உனக்கும் அவ பக்கத்துல மயங்கி விழனும்னு ஆசையா…?” என அவள் மேல் கொண்ட அக்கறையில் சொல்ல

“என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க… தஞ்சாவூர் பொண்ணுனா நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டனுமா…என்ன….?.....” என அவன் இவளை நாட்டாமை செய்கிறான் என்ற கடுப்பில் பேச

அவள் சொன்னதில் அவனுக்கு சிரிப்பு வர, அப்படியே கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இருக்கையில் அமர்ந்தான்.

“என்ன வேணுமோ செய்….” என்றபடி.

அப்பொழுது பார்த்து அவனை சோதிக்க வந்தது ரகுவின் போன் அழைப்பு, போனில் ரகு ,

“என்ன சார் ஆச்சு….? உங்களைப் பார்க்கலாம்னு ஆபிஸ் வந்தேன்…. நந்தன் சார் விசயமா பேசிட்டு அப்படியே காரையும் எடுத்துட்டுப் போலாம்னு. ஆனா….. நீங்க ஹாஸ்பிட்டல் போயிட்டீங்கன்னு சொன்னாங்க..” என்று விசாரிக்க

“அவனைப் பத்தி பேசின.. பிச்சிடுவேன் டா உன்னை… அவன் என்னடா மனுசனா இல்ல மிருகமா…..” என்றவன் ஹம்சா இருப்பதால் கொஞ்சம் தள்ளிச் சென்றுப் பேசினான்.

“கோவம் வந்தா யாரு என்னன்னு பார்க்க மாட்டானா… நம்ம இருந்தவாசி அந்த பொண்ணை விட்டான்… இல்லன்னா கோபத்தில அவன் கொலை கூட செஞ்சிருவான் போல…. முன்னப் பின்னத் தெரியாதப் பொண்ணுக் கிட்ட அப்படித்தான் நடப்பானா டா.... இப்போ அந்த பொண்ணுக்கு டென்ஷன் ஜாஸ்தியாகி மயங்கிட்டா… எல்லாம் அவனால டா”

“சாரி சார்… எனக்கே அவரோட நடவடிக்கைக் கொஞ்சம் வித்தியாசமாத்தான் பட்டது…. உங்களுக்குத் தெரியாதா… அவரைப் பத்தி.. அவர் குணம் அப்படி…” என வக்காளத்து வாங்கினான்.
 
“மண்ணாங்கட்டி குணம்….”

“சரி சார்… இப்போ நான் அங்கே வரேன்.. எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லுங்க…” என்றுத் தன்மையாய் சொல்ல, தீபனும் ஹாஸ்பிட்டல் பேரைச் சொல்லிப் போனை வைத்தான்.

அதற்குள் மது கண்விழித்து விட, ஹம்சா அவளைப் போய் பார்த்தாள்.
தீபன் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து வெளியே நின்றான். ரகுவுக்காக அவன் காத்திருந்தான்.

உள்ளே போன ஹம்சா மதுவை விசாரிக்க அவள் நடந்த அனைத்தையும் சொல்ல

“என்ன நினைச்சிட்டு இருக்கடி நீ…..? நம்மளுக்கு இதெல்லாம் தேவையா என்ன…? இந்த ரிப்போர்டர் வேலையெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா… நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சா பெரிய ப்ரச்சனை ஆகும்…. மது…. உனக்கு அசட்டுத் துணிச்சல் ஜாஸ்தியாச்சு…?” என்று பொரிய ,

லேசாக சிரித்த மது, “ப்ளீஸ் ஹம்சு….கோச்சுக்காதடி ராசாத்தி…………என் ஆசைக்குக் கொஞ்ச நாள் இருந்திக்கிறேனே…….. இதெல்லாம் த்ரில் டி..” எனச் சொல்ல

“உங்க ஆத்தாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடும்டி…..த்ரில்லாம் த்ரில்….. ஆனாலும் என்னால நம்ப முடியல…. நந்தன் சாரோட வாய்ஸ்ல இருக்க அந்த மென்மைக்கும் அவரோட செயலுக்கும்… எல்லாம் வெளிவேஷம் போல….”

“ம்ம்.. அப்படியும் இருக்கலாம்… இல்லன்னா அவர் என்னைக்காவது நான் இப்படின்னு சொல்லியிருக்காரா என்ன..? அவர் குரல் தானடி நமக்குத் தெரியும்.. குணமா தெரியும்…..?..விடு…”

“யார் குணம் தான் நமக்கு தெரியுது……..?” என ஹம்சா சலித்துக்கொள்ள

“ஏன் டி……என்னாச்சு…?”
“அந்த தீபன் இருக்காரே அவர் என்னை மரியாதை இல்லாம பேசுறாரு….. நான் செல்வண்ணாவுக்குப் போன் போடப் போனா... என் போனைப் பிடுங்கி அவர் வைச்சிக்கிட்டாரு…. நீ சொன்னது சரிதான்… அவர் என்னையும் ஒரு மாறிதான் பார்க்கிறாரு.. உன்னை மட்டுமில்ல..” எனத் தீபனின் நடவடிக்கைக் குறித்து ஹம்சா புகார் சொல்ல

“ஆத்தாடி…. அவர் என்னை பார்க்கலடி.. உன்னைத் தான் பார்க்கிறார்…..?” என அவள் அதிர

அவளை விடவும் அதிர்ந்தவள் , “என்னடி உளர்ற…..?”
“உளறலாம் இல்ல… நிஜமா…” என்றவள் அன்று தீபனுக்கும் அவளுக்குமான உரையாடலைச் சொன்னாள்.

அன்று மதுவின் கேள்விக்கு ஒரு நொடி, அதிர்ந்த தீபன் பின்னர் நிதானமாய்,

“மது…..நான் பார்த்தது உண்மைதான்.. ஆனா உங்களை இல்ல.. நீங்க என் சிஸ்டர் மாறி…” என்று சொல்ல

“அப்பாடா…” என்ற உணர்வு மதுவுக்கு..ஆனாலும்..?

“அப்போ… நீங்க யாரைப் பார்த்திங்க…..?” என்று கேட்கவும் மனமில்லை. ஏற்கனவே தலையில் எரிந்தப் பல்பை வேறு தட்டிவிட வில்லையே…? மீண்டும் பல்ப் வாங்க முடியாது என்பதால் அமைதியாய் நிற்க

“நான் அக்சுவலி உங்க பின்னாடி சீட்ல இருக்க ஹம்சாவை தான் பார்த்தேன்… அவங்க என்னைப் பார்க்கற மாதிரி இருக்கும்போது டக்குனு நான் முன்னாடி பார்த்தா.. நீங்க தானே தெரிவிங்க… இங்க இருந்தும் பார்த்தா ஹம்சா சேர் தான் தெரியும்… உங்கள நான் பார்க்கல… சாரிம்மா…” என்று சொல்ல

‘வாட்…? ஹம்சாவா…?’ என மீண்டும் ஷாக்கானவள்

“எதுக்கு அவளைப் பார்க்கிறீங்க….?” எனத் தோழி மீது கொண்ட அக்கறையில் கேட்க

“பிடிச்சிருக்குப் பார்க்கிறேன்… பார்த்தவுடனேயே பிடிச்சுப்போச்சு…….. ஐ லவ்.. ஹெர்….. அவ கிட்டச் சொல்ல வெயிட் பண்றேன்…”

“நிறுத்துங்க சார்.. இதெல்லாம் செட் ஆகாது… எங்க ஃபெமிலிக்கெல்லாம் லவ் மேரேஜ்லாம் ஒத்துவராது…..”

“அதை ஹம்சா சொல்லட்டும் மது”

“என் ப்ரண்ட் பத்தி எனக்குத் தெரியாதா.. சார்…. இதெல்லாம் வேண்டாம்.. அவளை டிஸ்டர்ப் செய்யாதிங்க சார்…” எனக் கொஞ்சம் ஸ்டீரிக்ட் ஆபிஸராகச் சொல்ல

“அதெல்லாம் நான் செய்ய மாட்டேன் மது… எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா…. சோ.. நீ உன் ப்ரண்டை நினைச்சு கவலைப்பட வேண்டாம்… பின்னாடியே சுத்திட்டெல்லாம் இருக்க மாட்டேன்”

“இதுக்கு மேல உங்க இஷ்டம்.. இது ஒத்துவராது…. தட்ஸ் ஆல்… நான் சொல்வேன்….” என்றபடி அறையை விட்டு வெளியே வந்தாள் மதுரவசனி.
அன்று நடந்தவற்றை மது ஹம்சாவிடம் சொல்ல, ஹம்சாவின் முகத்தில் டென்ஷன் ஏறிக்கொண்டே போனது.

“உனக்கு அறிவில்லன்னு அடிக்கடி நிருப்பிக்கறடி… முன்னாடி ஏன் நீ சொல்லல எங்கிட்ட… சொல்லியிருந்தா நான் அப்போவே… நான் அவரை விட்டு விலகியிருப்பேன்ல..” என்று கடுப்பாய்க் கேட்க

“ஏன்.. இப்போ மட்டும் என்ன அவரை ஒட்டிட்டா திரியிற…”

“ஏய்…” என ஹம்சா கத்த

“இதோ…. இப்படி டென்ஷன் ஆவன்னு தான் டி நான் சொல்லல… சொல்லு அவரு உன்னை எதாவது டிஸ்டர்ப் செஞ்சாரா என்ன…?”

“அதிகமா உரிமை எடுத்துக்கிட்டாருடி…. இன்னிக்கு… எனக்கு சுத்தமா பிடிக்கல… அவர் முன்னாடியே நான் இருந்தேன்னா… அவருக்கு என் நினைப்பு ஜாஸ்திதான் ஆகும்….. அது நல்லதுக்கில்ல…… எனக்கு எங்க அம்மா, அண்ணன் தான் முக்கியம்…….. அவங்களுக்கு தலைகுனிவெல்லாம் ஏற்படுத்த முடியாதுடி….”

“சரி……………….. சரி…. திரும்பவும் என்னை மயக்கம் போட வைச்சிடாத…. அவர வர சொல்லு… நான் பேசுறேன்…”

“முதல்ல என் போனை வாங்கித் தா… ட்ரிப்ஸ் முடிஞ்சதும் நம்ம போயிடலாம்…” என ஹம்சா அவசரப்படுத்த

“சரி..சரி..சாரிடி… தேவையில்லாம உன்னை குழப்ப வேண்டாம்னு தான் நான் சொல்லல… கோபமா..?” என மது சோகமாய் இழுக்க

“ப்ச்… விடு… ஆளாளுக்கு அவங்க நியாயம்… ஆனா இதை தொடரவிடக் கூடாது.. நான் போய் அவரைக் கூப்பிடுறேன்…” என்றவள் வெளியே செல்ல உள்ளே வந்ததோ வேறொருவன்.

அவனின் கண்களைப் பார்த்தால் எங்கோ பார்த்தாற் போல் இருந்தது. அவன் பின்னாலேயே ராஜதீபன், ரகு, ஹம்சா எல்லாரும் பதட்டமாக வந்தனர்.

“நந்தன்… சொன்னா கேளு… ஏற்கனவே உன்னால தான் அவ டென்சன் ஆகி மயங்கிட்டா… இப்போ போய் மறுபடியும் அவளை டென்ஷன் செய்யப் போறியா… இப்போ நீ போகல…. நான் என்ன செய்வேன்னு தெரியாதுடா..?” என்ற தீபனின் மிரட்டலையோ
,
“சார்…… வேண்டாம்….” என்ற ரகுவின் பேச்சையோ கேட்காது மதுவின் அருகில் வந்தவன் சாட்சாத் நந்தனே.

நந்தன் எப்போதும் பொது இடங்களுக்குப் போகும்போது ஒரு தாடியை ஒட்ட வைத்திருப்பான். கூடவே ஒரு கூலிங் க்ளாஸ் வேறு.. அதனால் தான் மதுவுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் இவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து விட்டது வந்தவன் நந்தன் என.

மருந்துக்குக் கூட இவர்களை மதிக்காதவன் மதுவின் அருகில் வந்து ,

“இங்க பாரு மது உங்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசனும்……. இவங்களை போக சொல்லு…. உன்னால இப்போ எங்கிட்டப் பேச முடியுமா முடியாதா..?” என்றவனின் குரலில் காலையில் இருந்த ஆத்திரம் இல்லை ஆனால் ஒரு அழுத்தம் இருந்தது.

‘சொன்னதை செய்’ என்ற கட்டளை அவன் குரலில்.

ஏற்கனவே இழுத்து வைத்திருக்கும் பிரச்சனை போதுமென நினைத்தவள் , அனைவரையும் பார்த்து ,

“சார் கிட்ட நான் பேசிக்கிறேன்… நீங்க கொஞ்சம் வெளியே இருங்க..” என்று சொல்ல

ஹம்சவோ தோழியின் மீதுள்ள பாசத்தால், “இல்ல… மது… அட்லீஸ்ட் நான்..” என்றவளை இடைமறித்த மது ,

“நான் பார்த்துக்கிறேன் ஹம்சா…” என்று சொல்ல அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பாது அனைவரும் வெளியே வர

மதுவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த நந்தன், சில நொடிகள் அவனது தலையை இருகைகளால் தாங்கி கண் மூடினான்.

அவன் கத்துவான் இல்லை மன்னிப்புக் கேட்பான் என்று மது எதிர்ப்பார்க்க, அவனோ அவள் எதிர்ப்பாராத வகையில் மென்மையாய் பேசினான்.

“மது………….. காயப்பட்டவங்களை விட சில நேரம் காயப்படுத்தியவங்களுக்கு வலி அதிகமாய் இருக்கும்……” என

‘என்ன..?’ என்பதாய் அவள் பார்த்து வைக்க

“புரியுதா உனக்கு..... எனக்கு கோபம் வந்தால் நிதானம் தவறிடுவேன்…”

“கோபம் வரும்போது தான் நாம நிதானமா இருக்கனும் சார்…” என்றாள் மதுரவசனி பட்டென்று.

அவனது செய்கையில் அவளுக்கு கோபம், வருத்தமெல்லாம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் இப்படி பேச வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை தானாகவே வாயில் வந்து விட்டது.

அவள் சொன்னதுக்கு அவன் கோபமெல்லாம் படவில்லை. மாறாக ,

“எஸ்….. நீ சொல்றது கரெக்ட்தான்… ஆனா அங்க தான் நான் தவறிடுவேன்… என்னால சில சிட்ச்வேஷன்லாம் சரியா ஹேண்டில் செய்ய முடியாது மது….. முடியாதுன்னு சொல்றதை விடத் தெரியாது… இன்னிக்கும் அப்படி ஒரு நாள்… என்னால எந்த சூழ்நிலையிலையும் இறங்கிப் போக முடியாது… அப்படி இருக்கும்போது அந்த நியூஸ்… எனக்குப் பெரிய தலையிறக்கமில்லையா… அதான் அப்படி நடந்துக்கிட்டேன்…….”

“வாழ்க்கையில யாரையும் நான் காயப்படுத்தினது இல்ல….. அப்படி நினைச்சதும் இல்லை…… பட்…. இந்த நாள் ரொம்ப மோசமா போயிடுச்சு….” என்றவன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றினான்.
மதுவுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து போனது. ‘மன்னிப்பு’ என்ற ஒற்றை வார்த்தைக் கேட்டால் எங்கே அவன் தலையில் உள்ள கீரிடம் இறங்கிவிடுமோ எனப் பயந்து இப்படி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான் என்று.

ஒரு நல்ல மன்னிப்பு என்பது மூன்றுப் பகுதிகளைக் கொண்டது. ஒன்று மன்னிப்புக் கேட்பது. இரண்டாவது தவறை ஒத்துக்கொள்வது. மூன்றாவது தவறைச் சரி செய்வது.

நந்தனின் மன்னிப்பு இரண்டாவது வகை. தவறை ஒத்துக்கொள்வதற்குக் கூட ஒரு மனம் வேண்டுமில்லயா?

அவனது குரலில் இருந்த வலிக் கொண்ட மென்மையை உணர்ந்த மதுரவசனி, தன் கோபம் மறந்தாள்.

“இட்ஸ் ஒகே சார்….. லீவ் இட்……. நான் சரியா சாப்பிடல…. அதான் மயங்கிட்டேன்.. நீங்க இதுக்காக ஃபீல் செய்ய வேண்டாம்..” என்றாள் ஆறுதலாக.

மன்னிப்புக் கேட்கப் பெரிய மனது வேண்டும். மன்னிக்க அதை விடப் பெரிய மனது வேண்டும்.. ஆனால் பெருந்தன்மையான மனது இருந்தால் தான் கேட்கப்படாத மன்னிப்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடியும். எஸ்….Life becomes easier when you learn to accept the apology you never got என்ற வரிகளுக்கு ஏற்ப மது நடந்துக் கொண்டாள்.

நந்தனின் முகம் மதுவின் கூற்றில் பளிச்சென்று மின்னியது. அவனது மனப்பாரத்தை எல்லாம் ஒரு வார்த்தையில் தீர்த்து விட்டாளே..!!

‘லீவ் இட்’ என்று அவள் சொன்னப் பின் காலையிலிருந்து கனத்த நெஞ்சம் லேசாகி விட்டாற்போல் ஒரு உணர்வு. கீர்த்தியிடம் பேசிக் கொஞ்சம் சரியான மனது மீண்டும் ரகு சொன்னச் செய்தியில் வாடத் தொடங்கிவிட்டது.

கீர்த்தியிடம் பேசிய பின்பும் கூட அலைப்பாய்ந்தது அவன் நெஞ்சம். பசி வேறு எடுக்க, வீட்டுத் தொலைப்பேசி மூலமாய் ரகுவை அழைத்தான்.

“டேய்.. எங்க சுத்திட்டு இருக்க நீ…. எனக்குப் பசிக்குது…. எதாவது வாங்கிட்டு வா…. உனக்கும் சேர்த்து…” என நந்தன் சொல்ல

‘சுத்திட்டு இருக்க’ என்ற வார்த்தைகள் ரகுவை சூடாக்கப் போதுமானதாய் இருந்தன,

“நீங்க செஞ்சு வைச்ச வேலைக்கு நான் சுத்திட்டா இருக்க முடியும்… பொண்ணுன்னு கூடப் பார்க்காம அவ கழுத்தைப் பிடிச்சு இப்போ அந்த பொண்ணு ஹாஸ்பிட்டல்ல இருக்கா… சார்…. அவளைப் பார்க்கத்தான் நான் போய்ட்டு இருக்கேன்……” என்று உளறி வைக்க

உளறல்களெல்லாம் உளறிய பின் தான் அவை உளறல்கள் என்றே நமக்குப் புரிகின்றன.

நந்தனோ, “ஹே….! என்ன ரகு சொல்ற நீ… அந்த பொண்ணுக்கு என்னாச்சுடா….?” என டென்ஷனாய்க் கேட்க
‘அய்யோ…. இவர்க்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாமோ..’ என்று தோன்றியது ரகுவுக்கு.

“இல்ல… சார்…. ஒன்னும் பிரச்சனை இல்லை… நான் பார்த்துக்கிறேன்……” என்று சமாளிக்க,

“ப்ச்…. எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லுடா..”

“இல்ல சார்… நீங்க வர வேண்டாம் ….” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் கூட நந்தன் பிடிவாதமாய் ஹாஸ்பிட்டல் பெயரைக் கேட்டுச் சில நொடிகளில் விரைந்து வந்துவிட்டான்.

அவன் செயலால் அவனே வெட்கினான். மதுவிடம் தான் நடந்துக் கொண்ட முறை சரியில்லை என்று அவனுக்கு நன்றாய்த் தெரியும் இருந்தும் கூட மன்னிப்பு என்று கேட்க பிடிக்கவில்லை.. பாரமெல்லாம் பனியென விலகி விட்டன அவளது பேச்சில்.அ
 
அலைப்பாய்ந்த அவனது மனதுக்கு அவள் தந்த ஆறுதல் அளப்பரியது அல்லவா….? அதுவும் அவன் மன்னிப்பு என்று வாய் வார்த்தையாய்க் கேட்காத போதே அவள் மன்னித்தது அவனுக்குப் பெருத்த நிம்மதியைத் தந்தது.

அந்த நிம்மதியுடனே எழுந்தவன், புன்னைகையோடு “தேங்க்ஸ் மது.. டேக் கேர்…” என்றான்.

அப்போது நர்ஸ் வர, அதை சாக்கிட்டு தீபன் அண்ட் கோவும் உள்ளே வர, வந்த நர்ஸ், மதுவுக்குப் போட்ட ட்ரிப்ஸை எடுத்து விட்டு,
“ஒரு டென் மினிட்ஸ் உட்காருங்க…. அப்புறமா நீங்க வீட்டுக்குப் போயிடலாம்.” என்று சொல்ல

தீபன் ஹம்சாவிடம், “நீங்க இருங்க… நான் பில் பே பண்ணிட்டு வரேன்..” என

“வேண்டாம்..” என்ற குரல் வந்தது மதுவிடமிருந்தும் நந்தனிடமிருந்தும்.

நந்தன் மதுரவசனியிடம், “மது….. நீ பே செய்ய வேண்டாம்.. நானே கட்டிடுறேன்…” என்றவன் அவள் பதிலை எதிர்ப்பாராது

ரகுவிடம், “ரகு… போய் நீ செட்டில் செஞ்சிடுடா..” என்று உத்தரவிட

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரகு….. என்ன செஞ்ச தப்புக்கு பரிகாரமா..?” என்று தீபன் எள்ளலாக கேட்க

நந்தனோ முகம் சிவக்க மதுவிடம் திரும்பி, “மது…….. நீ சொல்லு……………. யார் கட்டனும்னு..” என்றுக் கேட்க

அவளோ, “வேண்டாம் சார்….. எங்கிட்ட பணம் இருக்கு… நாங்களே கட்டிருவோம்..” என்று மறுக்க

“நோ…. மது நீ கட்ட வேண்டாம்….. நான் கட்டனுமா இல்ல… அவன் கட்டனுமான்னு நீயே சொல்லு…. அதை மட்டும் சொல்லு…” என்று அழுத்தமாய்க் கேட்க

“சே எஸ் ஆர் நோ… மது… நான் உன்னைத்தான கேட்கிறேன்………..” என்றான் கோபக்குரலில்.

‘என்னைத்தான் சொல்லி ஆக வேண்டும்’ என்ற த்வனி அவன் குரலில்..

இவ்வளவு நேரமிருந்த இனிமை கலைந்து மீண்டும் அவனது முகம் காலையில் இருந்தாற் போல் இருக்க, மதுவுக்கு மனது தாளவில்லை. அவனை இறங்கிப் போக விட அவள் மனம் ஒப்பவில்லை. ஏனோ தெரியவில்லை அவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் போனது. அவனை விட அவனது ஈகோவை இவள் காக்க நினைத்தாள். ஆகையால் ,

“நீங்களே கட்டுங்க சார்…” என்றாள். அதைக் கேட்டு நந்தன் தவிர அனைவருக்கும் அதிர்ச்சி என்றால்,

நந்தனுக்கு ஆனந்த அதிர்ச்சி..!! அவனை விட்டுக்கொடுக்காத அவளை விட அவனுக்கு மனமில்லாமல் போனது.

அங்கே தான் மதுரவசனி தவறுச் செய்தாள். அவனது ஈகோவுக்குத் தீனிப் போட்டாள்.

எந்த நொடி தன்னை அவள் முதன்மையானவனாகக் காட்டினாளோ அந்த நொடி மதுரவசனி நந்தனின் மனதின் ராணியானாள்.
அவள் அவனது நெஞ்சில் ஆழமாய்ப் பதிந்துப் போனாள்…!!!

******************************************************************************************

“ஹரிணி… ஹரிணி…” என்று ஸ்ரீராம் கத்த மெதுவாக அவர்களது அறைக்குள் நுழைந்தாள் ஹரிணி.

மனைவியைக் கண்டவன், “என்ன நீ… எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்.. இப்படி மெதுவா வர..” என அதட்ட

“நான் மட்டும் நீங்க கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வரணும்…. உங்களுக்கு எப்போ ஆபிஸ் வேலை இல்லையோ.. அப்போ தான் என் ஞாபகமே வருமில்ல…” என்று கோபித்துக் கொள்ள

“என்ன ஹனி…. என்னாச்சு…… நான் என்ன சும்மாவா இருக்கேன்…….. வேலை ஜாஸ்திமா….”

“அதுக்காக ஒரு சண்டே கூடப் ஃப்ரீயா இல்லாம இருந்தா….. டெய்லி லேட்டா வர்றீங்க….. ஆயுஷ் கிட்ட நீங்கப் பேசி எத்தனை நாளாச்சு…… இன்னும் கொஞ்ச நாளாச்சுன்னா…. எங்க ரெண்டு பேருக்கும் உங்க முகம் மறந்துடும்…”

“சாரி.. ஹனி…….”

“என்ன சாரி…….. மாமா கூட சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுறாங்க… நீங்க என்ன வெட்டி முறிக்கிறீங்க….”

“ஷ்…. என்ன நீ… இப்படி கத்துற…. அப்பாவுக்கு வயசாச்சு… அதனால் தான் நாங்க அப்பாவையும் சித்தப்பாவையும் சீக்கிரம் அனுப்பிடுறோம்….. நானும் கார்த்திக் சித்தப்பாவும் தான் ஆபிஸ்ல இருக்கோம்… போய்.. மோகனா சித்திட்ட கேளு… அவங்க என்ன உன்னை மாறிப் புலம்பிட்டா இருக்காங்க…?”

“உங்களை மிஸ் பண்றேன்னு சொல்றது ஒரு குத்தமா..?”

“அய்யோ.. ஹனிமா…” என்று அவளை அணைத்துக் கொண்டவன், “உங்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்… ஜாயிண்ட் ஃபேமிலின்னா அப்படிதான் இருக்கு... ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கனும்… அவங்கலாம் வயசானவங்க சோ… ரெஸ்ட் கொடுத்திடுறோம்… இப்போ தான் சரணும் ஆபிஸ் வர ஆரம்பிச்சிருக்கான்…. அவன் கொஞ்ச வேலை கத்துக்கிட்டப் பின்னாடி கொஞ்சம் ஃப்ரியாகிடுவேன்… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ….. அதான் ஒரு மாசம் யூ.எஸ் அழைச்சிட்டு போறேன்ல… அப்போ யாராவது நம்மள தொந்தரவு செய்றாங்களா… என்ன…?”

“ம்ம்ம்”

“கோபம் போயிடுச்சா….”

“ஹ்ம்ம்.. எதுக்குக் கூப்பிட்டிங்க…?”
“ஹான்.. இப்போவாது கேட்டியே… என் ப்ரண்ட் ராகுல் இருக்கான்ல… அவன் நம்ம மதுவை மஹா.. கல்யாணத்துக்கு வந்தப்போ பார்த்திருக்கான்…. பிடிச்சிருக்குன்னு சொன்னான்… அதான் நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்டான்னு சொன்னேன்..… இதான் அவன் போட்டோ.. ஓகேவா பாரு… பொருத்தம்..”

“ம்ம்… நல்லா ஹேண்ட்சம் தான்.. மதுவுக்குப் பெர்ஃப்க்ட் மேட்ச்..” என்றாள் ஹரிணியும்.

“சரி.. வா.. இப்போ தான் எல்லாரும் வீட்ல இருக்காங்க.. போய் பேசிடலாம்..” என்றவன் கீழே இறங்கிச் சென்று அனைவரிடமும் விசயத்தை சொல்ல

மதுரவல்லி, “இந்த தம்பி எந்த ஊரு… என்ன செய்றாரு….. நம்ம ஆளுங்களா..?” என விசாரித்தார்.

“இவங்க மதுரை ஆத்தா.. ஆனா நம்ம ஆளுதான்.. அம்மா அப்பா டாக்டர்ஸ்.. ஒரே பையன் தான்…. அமெரிக்காவில பெரிய கம்பெனில இருக்கான்..”

“இல்ல ராமு….. அமெரிக்கா தக்க நம்ம மதுவை அனுப்ப முடியாது.. நம்ம ஊர்ப்பக்கம் இல்லன்னா…… மெட்ராஸ் அப்படி பாரு….. ஆத்திரம் அவசரத்துக்குக் கூட ஓட முடியாது… நம்ம கண்முன்னாடி இருந்தா தான்….. நமக்கு நிம்மதி….”

“சரி ஆத்தா…”

“அம்மா… நம்ம மதுவுக்கு இந்த வருசமே நல்ல யோகம் தானாம்…… இப்போவே நல்ல வரனா பார்த்து முடிச்சிடனுமா” என்றுக் குடும்பத்தில் மூத்தவரான ரவிச்சந்திரன் சொல்ல

“அதெல்லாம் சரி தாங்க.. முதல்ல மஹாவுக்குப் பிரசவம் முடியட்டும்……. பச்சப் புள்ளையை வீட்ல வைச்சிட்டு நம்ம கல்யாணம்லாம் செய்ய முடியாது..” என அவரது மனைவி சுலோச்சனா சொல்ல

“நீ சொல்றது சரிதான் சுலோ… ஆனா நம்ம என்ன நாளைக்கேவா கல்யாணம் வைக்கப்போறோம்…. முதல்ல நல்ல வரனா நீங்க எல்லாரும் பாருங்க... பேசி வைப்போம்… நம்ம மஹாவுக்குப் புள்ளப் பொறந்து மூணு மாசம் ஆன பின்னாடி கல்யாணம் வைச்சிக்கலாம்..” என்றார் மதுரவல்லி.

“ஆத்தா சொல்றது சரிதான்.. அப்போதான் நானும் ஃப்ரீயா கல்யாணத்துல கலந்துக்க முடியும்..” என்றாள் பிரசவத்திற்குத் தாய் வீடு வந்த மஹாலஷ்மி.

“சரிம்மா… நாங்க நல்ல வரனா பார்த்து வைக்கிறோம்… இங்க நம்ம சுத்து வட்டாரத்திலேயே பார்ப்போம்…. பிடிச்சிருந்தா சும்மா தட்டு மாத்திப்போம்… ஒரு நாலு மாசம் கழிச்சு கல்யாணம் வைச்சிக்கலாம்… இப்போவே பார்க்க ஆரம்பிச்சா தான் முடியும்…” என்று ரவிச்சந்திரன் சொல்ல, அதையே அனைவரும் ஆமோதித்தனர்.

அவர்கள் அறியவில்லை அவர்கள் வீட்டு ராணி ஒரு ராஜாவின் மனதில் இடம்புகுந்ததை…!!!

ஆட்டம் தொடரும்..!!!
 
Yakka.. ennaka oru kaasa nee kattu nu sonnathula kaathala.. :rolleyes:o_O:unsure::oops: enna nadanthathu avan vaalkaiyila..

Ithellam romba over.. oru tharava vittu kudukkalaam rendu tharava kudukalaam athuku mela vaalkai poora vittu kudukka mudiyuma adei raja nee raniya kattikitaa vera rani ya paarpa.. ?? ipadilaam un ego ku theene poda maatta paathuko
 
Top