Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 8

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hi dear ladies and girliessss...????
thanksssssssssss so much??????

'காதல் என்பது சேர்வதல்ல....வாழ்வது....' - இதான் tagline.

here comes the next update

share your views friendsssssss...

-------------------------------------------------------------------------------------------------

காதல் 8:

“ராஜா மாதிரி உனக்கு மாப்பிள்ளை வருவார்னு நான் சொன்னேன்… அது சரியா போச்சு பார்த்தியா மது…?” என்றபடி வந்தார் மோகனா சித்தி.

மதுவின் அறையில் என்ன புடவை கட்டலாம் என ஹரிணி தேர்வு செய்ய , மதுவோ மனமெல்லாம் பயப்புயல் அடிக்கக் கலங்கி போய் அமர்ந்திருந்தாள். கடவுளிடம் தீராத வேண்டுதலோடு அமைதியாய் இருந்தாள்.

‘எப்படியாவது இந்த சம்மந்தம் நடந்து விடக்கூடாது’ என்பதையே கடவுளிடம் கோரிக்கையாக வைத்தாள். இனி அவளின் செயல் என்று ஒன்று இல்லை என்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

‘எல்லாம் அவனின் செயல் தான்’

மோகனா கூறியதைக் கேட்ட ஹரிணி, “என்னத்த சொல்றீங்க.. மாப்ள பேரு ராஜாவா…?” என ஆர்வமாய்க் கேட்க

‘மாப்பிள்ளையா…? என்னதிது இப்படி முடிவே செஞ்சிடுவீங்களா..?’ என மனதில் ஹரிணியை அர்ச்சித்தாள் மது.

“ஹே..! ஹரிணி… உனக்கு இன்னொரு விசயம் சொன்னா நீ துள்ளிக் குதிப்ப…… அந்த மாப்ள உன்னோட ஃப்வேரைட் சிங்கர் ராஜ் நந்தன்… தெரியுமா?” என்று சொல்ல, மதுவின் மனம் மூளை எல்லாம் ஒரு நொடி ஸ்தம்பித்தது.

மனமெங்கும் மழைச்சாரல் என்று சொல்வதை விட வெள்ளம் தான். அளப்பரிய மகிழ்ச்சி அவளின் முகத்தில். அன்றில் தனது ஜோடியுடன் சேரப் போகிறதல்லவா…?

பாலைவனமாய்ப் போய் விடுமோ என்ற பயத்தில் இருந்தவளுக்குப் பன்னீர் நதியென இப்படி ஒரு செய்திக் காதில் கேட்க அவளால் அதை நம்பக் கூட முடியவில்லை. சில நேரங்களில் அதீத சந்தோசத்தையும் மனம் நம்ப மறுக்குமல்லவா..?

எங்கே கேட்டச் செய்தி பொய்யாகி விடுமோ என்ற பயமும் நிஜமாக இருக்க வேண்டும் என்ற தவிப்பும் சேர்ந்து கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது. அவள் செய்தப் புண்ணியம் அவளின் மனதை அரித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஹரிணி மோகனாவிடம் கேள்வி கேட்க, அந்த பதில்களில் மதுரவசனியின் மனதுக்குள் தேனருவி திகட்டத் திகட்ட ஓடியது.

“என்னத்த சொல்றீங்க…….?” என ஹை பிட்சில் ஹரிணி கத்த

“அம்மாடி ஹனி.. கொஞ்சம் அமைதியா பேசு……. வெளில வீட்டாளுங்க எல்லாரும் உட்கார்ந்திருக்கவோ… சரியா….?” என மருமகளை அதட்ட

“ஹி ஹி.. ஒரு எக்சைட்மெண்ட் தான் அத்த.. நிஜமா நந்தனா நம்ம வீட்டு மாப்ள….”

“ஆமா… ஆமா…. இப்போதான் நாங்க கேட்டதுக்குப் பெரிய மாமா சொன்னாரு…… நந்தனோட குடும்பத்துக்கு பூர்வீகம் கும்பகோணமாம்…… அவருக்கு மியுசிக்ல ஆர்வம் அதிகம்னால அவர் பாடகராகிட்டாராம்…. பெரிய மாமா விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல மாதிரியாம்…. ஒரு நியூஸ் பேப்பர்ல மட்டும் இவரை ஏதோ நடிகை கூட இணைச்சு செய்தி வந்திருக்கும்போல.. ஆனால் நம்ம வீட்டாளுங்க விசாரிச்சதுல.. அந்த நடிகை மேல தான் தப்பாம்…. அந்த பத்திரிக்கை ஆபிஸ்லையும் அப்படிதான் சொன்னாங்க.. நம்ம பங்காளி வீட்டு பையன் திலக் டைரக்டர் தானே… அவன்ட்ட கேட்டதுக்குக் கோபம் வரும்.. ஆனால் ரொம்ப ரொம்ப நல்லவர்னு சர்டிஃபிகேட் கொடுத்தானாம்.. அவனே ஒருத்தர புகழ்ந்து பேசுறதுன்னா.. அதெல்லாம் அதிசயம் தான்….. அவங்க அம்மாவுக்கு நம்ம பொலுவாயன் அதான் ஆனால் ஒன்னு மாமா தூரத்து சொந்தமாம்…. அவர் நம்ம மது பத்திச் சொல்ல அவங்களுக்கும் பிடிச்சுப் போய் நந்தனோட அப்பா ஆபிஸ்ல வந்து பெரிவங்ககிட்டப் பேசியிருக்காரு…. ரொம்ப மரியாதையான குடும்பம் போல… நம்ம மாறி பிஸீனஸும் இருக்கு.. அதனால நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் ஃப்ளாட்…” என விளக்க

“அத்த….. உங்க வாய்க்குச் சர்க்கரைப் போடனும்.. அன்னிக்கு சொன்ன மாதிரியே மதுவுக்கு ராஜாவே மாப்பிள்ளையா வந்துட்டாரு பாருங்களேன். செம செம… என்ன ஒரே ஒரு வருத்தம் நந்தனை இனி சைட் அடிக்க முடியாது….. எனக்கு அண்ணனாயிட்டாரே….. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குத்த… என்ன மது… உனக்கும் சந்தோசம் தானே… இன்னிக்குக் கூட சாரோட பாட்டுத்தானே கேட்டே நீ…”

மதுவும் மனதில் மலையென எழுந்த உணர்வுகளை அடக்க வழி தெரியாது , தன்னை நிலைப்படுத்தி “நம்ம வீட்ல எது செஞ்சாலும் எனக்கு ஓகே அண்ணி…” எனச் சொல்ல

“அதெல்லாம் சரிதான்.. உனக்கு ஸ்பெஷலா எதுவும் சந்தோசம் இல்லயா… ஒரு சிங்கர்…. அதுவும் உனக்குப் பிடிச்சவர் உனக்கு மாப்பிள்ளையா வரப்போறாரே….” என்று ஹரிணி சொல்ல

“நீ வேற ஹனிம்மா… அத்தை சினிமாவுல பாடுறார்னு சொன்னதும் ஒத்துக்கலயாம்… அப்புறம்…. பெரியவர் தான் சமாதானம் செஞ்சிருக்கார்.. நம்ம ஊர்ப்பக்கம்… ஆனால் ஒன்னு மாமா சொன்ன சம்மதம்… சினிமாவுல இருக்கறவங்க எல்லாரும் ஒன்னும் தப்பானவங்க இல்ல.. இந்த தம்பி நம்ம தியாகராஜர் ஆராதனைக்குக் கூட திருவையாத்துல பாடுவாப்புல…. கர்நாடக இசை கத்துக்கிட்டவர்.. நம்ம ஊர்ல இருந்துட்டு சங்கீதம் தெரியாம இருக்க முடியுமா என்ன…? அப்படின்னு ரொம்ப சமாளிச்சு ஒத்துக்க வைச்சிருக்கார்…. இப்போ நந்தன் அமெரிக்காவுல இருக்காறாம்ல… அதான் அவர் வீட்டு சனங்க மட்டும் பார்க்க வராங்களாம்…” என்றார் மோகனா.

“ஓ…. இது வேறயா….. அவர் பின்னணி பாடகர் தான் அத்த… ஒன்னும் ப்ரச்சனையில்ல….. சரி மது. நீ நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்ல….?” என ஹனிக் கண்ணாகக் கேட்க

“அண்ணி…..எனக்குப் பிடிச்ச சிங்கர்.. அவர் குரல கேட்ருக்கேன்….. அதனால் ஒரு பிடித்தம் உண்டு அவ்வளவுதான்.. ஆனா இப்போ ஹாப்பி தான்…” என்று சமாளித்து வைத்தாள்.

“ஹரிணிம்மா… புள்ள கத்துறான் பாரு.. போய் சோறு ஊட்டி தூங்க வை அவன… அந்திக்கு அப்போதான் அமைதியா இருப்பான்..” என சுலோச்சனா குரல் கொடுக்க, ஹனியும் மதுவிடம் ,

“மது உனக்கு இந்த சேலை நல்லா இருக்கும்… ஓகேவான்னு பாரு… நான் அயர்ன் பண்ணி தரேன்… இதுக்கு மேட்சா செட் இருக்கான்னுப் பார்த்து எடுத்து வைக்கிறேன்.. இப்போ போய் அந்த குட்டிச் சாத்தான தூங்க வைக்கிறேன்…” என்றபடியே மதுவின் அறையிலிருந்து வெளியேறினாள்.

மோகனா மதுவிடம், “மதும்மா….. முதல் முதல்லா பொண்ணுப் பார்க்க வராங்க.. கொஞ்சம் பயம் பதட்டமெல்லாம் இருக்கும்…… ஆமா நான் கேட்கனும் நினைச்சேன் பெரியப்பா சொன்னாரு… நீ வொர்க் செய்யுற டைமண்ட் குரூப்ஸ் அவங்களுதானமே… அப்படியா… நீ அப்போ நந்தனைப் பார்த்திருக்கியா…?” எனக் கேட்க

“இல்ல சித்தி…. நான் அவர டீவியில தான் பார்த்திருக்கேன்…. அங்க வேறொருத்தர் தான் எம்டி….. அவங்கப்பா தான் கம்பெனியைப் பார்த்துக்கிறார்…. எனக்கே நீங்க சொல்லிதான் நந்தன் சாரோட கம்பெனின்னு தெரியும்….” என டன் டன்னாக தன்னெஞ்சறியப் பொய்யுரைக்க

“ஓஹ்……. ஆமா….. அவர் தம்பி தான் கம்பெனியைப் பார்த்துக்கிறாராம்… பிரபலமா இருக்கறதால குடும்பத்துக்குத் தொந்தரவு வரக்கூடாதுன்னு தனியா இருக்காராம்.. அப்போ நீ பார்க்க வாய்ப்பில்லதான்…” என மோகனாவே தனது கேள்விக்கு விடையும் சொல்லிக் கொண்டார்.

“சரி மது.. கொஞ்சம் நேரம் நீ தூங்கி எழு.. அப்போதான் அந்திக்கு நல்லா இருப்ப.. ரெண்டு நாளா விசேஷத்துல ஓய்ஞ்சு போயிட்ட டா…. முதல்ல வந்து சாப்பிடு அப்புறமா செத்த நேரம் தூங்கு” என்று சொல்லிவிட்டுச் செல்ல மதுவும் சாப்பிட்டு விட்டு அவளறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அப்படியே தரையில் அமர்ந்தவளுக்குக் கண்களில் தலைக்காவிரி போல் கண்ணீர் கரைப் புரண்டு ஓடியது.

சிறிது நேரத்தில் அவளுக்கு உயிர் வரை வலித்ததுக்கு விழி நீரே வலி துடைப்பதாய் அமைந்தது.

பெண்களால் என்றுமே சுய நலமாய் சிந்திக்க முடியாது. அப்படியே இருந்தாலும் தன் குடும்பம் என்று தான் சிந்தனை ஓடும். மதுவும் அப்படித்தான் அவளால் குடும்பத்தின் நம்பிக்கையையும் உடைத்துத் தன் காதலை சொல்லவும் முடியவில்லை காதலனின் நம்பிக்கையைப் பொய்யாக்கவும் துணிவில்லை. அரக்கனுக்கும் அலைக்கடலுக்கும் நடுவில் நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் தவித்தவளுக்கு மனம் கொண்ட மன்னவனே மணாளனாக வரப்போகிறான் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாத நிம்மதியை அளித்தது.

அதே நேரம் நந்தன் மீது ஆத்திரமாக வந்தது. சில நொடிகள் தான் என்றாலும் வேறாரோ மாப்பிள்ளைப் பார்க்க வருகிறார்கள் என்றச் செய்தியைக் கேட்டு அவள் துடித்த துடிப்பென்ன…? அவள் போன் செய்ய வேண்டாம் என்று சொன்னால் அதற்காக இப்படி ஒரு முக்கியமான விடயத்தைக் கூடச் சொல்ல மாட்டானா அவன்.. சொல்ல வேண்டும் என்ற அறிவில்லாத மட்டி மங்குனியா அவன்…?

கோபத்தோடு செல்லை எடுத்து அவனது இந்திய எண்ணுக்கு அடிக்க, அதை எடுத்தது ரகு,

“ஹலோ.. நந்தன்… உங்க மனசில என்ன நினைச்சிட்டு இருக்கீங்க… அவ்வளவு திமிரா உங்களுக்கு..?” என இவள் கோபத்தில் பொரிய

ரகுவோ பதறி, “அய்யோ அண்ணி.. நான் ரகு…. அண்ணா யு.எஸ்க்குப் போன் எடுத்துட்டு போகல…. இந்த போன் எங்கிட்ட தான் இருக்கும்…” எனச் சொல்ல

‘இவனால.. என் மூளை வேலையே செய்ய மாட்டேங்குது……. லூசு மாதிரி ஃபோன் பேசுறேன்…. அமெரிக்கா நம்பர் கூட வாங்கி வைக்கல……. இவனைப் பார்த்த நாளிலேர்ந்து என்னை எப்பவுமே இந்த நியூஸ்காரங்க மாதிரி பதட்டமாவே வைச்சிருக்கான்…. லூசு நந்தன்..’ எனத் தன்னவனை மனதில் தாளித்தாள்.பின்னர் ரகுவிடம்

“ஓ… சாரி.. சாரிங்க… நான் அவர்னு நினைச்சிட்டேன்… அவரோட நம்பர் தர முடியுமா….”

“அண்ணா அங்க போன்லாம் எடுத்துட்டு போகல… அங்க உள்ள மானேஜர் கிட்ட தான் நான் பேசுவேன்… அண்ணாவுக்கா எனக்குப் பேசனும்னு தோணிச்சின்னா கால் பண்ணுவார்….. அது மட்டுமில்லாம இப்போ மிட் நைட் வேற அங்க…” என ரகு நினைவூட்ட

‘மது…. அவனோட சேர்ந்து… இல்ல… இன்னும் சேரல… நினைச்சுத்துக்கே அவனை மாதிரி மங்குனி மதுவாகிட்ட…. ஆனா இப்போ எப்படி இதை அவன்ட்ட சொல்றது…’ என அவளின் யோசனை ஓட,

ரகுவே, “அண்ணா வீட்ல இன்னிக்கு உங்களைப் பார்க்க வராங்களாமே அதைப் பத்தி பேசனுமா..” என எடுத்துக்கொடுக்க

“அப்போ… உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் தெரிஞ்சே எங்கிட்ட சொல்லல……. ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சிடுறாரு அவரு.. இது எவ்வளவு முக்கியமான விசயம்ங்க…..” என இவள் குறைபட

“அண்ணி…. ப்ளீஸ்.. அண்ணாவுக்கே இந்த விசயம் தெரியாது….” என ரகு கூற அதில் ஆச்சரியமானவள் அடுத்த அவன் சொன்னதில் அதிர்ச்சியானாள்.

“அண்ட்… இப்போதைக்கு அண்ணாவுக்கு இது தெரியவும் வேண்டாம்….. அவருக்குத் தெரியாம தான் அவர் வீட்ல உங்களைப் பொண்ணுக் கேட்டு வராங்க…” என்று உண்மையைச் சொல்லிவிட மதுவுக்கு மூளை குழம்பிப் போனது.

‘நந்தனுக்கு சொல்லாமல் ஏன் வரனும்..? அவருக்குத் தான் என்னைப் பிடிக்குமே… அவரே வந்து பேசுறேன்னுதானே சொன்னார்…’ எனக் கேள்விகளை அவளைத் துளைத்தெடுக்க அதையெல்லாம் ரகுவிடம் தொடுக்க, அவனோ,

“உங்க கிட்ட எல்லாத்தையும் அண்ணாதான் சொல்லனும்.. என்னால இப்போதைக்கு இதைதான் சொல்ல முடியும்…… அண்ணாவுக்கும் அவர் ஃபேமிலிக்கும் ப்ரச்சனை… சில வருசமாவே… பேச்சு வார்த்தையே இல்ல… அவருக்கு தன்மானம் ஜாஸ்தி… குடும்பமா இருந்தா கூடக் கௌரவம் எதிர்ப்பார்ப்பார்…… அவரே தனியா வந்துப் பொண்ணுக் கேட்டாலும் கேட்பார் குடும்பத்தோட வர மாட்டார்…. அப்படி தனியா வந்தா உங்க வீட்ல தருவாங்களா என்ன…? அதான் அவர் உங்களை விரும்புறது எனக்குத் தெரியும்… தீபன் அண்ணாவுக்கும் தெரியும்…… அதனால் அவர் அமெரிக்காவுல இருக்க நேரத்தில உங்க வீட்ல பேசி சம்மதிக்க வைச்சிக்கலாம்னு நினைச்சோம்….. உங்களுக்குப் புரியுதா அண்ணி…?”

“ம்ம்…” என்றவளுக்கு தன்னைவன் ஒரு புரியாதப் புதிராகவே தெரிந்தான்.

ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்தப் புதிராக போனதுதான் அவளது துர்திர்ஷ்டம்.
 
“இப்போ.. அண்ணாவுக்கு இது தெரிஞ்சா எப்படி ரியாக்ட் செய்வார்னு சொல்ல முடியாது. அவரோட கேரக்டரை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்….. உங்க வீட்டாளுங்களை சம்மதிக்க வைக்கறது எங்க பொறுப்பு.. உங்க ஆளை சமாளிக்கறது உங்க பொறுப்பு அண்ணி….” என நிதர்சனத்தை சொன்னான்.

‘இவனுக்கு ராஜ் நந்தன்னு பெயரு வைக்கறதுக்குப் பதிலா சத்யராஜூன்னு பெயர் வைச்சிருக்கலாம்..கேரக்டரைப் புரிஞ்சிக்க முடியல….அடே என் ஆளோட ஆல் இன் ஆளே… என் ஒட்டு மொத்தக் குடும்பத்தைச் சமாளிக்கத் தேவைப்படுற எனர்ஜி உங்க நொண்ணன் ஒருத்தன சமாளிக்கக் கூடப் போதாதே…… கடவுளே ஐஞ்சு நிமிசம் கூட சந்தோசமா இருக்க முடியலயே…’ என்று வருத்தமும் கடுப்பமுமாய் வந்தது மதுரவசனிக்கு.

‘அணு அணுவாய் சாக நினைத்தால் சிறந்த வழி காதல் தான்’ என்பது அவளுக்கு நினைவு வந்தது.

“சரிங்க…. நான் பேசிக்கிறேன்…. ரொம்ப தாங்க்ஸ்…”

“சரிங்க அண்ணி… நீங்க இப்போதைக்கு உங்க வீட்டைச் சமாளிக்க வைரம்மா போதும்…. ஆனா அண்ணனைச் சமாளிக்க உங்களால மட்டும் தான் முடியும்… பார்த்துக்கோங்க..” என்று சொல்லி விட்டுப் போனை வைத்தான்.

அதன்பின் எங்கே தூங்கி எழுவது..? நேரம் வேக வேகமாய் ஓட, மதுவை மிதமான அலங்காரத்தோடு தயார் செய்தனர் ஹரிணியும் மோகனாவும். விருந்தினருக்குப் பலகாரமெல்லாம் சுலோச்சனாவின் கைமணத்தில் தயாராக, பூம்பொழில் வீட்டை எல்லாம் ஒழுங்குப்படுத்தினார்.

மது தயாரான பின்பு அவளிடம் வந்த அவளது பெரியப்பா ரவிச்சந்திரன் , “ராஜாத்தி… என்னடா மாப்பிள்ளை பத்தி சித்தி சொன்னாங்களா….. உன் கம்பெனி கூட அவங்களுதுதானே… நீ அவரை பார்த்துறிக்கியாம்மா..?” என்றவரின் கேள்வி அவளை ஆராய, அவளும் திடமாய் “சித்தி சொல்லவட்டிதான் எனக்குத் தெரியும் பெரியப்பா……” என்றுப் பொய்யுரைத்தாள்.

அவரும், “நல்லா விசாரிச்சாச்சு.. நம்ம வீட்டுப்பொண்ணை வரவன் போறவங்க்கா கட்டிக்கொடுப்போம்…. மாப்பிள்ளைப் பாடுவாராமே நம்ம ராம் சொன்னான்….. உனக்கேத்த மாதிரி ராஜாடா….. இன்னிக்கு இந்த சம்மந்தம் எப்படியாவது முடிஞ்சிடும்… பார்ப்போம்.. அந்த பிரகதீஸ்வரன் தான் காப்பாத்தனும்….” என்றபடியே போனார்.

ப்ரியா பட்டு பாவாடைக் கட்டிக் கொண்டு அலங்காரத்தோடு இருக்க, அதைக் கண்ட ஹரிணி,

“என்ன ப்ரீகுட்டி.. இவ்வளவு மேக் அப்…..”

“அண்ணி….. அக்காவுக்குக் கல்யாணம்ல….. ஃபோட்டோலாம் அப்போதான அழகா வரும்……. மஹாக்கா கல்யாணத்துல தான் இந்த அம்மா நான் சின்னப்பிள்ளையா இருந்தேன்னு நல்லாவே மேக் அப் போடல…… நான் நிறையா போட்டுலையும் இல்ல….. அதான்…… மதுக்கா கல்யாணத்துல நான் நல்லா டிரஸ் போட்டுப் போட்டுவுக்கு நிப்பேனே” என அவள் ஆசையைச் சொல்ல

“வாயாடி… கொஞ்சம் வாயை அடக்கி வைச்சிக்கோ…. அவங்க வரும்போது இப்படி பேசக்கூடாது… புரியுதா….? ஹனி.. நீ இந்த வானரத்தையெல்லாம் கைக்குள்ள அடக்கி வைச்சிக்கோ…” எனப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்ல,

அந்த பக்கமாய் வந்த ஸ்ரீராமின் காதில் விழ, “வானரத் தலைவிக் கிட்ட வானரத்தையெல்லாம் ஒப்படைக்கிறீங்க சித்தி… உங்க அறிவைக் கண்டு நான் வியக்கேன்…” என கிண்டலடிக்க, ஹனியோ அவனை முறைக்க, அவன் சிரித்துக் கொண்டே ஓடினான்.

ஸ்ரீவத்சனும் அமுதனும் படிப்பதைக் கூட விட்டு விட்டு ஆர்வமாய்
எல்லா வேலைகளையும் செய்தனர். ஸ்ரீவாசம் குடும்பத்தினர் அனைவரிடமும் உற்சாகமும் பரபரப்பும் காணப்பட்டது. மதுவுக்கு மட்டுமே மனது சோர்வாய் இருந்தது. நந்தனை நினைத்து வேதனையாய் இருந்தது. முழுதாக அவளால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனை மட்டும் மனதில் ஓடியது. அதை தவிர வேறெதுவும் அவள் கண்ணிலோ கருத்திலோ படவில்லை.

மாலை நேரத்தில் ஸ்ரீவாசத்தின் தோட்டத்தில் மஞ்சளும் சிவப்புமாய் அந்தி மந்தரைப் பூக்கள் பூக்கத் துவங்கிய நேரம், ராஜ்நந்தனின் குடும்பத்தினர் மதுரவசனியின் வீட்டை அடைந்தனர்.

வரவேற்பு சம்பிரதாயங்கள் முடிந்து மதுரவசனியைப் பார்த்த வைரத்துக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. ஏற்கனவே அவளைப் பற்றி ராஜதீபன் சொல்லியிருந்தாலும் கூட அவருக்குத் தன் மூத்த மகனுக்கு மனைவியாகப் போறவள் எப்படி இருப்பளோ என்ற பயம் இருந்தது. மஞ்சள் பூசிய முகத்தில் கூடுதலாய்ப் புன்னகையும் பூசிக்கொண்டும் காதில் சிறிய வைரத்தோடு மின்ன வைரமாய் அமர்ந்திருந்த வைரத்தையும் அவரது அன்பான பேச்சும் மதுவுக்கும் அவளது குடும்பத்துக்கும் மிகவும் பிடித்துப் போனது.

அலட்டல்களோ பந்தாவோ இன்றி இருந்தப் பண்பாக இயல்பாய் உரையாடிய சுந்தர் ராஜனையும் தீபனையும் கூட அனைவருக்கும் பிடித்துப் போனது. முக்கியமாக மதுரவல்லிக்கு சினிமாக்காரன் என்று நந்தன் மேல் இருந்த சிறு சுணக்கம் கூட நீங்கியது.இந்த சம்பந்தம் அமைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இருதரப்பும் பேசிய பின் வைரம் மதுரத்தைப் பார்த்து, “அம்மா… எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு….. எங்களுக்கு முழு சம்மதம்….. ராஜாவுக்கும் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்காம்…. எப்போ கல்யாணம் வைச்சிக்கலாம்னு நீங்க சொல்லுங்கம்மா…?” எனக் கேட்க

ரவிச்சந்திரன் தாயாரைப் பார்க்க அவரின் தலையசைப்பைப் பெற்றவர் பேசினார்.

“எங்களுக்கும் இந்த சம்பந்தத்துல.... சந்தோசம் தான்.. எங்க பொண்ணு எங்க விருப்பத்தை மீறமாட்டா……. இப்போ எங்க வீட்டுப் பெரியப் பொண்ணு மாசமா இருக்கா… அவளுக்குப் பிரசவம் முடிஞ்சதும் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை வைச்சிகலாமா சுந்தரம்.. நீங்க என்ன சொல்றீங்க…?” என அவரின் கருத்தைச் சொல்ல

மஹாலஷ்மியை பார்த்த வைரம் , “எத்தனாவது மாசம்மா…?” என

“எட்டு ஆரம்பிச்சிடுச்சுங்க… இப்போதான் வளைகாப்பு முடிஞ்சதும்மா…..” என மஹா சொல்ல

“அத்தை சொல்லு ராசாத்தி…. அம்மான்னு வேற யாராவது என்னை சொன்னா… என் பொண்ணு கிருத்திக்கும் ராஜாவுக்கும் கோவம் வந்திடும்….” என்றவருக்கு ராஜாவின் நினைவில் கண்கலங்க, அதை கடினப்பட்டு மறைத்தார்.

அவரின் வெள்ளந்தியானப் பேச்சைக் கேட்டு அனைவரின் முகத்திலும் புன்னகை விரிந்தது

“பொண்ணை அழைச்சிட்டு வந்திருக்காலாமே ஆத்தா…. பொம்பளைப் புள்ளையைத் தனியாவா விட்டு வந்தீங்க..” என மதுரவல்லி கேட்க

“அவளுக்குப் பரீட்சை இருக்குமா… வீட்ல எங்க அத்தை இருக்காங்க.. அவங்க பார்த்துப்பாங்க… ஒன்னும் பயமில்ல…” என்றவர் மஹாவிடம் ,

“கொஞ்சம் குனிஞ்சு நிமிந்து வேலை செய்ம்மா…. நிறையா பழம் சாப்பிடு.. சூடு அப்போதான் குறையும்.. சுகப்பிரசவம் ஆகும்டா….” எனச் சொல்ல “சரிங்கத்தை” என்றபடி மஹாவும் கேட்டுக்கொண்டாள்.

பூம்பொழிலுக்குத்தான் இதில் மிகவும் திருப்தி. மகளுக்கு நல்ல மாமியார் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவர் முகம் மின்னியது.

சுந்தர ராஜன் ரவிச்சந்திரனிடம், “ஒன்னும் பிரச்சனையில்ல.. ரவி.. நீங்க சொன்ன மாதிரியே பொண்ணுக்கு முதல்ல பிரசவம் முடியட்டும்.. அப்புறம் குட்டிப்பையனோட சித்தியோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திடலாம்..” என்று சொல்ல, அதன் பின் வெற்றிலைப் பாக்கு மாற்றி நிச்சயத்தை உறுதி செய்தனர். காபி , பலகாரம் என இத்யாதி எல்லாம் முடிந்த பின் அவர்கள் விடைப்பெற்றுச் சென்றனர்.

சம்மந்தம் நல்லபடியாக முடிந்ததில் மதுரவசனியின் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்து போனது.
 
ஆனால் தலைவிக்கோ தலைவனை நினைத்து தலைவலியாய் இருந்தது.
நிச்சயம் முடிந்தப் பதினைந்து நாட்கள் ஆனப் பின்…..

அமெரிக்காவிலிருந்து தன் இல்லம் வந்த ராஜ் நந்தன் உச்சகட்ட டென்ஷனில் இருந்தான். ரகுவோ வழக்கம்போல் அவனின் சூட்டில் காய்ந்து போனான்.

அதற்குக் காரணம் அவனுக்கும் மதுரவசனிக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டதை முன்னணி செய்தித்தாளில் வரும்படியாக விளம்பரம் செய்திருந்தார் அவனது தந்தை சுந்தர்ராஜன். மகன் குணமறிந்தவர் அவனால் தடுக்க முடியாதபடி இப்படி அறிவிப்பு வெளியிட்டார். எங்கே தங்களின் மீதுள்ள கோபத்தில் அவன் விரும்பிய பெண்ணைக் கூடத் தாங்கள் பேசி முடித்தப் பெண்ணை வீம்புக்காய் வேண்டாம் என்றுக் கூறி விடுவானோ என்று முன்னெச்சரிக்கையாய் இதைச் செய்தார்.

கௌரவம் பார்க்கும் அவன் இப்படி அறிவிப்பு வெளியானப் பின் தனது கௌரவத்துக்காக இதை தடுக்க மாட்டான் என நினைத்தார். ஆனால்
ராஜ்நந்தன் இந்தப் புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை அவர் அறியவில்லை.

“ஏன் டா… நீ கூடவா எனக்கு இப்படி துரோகம் செய்வ…. ராஸ்கல்… உன்னை ….” என்று நந்தன் பல்லைக் கடித்தான்.

ரகு பேச வர, ராஜாவோ அவனை பேசவிட்டால் தானே, “நான் கேட்டேனா.. அவங்களைப் போய் பேசுன்னு……. இவங்க சங்கத்தாமே வேண்டாம்னு தானே நான் இருக்கேன்.. சொல்லுடா… யார் சொன்னா…. அவங்களுக்கு நான் மதுவை விரும்புறதை… டெல் மீ ரகு..” எனச் சீற

“நீங்க தான நம்பர் வாங்க சொன்னீங்க.. அப்போவே உங்க தம்பிக்கு டவுட் வந்திடுச்சு….. இதுல போய் அவங்க ஆபிஸ்ல பேசினா அவருக்குத் தெரியாதா.. எங்கிட்டக் கேட்டாரு….. நானும் ஆமான்னு சொல்லிட்டேன்.. இப்போ என்னாச்சுண்ணா….. நல்லதுதானே செஞ்சிருக்காங்க.. இன்னும் மூணு மாசத்துல மது அண்ணி உங்க கூட இருப்பாங்க…..” என்று சமாதானம் செய்ய

“அந்த ஈர வெங்காயத்தை செய்ய எனக்குத் தெரியாதாடா…. நான் எதுக்கும் லாயக்கில்லன்னு நினைச்சாங்கள அவங்க….. என் விசயத்தைக் கையாள அவங்க யாருடா…?..டேமிட்…….. என் வாழ்க்கையில எதுவா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யனும்….. அது மட்டுமில்லாம அவருக்கு என்ன திமிர் இருந்த அந்தாளு பேப்பர்ல ஆட் கொடுப்பாரு… ஏன் நான் இப்போ நிறுத்த மாட்டேனா….” என்று சொல்ல அதில் ரகு அதிர்ந்து நிற்க

“இவங்களை சும்மா விட்டது தப்பா போச்சு..” என்றபடியே விரைவாய்க் காரை எடுத்தவன் ராஜபவனத்துக்குச் சென்றான்.

எந்த ஒரு செய்கையால் மகனைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் எனச் சுந்தர் ராஜன் நினைத்தாரோ அதுவே அவனைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்தது. இப்படி செய்தித்தாளில் அறிவிப்புக் கொடுத்தது அவனை கார்னர் செய்வது போல் தோன்ற அதை அவன் முற்றிலுமாய் வெறுத்தான்.

மகனது வரவை எதிர்ப்பார்க்காத வைரத்தின் கண்கள் வைரமாய்க் கண்ணீர்த்துளிகள் சிந்த ,

“ரா……………..ஜா……. இப்போதான் உனக்கு வழி தெரிஞ்சதாடா… அம்மா மேல கோவம் போகலயா உனக்கு…………….?” என அழுதுக்கொண்டேக் கேட்க

“ நீங்க யாருமே வேண்டாம்னு தானே நான் ஒதுங்கிப்போறேன்… அப்படியும் வந்து ஒட்டிக்கிட்டா என்ன அர்த்தம்……. எனக்குன்னு ஒருத்தியைப் பிடிச்சது.. அது உங்களுக்குப் பொறுக்கல இல்ல… இப்படியே நான் சாகற வரைக்கும் தனி மரமா நிக்கனும்னு கங்கணம் கட்டிட்டு சுத்திறீங்களா…… நீங்க போய் பேசி முடிச்ச சம்மதம் எனக்குத் தேவையே இல்லை…… எப்படி அவள கல்யாணம் செஞ்சுக்கனும்னு எனக்குத் தெரியும்…” என்று முகம் சிவக்கக் கத்தியவனைக் கண்டுப் பயந்தவர்,

“ராஜா.. ப்ளீஸ்பா…. உன் கல்யாணத்தைப் பார்த்தப் பின்னாடி நாங்க யாரும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டோம்பா……. தயவு செஞ்சி இப்படில்லாம் பேசாதடா…” எனக் கண்ணீர் மல்கக் கெஞ்ச

“நீங்க வந்தாலே என் கல்யாணம் நடக்காது… ஓகே…. இனிமே உங்கக் குடும்பத்திலேர்ந்து யாரும் என் வாழ்க்கையில தலையிடக் கூடாது… அவ்வளவுதான் சொல்வேன்…” என்றவன் தனது காரை எடுத்துக் கொண்டு வீடு வந்தான்.

அதற்குள் வைரம் போன் செய்து ரகுவிடம் விசயத்தை சொல்லி அழ, ரகு உடனே மதுரவசனிக்குப் போன் செய்தான். அவளுக்கோ இதயத்துடிப்பு வெளி வரைக் கேட்டது. அவனது கோபம் தான் அவள் அறிந்த ஒன்றாயிற்றே..!!

மதுரவசனியைத் திருமண நிச்சயத்துக்குப் பின் வேலைக்குப் போகக் கூடாதென அவர்கள் வீட்டினர் சொல்ல, அவளுக்கோ நந்தனிடம் பேச வேண்டும் அவனுக்கு அனைத்தையும் புரிய வைக்க வேண்டுமென்று தோன்ற, அதை ஊரிலிருந்தால் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவள், ரகுவிடம் சொல்ல, வைரம் போன் செய்து மதுரவல்லியிடம் ,

“என்னம்மா மது இன்னும் ஆபிஸ் வரல…..உடம்புக்கு எதாவதா…?” என இயல்பாய்க் கேட்பது போல் கேட்க, திருமணம் நிச்சயம் செய்தப் பின் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைப் பார்ப்பது சரிவராது எனச் சொல்ல,

வைரமோ, “இல்லமா… நாளைக்குக் கல்யாணத்துக்குப் பின்னாடி மதுவும் கம்பெனி பொறுப்பைப் பார்த்துக்கனும்…. அதுக்கு இப்போவே பழக்கப்படுத்திக்கனுமா… அவனும் பாட்டுல போயிட்டான்.. சின்னவனே எப்படி சமாளிப்பான். பெரியவன் சார்பா அவன் பொண்டாட்டி தானேமா பார்க்கனும்.. நாங்க அவளை பத்திரமா பார்த்துக்கிறோம்மா….” என ஒரு வழியாக அவரை சரிகட்டி மருமகளின் அவாவை நிறைவேற்றி வைத்தார் வைரம்.

அதனால் சில நாட்களுக்கு முன் தான் மீண்டும் சென்னை வந்தாள் மது. அவள் நினைத்தாற் போலவே நந்தனின் செயல் அமைய, அவனை சமாதானப்படுத்த வேண்டி அவனுக்குப் போன் செய்தாள். அதை எடுத்தவன்,
அவள் பேச வாய்ப்புக் கொடுக்காதவனாய் ,

“நீ இப்படி செய்வேன்னு நான் நினைக்கல மது…. ஐ டிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ்…..” என்றான் கடுப்பாக.

“நந்தன் ப்ளீஸ் நான் சொல்லவரதை கேளுங்க….. நம்ம ஆசைப்பட்ட மாதிரியே தான நம்ம மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு…. சந்தோசப்படாம.. ஏன்.நீங்க…?” என அவள் முடிக்கக் கூட இல்லை

“நம்ம ஆசைப்பட்ட மாதிரியா..? டேமிட்… உன் ஆசைன்னு சொல்லு… டைம்ண்ட் குரூப்ஸ் மருமக ஆகனும்னுதான உன் ஆசை…… அது நிறைவேறிடுச்சில்ல…… என் கல்யாணம் என் விருப்பப்படி நடக்கனும்…… நான் விரும்பினதை நிறைவேத்திக்க எனக்குத் தெரியும்….. இவங்க யாரு அதை செய்ய…?” என அவன் கத்த

“போதும்… சும்மா இப்படி பேசாதீங்க… உங்களைப் பிடிச்சதால தான நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்… அத விட்டு டைமண்ட் குரூப்ஸ் பார்த்துன்னுலாம் சொல்லாதீங்க…. நாங்களும் ஸ்ரீவாசம் குரூப்ஸ் பொண்ணுதான்…” எனப் பதில் பேச

“ஓஹ்… அப்படியா…… அப்போ உனக்கு நான் தானே வேணும்… அப்போ அவங்கப் பேசின சம்மந்தத்தை நிறுத்திட்டு இப்போ நானே வந்து உன் வீட்ல பேசுறேன்…..” என உளற

“என்ன உளறீங்க நீங்க… உங்களோட தானே நிச்சயம் செஞ்சாங்க….. இப்போ… ஏன் திரும்ப இப்படி…?”

“வாட் உளறேன்னா…. அந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தெரியும்…. என்னோட தான் நிச்சயம் நடந்துச்சு.. நானா நிச்சயம் செஞ்சேன்…..” என இவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“அய்யோ.. ஏன் இப்படி என்னைக் கொல்றீங்க…….. உங்க அப்பா அம்மா தானே நிச்சயம் செஞ்சாங்க.. அதானே நடைமுறை…. நமக்கு கல்யாணம்னா நாமளே போயா… எனக்குக் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்போம்… பெரியவங்க தானே பேசுவாங்க…. என் வீட்ல லவ் மேரேஜ்க்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க….. இப்போ ஏதோ உங்க அப்பா அம்மா வந்து பேசினதால தான் ஒத்துக்கிட்டாங்க…. அது புரியாம….” என இவளும் அவனுக்குக் குறையாத ஆத்திரத்தோடு கத்த

ஆழ்ந்த குரலில் சொன்னான் நந்தன் “அவங்க என்னோட அம்மா அப்பா இல்ல மது……”

“நந்தன் கோவத்துல உளறக்கூடாது…”

“இது உளறல் இல்ல உண்மை…..” என்றவனின் குரலில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு துயரம் இருக்க

“ந…..ந்….த….ன்” என இவள் திணற

“நீ முடிவெடுத்துக்கோ மது… நந்தன்னு ஒரு தனிமனுசன் தான் நான்… எனக்குன்னு எந்த அடையாளமோ பாரம்பரியமோ கிடையாது…… நான் ஒரு அநாதை……. இப்போ நான் வேணுமா வேண்டாமான்னு நீ சொல்லு….” என்றவனின் குரலில் ஒட்டாத தன்மைத் தெரிய அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை மதுரவசனிக்கு.

ஆட்டம் தொடரும்..!!
 
super episode mam
 
Top