Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 062 ன் வடக்கு வீதி வணங்காமுடி எனது பார்வையில். சதாசிவ இல்லத்தின் மூன்று சகோதரர்களில் இளையவர் வணங்காமுடி. அவருக்கு சகோதரர்கள் பார்த்த பெண் பானுமதி அஞ்சல் அலுவலகத்தில் தந்தி பிரிவில் வேலை செய்து வருபவரை பெண்ணை நேரில் பார்க்க நேரடியாக சென்று பார்த்தவர் திருமணத்தை விரைவில் நடத்திக் கொள்கிறார் 1980ல். மூத்த இரண்டு அண்ணன்களுக்கு ஒரு பெண் வாரிசுகளாக கன்னிகா மற்றும் சித்ரா. வணங்காமுடிக்கு மூன்று ஆண் வாரிசுகள். மூத்த இரண்டு பேரும் வெளியே வேலைக்கு சென்று காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றாவது மகன் பசுபதி தந்தையின் தொழிலில் இருப்பவனுக்கு வணங்காமுடியின் ஒன்றுவிட்ட சகோதரிக்கு குழந்தை இல்லாமல் நீண்ட காலம் கழித்து பிறந்த பெண் கன்னல் படிக்காதவளை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். காதல் திருமணம் செய்து கொண்டாலும் அந்நியோன்யம் குறைந்த மூத்த இரண்டு அண்ணன்கள் படிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்ட பசுபதி இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும் மிகவும் பாசம் கொண்ட அந்நியோன்யம் கொண்ட தம்பதிகளின் மகன்கள் வாழ்க்கைக்கு ஒரு முறை சரிசெய்து கொள்ள உதவும் வணங்காமுடி தம்பதிகள் என்று விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். இவர்களின் அறுபதாம் கல்யாணம் அந்த விழா பற்றிய விவரங்களை தந்திருக்கிறார். மூத்த தம்பதிகள் அருமை. இரண்டு அண்ணன்களும் தங்கள் தொழிலை தம்பி மகன்களிடம் ஒப்படைக்கும் காட்சி இப்படியும் மனிதர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க வைக்கிறது. இரண்டு பெண்கள் கதாபாத்திரங்கள் அருமை. நண்பன் வேலன் யதார்த்தமானவர். அழகான கூட்டுக் குடும்பத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இளையவர்கள் காதல் காட்சியை விட வணங்காமுடியின் காதல் காட்சிகள் அதிகம். வாழ்த்துகள் எழுத்தாளரே.
 
?
 
Top