Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(02)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(02)

“ இறைவா எல்லாரும் நல்லா இருக்கனும்” என தன் இரு கைகளையும் கூப்பி பூஜையறையில் இறைவனை வணங்கிக்கொண்டிருந்தார் திருவாசகம்.

வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து துண்டை இடுப்பில் கட்டி நெற்றில் சிறு கீற்றாய் விபூதியும் வைத்து சிறு தொப்பையுடன் சராசரி உயரத்துடன் நன்கு நரைத்த தலைமுடியும் ஆங்காங்கே சிறு கருப்பு கொண்ட வெள்ளை மீசையும் வைத்து மாநிறத்துடனும் அறுபது வயதிலும் கம்பீரமாக இருந்தார் திருவாசகம்.

பூஜையறையில் இருந்து வெளியே வந்து அங்கு இருந்த உணவு மேஜையில் அமர அவருடைய தட்டில் காலை உணவை பரிமாற்ற ஆரம்பித்தார் திருவாசம் மனைவி ஜானவி.

இயந்திர கதியில் ஜானவி தன் கணவனுக்கு பரிமாற. அதே இயந்திர கதியில் அவசரமாக உணவை உட்கொண்டு விட்டு அவ்விடத்தை விட்டு நகன்றார் திருவாசகம்.

எப்பொழுதும் போல் கண்களில் வலியுடன் கலங்கிய கண்களை துடைத்தவாறு தனது அறைக்கு ஜானவி செல்ல திருவாசகமும் மனதில் ஏறிய பாரத்துடன் இறுகிய முகத்துடன் ஹாலில் இருந்த தன் பெற்றோர்கள் அரியநாயகம் தெய்வானையின் புகைப்படம் முன் நின்று வேண்டிவிட்டு தன்னுடைய நாயக் food production கம்பெனிக்கு காரில் ஏறி சென்றார்.

அறைக்கு சென்ற ஜானவி கவலையுடன் அமர்ந்திருந்தார் ஐம்பத்தி ஐந்து வயதிலும் இளமையாக இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக இருக்கின்ற மன கவலை அவரை வயோதிக தோற்றத்துடன் காட்டுகிறது.

ஆம் கவலைதான் காதல் கொண்டு மணந்து முப்பத்தி
நான்கு வருடமாகியும் இன்னும் தன்னை புரிந்துகொள்ளாது கடந்த மூன்று வருடமாக சில காரணங்களால் பேசாமல் தவிர்க்கும் கணவனை நினைத்து தான் கவலை கொண்டுள்ளார் ஜானவி.

சிறுது நேரத்திற்கு பிறகு காலை உணவை உண்ண உணவு மேஜைக்கு ஜானவி வர அப்பொழுது சரியாக உள்ளே நுழைந்தனர் திருவாசகம் சகோதரிகளான மாயாவதியும் லீலாவதியும்.

“ என்ன அண்ணி மணி பத்து ஆகா போகுது இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க??” என மாயாவதி கேட்க,

எதுவும் கூறாது அமைதியாக உண்ண ஆரம்பித்தார் ஜானவி அதனை கண்டு,

“ பின்ன அண்ணனை நினச்சு கவலைல இருந்துருப்பாங்க அதான் நேரம் ஆகிருக்கும் மாயா. இல்ல அண்ணி??” என லீலாவாதி சற்றே நக்கல் குரலில் வினவ அதற்கும் பதில் ஏதும் கூறாது அமைதியாக இருந்தார்.

“ ஏன் அண்ணி எங்ககிட்ட பேசாம இருந்துட்டா மட்டும் அண்ணன் உங்ககூட பேசிடுவாரா இல்ல உங்களை நம்பிடுவாரா???. ஹ்ம்ம்…..” என்றாள் மாயாவதி

“ அது இல்ல மாயா நம்மமேல இவுங்க கோவத்தை காட்டுறாங்களாம்” என லீலாவதி கூற

“ அப்படியா அண்ணி கோவமா. நாங்க என்ன செஞ்சோம்??” என வாயில் அடக்கிய சிரிப்புடன் மாயாவதி கேட்டுக்கொண்டிருக்கையில்

“ மேல வரமா இங்க என்னம்மா செயிரிங்க??” என கேட்டுக்கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மாயாவதி மகளும் திருவாசகம் ஜானவி தம்பதியின் மருமகளுமான தமயந்தி.

“ அது ஒன்னும் இல்லம்மா உங்க அத்தைகிட்ட சும்மா பேசிகிட்டு இருந்தோம்” என லீலாவதி கூற

“ யாரு நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்திங்க. அதுசரி நான் நம்பிட்டேன் சித்தி”

“ இல்ல தமுமா நம்பு”

“ அட சும்மா தேவை இல்லாதவங்கள்கிட்ட பேசாம மேல வாங்க நான் முக்கியமான விஷயம் பேசணும்” என கூறி தமயந்தி இருவரையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட ஜானவி பாதி சாப்பாட்டிலையே எழுந்து சென்றுவிட்டார்.

பேயாடிக்கொட்டையை அடுத்து செங்கானம் என்ற கிராமத்தில் பிறந்தவர்தான் அரியநாயகம். இவருடைய குடும்பம் பரம்பரை பணக்காரர்கள். அரியநாயகம் மனைவி தெய்வானை. இவர்களும் முதலில் திருவாசகம் பிறந்து பத்து வருடங்களுக்கு பின் பிறந்தவர்தான் மாயாவதி இவளுக்கு அடுத்து ரெண்டு வருடத்தில் லீலாவதி பிறந்தார்.

மாயாவதிக்கு பத்து வயது இருக்கும் பொழுது காலராவில் தெய்வானை இறந்துவிட அதற்கு பின் அரியநாயகம் தன் மூன்று குழந்தைகளையும் தாயிக்கு தாயாய் இருந்து வளர்த்தார்.

அரியநாயகம் சிறுவயதில் இருந்தே திருவாசகம்தான் இரு பெண் குழந்தைகளுக்கும் அனைத்தும் செய்ய வேண்டும் தன் காலம் முடிந்த பின்னும் இருவரையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என திருவாசகத்திடம் கூறி வளர்க்க. சிறுவயதில் இருந்தே இரு தங்கைகள் மேலும் பாசமாக இருந்த திருவாசகத்திற்கு அரியநாயகத்தின் வார்த்தைகள் மூலம் கண்மூடித்தனமான பாசமும் பொறுப்பு உணர்வும் அதிகமானது.

எப்பொழுதும் எதோ ஒருவகையில் அறிவுரை கூறுக்கொண்டிருக்கும் அரியநாயகத்தைவிட மாயாவதி லீலாவதி இருவருக்குமே திருவாசகம் மேல் பாசம் அதிகம்.

திருவாசகம் தன் கல்லூரி படிப்பை முடித்திவிட்டு சென்னையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்து பின் அதிலிருந்து தனியாக தன் தந்தையின் உதவியோடு நாயக் food production company ஐ ஆரம்பித்தார். அதன்பின் திருவாசகத்திற்கு இருபத்திஆறு வயதில் தன் தொழில்முறை நண்பரின் தங்கை ஜானவி மீது காதல் கொண்டு இருவீட்டாரின் சம்மத்ததோடு திருமணம் செய்தார்.

ஜானவியும் நன்கு படித்த திறமையான பெண் என்பதால் திருவாசகத்தோடு தொழிலை கவனிக்க ஆரம்பிக்க
. இருவரும் சென்னையில் பெரிய வீட்டை கட்டி குடியேறினர்.

திருவாசகம் திருமணத்திற்கு முன் அடிக்கடி செங்கானம் வந்து சென்றார். ஆனால் திருமணத்திற்கு பின் ஜானவியோடு தொழில் செய்வதால் தொழிலில் நன்கு வளர்ச்சியடைய
.. அதனால் ஊருக்கு செல்வதற்கு நேரம் கிடைக்காமல் தங்கைகளை பார்க்க செல்வது குறைய ஆரம்பித்தது.

இதில் ஜானவியின் பொருட்டே அண்ணன் ஊருக்கு வருவதில்லை என எண்ணி தேவை இல்லாமல் ஜானவியின் மீது வன்மத்தை வளர்த்தனர்.

வருடங்கள் ஓட ஜானவி தம்பதியினருக்கு ராஜவர்மன்
, மாறவர்மன், சிம்மவர்மன் மற்றும் ருத்ரவர்மன் என்ற நான்கு மகன்களும்.

மாயாவதிக்கு சென்னையில் மத்திய துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தூரத்து உறவினனான குணசேகரனுக்கும் திருமணம் முடிந்து விவேகன் மற்றும் தமயந்தி என்ற இரு பிள்ளைகளும்,

லீலாவதிக்கு தெய்வானையின் தம்பி மகன் சேதுராமனுக்கும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு நித்தியவதியும் பிறந்தாள். சேதுராமனை திருவாசகம் தன்னுடைய தொழிலில் ஈடுபடுத்துக்கொள்ள அவர்கள் குடுமபமும் சென்னை வந்தது.

அரியநாயகமும் திருவாசகத்துடன் தங்கிக்கொண்டார். அனைவரும் சென்னையில் இருப்பதால் தங்கைகளை தங்களுடன் ஒரே வீட்டில் வைத்துக்கொள்ள முடிவெடுத்த திருவாசகம் அரிநாயகத்திடம் கேட்க, ஏற்கனவே மகள்கள் இருவரும் ஜானவியின் மீது கோவத்தில் இருப்பதை ஓரளவுக்கு ஊகித்த அரிநாயகம் தேவை இல்லாமல் பிரச்சனை வரகூடாது என திருவாசகம் வீட்டின் அருகையே ஒரே மாதிரி இரு வீட்டை கட்டி அங்கு மாயாவதி லீலாவதி குடுமபத்தை குடிவைத்தனர்.

ஒரே வீட்டில் அண்ணனுடன் இருக்கவிடாமல் செய்தது ஜானவி என எண்ணி அதற்கும் அவரின் மீது கோவம் கொண்டு இருந்தனர். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் தாங்கள் தான் அண்ணனுக்கு முக்கியம் அதற்கு அடுத்துதான் ஜானவி என அவரை முடிந்தவரை மட்டம் தட்டிக்கொண்டிருந்தனர்.

ஆனால் ஜானவி என்றும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் பொறாமை வருவதுதானே என எண்ணி அவர்களின் செயலை சிறுபிள்ளை செயல்கள் என ஒதிக்குவிடுவார்.

ஆனால் ஆரம்பத்தில் அதனை கவனத்தில் கொண்டிருந்தாள் இன்று தன் இணையின் தவிர்ப்பையும் தவிப்பையும் தவிர்த்திருக்கலாம்.

நாயக் food production company என்ற தன் கனவு தொழில் சாம்ராஜ்யத்தை நினைவாக்கியத்தில் ஜானவிக்கும் சம பங்கு உண்டு. ஆனால் மூன்று வருடத்திற்கு முன் நடந்த கசப்பான சம்பவம். அதன் பின் மனைவியின் மீதான கோவம். அதன் பொருட்டு ஜானவியின் தொழிலில் புறக்கணிப்பு என மூன்று வருடம் சென்றுவிட்டது என எண்ணிக்கொண்டு தன்னுடைய அறையில் அமர்ந்தார் திருவாசகம்.

அங்கு அடுத்த ஒரு ஐந்து நிமிடத்தில் குட் மோர்னிங் சார்” என் கூறிக்கொண்டு திருவாசகம் அறையினுள் நுழைந்தார் நாற்பத்தி ஐந்து வயது மதிப்புடைய அவரின் பி.ஏ ராமங்கலிங்கம்.

“ யா, குட் மோர்னிங் ராம் இன்னைக்கு என்ன ஸ்செடுல்??”

“ சார் இன்னைக்கு நம்மளோட புது ப்ராஜெக்ட் விஷயமா மீட்டிங் இருக்கு பத்து மணிக்கு
. அப்புறம் நம்ம தயாரிப்போட packing model அப்புறம் டிசைன் மாத்துறது பத்தி பேக்கிங் டீம் கிட்ட பேசணும்

!!... சரி ராம் நானும் மாறவர்மனும் புது ப்ராஜெக்ட் மீட்டிங் போறோம். ராஜாவை அந்த பேக்கிங் டீம் கிட்ட பேசி முடிவு எடுக்க சொல்லுங்க என கூறிவிட்டு தன் முன் இருந்த கோப்புகளை திருப்பி பார்த்துக்கொண்டிருந்த திருவாசகம் தன் முன் இன்னும் நின்று கொண்டிருந்த ராமலிங்கத்தை பார்த்து

என்ன ராம் போங்க சீக்கிரம் ராஜாக்கிட்டையும் மாறன்கிட்டையும் நான் சொன்னதை சொல்லுங்க” என திருவாசகம் கூறியும் எதுவும் கூறாது சற்றே தயங்கி நிலையில் ராமலிங்கம் நிற்க

“ என்ன ராம் எதுவும் சொல்லனுமா??”

சார்…. அது…. அது….” என ராமலிங்க மீண்டும் தயங்க

ராம் இப்போவே நேரம் இல்ல. சீக்கிரம் என்னன்னு சொல்லுங்க

சார் அது அது நான் மாறன் சார் கிட்ட சொல்லிடுறேன் சார் ஆனா ராஜா சார் கிட்ட” என மீண்டும் தயங்கினார் ராமலிங்கம்.

“ என்ன நான் சொல்லணுமாக்கும்” என கூறிவிட்டு நம்ம மூத்த மகனை பத்தி தெரிஞ்சும் இவரை போய் பேச சொல்லிருக்கேனேஎன நெற்றில் தன் வலதுகையின் சுட்டுவிரலை வைத்து தேய்த்துக்கொண்டே மனதில் எண்ணி

சரி ராம் ராஜவர்மனை என்னைய பார்க்க வர சொல்லுங்க” என திருவாசகம் கூற

“ சரிங்க சார்” என சிட்டாக பறந்தார் ராமலிங்கம்
.

அடுத்த பத்து நிமிடத்தில் திருவாசம் முன் நின்றுகொண்டிருந்த எப்பொழுதும் கண்களில் ஒரு அலட்சிய பாவம் கொண்டு கலையான முகத்தைக்கூட சற்றே இறுக்கமாக வைத்து கொண்டு சராசரி உயரத்தில் நல்ல சிவந்த நிறத்தில் முப்பத்தி ரெண்டு வயதுடைய திருவாசகத்தின் மூத்த மகன் ராஜவர்மனிடம்,

ராஜா இன்னைக்கு நானும் மாறனும் புது ப்ராஜெக்ட் மீட்டிங் போறோம். நீ பேக்கிங் டீம் கிட்ட நம்மளோட புது டிசைன் பத்தி பேச்சு வார்த்தை நடத்தணும். அதனால நீ அங்க போ

ஆனா அப்பா quality control தானே என்னோட பொறுப்பு packing team மாறனோடதுதானே”

அதான் சொன்னேனே ராஜா மாறன் என்னோட மீட்டிங் வரான்னு

“ so what அவுங்க அவுங்க வேலையை அவுங்க அவுங்க பார்த்தாதான் perfection இருக்கும்.. அதனால மாறனை அவனோட வேலைய முடிச்சுட்டு உங்ககூட மீட்டிங் கூட்டிட்டு போங்க. இதுல என்னைய தலையிட சொல்லாதீங்க.”

“ ஆனா ராஜா இது முழுக்க முழுக்க நம்மளோட தொழில் தானே., எல்லாரும் எல்லாமே பார்க்கலாம் எல்லாமே தெரிஞ்சு வச்சுருக்கலாமே”

“ அப்பா நீங்க சொல்றது சரிதான்
. ஆனா எல்லாரும் எல்லாம் பார்த்தா தேவை இல்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடுறமாதிரி இருக்கும். அதனால பிரச்சனையைத்தான் குடுக்கும்.

அதோட என் விஷயத்தை தவிர நான் தேவை இல்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிட மாட்டேன். அது நீங்களாவே இருந்தாலும் சரி. என்னைய பத்தி தெரிஞ்சும் திரும்ப திரும்ப அடுத்தவங்க வேலையை என்கிட்டே குடுக்காதிங்க” என ராஜவர்மன் கூறிமுடிக்க

பெத்த தகப்பனையும் கூடப்பிறந்த தம்பியையும் அடுத்தவன் என கூறும் மகனை நினைத்து திருவாசகத்திற்கு எரிச்சலாக வந்தது
. இருந்தாலும் அவனோட குணம் தெரிந்த திருவாசகம் ஒரு ரெண்டு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு,

சரி இன்னைக்கு சாயங்காலம் எதுவும் முக்கியமான வேலை இருக்கா??”

எதுக்குப்பா??”

“ இல்ல அருணா பத்தி பேசணும்.”

அவளை பத்தி பேச என்ன இருக்கு”

“ டேய் அவ உன் பொண்டாட்டி டா”

“ அது தெரியும்
. என்ன பேசணும்ன்னு கேட்குறேன்”

“ இல்ல அவ அவுங்க அப்பாவீட்டுக்கு போய் மூணு மாசம் ஆச்சு
. எப்போ கூட்டிட்டு வரப்போறன்னு….”

நான் போய் கூட்டிட்டு வரணுமா??. எதுக்கு ப்பா??” அவளாதானே போனா??”

சரி அவளா போனாலும் கோவமா போயிருக்கா. அப்போ சமாதானம் பண்ணணும்ல நீ”

எதுக்கு ப்பா சமாதானம்??. அவளுக்கு நம்ம வீட்டுல இருக்க பிடிக்கலன்னு சில காரணம் சொன்னா. நான் அவுங்க அவுங்க பிரச்சனையை அவுங்க தன் தீத்துக்கணும்ன்னு சொன்னேன். உடனே அப்பாவீட்டுக்கு போறேன்னு சொன்னா. சரின்னு நானும் சொலிட்டேன் அது அவளோட முடிவு. அடுத்தவங்களோட முடிவுல நம்ம மூக்கை நுழைக்க கூடாதுப்பா என ராஜவர்மன் கூற திருவாசகம் அடுத்து என்ன கூறுவது என்று தெரியாது முழித்து நின்றார்.

‘ திருமணம் முடிந்து ஐந்து வருடமாகி ஒரு குழந்தை ஆகிய பின்னும் மனைவியையும் அடுத்தவள் என கூறும் மகனை என்ன செய்தால் தகும்’ என கோவமாக எண்ணிக்கொண்டு

சரி ராஜா. உன் பையன் அதான் என் பேரன் காருண்யன் அவனைப்பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா??. அவனுக்கு மூணு வயசுதான் ஆகுது. இப்போவே அவன் அப்பா எங்கன்னு கேட்கமாட்டான்னா??. உன் பாசத்துக்கு ஏங்க மாட்டானா??”

இல்லப்பா நான் தினமும் சாயங்காலம் அருணாவையும் காருண்யனையும் பார்த்துட்டுதான் வீட்டுக்கு வரேன்” என சாதாரணமாக கூற

நல்லவேளை மூணு வயசு பையன் தான் எங்க இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என கூறி பெத்த மகனையும் அடுத்தவன் என கூறிவிடுவானோ என மனதில் சிறு பயத்தில் இருந்தார் திருவாசகம்.

அந்த பயம் ராஜவர்மனின் பேச்சில் சற்று குறைய,

“ சரி ராஜா மீட்டிங் நேரமாச்சு நீ கிளம்பு நான் packing section meeting cancel பண்ணிடுறேன்”.

“ அது உங்க இஷ்டம் ப்பா” என கூறி ராஜவர்மன் விடைபெற போகும் மகனின் முதுகை வெறித்து கொண்டிருந்தார் தன் வளர்ப்பில் எங்கு பிசகினோம் என எண்ணிக்கொண்டு
.

அவரின் எண்ணத்தை கலைக்கும் விதமாக “ அப்பா மீட்டிங் நேரமாச்சு போகலாமா??” என கேட்டுக்கொண்டு

நல்ல கம்பீரமாக சராசரி உயரத்துடன் மாநிறத்தில் கலையான சிரித்த முகத்துடன் முப்பது வயது தொடக்கத்தில் இருக்கும் திருவாசகத்தின் இரண்டாவது மகன் மாறவர்மன் வந்து நின்றான்.

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்

plz drop ur comments friends
Nice ep
 
Nice
 
Top