Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(10)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(10)


சிறுது நேரம் ருத்ரவர்மனையே பார்த்துக்கொண்டிருந்த தென்றலின் பின் இருந்து ஒரு கரம் தொட அதில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

அங்கு தென்றலை முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தவரை பார்த்து ‘ யாரு இது??. ஹ்ம்ம்… ஓ!!... அம்மா சொன்னாங்களே மாமாவோட வலது கை பக்கம் இருந்தது மாயாவதின்னு இவுங்கதானே வலது பக்கம் இருந்தது. அப்போ இவுங்கதான் முதல் தங்கச்சி போல. ஆனா எதுக்கு என்னைய முறைக்குறாங்க’ என மனதில் பேசிக்கொண்டு அமைதியாக மாயாவதியை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ ஏய்!!... நீ இங்க என்ன பண்ற??” என அந்த அறையின் அமைதியை குலைக்கும் விதமாக மாயாவதி சத்தமாக கேட்க

“ அது…. அது… நான்… அம்மாதான்…..” என திணற

“ என்ன உளற?? எதுக்கு வந்தன்னு கேட்டேன்??”

“ சும்மா சாரை பார்க்கலாம்ன்னு……” என மெதுவாக தென்றல் கூற

“ ஓ!!... உன்ற புருஷனை பார்க்கவந்தியா கண்ணு. ஆனா பாரேன் நீ பார்க்க வந்ததுகூட தெரியாம படுத்துருக்கான். எப்போ எழுதிருப்பானே தெரியாதே. ஒரு வேளை எழுந்திருப்பானோ என்னவோ அதுவும் தெரியல” என போலியாக பெருமொச்சைவிட்டு அலுத்துக்கொள்வது போல மாயாவதி கூறிக்கொண்டிருக்கையில்

“ இல்ல இல்ல அப்பிடி சொல்லாதீங்க சீக்கிரம் சார் குணமாகிடுவாங்க. அவுங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்”

“ பார்ரா பதி பக்திய. சரி நான் ஒன்னு உன்னைய கேட்கணும்ன்னு நினைச்சேன். கேட்கவா??. சரி கேட்குறேன் நீ வேணாம்ன்னு சொல்லபோறியா என்ன??. ஆமா நீ எந்த தைரியத்துல இங்க இருக்க. ஹ்ம்ம் அப்பிடியே உன்னோட பதி பக்தில அவன் குணமானாலும். உன்னைய மாதிரி பட்டிக்காடை ஏத்துக்குவான்னு நினைக்குறியா” என மாயாவதி கேட்க அதுக்கு பதில் எதுவும் கூறாது அமைதியா குனிந்து நின்றுகொண்டாள் தென்றல்.

அவள் எதாவது பேசினால் சண்டை போடலாம் இல்லை அவளை காயப்படுத்தலாம் என எண்ணிய மாயாவதிக்கு அவளின் அமைதி கோவத்தை கிளப்ப

“ என்ன திமிரா கேட்குறேன் பதில் சொல்லமாட்டேங்குற???”

அதற்கும் ஒன்றும் கூறாது அமைதியாக நின்ற தென்றலிடம்

“ அதுசரி உன்னைய எப்படி ஏத்துக்குவான். அவன்தான் வேற பொண்ணை காதலிச்சான்ல…….” என மாயாவதி கூறிக்கொண்டிருக்கையில் வேகமாக தென்றல் நிமிர்ந்து பார்க்க

“ என்ன பார்க்குற???. உண்மையத்தான் சொல்றேன். அவன் ஒரு பொண்ணை விரும்புனான் ஆனா உன் நல்ல நேரம் அந்த பொண்ணு இறந்துடுச்சு அந்த விபத்துல. இல்லைனா இன்னைக்கு உனக்கு இந்தமாதிரி ராஜா வாழ்க்கை கிடைச்சுருக்குமா. அதுசரி வாழ்க்கை கிடைச்சு என்ன செய்ய அதை அனுபவிக்க ஒரு கொடுப்பினை வேணுமே” என தென்றலின் மனதை குத்திக்கிழிப்பது போல பேசிவிட்டு அந்த அறையை விட்டு மாயாவதி நகர,

சிறுது நேரத்தில் ஜானவி ருத்திரவர்மனின் அறைக்குள் நுழைந்தார். அங்கு கலங்கிய விழிகளோடு இருந்த தென்றலை கண்டு,

“ என்னமா!!!.... என்ன ஆச்சு??. எதுக்கு இப்படி இருக்க??” என பதற்றத்தோடு ஜானவி தென்றலின் அருகில் வந்து வினவ

“ ஒ…. ஒன்னும்…. இல்லமா”

“ என்ன ஒன்னும் இல்ல. அப்புறம் எதுக்கு உன் கண்ணு கலங்கி இருக்கு. உண்மைய சொல்லு எதுவும் பிரச்சனையா”

“ இல்லமா அப்படி எல்லாம் இல்ல”

“ இல்ல என்னமோ இருக்கு ஒரு வேலை ருத்ரனோட நிலைமை நினைச்சு உன்னோட வாழ்க்கையை நினைச்சு கலங்குறியா??”

அதற்கு ஒன்றும் கூறாது அமைதியாக இருந்த தென்றலை பார்த்து

“ நிச்சயம் என் பையனுக்கு குணமாகிடும் அப்பிடி இல்ல உனக்கு என் பையனை பிடிக்கலைனாலும் தைரியமா வெளிப்படையா சொல்லுமா உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு” என ஜானவி கூற

“ அச்சச்சோ இல்லமா அப்படி எல்லா இல்ல. அது….. அது…. எனக்கு என் ஆத்தா நினைப்பு வந்துடுச்சு”

“ ஓ!!... வீட்டு நியாபகமா” என ஆசுவாசமான ஜானவி தொடர்ந்து

“ அதான் உன் ஆத்தாவும் இன்னைக்கு இங்க தங்குறதா சொன்னாங்க நீதான் வேணாம்ன்னு சொல்லிட்ட. இப்போ பாரு உனக்கு அவுங்க நியாபகம் கலங்கிட்டு இருக்க. என்ன பொண்ணு போ .சரி நாளைக்கு வேணும்னா அவுங்களை வர சொல்லவா??”

“ அது எல்லாம் வேணாம்மா நான் இப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குறேன். இப்போ தூக்கம் வருது நான் போய் தூங்கவா??”

“ என்ன கேட்டுட்டு இருக்க. வா நானே உன்னோட அறையில விட்டுட்டு போறேன் வா” என ஜானவி கூறி தென்றலை அழைத்துக்கொண்டு தென்றல் காலையில் இருந்த அறைக்கு அழைத்து சென்றார்.

“ தென்றல் தனியா படுத்துக்குவியா???. புது இடம் வேற. நான்வேணா இன்னைக்கு உன்கூட படுத்துக்கவா??”

“ அதெல்லாம் வேணாம்மா நான் தனியா படுத்துப்பேன். நீங்க போய் சாப்பிட்டு படுங்க”

“ ஹ்ம்ம் சரி தென்றல். நல்ல தூங்கு. அதோ அந்த மேஜையில் தண்ணீ இருக்கு வேற எதுவும் வேணும்னா இதோ உனக்கு எதிர்ல இருக்குற அறையில தான் இருப்பேன் என்னைய கூப்புட்டு சரியா??”

“ சரிம்மா”

“ சரி போய் தூங்கு” என கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார் ஜானவி.

அவர் சென்ற பின் படுக்கையில் சாய்ந்து அமர்ந்த தென்றல் கடந்த காலத்தை பத்தி யோசித்துக்கொண்டிருந்தாள். முதல் முதலாக மூன்று வருசத்துக்கு முன்னாடி ருத்ரவர்மனை சந்தித்த சூழ்நிலை பின் அவனுடனான உரையாடல் என அனைத்தையும் யோசித்துக்கொண்டிருந்த தென்றல் நடுநிசி தாண்டி அமர்ந்த வாக்கில் உறங்கிருந்தாள்.

ஆனாலும் எப்பொழுதும் வழமை போல அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து கிளிப்பச்சை வண்ணத்தில் சிகப்பு நிற பார்டர் வைத்த காட்டன் சேலையை வழக்கம் போல உடுத்தி தலைக்கு குளித்ததால் இடைவரை நீண்ட முடியை தளர பின்னி சின்னாத்தா குடுத்த நகைகளை கழட்டி வைத்துவிட்டு தாலிச்சங்கிலியுடன் கிளம்பி கீழே வந்தாள்.

அங்கு வாசலில் வீட்டு வேலை செய்யும் பொன்னி வாசலை தெளித்து கோலம்போட போக; அதனை பார்த்து

“ அக்கா” என அழைத்துக்கொண்டு பொன்னியை பின் தொடர்ந்தாள் தென்றல்.

“ என்னங்கம்மா??. என்ன வேணும்??. இந்நேரத்துல எழுந்து வந்துருக்கீங்க” என தென்றலை இந்த வீட்டு மருமகளுக்கான மரியாதையை அளித்து பொன்னி பேச

“ அச்சச்சோ!!!... என்னக்கா நீங்க என்னையைவிட பத்து வருஷம் மூத்தவங்களா இருப்பீங்க. என்னைய போய் வாங்க போங்கன்னு சொல்லிக்கிட்டு. சும்மா தென்றல்ன்னு கூப்புடுங்க” என வெள்ளந்தியாக கூற

அதில் புன்னகையை சிந்திய பொன்னி “ அம்மா நீங்க வயசுல என்னைய விட சின்னவங்களா இருந்தாலும் எனக்கு படி அளக்குற முதலாளி ஐயாவோட மருமகள். நான் அதுக்கான மரியாதையை குடுக்கணும் நீங்க இப்போ சொல்லுங்க எதுவும் வேணுமா???”

“ அதெல்லாம் வேணாம் நான் கோலம் போடுறேன்னு சொல்லலாம்னு வந்தேன்”

“ என்னம்மா சொல்றிங்க. இது என் வேலை. இதை நானே பார்த்துக்கறேன். உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டவரேன். நீங்க ஓய்வு எடுங்கம்மா” என கூற

“ இல்ல எனக்கு சும்மா இருக்க கடுப்பா இருக்கு. அதோட எனக்கு இந்த வேலை எல்லாம் பழக்கம் தான்க்கா நீங்க கோலமாவை என்கிட்ட குடுங்க. உங்களக்கு நிறைய வேலை இருக்கும். நீங்க போய் அதை பாருங்க”

“ இல்லமா வேணாம் பெரிய அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என பொன்னி மறுத்து கொண்டிருக்கையில்

“ அதான் அவ கேட்குறாள. அப்புறம் என்ன அவ இந்த வீட்டுக்கு வேலைக்காரியா தான் வந்துருக்கா. அதனால அவளை வேலை செய்யவிடு” என சத்தமாக கூறிக்கொண்டு அங்கு வந்தார் லீலாவதி.

‘ இந்தம்மா என்ன இந்நேரத்துக்கு வந்துருக்கு. அந்த ஆண்டவனே வந்து எழுப்பினாலும் காலையில ஏழுமணிக்குத்தான் எழுந்திருக்கும். இன்னைக்கு என்ன’ என எண்ணிக்கொண்டு

“ இல்லமா……” என பொன்னி லீலாவதியிடம் மறுத்து கூறவருகையில்

“ இங்க பாரு. போய் எனக்கு முதல்ல ஒரு காபி கொண்டுவா. இங்க இவ பார்த்துக்குவா” என தென்றலை பார்த்து கைகாட்டி லீலாவதி பொன்னியிடம் கூற

லீலாவதியிடம் எதையும் பேசமுடியாது தென்றலை பாவமாக பார்த்து ‘ இந்த பொம்பளை இந்த பொண்ணை என்ன பண்ணப்போகுதோ பாவம்’ என மனதில் எண்ணிக்கொண்டு கோலமாவை தென்றலிடம் குடுத்துவிட்டு செல்ல தென்றலும் ஆர்வமாக பெரிய கோலமாக போட ஆரம்பித்தாள்.

‘ இனிமே நீ இந்த வீட்டு நிரந்தர வேலைக்காரிதான்’ என எண்ணிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து வீட்டிற்குள் சென்றாள் லீலாவதி. அங்கு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

சிம்மவர்மனுக்கும் நித்யவதிக்குமான திருமணம் இருவரும் மனம் விரும்பி செய்யவில்லை. இங்கு எதுவும் பிரச்சனை நடந்துருக்குமோ என வீட்டிற்கு சென்று இரவு உறங்கும் வேளையில் தன் மனதில் உறுத்த தன்னுடைய காலை தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு நித்யவதியை காண அதிகாலையிலையே வந்துவிட்டார் லீலாவதி.

‘ நித்யவதி ஓரளவிற்கு சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளக்கூடியவள். இருந்தும் சிம்மவர்மனின் குணத்திற்கு தன் மகளால் அனுசரித்து போகமுடியுமா??. இல்லை நேற்றே எதுவும் பிரச்சனை ஆகிருக்குமா….’ என்ற லீலாவதியின் சிந்தனை

“ அம்மா காபி” என்று அழைத்த பொன்னியின் குரலில் தடைபட அதனை வாங்கி அருந்திக்கொண்டே தன சிந்தனையை தொடர்ந்தாள்.

தென்றல் வாசலில் பெரிய கோலமாக ஒன்றை போட்டு அதற்கு தக்க வர்ணமும் தீட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைய மணி ஆறரை ஆகிருந்தது.

தென்றல் வீட்டிற்குள் நுழையும் போது ஹாலில் அமர்ந்து இருந்த லீலாவதி

“ ஏய்!!!.. நில்லு” என அதிகாரமாக அழைக்க

தன்னையா அழைத்தார்கள் என அறியும் பொருட்டு

“ என்னைய கூப்பிட்டீங்களா??”

“ அப்புறம் வேற யாரு இங்க இருக்கா உன்னையதான்”

“ சொல்லுங்க”

“ கோலம் போட்டியா???”

“ ஹ்ம்ம் போட்டுட்டேன்”

“ சரி போய் சமையல் செய். அப்புறம் உன்னைய இந்த வீட்டு மரும்கள்ன்னு சொல்லி சில பேரு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்க. நீ அதை எல்லாம் நம்பிராத சரியா??. நீ எப்போதும் இந்த வீட்டு வேலைக்காரிதான். இப்போ போ போய் சமையல் வேலைய பாரு”

“ ஹ்ம்ம்….” என தென்றல் தன் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகரும் வேளையில்

“ தென்றல் சீக்கிரமே எழுந்துட்டியாடா??” என கேட்டுக்கொண்டே ஜானவி மாடியில் இருந்து இறங்கி வர

“ ஹ்ம்ம் ஆமா ம்மா. எப்பொழுதும் நான் இந்த நேரத்துக்கு எல்லாம் எழுந்துடுவேன் அதான். அப்புறம் நானே கோலமும் போட்டுட்டேன். இப்போ போய் சமைக்கவா??. காலைல என்ன செய்யட்டும்மா??”

“ என்னது கோலம் போட்டியா??. பொன்னி….” என ஜானவி உரக்க அழைக்க

“ என்னங்கம்மா…” என வேகமாக தன் முன் நின்ற பொன்னியிடம்

“ கோலம் போடுறது உன் வேலைதானே. அதுக்கும் சேர்த்துதானே இங்க சம்பளம் வாங்குற”

“ இல்லமா அது…. அது….” என பொன்னி தயங்க

“ என்ன தயங்குற??”

“ அம்மா அது நானேதான் வம்படியா கேட்டு கோலம் போட்டேன்” என தென்றல் இடைபுகுந்து கூற

“ அப்போ யாராவது உன் வேலையை பார்க்குறேன்னு சொன்ன உடனே விட்டது தொல்லைன்னு அவுங்க தலையில அதை கட்டிறுவ அப்பிடித்தான பொன்னி”

“ ஐயையோ அப்பிடி எல்லாம் இல்லமா லீலாவதி அம்மாதான் அவுங்களை செய்ய சொல்லிட்டு காபி கேட்டாங்க” என அவசரமாக பொன்னி மறுத்து லீலாவதியை போட்டுகுடுக்க

“ லீலாவதியா!!!.....” என அப்பொழுதுதான் சோபாவில் அமர்ந்து இருந்த லீலாவதியை கண்ட ஜானவி

‘ என்ன இவ இந்நேரத்துக்கு இங்க இருக்கா??. என்னவா இருக்கும்??’ என எண்ணிக்கொண்டு பொன்னியிடம் திரும்பி

“ யாரு என்ன சொன்னாலும் உன் வேலையை நீ தான் பார்க்கணும். அடுத்தவங்க ஆயிரம் சொல்லுவாங்க நீ உன்னோட வேலையை நீ தான் பார்க்கணும். இனிமே இனனொருத்தரம் இப்படி நடக்க கூடாது பார்த்துக்கோ”

“ சரிம்மா” என கூறி பொன்னி நகர

“ அப்புறம் தென்றல் நேத்தே நான் உன்கிட்ட என்ன சொன்னே இந்த வீட்டு மருமகளா இந்த வீட்டு ஆளுங்க மாதிரி நடந்துக்க. இனிமே நான் அந்த வேலையை பார்த்தேன் இந்த வேலை பார்த்தேன்னு வந்து சொல்லிக்கிட்டு இருக்கா கூடாது சரியா”

‘ அப்போ நாம என்ன தான் செய்றது???. கோலம் போடுறது சமைக்குறது என்ன அவ்வளவு பெரிய குத்தமா. அட கருப்பா!!!... காலக்கொடுமைடா!!!.... நாம நம்ம வீட்டு வேலையை செய்றதுல என்ன பெரிய கேவலம். ஹ்ம்ம்” என எண்ணிக்கொண்டு அமைதியாக தலையை ஆட்டினாள் தென்றல்.

“ சரி இன்னைக்கு நாம கோவிலுக்கு போலாம் ஒரு பத்து மணிபோல நீ தயாரா இரு. என்ன சரியா??”

“ நான் இப்போவே தயாராதா இருக்கேன்மா” என முக மலர்ச்சியுடன் தென்றல் கூற

தென்றலின் உடையை பார்த்த ஜானவி ‘ முதல்ல இவளோட சேலை கட்ட மாத்தணும்’ என எண்ணிக்கொண்டு

“ சரி நீ உன்னோட அறையில ஓய்வு எடு தென்றல். நான் சாப்பாட்டுக்கு கூப்புடுறேன்”

‘ ஐயையோ என்ன ஓய்வா!!!... அப்பிடி என்ன நான் வேலை செஞ்சுட்டேன் ஓய்வெடுக்க??. சரிதான் ஒன்னும் செய்யாம சும்மா இருக்கறதுதான் இந்த வீட்டு ஆளுங்க மாதிரின்னு சொன்னார்களா’ என எண்ணிக்கொடு அமைதியாக தென்றல் அறைக்கு சென்றுவிட,

ஜானவி அன்றைய உணவுக்கான பட்டியலை சொல்ல சமையல் அறைக்கு செல்ல,

‘ ஹ்ம்ம் இருந்தாலும் இவுங்களுக்கு இம்புட்டு ஆகாது. இங்க ஒருத்தி குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்துருக்கேன் கொஞ்சம் கூட கண்டுக்காம போறாங்க. பத்தாததுக்குநான் அடுத்தவங்கன்னு இந்த பொன்னிட்ட சொல்லி என்னைய அசிங்க படுத்தியாச்சு. இவுங்க எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க போல. இருக்கட்டும் போக போக பார்த்துக்கறேன்’ என மனதில் ஜானவிவை திட்டிக்கொண்டிருக்கையில்

“ அம்மா என்னம்மா காலையிலையே வந்துருக்க எதுவும் முக்கியமான விஷயமா??” என கேட்டுக்கொண்டே லீலாவதிக்கு எதிரில் இருந்த சோபாவில் நித்யவதி அமர

“ ஹ்ம்ம் உன்னையதான் பார்க்கலாம்ன்னு காலையிலையே வந்துட்டேன்”

“ என்னையாவா!!... எதுக்குமா??”

“ என்ன எதுக்குன்னு கேட்குற??. உனக்கு நேத்துதான் கல்யாணம் ஆகியிருக்கு. சிம்மவர்மன் வேற இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்னானா அதான் இங்க எதுவும் உனக்கு பிரச்சனை ஆகிருக்குமோன்னு பயந்து காலையிலையே வந்துட்டேன்”

அதற்கு எந்த பதிலும் கூறாது அமைதியாக லீலாவதியை வெறித்த நித்யவதியிடம்

“ என்ன நித்தி ஒன்னும் சொல்ல மாட்டேன்கிற. உனக்கு ஒன்னும் இங்க பிரச்சனை இல்லைல”

“ உனக்கு ரொம்ப சீக்கிரம் நியாபகம் வந்துடுச்சு இல்லமா” என விரக்தியாக நித்யவதி கேட்க அதைக்கூட புரிந்து கொள்ளாது

“ ஆமாடா நேத்தே தோணுச்சு அதான் காலைலயே வந்துட்டேன்”

“ ஓ!!!...”

“ சரி உனக்கும் சிம்மாவுக்கும் ஒன்னு பிரச்சனை இல்லைல”

“ பிரச்சனையை எல்லாம் இல்ல. எனக்கு ஆபீஸ் நேரமாச்சு நான் போய் கிளம்புறேன்” என கூறிவிட்டு லீலாவதியிடம் பேச பிடிக்காது நித்யவதி கிளம்ப பார்க்க

“ ஏய்!!... நித்தி என்ன சொல்ற??. ஆபீஸ் போறியா??. நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க எப்படி பட்ட குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வந்துருக்க. இனிமே நீ வேலைக்கு போலாமா?? அதுக்கு என்ன தேவை வந்துச்சு”

“ அம்மா நான் வேலைக்கு போறது எனக்காக தயவு செய்து இதுல தலையிடாத”

“ ஏண்டி சொல்லமாட்டா. இப்போ நீ வெளில வேற கம்பனிக்கு வேலைக்கு போனா இந்த குடும்பத்துக்கு ஆசிங்கம் இல்லையா??.”

“ அதுக்கு சிவில் படிச்சுட்டு புட் கம்பெனில வேலைபார்க்க சொல்றியா??”

“ ஏன் பார்த்தா என்ன??”

“ அம்மா கலையிலல வந்து என்னைய படுத்தாத என்னைய என் இஷ்டத்துக்கு எதையும் செய்யவிடுமா”

“ நித்தி நீ இப்படி பண்ணுனா உன் புருசனுக்கு ஆசிங்கம் இல்லையா. சிம்மா கோச்சுக்கப்போறான்”

“ நான் எதுக்கு கோச்சுக்க போறேன்??...” என கேட்டுக்கொண்டு தன்னுடைய ஜாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த சிம்மவர்மனை கண்ட லீலாவதி

“ வா சிம்மா நீயே பாரு நித்தி வேலைக்கு போறாளாம். அவ அடுத்த கம்பெனில வேலைக்கு போறது உனக்கு இந்த குடும்பத்துக்கு அசிங்கம் இல்லையா. அப்பிடியே வேலைக்கு போகணும்ன்னு விருப்பம்ன்னா நம்ம கம்பெனிலையே ஒரு வேலை ஏற்பாடு பண்ணி குடுக்க மாட்டியா உன் பொண்டாட்டிக்கு” என லீலாவதி சிம்மவர்மனை பேசவிடாது தன் எண்ணத்தை கூற

அதற்கு பதில் ஏதும் கூறாது அமைதியாக தன் இரு புருவத்தையும் தூக்கி நித்தியவதியை கண்ட சிம்மவர்மனிடம்,

‘ போச்சு போச்சு சும்மாவே இந்த அத்தான் எப்போ என்ன செய்யும்ன்னு தெரியாது. இப்போ காலையிலையே இந்த அம்மா இவருக்கு கோவத்தை கிளப்பிவிட்டுருக்கு. இன்னிக்கு நிச்ச்சயம் ஒரு தரமான சம்பவம் இருக்கு இருக்கு’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ இல்ல அத்தான் நான் வேலை பார்க்குறது என் தோழியோட கம்பெனி தான். அதோட எனக்கு என் படிப்பு சம்மந்தப்பட்ட வேலைதான் பார்க்க விருப்பம். நான் பிடிச்சுதான் வேலைக்கு போறேன்” என அவசரமாக நித்யவதி கூற

‘ இவ ஒரு கூறுகெட்டவ. நான் எவ்வளவு நேக்கு போக்கா பேசி அண்ணனோட கம்பெனிக்குள்ள இவளை அனுப்ப பார்த்த காரியத்தை கெடுத்துருவா போல’ என மனதில் நித்தயவதியை திட்டிக்கொண்டு முறைக்க

“ வேலைக்கு போறியா இன்னைக்கு??”

“ ஹ்ம்ம் ஆமா அத்தான்” என நித்தியவதி அவனின் மீதுள்ள பயத்தில் திணற

“ ஓ!!... எந்த கம்பெனி??”

“ அது… அது…RC Construction”

“ ஹ்ம்ம்…” என கூறிவிட்டு வேற எதுவும் கூறாது அந்த இடத்தைவிட்டு நகர

“ யப்பா….” என பெருமூச்சை இழுத்துவிட்டு கொண்டுருக்கையில்

திடீரன்று நெருக்கி நின்றான் சிம்மவர்மன் நித்யவதியை. அதில் மீண்டும் நித்யவதி பயத்தில் அதிர்ந்து நிற்க; காலையில் எழுந்ததில் கலைந்திருந்த முடியில் முன் உச்சியில் இருந்த முடியை தன் கையால் ஒதுக்கிவிட்டான்.

சிம்மவர்மனின் இந்த செயலில் வெளிப்படையாகவே நடுங்க ஓரடி தன் பின்னால் நகர எண்ணுகையில் மேலும் அவளை நெருங்கி நின்று நித்யவதியின் காதோரம் குனிந்து

“ உனக்கு பிடிச்சதை செய்” என கூறிவிட்டு தன் வேக நடையுடன் அறைக்கு சென்றுவிட்டான்.

சிம்மவர்மன் சென்றபின்னும் அதிர்ந்த நிலையில் இருந்து மாறாது எதோ யோசனையில் இருந்த நித்யவதியிடம்

“ ஏண்டி உனக்கு கொஞ்சமான கூறு இருக்கா??. எப்போ பாரு நான் ஒன்னு நினைச்சா நீ ஒன்னு செய்ற” என லீலாவதி சத்தமாக புலம்ப அதனை காதில் கேட்டும் கேட்காத நிலைலையும் ஒன்றும் பேசாது நித்யவதி அமைதியாக தன்னுடைய அறைக்கு சென்றாள்.

“ இங்க என்னடா நடக்குது இந்த அண்ணியும் நான் பெத்த மகளும் என்னைய ஒரு மனிசியாக கூட மதிக்க மாட்டேங்குறாங்க” என கோவமாக எண்ணிக்கொண்டு டைனிங் ஹாலிற்கு சென்றாள் லீலாவதி.

சிம்மவர்மனுடைய அறைக்கு நித்யவதி வந்த போது எதோ பைலை பார்த்துக்கொண்டிருந்த சிம்மவர்மனை கண்டு

‘ இந்த அத்தான் எனக்கு பிடிச்ச வேலைக்கு போன்னு சொல்றதை என்னமோ காதலை சொல்றமாதிரி கீழ ஒரு பில்ட் அப் குடுத்துட்டு இங்க ஒன்னும் தெரியாத மாதிரி இருக்காரு. சரி அவரே நம்ம கிட்ட பேசி பழக முயற்சிக்குறப்ப நாமளும் சும்மா சும்மா ஒதுங்க கூடாது’ என மனதில் எண்ணிக்கொண்டு மெதுவாக சிம்மவர்மனை நெருங்கி

“ அத்தான்” என அழைக்க ஒன்றும் கூறாது அமைதியாக நிமிர்ந்து பார்த்த சிம்மவர்மனிடம்

“ அது… அது.. நான் கிளம்புறேன் என்னைய ஆபீஸ்ல விடுறிங்களா” என கேட்க நித்யவதியை உறுத்து விழித்த சிம்மவர்மன்

“ நான் உனக்கு ட்ரைவரா??” என கடினமாக வினவ இல்ல

“ அது… அது…”

“ என்ன??”

“ இல்ல. சும்மா….”

“ இனிமே என்னைய தேவை இல்லாம பேசி தொந்தரவு பண்ணாத” என கூறிவிட்டு கம்பெனிக்கு செல்ல தயாராக சென்றுவிட்டான்.

“ என்ன இவரு கீழ காதலா பேசிட்டு இங்க காக்க மாதிரி கத்துறாரு. ச்சை நித்தி உனக்கு நேரமே சரி இல்லடி” என முணுமுணுத்துவிட்டு தன் மன வருத்தத்தை புறம் தள்ளி தயாரக சென்றாள்

இது சொர்க்கமா


நரகமா சொல்லடா உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு


போவதும் உன் வார்த்தையில் உள்ளதடா



thanks for the supporting

plz drop ur comments friends


 
Last edited:
Top