Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(19)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(19)

அருணா தலை அசைத்ததும் வேகமாக அவளை நெருங்கிய ராஜவர்மன் அவளின் தோள்களை,

“ நீ அம்மா…. இல்ல… நா மறுபடியும் அப்பா ஆகப்போறேனா??....” என சந்தோசமாக வினவ

“ ஹ்ம்ம்” என மீண்டும் தலை அசைத்தவளை அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பு இருவரின் இத்தனை நாள் பிரிவை ஏக்கத்தை கோவத்தை வலியை மறக்க தேவையாய் இருந்தது.

தம்பதிகளுக்கு தனிமை குடுக்க எண்ணி கருணாகரனும் அவர் மனைவியும் அறைக்குள் சென்றுவிட, அதனை அறியாது இருவரும் கொஞ்ச நேரம் அப்பிடியே இருந்தனர். பின் அருணா முதலில் சுயத்திற்கு வந்து ராஜவர்மனிடம் சிரித்துக்கொண்டே,

“ நாம நம்ம அறைக்கு போவோமா??. இப்போ ஹாலுல இருக்கோம்” என தயங்கி கூற

“ போலாம் போலாம் நானும் நிறைய பேசணும் கேட்கணும்”

“ என்ன கேட்கணும்??”

“ முதல்ல நான் மன்னிப்புதான் கேட்கணும் உன்கிட்ட”

“ என்னங்க நீங்க மன்னிப்பு அது இதுன்னு முதல்ல வாங்க” என அவனை அழைத்துக்கொண்டு அறைக்கு செல்ல அங்கு காருண்யன் படுக்கையில் இல்லாததை கண்டு ராஜவர்மன்

“ ஏன் அருணா மாமா காருண்யன் தூங்குறதா சொன்னாங்க காணோம்??” என வினவ

“ அவன் அப்பா கூட தான் தூங்குவான். ஏன்னா என் வயித்துல காலை போட்டுடுவான்ன்னு பயம்” என கூறி அருணா மெலிதாக புன்னகைத்தாள்.

“ ஓ…..” என கூறிவிட்டு ராஜவர்மன் அமைதியாக. பின் அருணா தொடர்ந்து,

“ என்ன திடீர்ன்னு பொண்டாட்டிமேல கரிசனம்” என மெதுவாக கேட்க

“ கரிசனம் இல்ல காதல்”

“ இது எப்போதிலிருந்து”

“ ஹ்ம்ம் உன்னைய பார்த்ததுல இருந்து….”

“ பார்றா…..”

“ பார்த்ததுனாலதானே இப்போ இங்க நிக்குறேன்.”

“ ரொம்ப சீக்கிரம் தான்…..” என இதழ் சுழிப்புடன் அருணா கூற

“ தாமதமா வந்தாலும் நீதான் எல்லாம்ன்னு உன்னைய நான் முழுசா புரிஞ்சுகிட்டு வந்துருக்கேன்ல”

“ முழுசாவா அதுசரி யாரை புரிஞ்சுகிட்டு???”

“ ஆமா தப்புதான் நீ தான் எல்லாம்ன்னு என்னைய புரிஞ்சுகிட்டு வந்துருக்கேன்

“ அது சரி…..”

“ நீ எப்போவும் சரிதான். நான் தான் எப்பவும் பிரச்சனை இல்ல அருணா??”

“ என்னங்க நீங்க நான் எதோ…..”

“ இல்ல அருணா நான் பேசிடுறேன். நான் பேசுறவரைக்கும் நீ குறுக்க எதுவும் சொல்ல
வேணாம். நான் தான் அருணா வீட்டுக்கு மூத்த பையன். மூணு தம்பி அதுபோக என் அத்தை பசங்க மூணு. இப்படி எல்லாரைவிட நான் மூத்தவன்றதால் சின்னத்துலையே எனக்கு பொறுப்புணர்ச்சி கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம். எப்பிடின்னா என் தம்பிங்க ஸ்கூல்ல குடுக்குற ஹோம்ஒர்க்க நான்தான் செய்வேன்.

ஏன்னா என் தம்பிங்க கஷ்டப்படக்கூடாது திட்டுவாங்ககூடாதுன்னு. கடைசில நான் எல்லா வாத்தியார்ட்டையும் அடிவாங்கிட்டு வருவேன்.

அம்மாவும் அப்பாவும் அவுங்க அவுங்க வேலையை அவுங்க அவுங்க பார்க்கணும். சொந்தம் உறவு எல்லாம் வேறன்னு என்னனோமோ அறிவுரை சொல்லியும் நான் முழுசா திருந்தல.

அப்பிடியும் உதவின்ற பேருல எதையாவது நான் செஞ்சிகிட்டே இருக்கவும் என்னால தம்பிங்க உறுபடமாட்டாங்கன்னு என்னைய ஹாஸ்டல்ல போட்டாங்க. அங்க என்னோட குணத்தால் என்னைய இ
ளிச்சவாயன் ஆக்கிட்டாங்க. அப்போ கொஞ்ச கொஞ்ச மா புரிஞ்சுக்கிட்டேன் யாரு விஷயத்துலையும் நாம தேவை இல்லாம தலையிடக்கூடாதுன்னு.

அதில இருந்து என்னைய நானே மாத்திக்கிட்டேன் எதுலயும் யாருகிட்டயும் தலையிடக்கூடாது. நான் உண்டு என் வேலை உண்டுன்னு. ஆனா அதே கொள்கையை உன்கிட்ட நான் காட்டிருக்க கூடாது” என கூறி அமைதியாக ராஜவர்மன் எங்கோ வெறிக்க;

அதனை கண்டு “ என்னங்க விடுங்க அது முடுஞ்சதுதானே” என ஆறுதலாக அருணா கூற

“ இல்ல அருணா மத்தவங்கள்ட்ட எப்பிடியோ ஆனா, உன்கிட்ட நான் அப்பிடி இருந்ததுக்கு காரணம் உன் மேல இருந்த காதல் தான்” என ராஜவர்மன் கூற புரியாது நோக்கிய அருணாவிடம்,

“ புரியலையா??... நான் ஒரு அவசரக்குடுக்கைதானே அருணா. அதனால தேவை இல்லாம உனக்கு எதாவது உதவி செய்றேன்னு உன்னைய எரிச்சல் படித்திட்டா, இல்லைன்னா எனக்கு பிடிச்சதை மட்டும் செஞ்சு எங்க என்னோட இருக்குற வாழ்க்கையை வெறுத்தா, இல்ல நீ பிரச்சனைன்னு வரும்போது நான் கண்டுக்கிட்டா எங்க நீ என்னைய எல்லா விஷயத்துலையும் சார்ந்து இருந்துட்டா இப்படி எல்லாம் ரொம்ப யோசிச்சு உன்கிட்டயும் தேவை இல்லாம என்னென்னமோ செஞ்சு கடைசில பிரிஞ்சுதான் இருக்கோம்” என் வேதனையுடன் கூற அருணாவிற்கு ராஜவர்மன் கூறியதை புரிந்துகொள்ளவே நேரம் எடுத்தது.

“ அப்போ அன்றைக்கு நான் வீட்டை விட்டு வந்தப்போ கூட வாங்க ஹாஸ்பிடல் போலாம்ன்னு சொன்னதுக்கு நீங்க உடம்பு முடியலைன்னா அம்மாவை கூட்டிட்டுப்போன்னு சொன்னிங்க. அப்புறம் உங்க அத்தைங்க பேசுனத சொல்லவந்ததுக்கும் நீயே எல்லாம் பார்த்துக்கோ எதையும் என்கிட்ட சொல்லாதைன்னு சொன்னதுக்கு இதான் காரணமா??” என அருணா கேட்டதற்கு சிறுது நியாபகம் வந்தவனாக

“ ஹ்ம்ம் ஆமா அருணா நீ ஹாஸ்பிட்டல் போணும்ன்னு சொன்னவுடன் எனக்கு என்ன பன்றதுன்னு தெரியல. முக்கியமான மீட்டிங் வேற அதான் உன்னைய அம்மாகூட போக சொன்னேன். நீ போயிருந்தா மீட்டிங் முடிஞ்சுட்டு அம்மாட்ட கேட்டுட்டு வரலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீ இங்க உங்க அப்பா வீட்டுக்கு வந்துட்ட. அதுக்கு அப்புறம் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஆகிடுச்சு. நேத்து ருத்ரன் பேசும்போது கொஞ்சம் யோசிச்சேன் அப்புறம் என்னாலையும் இதுக்கு மேல உன்னையைவிட்டு இருக்க முடியாதுன்னு வந்துட்டேன்” என ராஜவர்மன் கூறி முடிக்க என்ன சொல்வது என புரியாது

“ எனக்கு என்னமோ நான்தான் அவசரப்பட்டு இங்க வந்துட்டேன்னு தோணுதுங்க.
இத்தனை நாள் பொறுமையா இருந்தமாதிரி இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இருந்த்துருந்தா இன்னும் உங்களை பத்தி தெரிஞ்சுருக்குமோ??” என தவறு செய்தவளாக பரிதவிக்க

“ ம்ப்ச் அருணா இந்த பிரிவுதான் எனக்கு நீ எவ்வளவு முக்கியம்முன்னு புரியவச்சுச்சு. அதனால நீ எடுத்தது சரியான முடிவுதான் சரி அத்தைங்க அப்படி என்ன சொன்னாங்க??”

“ அது… அது….”

“ சொல்லு அருணா என்கிட்ட எதுக்கு தயங்குற”

“ இல்ல எனக்கு மறுபடியும் கரு உருவாக்கிருக்குன்னு தெரிஞ்சவுடன் சந்தோசமா உங்கள தேடி கீழ வந்தேன். அப்போ உங்க அத்தைங்க ரெண்டு பெரும் நம்மோட வாழ்க்கையை விமர்சனம் பண்ணி பேசிகிட்டு இருந்தாங்க. அப்போ கோவம் வந்து தேவை இல்லமா பேசாதிங்கன்னு சொன்னேன். அப்புறம் வாக்குவாதம் வந்துச்சு. அதுல……அவுங்க….” என நிறுத்தி மவுனம் சாதிக்க

“ சொல்லு என்ன சொன்னாங்க??”

“ அது உன் புருஷன் உன்னைய கண்டுக்காதப்பவே இப்படி பேசுற இதுல கண்டுக்கிட்டா அவ்வளவுதான் அப்படின்னு சொல்லிட்டு நான் சொத்துக்காகவும் நாயக் குடும்பத்துல மருமகன்னு தகுதி வேணும்ன்றதாலதான் இங்க இருக்கேன்னு சொல்லி பேசவும் எனக்கு கஷ்டமா போச்சு. அதை உங்ககிட்ட சொல்லவந்தா நீங்களும் என்னைய கண்டுக்கல அதான் கோவத்துல கிளம்பி வந்துட்டேன்” என அருணா கூறி முடிக்க

இனி எல்லாத்தையும் தான் பார்த்துக்குவதாக கூறி ராஜவர்மன் வீட்டிற்கு அழைக்க அன்று ஸ்கேன் எடுக்க செல்ல வேண்டும் என அருணா கூறினாள்.

அதனால் மறுநாள் பூஜைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து அன்று மனைவி
மகனுடன் அவனும் மாமனார் வீட்டில் தங்கிக்கொண்டான். இது கருணாகரன் மூலம் ருத்ரனிற்கும் ஜானவிக்கும் தெரியவர இருவரும் சந்தோஷத்தில் இருந்தனர்.

மறுநாள் கதிரவனின் ஒளி வீச ஆரம்பிக்க அப்பொழுது எழுந்த ஜானவி தென்றலை காண அவளின் அறைக்கு சென்றார். அங்கு அவள் இல்லாததை கண்டு ‘ இவளை என்ன சொன்னாலும் கேட்க மாட்டா. எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வா’ என திட்டிக்கொண்டே செல்ல அங்கு சமையல் அறையில் தலை குளித்ததால் முடியின் அடியில் சிறு முடிச்சிட்டு வான ஊதா நிற புடவையில் அப்பொழுதுதான் கோலம் போட்டுவந்ததால் வியர்வை துளி முகத்தில் ஆங்காங்கே இருக்க சற்றே பூசினார் போன்ற உடல்வாகு இன்னும் சற்றே பூசி பார்க்க பளபளப்பாக குழந்தைத்தனமான முகத்துடன் பார்ப்போரை அவளை நோக்கி சிறு புன்னகை பூக்க வைக்கும் அழகுடன் இருக்க . ஆனால் ருத்ரன் மட்டும் கோவத்தில் எரிந்துவிழ காரணம் அறியாது சிறு பெருமூச்சினை வெளியிட்டு,

“ தென்றல்…” என அழைத்தார்.

“ என்னமா??”

“ உன்னைய எத்தனை தடவை சொல்றது இங்க எல்லா வேலையும் பார்க்க ஆளு இருக்கு நீ சும்மா இருந்தா என்ன??”

“ பரவா இல்லமா. இதுல எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. நம்ம வீடு வேலைதானே” என சிறு புன்னைகையுடன் தென்றல் கூற,

அதனை கண்டு “ ம்ப்ச் தென்றல் இன்னைக்கு பூஜை இருக்கு அதனால் இப்போ கொஞ்சம் ஓய்வு எடு”

“ அது எல்லா எடுத்தாச்சு. ஏதாவது முக்கியமான வேலை இருக்காமா??”

“ இருக்கு பூஜை அறையை சுத்தம் பண்ணனும் அங்கதான் உனக்கும் எனக்கு வேலை. அதனால பேசாம போய் கொஞ்ச நேரம் படு சாயங்காலம் நாம அந்த வேலைய பார்க்கலாம். சரி இப்போ வா” என தென்றலை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர

“ அம்மா”

“ ஹ்ம்ம். என்ன தென்றல்”

“ அது ஆத்தா வரங்களா??”

“ ஹ்ம்ம் வராங்க நீதான் கூப்புட வேணாம்ன்னு. சொன்ன ஆனா எனக்குதான் மனசுக்கு கேட்கல. பூஜைக்கு வாங்கன்னு கூப்பிட்டேன் உடனே சந்தோசமா சரின்னு சொல்லிட்டாங்க. அதனால காலைல பத்து மணி போல காரை அங்க உங்க ஊருக்கு அனுப்பனும்” என பேசிக்கொண்டே இருந்த ஜானவி தென்றலின் அமைதியை கண்டு,

“ என்ன தென்றல் அமைதியா வர உனக்கு உங்க ஆத்தா வரது பிடிக்கலையா??”

“ அச்சச்சோ அப்பிடி இல்லமா. அது ஆத்தாவால இன்னைக்கு எதுவும் இங்க பிரச்சனை ஆகிடுமோன்னுதான் யோசனை”

“ அதெல்லாம் பார்த்துக்கலாம் வா” என இருவரும் அன்றைய பொழுதை கவனிக்க
சென்றனர்.

மாலை மூணு மணி அளவில் பூஜை அறையை ஜானவியும் தென்றலும் சுத்தம்
செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது மாடியில் இருந்து வந்த ருத்ரவர்மன் ஜானவியிடம்

“ அம்மா” என அழைக்க

“ என்னப்பா??” என கேட்ட ஜானவியிடம்

“ உங்ககிட்ட எத்தனைதடவை சொல்லிருக்கேன் பூஜை அறையெல்லாம் நீங்களோ இல்ல இந்த வீட்டு மருமகள்களோ சுத்தம் செய்ய வேண்டியது தானே. எதுக்கு வேலைக்காரி எல்லாம் செய்ய சொல்லறீங்க” என எரிந்து விழுந்த ருத்ரனை கண்டு

‘ இவன் ஒருத்தன் இவளை குறை சொல்றதையே வேலையா வச்சுக்கிட்டு அலையுறான்’ என மனதில் திட்டிக்கொண்டே

“ ஆமா அப்படியே நான் சொல்றதுதான் இங்க எல்லாரும் கேட்குறாங்க உங்க அண்ணிங்க வந்து செய்றதுக்கு. போடா…. அங்குட்டு. வந்துட்டான் நியாயம் பேச. நான் கட்டுனதும் சரி இல்ல பெத்ததும் சரி இல்ல இதுல வந்தது மட்டும் சரியாவா இருக்க போகுது” என ஜானவி கூற

“ ஏம்மா நான் என்ன சொல்லிட்டேன்???”

“ நீ ஒன்னும் சொல்லலப்பா நான் தான் இங்க எல்லாம் சொல்லுறேன்” என கோவமாக கூறுவதுபோல கூற

“ ஏம்மா இப்போ கோவப்படுறீங்க??”

“ ஓ!!... எனக்கு கோவம் வரக்கூடாது”

“ நான் அப்படி சொல்லலமா”

“ அப்படிகூட சொல்லுவ”

“ ஏன்ம்மா ஒரு மார்க்கமா பேசுறீங்க. நான் ஒன்னு சொல்லல உங்க இஷ்டம் போல பண்ணுங்க” என கூறிவிட்டு ருத்ரன் அங்கிருந்து நகர

‘ அப்பாடா போய்ட்டான் இல்ல இவளை இங்க இருந்து போக வைக்காம போகமாட்டான். இனிமே இவன்கிட்ட இப்படித்தான் பேசணும்’ என நினைத்துக்கொண்டு தென்றலை காண அவள் இங்கு நடந்த எந்த சம்பாஷணைகளையும் கவனிக்காது அவளுடைய வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்க

“ தென்றல்”

“ அம்மா”

“ இங்க இவ்வளவு பேசுனமே நீ கவனிக்கவே இல்லையா??”

“ அம்மா எப்பிடியும் உங்க பிள்ளை என்னையதான் எதாவது சொல்லிருப்பாங்க அத நான் கவனிச்சு மனசு கஷ்டபடுறதுக்கு பேசாம கண்டுக்காம இருக்கலாம் அதான்”

“ எப்படி தென்றல்??”

“ அது எல்லாம் அனுபவம்மா. எங்க அத்தை இப்படித்தான் எதையாவது சொல்லிகிட்டே இருப்பாங்க நான் காதுலையே வாங்கமாட்டேன்” என கூற அதற்கு மேல் பேசாது இருவரும் வேலையை தொடர்ந்தனர்.

அனைத்தையும் சுத்தம் செய்து சாமி படங்களுக்கு பூ வைத்துக்கொண்டிருக்கும் போது ஜானவி, “ தென்றல்” என அழைத்தார்.

“ அம்மா”

“ இங்க பூ வைக்கறதோட வேலை அவ்வளவுதான். அதனால நீ அதை பாரு நான் போய்
பிரசாதம் ரெடி ஆகிடுச்சான்னு பார்த்துட்டு வரேன்”

“ ஹ்ம்ம் சரிம்மா” என கூறிவிட்டு அவள் வேலையை தொடர அப்பொழுது வெண்ணை உண்ணும் பாலகிருஷ்ணரின் சிலையை கண்டு,

“ கிருஷ்ணா நீ சின்ன பிள்ளைல இருந்து சந்தோசமா இருக்கல்ல. ம்ப்ச் நான் பாரேன் எப்போ பார்த்தாலும் யாருகிட்டையாவது திட்டு வாங்கிட்டே தான் இருக்கேன். யாருக்கும் என்னைய பிடிக்கவே இல்லைல. சின்னதுல இருந்து அத்தை பாசமா பேசாமாட்டங்களான்னு எத்தனை நாளு ஏங்கிருப்பேன். அது நடக்கவே இல்ல.

இப்போ கல்யாணம் ஆகிடுச்சு புருசனுக்கு நான் தான் பொண்டாட்டின்னு தெரிய கூடாது. அப்படியே தெரிஞ்சுட்டாலும் வார்த்தை
யாலையே கடிச்சு குதறிடுவாரு எனக்கு அம்மா அப்பான்னு ஒரு குடும்பத்தைத்தான் கொடுக்கல.

போற போக்க பார்த்தா புருஷன் பிள்ளைகள்ன்னு ஒரு குடும்பத்தையும் குடுக்க மாட்ட போல. ஹ்ம்ம் என்னைய தெரிஞ்சு புரிஞ்சு மன்னிச்சு என்னைய ஏத்துக்கிட்டு வாழ்ந்த மாதிரித்தான்.

கடைசிவரைக்கும் கனவுலையே நான் டூயட் பாடிகிட்டு இருக்க வேண்டியதுதான்” என தென்றல் கிருஷ்ணர் சிலையிடம் புலம்பினாள் மேலும்

“ என்ன கிருஷ்ணா உன் சிரிப்பே சரி இல்ல நான் பாடமாட்டேன்னு நினைக்குறியா இப்போ பாடிக்காட்டுறேன் பாரு.” என கூறி சிலையை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்துகொண்டே,

“ எந்த பாட்டு பாடலாம்??..
ஹ்ம்ம் எப்போதும் நான் பாடுறதையே பாடுறேன் மெதுவாத்தான் கிருஷ்ணா பாடுவேன் சரியா??” என கூறிவிட்டு பாட ஆரம்பித்தாள்

அத்தான்……
என்னத்தான் அவர்…
என்னை தான்……
எப்படி சொல்வேனடி……

“ ஏன் வெளிய சொல்ல முடியாத அளவுக்கு உன் அத்தான் உன்னைய கழுவி ஊத்துறாரா???” என கேட்டுக்கொண்டே நித்யவதி பூஜை அறைக்குள் வர அதிர்ந்து திரும்பிய தென்றல் நித்யத்வதியை கண்டு “ அக்கா…..” என செல்லமாக சிணுங்கினாள்.

“ என்ன அக்கா இங்க அத்தான்னு கூப்புடவே வழிய காணோம் இதுல மேடம் பாட்டு வேற. நானே டென்ஷன்ல இருக்கேன் நீ இங்க பாடிகிட்டு இருக்க” என நித்யவதி புலம்ப

“ அக்கா ஏன் டென்ஷன்??”

“ ஹ்ம்ம் எல்லா உன்னைய பத்திதான்”

“ என்னைய பத்தியா ஏன்க்கா??”

“ எப்படி இன்னைக்கு நீதான் இந்த வீட்டு கடைசி மருமகள் ருத்ரனோட மனைவின்னு சொல்றதுன்னு ஒரே டென்ஷன்”

“ ஐயையோ!!....”

“ என்னடி எதுக்கு இப்போ கத்துற??”

“ அக்கா நீங்க என்ன சொல்றிங்க??. உண்மைய சொல்ல போறிங்களா!!.... வேணாம்க்கா” என தென்றல் கெஞ்ச

“ அப்புறம் கடைவரைக்கும் கனவுலையே எப்படி சொல்வேன் எப்படி சொல்வேன்னு பாடிகிட்டு இருக்க போறியா??. அதான் நான் இப்படி பூஜைல சொல்லப்போறேன்”

“ அக்கா பயமா இருக்கு ஒருவேளை உண்மை தெரிஞ்சு வீட்டைவிட்டு துரத்திட்டா??”

“ அப்பிடி எல்லாம் துரத்த முடியாது. அதுக்கு சரியான ஆளு இன்னைக்கு வராங்க”

“ யாரு??”

“ எல்லாம் உன் சொந்தம்தான்”

“ அக்கா நீங்க என் ஆத்தாவ சொல்றிங்களா??”

“ ஹ்ம்ம் நானும் அவுங்களும் நாளு நாளா இந்த விஷயமா பேசிகிட்டு இருந்தோம்” என நித்யவதி பேசிக்கொண்டிருக்கையில் ருத்ரவர்மன் இவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு அவர்களை கடந்து செல்ல அதனை கண்டு,

“ தென்றல்”

“ என்ன அக்கா??”

“ இனிமே நான் சொல்ற பாட்டை பாடு அதான் உனக்கு சரியா இருக்கும்”

“ என்ன பாட்டுக்கா??”

“ போங்க மச்சான் போங்க

வந்த வழிய பாத்து போங்க
போங்க மச்சான் போங்க
வந்த வழிய பாத்து போங்க

ஏங்க ஏங்க நீங்க
ஏன் இப்படி முறைக்குறிங்க

என பாடிக்காட்டிய நித்யவதியை கண்டு,

“ அக்கா இந்த பாட்டு இப்படி வராதே”

“ உனக்கு இதான் சரியா வரும். சரி சரி சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு கிளம்பு பூஜைக்கு. உனக்கு புடவை நகை எல்லாம் உன் அறையில வச்சுருக்கேன். அதை சொல்லதான்
வந்தேன்” என கூறிவிட்டு சென்றாள் நித்தியவதி.

பின் மாலை ஆறு மணி அளவில் அருணா குடும்பமும் வந்து சேர பூஜை தொடங்கியது. அப்பொழுது சரியாக சின்னாத்தாள் சுந்தரி கண்ணன் மூவரும் வந்து சேர்ந்தனர். அவர்களை கண்டு எழ பார்த்த தென்றலையும் ஜானவியையும்,

“ பூஜையில இப்படித்தான் பாதில எந்திரிக்குறதா. இது நல்லதுக்கு இல்ல” என மாயாவதி லீலாவதி அருகில் நின்று புலம்ப

அதனால் இருவரும் தலையை அசைத்து வரவேற்க சின்னாத்தாளும் கண்களால் பூஜையை கவனிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தார். சுந்தரியும் கண்ணனும் பின்னாடி இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.

அதே நேரம் ஹர்ஷா இரவு ஒன்பது மணிக்கு வருவதாக குறுந்தகவல் அனுப்பிருக்க அதனை படித்துக்கொண்டே ருத்ரனும் சின்னாத்தாளின் அருகில் அமர்ந்தான்.

அவனை பார்த்த சின்னாத்தா சந்தோசமாக அதிர்ந்த அவனிடம் பேசும்பொருட்டு அவனின் கைகளை தட்டி அழைக்க யாரென திரும்பிப்பார்த்த ருத்ரன் சின்னாத்தாவை கண்டு,

‘ யாரு இவுங்க இந்த பூஜைல வந்தவுங்களுக்கு இவுங்களுக்கும் சம்மந்தம் இருக்குறமாதிரி தெரியலையே’ என தோற்றத்தையும் கழுத்தில் போட்டிருந்த பாசிமணியை கொண்டு யோசித்துக்கொண்டே

“ யாரு நீங்க??” என கேட்க

“ ஹ்ம்ம் உன் முறைப்பொண்ணு” என அவனின் உதட்டசைவை வைத்தும் அருகில் இருந்ததால் அவனின் கேள்விக்கு பதில் அளித்தார் சின்னாத்தா.

“ என்ன பாட்டி கொழுப்பா!!...” என முறைத்துக்கொண்டு ருத்ரவர்மன் சின்னாத்தாவிடம் பேச

“ பின்ன என்ன பேராண்டி பாட்டின்னு சொல்லிட்டு யாருன்னு கேட்குற??”

“ ம்ப்ச் பாட்டி சரி. ஆனா நீங்க யாரு??”

“ நான் சின்னாத்தாள்”

“ சின்னாத்தாவோ இல்ல பெரியாத்தவோ ஆனா உங்கள நான் இதுக்கு முன்னாடி இங்க பார்த்ததே இல்லையே”

“ என்ன அப்பு சுத்த கூறுகெட்ட தனமா பேசுற நான் முன்னாடி இங்க வந்தாதானே என்னைய பார்த்திருக்க முடியும்” என சின்னாத்தா கூற அதில் ருத்ரனிற்கு கோவம் வந்து பல்லை கடித்துக்கொண்டு

“ அப்போ நீங்க தூரத்து சொந்தமா??” என கேட்க

“ ஹ்ம்ம் தூரம்ன்னா ஊரு தொலைவுதான். ஆனா சொந்தம்னா அப்புக்கு நாங்க ரொம்ப நெருங்கன சொந்தம்”

“ நெருங்குன சொந்தம்னா??” என ருத்ரவர்மன் வினவ

“ ஹ்ம்ம் நெருங்குன சொந்தம்னா….” என சின்னாத்தா கூறிக்கொண்டே பூஜை முடித்து நெற்றியின் வகுட்டில் குங்குமம் வைத்துக்கொண்டிருந்த தென்றலை காண சின்னாத்தாவின் பார்வையை கண்டு தானும் அங்கு பார்த்த ருத்ரவர்மன் தென்றலை காணுகையில் சின்னாத்தா கூறியதைக்கேட்டு,

“ என்னது!!!....” என அலறினான் அவனின் சத்தத்தில் அனைவரும் ருத்ரவர்மனை காண

“ இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு இப்படி கத்தி எழுந்த பேராண்டி” என சின்னாத்தா
கேட்க

“ உனக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா எதுல விளையாடுறதுன்னு இல்ல” என ருத்ரவர்மன் கடிய

“ ஆமா இப்பதான் எனக்கு இளமை திரும்புது உன்கூட விளையாட. ஹம்ம்கூம் வயசுலயே நான் என் புருசன் கூட விளையாட முடியல இதுல இவருகிட்ட விளயாட்டுறோமா” என சத்தமாக சின்னாத்தா முணுமுணுக்க அதில் மீண்டும் கோபமடைந்த ருத்ரவர்மன்

“ ஏய் கிழவி நீ என்ன சொன்னன்னு யோசிச்சு பாரு”

“ எல்லாம் யோசிச்சுதான் சொன்னேன். சொந்தம்னா உன் பொண்டாட்டி என் மகவழி பேத்தின்னு” என மறுபடியும் அழுத்தமாக சின்னாத்தா கூற

“ அம்மா!!!…….” என ருத்ரவர்மன் கத்தினான்.

அதே நேரம் சின்னாத்தா ‘ கருப்பா விஷயத்தை ஒரு வழியா சொல்லிட்டேன் இனிமே நீதான்பா என் பேத்தியை இங்க அவ புருசன் கூட வாழவைக்கணும்’ என அவசரமாக மனதில் வேண்டிக்கொண்டார்.

plz drop ur comments friends and thanks for supporting
Nice ep
 
N

Nice
 
Top