Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(23) & (24)

Advertisement



வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(23) & (24)



போலீஸ் உள்ளே வருவதற்கு முன் சுந்தரியும் கண்ணனும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். அவர்கள் வந்ததையும் அறியாது தென்றல் எங்கோ வெறித்து கொண்டு அமர்ந்து இருக்க சுந்தரி வேகமாக தென்றலின் கன்னத்தில் அறைந்தாள்.

அந்த சத்தத்தில் ருத்ரன் திரும்பி தென்றலை காண அங்கு கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கலங்கிய விழிகளுடன் உடல் நடுங்க எழுந்து நின்றுகொண்டிருந்தாள் அவளின் நிலைகண்டு வேகமாக பதட்டத்துடன் ருத்ரன் நெருங்க அதே நேரம் சுந்தரி அஹங்காரமாக கத்த ஆரம்பித்தாள்.

“ ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த நேரத்துல இங்க வந்து உட்கார்ந்துருப்ப??. ஹ்ம்ம்…. இன்னும்

வயசுக்கே வரல இந்த லட்சணத்துல ஆம்பள பின்னாடி போற” என கேவலமாக கத்த அதைவிட வேகமாக

“ அத்தை!!!!....” என தென்றல் கத்த

“ என்னடி சத்தம் போடுற இன்னைக்கு கோவிலுக்கு போனவ அந்த கார்காரன்கிட்ட பேசிகிட்டு இருந்துருக்க அவன்தான் இன்னைக்கு இந்த ராணி பிள்ளை நிலைமைக்கு காரணம்.”

“ இல்ல அத்த அவரு இல்ல”

“ என்ன அவரு சுவரு. ஹ்ம்ம். ஓ!!... அந்த அளவுக்கு வந்துடுச்சா வீட்டுல டிவில அந்த கார்காரன் போட்டவா பார்த்துட்டு காலைல நீ அங்க அவன்கிட்ட பேசிகிட்டு இருந்ததை திருவிழாவுக்கு வந்த ராஜாத்தி மதனி பார்த்ததை அந்த கிழவிட்ட சொன்னா என் பேத்தியை பத்தி எனக்கு தெரியும்ன்னு கத்துக்கிட்டு இருக்கு. நீ அவருன்னு உரிமையா சொல்ற அளவுக்கு வந்துட்ட” என மீண்டும் சுந்தரி கத்த

தென்றல் சோர்வுடன் “ மாமா மாமா நீங்களாவது நான் சொல்றதை கேளுங்களே” என கண்ணனிடம் தென்றல் பேச ஆரம்பிக்கும் போதே

“ உன்னைய நான் என்னமோன்னு நினைச்சேன் ஆனா இன்னைக்கு எங்களை தலைகுனிய வச்சிட்ட” என கவலையுடன் கண்ணன் கூற

“ என்ன இவகிட்ட பேச்சு நான் இவளை கத்து போது எல்லாம் என்னைய வில்லி மாதிரி பார்த்திங்க. இப்போ இவ புத்தி தெரிச்சுச்சா வாங்க போலாம் வாடி போலாம்” என தென்றலின் கையை பிடித்து சுந்தரி இழுக்க

“ இல்ல அத்தை அது… அது… ராணியை பார்த்து….”

“ இங்க ஊரே உன்னைய பார்க்குது இதுல அவளை இவ பார்க்க போறாளாம் வாடி முதல்ல” என கிட்டத்தட்ட தென்றலை இழுத்துக்கொண்டு சுந்தரியும் கண்ணனும் மருத்துவமனையில் இருந்து வெளியேற இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக ருத்ரன் பழையபடி போய் அமர்ந்துகொண்டான்.

ருத்ரனை கைது செய்ய போலீஸ் மருத்துவமனைக்குள்ளே செல்ல முற்படுகையில் வேகமாக நுழைந்தனர் திருவாசகமூர்த்தியும் மாயாவதி மற்றும் லீலாவதியும்.
ஏற்கனவே திருவாசம் தன் பண பலம் மூலம் சற்றே கைதை தடுக்க எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கையில்,

அதனை அறிந்தே போலீஸும் சற்றே தயங்கி அங்கையே நின்றனர். ஆனால் இதனை ஏதும் அறியாது இருந்தனர் ருத்ரவர்மனும் தென்றலும். ருத்ரவர்மன் எங்கையோ வெறித்து கொண்டு சிந்தித்துக்கொண்டிருக்கையில் திருவாசகமூர்த்தி அவனிடம் நெருங்கி “ ருத்ரா!!!...” என அழைக்க பசுவை கண்ட கன்றென வேகமாக “ அப்பா!!....” என நெருங்கினான் ருத்ரன்.

ஆனால் அதற்குள் மாயாவதியின் கேள்வி ருத்ரனின் நடையை நிறுத்தியது. தான் சரியாகத்தான் கேட்டோமா என மீண்டும் மாயாவதியை புருவ சுளிப்புடன் நோக்கிய ருத்ரவர்மனை கண்டு

“ சொல்லு ருத்ரா ஏன் இப்படி பண்ணுன???. இதான் நீ எங்க அண்ணனுக்கு குடுக்குற மரியாதையா??. ச்சை…. உன்னால எப்பொழுதும் எங்க அண்ணனுக்கு பிரச்சனைதான். இன்னைக்கு….. இன்னைக்கு…. நீ பண்ணிருக்குற காரியம் இருக்கே சொல்ல கூட அருவருப்பா இருக்கு” என மாயாவதி பேசிக்கொண்டே செல்லுகையில் கோபம்கொண்டு கை முஷ்டியை இறுக்கி கோவத்தை கட்டுபடித்துக்கொண்டே திருவாசகமூர்த்தியை காண அவர் மாயாவதியை தடுக்காது அவரும் கோவமாக ருத்ரனை முறைத்துக்கொண்டிருந்தார்.

‘ ஆக இங்க இந்த தப்பை நான் பண்ணிருப்பேன்ன்னு இவுங்க நினைக்குறாங்க. ஹ்ம்ம் என்ன நடந்ததுன்னு கேட்காம நீதான் இதை செஞ்சதுன்னு முடிவோட பேசுறவங்ககிட்ட என்ன பேசுறது’ என நினைத்துக்கொண்டு எதுவும் கூறாது திரும்பி அவன் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர அதனை கண்டு மாயாவதி ஏதேதோ திட்டிக்கொண்டிருக்கையில்,

அங்கு நின்றுகொண்டிருந்த போலீஸ் கைது செய்ய ருத்ரனை நெருங்கினர். அவர்களை கண்டு புருவங்களை சுருக்கி யோசித்த ருத்ரன் அங்கு சில அடிகள் தள்ளி நின்றிருந்த திருவாசக மூர்த்தியை காண அவர் எங்கே மகனை கைது செய்துவிடுவார்களோ என பதட்டத்தில் நின்றுகொண்டிருந்தார்.

அவரின் பதட்டமே சூழ்நிலையை ருத்ரனிற்கு புரிய வைக்க வேற எதை பற்றியும் சிந்திக்காது போலீஸிடம் தென்றலின் பெயரை விடுத்து தானாக அந்த இடத்திற்கு சென்றதாவும் இந்த சம்பவம் நடந்ததாக கூற போலீஸ் தரப்பினர் நம்ப மறுத்து கைது செய்ய உறுதியாக இருந்தனர்.

ஒன்று ருத்திரனிடம் சாட்சி இல்லாதது இரண்டாவது ருத்ரனிற்கு எதிராக மணிவாசனின் சாட்சி அடுத்ததாக ஊர்மக்களின் போராட்டம் என எல்லாம் ருத்ரனுக்கு எதிராக இருப்பதால் கைது செய்ய முற்படுகையில் புயல் போல நுழைத்தார் கருணாகரன். அவரை கண்டதும் நின்ற இடத்தில இருந்து நகராது அவரை வெறிக்க ருத்ரனை நெருங்கிய கருணாகரன்,

“ ருத்ரா!!... என்னப்பா??... என்ன ஆச்சு??... யாரு பண்ணுனா???... நீ எப்படி அந்த பொண்ணை காப்பாத்துன??” என இருகைகளாலும் அவனின் தோள்களை பற்றிக்கொண்டே தன் கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருந்த கருணாகரனை

“ அங்கிள்!!......” என தாவி அணைத்துக்கொண்டான் ருத்ரவர்மன். கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துகொண்டே இருக்க அதனை கண்டு

“ டேய்!!... ருத்ரா அதான் நான் வந்துட்டேன்ல நான் பார்த்துக்கறேன்” என போலீசிடம் சிறுது நேரம் பேசினார் கருணாகரன். அடுத்து ருத்ரனிடம் என்ன நடந்தது என அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார். இதனை அருகில் கேட்டுக்கொண்டிருந்த திருவாசக மூர்த்திக்கு ஒரு ஆசுவாச உணர்வு தன் மகனின் மீது தவறு இல்லை என்று.

அந்த உணர்வுடன் ருத்ரனை காண அவன் அந்நிய பார்வையுடன் திருவாசக மூர்த்தியை பார்த்த்துக்கொண்டிருந்தான். அந்த பார்வையினை புரிந்துகொள்ளாது கருணாகரனிடம்,

“ கருணா அதான் இவன் எல்லா சொல்லிட்டான்ல இனி கைது செய்ய வேண்டியது இல்லைலடா” என திருவாசக மூர்த்தி வினவ

“ ம்ப்ச் இல்லடா நமக்கு சாட்சி வேணும் ஒன்னு உள்ள இருக்குற பொண்ணு கண்ணு முழிச்சு சொல்லணும். இல்ல இன்னொரு பொண்ணு இருக்குன்னு சொன்னான்ல அந்த பொண்ணு சொல்லணும். ஆனா அந்த பொண்ணை பத்தி ஒன்னும் சொல்ல மாட்டேன்ன்னு சொல்றான். தேவை இல்லாம அந்த பொண்ணோட பெயரை உள்ள இழுக்க வேணாம்னு சொல்லுறான். அதோட எனக்கு என்னமோ இந்த மணிவாசன் தான் அங்கு இருந்து தப்பிச்சவன இருப்பான்னு தோணுதுடா திரு”

“ மணிவாசனா!!!... அவன் யாரு கருணா??”

“ அவன்தான் இப்போ நமக்கு எதிரா இருக்குற சாட்சி போலீஸ் இப்போ சொன்னாங்களா”

“ அங்கிள் நீங்க எப்பிடி சொல்றிங்க???” என பரபரப்புடன் ருத்ரவர்மன் கேட்க

“ நீ தான் சொன்னில உங்க நாலு பேரை தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு ஆனா வெளிய சொன்னவன் அந்த நாலாவது ஆளா இருக்க வாய்ப்பு இருக்குல்ல. அதுக்கு சொன்னே சரி விடு. வேற எதாவது வழி இருக்கான்னு என் நண்பர்கள்கிட்ட விசாரிச்சுட்டு வரேன்” என கூறிவிட்டு அங்கிருந்து கருணாகரன் நகர திருவாசகமும் அங்கிருந்து

கருணாகரனோடு நகர ருத்ரவர்மன் மீண்டும் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தான்.

கருணாகரனிற்கு வேற வழி கிடைக்காது மிகவும் டென்ஷனிலில் நிற்க அப்போது அங்கு ஒருவன் வந்து நின்றான். அவனை கவனியாது கருணாகரன் யாருக்கோ போன் செய்துகொண்டிருக்க “ சார்” என அழைத்தான் அந்த புதியவன்.

அவனை கண்ட கருணாகரன் “ என்ன??... சொல்லுங்க….” என கூற

“ சார் நான் ருத்ரன் சார பார்க்கணும்ன்னு”

“ ஹ்ம்ம் யாரு நீங்க???” என வந்தவனை முழுவதும் ஆராய்ச்சி பார்வையுடன் பார்த்தார் கருணாகரன்.

நலுங்கிய வேட்டியும் அழுக்கு சட்டையும் தலைமுடி கலைந்து வேர்த்து விறுவிறுக்க தனது துண்டால் முகத்தை துடைத்தவனை பார்த்துக்கொண்டே

“ உன்னதான்பா யாரு நீ??.
எதுக்கு ருத்ரனை பார்க்கணும்ன்னு சொல்ற??” என கருணாகரன் கேட்டுக்கொண்டிருக்கையில் அங்கு வந்த ருத்ரன்

“ என்ன அங்கிள் யாரு இவரு??” என கேட்டுக்கொண்டே கருணாகரனை நெருங்க

“ சார் நீங்கதானே ருத்ரவர்மன். நான் மருது சார் என்னைய செல்வி தான் அனுப்பிவச்சுச்சு” என மருது கூறிக்கொண்டிருக்கையில்

“ ஒரு நிமிஷம் நீங்களே யாருன்னு தெரியாது இதுல செல்வி யாரு??” என ருத்ரன் குழப்பத்துடன் நெற்றியை நீவிக்கொண்டே கேட்க

“ சார் செல்வியை தெரியாதா அந்த பிள்ளைதான் என்னைய உங்களை இந்த போலீகிட்ட இருந்து உண்மைய சொல்லி காப்பாத்த சொன்னுச்சு” என மருது கூறிக்கொண்டிருக்கையில் கருணாகரன் வேகமாக

“ அப்போ அந்த பொண்ணு செல்விதான் உள்ள இருக்குற பொண்ணை காப்பாத்த ருத்ரன் கிட்ட உதவி கேட்ட பொண்ணா”
என வினவ

“ ஹம்ம் ஆமா சார். செல்வி தான் எனக்கு உதவ போய் அவரு இக்கட்டுல இருக்காரு நீ எதாவது உதவி செயின்னு சொல்லுச்சு” என மருது கூறினான்

“ மருது அப்போ முதல்ல நீங்க உங்களை பத்தி சொல்லுங்களேன்” என கருணாகரன் வினவ

“ சார் என் பேரு மருது. நான் பத்து வரை படிச்சுருக்கேன் சார். ரெண்டு வருஷம் பள்ளிக்கூடத்துக்கு போகல. நான் நல்ல படிப்பேன் எனக்கு காலேஜ் போகணும்ன்னு ரொம்ப பிரியம் எனக்கு அம்மா அப்பா இல்ல அண்ணா அண்ணி மட்டும் தான். அவுங்ககிட்ட படிக்க காசு கேட்க கஷ்டப்பட்டு இந்த ரெண்டு வருஷமும் மணிவாசகன்கிட்ட வேலைபார்த்தேன் சார்.

படிக்குறதுக்கும் காசு சேர்த்துக்கிட்டே வந்தேன். ஒரு மூணு மாசம் முன்னாடிதான் இந்த ராணி பிள்ளைகிட்டையும் செல்வி பிள்ளைகிட்டையும் தப்பான இடத்துல கை வைக்குறது தெரியாதமாதிரி இடிக்குறதுன்னு பண்ணிக்கிட்டு இருந்தாரு. அதோட கண்ணுளையும் ஒரு களவாணித்தனம் தெரிஞ்சுச்சு.

அந்த பிள்ளைகளை எச்சரிக்கை பண்ணலாம்ன்னு பார்த்தா என் ஜாதி வேறன்னு இந்த ராணி பிள்ளைவீட்டுல என் கூட பேசக்கூடாதுன்னு சொல்லிருப்பாங்க போல அதனால இந்த மணிவாசனை பத்தி சொல்ல போறப்ப எல்லா இந்த ராணி பிள்ளையும் பேசாது செல்வியையும் பேசவிடாம இழுத்துட்டு போயிடும். நானும் நிறைய தடவை முயற்சி பண்ணி பார்த்துட்டு சரி நானே இவுங்கள பார்த்துக்கலாம்ன்னு மணிவாசன் இந்த ரெண்டு பிள்ளைகள்கிட்ட பேசும் போது நானும் கூடவே இருக்குறமாதிரி இருப்பேன்.

இன்னைக்கு அண்ணா பிள்ளைக்கு மேலுக்கு முடியலைன்னு மாத்திரை வாங்க போயிட்டு வரதுக்குள்ள அந்த ஆளு இந்த கேடுகெட்ட வேலையை பார்த்துருக்கான் சார்” என மருது கூறி முடிக்க

“ அப்போ செல்வி எப்பிடி உங்ககிட்ட உதவி கேட்டுச்சு???” என கருணாகரன் வினவ

“ செல்வி பிள்ளை பாவ சார். அவுங்க அத்தை அடிச்சு வீட்டு திண்ணைல உட்காரவச்சு இன்னும் திட்டிகிட்டு இருக்கு அப்போ நான் என்ன நடந்துச்சுன்னு கேட்க போனே செல்வி கிட்ட. அப்போதான் எல்லா விஷயமும் சொல்லுச்சு. நானும் இங்க எல்லாரும் ருத்ரன் சார் தான் காரணம்ன்னு சொல்றாங்க போலீஸ் கைது செய்ய போறாங்கன்னு சொன்னே.

அதான் என் கையை பிடிச்சுக்கிட்டு எப்பிடியாவது உதவி செய்ய சொல்லுச்சு. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல அதான் ருத்ரன் சார பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என மருது கூறிமுடிக்க

மருதுவை முக்கிய சாட்சியாக வைத்து ருத்ரனை நிரபராதி என நிரூபித்து ராணியின் வாக்குமூல மூலம் மணிவாசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

என்னதான் உண்மையை கூறி ருத்ரனை நிரபராதியாக விடுவித்தாலும் சமூகத்தில் சிலர் திருவாசகமூர்த்தியின் பண பலத்தால் தப்பை மறைத்ததாக கூற இந்த வழக்கை மீடியாவும் ஒரு அலசு அலசிவிட்டதில் இதில் ஆறு மாதம் ருத்ரன் வீட்டை விட்டு எங்கும் செல்லாது மிகவும் மன உளைச்சல் ஆக ஆரம்பிக்க வீட்டிலும் யாருடனும் பேசாது தனிமை நாட அதில் இருந்து மீட்க வேகமாக வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தனர்.

சின்னாத்தா கடந்தகாலத்தை அனைவருக்கும் கூறிமுடிக்க

“ இது எப்படி பாட்டி உங்களுக்கு தெரியும்??” என நித்யவதி வினவ

“ செல்விக்கும் பேராண்டிக்கும் கல்யாணம் முடிஞ்சவுடன் செல்வி எல்லா விஷயத்தையும் சொன்னா”

“ அப்போ செல்வியை சந்திச்சதாலதான் இவ்வளவு அவமானம் அப்படின்னு அவ மேல கோவமா இருக்கானா ருத்ரன்…” என சத்தமாக நித்யவதி முணுமுணுக்க

“ சரி சரி நேரம் ஆச்சு வாங்க தூங்கலாம்” என அங்கிருந்து தூங்க போக ஜானவியும் சின்னாத்தாவும் பின் தங்கி மெதுவாக நடக்க

“ ஏன்த்தா ஒரே யோசனையா இருக்க??” என சின்னாத்தா வினவ

“ இல்ல அத்தை எனக்கு என்னமோ ருத்ரன் வேற எதோ காரணத்துக்காக கோவமா இருக்குறாப்புல இருக்கு. வேற எதோ ஒரு விஷயம் இருக்கு ரெண்டு பேருக்கும் இடையில ஏன்னா நிச்சயம் என் மகன் ஒரு பொண்ணை காப்பாத்துனதுக்காக எல்லாம் கோவப்பட மாட்டான்” என கூறிவிட்டு ஜானவி நகர

அதே நேரம் ருத்ரனும் தென்றலும் கடந்தகால சிந்தனையிலையே இருந்தனர்.


ருத்ரனுக்கு மனம் முழுவதும் கோவம் கோவம் கோவம் மட்டுமே இருந்தது. யாரோ செய்த தவறுக்கு முழுக்க முழுக்க இவன்தான் காரணம் என அனைவரும் எள்ளி நகையாட எரிச்சலின் உச்சத்தில் இருந்தான்.

அதோடு முதலில் திருவாசகம் நம்பாதது மாயாவதி லீலாவதி பேச்சு என எல்லாம் அனைவரின் மீதும் வெறுப்பு என்ற பிம்பத்தை கொடுக்க வீட்டில் உள்ளோரிடம் எறிந்துவிழ ஆரம்பித்தான். நண்பர்கள் சொந்தங்கள் என அனைவரிடமும் ஒதுக்கம் காட்ட ஆரம்பித்தான் அதோடு உதவி செய்ததை சிலரும் நம்பியும் நம்பாமலும் இவனுக்கு அறிவுரைகளை அள்ளிவீச ருத்ரனிற்கு அவர்களை துவம்சம் செய்யும் அளவிற்கு கோவம் வந்தது.

ஆனால் அனைத்தையும் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு வேகமாக வெளிநாட்டிற்கு படிக்க செல்ல அனைத்து வேலைகளையும் துரிதமாக நடத்தினான். இதற்கு இடையில் மாறவர்மனின் கல்யாணத்தில் நடந்த குளறுபடி என அவனை மேலும் எரிச்சல் அடைய செய்தது. வெளிநாட்டிற்கு செல்ல இன்னும் ஒருவாரம் இருந்த நிலையில் கருணாகரனின் உதவியோடு ராணியை சந்திக்க சென்றான்
ருத்ரவர்மன்.
Nice
 
Top