வான் தழுவிடிலோ வெண்ணிலவே 10

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே

தங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு பிரமிப்பை தருகிறது. மனம் நிறைய மகிழ்ச்சி. இன்று ஆரா விக்ரம் சந்திப்பு மக்களே படித்து மகிழுங்கள்.

விக்ரம் பார்த்தசாரதி 07

ஆராதனா வாசுதேவன் 06
 
பெருமை கொண்ட பார்வை
பாங்கான அதிகாரம் பேசும் வார்த்தைகளில்
பாயும் வேகம்
பதுங்கும் கோவம்
பிடிவாதம் பிடித்தவன்
பார்த்தசாரதி விக்ரம் பார்த்தசாரதி...

பொங்கும் அமைதியின் உருவம்
பார்வை நேர்கோட்டில்
பதமாய் பேசினாலும்
புன்னகை பார்த்தால்
பாரத்தைப் போக்கும் பரிவின் பெண்ணாம்...
பணிவு கொண்ட ஆராதனா வாசுதேவன்

பார்வைகள் பரிமாறும் பொழுதெல்லாம்
பரிகாசம் பொங்கி பாயும் அவன் விழிகள்...

பாராட்டும் மெச்சுதலும்
பதுங்கி பிறக்க
பெண்ணின் பார்வையில்
பரவி நிற்கும் அமைதி....

பரஸ்பரம் புரியாத பாதைகள் போல் பிரிந்து செல்ல
பின்னாலே பின்னிப் பிணையும்
பாசம் மறைந்திருக்க...

புறம் வேறானவர்கள்
பார்வையிலும்
பொருளில் ஒன்றாய் பதிந்திருக்கும்
பாயும் புலியும்
பதுங்கும் சிங்கம்....
 
விக்ரம் - பதுங்கும் புலி என்றாலும், இரையைத் தவிர வேறு எதிலும் நோக்கம் கொள்ளாது. விக்ரமின் இரை ஷியாமின் அப்பா தானே. அதை நமது சிங்கப் பெண்ணை உணர வைப்பானா ?
வாசுதேவ கிருஷ்ணனாக ஆராதனாவை உணர்பவன், அவனின் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பான் என்றே நம்புகிறோம்.

ஆராதனா - கர்ஜனை மட்டுமே சிங்கத்திற்கு அழகல்ல. அமைதியான கம்பீரம் கூட அழகு தான். அப்படி அமைதியாக விஷயங்களை முடிப்பதில் சிங்கப்பெண்ணான ஆராதனா விக்ரமிற்கும் புரிய வைக்க முயற்சிக்கிறாள். பதுங்கும் புலி பாயத் தயாராக நிற்கிறது.

இங்கே பார்த்தசாரதியாக அவளுக்கு கண்ணன் எப்படி வழி காட்டுகிறான் எனப் பார்க்க காத்திருக்கிறேன்.

என்ன நடக்கும் என ஆவலில் நாங்கள்

நட்புடன்
தேவி
 
ஆரா விக்ரம் என சொன்னதற்கு ரிவன்ஜ் எடுக்க மாட்டான்ல
அடேங்கப்பா என்ன ஒரு பேச்சு
கேட்டாளே நீங்க யாருன்னு செம
ஆரா வேலையை விட போறாளா
 
இது தான் சரியான போட்டி, விக்ரமை எதிர்க்க ஆள் இல்லை என நினைத்து இருப்பான் ,இப்போ ஆராவை பாத்து அவனுக்கும் கொஞ்சூண்டு பயம்இருக்கு ..என்ன தான் வீராப்பா பேசினாலும் பதட்டம் இருக்கு அவனுக்கு.
ஆராவை சீறும் பெண்ணாக பாக்கத்தான் போகிறான் .
 
பெருமை கொண்ட பார்வை
பாங்கான அதிகாரம் பேசும் வார்த்தைகளில்
பாயும் வேகம்
பதுங்கும் கோவம்
பிடிவாதம் பிடித்தவன்
பார்த்தசாரதி விக்ரம் பார்த்தசாரதி...

பொங்கும் அமைதியின் உருவம்
பார்வை நேர்கோட்டில்
பதமாய் பேசினாலும்
புன்னகை பார்த்தால்
பாரத்தைப் போக்கும் பரிவின் பெண்ணாம்...
பணிவு கொண்ட ஆராதனா வாசுதேவன்

பார்வைகள் பரிமாறும் பொழுதெல்லாம்
பரிகாசம் பொங்கி பாயும் அவன் விழிகள்...

பாராட்டும் மெச்சுதலும்
பதுங்கி பிறக்க
பெண்ணின் பார்வையில்
பரவி நிற்கும் அமைதி....

பரஸ்பரம் புரியாத பாதைகள் போல் பிரிந்து செல்ல
பின்னாலே பின்னிப் பிணையும்
பாசம் மறைந்திருக்க...

புறம் வேறானவர்கள்
பார்வையிலும்
பொருளில் ஒன்றாய் பதிந்திருக்கும்
பாயும் புலியும்
பதுங்கும் சிங்கம்....
ரொம்ப ரொம்ப அழகான கவிதை. இது போல பெரிய பெரிய கவிதைகள் சொல்லி கதையையே அழகு படுத்தறீங்க. மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா. நன்றிகள் பலப் பல
 
விக்ரம் - பதுங்கும் புலி என்றாலும், இரையைத் தவிர வேறு எதிலும் நோக்கம் கொள்ளாது. விக்ரமின் இரை ஷியாமின் அப்பா தானே. அதை நமது சிங்கப் பெண்ணை உணர வைப்பானா ?
வாசுதேவ கிருஷ்ணனாக ஆராதனாவை உணர்பவன், அவனின் வார்த்தைகளுக்குச் செவி சாய்ப்பான் என்றே நம்புகிறோம்.

ஆராதனா - கர்ஜனை மட்டுமே சிங்கத்திற்கு அழகல்ல. அமைதியான கம்பீரம் கூட அழகு தான். அப்படி அமைதியாக விஷயங்களை முடிப்பதில் சிங்கப்பெண்ணான ஆராதனா விக்ரமிற்கும் புரிய வைக்க முயற்சிக்கிறாள். பதுங்கும் புலி பாயத் தயாராக நிற்கிறது.

இங்கே பார்த்தசாரதியாக அவளுக்கு கண்ணன் எப்படி வழி காட்டுகிறான் எனப் பார்க்க காத்திருக்கிறேன்.

என்ன நடக்கும் என ஆவலில் நாங்கள்

நட்புடன்
தேவி
கதையை ரசிச்சு படிச்சு உள்வாங்கி அத்தனை அழகா கமென்ட் சொல்றீங்க. அதை படிக்க படிக்க மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 
Advertisement

Advertisement

Back
Top