வான் தழுவிடிலோ வெண்ணிலவே 11

Advertisement

ரொம்பவே அழகான பதிவு.. படிக்க படிக்க புன்னகை தான். கோபமும், எரிச்சலும் வர வேண்டிய இடத்தில் புன்னகையோடு படிக்க வைக்க உங்களால் தான் முடியும்.

இந்த எபிசோட் ஆராதனா, விக்ரம் தனி தனியா சொல்லலை. ரெண்டு பேருமே மனதைக் கவருகிறார்கள்.

ரொம்ப ரசிச்ச வரிகள் - ஆராதனாக்கள் எல்லாம் நியாயத்திற்கு பிறந்தவர்கள் & ஆராதனாக்கள் எப்போதும் பிரமிப்பு ஏற்படுத்துகிறார்கள்.

ஆராதனாவின் வின் வின் சொல்யூஷன் ரொம்பவே அழகா இருக்கு. அவளின் முடிவும் சரியே.

விக்ரம் குட்டி ஆராவை ஷேர்னி யோடு கம்பேர் செய்து பார்ப்பது அழகு.

கடைசியில் பாரதி வரிகள் பொருத்தம் ரொம்ப பிடிச்சு இருந்தது.

அடுத்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

நட்புடன்
தேவி
உங்க வார்த்தைகள் எத்தனை மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அப்படின்னு எங்களுக்கு சொல்லத் தெரியலை மா. ஒவ்வொரு வரியும் ர்டசிச்சு ரசிச்சு படிச்சு ரசிச்சு ரசிச்சு கருத்து சொல்றீங்க. உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது இன்னும் நிறைய இது போல எழுதணும் அப்படின்னு தோணுது. நன்றி நன்றி நன்றி மா.
 
ஆராதனா.....
தவறு என் பக்கம் இல்லை என்றேன்
தலைகுனியாமல் நின்றேன்...
தவறான பக்கமும் இல்லை என்றேன்
தன்மானத்தை மட்டும் காத்தேன்...
தவறை சுட்டிக் காட்டினேன்
தயங்காமல் உரைத்தேன்...

விக்ரம்

தோல்வி அடைந்த போதும்
துவளாமல் தனித்து நின்று
தனி ராஜ்ஜியம் அமைத்தேன்
தவறு என்றாலும்
தன் முன் நியாயமே...

தரமற்ற விவாதங்கள்
தாங்கி வந்தேன்
தலை குனியும் தருணங்களை
தாண்டி வந்தேன்
தனக்கு தானே துணையாகி தலைவனாக நின்றேன்...
/தனக்குத் தானே துணையாகி தலைவனாகி/ விக்ரம் கதாப்பாத்திரத்துக்கு அத்தனை பொருத்தமான வரிகள். உங்க கவிதை பார்த்து மனமெங்கும் சந்தோஷம். ரொம்ப ரொம்ப நன்றி மா
 
குட்டி ஆராதனா விக்ரம் கண்களை திறந்து விட்டாளா,
ஆரா மேல் அம்புட்டு பிரமிப்பு அதனால் அந்த பெயர் கொண்ட ஆராதனா முருகன் மேலும் பிரமிப்பு😀
விக்ரம் பிரச்சனையே இல்லாமல் ஆராவிடம் சரண்டர் தான்.😀
உண்மையில் பிரமிப்பு என்பதை சொல்வதை விட சின்ன அன்புக்கு கூட இளகிப் போகும் ஒரு கதாப்பாத்திரம். அப்படிதான் அவனுக்கு குட்டி ஆராவும். அவன் அன்புக்கு ஏங்குபவன் என்பதை முழுவதுமாக புரிந்து கொண்டவன் அர்ஜுன் மட்டுமே. உங்க கமென்ட் எப்போதும் ரொம்ப அழகு மா. நன்றிகள் பல
 
குட்டி ஆராவும் விக்ரம்க்கு பிடிக்குது
இவ மூலமாக இரண்டு விசயங்கள் சொன்னது அருமை
உங்க கமெண்ட் படிப்பது ஒரு நல்ல feel மா. கதையை தொடர்ந்து படித்து கமெண்ட்ஸ் தருவது எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றிகள்பல
 
வள்ளுவரும் கிருஷ்ணரும் கலக்குகிறாங்க.
ரெண்டுமே ரொம்ப ரசிச்சு எழுதின பகுதிகள் நீங்கள் ரசிப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றிகள் பல
 
மிக மிக அழகான உணர்வுகளின் குவியலாய் ஓர் அத்தியாயம்.

எட்வரட் முதல் அத்தியாயத்தில் வந்தபோது, எனக்குமே, ஆரா அவனை அத்தனை ஓவரா கவனிக்கிறது டூ மச்சுன்னு, விக்ரம் மாதிரி கோபம் வரவே செய்தது.

ஆனால் இந்த எபி படிச்சதுக்கு அப்புறம், அவங்களுக்குள்ள எத்தனை அழகான நட்பு இருக்குதுன்னு புரியுது. கடல் தாண்டி வாழும் நட்பு, அதுவும் ஒரு போட்டியில் அறிமுகமாகி, வெற்றி தோல்விகளை தாண்டி மலர்ந்திருக்கும் நட்புன்னு படிக்கும் போது அத்தனை ரம்மியமா இருந்துது.


இந்த எபியில் இருவருக்கும் வர சீன்ஸ் படிக்கும் போது எனக்கொண்ணு சொல்லணும்னு தோணுது.

விக்ரம் எந்தளவுக்கு நட்பு பாராட்டுறான்னு கௌதம் ப்ரெண்ட்ஷிப்ல தத்ரூபமா புரியுது. துளியும் பொறாமையோ முதல் இடம் பிடிக்கும் வெறயோ இல்லவே இல்லை. ஆராக்கும் எட்வர்ட்டுக்குமான நட்பு பற்றி தெரிந்திருந்தால் கண்டிப்பா நிச்சயம் அன்னைக்கு ரைட் சென்ஸ்ல எடுத்துட்டு இருப்பான்.

ஆரா மாற்றி எழுதிய terms and conditions வேற லெவல். விக்ரம் பிசினஸில் தலையிடக் கூடாதுன்னு சொன்னது; ஷ்யாம் லாபம் காட்டவில்லை என்றால் சந்திக்க வேண்டிய விளைவுகள் படித்தபோது, my mindvoice, சபாஷ் சரியான போட்டின்னு excite ஆனேன்.

Prove yourselfன்னு இருவருக்கும் சவால்விட்ட இவள், No doubt கண்ணனைத் தன் ப்ரோ என்று சொல்லிக்கொள்வது!

விக்ரம் குட்டி ஷேர்னியுடனான உரையாடல்கள் வெகு அழகு. இளைப்பாற ஊட்டிக்கு வந்தவன் சப்பாத்தி ஊட்டிவிட்ட குட்டி ஆராவின் உபதேசங்களில் பெரிய ஆராவின் இளகிய மனத்தை அறிந்துகொண்டுவிட்டான்.

மொத்தத்தில் ஆரா & விக்ரம் வாரே வாவ் எபிசோட்.
 

Advertisement

Advertisement

Back
Top